உள்ளம் விழித்தது மெல்ல - நிறைவு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

Author
Author
Joined
Jul 1, 2019
Messages
1,219
Reaction score
1,540
Points
113
Location
Coimbatore
nanthalala copy.jpg

இதுதான் வாழ்க்கை.

வாயாடியாக - கிஷோரைப் பிடிக்காத உறவினளாக இருந்த கோமதி அவன் தோழியாக அமைதியானவளாக மாறிப் போனாள்.

தாயில்லாமல் வளர்ந்த செல்வம் ஒரு கூட்டுக் குடும்பத்தின் பொறுப்பான மூத்த மருமகளாகப் போகிறாள்.

தோழிகள் தவிர வேறு அயலாரை அறியாத காந்திமதி ஒருதலைக் காதல் கொண்டு அதை திருமணத்தில் முடிக்க இருக்கிறாள். இன்னும் தன் காதலை தொடருவாள் அவள் கணவன் மீதும் தன் குடும்பத்தின் மீதும்..

சண்டையிட்டுக் கொண்ட அக்கா தங்கைகள் லட்சுமியும் கிருத்திகாவும் நீர் அடித்து நீர் விலகாது என்பதற்கு இணங்க இன்று உறவு கொண்டாடுகிறார்கள்.

இன்னும் வயதுக்கு வரவில்லை - இவள் பெண்ணே இல்லை என்ற ஊராரால் கேலி செய்யப்பட்டவள் மலர்ந்து தக்க மணவாளனால் மாலையாக சூடிக் கொள்ளப்பட்டாள்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த ப்ரியா வாழ்வில் குழப்பங்கள் ஏற்பட்ட போதும் எதையும் இழக்கவில்லை.

பலரால் நிராகரிக்கப்பட்ட செந்தில் உரிய துணையை அடைந்தான்.

பிள்ளை இல்லை என்ற ஏங்கியவள் குழந்தையும் குடும்பமாக மகிழ்வுடன் இருக்கிறாள்.

பள்ளியில் விளையாட்டுத்தனமாக இருந்த பிள்ளைகள் வாழ்வில் பொறுப்பை கை விடவில்லை.

இன்னும் பல…..

நான் சொல்ல நினைத்தது அதுதான். சிறுவயதில் நாம் தீர்மானிக்கும் விசயங்கள் எதிர்காலத்தில் உறுதியாக நடக்கும் என்று சொல்ல முடிவதில்லை.

யாரும் உயர்ந்தவரும் அல்ல. தாழ்ந்தவரும் அல்ல.

--------------------------------------------------------------------------------------------------------
அன்னம்மா மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். இன்று அவர் மகனைத் திருமணம் பேச பெண் வீட்டினர் வருகிறார்கள்!. முதலில் தற்செயலாகப் பெண்ணின் தாயை – தமிழரசியை மளிகைக் கடையில் வைத்து சந்தித்து வழக்கம் போல தன் மனக் குறையை அவரிடம் புலம்பியதில் இவரது குடும்ப நிலவரங்களைக் கேட்டுக் கொண்டு தன் மகளுக்கு சரிப்படும் என்று அவர்தான் முதலில் ஆரம்பித்தார்.

தமிழை அன்னமாவுக்கு நன்கு தெரியும் இவர் மகன் படித்த அரசுப்பள்ளியில் ஆசிரியையாக இருந்தவர். மகனது படிப்பு விசயமாக அவன் இழுதது வந்த பிரச்சனைகள் காரணமாக சிலமுறை பள்ளியில் சந்தித்து பேசி உள்ளார்கள்.

அதன்பிறகு ஆசிரியை என்ற மதிப்பு இருந்தாலும் அடுத்த வீட்டு பெண் போல பழகும் தமிழின் குணம் இவருக்குப் பிடித்துப் போக இவர்கள் நட்பு தொடர்து கொண்டிருந்தது.

“அம்மா .. நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்கிடாதீஙக. ஏதோ நம்ம கொறைய சொன்னா இவ அவளுக்கு சவுகரியம் ஆக்கிக்கிடுதான்னு நினைக்காதீங்க… என்கிட்ட படிச்ச புள்ளைங்க எல்லாரும் நல்லா இருக்கனும்னுதான நான் நினைப்பேன்.

என்கிட்ட ஒரு பொண்ணு பத்து வருசத்துக்கு முன்னுக்க படிச்சா. அவ அண்ணன்கூட நம்ம கிஷோர்கூட சண்டை போட்டு ஒரு பிரச்சனை வந்துச்சு. நினைவு இருக்கா?” எனறு அவர் நிறுத்தவும் அன்னம்மா ‘ஞே’ என விழித்தார்.

அவன் இழுத்து வந்த ஏழரைகள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?

அதனால் குத்துமதிப்பாக “பையன் பேரு?” என்றார் கெத்தாக.

“ரகு. இப்ப வக்கீலா இருக்கான்! நல்ல பையன் சின்ன வயசுல கேப்பார் பேச்சை கேட்டு கொஞ்சம் வம்பு பண்ணிட்டுதான் இருந்தான். அதுல்லாம் இல்லைனாதான் ஆச்சரியம். இப்ப அவன் தங்கச்சிக்குதான் ஏதோ நட்சத்திர தோசம்னு தள்ளி போகுதாம். இதுனால இந்த சின்ன வயசிலேயே அந்தப் பொண்ணுக்கு படிப்பை விட கல்யாணத்துக்கு இம்பார்டென்ஸ் குடுத்து பாக்கிறாங்க அவங்க வீட்ல. “

“என்னவாம்?”

தமிழரசி பெண்ணின் விசயங்களைச் சொல்ல-

“இந்த காலத்துலயும் இப்டி நம்புனா என்ன அர்த்தம்? எனக்கு பத்து பொருத்தமும் பாத்துதான் கட்டி குடுத்தாங்க. என்ன ஆச்சு? இதுலலாம் எனக்கு நம்பிக்கை இல்லம்மா”

“ஆனா அவங்களுக்கு இருக்கு. அந்தப் பொண்ணுக்கு உங்க பையன் சரியா வருவான்னு நான் நினைக்கிறேன். நீங்க தப்பா நினைக்காம கொஞ்சம் இதுபத்தி யோசிங்கம்மா” என்று தயக்கத்துடன் தமிழரசி கேட்டுக் கொள்ள அரைகுறையாகத் தலையசைத்தார் அவர்.

ஆனால் இதுபற்றி ரகுவின் வீட்டிலும் அந்த ஆசிரியர் பேசி இருப்பார் போல.

இவர்கள் வீட்டுக்கு அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் தனது மோட்டார்பைக்கில் வந்து இறங்கினான் ரகு.

அவன் நல்ல நேரமோ என்னவோ அன்று கிருத்திகா குடும்பமும் அன்னம்மா வீட்டில் தறசெயலாக இருக்கவே தன் தங்கையின் திருணத்தை பேசி முடித்து விட்டான்.

கிஷோர் -ப்ரியா கண்மணி திருமணப் பேச்சால் ஆஷாவுடனான கிருத்திகாவின் நட்பு பாதிக்கபட்டது. இருவருக்கும் இருந்த தயக்கம் ப்ரியாவின் திருமணத்தால் சரியாகி வருகிறது. அதன்பின்; தம்பியின் திருமணம் குறித்த அதீத அக்கறை கிருத்திகாவிற்கு எப்போதும் உண்டு.

ஆஷா இப்போது தன் பெற்றோர் குடும்பத்துடன் நலல போக்குவரத்தில்தான் இருக்கிறாள். அவள் மச்சினனுக்குதான் மதியைப் பெண் கேட்கிறார்களாமே?

எப்படியோ? நன்றாக இருந்தால் சரி!

ஆனால் இந்தப் பேச்சுகளால் தம்பி எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற கவலையில் இருந்தாள் அவள்.

வீட்டிற்கு வந்த புதிய விருந்தாளியை குற்றாலீஸ்வரன் தணணீர் கொடுத்து வரவேற்க அதுவே அவனுக்கு மகிழ்வைத் தந்தது.
தண்ணீரைக் குடித்து விட்டு உடனடியாக விசயத்திற்கு வந்தான் ரகு.

“அரசி டீச்சர்- தமிழசி டீச்சர் எங்களைப் பத்தி சொல்லி இருந்தாங்கன்னு சொன்னாங்க. “ எனவும் அன்னம்மா சுதாரித்தார்.

‘ஓ இது அந்தப் பெண் விசயமா? கேட்டுதான் பார்ப்போம்’ என முடிவு செய்தவர் மகளுக்கு கண்ணைக் காட்ட அவள் தன் கணவனுக்குக் கண்ணைக் காட்டினாள்.
“எங்களுக்கு அம்மா இல்லை. அப்பாவுக்கு உடம்பு முடியலை. தங்கச்சிதான் வீட்டையும் கவனிச்சு அப்பாவையும் கவனிச்சுக்கிடுதா. ஐடிஐ ட்ரிபிள் ஈ படிச்சிருகு;கா. பாக்க நல்லா (அழகா) இருப்பா.”

ஊர்ல எல்லாரும் நான் தங்கச்சியை கட்டிக் குடுக்காம இப்டியே வச்சிருவேன்னு என் காதுபடவே பேசுதாங்க.

அவளைக் கட்டி குடுத்துட்டு அப்பாவை யாராவது ஆண் நர்ஸ் ஏற்பாடு பண்ணி கூடவே நானும் கவனிச்சுக்கிடலாம்னு எனக்கு எண்ணம். அதுல்லாம் பேசி வச்சிட்டேன். தங்கச்சி அதுக்கு சம்மதிக்க மாட்டுக்கா. நம்ம அப்பாவுக்கு நான் செய்யாம யார் செய்வான்னு சண்டைக்கு வாரா.

என்னால வெளியயும் பேசசு கேக்க முடியல. வீட்ல தங்கச்சிகிட்டயும் ஒன்னும் சொல்ல முடியல. அதான் இவளுக்கு சீக்கிரம் கல்யாணத்தை செஞ்சி வச்சிட்டு கையோட அந்த ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன்”
என்று நீளமாகப் பேசி முடித்து இவர்கள் முகங்களை தயக்கத்துடன் பார்த்தான்.

“அப்போ உங்க கல்யாணம்?” செந்தில்தான் கேட்டான். காலத்தில் திருமணம் செய்யாமல் சுற்றியலைந்த அவனுக்குதானே அந்த வருத்தம் தெரியும்?

“அது நடக்கும்போது நடக்கும் . எனக்கு இருக்க பொறுப்புகள்ல அதை என்னால நினைக்க இப்ப நிசமாவே முடியல.

சின்ன வயசுல இது எதுவும் இல்லாம கிஷோர்கிட்ட சண்டை போட்ருக்கேன். ஆனா வாழ்க்கையில எதுவும் நிரந்தரமில்லனு இப்ப புரியுது.

நான் படிச்சு முடிச்சதுக்கு அப்புறம்தான்; வீட்ல நிலமை இத்தனை சங்கடாயிட்டு. ஏன் படிச்சு முடிச்சோம்னு அப்பப்போ தோணுது” என அவன் மெல்லிய ஆதங்கத்தோடு முடிக்க இவர்கள் குடும்பம் உருகிவிட்டது.

இந்த குடும்பததிற்கு கை கொடுக்காவிட்டால் அவர்கள் பட்ட கஷ்டத்திற்கு எனன அர்த்தம்? என்று தோன்றியது.

பட்டவர்களுக்குதானே தெரியும் இழப்பின் வலி.

“எல்லாம் சரிதான். நம்ம கிஷோர் எனன சொல்லுவான்னு தெரியலையே? ஏற்கனவே ஒரு பிரச்சனை ஓடி இப்பதான் முடிஞ்சுது….”

“தப்பா நினைச்சுக்கிடாதீங்க. பொண்ணை குடுத்தமோ கண்ணை குடுத்தமோன்னு சொலலுவாங்க.
எங்க எல்லாருக்கும் ஒரே டீச்சர்தான். இந்த விசயம் அரசி டீச்சர் சொன்னதும் நம்ம கோமதியும் காந்திமதியும் என்னை வந்து பாத்தாங்க. ஒரு சில விசயங்கள் சொன்னாங்க. எனக்கு அது பெரிய விசயமா தோணல.

அப்புறம் நான் இந்த கல்யாணத்துல உறுதியா சொன்னதுக்கு மதி ரொம்ப சந்தோசப்பட்டா. என் தங்கச்சி ,மதி ,கோமதி செல்வம் இவங்கல்லாம் பள்ளி கூடத்துல ஒன்னா படிச்சவங்கதான்.”

அடப்பாவிகளா? என்று இரண்டு மதிகளையும் நினைத்து அதிசயித்து இவர்கள் வாயில் கையை வைக்க –

மருமகனுக்கு அல்வாவும் மிக்சரும் வாங்கிவிட்டு அத்தனையையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு அப்போதுதான் அங்கே வந்த கிஷோர் -

“அதுல்லாம் இருக்கட்டும். முதல்ல என் சந்தேகத்துகு;கு பதில சொல்லு”

“என்ன சந்தேகம் கிஷோர்? எதா இருந்தாலும் கேளுங்க. பதில் சொல்லுத செய்யுத கடமை எனக்கு இருக்கு” என்றான் அண்ணனாக..

“ஆமா ஸ்கூல்ல அடாவடி பண்ணிகிட்டு இருந்தியே? எப்படி இந்த அளவு திருந்திட்ட?”

ரகு சிரித்து விட்டான். அவன் தன் குடும்பம் பற்றி எதவும் கேட்பான் என நினைத்து அதற்கு பதில் சொல்லத் தயாராக இருந்தான். எத்தனைNயுளா மாப்பிள்ளை வீடுகளுக்குச் சொல்லிப் பழகியவானாயிற்றே?

“அதுதான் எனக்கும் தெரியலை. நம்ம ஸ்கூல்ல மாசா மாசம் லஞ்ச பிரேக் அப்புறம் எல்லா பெரிய கிளாஸ் பசங்களுக்கும் காமர்ஸ் கிளாஸ்ல வச்சி அட்வைசைப் Nhhடுவாங்களே? அதுல திருந்தி இருப்பேன் போல. சமூகம் கூட அப்படித்தானோ?” என்றான் கிஷோரைப் பார்த்து கேலியாக.

அவர்களின் பால்ய காலம் அங்கே திரும்ப வந்திருந்தது.

“அப்போ பொண்ணுங்களுக்கு அட்வைஸ் கிளாஸ் கிடையாதா?” என்றது அன்னம்மா.

“அது தனி டிராக். நமக்கு தெரியாது” என்று ரகு விலகி விட கிஷோர் அதற்கு ஒத்துப் பாடி புன்னகைத்தான்.

“எல்லாம் சரி. உன் தங்கச்சினா நம்ம ஸ்கூல்ல படிச்சிருக்கா என்ன?” எனறவன்-

ரகு ‘ஆம்’ என புன்னகையுடனே தலையசைக்கவும்

தன் முக்கியமான சந்தேகததைக் கேட்டான் -

“உன் தங்கச்சி பேரு?”

“என் பேரு நினைவிருக்குதா உன..உங்களுக்கு? என் முழுப் பேரு ரகுபதி. ரகுபதி சன் ஆஃப் கஜபதி சன் ஆஃப் வளையாபதினனு நீ.. வந்து கிளாஸ்ல எலலாரும் கிணடல் பண்ணதாலதான் பதிலுக்கு நானும் அன்னிக்கு கிண்டல் செய்ய வேண்டியதாப் போச்சு.” என்று சற்று குறைபட்டான்.

“ஓ இல்லனா நீ அன்னிக்கு பெரிய மதர் தெரசாதான்” அவனை கலகலப்பாக்க முயன்றானக் கிஷோர்.

கிஷோர் அந்த நாட்களை நினைத்து சிரித்துக் கொண்டான். கொடுமையாகத் தோன்றிய அக்காலம் இப்போது குளிர் நிலவாய் அவனைத் தாலாட்டுகிறதே?“அப்ப உன் தங்கச்சி பேரை சொல்ல மாட்டியா மச்சான்?”

ரகு ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டான்.

“ராகப்ரியா”

இவர்கள் குடும்பத்தின் முகத்தில் ஈயாடவில்லை சிறிது நேரம். பின் பெரியவர்கள் அனைவரும் வெடித்துச் சிரித்தார்கள்.

காரணம் புரியாவிட்டாலும் குற்றாலீஸ்வரனும் இணைந்து நகைக்க அதைப் பார்த்த மற்றவர்கள் இன்னும் மகிழ்ந்தார்கள்.

----------------------------

ஆனந்த் மோட்டுவளையை முறைத்துக் கொண்டு இருந்தான். மனதில் குழப்பம் இருந்தபோது வேலைகளால் மனதை ஆக்கிரமித்துக் கொண்டான். இப்போது அவனுக்கு தெளிவு வேண்டும.;

கிட்டத்தட்ட பதினைந்து வருட ஒருதலைக் காதல் அவனுடையது. அண்ணன் குடும்பம் - அவன் நிலை என்று அதைத் தொலைத்துவிட்டான்.

ஆனால் இவள்? இந்த மதி?

அவள் மீது காதல் எல்லாம் வராது அவனுக்கு என்று முரண்டு பிடித்துபு; பார்த்தான் தன் மனதுக்குள்ளேயே.

“ஒருமுறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு –

அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது!

வருவதெல்லாம் காதலென்றால் வாழ்வதெவ்வாறு?

தன் வாழ்வினையே காதலித்தால் -
புரியும் அப்போது”இல்லை. இப்போது நிலைமை கை மீறிவிட்டது. ஆனால் இது காதல் இல்லை என்று அவனை அவனே சமாதானப்படுத்திக் கொண்டான்.

தான் பதினைந்து வருடமாக தன் காதலுக்கு உண்மையாகத்தான் இருந்தோம் என மனதைத் தேற்றிக் கொண்டான்.

ஆனால் இருந்தோம் என கடந்த காலத்தில் சொல்லி அதை அந்த மனமே முடித்து வைத்ததை அறியவில்லை பாவம்.

நாளை மதி வீட்டுக்கு பூ வைகக செல்ல வேண்டும். பொதுவாக மணமகனை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லமாட்டார்கள்.

ஆனால் இவர்கள் விசித்திரக் காதலில் திருப்தி இலலாத இவர்கள் குடுத்பத்தினர் இவனையும் வர Nசுண்டும் எனச் சொல்லிவிட்டார்கள்.

சிவலிங்கம் - செல்வம் மற்றும் சார்லஸ் - கோமதி ஜோடியின் திருமணம் நிச்சயிக்கபட்டு விட்டிருந்தது.

இரண்டும் ஒரே நாளில்தான். சிவலிங்கம் முதலில் அவன் வீட்டில் வைத்து நடைபெற்று மாலை ரிசப்சன்.

சார்லஸ் - கோமதி திருமணம் அவன் வீட்டில் வைத்துதான். அதன்பின் திருணத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்துவிட்டான். தாலி கட்டுகிறார்களோ? மோதிரம் மாற்றுகிறார்களோ? மொத்தத்தில் காதலித்த பெண்ணை கைப்பிடிக்கப் போகிறாhகள் இருவரும்.

நமக்கு ஏன் அந்த யோகம் இல்லை என ஆனந்த் சிந்தித்த போது அவன் செல்லிடப் பேசி அவனை அழைத்தது.

மதிதான்!

இம்முறை அழைப்பை ஏற்றான். எத்தனை முறைதான் அவளுக்குப் பயந்து ஒளிவது? இரண்டு வீடுகளிலும் முழு சம்மதத்தைப் பெற்றுவிட்ட மிதப்பில் இவள் விடாமல் இவனைத் துரத்திக் கொண்டு இருக்கிறாள்.

“ஹலோ”

“என்ன ஹலோ? எத்தனை வாட்டி போன் பண்ணிருக்கேன்? எடுத்துப் பேசினா குறைஞ்சிருவீங்களா? ஏதோ நானா வந்து என் விருப்பத்தை சொன்னதால நீங்க என்ன செஞ்சாலும் கை கட்டிட்டு வாயப் பொத்திகிட்டு இருப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க. அதுல்லாம் என்கிட்ட நடக்காது!”அவள் மிரட்டினாளா? கெஞ்சினாளா? கொஞ்சினாளா? என்று அறியமுடியாத வகையில் அவள் குரல் இருந்தது.

“என்னம்மா திடீhனு இப்டி சொல்லுத? நீ ரொம்ப நல்ல புள்ளனு வீட்ல எல்லோரும் சொன்னாங்க?” என்றபோது அவன் குரல் சிரித்திருந்தது. அவன் கடந்த கால இருள் அவனை விட்டு பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி இருந்தது.

இத்தனை உரிமையாக இவனிடம் யாருமே பேசியதில்லை.

“இப்பவே இப்டி பேசுத? நீ கல்யாணம் பண்ணிகிட்டா என்ன செய்வியோ?” என்று அவன் அவளை மடக்குவதாக நினைத்துக் கொண்டு கேட்க

“முதல்ல என்னைக் கல்யாணம் பண்ணுங்க. அப்புறமா மத்ததை பாக்கலாம்” என்ற மதிக்கு இவனால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் மௌனத்தில் ஆழந்தான்.

சிறிது நேரம் இவனுக்காகப் பொறுத்தவள் - ‘இப்படியே விட்டால் சரிவராது’ என்று நினைத்தவளாக
“சரி. நாளைக்கு பூ வைக்க வரும் போது. பிங்க் கலர் சட்டை போட்டுட்டு வாங்க. அந்த கலர்லதான் எனக்கு உங்க மாமியார் பட்டு எடுத்திருக்காங்க. நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும்தான் நீங்க எடுத்து தரனுமாம்.”

அவன் கையை மீறி அவன் வாழ்வு போவதை இந்த முறை அவன் நிச்சயம் வெறுக்கவில்லை. அதே சமயம் அந்தப் பேச்சில் பட்டுக் கொள்ளாமல் -
“பாப்போம்.” என்று போனை வைத்து விட்டான்.

-----------------------------------------------
மதிக்கு பூ வைக்கும் வைபவம் அன்று…..

மாப்பிள்ளை வீட்டாரை ஆவலுடன் எதிர்பார்த்து அவர்கள் கிளம்பியதில் இருந்து இங்கே வரவர ஒவ்வொன்றையும் போனில் ரன்னிங் கமென்ட்;ரியாகக் கேட்டு வாங்கி கொண்டு இருந்தான் சிவலிங்கம். பெண்ணுக்கு அண்ணனாக விசேச வீட்டுக்கு உரிய வேலைகளையும் பரபரப்பாகச் செய்து கொண்டு இருந்தான்.

மதியின் தோழியர்களில் கோமதி காலையிலேயே வந்து விட - வீட்டுக்கு வரப்போகும் மருமகளாக லட்சணமாக செல்வம் அதிகாலையிலேயே வந்து விட்டாள் தன் பாட்டியோடு.
தூக்கமின்றி தவித்து விழித்து கண்கள் சிவக்க நின்ற தன தோழியை கனிவுடன் கவனித்துக கொள்ள மற்றவர்கள் மணப்பெண்ணைத் தவிர்த்து இதர வேலைகளில் மும்மூரமாகினர்.

ஜார்ஜ் வீட்டு வேலைகளில் மற்றும் வெளி வேலைகளில் தன் பங்களிப்பை அளித்துக் கொண்டு இருந்தார்.

ஒரு வழியாக மாப்பிள்ளை வீட்டார் வர-

கதவின் இடுக்கு வழியாக ஆனந்தை எதிர்பார்த்துக் கொண்டு நின்றாள் காந்திமதி.

அவன் வந்தான். ஆனால்அவள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி வேறு நிறத்தில் - சிவப்பு நிறத்தில் சட்டை அணிந்து இருந்தான்;.

வந்தவன் அவளைனப் பார்த்து ‘இப்போ என்ன செய்வ? ‘என்பதாக விழிகளைச் சிமிட்டினான்.

ஆனால் அவன் அறியாமலே அவன் அவளை தன் மனதில் ஏற்றுக் கொண்டான் என்பதை உணர்ந்திருப்பானா?

காந்திமதி முகம் வாடி விட்டது. சட்டென தெளிந்தும் விட்டது.உடனே உள் அறைக்குத் திரும்பியவள் அம்மாவின் பழைய சிகப்பு பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு வந்தாள்.

அவளைப் பார்த்த ஆனந்த் கண்களில் அதிர்ச்சி இருந்தது. ஆனால் அதில் மகிழ்ச்சியும் குறும்பும் இருந்தது.

அவன் இத்தனை வருடங்கள் கழித்து தனக்கான வாழ்வை வாழத் தொடங்கி இருந்தான்.

அவர்களை பரபரப்பாக வரவேற்று உள்ளே அழைத்தனர் பெண் வீட்டார்.

காந்திமதியைப் பார்த்த விஜயா “ஏன் பழைய படடுப் புடவை கட்டி விட்டிருக்கீங்க? புதுசு எடுத்ததாச் சொல்லி இருந்தீங்களே?” எனத் தன் ஐயத்தை எழுப்ப –

“அது… இது தான் ராசியான சேலை எங்க வீட்ல” என்று சமாளித்தார்.
பின்னே? திருமணம் முடிவாகிவிட்டால் அது நடத்தி காட்டுவதுதானே ஒரே டார்கெட்? அதற்கு வேண்டுவன செய்வதுதானே முக்கிய ப்ராஜக்ட்?

விஜயதேவ்ஆனந்தின் அம்மா விஜயா காந்திமதிக்கு தலையில் அடுக்கடுக்கான மல்லிச் சரங்களை வைத்து ஆசீர்வதிக்க அனைத்து பெரியவர்களும் வரிகையாக அவளுக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

இருந்தாலு; வெறும் கையோடு போவதாக மருகிய விஜயா பெண்ணுக்கு ஒரு தங்க மோதிரத்தை அணிவித்து விட்டார். அளவெல்லாம் அவளிடமே கேட்டு வாங்கி இருந்தார். பெரிதாகச் செய்ய ஆசைதான்.

“இந்தக் கல்யாணம் - மொதல்ல கல்யாணம் வரை வரட்டும். முன்பே ஏதாவது செய்து திருஷ்டி விழுந்துவிடக்கூடாது “என்று பெண்ணின தாய் கூறிவிட இத்தோடு நிறுத்திக் கொண்டார்.

அன்றே பந்தக்கால் நாட்டும் நாள் - திருமண ஜவுளி எடுக்கும் நாள் - நிச்சயம் - திருமணம் ஆகியவற்றுக்கு நாள் குறிக்கப்பட்டது.

திருமணத்தைப் பெரிய அளிவில் செய்ய ஆனந்த் குடும்பத்தினர் முடிவு செய்து இருக்க இவர்கள் குடும்படும் அதற்கு தங்கள் சம்மதத்தைக் கொடுத்தது.

“எங்களுக்கு இருக்கது ஒரே பொண்ணு. பெரியவன் கல்யாணம் முடிவாயிட்டு. வேற என்ன கவலை? எல் லாம் அவளுக்குதான்.” என்று நம்பி உணர்ச்சியுடன் சொல்ல அவர் குடும்பம் அதை ஆமோதித்தது. அந்தக் குடும்பத்தில் செல்வம் ஒருத்தி.

-------------------------------------------------------------------------------------------------------
நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த ஆனந்த் தன் அறையை நோக்கிப் போக-

அவன் அம்மா அப்பா கோவைக்குப் பெட்டியைக் கட்டினார்கள்.

“பந்தக்கால் நடறது போயம்புததூர் வீட்ல வச்சிதான். அடுத்து நிச்சயத்துக்கு வந்தாப் போதும். ஜவுளி கோயம்புத்தூர்லயே எடுத்துக்கலாம்னு சம்பந்திகிட்ட பேசியாச்சு. அப்புறம் இங்க இருந்து என்ன பண்ணப் போறோம்?. அங்க வேலை தலைக்கு மேல கிடக்கு” என்ற விஜயாவின் கூற்று அவர் கணவரின் முடிவு என்பது தொநிததால் யாரும் ஒன்றும் சொல்லவில்லை.

தனதறைக்குள் நுழைந்த ஆனந்த் அன்றைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தான்.

அவள் சொன்ன நிறத்தில் அவன் சட்டை அணியவில்லை. ஆனால் அவன் சட்டையின் நிறத்திற்கு ஏற்ப உடனே புடவையை மாற்றி தன் உறுதியைக் காட்டிய மதியை அவன் ரசித்தான்.

ஆனால்…
மதி ஏதோ தற்கொலை முயற்சி செய்த மாதிரி ஒரு தகவல் வந்து இருந்தது. ஆனால் சிவலிங்கம் அவள் ஏதோ தெரியாமல் குடித்தது அது என்று சொல்லவும்தான் இவனுக்கு சமாதானம் ஆனது.

எப்போதும் எதற்கும் தற்கொலை தீர்வல்ல. எத்தனையோ மனஉளைச்சல்கள் இருந்தபோதும் அவன் அதைப் பற்றி நினைக்க்க கூட இல்லை.

அவன் மனைவியும் அப்படித்தான் இருக்க வேண்டும்!அதே போலத்தான் சிவலிங்கமும் ஏதோ தூக்க மாத்திரை போட்டுக் கொண்டதாகக் கேள்விப்பட்டு அவனைத் திட்டிய போது அவனோ” ச்சே ச்சே.. நான் ஏன் அதுலாம் பண்ணப் போறேன்? எனக்கு சந்தோசமா வாழனும்னு ஆசையே தவிர அதுக்காக ஒருநாளும் அப்படி ஒரு கோட்டித்தனமான முடிவு எடுக்க மாட்டேன். எப்படியும் என் அப்பா அம்மாவை சம்மதிக்கக் வச்சிருப்பேன்.” என்று சொல்லவும்தான் இவனுக்கு நிம்மதி ஆனது.

அந்தக் குடும்பத்தின் மீது தனக்கு ஏன் இத்தனை அக்கறை?

அப்படி அல்ல. அவனுக்கு நெருக்கமானவர்கள் யாராக இருந்;தாலும் அவன் இப்படித்தான் இருந்;திருப்பான்.

அப்படி என்றால் காந்திமதியை அவனுக்கு நெருக்கமானவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டானா? எப்போது இருந்து?

அவனுக்கே தெரியவில்லை.

மனைவி என்றே முடிவு எடுத்தபின் நெருக்கமாவது ஒன்றாவது?

அப்போது அவனுக்கு ஒரு வாட்சப் மெசேஜ் வர தனது செல்லை எடுத்துப் பார்த்தான்.

அதில் அவன் காபி அருந்தும் போது கோப்பையை கீழே வைத்துவிட்டு நிமிர்ந்த சமயத்தில் அவன் பின்னால் முகம் முழுக்கப் புன்னகையுடன் நின்று காந்திமதி எடுத்த போட்டோ வந்திருந்தது.

அதை எடுத்தது புகைப்படக்காரர்தான்.

ஆனால் அதை எடுத்து இவனுக்கு அனுப்பி வைத்த காந்திமதியை நோக்கி ஆனந்தின் உள்ளம் விழித்தது மெல்ல….

உள்ளம் விழித்தது மெல்ல
அந்தப் பாடலின் பாதையில் செல்ல

நிறைவு
-------------------------------------------------
 
Tamilchelvi

Author
Author
Joined
Aug 17, 2019
Messages
612
Reaction score
1,156
Points
93
Location
Erode
View attachment 29991

Nice jiii
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
5,314
Reaction score
11,527
Points
113
Location
India
Super akka i just loved this gandhimadhi character very much adavadi love

And saree poi odane maathita vera level la evlo love pannura

Aanth ne flat aagite avlo daan

Kishore ku jodi super all are settled

Semma waiting for next
 
Nanthalala

Author
Author
Joined
Jul 1, 2019
Messages
1,219
Reaction score
1,540
Points
113
Location
Coimbatore
Super akka i just loved this gandhimadhi character very much adavadi love

And saree poi odane maathita vera level la evlo love pannura

Aanth ne flat aagite avlo daan

Kishore ku jodi super all are settled

Semma waiting for next
Thank you dear. Thank you for your kind support❤❤❤
 
SarojaGopalakrishnan

Well-known member
Joined
Jul 20, 2018
Messages
4,249
Reaction score
7,070
Points
113
Location
Coimbatore
அருமையா இருக்கு பதிவு
ப்ரியா கிஷோர் ரெண்டு
பேருக்கும் ஆள் மாறியும். பேர் மாறல
காந்திமதி ஆனந்த் மனச
பிடிச்சுட்டா
தோழிகள் மூவரும் நினைத்தபடி
வாழ்க்கை அமைந்தது
😋😛👌
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top