- Joined
- Aug 2, 2020
- Messages
- 2,708
- Reaction score
- 7,943
ஆதிராவின் கையில் மெல்லிய முத்தத்தைப் பதித்து, “ஐ லவ் யூ..” பட்டென்று தீனா சொல்லவும், ஆதிரா சிலையென நின்றாள்.. “யுவா..” அவள் திகைப்புடன் முணுமுணுக்க, தனது கையிலிருந்த அவளது கையில் மீண்டும் அவன் இதழ் பதிக்க, அவளது உள்ளுக்குள் நடுக்கம்..
பட்டென்று தனது கையை உருவிக்கொண்டவள், அவனைத் தள்ளிவிட்டு, “நான் குளிக்கப் போகணும்..” என்றபடி குளியறைக்குள் புகுந்துக்கொள்ள, விசிலடித்தபடி தீனா தலையணையை அணைத்துக்கொண்டு படுத்தான்..
உள்ளே சென்றவளோ, “ஹையோ இவரு என்ன பொசுக்குன்னு ‘ஐ லவ் யூ’ சொல்றாரு.. எனக்கு ஹார்ட் அப்படியே வெளிய வந்து குதிச்சிடும் போலருக்கு..” பெரிய மூச்சுக்களை விட்டு தன்னை சமன் படுத்தியபடி ஷவரினடியில் நின்றவளுக்கு, இயல்பாக சில நிமிடங்கள் பிடித்தது..
இதயம் சமன்பட்ட பிறகோ, அவளது இதழ்கள் புன்னகையில் விரிந்தது. மனதில் வந்த பாடல்களை முணுமுணுத்தபடி குளித்துவிட்டு வர, தீனா மீண்டும் உறக்கத்தின் பிடிக்குள் சென்றிருந்தான்..
அவனது அருகே சென்று நின்றவள், “ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டு இந்த கல்யாணத்தை செய்துக்கிட்டோம்? இப்போ என்ன செய்துட்டு இருக்கோம்?” கேலியாக கேட்டுவிட்டு, அறையை விட்டு வெளியில் செல்ல, அஷ்வின் அவளைப் பார்த்து கேலியாக புருவத்தை உயர்த்தினான்..
“உனக்கு அவரு வரது தெரியுமாண்ணா?” அவள் கேட்கவும்,
“தெரியுமே.. நீ என் கூட படம் பார்த்திருந்தா அவரை கூப்பிட போயிருக்கலாம்..” கேலியாக அவன் சொல்ல, பத்மினி அவளைப் பார்த்துச் சிரித்தார்..
“போங்கம்மா.. இன்னைக்கு என்ன சமையல்?” என்று கேட்டபடி சமலறைக்குள் புகுந்தவள், அவனுக்கு பிடித்தமானதை சமைக்கத் துவங்க, அன்னையின் மனதோ நிம்மதி கொண்டது..
உணவின் வேளையில் அஷ்வின் தீனாவின் முகத்தை அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருக்க, “ஏண்ணா? ஏதாவது சமையல் சரியாயில்லையா? அவரை அவரைப் பார்க்கற?” இருவரையும் அவள் குழப்பமாகப் பார்க்க,
“இல்ல பார்ட்னர்.. நான் மட்டும் குடும்பஸ்தனா சுத்திட்டு இருக்கேன்ல்ல? மச்சான் சிங்களா லைஃப்பை என்ஜாய் பண்ணிட்டு இருக்காரா? அது தான் நைட் வரும்போது ‘எப்போ மச்சான் கல்யாண சாப்பாடு போடப்போறீங்க’ன்னு கேட்டேன்” அவன் சொல்லி முடிப்பதற்குள்,
“நீங்களும் சொல்லுங்க மாப்பிள்ளை.. நீங்க சொன்னாலாவது கேட்கறானான்னு பார்ப்போம்..” பத்மினி இடைப்புக,
“அது தான் அத்தை.. எனக்கு தெரிஞ்ச பொண்ணு ஒருத்தங்க இருக்காங்க.. அதுவும் மச்சான் ஆபிஸ்ல தான் வர்க் பண்றாங்க. அவங்க வீட்ல அவங்களுக்கு மாப்பிள்ளை பார்க்கறாங்க. அது தான் மச்சான்க்கிட்ட நைட் வரும்போது கேட்டேன். மச்சான் ரொம்ப யோசிச்சாரு. ‘நாங்க கிளம்பறதுக்குள்ள ஒரு நல்ல செய்தியைச் சொல்லுங்க. நல்லபொண்ணு.. மிஸ் பண்ணிடாதீங்க’ன்னு சொன்னேன்.” உணவே குறியாக சொல்லவும், ஆதிரா அவனது முகத்தை ஆழ்ந்து நோக்கினாள்.
“அப்படியா மாப்பிள்ளை? நிஜமாவா? பொண்ணு வீட்ல எப்படி? அவங்களுக்கு நம்ம அஷ்வினை பிடிச்சிருக்கா? அந்தப் பொண்ணுக்கிட்ட கேட்டீங்களா?” பத்மினி பரபரக்க,
“அவங்களுக்கு ஓகே தான்.. இனிமே மச்சான் தான் சொல்லணும்.. அவருக்கு பிடிச்சிருந்தா பொதுவா எங்கயாவது ரெண்டு குடும்பமும் மீட் பண்ணிட்டு, மேல ப்ரோசீட் செய்யலாம்..” தீனா சொல்லிவிட்டு அஷ்வினைப் பார்க்க, அஷ்வினின் பார்வை தனது அன்னையின் மேலிருந்தது..