• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இமை மீதூறும் துளிகளில் - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

துமி

மண்டலாதிபதி
Author
Joined
Mar 15, 2022
Messages
412
Reaction score
1,661
Location
Karur
அத்தியாயம் 4

காலையில் அடித்து பிடித்து சமைத்துக் கொண்டிருந்தாள் சுபி.

"சுபி இன்னைக்கு நீ உன் பழைய காலேஜ் போறியா??" டையை கட்டிக் கொண்டே கேட்டான் அபி.

"ஆமா அபி…" எதையோ வதக்கி கொண்டே சொன்னாள் அவள்.

"அங்க போய் சின்ன‌புள்ள தனமா சண்டை போட்டுறாத… அப்பறம் போன் பண்ணி என்னை வர சொல்லப் போறாங்க..." என அவளை கிண்டலடித்தான் அபி.

சுபி தன் கல்லூரி வாழ்க்கையை பற்றி அவனுடன் பகிர்ந்ததில் இருந்தே, அதை வைத்தே அவளை ஓட்டி கொண்டிருந்தான் அபி. இன்றும் அப்படியாக அவளை வம்பிழுக்க, அவள் கையில் வைத்திருந்த கரண்டி தான் பறந்து வந்தது. நல்ல வேளையாக அவன் கேட்ச் பிடித்து விட்டான்.

"நைஸ் கேட்ச்…!" என அவனை அவனே பாராட்டி கொள்ள,

"ரொம்பத்தான்..." என்றாள் சுபி.

"என்ன கேட்ச்க்கு என்ன குறைச்சல்? காலேஜ் படிக்கும் போது நான் பேட் புடிச்சி நிக்கற ஸ்டைலுக்கு மயங்காத பொண்ணுங்களே இல்ல தெரியுமா??" என அவன் தன்னை தானே பெருமையாய் சொல்ல,

"நீயெல்லாம் பொழுது போக்குக்கு கிரிக்கெட் ஆடுனவன். ஆனா என்‌ ப்ரெண்ட் புரொபஷனலா ஆடுறவன். தெரியும்ல…?" என பஞ்ச் டயலாக் பேசினாள் சுபி.

"ஏன் சுபி நிஜமாவே திலீப் உன் கூட படிச்சவரா??" சந்தேகமாய் கேட்டான் அபி.

"அதுல உனக்கு என்ன சந்தேகம்??" வதக்கியதை மிக்ஸியில் போட்டு கொண்டே கேட்டாள்.

"இல்ல உங்க ப்ரெண்ட் பங்சன், ரீயூனியன் எதிலையுமே நான் அவரை பார்த்ததே இல்லையே... அதான் கேட்டேன்." என்றான் அபி.

"நீ மட்டுமா பாக்கல… நாங்களுமே தான் அவனை பாக்கல… எத்தனை வருசம் ஆச்சு தெரியுமா அவனை பாத்து.. ஒரு காலத்தில எப்படி இருந்தோம் தெரியுமா??" என ஏக்கப் பெருமூச்சு விட்டாள் சுபி.

"நீ விடற மூச்சை பார்த்தா புயலே அடிக்கும் போலையே..." என அவளை கிண்டல் செய்தவன், அதன்பின் சமத்தாய் கிளம்பி அலுவலகம் சென்றான்.

சுபியும் கிளம்பி பூர்ணாவை கிரச்சில் விட்டுவிட்டு, கல்லூரிக்கு சென்றாள். கல்லூரியில் தனது பழைய சான்றுகளை குறித்து தெரிவித்து விட்டு, புதிய சான்றுகளை பெறுவது எப்படி என்று கேட்டு தெரிந்துக் கொண்டாள் சுபி. அப்படியே அங்கிருந்து ஓரிரு பழைய ப்ரொபசர்களிடமும் பேசிவிட்டு வந்தாள்.

பழைய கல்லூரி ஆகிற்றே; நினைவுகளை வருடிக் கொண்டே காரிடாரில் நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.

கல்லூரிகள் எப்பொழுதும் பழையது ஆவதேயில்லை. நினைவுகள் தான் பழையதாகின்றன. கல்லூரி நினைவுகள் என்பது, திராட்சை ரசம் போன்றது. வருடங்கள் செல்ல செல்ல, அதன் இனிமை தன்மை குன்றாது; அதே சமயம் சுகமான ஒரு வலியை நெஞ்சில் தந்து கொண்டே இருக்கும். பாரமேறிய உணர்வில் கண்கள் தானே நீர் கோர்க்கும். வித்தியாசமாய் அது இனிப்பாய் இருக்கும்.

காரிடாரில் நடந்து வந்து கொண்டிருக்கையில், அந்த மரம் அவள் கண்ணில் பட்டது. அது அவளின் எனிமி டீமின் மரம். அந்த மரத்தில் அவர்கள் டிப்பார்ட்மென்டின், எனிமி டிப்பார்ட்மென்ட் என்னேரமும் குடி கொண்டிருக்கும். நினைத்த மாத்திரத்தில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

அங்கேயே நின்று அந்த மரம் தெரியும் படி ஒரு செல்ஃபியை எடுத்துக் கொண்டாள். உடனே அதனை சோசியல் மீடியாவிலும், "செல்ஃபி வித் எனிமி டீம் ட்ரீ" என்ற கேப்சனுடன் பதிவேற்றம் செய்தாள்.

ஆன்லைனில் அத்தனை பேரும் வெட்டியாய் இருந்திருப்பார்கள் போலும், அவளது பதிவிற்கு வரிசையாய் கமெண்ட் இட தொடங்கியிருந்தனர்.

நைஸ், சூப்பர், வெரி குட் போன்ற கமெண்ட்களுக்கு எல்லாம் லைக் விட்டுக் கொண்டே வந்தவள், ஒரு கமெண்ட்டை பார்த்ததும் அப்படியே நின்று விட்டாள்.

கல்லூரியில் காலை வைத்ததுமே முதன் முதலாய் கல்லூரி வந்த நினைவு அழையா விருந்தாளியாய் அவளுள் வந்தது. அதை எல்லாம் இன்றோடு புதைத்து விட்டு வர வேண்டும் என்ற முடிவோடு உள்ளே சென்றாள். அவளோடு படித்த ஒருவன் அங்கேயே ப்ரொபசராக வேலை பார்ப்பதால் அவனுக்கு பத்திரிக்கை வைக்கும் சாக்கிட்டு, வேண்டதா நினைவெயெல்லாம் அங்கேயே தள்ளிவிட்டு வர நினைத்தாள்.

அவள் யாரை காண இங்கு வந்தாளோ அவன் இன்று விடுப்பில் இருப்பதாய் தகவல் சொல்ல, அவர்களிடம் அலைபேசி இலக்கத்தை பெற்று அவனுக்கு அழைத்து தான் வந்த விசயத்தை அவனிடம் சொன்னாள் நித்யா; அவளை அங்கேயே காத்திருக்குமாறும், அங்கே தான் வருவதாகவும் சொன்னான் அவளது நண்பன். அவனுக்காக காத்திருந்தாள் அவள்.

காத்திருக்கும் நேரத்தில் மூளைக்குள் மசமசப்பாய் அந்த நாட்களின் நினைவுகள். ஒரே ஒரு முறை, கடைசியாய் என மனம் ஆசையாய் அசை போட்டது. பேன்டமிக் காரணமாக மாணவர்கள் விடுமுறை விட்டு இருப்பதாலும், மேலும் அங்கே யாரும் இல்லாததாலும் தைரியமாய் அவர்கள் துறையின் ஃபேவரிட் இடத்திற்கு சென்று அமர்ந்தாள். மனம் சுகமா வலியா என பிரித்தரிய முடியாது தள்ளித்து தவித்துக் கொண்டிருந்தது.

"உங்க எனிமி இன்னும் அந்த மரத்தில தான் இருக்காங்க போல.." என கிண்டலாக ஒரு கமெண்ட் வர, அதை பார்த்து நின்று விட்டாள் சுபி.

புகைப்படத்தை உற்று பார்த்தாள். இது நிச்சயம் அவள் தான்! அங்கேயா இருக்கிறாள்? எப்படி? எதற்கு?

"பாரு டா இரண்டு எனிமிசும் ஒன்னா செல்ஃபி எடுத்துருக்கீங்க..." என வேறு துறை தோழி ஒருத்தி நக்கலாக கேட்டிருந்தாள்.

அன்று அபி கேட்ட கேள்வி இன்றும் அவளின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. தேவையே இல்லாது கோபத்தை சுமந்து கொண்டிருக்கின்றோமோ என தோன்றியது அவளுக்கு. அப்படி ஒன்றும் அவள் தவறு செய்து விடவில்லையே என இன்னொரு மனம் சொன்னது. ஏனோ அவளிடம் கால்கள் அது பாட்டில் சென்றன.

தாழ்வாக இருந்த கிளையின் மீது, பழக்க தோசமாக ஏறி அமர்ந்தாள் நித்யா. அப்படியே அதில் சாய்ந்து பழைய நினைவுகளை மீட்டி கொண்டிருந்தாள்.

"இங்க என்ன பண்ணற??" என கீழே நின்றுக் கொண்டு கேட்டாள் சுபி.

பதில் சொல்லுவாளோ, மாட்டாளோ அல்லது அசிங்கப்படுத்தி விடுவாளோ? அன்று வேறு விபத்து ஏற்படுத்தி விட்டு மன்னிப்பு கூட கேட்காது வந்தாயிற்று; என்ன சொல்லுவாளோ; வார்த்தைகள் வெளி வந்த பின்னாலே எண்ணங்கள் சுற்றி வந்தன. மனிதனின் மிக இயல்பான பண்பதுவல்லவா!

"தவம் இருக்கேன்..." புன்னகையோடு பதில் தந்தாள் நித்யா.

"உங்க ஊர்லலாம் அங்க தான் தவம் இருப்பாங்களா??" விடாது கத்தி கேட்டாள் சுபி.

"தவம் இருக்கணும்னா எங்க வேணாலும் இருக்கலாம்." என நித்யாவும் கத்தி சொன்னாள்.

இருவருக்குமே புன்னகை அரும்பியது.

"ஆமா நீ இங்க என்ன பண்ணற??" மரத்தை நெருங்கி வந்து சாதாரணமாய் கேட்டாள் சுபி.

"கல்யாண பத்திரிக்கை வைக்க வந்தேன்." என பத்திரிக்கையை எடுத்து காட்டினாள் நித்யா.

"கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்படி மரத்து மேல உக்காந்திருக்கியே! கீழே விழுந்துட்டா என்ன பண்ணுவ?" என கேட்டாள் சுபி.

"அதெல்லாம் பல வருச பழக்கம். அப்படிலாம் விழ மாட்டேன்." நம்பிக்கையுடன் சொன்னாள் நித்யா.

"அது சரி நீங்களாம் மே… தாவிங்களாச்சே (குரங்குகள்)...!" என நக்கலாக சொன்னாள் சுபி.

"ஆஹான்… ஆமா நீ எதுக்காக வந்த??" என நித்யா திருப்பி கேட்டாள்.

"சர்ட்டிபிகேட் புதுசா அப்ளை பண்ணனும் அதுக்காக வந்திருக்கேன்." என்றாள் சுபி.

"பண்ணிட்டியா??"

"எங்க?"

"ஏன்?"

"அலைய விடுறாங்க..." என கையில் இருந்த பைலை காட்டி சோர்வாக சொன்னாள் சுபி.

"ஓஓஓ..." என்றாள் நித்யா.

"சரி நான் கிளம்பறேன்." என சுபி சொல்ல, பெரிதாய் புன்னகைத்தாள் நித்யா.

சுபி அங்கிருந்து திரும்பி செல்ல, 'கல்யாணத்துக்கு வான்னு சொன்னா குறைஞ்சா போய்ருவா..' என நித்யாவை பழித்தாள். அதே சமயம் நித்யாவும், 'அன்னைக்கு நடந்ததுக்கு ஒரு சாரி கேக்குறாளா பாரு...' என நினைத்தாள்.

சிறிது தூரம் சென்ற சுபி திரும்பி நித்யாவிடமே வந்தாள்.

"நீ கல்யாணத்துக்கு பத்திரிக்கை தானே வைக்க வந்தேன்னு சொன்ன??" என கேட்டாள் சுபி.

"ஆமா..." எதார்த்தமாய் சொன்னாள் நித்யா.

"யாருக்கு??"

"என் ப்ரெண்டுக்கு..."

"உன்‌ ப்ரெண்ட் இங்க வொர்க் பண்ணறாங்களா??"

"ஆமா..."

"அப்ப எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா??" என கேட்டாள் சுபி.

முன்பு எதிரியாய் தோன்றியவள்; சூழ்நிலை இப்பொழுது அதை மாற்றிக் கொண்டிருக்கிறது.

முகத்தின் கவசங்களை அகங்கள்
துகிலுரிக்கும் பொழுது அகங்காரங்கள்

அரிதாரங் கலைத்து ஓடிவிடுகின்றன.
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top