ஆண்மையெனப்படுவது யாதெனில்.8.(பேராண்மை)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Hi friends ❣
இதுவரை கமெண்ட் போட்டு எனக்கு ஊக்கம் கொடுத்த நட்புகளுக்கு நன்றிகள் பல🙏🙏🙏
அதே அன்பை இம்முறையும் எதிர்பார்த்து உங்கள் அனாமிகா 46 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
**************************

*8*

கோவிலில் ஆண்கள் கும்பலில் நின்று கொண்டிருந்தவன், பாலமுருகன் தோளில் கை போட்டவாறு வந்தான். அவனையே உற்றுக் கவனித்தாள். வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை. 'மெதுவா போதை ஏறும்போல,'என்று எண்ணிக் கொண்டாள்.


பந்தியில் இருவரும் சேர்ந்து அமர இலை போட்டு பரிமாறப்பட்டது.

தேவாவின்‌ இலையை சிறப்பாகக் கவனித்தாள் முறைப் பெண் தீபா.


வள்ளி அவளை முறைத்துப் பார்க்க,"அவளை ஏன் முறைக்கிறே? அவ மாமனை அவ கவனிக்கிறா. உனக்கும் வேணும்னா ரெண்டு ‌நல்லி எலும்பு போட சொல்லவா?"என்று கேட்க,


"அதென்ன? உங்களை மட்டும் முறை பொண்ணு கவனிச்சா தப்பில்லை. ஆனா என்கிட்ட ஒருத்தன் வந்து பேசுனதும் அந்தக் கேள்வி கேட்டிங்க."என்றாள் எகிறிக் கொண்டு.


"கொடி புடிக்க ஆரம்பிச்சிட்டியா? ஆம்பளைக்கு ஒரு நியாயம். பொம்பளைக்கு ஒரு நியாயமானு. விதண்டா வாதம் பண்ணாம சாப்பிடு. டைம் ஆயிருச்சு."


"இவருக்கு வந்தா மட்டும் ரத்தம். மத்தவங்களுக்குனா தக்காளி சட்னி,"என்று வாய்க்குள்ளே முனகியவாறே சாப்பிட ஆரம்பித்தாள்.


சாப்பிட்டு விட்டு, உறவுகளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர். வரப்பில் நடந்து கொண்டிருக்க, ஒவ்வொரு தூறலாகஆரம்பித்த மழை சடசடவென வேகம் எடுத்தது. கோவிலுக்கே திரும்பி விடலாம் என்றால் அங்கும் திறந்த வெளி மண்டபம் தான். காது குத்திற்காக போட்டிருந்த பந்தலிலும் அங்கு‌ இருந்தவர்களே ஒண்டிக் கொள்ள காருக்கே போய் விடலாம் என திரும்பினர். காருக்கு நடந்து வருவதற்குள் முழுதும் நனைந்து விட்டனர்.


வேகமாக கார் கதவைத் திறந்து ஏற, காரைக் கிளப்பினான் தேவா. ஈர உடையோடு வீட்டிற்குள் வந்தனர். மாற்றுடை அவனுக்கு எப்பொழுதும் காருக்குள் இருக்கும். இன்றே திரும்பி விடுவோம் என்ற எண்ணத்தில் இருந்ததால் அவள் மாற்றுடை எடுத்து வரவில்லை.


துரைபாண்டியின் பூர்விக வீடு. என்ன தான் வசதி பெருகினாலும் இவ்வீட்டை மட்டும் பழமை மாறாமல் பேணிக் காத்தனர். வீட்டின் முன் இருபுறமும் பெரிய திண்ணை. அந்தக் காலத்தில் படியேறினால் தான் திண்ணையில் அமர முடியும். சாலை போடுகிறோம் என்கிற பெயரில், வீடுகள் எல்லாம் தரை தாழ்ந்துவிட்டன. ஓடுகள் வேயப்பெற்ற, மரப்பலகைகள் கொண்டு மச்சு அடைத்த வீடு. சிவப்பு ஓடு பதிக்கப்பட்ட தரை. மதுரை வெயிலுக்கு மச்சும், அந்தத் தரையும் எப்பொழுதும் வீட்டை குளுமையாக வைத்திருக்கும்.


இவர்கள் கிளம்பியதும் எப்படியும் தேவா இவ்வீட்டிற்கு போவான் எனத் தெரிந்த சகுந்தலாதேவி, வீட்டை காவல்காரரிடம் கூறி திறந்து வைக்கச் சொல்லியிருந்தார்.


பேக்கோடு தனது தாத்தாவின் அறைக்குள் சென்றுவிட்டான், தனது பெற்றோருடன் சிறு பிள்ளையில் தங்கிய அறைக்கு செல்ல விருப்பம் இல்லாதவனாக.


வள்ளி முதன் முறையாக வருவதால் வீட்டைச் சுற்றிலும் பார்வையை ஓட்ட, வெட்ட வெளியாக நடுக்கூடம். இடப்பக்கம் மற்றும் வலப்பக்க மாக பக்கத்திற்கு இரண்டு அறைகள். வடக்கு ஓரமாக மாடிப்படி.

பின்புறமாக கொள்ளைப்புறம். வடமேற்கில் பூஜையறை. அந்த அறைக்கு வெளியே துரைபாண்டி மற்றும் சேனாபதி மின்விளக்குகளோடு நிழற்படமாய்.


கிழக்கு புற சுவரில் பல புகைப்படங்கள் சட்டம் இடப்பட்டு மாட்டப்பட்டு இருந்தன. அதில் தவழும் குழந்தை பருவம் முதல் பதின்பருவம் வரையிலான தேவாவின் புகைபடங்களே ஆக்கிரமித்து இருந்தன. பெரும்பாலும் சகுந்தலாதேவியுடன் எடுக்கப்பட்ட படங்களே. தந்தையோடும் தாத்தவோடும் சில படங்கள். நடுநாயகமாக குடும்ப படம். சேனாபதி, சகுந்தலாதேவியின் திருமண படங்கள் சில. நண்பனோடு கதிரேசன் படமும் இருந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவள்,

'வரும்போது எல்லாம்
இந்த ஃபோட்டொஸ் பாத்தா ஆன்ட்டி மனசு எப்படி மாறும்,'என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.


பின்னால் அரவம் கேட்டு திரும்பிப் பார்க்க ஸ்லீவ்லெஸ் டிசர்ட்டும் ஷார்ட்ஸுமாக அவனைப் பார்த்தவள், பாகுபலிக்கான பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு. ஆனா என்ன? எப்ப பாத்தாலும் பல்லாலதேவன் மாதிரியே நடந்துக்கறது,'என எண்ணிக்கொண்டிருக்க,


அவளின் பார்வையை பார்த்தவன்.
"என்ன… சைட் அடிச்சாச்சா?"என்றான்.


"ஆமா இவரை சைட்டு அடிச்சுட்டாலும். கடுவன்பூனை மாதிரி எப்ப பாத்தாலும் உர்ருனு ஒரு மூஞ்சி. அதுக்கெல்லாம் கோயில்ல ஒருத்தி வளிஞ்சாலே அவ தான் வரணும்."என்றாள் நக்கலாக.


"அப்ப... கோயில்ல எதுக்கு என்னை அப்படிப் பாத்தியாம்?"என்று கைகளைக் கட்டிக் கொண்டு ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்க,


'அதெப்படி நாம எங்க நின்னு பாத்தாலும் கண்டு பிடிக்கிறாரு,'என நினைத்தவளாக,


"அது வந்து…. அந்த கூட்டத்தோட நின்னுகிட்டு இருந்திங்களா. அதான் நீங்க குடிச்சுட்டு வர்ரிங்களோனு... நினைச்சு பாத்தேன்,"என்று அசடு வழிய,


அவள் சொன்னதைக் கேட்டவன் முகம், ஒரு கணம் வெறுமை ஆகியதோ? ஆழ்ந்து மூச்சை இழுத்தவன், நான் கோயிலுக்கு கூட குடிச்சுட்டு வந்திருப்பேன். ஆனா இந்த வீட்டுக்கு வரும் போது சேனாபதி பையனா வருவேன்,"என்றவனது பார்வை தந்தையின் புகைப்படத்தில் விழுந்தது.


அவனைப் பொறுத்த வரைக்கும் தந்தையுடன் வாழ்ந்த நாட்கள் தான் சொர்க்கம். இந்த வீடுதான் கோவில்.


"யாரை அசிங்க படுத்தணும்னு உங்களையே அசிங்கபடித்திக்கறிங்க? அப்படி அசிங்கப்படுத்தும் போது நீங்க சந்தோஷ படுறிங்களானு என்னைக்காவது நினைச்சு பாத்து இருக்கிங்களா?"என்றாள்.


அவனுக்கு, 'சகுந்தலாதேவி மகன் குடிகாரன். சகுந்தலா தேவி மகன் ரவுடித்தனம் பண்றான். அவன் பொறுப்பில்லாம ஊர் சுத்துறான்,'என்று ஊரார் பேச வேண்டும். அதனாலேயே தனது அன்னை மதிப்பவர்களையும், அன்னையை மதிப்பவர்களையும் இவன் மதிப்பதில்லை.


பதிலேதும் சொல்லாமல் திரும்பி அவளை பார்த்தான். அவளது பார்வை அவனை கேள்வி கேட்க, மீண்டும் புகைப்படங்களில் அவன் பார்வை பதிந்தது. தாயோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பார்த்தவன் மனக் கண்ணில், அந்தந்த நேரத்து நிகழ்வுகளும் வந்து சென்றது. இந்த வீட்டைப் பொறுத்த வரைக்கும் எல்லாம் இனிமையான நிகழ்வுகளே அவனுக்கு. தாத்தாவோடும், தந்தையோடும் கழித்த நாட்கள், தாயோடு அடம்பிடித்து, முரண்டு பண்ணிய நாட்கள் என அனைத்தும் அவன் நினைவு பெட்டகத்தில்.


அதில் ஒரு புகைப்படத்தில் பார்வை நிலைக்க, அவளும் அந்த புகைப்படத்தைப் பார்த்தாள். அதில் சகுந்தலாதேவியின் இள வயது படம், தாவணி பாவாடையில் இருந்தது. பழைய ஆல்பத்தில் இருந்ததை அவன் தான் எடுத்து, ஒரு பிறந்தநாள் பரிசாக சட்டம் போட்டுக் கொடுத்திருந்தான்.


அதைப் பார்த்தவள்,"வாவ்! ராஜமாதா சூப்பரா இருக்காங்கள்ல,"என்று கூற,


"ஆமா… நீ கூட தாவணி பாவாடையில ரொம்ப அழகாயிருந்த,"என்றான் ஃபோட்டோவில் தன் கவனத்தைத் தொலைத்து இருந்தவன்.


"என்னது!… நீங்க எப்ப பாத்திங்க. பாத்ததுமில்லாம அழகா இருக்கேனு‌ ரசிச்சுருக்கிங்க," என ஆச்சர்யமாகக் கேட்க,


அவளை ஒருமுறை ஏற இறங்க பார்த்தவன்"கருவாச்சிய ரசிச்சிருக்கேனு சந்தோஷப்பட்டுக்க."என்றான் சிரிப்பை அடக்கியவாறு குறும்பாக.


"அட பாவி! காதுல விழுகாத மாதிரி நின்னிங்க,"என்று கேட்டுக் கொண்டிருக்க,
அவனின் பார்வையோ அவள் மீது.

மழையில் நனைந்ததினால்,
ஈரச்சேலை உடலோடு ஒட்டியிருக்க, சாமுத்திரிகா லட்சணம் இம்மியும் பிசகாமல், பிரம்மனின் மேற்பார்வையில், மன்மதன் செதுக்கிய சிலையாய் அவள். காலையில் தலையில் வைத்த வாடிய மல்லி சரத்துடன் கருநாகமாய் ஜடை இட பக்கமாக தழுவி கிடக்க, உடலின் ஏற்ற இறக்கங்களோ பங்குச்சந்தை குறியீடாய். எழுச்சியும் வீழ்ச்சியுமாய்.


மேனியில் அவனது பார்வையின் மேய்ச்சலைப் பார்த்தவள்,"உங்க ஊர்ல சுவத்தை இப்படி தான் பாப்பாங்களா?"என்றாள் இதழில் கேலியும், கண்களில் குறும்புமாக.


அவன் பார்வை கேள்வியாய்ப் பார்க்க,"இல்ல… யாரோ காலையில சுவரும் நீயும் ஒன்னு தான்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. அதான் இந்த சுவத்துல என்ன இருக்குன்னு அப்படி பாக்குறிங்க,"என்றாள், குளிருக்காக கைகளை தேய்த்தவாறு.

அவன் பதிலேதும் சொல்லாமல்,"முதல்ல போய் ஈர ட்ரெஸ்ஸை மாத்து,"என்றான்.


"வேற ட்ரெஸ் எடுத்துட்டு வரல,"என்றவள்,

"நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லல. என்னைய எப்ப பாத்திங்க? ஒருவேளை... நிதானமில்லாம இருந்தா தான் மனசுல இருக்கறது எல்லாம் வெளியே வருமோ,"என்றவள் பார்வை அவனை துளைத்தது.

"என்ன உளர்ற? உன்கிட்ட எப்ப மனசுல இருக்கறதை சொன்னேன். அப்படி சொல்லுற அளவுக்கு எல்லாம் மனசுல ஒன்னும் இல்லை,"என்றான்.


"என்கிட்ட எங்க சொன்னிங்க. சம்பவத்தன்னைக்கி நீங்களா தான் உளறுனிங்க,"என்றாள்.


'அன்னைக்கு என்ன சொல்லி தொலைச்சேன்னு தெரியலையே,'என்று யோசித்தவாறே அவ்விடத்தை விட்டு அகன்றான். தாத்தாவின் அறைக்கு சென்றவன், தனது பேக்கை திறந்து அதிலிருந்த ட்ராக் பேன்ட்டும், டி.ஷர்ட்டையும் எடுத்துக்கொண்டு வந்தான். அவளிடம் அதைக் கொடுக்க,


"பரவாயில்லையே… ட்ரெஸ் எல்லாம் கொடுக்கறிங்க. நான்கூட விடியவிடிய குளிர்ல தவிக்கணுமோனு நினைச்சேன்."

"என்னையப் பாத்தா ஷேடிஸ்ட் மாதிரியா தெரியுது?"


"அடைச்சு வச்சு கொடுமைப் படுத்தறது, மத்தவங்க இம்சையைப் பாத்து சந்தோஷப் படறது இந்த மாதிரி நடந்துகிட்டா தான் ஷாடிஸ்ட்னு இல்ல. நீங்க அதுக்கும் மேல. வார்த்தையாலேயே ஒருத்தரை புண்படுத்துறது தான், பெரிய கொடுமை. காலத்துக்கும் அழியாது."


"அதே வார்த்தைகளால தான் நாங்களும் சின்ன வயசுல புண் பட்டிருக்கோம். அதே வலி எங்களுக்கும் இருக்கு."என்றான்.


"ஆனா நீங்க இறந்த காலத்து நிகழ்வுகளுக்காக, நிகழ் காலத்துலயும் மத்தவங்களை வார்த்தையால குத்தி கிழிக்கிறிங்க. மேலும் மேலும் அதையே பேசி உங்க மனப் புண்ணையும் ஆற விடாம பண்றது நீங்க தான்."என்றாள்.


"வேதாந்தம் பேசுறது ரொம்ப ஈஸி. நானும் மணிக்கணக்காக பேசுவேன். மனபாரம் அனுபவிக்கறவங்களுக்கு தான் தெரியும்."என்றான் வெறுமையாக.


"அதுக்காக ஆமை ஓடாட்டம் எப்பவும் தூக்கிட்டே திரிஞ்சா வாழ்க்கையே வெறுத்துறும். நீங்க அம்மாவை வெறுக்கிற பையன் இல்ல. திருவிழாவுல காணாமல் போன இடத்துலேயே நின்னுகிட்டு அம்மா வேணும்னு அழற பையன்,"என்றவள் உடை மாற்ற சென்றாள்.


சென்றவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அளவுக்கு அதிகமான ஏக்கமே வெறுப்பாக தாயின்மீது மாறியிருக்கிறது. கூட்டத்தில் தவறிய குழந்தை திரும்ப கிடைக்க பெற்றால், கிடைத்தவுடன் கொஞ்சி விட்டு, அடுத்த நொடி,'சனியனே எங்க போய் தொலஞ்சேனு,'இரண்டு மொத்து விழுகும் முதுகில். அது வெறுப்பால் அல்ல. என்னை இப்படி தவிக்க விட்டாயே என்ற தாயின் தவிப்பு. தேவாவும் அப்படி பட்ட தாயின் தவிப்பில் தான் இருக்கிறான் என்பதைத்தான் கூறிவிட்டு சென்றாள்.


இன்று கோவிலில் நடந்த சம்பவங்களும் அவனை யோசிக்க வைத்தது. தனது தாத்தாவே, மறுமணம் என்ற முடிவை எடுத்திருக்கிறார் என்றால், எப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த முடிவை எடுத்திருப்பார் என யோசித்துக் கொண்டிருந்தான்.


மற்றவர்கள் தன்னை செய்த கேலி கிண்டலை வைத்து மட்டுமே யோசித்தவன், தாயின் நிலை என்னவென்று யோசிக்க மறந்திருந்தான்.


அவன் கொடுத்த உடையை வாங்கிக் கொண்டவள், அருகிலிருந்த மற்றொரு அறைக்கு சென்றாள்.


அந்த நாள் சம்பவம் இன்றும் அவள் நினைவில் தோன்றியது. இன்றும் அச்சம்பவத்தின் வீரியத்தால் உடல் இறுக, மனம் மீண்டும் அதை நினைக்க அஞ்சியது.

ஏதோவொரு ஆத்திரத்தில் அவளை ஆட்கொண்டவன், இறுதியில் தன்னை மறந்த நிலையில், போதையில் பிதற்ற ஆரம்பித்திருந்தான்.


"சாரிப்பா… உங்க பையனா… இப்படி எல்லாம் பண்ணியதை நினைச்சா அசிங்கமா இருக்கு... என்னையும் அம்மாவையும் விட்டு ஏம்ப்பா... போனிங்க... அதனால‌ தானே எல்லோரும் அம்மாவை அசிங்கமா பேசுறாங்க. உங்களால் தான் அம்மாவும் என்னைய விட்டு விலகி போய்ட்டாங்க,"என்று புவம்பியவன் இறுதியாக,"அம்மை… சாரிடி...,"என்று முடித்திருந்தான்.


அரை மயக்கத்தில் இருந்தவள் காதுகளில் அவன் உளறல் யாரோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் இருக்க,


இன்றும் பள்ளி விட்டு வந்ததும் அம்மாவை தேடும் சிறு பிள்ளையாக, அவன் தாயின் புகை படங்களை பார்க்கும் பொழுது எல்லாம் அவன் கண்களில் தெரிந்த ஏக்கம் அவளை என்னவோ செய்தது.


அன்றைய‌ நாளின் எண்ணங்களோடு, அவன் கொடுத்த உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.


ஷோபாவில் அமர்ந்தவாறு கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பார்க்க, தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தான்.

டீ.ஷர்ட்டே முழங்கால் வரை நீண்டு இருக்க, பேன்ட்டை கணுக்காலில் பல மடிப்புகள் மடித்திருந்தாள்.


தன்னை மறந்து சிரித்தவனை இரண்டாம் முறையாக ஆச்சர்யமாகப்‌ பார்த்தாள். தன்னை மறந்து மனம்விட்டு சிரிப்பவர்களுக்கு மட்டுமே கண்களும் சேர்ந்து சிரிக்கும். கடமைக்கு சிரிப்பவர்கள் சிரிப்பு இதழை தாண்டாது. இந்த வீடு பதின்வயது தேவாவை மீட்டிருந்தது. மனதிற்கு பிடித்த இடங்களின் மேஜிக் அது.


பேருந்து பயணங்களில் எப்பொழுதாவது பிரிந்து வந்த ஊர்களைக் கடக்கும் சில கணங்களில் கூட இந்த மாயாஜாலம் நிகழும். அந்த ஊர்களில் வாழ்ந்த காலத்திற்கே ஒருசில கணங்கள் சென்று வருவோம்.


"சோளக் காட்டுல நிக்கவச்சா ஒரு காக்கா வராது,"என்றவனை, முறைத்துப் பார்த்தவள், ஏதோ சொல்ல வாயெடுக்க,

காவல்காரரின் மனைவி அவளை வாசலில் நின்று அழைத்தார்.


"வள்ளி! இந்தாம்மா மருதாணி!"


அவர்கள் வீட்டிற்குள் நுழையும் பொழுது, அப்பெண்மணி அம்மியில் மருதாணி அரைப்பதைப் பார்த்தவள்,"மருதாணியாம்மா!"என ஆர்வமாகக் கேட்க,


"ஆமா வள்ளி! நம்ம வீட்டு மருதாணி தான். பேத்தி கேட்டா. உனக்கும் அரைச்சு எடுத்துட்டு வர்றேன். புது பொண்ணு கை வேற. வச்சா நல்லா சிவக்கும்,"என்று கூறியிருந்தார்.


புதுமண ஜோடி என்பதால், இங்கிதமாக வாசலிலேயே நின்று குரல் கொடுத்தார்.

அக்குரலைக் கேட்டவள், அவனை பாவமாக பார்க்க, புருவம் உயர்த்தி என்ன என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.


இந்த உடையில் வெளியே செல்ல யோசித்தே அவள், அவனைப் பார்த்தது.


"என்னமோ சொல்ல வந்த? நான் எப்படி இருந்தா உனக்கு என்னானு தானே கேக்க வந்தே. அதே மாதிரி நினச்சுகிட்டு போய் வாங்கிட்டு வா!"


"நான் போயிருவேன். எனக்கொன்னும் பிரச்சினை இல்ல. போட்டிருக்கிறது உங்க ட்ரெஸ். அவங்களுக்கு தேவையில்லாம கற்பனை ஓடும். பரவாயில்லையா? உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைனா நான் போறேன்,"என்றவள் செல்ல முயல,


"இரு...இரு… நானே போறேன்," என்றவன், வெளியே சென்று வாங்கி வந்தான்.


"என்ன? இப்பவும் ஒரு மாதிரியா பாத்து சிரிச்சுட்டு போறாங்க?"என்றவனிடம்,


"அவங்க ஏதும் கேட்டாங்களா?"என்றவளிடம்,


"ஆமா! வச்சிவிடணுமான்னு கேட்டு சொல்லுப்பான்னாங்க! வேண்டா… அவளே வச்சுக்குவானு சொன்னேன். இதுல என்ன இருக்கு!"


"புதுசா கல்யாணமான ஜோடினா அப்படி தான். எத சொன்னாலும் வேறுமாதிரி கனெக்ட் பண்ணுவாங்க."


"உனக்கு எப்படி தெரியும்?என்றான்.


"சொன்னவுடனே போயிருக்கணும்! விவாதம் பண்ணிட்டு, தாமதமா போனா, இப்படிதான். அவங்க கற்பனை குதிரையை தட்டி விட்டுருப்பாங்க,"என்றாள்.


"எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க!"


"நாலு சொந்த பந்தம் வீட்டுக்கு கல்யாணம் காட்சினு போயிருந்தா தெரிஞ்சிருக்கும். எதுலயும் ஒட்டாம இருந்தா என்ன தெரியும்? என்று பேசிக் கொண்டே ஷோபாவில் அமர்ந்தவள் மருதாணியை விரல்களில் வைக்க ஆரம்பித்தாள்.**************

மேலூரில் இருந்து கிளம்பியவர்களின் கார் மதுரையின் மிகப் பெரிய ஷாப்பிங் மாலின் பக்கமாக திரும்பியது.


மாலின் பார்க்கிங் ஏரியாவிற்கு காரைத் திருப்பினான் தேவா.


"இங்க எதுக்கு வந்திருக்கோம்?"


"ம்ம்ம்… பத்து ரூபாய்க்கு நாலு கிலோ தக்காளி தர்றாங்களாம். வாங்கிட்டு போலாம்."


"ஏன் வெங்காயம் எல்லாம் தர மாட்டாங்களா?"என்று சட்டமாக கேட்டவளை,


"எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டியிருக்கு. முதல்ல கீழ இறங்கு. மங்கம்மா மாதிரி சட்டமா உக்காந்துகிட்டு கேள்வி கேக்குறே."


"அதுக்கு முதல்ல லாக்க ரிலீஸ் பண்ணனும். அதை விட்டுட்டு இறங்குனா எப்படி இறங்கறது. தக்காளிக்கு பதிலாக மூளை கிடைக்குமானு பாருங்க. யூஸ் ஆகும்."என்று கூற,


"எல்லாம் என் நேரம்,"என்றவன் லாக்கை திறந்து விட்டான்.


இருவரும் காரைவிட்டு இறங்க, கார் கதவை லாக் செய்து விட்டு திரும்பியவன் பார்வை, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தவள் மீது படிந்தது.

இறங்கியவன்‌ நகராமல் இருக்க, அவன்‌ பார்வை‌ சென்ற திசையை பார்த்தாள்.


"ம்க்க்கும்…"தொண்டையைச் செறும,

திரும்பி பார்த்தவனிடம்,


"அழகா இருக்காங்க தான். அதுக்காக இப்படியா பாப்பிங்க?"


"நல்ல பாம்புகூட தான் அழகா இருக்கும். அதுக்காக அதை ரசிக்க முடியுமா?"என்றான் குரலில் வெறுப்பு மேலிட.


சேலையை இப்படியும் கட்டலாம் என்றவாறு, எப்பொழுது அவிழுமோ என எண்ணும் படியாக, தனக்கு முன்னால் சென்று கொண்டு இருந்த கீர்த்தனாவை மீண்டும் திரும்பி பார்த்தாள் வள்ளி. அவளைப் பார்த்தாலே தெரிந்தது. ஃபிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுப்பவள் என்று.


"உங்களுக்கு தெரிஞ்சவங்களா?"என்றாள்.


"நீ அன்னைக்கி கேட்டியே? தென்னை மரத்தை கொட்டின தேளு இதுதான். அதனால் தான் இப்ப டிரைவர் மகளுக்கு டிரைவர் வேலை பாத்துகிட்டு இருக்கேன்."


"இல்லைனா, ஏதாவது ஒரு கோடீஸ்வரன்‌ மகளுக்கு கூஜா தூக்க போயிருப்பிங்க. அது இப்ப மிஸ்ஸாகி போச்சு."என்றவாறு‌ முன்னே நடக்க ஆரம்பித்தாள்.


இங்கெல்லாம் வந்து பழக்கம் இல்லாததால் கொஞ்சம் அவன் கூடவே சேர்ந்து நடந்து கொண்டிருந்தாள்.


"உனக்கும் ஏதாவது வேணும்னா வாங்கிக்க! நெல்லுக்கு பாயுறது புல்லுக்கும் பாயட்டும்!"என்றான்.


"நமக்கெல்லாம் இங்க ஷாப்பிங் செட்டாகாது. மீனாட்சி அம்மன் கோயில சுத்தி இருக்கிற கடைவீதிக்கி போணோமா, அடிச்சுப் புடிச்சு பேரம் பேசி வாங்கிணோமானு இருக்கணும். இங்க அஞ்சு ரூபா பொருளுக்கு ஏ.சிக்கும் சேத்து பில் போட்டு மூனு மடங்கா வச்சுருப்பான்."என்றவளிடம்,


"ஆகமொத்தம் எங்க போனாலும் உனக்கு வாய்க்கு வேலை கொடுக்கணும்."

பேசிக்கொண்டே அவன் ஆண்கள் துணியகத்திற்குள் நுழைந்து விட்டான்.


'அங்க போய் நாம என்ன பண்ண போறோம்'என நினைத்தவளாக,

அருகிலிருந்த அங்காடிகளில் பார்வையை ஓட்டிக் கொண்டே திரும்ப, அவள் முன்னே கீர்த்தனா வந்து நின்றாள். மாலிற்குள் நுழைந்தவள், ஏதேச்சையாக திரும்பிப் பார்க்க, தேவாவை நெருங்கியவாறே நடந்து வந்து கொண்டிருந்த வள்ளியைப் பார்த்தாள். தேவா கடைக்குள் செல்ல, தனியாக நின்ற வள்ளியைப் பார்த்தவள் அவளிடம் வந்தாள். அவளை ஏற இறங்க ஏளனப் பார்வை பார்க்க, முன்தினம் மழையில் நனைந்த சேலையை உலர வைத்து உடுத்தி இருந்ததால் கொஞ்சம் கசங்கலாக இருந்தது.


"என்கிட்ட இல்லாதது அப்படி என்ன உன்கிட்ட இருக்குனு, உன்னையக் கல்யாணம் பண்ணியிருக்கான்,"எனக் கேட்டாள். அவள் வார்த்தைகளில் அத்தனை ஏளனம்.


தனக்கு எட்டாக் கனியானவன், எப்படி இவளைக் கல்யாணம் பண்ணினான் என்ற ஆதங்கம் வேறு..


"முதல்ல மரியாதையா பேசிப் பழகுங்க. அப்புறமா என்ன இருக்கு இல்லைனு பாக்கலாம். ஆமா… உங்ககிட்ட என்ன இல்லைனு உங்களுக்கே தெரியலியே. எனக்கு எப்படி தெரியும்?" உனக்கு நான் சளைத்தவள் இல்லை எனும் விதமாக கேட்க,


"ஏய்! என்ன எகத்தாளமா?"


"ஏங்க! நான் பாட்டுக்கு சிவனேனு நின்னுகிட்டு இருந்தேன். நீங்களா வந்திங்க. என்கிட்ட என்ன இல்லைனு கேட்டிங்க. இதுல எகத்தாளம் யாருக்குனு சொல்லுங்க!"என்றவள்,

யோசிப்பது போல் கன்னம் தொட்டு பாவனை செய்து, சட்டென்று விரலில் சொடக்கிட்டு,

"ம்ம்… கண்டு பிடிச்சுட்டேன். உங்களுக்கு உடம்புக்கு வெளியே இருக்க சரக்கு மண்டைக்கு உள்ளே இல்ல. கரெக்டா?"என்றாள்.


"ஏய்! யாரைப் பாத்து மூளை இல்லைனு சொல்ற!"என்று பற்களைக் கடித்துக் கொண்டு கீர்த்தனா எகிற,


"ஐயய்ய… அதுக்கு ஏங்க சரத்குமார் பட டைட்டில சும்மா சும்மா ஏய்... ஏய்னு ஏலம் விடுறிங்க? பரவாயில்லைங்க. உங்களுக்கும் கொஞ்சம் இருக்கு. அதாங்க மூளை. மூளையில்லைனு மறைமுகமா சொன்னத கப்புனு புடிச்சுட்டிங்களே!"


"ஏய்! உன்னை…"என்று மேலும் அவள் வெறுப்பாக,


கடைக்குள் இருந்தவாறே கண்ணாடி வழியாக தேவா பார்வையை ஓட்ட,

கீர்த்தனாவின் கோப முகத்தையும், வள்ளியின் நக்கலான பார்வையையும் பார்த்தவன் வேகமாக கடையை விட்டு வெளியே வந்தான்.


தேவா இவர்களை நோக்கி வருவதைப் பார்த்த கீர்த்தனா அங்கிருந்து அகன்றாள்.


"என்ன பேசினா உன்கிட்ட?"என அவன் கோபமாகக் கேட்க,


"அவங்க கிட்ட என்ன இல்லைங்கறதை கேட்டு தெரிஞ்சுகிட்டு போறாங்க,''என்றாள்.


"அவளுக்கெல்லாம் மரியாதை ஒரு கேடு,"என்றான்.


"ரொம்ப லவ் பண்ணி இருப்பாங்களோ? அவ்வளவு கோபம் கண்ணுல,"என்றாள்.


"ஆமா! ரொம்ப… ரொம்ப… என்னோட வசதியையும், அந்தஸ்தையும்,"எனக்கூற,


"இந்த மாதிரி பொம்பளைங்கள வச்சு தான் எல்லா பொண்ணுகளையும் ஜட்ஜ் பண்றிங்களா? பணத்தைப் பார்த்தவுடனே பல்லைக் காட்டுவாங்கனு. இருந்தாலும் சும்மா சொல்லக் கூடாது. நச்சுன்னு இருக்காங்க."


கீர்த்தனாவின் எண்ணமும் அதுதான். தன் ஆடம்பர வாழ்க்கையின் ஆசைக்கு மூலதனமாக அவள்‌ பயன்படுத்த நினைத்ததும் தன் அழகை தான். தன் அழகால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்ற கர்வம் அவளுக்கு. அவளது எண்ணம் பழிக்காமல் போனது தேவா விடம் மட்டும் தான்.
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
2,877
Reaction score
2,830
Location
Salem
தேவா அவங்க அம்மா தன்ன தனியா வள்ளி அப்பா மாதிரி வளர்த்தி இருக்கனும் னு நினச்சது ஒன்னும் அவ்வளோ பெரிய தப்பு இல்ல....😔

பட் அவங்க அம்மா அ புரிஞ்சிக்காம தப்பா பேசறது‌.... ரொம்ப தப்பு....😔

அவருக்கு அவங்க புரியவைக்காம விட்டதும் பெரிய தப்பு....😕

வள்ளி நல்லா பேசறாங்க....😊

நைஸ் எபிசோட் டியர்....🥰
 
Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
391
Reaction score
660
Location
COIMBATORE
அசிங்கப்படுத்தினாலும்
ஆத்திரப்படுத்தினாலும்
அன்னை அவளே
அவர்களை புரிந்து கொள்ளும் காலம் அருகில் உள்ளது......

வாய்க்கு வாய் பேசும்
வள்ளியின்
வாய்ஜலம்
வாய்ப்பே இல்லை
வாரே வா....
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top