ஹாய் பிரெண்ட்ஸ். இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது. எழுதி விட்டேன்
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் ஃப்ரெண்ட்ஸ்
15
மாராக்காள் _ விஜியின் அம்மா _ அவர் பெயரைச் சொல்லி அரவங்காட்டில் விசாரித்தான் அரவிந்த்.
அங்கே பெரும்பாலும் கொச்சையான கன்னடம் பேசினார்கள். அது போக பழங்குடியினர் வேறு ஏதோ பாசை பேசினார்கள். எல்லோர் வாயிலும் வெற்றிலை இருந்தது அல்லது வெற்றிலைக் கறை இருந்தது.
நகரத்தில் இருப்பவர்கள் போல பெண்கள் புடவை அணிந்து இருந்தாலும் அந்த சேலைக் கட்டு வித்தியாசமாக இருந்தது.
ஆண்கள் பழுப்பு ஏறிய வேட்டி அணிந்து இருந்தார்கள். பெரும்பாலும் இதர மக்கள் இருந்தாலும் பழங்குடியின ஜாடை ஹேவியாக இருந்தது அந்த கிராமத்தில்.
சுத்தமான அந்தக் குளிர்ந்த காற்றுக்கு சொத்தை எழுதி வைக்கலாம்.
அரவிந்த் தன் ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து இருந்தான். டூ வீலர் மெக்கானிசம் தெரியும் அவனுக்கு. அந்த ஊரில் போக்குவரத்திற்கு யாரையும் நம்ப முடியாது என்பதால் தயாராகத்தான் வந்து இருந்தான்.
ஆனால் அந்த ஊருக்கு முப்பது கிலோமீட்டர் தொலைவில் பேரூராட்சி பகுதி இருந்தது. அங்கே அனைத்து வசதிகளும் இருந்தது. தங்கும் லாட்ஜ் கூட. ஆனால் அத்தனை வசதி இருக்காது என்று நினைத்தான் அரவிந்த்.
பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் ஊரக வளர்ச்சித் துறையின் மானியம் பெற்ற தனிநபர் இல்லக் கழிப்பறைகள் இருந்தன.
அரசின் நலத் திட்டங்களை பார்த்து கொஞ்சம் வியப்புதான் அரவிந்திற்கு.
இப்படி ஒரு இடம் இருப்பதே இப்போதுதான் அவன் பார்க்க, அரசோ பல்வேறு பொது உபயோக கட்டிடங்கள், சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள், தனிநபர் உரிஞ்சுகுழி, பொதுக் கழிப்பிடம், குடிநீர்க் குழாய்கள், தெருவிளக்குகள் என அந்த ஊரைத் தன் செல்லப் பிள்ளையாக அலங்கரித்து இருந்தது.
இன்னும் சுய உதவிக் குழுக்களும் சிறப்பாக இயங்கி வருகின்றனர். ஏதோ விருது கூட வாங்கி இருக்கிறார்களாம்.
அரவிந்தைக் கேட்டால் பேசாமல் இங்கேயே இருந்து விடுவான். ஆனால் பொருளாதார முன்னேற்றம் அத்தனை சிறப்பு இல்லை.
ஆடு கோழிகள் மூலம் வரும் வருவாயுடன் விவசாயம் மூலமும் வருமானம் வருகிறது.
இப்பகுதிகளில் விவசாயம் செய்ய தனி தில் வேண்டும்.
மலையில் இருந்து இறங்கும் யானைகள் நினைத்த வயல்களுக்கு சென்று விருப்பம் போல சாப்பிட்டு செல்லும்.
மின்சார தடுப்பு வயர்கள் அமைத்து இருந்தாலும் யானைகளுக்கு இல்லாத புத்திசாலி தனமா?
அந்த மின் ஒயர்களில் மின்சாரம் பாய்கிறதா என்று ஆய்வு செய்து பின் உள்ளே சென்று தங்கள் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அளவு விபரமானவை.
மேலும் மின்சாரம் தாக்கி யானையோ வேறு பெரிய விலங்குகள் எதுவும் இறந்து விட்டால் நில உடைமைக் காரர்களுக்கு பெரிய தலைவலிதான்.
இதே நேரம் பழங்குடியின மக்கள் மலைக்கு மெல்வசெய்யும் விவசாயத்தில் யானையும் ஒரு பங்குதாரராக சேர்த்துக் கொள்வார்கள்.
தங்களுக்கு வேண்டிய உணவு தானியங்களை சாகுபடி செய்பவர்கள் ஆணை ராஜன் சாப்பிட்டு கொடுக்கும் மீதியே தங்கள் வாழ்வுக்கு போதும் என்று மனமார சொல்வார்கள்.
ஆம்! யானையை ஆணை ராஜன் என்றுதான் குறிப்பிடுவார்கள் மலைவாழ் பழங்குடியினர். அவர்களின் தெய்வம் யானைதான்.
அரவிந்த் ஒரு வழியாக மாராக்காள் வீட்டை வந்து அடைந்தான்.
அவர் பெயரைச் சொல்லி விசாரிக்க கண்ணுமுழி பிதுங்கியது அரவிந்துக்கு.
ஏகப்பட்ட மாராக்காள்கள் அங்கே இருக்க, ‘ யார் மனைவி?’ என்று விசாரித்தார்கள்.
“ டேம் கட்ட வந்த வீர பத்ரன் சம்சாரம். வீரபத்திரன் இருவது வருசம் முன்னாடியே ஊரை விட்டுப் போயிட்டார்.” என வரலாற்றை நினைவுபடுத்தினான் அரவிந்த்.
“ ஓ! அந்த அம்மாவா? அவங்களுக்கு எங்க முறைப்படி மூனு முறை கல்யாணம் பண்ணலை. அதான் அவங்க புருஷன் அவங்களை விட்டு போயிட்டார்” என்று அணக்கமில்லாமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.
‘ என்னது மூனு கல்யாணமா?’ _ அரவிந்த் அதிர, ‘
“ அட ஆமாப்பா. பொண்ணு பிறந்து அஞ்சு வயசுக்குள்ள ஒரு கல்யாணம், வயசுக்கு வந்ததும் ஒரு கல்யாணம் அப்புறம் நிஜ மாப்பிள்ளையோட ஒரு கல்யாணம் பண்ணுவோம். முதல் இரண்டு கல்யாணத்துல மாப்பிள்ளை கிடையாது.
இன்கா இருந்து வெளியே பினவெங்க மக்கள் இதை சீர்னு சொல்லி இன்னும் செய்திட்டுதான் இருக்காங்க.
மாராத்தாள் வயசுக்கு வந்ததும் வீரபத்திரனை பார்த்து கல்யாணம் பண்ணிடுச்சு. ஆக ரெண்டு கல்யாணமாகாத ஆச்சு. அந்த குறைதான் மாராத்தா இப்ப தனி மரமா நிக்குது” என தங்கள் குல சாங்கியம் சொல்ல நெஞ்சில் கைவைத்து கொண்டான் அரவிந்த்.
“ சரிங்க. அவங்க வீடு?” _ அவன் காரியத்தில் கண்ணாக இருந்தான் அரவிந்த்.
“ வாங்க கூட்டிட்டு போறேன்” என்றபடி நடுத்தர வயது ஆண் ஒருவர் வந்தார்.
“ மாராக்கா என் அக்கா மாதிரி. நீங்க இதுக்கு கொமரன் பேரைச் சொல்லி இருந்தாலே அடையாளம் தெரிந்து இருக்கும்” என்று அவர் சொல்லவும் இவன் அதிர்ந்தான்.
“ யாரு கொமரன்?”
“ அதாங்க டவுன்ல கல்யாண படம் புடிக்கிறாரே? அவர்தான்” எனு அவர் சொல்லவும் சிரித்து விட்டான் அரவிந்த்.
விஜியின் முழுப்பெயர் விஜயகுமாரன் அல்லவா? குமாரனைத்தான் ‘ கொமரன் ‘ என்கிறார் இவர்!
விஜிக்கு இன்னொரு புறம் இருப்பதை அறிந்த போது மகிழ்வுதான் வந்தது.
அந்த நடுத்தரம் இவனை மாராக்காள் வீட்டுக்கு கொண்டு போய் விட்டு விட்டு “ ஏ.. எக்கோவ்வ்..” என்று குரல் கொடுத்தார்.
இவன் தமிழில் கேட்டதால் அவரும் தமிழில்தான் பேசிக் கொண்டு வந்தார்.
அங்கே பழமையான ஒரு சிலருக்கு இன்னும் தமிழ் தெரியாதாம்!
மாராக்காள் வந்து எட்டிப் பார்த்தார்.
சுற்றிலும் இடம்விட்டு கட்டப்பட்ட ஓட்டு வீடு அது. சுற்றிலும் சில செடி வகைகள் இருந்தன. கூடவே இரண்டு ஆட்டுக் குட்டிகளும் ஒரு நாயும் இருந்தன.
சிறிய படல் போன்ற தடுப்பு வீட்டு வாசலில் கேட் போல இருந்தது.
இவர்கள் போய் நின்றதும் நாய் குலைக்கத் தொடங்கியது.
“ இந்தா சும்மாயிரு” என்று அதை அதட்டியபடி வெளிக் கதவைத் திறந்தார் மாராக்காள்.
வெளிறிய நிறத்தில் புடவை உடுத்தி வெள்ளை நிற சட்டை அணிந்து இருந்தார். நீண்ட கூந்தலை சுருட்டி கொண்டையாக முடிந்து இருந்தார்.
கைகளில் கவரிங் வளையல் இருந்தது. கழுத்தில் ஏதோ பாசி போல அணிந்து இருந்தார். அதுதான் அவர் மாங்கல்யம் என்று அனுமானித்தான் அரவிந்த்.
“ வாப்பா மருதா. உன் மனைவி சுகமா?பிள்ளைகள் சுகமா?” என்று கன்னடம் கலந்த ஏதோ ஒரு மொழியில் கேட்டுக் கொண்டே வந்தார் அவர்.
“ அக்கா எல்லாரும் சுகம். டவுன்ல இருந்து இந்த சாமி உங்களைப் பாக்க வந்து இருக்கு. என்னன்னு கேளு “ என்றவரை சிரிப்புடன் பார்த்தான் அரவிந்த்சாமி.
“ டவுன்ல இருந்தா?” கேள்வியாக கேட்டபடி அரவிந்தை பாதி புன்னகையும் பாதி ஆராய்ச்சியுமாகப் பார்த்தார் அவர்.
“ வீட்டுக்கு வந்தவங்களை உள்ள கூப்ட்டு வச்சு பேச மாட்டியா?” என்று கடிந்து அந்த மருதன்
“ நீங்க உள்ள போங்க தம்பி. அட நாய் ஒன்னும் பேசாது” என இவனிடம் சொன்னார்.
“ அது அவன் அப்பன் போன அப்புறம் வெளி மனுசங்க யாரையும் உள்ள கூப்பிட மாட்டேன்னு உனக்கு தெரியும் தானே? நீயே சொல்லுற. சரி உள்ள வாங்க தம்பி. மருதா நீயும் வா.” என வரவேற்றார் மாராக்காள்.
“ ஏக்கா.. நீ என்ன இப்படி சொல்லிட்ட. தம்பிக்கு நம்ம கொமரனை தெரியும் போல இருக்கு. வா. வந்து என்னன்னு கேளு”
கலகலத்தபடி உள்ளே வந்தார் அந்த மருதன்.
“ உன் பொண்டாட்டி வள்ளி எங்கே காணோம்?” கேட்டுக் கொண்டே இரண்டு சிறிய மூங்கில் பாய்களை எடுத்து விரித்தார் மாரா.
“ அவ மூனாவதுக்கு சோறு குடுத்திட்டு இருந்தா. இல்லைன்னா வழிகாட்ட என் பொண்டாட்டியை அனுப்பி வச்சு இருப்பேன். “
சொல்லிக் கொண்டே தரையில் விரிக்கப்பட்டு இருந்த மூங்கில் பாயில் அமர்ந்தார் மருதன். இவனையும் அமரும்படி கண் காட்டினார் அவர்.
“ மூங்கில் பாயெல்லாம் வெளி விருந்துகாரங்களுக்குத்தான் விரிப்போம். மத்தபடி தரையிலதான் உட்காருவோம். இப்போ நீங்க வந்ததால மூங்கில் பாய் விரிப்பு குடுத்து வச்சிருக்கு எனக்கு.”
சொல்லிக் கொண்டே மாராக்காளை குறும்புடன் பார்த்தார் மருதன்.
“ அதான் ஆளைப் பார்த்தாலே ஏதோ முக்கியமான விசயம் பேச வந்து இருக்கார்னு தெரியுதில்ல. பின்னே என்ன அக்கா. “ பேச்சுக் கொடுத்தார் மருதன்.
மாராக்காள் அதற்குள் தேத்தண்ணீர் வைத்துக் கொண்டு வந்தார்.
சுவை அப்படி ஒன்றும் இல்லை. சர்க்கரையை அள்ளிக் கொட்டி இருந்தார் மாராக்காள்.
அரவிந்த் அதைக் குடித்துவிட்டு தன்னை மீறி கடுகளவு முகம் சுளிக்க அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த மாராக்காள்
“ எங்களுக்கு டீத்தண்ணி போட வராது. எனக்கும் என் மகனுக்கும் காபிதான். அதுக்கு அவன் சீனி நிறைய போட்டுக் குடிப்பான். எனக்கும் அப்படியே பழகிருச்சு. உங்களைப் போல டவுன்காரங்க டீ தானே குடிப்பீங்க. அதான் டீ போட்டேன்” என்றார் பவ்வியமாக.
“ நல்லதுதான் மா. நான் ஒரு நல்ல விஷயம்தான் பேச வந்து இருக்கேன். அதுக்கு இத்தனை இனிப்பு சரிதான்” எனப் புன்னகைத்தான் அரவிந்த்.
“ என்னன்னு சொல்லுங்க” என்றவர்,
“ கிழங்கு அவிச்சேன். இருங்க, எடுத்தாரேன்” என்று சமையல் கட்டு உள்ளே ஓடினார்.
“ அதுதான் மாரா அக்கா. அதைத் தின்னு இதைத் தின்னுன்னு உங்களை வந்த விசயம் மறக்க வச்சிரும்” பெருமையாகச் சொன்னார் மருதன்.
வைத்து உரித்த மரவள்ளிக் கிழங்குகளைக் கொண்டு வந்து இரு சிறு தட்டுகளில் வைத்து,
“ சாப்பிடுங்க தம்பி” என்ற மாராக்காளை அன்புடன் பார்த்தான் அரவிந்த்.
“ அம்மா என்னை யாருன்னு தெரியாம இத்தனை செய்றீங்க?” ஆச்சர்யமாக கேட்டான் அரவிந்த்.
“ யாரா இருந்தா என்ன சாமி? வீட்டுக்குள்ள கூப்பிடுற வரைதான் நீங்க வேத்து ஆள். வீட்டுக்குள்ள வந்திட்டா எங்க வீட்டு ஆள். “ _ கனிவும் அன்புமாகச் சொன்னார் மாரா.
“ அப்போ சரி அத்தை. நான் உங்ககிட்ட ஒரு உதவி கேட்டு வந்து இருக்கேன். உங்க ஒருத்தரால் தான் அந்த உதவியைச் செய்ய முடியும்” பணிவாகச் சொன்னான் அரவிந்த்.
“ அட என் தங்கம்! கண்டிப்பா இந்த அத்தை உனக்கு வேண்டியது செய்வேன் “ _ என்ன ஏதென்று அறியும் முன்னரே வாக்குக் கொடுத்தார் மாரா.
அதுதான் அவர்கள். பொதுவாகப் பலரிடம் நன்கு தெரிந்தவர்களே உதவி என்று கேட்டாலும் ‘ முடிந்தால் செய்கிறேன் ‘ என்று தான் சொல்வார்கள். ஆனால் இந்தப் பழங்குடி மக்கள் உதவி எனக் கேட்டுவிட்டால் தங்கள் உயிரையும் கொடுப்பார்கள்.
அத்தனை உறுதியாகச் சொன்ன மாராக்காள் மீது கூடுதல் மரியாதை வந்த போதும் தங்கை விஷயத்தைக் கேட்டுவிட்டு என்ன சொல்வாரோ? என்று குழப்பமாகவும் இருந்தது அரவிந்திற்கு.

Last edited: