அத்தியாயம் அறுபத்து இரண்டு
வீட்டுக்குள் நுழையும் போதே பைரவியின் அர்ச்சனையோடு தான் உள்ளே நுழைந்தாள். ‘இவன் வேணும்னே இங்க கூட்டிட்டு வரானோ? அவன் பேச முடியாததை எல்லாம் பைரவியை வெச்சு பேச வைக்கத்தான் ப்ளான் பண்றான்…’ உள்ளுக்குள் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அதை நினைத்துக் கொண்டே அவனை உறுத்து விழித்தபடி தான் உள்ளே நுழைந்தாள்.
“இப்படித்தான் பண்ணுவியா மஹா? கொஞ்சமாவது அறிவு இருக்கவ பண்ற காரியமா இது?” என்று உச்சஸ்தாயில் ஆரம்பித்த பைரவியை பார்த்து முறைத்தாள்.
‘ம்ம்ம் ஆரம்பி… சும்மாவே ஆடுவ… இன்னும் நான் தான் சலங்கை கட்டி விட்ருக்கேனே… இன்னும் ஆடு மாதாஜி ஆடு…’ மனதுக்குள் நினைத்துக் கொண்டு மௌனமாக தந்தையின் அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டாள். நாதனும் ஜோதியும் வந்து இருப்பதை பார்த்தாள். அவர்களை எதிர்நோக்க சங்கடமாக இருந்தது. அதிலும் ஜோதியை பார்த்ததும் அவளையும் அறியாமல் கண்ணீர் குபுக்கென்று எட்டிப் பார்க்க, அதை மறைக்க தலை குனிந்து கொண்டாள்.
ஷ்யாமின் அத்தனை பரிதவிப்பையும் கண்டவர்களுக்கு அவள் கிடைத்து விட்டால் போதுமென்று தான் நினைத்திருந்தனர். மஹா கிடைத்த செய்தியை ஸ்ரீராம் குழுவுக்கும் தெரிவித்து இருந்தான். அவன் இன்னமும் தேடிக் கொண்டிருக்க கூடாதே! போலீசாருக்கும் சிவச்சந்திரன் குழுவுக்கும் ஷ்யாம் தெரிவித்து இருந்தான். ஒரு வழியாக இவை அனைத்தையும் முடித்துக் கொண்டுதான் வீட்டுக்கு வந்திருந்தனர்.
வரும் வழியெல்லாம் இத்தனை பேரிடம் பேசுவதை கண்ட மஹாவுக்கு அப்போதுதான் தான் செய்த தவறின் வீரியம் புரியவாரம்பித்து இருந்தது. இத்தனை பேர் தன்னை தேடிக்கொண்டிருந்தனரா? கடைசியில் தகவல் சொன்னது சௌஜன்யாவா? மகாவுக்கு ஒரு மாதிரியாக குற்ற உணர்வாக இருந்தது.
அவளை அடித்து இன்னமும் ஷ்யாமை விட்டுக் கொடுத்து? மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவன் சொன்ன பொய்யால் தானே இவ்வளவும்! ஏன் அவன் அந்த பொய்யை சொல்ல வேண்டும்? அந்த பொய்யை மட்டும் அவன் சொல்லி இருக்காவிட்டால் கண்டிப்பாக தான் ஸ்ரீராம் கூறியதை நம்பி இருக்கப் போவதில்லையே!
கார்த்திக்கும் ஷ்யாமும் எதிர் சோபாவில் அமர்ந்தனர். ஷ்யாம் வெகு சோர்வாக இருந்தான். பசியோடு தாகமும் அப்போதுதான் தெரிந்தது. உண்மையில் மகாவை பார்க்கும் வரை அவையெல்லாம் மறந்து விட்டிருந்தது. அவர்களை கண்டவுடன் பிருந்தா தான் அவசரமாக தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தாள்.
ஷ்யாம் மடக் மடக் என்று ஒரு முழு சொம்பை காலி செய்தபோது தான் அவனது தாகத்தின் அளவு கூட தெரிந்தது. அப்படி பித்து பிடித்தது போலத்தான் இருந்திருந்தான்.
“குழந்தைக்கு ஏதாவது குடிக்கவாச்சும் குடுத்துட்டு அப்புறமா என்ன வேண்ணாலும் பேசு பைரவி…” முருகானந்தம் பரிந்து கொண்டு வர அவரை முறைத்தார் பைரவி.
“ஆமா குழந்தை?! இன்னும் இப்படியே சொல்லிட்டு இருக்காதீங்க… புள்ளைய கட்டிக் கொடுத்து அவ இன்னொரு வீட்டுக்கும் போயாச்சு. ஒரு குடும்பத்தை நிர்வாகம் பண்ண வேண்டியவ… இப்படி பொறுப்பே இல்லாம ஒரு காரியத்தை செய்வாளா?” பைரவிக்கு அத்தனை கோபமாக இருந்தது.
“இருக்கட்டும்… அதனால? புள்ளையே மனசு நொந்து வந்து இருக்கா… கொஞ்சம் ஆறட்டும் பைரவி…” கிருஷ்ணம்மாள் கூற,
“ஆறின கஞ்சி பழைய கஞ்சி அத்தை… உங்க பேத்தி வாயாடித்தனத்தையும் விட மாட்டா… அவசரக்குடுக்கை மாதிரி ஏதாவது காரியம் பண்ணிட்டு முழிக்கறதையும் விட மாட்டா… எவ்வளவோ தடவை நான் சொல்லிட்டேன். ஒரு டாக்டர் மாதிரி நடந்துக்கன்னு… அதுவும் இப்ப எப்படிப்பட்ட காரியத்தை பண்ணி வெச்சு இருக்கா பாருங்க அத்தை உங்க பேத்தி… இதை இப்படியே விட சொல்றீங்களா?”
“சரி… இப்ப என் பொண்ணை இப்படி பேசி என்ன பண்ண போற? மனசொடிஞ்சு இருக்க புள்ளைய இன்னும் கொஞ்சம் மனசை ஒடிக்க போற…” முருகானந்தம் கோபமாக கேட்க, மஹா அவரது தோளில் சாய்ந்து கொண்டாள். தந்தை எப்போதும் தந்தை தான். தவறே செய்தாலும் தோள் கொடுத்து அதன் பின் அவளது தவறை நிதானமாக சொல்வதில் அவரை மிஞ்ச முடியாது.
கண்கள் கலங்கியது. அவரது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் மஹா. மகளை தோளோடு வளைத்துப் பிடித்து,
“என் புள்ளைய திட்ற ரைட்ஸ் உனக்கு கொடுக்கல. எதுவா இருந்தாலும் அவ புருஷன் பார்த்துப்பார். நீ போய் உன் வேலைய பார் பைரவி…”
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி குதிக்கறீங்க? புருஷன் தப்பு பண்ணா சட்டைய புடிச்சு கேளுங்கறேன்… இன்னும் ரொம்ப தப்பு பண்றாங்களா, அடிக்க கூட செய்… ஆனா அதை விட்டுட்டு இப்படி முட்டாள்தனமா வீட்டை விட்டு போறது, இப்படி எல்லாரையும் பதற வைக்கறது எல்லாம் என்ன பழக்கம்ன்னு கேக்கறேன். உடம்பு முடியாம நீங்க இருக்கீங்க, அத்தை இருக்காங்க. ஒன்னு கெடக்க ஒன்னாச்சுன்னா உம்ம மவ தான் வந்து காப்பாத்தி கொடுப்பாளா?” கோபத்தில் பைரவி கொதிக்க, அதிலிருந்த நியாயம் முருகானந்தத்தின் வாயை அடைத்தது.
மஹாவுக்கு மனம் முழுவதும் ரணமாக இருந்தது. குழப்பமாக இருந்தது.
“அண்ணி சொல்றதும் கரெக்ட் தான்டா தங்கம்… உங்க கல்யாணம் எவ்வளவு சிறப்பா, பெருமையா நடந்த ஒன்னு. ஊரே மெச்ச அத்தனை பெருமையோட நம்ம வீட்டுக்கு வந்த மகாலட்சுமி ம்மா நீ. எவ்வளவு பிரச்சனைன்னாலும் எனக்கு கால் பண்ண வேண்டியதுதான. இவன் தப்பு பண்ணா நான் என்னனு கேக்க மாட்டேனா? அப்படியே விட்டுடுவமாடா? சொல்லு…” ஜோதி பொறுமையாக எடுத்துக் கூற, பைரவி தலையாட்டினார்.
“அண்ணி… அதுவும் இவ அத்தைங்க எல்லாம் எதுலடா குத்தம் கண்டுபிடிக்கலாம்ன்னு காத்துகிட்டு இருக்காங்க. கல்யாணதப்பவே அத்தனை பிரச்சனை பண்ணாங்க. மாப்பிள்ளை வீடு பெரிய இடம். கண்டிப்பா தப்பு இருக்கும்ன்னு சொன்னவங்க வாய்க்கு அவல் கொடுத்து இருக்கா இவ…” என்றார் பைரவி.
“எவ்வளவோ பிரச்சனை இருக்கலாம் மஹா. எனக்கு புரியுது… உனக்கும் உன் வீட்டுக்காரனுக்கும் பிரச்சனைன்னு. ஆனா என்ன பண்ணி இருக்கணும் நீ? நம்ம வீட்டுக்கு வந்து இருக்கணும் மஹா. என்னன்னு கேக்க நாங்க இருக்கமே…” ஜோதி நிதானமாக கூற, அதை ஒத்துக்கொண்ட பைரவி,
“அப்படி என்ன எங்களை கூட மறந்துட்டு போறது? இப்ப மூணு மாசமாத்தான்டி அவர் உனக்கு புருஷன். நான் உன்னை பெத்து இருபத்தி ரெண்டு வருஷம் வளத்தவ…” சேர்த்து வைத்ததை எல்லாம் பைரவி கொட்ட, மஹா மெளனமாக இருந்தாள். ஷ்யாம் தலையில் கை வைத்தபடி அமர்ந்தவன், நிமிரவில்லை!
“ம்மா… கொஞ்சம் பொறுமையா இரு. வந்தவங்களுக்கு சாப்பாடு போடு. அப்புறமா பேசு…” கார்த்திக் பைரவியை சமாதானம் செய்ய,
“இரு கார்த்திக்… இப்ப சாப்பாடு ஒன்னும் அவ்வளவு முக்கியமில்ல. ஒரு நேரம் என்ன… ஒரு நாள் பட்டினி கிடந்தா கூட தப்பில்ல. இப்ப எதனால மஹா இப்படி பண்ணா? அது எனக்கு தெரிஞ்சாகனும்… இது என் பொண்ணோட வாழ்க்கைடா…” என்றவரின் குரலில் அத்தனை வேதனை. அவர் ஷ்யாமை பார்க்கும் பார்வையில் ஒரு ஒதுக்கம்.
ஷ்யாம் எதோ பிரச்சனை செய்யாமல், இந்த பெண் கிளம்புவாளா என்று தான் அவருக்கு தோன்றியது. அவள் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்தவருக்கு இன்னமும் அந்த பொறுமையை கடைபிடிக்க முடியவில்லை. ஆனால் ஷ்யாமிடம் அத்தனை பரிதவிப்பையும் கண்டார். ஆனாலும் மருமகனா மகளா என்று யோசிக்கும் போது தாயாக மகள் புறம் சாய்ந்தது அவரது தட்டு!
“இப்ப திரும்ப அதை பேசி என்ன பண்ண போற? அதான் அவளை கூட்டிட்டு வந்தாச்சே… விடும்மா…” என்றவனை முறைத்தார்.
“என்ன பேசற கார்த்திக் நீ? உனக்கு உன் மச்சான் முக்கியம். ஆனா அதே அளவு எனக்கு என் பொண்ணும் முக்கியம். அன்னைக்கே அவ கிட்ட தலைப்பாடா அடிச்சுகிட்டேன். அதென்ன அத்தனை பேர் முன்னாடியும் ஒருத்தி இடுப்புல கை போடற அளவு விடறது? கேக்க ஆள் இல்லைங்கற நினைப்பா? இதெல்லாம் நான் கேக்க கூடாதுதான். ஆனா பொண்ணை பெத்து வளத்தது இப்படி ரோடு ரோடா அலைய விடறதுக்கா?” என்று சுருக்கென்று பைரவி கேட்க, நிமிர்ந்து மஹாவை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்.
‘போதுமா? இதற்கு தானே ஆசைப்பட்டாய்?’ என்றது அவனது பார்வை.
“ம்மா… இதையெல்லாம் எதுக்கும்மா இப்ப பேசற? எனக்கு பிரச்சனைன்னு உன்கிட்ட சொன்னேனா?” மஹா பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,
“அப்புறம் எதுக்குடி இப்படி ஓடிப் போன? இங்க வர வேண்டியதுதான? என்ன பிரச்சனைன்னாலும் நாங்க உன் புருஷன் சட்டையை பிடிச்சு கேக்க மாட்டோமா?” என்று பைரவி கோபத்தில் கூற, கேட்டுக் கொண்டிருந்த நாதனுக்கும் ஜோதிக்குமே சுருக்கென்று இருந்தது. ஆனால் என்ன செய்வது, இந்த இடத்தில் பேசினால் கண்டிப்பாக ஷ்யாம் வாழ்க்கை அதோ கதிதான் என்பதை உணர்ந்தவர்கள் மௌனம் காக்க, அவர்களது அந்த மௌனமும் ஷ்யாமை வருத்தியது.
“ம்மா…” கார்த்திக் கோபமாக வாயெடுக்க, மஹா முந்திக் கொண்டாள்.
“நான் இங்க வரவும் வேண்டாம்… நீ அவங்க சட்டையை பிடிக்கவும் வேண்டாம்… கொஞ்சம் சும்மா இருக்கியா?” என்றவளை இன்னமும் முறைத்தார் பைரவி.
“இப்ப என்ன பிரச்சனைன்னு சொல்றியா இல்லையா?” பைரவி கறாராக கேட்க,
“பிரச்சனை எல்லாம் உன் பொண்ணு பண்ணதுதான். நான் தான் கூடவே இருக்கனே… எனக்கு தெரியாதா? தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு அவ தான் மச்சானை நோகடிக்கறான்னா, ஏன் மா? நீ வேற…” என்று கார்த்திக் கடுப்படிக்க,
“எதுவுமே இல்லாம எதுக்கு மஹா பிரச்சனை பண்றா?” என்று கேட்க, ஸ்ரீராம் அழைத்தது முதல், மஹா சௌஜன்யாவை அடித்தது வரை சொல்லி முடித்தான் கார்த்திக்.
“எல்லாம் சரி தான் கார்த்திக். ஆனா மாப்பிள்ளை ஏன் பொய் சொல்லணும்? ஸ்ரீராம் அப்படி சொல்லிருக்கும் போதே, மாப்பிள்ளையும் இப்படி சொன்னா எப்பேற்பட்டவளுக்கும் கோபம் வரத்தான்டா செய்யும்…” என்று கூற,
“ம்மா… அது அவங்களுக்குள்ள எதோ விஷயம் போல… நீ கொஞ்சம் சும்மா இரேன்…” என்று கார்த்திக் அடக்கினான்.
“அதெப்படி கார்த்திக்…” என்று அவனை அடக்கிய நாதன், ஷ்யாம் பக்கம் திரும்பி, “நீங்க ரெண்டு பேரா எல்லாத்தையும் முடிவு பண்ணனும்னா பெரியவங்க எதுக்கு இருக்கோம் ஷ்யாம்? உங்க வயசுக்கு இந்த அனுபவம் இருக்குன்னு நினைச்சா, எங்க வயசுக்கு இன்னும் அந்த அனுபவம் அதிகமா இருக்காதா?” நாதன் நிதானமாக கேட்டாலும் அதில் அத்தனை கோபம் இருந்தது.
பைரவி இத்தனை கேள்விகளை, அதையும் தாங்கள் கேட்கும் படி வைத்து விட்டானே என்ற கோபம். மஹா இப்படி செய்துவிட்டாளே என்ற கோபம்.
“சாரி நானா… இனிமே இப்படி நடக்காது…” தந்தையை பார்க்காமல் அவன் கூறினான்.
“எப்படி நடக்காதுன்னு சொல்ற? இனிமே மஹா இப்படி பண்ண மாட்டான்னு சொல்ல வர்றியா? இல்லன்னா நீ ஒழுக்கமா இருக்கறதா முடிவு பண்ணிட்டியா?” நாதனின் கேள்வி ஷ்யாமை சீறி எழ செய்தது.
“ஒழுக்கமா இருக்கறதா? ஏன் நானா இப்ப நான் என்ன ஊர் மேய போயிட்டேனா? அவ தான் அறிவே இல்லாம பண்றான்னா, நீங்களும் இப்படி பேசறீங்க?” என்று கோபத்தில் கொதிக்க,
“நானா அப்படி கேக்கல கண்ணா… நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா தான எங்களுக்கு நிம்மதி…” ஜோதி அவசரமாக இடையிட,
“போதும் ம்மீ… எல்லாரும் பேசினதும் போதும்… இவ கூட குடும்பம் நடத்தி கிழிச்சதும் போதும்… எல்லார் கிட்டயும் பேச்சு வாங்கினதும் போதும். என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தனுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தி பார்த்துட்டா… இதுக்கும் மேல யாரும் பேச வேண்டாம்…” கொதித்தவன்,
“கல்யாணத்துக்கு முன்ன இப்படியெல்லாம் ஒரு கேள்வி வந்ததுன்னா நான் என்ன சொல்வேன்னு உங்களுக்கு தெரியும். இதுவரைக்கும் யாருக்கும் நான் பதில் சொன்னதில்ல. ஆனா இவளை கல்யாணம் பண்ணி, இவளுக்கு உண்மையா இருப்பேன்னு கமிட்மென்ட் கொடுத்து இருக்கேன். அந்த கமிட்மென்ட்டை கண்டிப்பா காப்பாத்துவேன். இந்த அரவேக்காடு பண்ற வேலைக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது… ஆனா இந்த விஷயத்துல வேற யாரும் பேசவும் வேண்டாம். இது எங்க பிரச்சனை. நாங்க பார்த்துக்குவோம்… விட்டுடுங்க…”
அத்தனை இறுக்கமாக அவன் கூறியதை கேட்டவளுக்கு வேதனையாக இருந்தது. ஒரு நாள் முழுக்க பைத்தியம் போல சுற்றியது அவனை அசிங்கப்படுத்துவதாமா? அவன் மேல் பைத்தியமாக இருப்பது அவனுக்கு அசிங்கமாமா? தான் அரைவேக்காடா?
“பேசனும்ன்னு பேசாத ஷ்யாம்…” என்றவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“என்ன பேச வேண்டாம்ன்னு சொல்ற? என் பொண்டாட்டி என்னை நம்பாம வேவு பாக்க வந்தான்னு பெருமையா சொல்ல சொல்றியா?”
“நீ பொய் சொல்லவும் தான எனக்கு சந்தேகம் வந்துது? நீ ஏன் பொய் சொன்ன?”
மஹாவின் இந்த கேள்வியை கண்டிப்பாக எதிர்பார்த்தான். தான் செய்த தவறு இது. வேண்டுமென்றே செய்யவில்லை என்றாலும் தவறு தவறுதானே? அதிலும், எந்த மாதிரியான நேரத்தில், யாருடன் இருக்கும் போது இப்படியான பொய்யை சொல்லி… தலையிலடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
“அப்படியே சொல்லியிருந்தாத்தான் என்ன? என் மேல உனக்கு நம்பிக்கை இருந்திருந்தா இப்படி பண்ணி இருக்க மாட்ட மஹா…” புருவத்தை சுருக்கிக் கொண்டு, அத்தனை இறுக்கமாக அவன் கூறிய போது உள்ளுக்குள் மனதை பிசைந்தது. ஏதோ விரும்பத்தகாதது நடக்கவிருப்பதை போன்ற பிரம்மை!
மெளனமாக அவனை பார்க்க, “உன்னை மாதிரிதான். நூறாவது நாள்… ரப்பிஷ்… அந்த கர்மம் புடிச்ச நாளுக்கு உனக்கு சர்ப்ரைஸ் தர்றதுக்காக ப்ளான் பண்ணிட்டு இருந்தேன். நான் வெளிய இருக்கேன்னு சொன்னா நீ ஸ்மெல் பண்ணிடுவன்னு தப்பு கணக்கு தான் போட்டேன். ஆனா நீ என்னனவோ கணக்கு போட்டுட்ட… தப்புதான்… பொய் சொல்லிட்டேன்… ஆனா தட் வாஸ் ஹார்ம்லெஸ்… ஆனா நீ பண்ண பாரு… அதுவும் மூணாம் மனுஷங்க முன்னாடி என்னை விட்டுக்கொடுத்து…” என்று அவன் முகத்தை அழுந்த துடைத்துக் கொள்ள, எச்சிலை கூட்டி விழுங்கியபடி அவனைப் பார்த்தாள் மஹா.
இந்த இறுக்கம் அவள் என்றுமே பார்க்காதது. என்ன செய்தாலும் அடுத்த நிமிடம் அவனும் சிரித்து, தன்னையும் சிரிக்க வைத்த ஷ்யாமை மட்டுமே அவளுக்கு பரிட்சயம்! ஆனால் இவன் வேறு…
“கர்மமா?” என்று ஒரு மாதிரியான குரலில் இவள் கேட்க,
“ஆமா… இந்த நாள் போன லட்சணத்துக்கு அது ஒன்னு தான் குறைச்சல்…” என்றவன், “உன்ன மாதிரி, எதை பார்த்து உன்னை இப்படி லவ் பண்ணி தொலைச்சேன்னு தெரியலன்னு சொல்ல சொல்றியா? இல்ல இவ கிட்ட ஏன் தான் மாட்டினேனோன்னு புலம்ப சொல்றியா? இப்படித்தான் இருப்பன்னு தெரிஞ்சுதான் கட்டிக்கிட்டேன்… ஆனா இப்ப என்னோட பொறுமை எல்லாம் பறந்து போய்டும் போல இருக்கு… முடியல மஹா…” என்றவன், மீண்டும் முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டான். பெரிய மூச்சை இழுத்து விட்டாலும் அவனது பதட்டம் குறைவதாய் இல்லை!
“நான் பொய் சொல்றேன்னு தெரிஞ்சு இருந்தா அப்பவே கேள்வி கேட்டு இருக்கணும்… ஏன்டா பொய் சொல்றன்னு? ஆனா உனக்குத்தான் எப்பவும் சந்தேகம் பிடிச்சு ஆட்டுதே… அதான் கிளம்பி வந்துட்ட…” என்று உணர்வில்லாமல் கூற,
“பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாத ஷ்யாம்…” சற்று சுருதி குறைந்து விட்டது அவளது குரலில்!
“உண்மைய தான் சொல்றேன் மகாவேங்கடலக்ஷ்மி…” அழுத்தமாக கூறியவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனது தொனியில் போன கோபம் திரும்ப வந்தது.
“சரி எனக்குத்தான் சந்தேகம்… நீ ரொம்ப நல்லவன் தான… அந்த சௌஜன்யா கூட அவ்வளவு பிரச்சனைக்கப்புறமும் என்ன உனக்கு பேச்சு வேண்டியிருக்கு?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க, கார்த்திக் முந்திக்கொண்டான்.
“பாப்பா… சுஷ்ருதாவுக்கு ஒரு விளம்பரப் படம். ஆக்சுவலி ஒரு சோசியல் காஸ்காக எடுக்கறோம். மதிதான் டைரக்ட் பண்றார். அதை பத்தி எல்லாருமா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்…” என்று கூற,
“ஏன் அவ தான் கிடைச்சாளா? வேற எவளுமே இல்லையா? அவ நடிச்சாத்தான் அந்த சோசியல் காஸ் மோட்சமடையுமா?” மஹா கிடுக்கிப் பிடி போட, கோபமாக முன்னே வந்த ஷ்யாம், அவளை கையை காட்டி நிறுத்தினான்.
“உன் தங்கச்சி ஒன்னும் நம்ப வேண்டாம் கார்த்திக்… ஒவ்வொன்னுக்கும் ப்ரூப் கொடுத்துட்டே இருந்தா அது வாழ்க்கையில்ல… வழக்கு… யாருக்கும் நிரூபிக்க நம்ம லைப்ல விதவிதமான பாத்திரங்களை ஏத்துக்கறது இல்ல. அது வாழ்க்கையோட போக்குல நமக்குண்டான கடமை… நான் ஏத்துகிட்ட கடமைக்கு இதுவரைக்கும் உண்மையா இருந்திருக்கேன் கார்த்திக். யாரோ ஒருத்தன் சொல்றதை நம்பறா… நான் உண்மையாத்தான் இருப்பேங்கறதை நம்ப முடியல?” வேதனையாக ஷ்யாம் கூற, எதுவும் பேசாமல் பார்த்தாள் மஹா!
“என்ன நீ பெரிய இவ மாதிரி நோண்டிகிட்டு இருக்க? எந்த இடத்துல யாரை எப்படி வைக்கணும்ன்னு எனக்கு தெரியாதா? உன்கிட்ட கேட்டுத்தான் நான் நடக்கணும், ஆடனும், மூச்சே விடனும் இல்லையா?” என்றவன், “மூச்சு முட்ட வைக்காத மஹா…” என்று கசப்பாக முடிக்க,
புரிந்தது… அவனை ரொம்பவுமே காயப்படுத்தி விட்டோம் என்று!
“மாப்பிள்ளை…” என்று பைரவி தன்மையாக ஆரம்பித்தார்.
“சாரி அத்தை… இது எனக்கும் இவளுக்கும் இருக்கற விஷயம். நீங்க தலையிட வேண்டாம்…” கத்தியை போன்ற பதில். அவர் அதற்கு பின் பேசவில்லை. அவளை பார்த்தும் பாராமல்,
“உனக்காக என்னை எவ்வளவு வேண்ணா மாத்திக்க மஹா. நீ எனக்கு வேணும்… கடைசி வரைக்கும் வேணும். என்னோட உயிரே நீதான். உனக்காக எதை வேண்ணா விட்டுக் கொடுப்பேன். ஆனா என்னோட வேலை எனக்கு ரொம்பவே முக்கியம். தயவு செஞ்சு அதுல தலையிடாத. ஏன் அவ கிட்ட பேசின, ஏன் இவ கிட்ட பேசினன்னு கேட்டா என்ன பதில் சொல்றது? இது என்னோட தொழில். என்ன செய்றதுன்னு எனக்குத்தான் தெரியும்…” என்றவனின் குரலில் இருந்தது கோபமா ஆற்றாமையா? தெரியவில்லை அவளுக்கு!
“ஆனா நீ என்னை ரொம்பவே விட்டுக் கொடுத்துட்ட… உனக்காக ஸ்பேஸ் கொடுக்கணும்ன்னு எவ்வளவோ பொறுமையா இருந்ததுக்கு நல்லா வெச்சு செஞ்சுட்ட… கார்த்திக்கிட்ட சொன்னேன், எங்க அம்மாவுக்கு அப்புறம் என்னை எந்த நிலைலையும் நம்பற ஒரே ஆத்மா மஹா தான்னு. தப்பே பண்ணாலும் என்னை ரெண்டு அடி அடிச்சுட்டுக் கூட, என் மஹா என் பக்கம் நிப்பான்னு சொன்னேன். ஆனா அந்த என்னோட நம்பிக்கை இன்னைக்கு மொத்தமா முடிஞ்சு போச்சு…”
வேதனை தோய்ந்த குரலில் அவன் கூறியதை கேட்டவளுகக்கும் அதே வேதனை தான்!
“நீ பொய் சொன்னப்ப, என்னோட நம்பிக்கையும் மொத்தமா தகர்ந்து போனப்ப எனக்கும் உயிரே போன மாதிரி தான் இருந்துது. ஏன் இந்த உலகத்துல இருக்கோம்ன்னு தோனுச்சு… அதுக்கப்புறம் என்னால எதுவும் சிந்திக்க முடியல. நல்லது எது கேட்டது எதுன்னு தெரியல. அவ்வளவு விரக்தி… வேதனை… நீ எல்லா விஷயத்தையும் கார்த்திக் கிட்ட சொல்ற… ஷேர் பண்ணிக்கற. ஆனா நான் யார்கிட்டயும் ஷேர் கூட பண்றதில்ல. உன்னை யார் கிட்டவும் விட்டுக் கொடுக்க கூடாதுன்னு. ஆனா இன்னைக்கு எல்லாமே தலைகீழா….” என்று நிறுத்தியவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. “அத்தனை மன கஷ்டத்தையும் நான் ஒருத்தியா தான் அனுபவிக்கறேன்…” என்றவள் முகத்தை மூடிக் கொண்டு அழத் துவங்கினாள்.
தன்னுடைய உயிரானவள் தனியாக அத்தனை துன்பத்தையும் அனுபவித்து இருக்கிறாள் என்றவுடன், அவனது அத்தனை காயங்களும் அவனுக்கு மறந்து போனது. அவள் கோபத்தை காட்டும் வரை அவனது கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்திருந்தவனுக்கு அவளது கண்ணீர் அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட செய்தது.
அவள் முன் வந்து மண்டியிட்டு அமர்ந்து கொண்டு, அவளது கையை பற்றிக் கொண்டான். சுற்றிலும் அவளது பெற்றோர் இருப்பதும் அவனது பெற்றோர் இருப்பதும் அவனுக்கு மறந்து போனது!
“ஏன்டி அப்படி நினைக்கற? நான் இல்லையா உனக்கு? அப்படி ஃபீல் பண்ணா என்கிட்ட சொல்ல வேண்டியதுதான? அப்பவும் எனக்கு யாருமில்லைன்னு சொல்ற… இப்பவும் இப்படி சொல்ற? நான் உன் கண்ணுக்கு தெரியவே மாட்டேனா மஹா?” என்று ஆற்றாமையோடு கேட்க, கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்குத்தான் தலையிலடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. ‘அந்நியன் ரெமோவாகிட்டான்டா… விக்கெட் பொண்டாட்டி கால்ல விழுந்துடுச்சு’
“உனக்குத்தான் நான் ரொம்ப மூச்சு முட்ட வைக்கறேன்ல… ஸ்வீட் மொமன்ட்ஸ் கூட உனக்கு கர்மமா தெரியுது… நான் அரவேக்காடு வேற…”
“அதெல்லாம் கோபத்துல சொல்றதுடி… அதுக்கெல்லாம் அர்த்தம் எடுத்துப்பியா?” என்றவன், “எவ்வளவு கோபம் இருந்தாலும் கூட இருந்து சண்டை போடு மஹா. விட்டுட்டு போனா…” என்று நிறுத்தியவன், “எனக்கும் லைஃப்பே வெறுத்து போய்டுச்சு…” என்று கூற, முருகானந்தமும் அவனது ஆதரவுக்கு வந்தார்.
“பாப்பா… மாப்ள சொல்றது ரொம்ப கரெக்ட் தான். எதுவா இருந்தாலும் கூட இருந்து சண்டை போடு பாப்பா. உன்னை கண்டுபிடிக்கறதுக்குள்ள அவரை எங்களால பாக்க முடியல…” என்று கூறவும் அவளுக்குள் இன்னுமே குற்ற உணர்ச்சி!
எல்லாம் தெரிந்து தான் திருமணம் நடந்தது. ஒருவேளை அந்த புகைப்படங்கள் தன்னுடைய கண்ணில் படவில்லைஎன்றால் தங்களது வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அவற்றை மறக்க முடியாத மனது அவனை விதவிதமாக சந்தேகப்பட்டு தானும் காயப்பட்டு அவனையும் காயப்படுத்துகிறது என்று புரிகிறது.
அவன் தவறி இருந்தால், அவனால் தன்னை நேருக்கு நேராக எதிர்நோக்க முடியாது.
ஹோட்டலில் பார்த்தபோது அவனுக்கு தான் சற்றும் அவகாசம் தரவில்லையே!
அப்போது தன்னுடைய நிலையிலிருந்து பார்த்தபோது மேலும் ஒரு நொடி கூட நிற்க முடியாது என்று கூறிய மனம், இப்போது இரண்டு நிமிடங்கள் நின்று அவனிடம் விசாரித்து இருக்கலாமே என்று கேள்வி கேட்டது.
அதிலும் மூன்றாம் மனிதர்கள் முன் அவனை விட்டுக் கொடுத்தது தான் அவனை பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. எங்குமே அவன் தன்னை விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால் தான் செய்தது பெரிய தவறு. புரிந்தபோது உள்ளுக்குள் நடுங்கியது.
இந்த தவறை எதை கொண்டு ஓட்ட வைக்க?
அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், “மஹா… நான் மச்சானுக்கு சப்போர்ட் பண்றதா நீ நினைக்கலாம். ஆனா நான் உண்மையை பேசறேன். இத்தனை நாளா அவர் கூடத்தான் இருக்கேன். தப்பு பண்றவங்க கண்ணை பார்த்தே சொல்லிட முடியும் பாப்பா. அவர் உனக்கு எந்தளவு உண்மையா இருக்கார்ன்னு எனக்கு தெரியும்…” என்று நிறுத்தியவன்,
“உன்னை கஸ்டடி எடுத்தப்ப நான் கொடுத்த பணம் யாருதுன்னு நினைச்ச?” என்று கேட்க, ஷ்யாம் எழுந்து நின்று அவனை முறைத்தான். அதை கண்டுகொள்ளாமல், மஹாவை பார்க்க, அவள் குழப்பமாக கார்த்திக்கை பார்த்தாள். முருகானந்தத்துக்கும் பைரவிக்குமே இது புதிய விஷயம்!
“மச்சானே தியேட்டர விலைக்கு வாங்கற மாதிரி பணத்தை கொடுத்து, அதை தான் வாங்கினார் மஹா. ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேட்டதுக்கு, மஹாவுக்கு இல்லாதது என்கிட்ட எதுவுமில்லன்னு சொன்னவரை எப்படியெல்லாம் போட்டு வாட்டற…” என்று விஷயத்தை போட்டு உடைக்க, ஷ்யாம் மகாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணங்கினான்.
“தாயே… இப்படி சொல்லுன்னு நான் உன் உடன்பிறப்புக்கு ட்ரைனிங் கொடுக்கல… உனக்கு தான் விதவிதமா டவுட் வருமே… அதுவும் எப்படி எப்படில்லாம் வரும்ன்னும் தெரியாது, விவஸ்தை இல்லாம எந்த நேரத்துல வரும்ன்னும் கிடையாது. தயவு செஞ்சு இதுக்கொரு சீனை போடாத…” என்றவன்,
“ஆனா இங்க இருந்தே காஞ்சிபுரத்துக்கு பொட்டிய கட்டிக்க… இன்னொரு மாசத்துக்கு நான் ஷப்பாடான்னு இருந்துக்கறேன். தயவு செஞ்சு போன் பண்ணிடாத… நானும் பண்ண மாட்டேன்… உனக்கு அந்த செட் அப் பிடிச்சு இருந்தா, அப்படியே கண்டினியு பண்ணிக்க… உன்னை என்னன்னு கேக்கவே மாட்டேன். போதும் சாமி…” என்று பெருமூச்சு விட்டவனை, முறைத்துப் பார்த்தாள். இரண்டு மாத இன்டர்ன்ஷிப்பை காஞ்சிபுரத்தில் செய்ய அலாட் ஆகியிருந்தது.
சோபாவில் இருந்த குஷனை எடுத்து அவனை நோக்கி எறிந்து,
“ஓ உனக்கு அவ்வளவு ஆகிபோச்சா? நான் இல்லைன்னா ஷப்பான்னு இருப்பியா? இருப்படா இருப்ப… இருக்க விட்ருவேனா?” என்று எழுந்து வந்தவள், குஷனை வைத்து அவனை சரமாரியாக அடிக்க, அதை பார்த்தவர்களுக்கு கோபம் வருவதற்கு பதில் சிரிப்புத்தான் வந்தது.
“ஏய் என்னடி மாப்பிளைய இப்படி அடிக்கற… அதுவும் அவங்க அப்பா அம்மா முன்னாடி… பைரவி தவிக்க,
“ம்மா… கொஞ்சம் நீ சும்மா இரு… எனக்கு இருக்க கோபத்துக்கு, இவன் மண்டைல கல்லைத் தூக்கிப் போட்டாலும் போட்டுடுவேன். நான் இல்லைன்னா அவ்வளவு நிம்மதியா இருப்பானா?” என்று இன்னமும் மொத்த,
“இந்த ரெண்டுத்துக்கு நடுவுல நாம போக கூடாதுங்க அண்ணி… பாருங்க இந்நேரம் வரைக்கும் நம்மளை டென்ஷன் பண்ணிட்டு இப்ப உங்களை போக சொல்லுதுங்க…” என்று ஜோதி சிரிக்க,
“அட ஆமா அண்ணி…” என்று வாய் மேல் கை வைத்த பைரவி, தலையிலடித்துக் கொண்டு டைனிங் டேபிளை நோக்கி போனார். டிபன் எடுத்து வைக்க!
அதையெல்லாம் சற்றும் கண்டுக்கொள்ளாமல், “வீட்ல நீ பண்ற கொடுமை பத்தாதுன்னு இங்கயும் ஏன்டி இப்படி கொடுமை பண்ற?” என்று அவளது கையை இறுக்கமாக கையை பிடிக்க,
“ஐயோ… எருமை மாடே… வலிக்குதுடா… விட்டுத் தொலை…” வகைதொகையில்லாமல் திட்ட, அவளது கையை இன்னமும் இறுக்கமாக பிணைத்துக் கொண்டான்.
“நீ அடிப்ப… அதை நான் வாங்கனுமா? போடீ…” என்றவனை பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்துப் பார்க்க,
“சரி… அடிக்கல விடு…” என்று சரண்டரானவளை மெல்ல விடுவிக்க, இரண்டு கைகளின் மணிக்கட்டையும் ஆராய்ந்தாள். சிவந்து கன்றி போயிருந்தது.
“எருமை…” என்று திட்ட,
“ம்ம்ம் ஒரு நாள் முழுக்க பட்டினியா சுத்த வெச்ச தான… அதுக்கு தேவைதான்…” என்றான் முறைத்துக் கொண்டே!
“ஏன் மச்சான்… என் தங்கச்சி தான் உன்னை பட்டினியா சுத்த சொன்னாளா? வாடா சாப்பிட்டுட்டு வந்துடலாம்ன்னு கூப்பிட்டா, என் டார்லிங்க பாக்காம சாப்பிட மாட்டேன், பேபிம்மாவ பாக்காம தூங்க மாட்டேன், பல்லு கூட வெளக்க மாட்டேன்னு அடம் பண்ணிட்டு இப்ப இப்படி பேசறியா?” என்று கார்த்திக் வார,
“மாப்பு… அந்த பேபிம்மா யாருடா? அந்த ஃபிகராச்சும் நல்லா இருக்குமா?” என்று ஷ்யாம் கேட்க,
“ஆனாலும் உன்னோட மன தைரியத்தை பாராட்டியே ஆகணும்…” என்று கார்த்திக் சிரிக்க,
“இவ தான் எதுக்குமே ஆக மாட்டா… அந்த பேபிம்மாவாச்சும் தேறுமான்னு தான்…” என்று கண்ணடிக்க, அப்போதுதான் கவனித்தான், பிருந்தா ஓரமாக நின்று கொண்டிருப்பதை! கணவன் மனைவி சண்டைக்குள் பெரியவர்கள் இருக்கும் போது தான் உள் செல்வது சரியல்ல என்று நின்றுகொண்டிருந்தாள். இந்த பேச்சு எங்கெல்லாம் போகும் என்பதை உணர்ந்தவன்,
“நான் இந்த வெள்ளாட்டுக்கு வர்ல சாமியோவ்…” என்று தப்பிக்க பார்க்க, பார்த்துக் கொண்டிருந்தவர்கள் டென்ஷனை மறந்து சிரித்தனர்.
இருவரையும் வெட்டி விடுவதை போல முறைத்த மஹா,
“இரு… கார்த்திண்ணா இரு… அடுத்தது உன்கிட்ட தான் வர்றேன்…” என்றவள், அவனுக்கு முன் சென்று இடுப்பில் கையை முட்டுக் கொடுத்து நின்று கொண்டாள்.
“என்ன பாப்பா?” என்று கார்த்திக் கேட்க,
“டேய் அது ஒன்ற டன் பீப்பாடா…” என்று வாரினான், வேறு யார், ஷ்யாமே தான். முகம் கோபத்தில் சிவக்க, அவனை கடுப்பாக பார்த்து,
“இரு உன்னை அப்பறமா வெச்சுக்கறேன்…” என்று மூக்கை விடைத்தபடி கூற,
“என்னடி இப்படி சொல்ற? வெச்சுக்க போறியா?” என்று வார, இன்னொரு குஷன் பறந்தது. முருகானந்தமும் ஆத்மநாதனும் ஒரு வழியாக பெருமூச்சு விட்டனர். ஜோதி சிரித்தார்.
கார்த்திக்கை பார்த்து மஹா, “டேய் அண்ணா…” என்றழைக்க, ‘ஆஹா லட்டு பார்முக்கு வந்துடுச்சு’ என்றவன் அவளை பார்த்து சிரித்தான்.
“சொல்லு லட்டு…” என்று கூற,
“தியேட்டர் யார் பேர்ல இருந்துது?” என்று கேட்டாள்.
“ஏன் பாப்பா? அது உன் பேர்ல இருந்தது தான?” என்று பதிலுக்கு கேட்க,
“சரி… அது யாரோடது?”
“உன்னோடதுதான?” என்று கேட்டான் கார்த்திக்.
“அப்புறம் எப்படி கார்த்திண்ணா என் புருஷனுக்கு அதை வித்த? அதுவும் இருபது கோடிக்கு? அது பதினஞ்சே பொறாது…” கிடுக்கிப் பிடியாக கேட்க, அதுவரை அமர்க்களங்களை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த முருகானந்தம் சிரித்தார். நாதன் பெருங்குரலில் சிரிக்க, ஜோதி வயிற்றை பிடித்துக் கொண்டார்.
“ஆஹா சூப்பர் கேள்வி…” ஷ்யாம் சிரிக்க,
“அடிப்பாவி…” அயர்ந்து தான் போனான் கார்த்திக்.
“பின்ன? என் புருஷன் ஏமாளின்னா என்ன வேண்ணா பண்ணுவியா?” என்று இடுப்பில் வாய்த்த கையை எடுக்காமல் இவள் கேட்க,
“யாரு? உன் புருஷன் ஏமாளியா?” கார்த்திக்கால் அந்த அதிர்ச்சியை தாள முடியவில்லை. கணவனையும் மனைவியையும் மாற்றி மாற்றி பார்த்தான். மஹா வேண்டுமென்றே கலாய்த்துக் கொண்டிருகிறாள் என்பது தெரியும். ஷ்யாம் சிரிப்பை அடக்கியபடி,
“ஒரு அப்பாவியை எப்படி ஏமாத்தி இருக்க கார்த்திக்?” என்றவனால் சிரிப்பை அதற்கு மேலும் அடக்க முடியவே இல்லை.
“என்ன அப்பாவியா? யோவ்… என்னய்யா நடக்குது இங்க?” கார்த்திக் அலறினான். ஷ்யாம் அப்பாவி என்றால் உலகம் தாங்குமா?
“பின்ன? பதினஞ்சு கோடி பொறாது… அதுவும் இல்லாம அது என்னோடது… அதைப் போய் இவ்வளவு பணம் கொடுத்து வாங்கினா அவன் ஏமாளி தான?” என்று தனி வியாக்கியானம் அவள் கூற, கார்த்திக் வாயடைத்துப் போனான். ஷ்யாம் வாய்விட்டு சிரித்தான்.
“ஏய் அது கல்யாணத்துக்கு முன்னாடி…”
“முன்னாடியோ பின்னாடியோ… எப்படியோ என் ஏமாளி புருஷனை நீ ஏமாத்தி இருக்க…”
“திரும்ப திரும்ப மச்சானை ஏமாளின்னு சொல்லாத பாப்பா. எனக்கு லைட்டா ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்கு…”
“இப்படியெல்லாம் சொன்னா நீ பண்ணது இல்லைன்னு ஆகிடுமா?” மஹா வெகு தீவிர குரலில் கேட்பதை போல கேட்டு வைக்க, பிருந்தா உட்பட அனைவருமே வயிற்றைப் பிடித்து கொண்டனர்.
“பாவி… கொடுத்துடறேன்டி… என் மானத்தை வாங்காத…” தங்கையிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
“சரி போனா போகுது… அந்த பணத்துல எனக்கு ஹாஸ்பிடல் கட்டிக் கொடுத்துடு…”
“ஏன் பக்கி… அதான் உன் புருஷன் கிட்ட அவ்வளவு பெரிய ஹாஸ்பிடல், மெடிக்கல் காலேஜ்ன்னு அத்தனை இருக்குல்ல… இன்னொரு ஹாஸ்பிடல் எதுக்குடி?”
“நோ… அந்த ஹாஸ்பிடல் எனக்கு வேணா… நான் சுயமா என்னோட கால்ல நிப்பேன்… இந்த ஹாஸ்பிடல்ல நானே சம்பாரிச்சு, நானே ஒரு மெடிக்கல் காலேஜ் கட்டி… அதை பெரிய யுனிவர்சிட்டி ஆக்கல… என் பேர் மஹா இல்ல…” என்று சிரிக்காமல் கூறியவளை பார்த்து,
“ஷப்பா… எல்லாருக்கும் ஆறறிவுன்னா என் பொண்டாட்டிக்கு மட்டும் ஏழாம் அறிவு எங்க இருந்து தான் வருதோ?” என்று சிரித்தவன், “டேய் மச்சான், உனக்கு இந்த மொட்டை மாடி கல்பனா ஞாபகத்துக்கு வரல?” என்று சிரிக்க,
“அட ஆமா… இது மொட்டை மாடி கல்பனா 2.o மச்சான்…” என்று சிரித்துவிட்டு, “ஒரு தென்றல் புயலாகி வருதேன்னு ஒரு பாட்ட போடுங்கய்யா… பன்ச் டைலாக் அடிக்கறா பாரு…” கார்த்திக் சிரித்தபடி கூற,
“சும்மா மச்சானை பயமுறுத்தாதடி… அவன் உண்மையா நீ கேக்கறன்னு நினைச்சுக்க போறான்…” என்று அவளது மண்டையில் கொட்ட, தலையை தேய்த்து விட்டுக் கொண்டவள்,
“ஏன் கேட்டா என்ன தப்பு?” என்று கண்களை உருட்ட,
“என் மானத்தை வாங்காத மஹா… உனக்கு என்ன வேணுன்னு சொல்லு… நான் பண்ணித் தரேன்…” ஷ்யாம் சற்று காரமாக கூறினான்.
“எங்க அண்ணா கிட்ட நான் கேக்கறேன்… அண்ணியார் வந்தா செய்ய விடுவாளோ மாட்டாளோ… அதுக்கு முன்னாடி நான் கறந்துட வேண்டாமா?” என்று பிருந்தாவை பார்த்தவாறே கிண்டலாக கூற, பிருந்தா பத்திரம் என்று ஒற்றை விரலை காட்டினாள்.
“அடப்பாவிகளா… இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படியொரு புத்திசாலித்தனத்தை வெச்சு தச்சு இருக்காங்களோ?” கார்த்திக் அங்கலாய்க்க, மஹா இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.
பைரவி சமையலறையிலிருந்து சப்தமாக கூறினார், “மகா… எல்லாரையும் சாப்பிட கூப்பிடு… யாரும் இன்னும் சாப்டல…” எனவும், முதல் ஆளாக ஷ்யாமிடம் போய் நின்றாள் அவள்!
“கைகழுவிட்டு வா…” என்று கூற,
“எனக்கு வேணாம்…” இப்போது முறுக்கிக் கொள்வது அவனது முறையானது!
“ரொம்ப பண்ணாத… ஒழுங்கா வா…” ஒற்றை விரலைக் காட்டி மிரட்ட, எதையோ செஞ்சுக்கங்க பிசாசுங்களா என்று இருவரையும் கண்டுக்கொள்ளாமல் எல்லாருமே டிபனில் பிசியாக தொடங்கி இருந்தனர்.
“எனக்கு வேணாம். நீயே கொட்டிக்க…” பல்லைக் கடித்தான்.
“இப்ப வர போறயா இல்லையா?” என்று அவனது கையை பிடித்து இழுக்க,
“ஏய்… உனக்கு இந்த வெ மா சூ சொல்லாம் இல்லையா?” என்று கேட்டான் ஷ்யாம்!
“அதெல்லாம் இருந்து இருந்தா நான் ஏன் தலகுப்பாலருந்து உன் பின்னாடி வர போறேன்? பை பர்த் எனக்கு அதெல்லாம் கம்மியாவே வெச்சு பெத்துடுச்சு பைரவி…” என்று சிரிக்காமல் கூற,
“ஏய் என்னடி அங்க என் பேர் உருளுது?” சமையலறையிலிருந்து பைரவி கேட்க,
“ஒண்ணுமில்ல மாதாஜி… சும்மா பேசிட்டு இருக்கேன்…” என்று கிண்டலாக கூற,
“ஏய் மஹா… உனக்கு சத்தியமா வெ மா சூ சொ எல்லாம் கம்மிதான்டி…” அதுவரை இத்தனை அட்டகாசங்களையும் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்த பிருந்தா சிரித்தபடி கூற,
“தேங்க்ஸ் தேங்க்ஸ்… தேங்க் யூ வெரி மச்டி அண்ணியாரே…” என்று வேண்டுமென்றே சிரிக்க,
“பிருந்தா, அவகிட்ட வெட்டியா பேசிட்டு இருக்காத… சாப்பிட்டுட்டு நீ கிளம்பு… டேய் கார்த்திக், புள்ளைய கொண்டு போய் விட்டுட்டு வா. பாவம் அதுவும் களைச்சு போச்சு…” என்றபடி உள்ளே போக,
“அடப்பாவிபயலுகளா… பட்டினியா ஊர் சுத்தின நான் பாவம் இல்லையாம். வீட்ல ஜாலியா ஏசில உட்கார்ந்துட்டு இருந்த நீ பாவமா? மாஆஆத்த்தாஆஆஜி…” பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினாள் மஹா!
“உன்னை யார் பட்டினியா ஊர் சுத்த சொன்னாங்களாம்? கொஞ்சமாவது அறிவிருந்தா யோசிச்சு இருப்ப மஹா…” கார்த்திக் நறுக்கென்று தலையில் கொட்ட, தலையை தேய்த்து விட்டுக் கொண்டாள்.
அதற்கு மேலும் ஷ்யாமால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. வாய்விட்டு சிரித்தவனை பார்த்து,
“சிரிக்கறவங்களுக்கு எல்லாம் நாலு நாளைக்கு சாப்படு கட்… ஞாபகம் இருக்கட்டும்…” என்று விரலை நீட்டி மிரட்ட,
“நீயே நாளன்னைக்கு காஞ்சிபுரம் ஓட போறியாம். இதுல எனக்கு சாப்பாடு கட்டா?” என்று மீண்டும் சிரிக்க, மஹா பேந்த பேந்த விழித்தாள்.
‘ஆமால்ல…’ என்று நினைத்தவள், ‘இவனை எப்படித்தான் மிரட்டறது?’ புரியவில்லை அவளுக்கு! அதையே நினைத்துக் கொண்டு தான் குளித்துவிட்டு வந்தாள். காலை முதல் அலைந்தது கசகசவென இருந்தது.
ஒருவழியாக சாப்பிட்டுவிட்டு, அங்கேயே இரவு தங்கி விடுவதென முடிவானது. ஷ்யாம் முதலிலேயே அவளது அறைக்கு சென்றுவிட, மஹா அவனுக்கு பாலை எடுத்துக் கொண்டு சென்றாள்.
மனம் தடதடத்தது!
எப்படியும் தனி ஆவர்த்தனமும் நிச்சயம்!
கதவை திறந்தாள்…
மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் மட்டுமே அறையை நிறைத்திருக்க, ஷ்யாம் ஜன்னலின் வழியே கசிந்த நிலவொளியில் ஆழ்ந்தபடி நின்றிருந்தான். மஹாவின் கண்களில் கண்ணீரை கண்ட போது அவன் தன்னை மறந்து அவளை சமாதானம் செய்து விட்டான் தான். ஆனால் அவனால் உண்மையில் இன்னமும் நிலைக்கு வர முடியவில்லை.
தன்னுடைய அத்தனை தவிப்பும், துடிப்பும், காதலும்… அவள் உணரும் படி ஏன் செய்ய முடியவில்லை?
அனைத்தையும் மறந்து யாரோ ஒருவன் கூறிய தகவலை நம்ப முடிகிறது என்றால், இத்தனை காதலும் விழலுக்கு இறைத்த நீரா?
இறுக்கமான முகத்தோடு கைகளை கட்டிக் கொண்டு அவனிருந்த நிலையை பார்த்து உள்ளுக்குள் லேசாக நடுங்கியது!
“ப்.. பா… பால்…” சொல்லும் போதே அவளுக்கு நடுங்கியது.
ஷ்யாம் எதுவும் பேசவில்லை.
அவனிடம் கொண்டு வந்து கொடுக்க, அவன் மெளனமாக அவளையே பார்த்தான். அந்த கண்கள் என்ன சொல்கிறது என்பதை படிக்க முயன்றாள்.
பாலை வாங்கி வைத்தவன், வேறு புறம் திரும்பிக் கொண்டான்!
தன்னைத் தானே வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்!
அவளுக்கு பேச பயமாக இருந்தது. என்ன சொல்வான் என்று தெரியவில்லை. வெளியில் சமாதானம் ஆனது போல தோன்றினாலும் உண்மையில் அப்படி இல்லை என்று அவளுக்கு தெரியும். அவ்வளவு சீக்கிரத்தில் அவனை சமாதானம் செய்யவும் முடியாது என்பதையும் அவள் புரிந்து வைத்து இருந்தாள். தான் செய்த காரியத்தின் வீரியம் இப்போது அவளுக்கு மிகத் தெளிவாக புரிந்தது.
தன்னுடைய உணர்வுகள் தனக்கு நியாயமாக தோன்றினாலும், அவனது உணர்வுகளை தான் கணக்கில் கொள்ளவில்லை என்பதும் புரிந்தது.
அவன் தவறிய போது எதை பற்றியும் கவலைக் கொள்ளாமல் நேரடியாக மன்னிப்பு கேட்டிருக்கிறான். தானும் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை என்றெண்ணிக் கொண்டு,
“ஷ்.. ஷ்யாம்…” என்றழைக்க, அவன் திரும்பவில்லை. வலுக்கட்டாயமாக அவனது முகத்தை திருப்பினாள்.
அவனது கண்கள் சிவந்து கலங்கியிருந்தது.
கலங்கிய அவனது முகத்தை அதிர்ந்து பார்த்தாள்.
“ஷ்யாம்… என்ன இது?” அவனது அழுத்தமும் அடங்காப்பிடாரித்தனமும் வெளியில் தான் என்பது தெரியும். அவளிடம் எப்போதுமே அவ்வளவு மென்மையான காதலன் தான். அவனை பார்க்கையில் தாய் தவிக்க விட்டுப் போன சிறு குழந்தையாகதான் இப்போது தோன்றியது. அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.
வேறு புறம் திரும்பி கொண்டான். அவனது அந்த முகத்தை காட்ட அவனுக்கு விருப்பமில்லை. அவள் முன்னிலையில் கீழிறங்க அவன் தயங்க மாட்டான் தான். ஆனால் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்ட மனைவியின் மேல் இன்னும் கோபம் குறைந்தபாடில்லை. அழுத்தமாக நிற்க முயன்றான். ஆனால் முடியவில்லை.
அவனது முகத்தை மஹா திருப்ப, “ப்ச்…” என்று முகத்தை சுருக்கியபடி அவளது கையை எடுத்து விட்டான். முகம் இன்னமும் சிவந்திருந்தது. தன்னைத் தானே மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு என்ன செய்து அவனை சமாதானம் செய்வது என்று புரியவில்லை.
“சாரி… சத்தியமா உன்னை யாருக்கும் என்னால விட்டுக் கொடுக்க முடியல… நான் ஓவர் பொசெசிவா இருக்கேன்னு தெரியுது… அந்த பொசெசிவ்னஸ் ஓவராகி நிறைய முட்டாள்தனம் பண்றேன்… சம்டைம்ஸ் ஐ ம் வெரி மச் சிக். அதுவும் புரியுது… இனிமேலும் இப்படி நடக்காதுன்னு என்னால ப்ராமிஸ் பண்ணவெல்லாம் முடியாது. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுவேன்… ஆனா மொத்தமா என்னால என்னை மாத்திக்க முடியாது ஷ்யாம்…” என்று கூறிக்கொன்டிருந்தவளுக்கு குரல் தேய்ந்து தழுதழுத்தது!
“என்னை நீ பைத்தியம், லூசு, அரவேக்காடுன்னு திட்டலாம்… நான் அப்படித்தான்டா இருக்கேன். பைத்தியமா… உன் மேல பைத்தியமா…” என்றவளால் அதற்கும் மேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. உடைந்து வாய்மூடி அழ ஆரம்பித்து இருந்தாள்.
அதற்கும் மேல் அவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவளை இழுத்து இறுக்கமாக அணைத்திருந்தான், அதற்கும் மேல் தாங்கவியலாமல் உடைந்து!
“அதுக்கும் மேல நான் உன்மேல பைத்தியமா இருக்கேன்டி… இன்னைக்கு எத்தனை தடவை செத்து பிழைச்சேன்னு எனக்கே தெரியல மஹா…” என்றவன், அவளை மேலும் மேலும் இறுக்கிக் கொண்டான், அவளுக்குள்ளே ஆழ்ந்து அமிழ்ந்து விடுவதை போல!
“ப்ளான்க்கா ஆய்ட்டேன்டா… என்ன பேசறேன்னே தெரியாம பேசிட்டேன்… சாரி… சாரி பார் எவ்ரிதிங்…” என்று அவனது நெஞ்சாங்கூட்டுக்குள் கரைந்து கொண்டிருந்தாள் மஹா!
“உன்னை காணோம்ன்னு போலீஸ் கமிஷனர் கிட்ட அன்அபீஷியலா கம்ப்ளைன்ட் பண்ணி இருந்தேன். அவங்க என்ன பண்ணாங்க தெரியுமா?” என்று அவன் கேட்க, நிமிர்ந்து அவனது முகத்தை பார்த்தாள்.
“என்ன பண்ணாங்க?” கண்ணீரோடு அவள் கேட்க, அவளை இன்னமும் இறுக்கிக் கொண்டான், அவளை தவற விட்டுவிட கூடாது என்றெண்ணிக் கொண்டு!
“கிண்டில ஏதோ ஒரு பொண்ணு ட்ரைன் முன்னாடி விழுந்துடுச்சாம்… அந்த பாடிய பார்த்து வெரிபை பண்ணுங்கன்னு கூப்பிட்டாங்கடி…” என்று கூறியவனின் கண்களில் கண்ணீர் விழவா எழவா என கேட்டுக் கொண்டு நின்றிருந்தது.
மஹா அதிர்ந்து பார்த்தாள்!
இது எத்தனை பெரிய அதிர்ச்சி. அந்த இடத்தில் தான் இருந்திருந்தால்?
அந்த அதிர்ச்சியில் இதயத் துடிப்பே நின்றிருக்கக் கூடுமே…
“போய் பார்த்து இல்லைன்னு தெரியறதுக்குள்ள…” என்று கண்ணீரோடு நிறுத்தியவன், “செத்துட்டேன்… நீ இல்லைன்னா எனக்கு மட்டும் என்னடி இருக்கு இங்க?” என்றவன் அவளை முழுவதுமாக இறுக்கிக் கட்டிக்கொண்டான். அவனது உடல் குலுங்கியது.
அழுகிறான்! ஆண்கள் அழ மாட்டார்கள் என யார் சொன்னது?
கம்பீரம் மறந்து, சிறு குழந்தையாக, மனைவியின் மடி சாய்ந்து அழுவதும் ஆண்மைக்கு அழகுதான்!
சுகமோ, சோகமோ அதை மனைவிடம் மட்டும் கொட்டும் ஆண்மை ஆச்சரியமான அழகுதான்!
பத்து மாதம் தன் குழந்தையை மனைவி வயிற்றில் சுமக்க, இருவரையுமே காலம் முழுக்க நெஞ்சில் சுமக்கும் ஆண்மை ஒப்புமை இல்லாத அழகுதான்!
இல்லாளின் உணர்வுகளை உள்வாங்கி, அவளது உணர்வோடும் உயிரோடும் ஒன்றி கலந்து, காலமெல்லாம் பயணிக்கும் ஆண்மை ஆர்ப்பரிக்கும் அழகுதான்!
நரை கூடி கிழப் பருவம் எய்தும் போதும் காதல் கிழவியை கண் துஞ்சாமல் ரசிக்கும் ஆண்மை ஆனந்த அழகுதான்!
அவனை இவள் சமாதானம் செய்வாளா, இவளை அவன் சமாதானம் செய்வானா?
இருவருமே உணர்வுகளின் பிடியில்!
அவனது கண்ணீர் இவளுக்காக மட்டுமே!
இவளது கண்ணீர் அவனுக்காக மட்டுமே!
உயிருக்குள் கரைந்து கலந்து விட கட்டளையிட்டது உணர்வுகள்!
கண்களை துடைத்துக் கொண்டு சற்றே விலகி அவள் முகம் பார்க்க, தலை குனிந்தவள் நிமிரவில்லை.
அழுகை குறைந்து அவளுக்குள் வேறு ஏதோ ஒருவிதமான பரபரப்பு!
அவளது இடையை தன்னோடு இழுத்தபடி அவளது முகத்தை நிமிர்த்தி அவளது கண்களை ஆழமாக பார்த்தான்!
“ஹண்ட்ரட்த் டே மஹா…” கரகரப்பாக ஒலித்த அவனது குரல் அவளுக்குள் ஏதோவொரு மாயத்தை செய்வித்தது. உடலில் புதுவித உணர்வு, ஒருவிதமான இன்ப அவஸ்தை!
நிமிர்ந்து அவனை பார்த்து, அவனது உயரத்திற்கு எம்பி, அவனது முகத்தை கைகளால் பற்றியவள், அவனது உதட்டுக்கு வெகு அருகில் போய் ஒரு நொடி யோசித்தவள், அவனது உதட்டில் முத்தமிட்டாள்,





