arrow_back
கனியாத்ரேயம் கனி 2
கனியாத்ரேயம் chevron_right பகுதி 2 / 15

கனி 2

visibility 33
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 2

 

 

வேறு வழியில்லாமல், அன்றே மாலை வேலையில் இருந்த திருச்செல்வம், அமிர்தவள்ளியம்மா, கலைவாணி, கனி, ஸ்ரீ மித்ரன் என அனைவரும்  பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிருத்திகா வீட்டிற்குப் பெண் கேட்பதற்காகக் கிளம்பினர்.

கிருத்திகாவின் வீட்டிற்குச் சென்றதும், மித்ரன் அங்கே நடந்துகொண்டிருந்த விஷயங்களைப் பார்த்துக்கொண்டே அமைதியாக நின்றிருந்தான்.

அவனுடைய குடும்பத்தினர் வந்திருப்பதைப் பார்த்த கிருத்திகாவும், வீட்டில் இருந்தவர்களும் என்ன பேசப்போகிறார்கள் என்று புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

சிறிது நேரத்தில், மித்ரன் எழுந்து நின்று,

“அங்கிள்… நான் கிருத்திகாவை கடந்த பத்து வருஷமா காதலிக்கிறேன். அவளுக்கும் என்னைப் பிடிக்கும். எங்கள ரெண்டு பேரையும் பிரிச்சிடாதீங்க. தயவுசெய்து எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என்று பணிவாக கூறியவன்,

எப்படியாவது கிருத்திகாவைத் தன்னுடன் சேர்த்துவிட வேண்டும் என்ற தவிப்பில், பெண்ணைப் பெற்றவர்களின் காலில் விழுந்துவிட்டான்.

அதைப் பார்த்த கிருத்திகாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

அவள் தன் அப்பாவை நோக்கி ஓடி வந்து,

“அப்பா… எனக்கு மித்ரனைத்தான் பிடிச்சிருக்கு. ப்ளீஸ் அப்பா… அவருக்கே என்னைக் கல்யாணம் பண்ணி வைங்க” என்று அழுதபடி கொஞ்சிக் கேட்டாள்.

அவளுடைய அப்பா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

கிருத்திகா கண்ணீருடன் அவருடைய காலில் விழுந்து,

“அப்பா… ப்ளீஸ்… என்னைப் புரிஞ்சுக்கோங்கப்பா. எனக்கு அவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணா செத்துருவேன்” என்று கதறினாள்.

மகள் இப்படிக் கதறி அழுவதைப் பார்த்த அவரால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. கிருத்திகாவின் அம்மாவும் தன் கணவரைப் பார்த்து, தன் சம்மதத்தை கண்களாலேயே தெரிவித்தார்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், வேறு வழியில்லாமல்,

“சரி… உனக்கு அவனைத்தான் பிடிச்சிருக்குன்னா, நாங்க என்ன பண்ண முடியும்? உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறோம்” உணர்ச்சி அற்ற குரலில் கூறினார் மனிதன்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் கிருத்திகாவிற்கும் மித்ரனுக்கும் முகத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஒரே நேரத்தில் மலர்ந்தது.

இருவருக்கும் ஒருவரையொருவர் அணைக்கப் பிடித்திருந்தாலும், பெற்றோர்கள் அருகில் இருப்பதால் தங்களது சந்தோஷத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல், கண்களாலேயே ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

கிருத்திகாவைப் பெண் பார்க்க வந்திருந்த வீட்டினரின் முன்னிலையில், கிருத்திகாவின் தந்தை யோகநாதன் தலைகுனிந்து நின்றார். பின்னர் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

 

ஒரு வாரத்திற்குப் பிறகு

சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, வெற்றி ஆத்ரேயன் அமெரிக்காவிலிருந்து தனது வருங்கால மனைவி நைரா நந்தனாவுடன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பிய வெற்றியின் தோற்றமே முற்றிலும் மாறியிருந்தது. அழகாக வாரி ஸ்டைல் செய்திருந்த தலைமுடி, நேர்த்தியாக அமைந்த நெற்றி, அடர்த்தியான புருவங்கள், கூர்மையான கண்கள், அழகாய் இளஞ்சிவப்பு உதடுகள் என அவனுடைய முகத்தில் ஆண்மையும் கம்பீரமும் கலந்து தெரிந்தது. லேசாக முறுக்கிவிட்ட மீசையை மட்டும் அப்படியே வைத்திருந்தான். முகத்தில் எந்தவிதமான புகைப்பழக்கத்தின் தடயமும் இல்லாமல், இயல்பான வசீகரத்துடன் இருந்தான்.

அவனுடைய உடையிலும் ஒரு தனித்துவமான கவர்ச்சி இருந்தது. சாதாரணமான இன்ஃபார்மல் டிரெஸ்ஸிங் சென்ஸில், கச்சிதமாகப் பொருந்திய சட்டையும் பேண்ட்டும் அணிந்திருந்தான். இடது கையில் விலையுயர்ந்த வாட்ச் கட்டியிருந்தான். கால்களில் விலை உயர்ந்த ஷூ அணிந்திருந்தான். ஒரு கையில் சூட்கேஸைப் பிடித்தபடி, மற்றொரு கையில் கோட்டை சாதாரணமாகத் தோளில் போட்டிருந்தான். கூடவே அவனது பிஅ சாய்சரணையும் அழைத்து வந்திருந்தான்.

பல வருடங்களுக்கு பிறகு மகன் வீட்டிற்கு வருகைதர அதுவும் தன்னுடைய வருங்கால மனைவியையும் அழைத்துக்கொண்டு வருவதும் அமிர்தவள்ளிக்கு திருசெல்வத்திற்கும் கௌரிக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வீட்டு வாசலுக்கு வந்த இருவரையும் அமிர்தவள்ளியம்மாவும் கலைவாணியும் சேர்ந்து ஆரத்தி எடுத்து, மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.

உள்ளே வந்ததும் வெற்றி, அமிர்தவள்ளியம்மா மற்றும் திருச்செல்வத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். நைராவும் அவர்களைப் பார்த்து மரியாதையுடன் நின்றாள்.

அமிர்தவள்ளியம்மா அவளைப் பார்த்து,

“பேரு என்னம்மா?” என்று கேட்டார். வெற்றி உடனே,

“நைரா நந்தனா” என்று சொல்ல,

அமிர்தவள்ளியம்மாவுக்கு அந்தப் பெயர் சரியாகக் காதில் விழாமல்,

‘மைராவா?’ என்று புரிந்து கொண்டார்.

அதைக் கேட்ட வெற்றி சிரித்தபடி நைராவைப் பார்த்தான்.

“நைரா நந்தனா” என்று மீண்டும் சொல்லிக் கொடுத்தான்.

நைரா புன்னகையுடன் தலையசைத்தாள்.

அவளுக்குத் தமிழ் புரியும். ஆனால் தமிழில் பேசத் தெரியாது. அதனால் அனைவரையும் பார்த்து சிரிக்க மட்டுமே செய்தாள்.

வெற்றி, சரணையும் அறிமுகம் செய்த பின்னர் சரணுக்கு ஒரு தனி அறை கொடுக்கப்படிருந்ததது. வெற்றி வீட்டில் இருந்த அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தபோது, தன்னுடன் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை ஒவ்வொருவரிடமும் கொடுத்தான். ஒவ்வொருவருக்கும் பெரிய பெரிய பரிசுப் பொதிகள் இருந்தன.

அப்போது வெற்றி கௌரியைப் பார்த்து,

“கௌரி, கனி எங்கே?” என்று கேட்டான். கௌரி சிரித்தபடி இருக்க,

“கனி இருக்காளா, எங்கம்மா?” என்று வெற்றி கேட்டான்.

“அவ உன்னையே பார்த்து பயந்துட்டு உள்ளே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கா அண்ணா” என்றாள்.

அதைக் கேட்டதும் வெற்றி சிரித்தான்.

கனியை நினைத்தவுடனே, அவனுடைய நினைவில் ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் ஓடியது.

சிறு வயதில் கனி அவனிடம் பாடம் படிப்பாள். கணக்கு புரியாமல் திணறும்போதெல்லாம், வெற்றி அவளுக்கு அருகில் அமர்ந்து பொறுமையாகக் கணக்குகளைச் சொல்லிக் கொடுப்பான்.

அவள் கவனமாகப் படிக்காமல் ஏதாவது செய்துவிட்டால், அவளுடைய தலையில் குட்டு வைத்து,

“தப்பா கணக்கு போடத” என்று கண்டிப்பான்.

அந்தப் பழைய நினைவுகள் எல்லாம் வெற்றியின் மனதில் தோன்றின.

இப்போது அதே வெற்றியைப் பார்த்ததும், அந்தப் பழைய பயம் கனிக்கும் அப்படியே வந்துவிட்டது.

கனி உள்ளே ஒளிந்துகொண்டு, அங்கிருந்து வெற்றியை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் வெற்றி அவளைப் பார்த்துவிட்டு,

“கனி… இங்க வா” என்று அழைத்தான்.

கனி தயக்கத்துடன் மெதுவாக அவன் அருகில் வந்தாள்.

வெற்றி மற்றவர்களுக்குக் கொடுத்ததைவிட, கனிக்கென்று தனியாக ஒரு சிறிய பரிசுப் பொதியை எடுத்துக் கொடுத்தான்.

“இத உனக்காக வாங்கிட்டு வந்தேன். பிரிச்சுப் பாரு” என்றான்.

கனி அந்தப் பொதியை வாங்கிக்கொண்டு, மெதுவாகப் பிரித்துப் பார்த்தாள். அதற்குள் ஒரு ஐஃபோன் இருந்தது.

அதைப் பார்த்ததும் கனி கண்களை விரித்தாள். ஐஃபோன் என்றால் என்னவென்றே அவளுக்குத் தெரிந்திருந்தாலும், அதை எப்படி பயன்படுத்துவது என்று அவளுக்குத் தெரியவில்லை. இதுவரை யாரும் அவளுக்குத் தனியாக ஃபோன் வாங்கிக் கொடுத்ததும் இல்லை.

அந்த ஃபோனை கையில் வைத்துக்கொண்டு, அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி பிரமிப்புடன் நின்றாள்.

அவளுடைய அந்தக் குழந்தைத்தனமான முகத்தைப் பார்த்த வெற்றி சிரித்தபடி,

“கனி… இப்போ ப்ளஸ் டூ படிக்கிறியா?” என்று வெற்றி கேட்டான்.

அதற்கு கனி, “இல்ல அண்ணா… காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் முடியப் போகுது. டாக்டருக்குப் படிக்கிறேன்” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்ட வெற்றி ஒரு நொடி அவளைப் பார்த்தபடியே,

“காலேஜ் படிக்கிறியா? நீ இன்னும் எனக்கு சின்னப் பிள்ளையாவே தெரியிற… இன்னும் கொஞ்ச வருஷம் போன பிறகு, நான் உங்ககிட்ட ஊசி போட வர்றேனு” என்று நக்கலாகக் கூறினான்.

அதைக் கேட்ட கனி வெட்கத்துடன் சிரித்தபடி, “எனக்காக ஃபோன் வாங்கிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ் அண்ணா…” என்றாள்.

அதற்குப் பிறகு நைராவை கௌரி ஆத்யாவின் அறையில் தங்க வைத்தாள். வெற்றி மேல் மாடியில் இருந்த தனது அறைக்குச் சென்றான்.

நைராவுக்குத் தமிழ் புரிந்தாலும், பேசத் தெரியாமல் மிகவும் சிரமப்பட்டாள். தண்ணீர் வேண்டும் என்று கேட்பதற்குக்கூட தயங்கியவள், பிறகு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினாள்.

அதனால் கௌரி, கனி, நைரா மூவரும் ஆங்கிலத்திலேயே தங்களுடைய உரையாடலைத் தொடர்ந்தனர்.

வந்ததிலிருந்து தனது வருங்கால மனைவி தனியாக பார்க்க சந்தர்ப்பம் அமையாமல் போக வெற்றி, சிறிது நேரத்திற்குப் பிறகு நைராவுக்கு மெசேஜ் செய்து, தனது அறைக்கு மேலே வருமாறு அழைத்தான்.

நைரா மெசேஜைப் பார்த்துவிட்டு, சிறிது நேரத்தில் அவள் மேலே வந்தாள்.

அவள் அறைக்குள் வந்ததும், அவளைப் பார்த்த வெற்றி முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு,

“வீட்டுக்கு வந்ததிலிருந்து என்னை நீ கொஞ்சம்கூட கவனிக்கவே மாட்டேங்கிறியே…” என்று ரொமான்டிக்காகக் கூறினான்.

அதைக் கேட்ட நைரா சிரித்தபடி,

“வெட்டேட்டா… ஞான் இத்த்ர நாளும் நின்னெ தன்னெயல்லே நோக்கிக்கொண்டிருந்நது. இப்பொழல்லே ஞான் வீட்டிலேக்கு வந்நது. இவிடெயுள்ள எல்லாவரோடும் கொறச்சு பரிசயப்படண்டே? அவரோடும் சம்பாரிக்கண்டே?”

“அத்தான்… நான் இவ்வளவு நாளும் உங்களைத்தானே கவனிச்சுக்கிட்டு இருந்தேன். இப்பதானே நான் வீட்டுக்கு வந்திருக்கேன். இங்கே இருக்கிற எல்லார்கிட்டயும் கொஞ்சம் பழக வேண்டாமா? அவங்களோட பேச வேண்டாமா?”

“அப்போ நான் உனக்கு வேணாமா?” காதல் தவிப்போடு அவன் கேட்டிட,

“நின்னெ ஞான் ஷ்ரத்திக்காதிரிக்குமோ? நீயல்லே என்டெ சொந்தம்…”

“உன்னை நான் கவனிக்காம இருப்பேனா? நீதானே என்னோட சொந்தம்…” உரிமையோடு கூறினாள்.

அதைக் கேட்ட வெற்றி சிரித்தபடி,

“எங்க வீட்ட ஈஸியா நான் சமாளிச்சிட்டேன். உங்க வீட்ட சமாளிக்க நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். பட்… அதுக்கெல்லாம் எனக்கு எந்தக் கிரெடிட்டுமே கிடைக்கல” என்று புலம்புவது போலக் கூறி, தனது கன்னத்தை அவளிடம் காட்டினான்.

அதைப் பார்த்த நைரா சிரித்தபடி, அவனருகில் சென்று அவன் கன்னத்தில் மென்னையாக ஒரு முத்தம் கொடுத்தாள்.

அவளது அந்தச் செயலில் வெற்றியின் முகத்தில் உடனே புன்னகை மலர்ந்தது.

அடுத்த நொடியே, தாமதிக்காமல் அவளைத் தன்னருகில் இழுத்து, அவளது இதழ்களோடு தன் இதழ்களைச் முற்றுகை இட்டிருந்தான்.

“உங்கள சாப்பிட வர சொன்னாங்க வெற்றி அண்ணா” என்று கனியின் குரல் கொடுத்து கதவை தட்ட, இதழ்களை விடுத்தான்.

“நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன். நீ போ கனி”

“சரி அண்ணா…” என்று சொல்லிவிட்டு கனி அங்கிருந்து நகர்ந்தாள். வெற்றி, சரணையும் உண்பதற்கு அழைத்திருந்தான். 

சிறிது நேரத்தில் அனைவரும் இரவு உணவுக்காக டைனிங் டேபிளைச் சுற்றி அமர்ந்தனர்.

நைராவும் அவர்களுடன் அமர்ந்து, ஒவ்வொருவருக்கும் உணவைப் பரிமாறிக்கொண்டிருந்தாள். அவள் தங்களுக்கு புதிதானவள் என்றாலும், எந்தத் தயக்கமும் இல்லாமல் குடும்பத்தோடு ஒன்றிப் பழக முயற்சி செய்வதைப் பார்த்த அமிர்தவள்ளியின் மனதிற்குள் ஒரு சிறிய மகிழ்ச்சி தோன்றியது.

‘வேற மொழி பேசுற பொண்ணா இருந்தாலும், இந்தக் குடும்பத்தோட நல்லா அனுசரிச்சுப் போறாளே…’ என்று நினைத்துக்கொண்டார்.

“சரண் இது நம்ம வீடு உனக்கு எவ்வளவு வேணுமா சாப்பிடு. கூச்சப்படாத” சரணுக்கு இந்த உணர்வு புதிதாக இருந்தது. ஆசிரமத்தில் வளர்ந்தவன். கிடைத்த ஸ்காலர்ஷிப்பை ஒழுங்காக பயன்படுத்தி நன்றாக படித்து அமெரிக்காவில் வேலைக்கு சேர்ந்து, அந்த வேலை பிடிக்காமல்போக, வெற்றியிடம் உதவியாளனாக சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகியிருந்தன. 

மற்றவர்கள் அவர்களது விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பும் வேளை சரண் மட்டும் அங்கேயே தங்கி விடுவான். இந்தியாவில் யாருமில்லை என்று,  வெற்றி தன்னுடன் இந்த விடுமுறையில் அழைத்து வந்திருந்தான். 

இவ்வளவு பெரிய குடும்பத்தில் தான் அமர்ந்து உண்பதை நினைத்து மகிழ்ந்தான். 

அனைவரும் இரவு உணவை சுவைத்துக் கொண்டிருக்க, ஸ்ரீ மித்ரன் ஒரு கையில் உணவை எடுத்துக்கொண்டும், இன்னொரு கையில் அலைபேசியை வைத்துக்கொண்டும் கிருத்திகாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த அமிர்தவள்ளி அவனை முறைத்துப் பார்த்தார்.

“டேய் மித்ரன்! சாப்பிடும்போதாவது அந்த ஃபோனை கீழே வைக்கக்கூடாதா, கல்யாணம் பேசி முடிச்சாச்சு. எப்பப் பார்த்தாலும் ஃபோன்ல அந்தப் பொண்ணுகூட பேசுறியே” 

அம்மா எல்லார் முன்னாடியும் அப்படிச் சொன்னதும், மித்ரனுக்கு சற்றுத் தர்மசங்கடமாகிப் போனது. காலையில் இருந்து அவளின் அழைப்பை எடுக்க முடியவில்லை.  வயல், அரிசி மண்டி, தென்னந்தோப்பு இரண்டும், மித்ரனும் திருச்செல்வமும்தான் பார்த்துக்கொள்கிறனர். அதுவும் இன்று அதிக வேலைபழுவானது. 

அவன் லேசாகத் தலையைச் சொறிந்துகொண்டு, “சரிம்மா…” என்று சொல்லிவிட்டு, உடனே அழைப்பைத் துண்டித்தான்.

சிறிது நேரத்தில் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, அவரவர் அறைகளுக்குச் செல்லத் தொடங்கினர்.

அண்ணன் தம்பியும் இன்னும் நேருக்குநேராக வந்ததிலிருந்து பேசவே இல்லை. அதனால் வெற்றி தன் கையோடு மித்தரனை தனதறைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.

அமிர்தவள்ளியம்மா, கலைவாணி, கனி, கௌரி என நால்வரும் மட்டும் அங்கே அமர்ந்திருந்தனர்.

அப்போது கௌரி, அம்மாவைப் பார்த்து சிரித்தபடி,

“என்னம்மா… உன்னோட மருமகளுங்க பேரு செம்மையா இருக்கு. நைரா நந்தனான்னு சொல்றதுக்குள்ளேயே நாக்கு சுத்தி சுத்தி வருது. சும்மா வாயிலேயே வரமாட்டேங்குது!” என்று கலாய்த்தாள்.

அதைக் கேட்ட அமிர்தவள்ளியும் சிரித்தபடி,

“சொன்னப்போ எனக்கே சரியா கேக்கல. மைராவான்னு நினைச்சேன். இப்பவும் அந்தப் பேரு வாயில வரமாட்டேங்குது. என்ன பேரு வச்சிருக்காங்க பாரு, நைரா நந்தனாவாம்!” என்று சிரித்தார்.

அதைக் கேட்ட கௌரியும் கனியும் சிரிக்க, கலைவாணியும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தாள்.

திருச்செல்வம், திருமண வேலைகளை பற்றி பேச இருக்க, பெண் குழுவினருடன் அமர்ந்து கொண்டார்.

அன்றிரவு நன்றாகவே கழிந்தது. கனியும் கலைவாணியும் அவர்களது வீட்டிற்கு சென்று உறங்கினர்.

 

அமிர்தவள்ளி திருச்செல்வதின் அறையில், 

“வள்ளி எனக்கு கால் எல்லாம் கடுகடுன்னு இருக்கு. நான் சாயப் போறேன். உனக்கு மாத்திரை வேணும்னா, இப்பவே கேளு. சாய்ந்த பிறகு தயவு செய்து எழுப்பாத” 

“நான் இன்னைக்கு சீக்கிரமாவே மாத்திரை போட்டெங்க ஏதோ இன்னைக்கு தான் நிம்மதியா தூங்க போறேன் நினைக்கிறேங்க” 

“ஏன் அப்படி சொல்ற வள்ளி இத்தனை நாள், நீ நிம்மதியா தூங்கவே இல்லையா?” 

“அப்படி இல்லங்க, வெற்றி வாழ்க்கைய நினைச்சு அழாத ராத்திரியே இல்ல, நீங்களே பல முறை பார்த்து இருக்கீங்க. ஆனா, இன்னைக்கு அப்படி இல்ல. வெற்றிக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அவன் கூட வாழ ஒரு பொண்ணு தயாராக இருக்குன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு” 

அமிர்தவள்ளியின் மூளை பழைய நினைவுகளை மீட்டும் வேளையில், 

“அதான் மாத்திரை போட்டிய வள்ளி இன்னைக்காவது நிம்மதியா தூங்கு” என்றார் வள்ளி மணாளன். 

“கால் வலின்னு சொன்னீங்க கொஞ்சம் பிடிச்சு விட்டு நான் தூங்குறேன்” என்றிட, 

“என்ன வள்ளி நீ சந்தோஷமா இருக்கும் போதெல்லாம் என் மேல பாசம் கூடுமோ” என்று சிலாகித்தார். 

“கிழவரே! காலை புடிச்சு விடுறேன் பேசாம படுங்க” பொய்யான கண்டிப்புடன் கூறினார் காலை பிடித்து விட்டவாறே. 

“நான் இன்னும் தாத்தா ஆகல. அதனால நீ சொல்றத ஏற்றுக்கொள்ள முடியாது” கறுப்பு வெள்ளை நிறங்கள் கலந்த மீசையை முறுக்கிவிட்டார். 

“அத பத்தி எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க. அடுத்த வருஷமே இந்நேரத்துக்கு நம்ம பசங்க நம்மள தாத்தா பாட்டி ஆக்கிருவாங்க” என்று கூற திருசெல்வம் என்று சிரிக்க அந்த சிரிப்பை பார்த்து அமிர்தவளையும் நன்றாக சிரித்தார். 

நடக்கவிருக்கும் துன்ப நிலை யாரு கண்டார்கள். இதுதான் இவர்களின் கடைசி சிரிப்பா?

 

 

******

 

அடுத்த அத்தியாயம்

கனி 3

கனி 3   நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தனது அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தவள், சூரியனுக்கு நமஸ்காரம் செய்யும்போது மணி ஐந்து பதினைந்து ஆகியிருந்தது. வானம் இருள் சூழ்ந்த நேரமது. கனியாவோ, “சாரி… நீங்க லேட்டு சூரியபகவானே…”என்று சூரியன் காணாத வானை பார்த்து புன்னகைத்தாள். காலை மசாலா…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்