ஆன்ட்டி ஹீரோ/ ஹீரோயின் திருவிழா (Nov 2021- Feb 2022)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Joined
Jan 16, 2018
Messages
1,046
Reaction score
21,253
Points
113
Location
India
ஹாய் மக்களே

நம்முடைய ஆன்ட்டி ஹீரோ/ ஹீரோயின் திருவிழாவில் கலந்து கொள்வது எப்படி, என்னென்ன விதிமுறைகள், செயல்முறைகள் என்ன எண்பது பற்றியெல்லாம் நிறைய கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை குறித்துப் பேச வந்திருக்கிறேன்.

 • எழுத்தாளரின் பெயர் வெளியிடப்பட மாட்டாது. முடிவு வந்த பின்பு தெரிவிக்கப்படும். எந்த காரணத்தைக் கொண்டும் எழுத்தாளர்கள் தங்களது புதினங்களின் பெயர்களை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள். அனைத்து எழுத்தாளர்களுக்கும் சமமான வாய்ப்பு கொடுப்பட வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள். எழுத்தாளர்கள் தயவு செய்து இதை கடைபிடிக்கவும்.
 • ஒரு நாவல் முப்பது முதல் நாற்பத்திஐந்தாயிரம் வார்த்தைகளுக்குள் இருக்கலாம். (30 K to 45 K). அதற்கு கீழும் அதற்கு மேலும் எழுதுவதை தவிர்க்கவும்.
 • எழுத்தாளரின் பெயர் வெளியிடப்படாது என்பதால் எழுத்தாளர்கள் அவரவர்களின் அத்தியாயங்களை பேஸ்புக்கில் பகிர்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். நம்மில் சிலரைக் கொண்டு அத்தியாயங்கள் பகிரப்படும்.
 • போட்டியில் பெயர்களைப் பதிவு செய்ய கடைசி தேதி நவம்பர் 15.
 • நவம்பர் ஒன்று முதல் பிப்ரவரி பதினான்கு வரை போட்டி நடக்கும். எந்த காரணம் கொண்டும் இந்த தேதி நீட்டிக்கப்பட மாட்டாது.
 • இனி நடக்கும் ஒவ்வொரு போட்டியும் தீம் சார்ந்த போட்டி என்பதால் இந்த சீசன் போட்டியான ஆன்ட்டி ஹீரோ/ ஹீரோயின் என்ற தீம் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.
 • இந்த போட்டிகளுக்கு நடுவர்கள் கிடையாது. வாசகர்களே நீதிபதிகள். கதைகள் முடிக்கப்பட்ட பின் வாசகர்களின் ஓட்டுக்கள் பதிவு செய்யப்படும். அதிக ஓட்டுகள் பெரும் கதை வெற்றி பெற்ற கதையாகத் தேர்வு செய்யப்படும்.
 • யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். ஒருவரே பல கதைகளும் எழுதலாம். ஆனால் காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்.
 • பிழைகள் இல்லாமல் எழுதவும். பிழைகள் அதிகமாக இருக்கும் கதைகளை பதிப்பிப்பதில் இருக்கும் சிரமத்தை உணர்ந்து கொள்ளவும்.
வாசகர்களுக்கு:

எழுத்தாளர்களுக்கு மட்டும் தான் பரிசா? எங்களுக்கு இல்லையா என்று கேட்பவர்களுக்கு:

கண்டிப்பாக உண்டு!

 • எத்தனை கதைகள் வருகிறதோ, அத்தனை கதைகளையும் படித்து ரிவ்யு எழுதி, சைட் மற்றும் பேஸ்புக்கில் பகிரும் அத்தனை பேருக்கும் ஆச்சரியகரமான பல பரிசுகள் உண்டு! (அனைத்து கதைகளையும் படிக்க வேண்டும். ரிவ்யு எழுத வேண்டும். அதை தளத்திலும் பேஸ்புக்கிலும் பகிர வேண்டும்)
 • தளத்தில் வரும் அத்தியாயங்களை படித்து முதலில் கமென்ட் தரும் வாசகர்களுக்கும் பரிசு உண்டு.
 • தினமும் சிறந்த கமென்ட் தரும் ஒரு வாசகர் தேர்ந்தெடுக்கப்படுவார். நூறு நாட்களுக்கு நூறு முறை தேர்ந்தெடுக்கப்படுபவரிலிருந்து அதிகம் முறை தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பெரிய பரிசு வழங்கப்படும்.
 • கதையின் கருவை பிரதிபலிக்கும் சிறந்த கவிதைக்கு பரிசு உண்டு.
 • கதையின் கருவையும் கதாபாத்திரங்களையும் சிறந்த முறையில் பிரதிபலிக்கும் படங்களை வரைபவர்களுக்கும் பரிசு உண்டு.
Happy Reading!

#SMTamilNovels_ShowUsYourTalents

#SMTamilNovels_Antihero_Thiruvizha

#SMTamilNovels_Antiheroine_Thiruvizha

#SMTamilNovels_Nov2021

#SMTamilNovels_Genre_wise_Competitions

#SM_AntiHeroHeroine

#SM_contest_story

#MSPublications_WinExcitingPrizes

#HappyReading

#TamilNovels
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,316
Reaction score
13,172
Points
113
Location
India
அட அட அட பரிசுகளை வாரி வழங்கியிருகீங்களே💓😍😍😍😍😍😍

ஐ எம் வெய்டிங்😍😍😍😍💓💓💓
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,400
Reaction score
45,154
Points
113
Location
madurai
ரீடராய் கமெண்ட் பண்ணி பரிசுகளை அள்ள நான் ரெடி... இன்றிலிருந்து நான் ரீடர் மோடுக்கு போறேன் ;) :love:
 
Advertisements

Latest Episodes

Advertisements