- Joined
- Apr 20, 2018
- Messages
- 110
- Reaction score
- 173
இளமனசை தூண்டி விட்டு போறவரே. வநிஷாவின் நாவல்களில் நான் முதன்முதலாக படித்தது. என்ன விதமாக இவர் கதை சொல்கிறார் என்று நான் வியந்து போய் படித்த கதை. ஆண்டான் அடிமை வேற்றுமைகள் வேரோடி இருந்த நேரத்தில் ஆண்டான் அடிமையை காதலிக்கும் கதை. அதுவும் எப்படியென்றால் அவளுக்காக அனைத்து அடையாளத்தையும் துறக்குமளவு. பிரிட்டிஷ் வரலாற்றிலும் அப்படி அரசர்கள் இருந்திருக்கிறார்கள். எட்டாம் எட்வர்ட் தனது காதலி வாலிஸ் சிம்ப்சனுக்காக அரியணையை விட்டுக் கொடுத்திருக்கிறார். அரியணை வேண்டுமா காதலி வேண்டுமா என்ற கேள்வி எழுந்த போது காதலியை தேர்ந்தெடுத்த காதலனவர். எனக்கு இந்த கதையை படித்த போது அந்த எட்வர்ட் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இரண்டையும் தொடர்புபடுத்தி பார்க்கவியன்றது. அவருக்கு ஏற்ற காதலி சுப்புலட்சுமி என்கிற பிளாக்கி. அப்பாவியாயிருந்து எட்வர்டின் மனதை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரியவள். மறக்கவியலாத கதையை கொடுத்த வநிஷா சகோதரிக்கு பாராட்டுக்கள்.
ஸ்ரீபுவி
ஸ்ரீபுவி