என் மனது தாமரை பூ 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Administrator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
71
Reaction score
655
Points
83
13

‘ தட் தடார் ‘ என்று சட்டியையும் பாத்திரத்தையும் போட்டு உடைத்துக் கொண்டு இருந்தாள் செந்தாமரை.

காதுகள் இரண்டும் திவ்வியமாகக் கேட்டும் கேளாதது போல பாவலா செய்து கொண்டு இருந்தார் வேம்பு.
தனது முன்கதையைக் கேட்டதில் இருந்துதான் அம்மணிக்கு இந்த ஆட்டம். சாமியார் சொல்பேச்சு கேட்டு பெற்ற மகளை ஊரை விட்டு தங்களை விட்டு ஒதுக்கி வைத்ததுதான் காரணம். இவள் இப்படி கோபப்படுவாள் என்று நன்றாகத் தெரியும். ஆனால் அதையும் தாங்கித்தானே தீர வேண்டும். இவர்கள் செய்த கொடுமை அப்படி.

“இவ்வளவு ஏன்? இந்தக் குழந்தை உயிரோடு இருந்தா குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொல்லி இருந்தா என்னை கொன்னே போட்ருப்பீங்க” என்று குமுறினாள்.

“அய்யோ” எனறு பதறியே விட்டார் வேம்பு.

“என்ன நொய்யோ? கண்டிப்பா பண்ணியிருப்பீங்க .இல்லன்னு மட்டும் சொல்லி என் கோபத்தை கிளறாம கிளம்புங்க” என்று கொதித்தாள்.

கோபத்தை இனிமேல்தான் கிளற வேண்டுமாமா? அப்போ இது கோபமில்லையாமா? ஆத்தி! என்னை இவகிட்ட மாட்டி வச்சிட்டு இந்த மாமாவை எங்க இன்னும் காணோம்? அதுதான் தோஷ காலம் முடிந்து விட்டது, இனி தகப்பனும் மகளும் நேருக்கு நேர் சந்திப்பதில் பிரச்சனை இல்லை என்று ஆகிவிட்டதே? பின்னே நேரங்காலம் வருவதற்கென்ன இந்த மனிதருக்கு? என்று பதை பதைத்தார்.

செந்தாமரைக்கு வந்த கோபத்தில் வாய் தாயிடம் சண்டை போட்டாலும் மனம் கதிரவனிடம் வண்டை வண்டையாக சண்டை போட்டது. அது என்ன டிசைனோ? தெரியவில்லை.

ஓஹோ! அதான் பாவப்பட்டு இரக்கப்பட்டு அவளைச் சுற்றி சுற்றி வந்திருக்கிறான் போல! இவனிடம் போய் அவள் கேட்டாளா என்ன? லூசுப்பயல்னு பார்த்தா இவன் நம்மளை லூசாக்கி இருந்திருக்கான். உருப்படாதவன். வளர்ந்து கெட்டவன்.

அன்றைக்கு என்னவென்றால் ‘சொத்தை எப்படி மெயின்டைன் பண்ணுவேன்னு’ கேட்கிறான். இவள் பராமரிக்க எந்த சொத்தும் இல்லை என்று குத்திக் காட்டுகிறானா? அல்லது அவன் சொத்தான ஆனந்தி ஸ்டோர்ஸை இவளால் நிர்வாகிக்க முடியாது என்கிறானா? அவனும் அவன் சொத்தும் !

சும்மாவே அவன் கடையில் பணிபுரிய இவளுக்கு விருப்பம் இல்லை. தன்மீது பச்சாதாபம் கொண்ட அவனிடம் வேலை செய்ய அறவே பிரியமில்லை. என்னவோ அவனிடம் அவளுக்கு சற்று கவுரவக் குறைச்சலாகத் தோன்றியது.
ஆனால் அர்த்தமில்லாத இந்தக் கோபம் ஏன் வரவேண்டும்? அவனிடம் ஏன் கௌரவம் பார்த்தாள்? அவளுக்கே தெரிந்தால் அல்லவா?

தென்னை மரத் தோப்பில் என்ன சொன்னான்? அதை ஏன் இப்போது கேட்டான்? என்று மனது எங்கெங்கோ தாவியது.
“பாப்பா அர்த்தமில்லாம பேசாத பாப்பா. எதுக்கு இவ்வளவு கதை சொன்னேன் உனக்கு? சும்மா சாமியார் சொன்னதை மட்டும் சொல்லிட்டுப் போயிருக்கலாம் இல்லியா? “

“எல்லாம் புரியுது. நீங்க இவ்வளவு பில்டப் செஞ்சதுல இருந்து இந்த நல்ல காரியத்தை அந்த பெரியவர் கஜா சார் தான் செஞ்சிருக்கனும்னு தெரியுது.” என்றவளை வேம்பு வேதனையுடன் பார்த்தார்.

“முழுசும் தெரிஞ்சுட்டுப் பேசுடா” என்றவர் ,” எங்களுக்கும் அவங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே சமயத்துலதான் கல்யாணம் நடந்துச்சு. சில வருஷங்களா குழந்தை இல்லாத சண்முகம் சாமிக்கு முதல்ல கதிரவன் தம்பி பிறந்துச்சு”

“ம்ம். கவின் பிறந்தானா? அவன் தம்பி பிறந்தானா? அடுத்த கதையைச் சொல்லுங்க அம்மா” என்று படபடத்தாள்.

அவளை செல்லமாக முறைத்த வேம்பு தொடர்ந்தார்.

“அவங்களுக்கு அப்புறம் துளசிக்கு ராஜ்கமல் பிறந்துச்சு. “

“சொல்ல வந்ததை சொல்லுங்க” என்றாள் மொட்டையாக.

“இல்லடாம்மா…அம்மாவுக்கு கொஞ்சம் பிராப்ளம் இருந்ததுனால நீ கொஞ்சம் லேட்டாத்தான் பொறந்தே. நீ பொறக்கற வரை கஜா எங்களை கண்டுக்கலை. அவர் ஆண் ஒண்ணு பெண் ஒண்ணுமா குழந்தைகளை பெத்து நல்லாத்தான் இருக்கார். ஆனால் எங்களை கவனிச்சுகிட்டே இருந்திருக்கார். நாங்க பிள்ளை இல்லாம சங்கடப்படவும் அவர் ‘அதுவே போதும்’னு எங்களை விட்டுட்டார். ஆனந்தி அம்மாவைப் பார்க்க வந்தப்போ நீ பிறந்த விபரம் நேரடியா தெரிஞ்சுகிட்டார்.” என்றவர் கொஞ்சம் ஆயாசமாக உணர்ந்தார்.

தாயைக் கவனித்த செந்தாமரை உடனடியாக ஒரு சொம்பு தண்ணீரை அவர் அருகே வைத்து விடடு அவர் அருகே உட்கார்ந்தாள்.

“ரொம்ப கஷ்டப்படாதீங்க அம்மா. உங்க மேல எனக்கு ரொம்ப கோபமில்லை. கொஞ்சம்தான்”என்று சிரிக்கவும் வேம்பு புன்னகைத்தார். அதில் அவர் இவள் பதிலி;ல் ஓரளவு நிம்மதி அடைந்தது தெரிந்தது.

“டீ போடறேம்மா. கொஞ்சம் குடிக்கிறீங்களா?” என்று தாயிடம் அவள் பரிவாக வினவவும் வேம்பு கண் கலங்கி விட்டார்.

‘எப்பேர்ப்பட்ட சொத்து என் மகள்? இத்தனை கேட்டும் என் உடல்நிலையையும் கவனித்து வந்திருக்கிறாளே? ‘ என்று மனம் உருகினார்.

இந்தக் கதையை சொல்ல ஆரம்பித்ததில் இருந்தே தாயின் முகம் கசங்கி தெரிந்ததை செந்தாமரை கவனித்துக் கொண்டே இருந்தாள். எப்படியும் அவள் வீட்டை விட்டு பிரிய காரணமான கதை. அதை சொல்லும் போது தாய் என்ன நினைக்கிறாள் என்பதையும் சேர்த்து அவள் கவனித்தாள். தன்னைப் பிரிந்ததில் இவர்களுக்குப் பெரிய பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ளும் அவளது ‘சவலைப்பிள்ளை ‘ எதிர் பார்ப்பு அது.
தனது பெற்றோரும் தன்னைப் பிரிந்து வாழ்ந்ததில் துன்பப்பட்டு இருக்கிறார்கள் என்பது அவளுக்கு கொஞ்சம் ஆறுதாகத்தான் இருந்தது.

தனது மகள் கன்னத்தை வருடிய வேம்பு உள்ளுக்குள் மகிழ்ந்து போனார்.

‘அப்படியே என்னை உரிச்சு வச்சிருக்கா. நிறம் மட்டும் என்னை மாதிரி மஞ்சளா இல்லாம மாமா மாதிரி நல்ல சிவப்பு. அதுதானே இவளுக்கு செந்தாமரைனு பேர் வச்சேன்? கூடவே என்னை என்னிக்கும் ஆதரிக்கற என் அத்தை கமலத்தையும் போல நல்ல குணமா இருக்கனும்னுதான் இந்தப் பேரை வச்சேன்’ என்று அக மகிழ்ந்தார்.

“அம்மா நான் டீ குடிச்சுப் பழகிட்டேன். அதனால கொஞ்சம் போடறேன். நீங்களும் குடிங்க.” என்று உத்தரவிட்ட மகளை ஏறிட்டுப் பார்த்து மெல்ல சிரித்தார் வேம்பு.

“சரிம்மா” என்று அவரது வாய் தானாக உச்சரித்தது. செந்தாமரை தேநீர் தயாரிக்கச் சென்றாள். வேம்புவின் மனம் பின்னோக்கிப் பயணித்தது.(ப்ளீஸ்!; இந்த ஒரு பிளாஸ்பேக் சொல்லிக்கிறேனே? டியர்ஸ்?)
----------------------------------------------------
திருமலை வேம்புவின் மகளாக செந்தாமரை பிறந்த போது பல துன்பங்களுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கையில் வசந்தத்தைக் கொண்டு வந்த அவளுக்கு ‘வசந்தா’ என்றே பெயர் வைத்தனர்.

பெயர் பெரிதாக இருப்பதாக அப்போது குழந்தையாக இருந்த கதிரவன் சிணுங்கவும் அவளுக்கு செல்ல சுருக்கமாக ‘வது’ என்று வைக்காலாமா? எனறு அவனிடமே கேட்கவும்; ஒரே சந்தோஷம் அவனுக்கு. “பாப்பாவை நான் மட்டும்தான் ‘வது”னு கூப்பிடுவேன்”; என்று உரிமைப் போராட்டம் வேறு.

ஒரு ஏழெட்டு ஆண்டுகாலம் போல நிம்மதியாகவே கழிந்தது. குழந்தைக்கு மூன்று வயதாகும் வரை பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவளை சுற்றி சுற்றி வந்த கதிரவன் அதன் பின் அவளைத் தூக்கிக் கொண்டு பெரியவர்கள் துணையுடன் தோப்புக்கு விளையாடப் போவான்.

அவன் பள்ளியில் கொடுத்த ‘வீட்டுப்பாடம் செய்ய வேண்டாமா?’ என்று கேட்டால் எல்லாம் பள்ளியிலேயே வைத்து முடித்து விட்டதாகக் கூறுவான். அதிகம் இருந்தால் அதிகாலையில் எழுந்து முடித்து விடுவான். அவனுக்கு அப்போது பள்ளியிலேயே டியூசன் வைத்து இருந்ததால் வீட்டிற்கு வந்ததும் அவன் படிப்பு பற்றி பெரிதாக சண்முகம் கவலைப்பட மாட்டார். தவிர அவனும் அப்போது இரண்டாவதோ மூன்றாவதோ தான் படித்துக் கொண்டு இருந்தான் ‘ஏதோ அந்த மட்டும் அவன் தன் தாயை மறந்து சந்தோஷமாக இருக்கிறானே? என்று விட்டுவிடுவார்.

அப்படி நினைத்துதான் பெரியவர்கள் அனைவரும் அவன் செந்தாமரையை தூக்கிக் கொண்டு அலைந்ததை நினைத்தார்கள். ஆனால் தன் தாயின் மீதான அன்பை அந்தக் குழந்தையிடம் வைத்திருப்பான் என்று யாரும் நினைக்கவில்லை. கமலாம்மாவும் வேம்புவும் அவனை எவ்வளவு கவனித்தாலும் அவனுடைய அன்பை அப்படியே பிரதிபலித்தவள் அந்த சின்னக் குட்டி வது தான்.

அவளுக்கு ஒருநாள் பள்ளியில் இருந்து வரும் போது வீட்டுப்பாடம் செய்ய பழைய கணக்கு நோட்டில் பக்கங்கள் தீர்ந்து விட்டபடியினால் தனக்காக அவசரமாக நோட்டுப்புத்தகம் ஒன்றை வாங்கியவன் அதே கடையில் இருந்த உருண்டையான கிலுகிலுப்பையையும் வதுவிற்காக வாங்கிக் கொண்டான்.

அவன் ஊர் பண்ணைக்காரரின் மகன் என்பதால் அவன் படித்த பள்ளிக்கு அருகில் இருந்த சிறிய ஸ்டேஷனரியைக் காட்டி அவனது அப்பா “எதாவது நோட்டுப் புத்தகம்,பேனா, பென்சில் வேணும்னா வாங்கிக்க சாமி. நம்ம கடைதான். “ என்று இவனிடம் சொன்னவர் கடைக்காரனிடம் திரும்பி” தம்பி கேக்கிற பொருள்லாம் குடுங்க. வீட்டுக்கு வந்து காசை வாங்கிக்குங்க” என்று சொல்லிவிட்டுப் போனார்.

இவன் எதாவது வாங்கினால் அவனது தந்தைக்குத் தெரிந்துவிடும் என்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. மற்றபடி இவன் கையில் காசைக் கொடுத்து அந்த கஜா மாதிரி எதனுடைய, யாருடைய முக்கியத்துவமும் தெரியாமல் போய்விடக் கூடாது எனறு நினைத்து சண்முகம் இந்த ஏற்பாட்டைச் செய்து இருந்;தார். கடைக்காரரும் நன்கு தெரிந்தவர், இந்தக் குடும்பத்தின் மீது மரியாதை உள்ளவர் என்பதால் கதிரவன் என்ன வாங்கினாலும் வாங்காவிட்டாலும் அவனைப் பற்றி பெருமையாகவே கூறுவார்.

ஆனால் விரைவிலேயே ஒருநாள் வந்து அவருக்கு வணக்கம் வைத்து விட்டு ,

“எப்பவும் எல்லாப் பசங்களும் ஸ்கூல் விட்டுப் போகும் போது நம்ம கடையில ஏதாவது மிட்டாய் வாங்கி சாப்பிட்டுப் போவுங்க. இல்லன்னா கிழவி கடையில நெல்லிக்காய் மாங்காய்னு வாங்குங்க. வீட்டுல என்ன இருந்தாலும் ஏது இருந்தாலும் சிறுசுகளுக்கு இப்படி எதாவது வாங்கித் திங்கறதுல ஒரு குஷி. ஆனா நம்ம தம்பி இந்த தீனி எதுவும் வாங்காது. பள்ளிக் கூடம் விட்டதும் நம்ம திருமலை அண்ணா கூப்பிட வர்ற வரை நம்ம கடையில வந்து உட்கார்ந்து இருக்கும்.

அண்ணாவும் சட்டுனு வந்திருவார். தம்பி எல்லாரையும் வேடிக்கை பார்த்திட்டு சும்மாதான் இருக்கும். ஏதாவது புக், நோட்டு வேணும்னா மட்டும் திருமலை அண்ணா வந்ததும் அவர்கிட்ட சொல்லிட்டு வாங்கும். அண்ணா கையோட காசு குடுப்பாப்ல. “உங்க அப்பா குடுத்த காசுதான்”னு தம்பி கிட்ட சொல்லிகிட்டேதான் குடுப்பாரு. அதனால இனிமே எதுனா அண்ணாகிட்ட சொல்லவா சாமி?” என்றார்.

திருமலை மீது அதீத நம்பிக்கை உள்ள சண்முகம் தன்னைப் போல சரி என்று தலை ஆட்டினார். அதே நேரம் தன் குழந்தையின் பழக்கவழக்கங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். படிப்பு இரண்டாவது. முதலில் நல்ல பழக்க வழக்கங்கள் இருகக வேண்டும் என்பது அவரது கருத்து.

அன்று அவன் வாங்கிய கிலுகிலுப்பையும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு மட்டும் அவன் தன் உண்டியல் காசை கொடுக்கவும் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.

“பாப்பாவுக்கு நான் கிப்டே குடுக்கல. அவ பிறந்தப்போ குடுத்தா அவளுக்கு தெரிஞ்சிருக்காது. இப்ப குடுத்தா நியாபகம் இருக்கும் இல்ல? அதான் அவளுக்கு குடுக்க உண்டியல்ல காசு சேர்த்தேன்” எனவும் சண்முகம் அத்தனை சந்தோஷப்பட்டார்.

“என் பயலுக்கு எத்தனை அறிவு? நீ பொழச்சுக்குவ.” என்று மகிழ்ந்து தள்ளினார்.

இவன் கிலுகிலுப்பையைக் கொண்டு போய் கொடுக்கவும் வதுக்குட்டி தன் இரண்டு பற்களைக காட்டிச் சிரித்து விட்டு அவன் கன்னத்தில் தன் முதல் முத்தத்தைப் பதித்தாள்!. பார்த்துக் கொண்டு இருந்த வேம்பு மெல்ல அதிர்ந்தார்.

ஆனால் கதிரவனோ அத்தனை ஆனந்தப்பட்டான். அவன் அன்னை ஆனந்திக்குப் பிறகு அவனை முத்தமிட்ட ஒரே ஜீவன் வதுக்குட்டிதான். அதன் பிறகு அவனுக்கு எல்லாமே அவளானாள். அது வரை அவளை திருமலையின் குழந்தையாகப் பார்த்தவன் அதன்பின் தன் சொந்தமாகப் பார்த்தான்.

என்னதான் குழந்தையாக இருந்தாலும் பல பிரச்சனைகளை இது விசயத்தில் சந்தித்து இருந்த வேம்பு சற்று கலங்கினார். முடிந்த அளவு இருவருக்கும் உள்ள வேறுபாட்டை அவனுக்குப் புரிய வைக்க முயன்றார்.எதையும் முளையிலேயே கிளன்ளி விடுவது நல்லது அல்லவா? “கண்ணு, பாப்பா தூங்கனும். நீ போய் உன்ற செட் பசங்களோட விளையாடுப்பா. நாளைக்கு வளந்து பெரிய ஆளாகி அத்தனை சொத்து பத்தையும் பராமரிக்கப் போறவன் நீதான்யா. உன்ற ஐயா பேரைக் காப்பாத்தனும் சாமி. “ என்று அவ்வப் போது அவனை கிளப்பி விட்டால, அவன் திருமலையின் சிhரிசோடு வந்து நிற்பான்

“பாப்பா தூங்கட்டும். நான் பக்கத்திலேயே இருக்;கேன்” எனபான். தூய் இல்லாத அந்தக் குழந்தையை வேறு எனனதான் செய்வது? என்றும் அவளுக்குப் புரியவில்லை.

சரியாக பேச்சு வராத வதுக்குட்டி கதிரவனை ‘கவின்’ என்று அழைத்து புண்ணியம் கட்டிக் கொண்டாள்.அப்புறம் அப்படியே அழைத்துப் பழகிவிட்டாள்.

அவளும் அவனுடனே வளர்ந்தாள். இருவுரும் பேரைச் சொல்லி அழைத்துக் கொள்வார்கள். கதிரவன் எப்Nபுhதாவது பிறரிடம் அவளைப் பற்றிப் பேசும் போது ‘பாப்பா’ என்பான். அவளுக்கு எப்போதும் கவின்தான்.

வதுக்குட்டியையும் கதிர் படித்த பள்ளியிலே சேர்க்கவும் இருவரும் ஒனறாக பள்ளிக்குச் சென்று வந்தனர். திருமலை குழந்தைகளை பள்ளியில் விடுவதும் அழைத்து வருவதுமான வேலைகளை செய்வார்.
வதுக்குட்டிக்கு ஒரு எட்டு வயது இருக்கும் அப்போது. கொஞ்சம்விபரம் தெரியும் வயதுதான். கதிரவனுக்கு பதினைந்தோ பதினாறோ இருக்கும். புத்தவது முடிதது விட்டு லீவில் இருந்தான்.
எல்லோரும் ஒன்றாக வெளியே போய் பல வருடங்கள் ஆகிறது. முன்பு பிள்ளைகள் சிறியவர்கள் . இபபோதாவது பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்லலாம் என்று சண்முகத்தின் தென்னை மரத் தோப்பு ஒனறிற்கு பிக்னிக் செல்ல கமலாம்மாவும் Nவும்புவும் ஏற்பாடுகளை செய்தனர்.
சாப்பிட, குடிக்க ,நொறுக்க, ஓய்வெடுக்க என்று அனைத்து தேவைக்கான பொருட்களையும் தயார்ப்படுத்தியவர்கள் சண்முகத்தின் காரில் தென்னந்தோப்பை சென்று அடைந்தனர்.
பருவ வயதில் இருந்த கதிரவன் அவன் வயதிற்கு ஏற்றவாறு பல விசயங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும் பலருடன் பழகினாலும் அவன் அன்பு வதுக்குட்டியிடம்தான் நிலைபெற்று இருந்தது. அப்போது வாங்கியிருந்த ரூபிக்ஸ் க்யூபை விளையாடியபடி வண்டிக்குள் உட்கார்ந்திருந்த அவனை “என்கிட்ட பேசாம என்ன செய்யறே கவின்?” என்று தொணதொணத்தபடி வந்தாள் வது.

தோட்டத்திலும் அவன் கட்டங்களை மாற்றி விளையாடிக் கொண்டே இருக்க வதுவிற்கு பொறுமை பறந்தது. “கவின்” என்று பல்லைக் கடித்தாள்.
“பாரு எங்க அப்பா அம்மாகிட்ட எவ்வளவு நல்லா பேசறாரு? நீ ஏன் என்கிட்ட பேச மாட்ற?” எனவும் சிரித்துவிட்டான். அதைக் கண்டு கூம்பிவிட்ட அவள் முகத்தை வருடி ,

“உங்க அப்பா உங்க அம்மாவை கல்யாணம் செய்திருக்காரு. அதனால பேசறாரு. நீயும் என்னை கல்யாணம் செய்துக்கோ. நான் உன்கிட்ட மட்டும் பேசிட்டே இருக்கேன்” என்று அறியாத பருவத்தில் – அறியாத வயது அல்ல- அறியாத பருவத்தில் அவன் சொன்னதை காலிப் பாத்திரங்களை கழுவ வந்த வேம்பு கேட்டு அதிர்ந்தார்.

இனியும் இதை இப்படியே விட அவருக்கு மனமில்லை. ஆயிரத்தில் ஒரு சதவீதமாக ஒருவேளை இது நடந்தாலும் கஜாவின் குடும்பத்தில் இருக்க அவருக்கு முடியாது. என்னதான் இருந்தாலும் இவனுடைய தாய்மாமன் கஜா. எனவே அவர் யோசிக்க ஆரம்பித்தார்.
அதில் அவர் கண்ட முடிவுதான் கற்பகம் வீட்டில் குழந்தையை விடுவது. ஆனால் என்ன சொல்லி விடுவது? இப்படி என்று சொன்னால் சிரிப்பார்கள். இதெல்லாம் ஒரு விசயமா? என்பார்கள். அப்படியே நடந்தாலும் சரிதான் என்று சொல்லிவிட்டால் வம்பாகிவிடும்.
அப்படி அவர் மனம் உளைந்து கொண்டிருந்த போதுதான் கதிரின் மேற்படிப்பு விசயமாக அப்போது அங்கே பிரபலமாக இருந்த சாமியாரிடம் ஜோசியம் கேட்கப் போவதாக சண்முகம் சொன்னார்.

“ஒரே பையன். என்ன படிச்சா நல்லா இருக்கும்னு வாத்தியார்கிட்ட கேட்டேன். அவனுக்கும் பிடிச்ச படிப்புதான். கணக்கு குரூப்தான் எடுப்பேன்கிறான். இன்சீனியருக்குப் படிக்கப் போறானாம். எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுட்டா மனசுக்கு நிம்மதியா இருக்கும் “ என்றார்.
“வேணாங்க ஐயா. அவர் வேற ஏதாவது சொல்லிட்டா சங்கடமா போவும். நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க. தம்பி நல்லா படிச்சு நல்லா வரும்” என்று திருமலை சொல்ல,

“அதுவும் சரிதான். அப்ப ஒண்ணு பண்ணலாம். நீங்க ரெண்டு பேரும் போய் கேட்டுட்டு வாங்க. நல்லதா இருந்தா சொல்லுங்க. இல்லனா அதுக்கேத்த மாதிரி தயாரா இருந்துக்கலாம். நேரடியா கேட்கிற கஷ்டம் எனக்கு இருக்காது. என்ன சொல்றே?” என்றார் சண்முகம்.

அதன்படி சென்றவர் வேம்பு மட்டுமே. கதிரவனுக்கு நல்லபடியாகச் சொன்னவர், வேம்பு தன் கலக்கத்தினால் கொண்டு வந்திருந்த வதுக்குட்டியின் ஜாதகத்தைப் பார்த்து “இந்தக் குழந்தை அசலார் வீட்லதான் வளரும். வாழ்க்;கைபடப் போற இடம் வசதியா இருக்கும்” என்று ஒரு பஞ்ச் டயலாக் பேசவும் அதிர்ச்சியாக இருந்தாலும் வது கதிரவனுடன் சேர்ந்து வளருவதை அவர் விரும்பவில்லையாதலால் அதனை யோசிக்காமல் ஏற்றுக் கொண்டார். கூடவே அந்தக் குழந்தை தன் தகப்பனுடன் வாழ்ந்தால் அவருக்கு ஆயள் குறையும் என்றும கூறவும் முடிவே செய்து விட்டார்

இதற்கு பின்னால் கஜா இருந்தாரோ? இல்லையோ? அதை அவர் பெரிதுபடுத்தி யோசிக்கவில்லை. தனது மகள் பிற்காலத்தில் எந்த மன உளைச்சலுக்கும் ஆளாகக் கூடாது என்றால் அவளை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த அந்த சூடுபட்ட பூனை மனம் நினைத்தது.

பெற்ற தாயே சொல்லவும் அவளை மீறியா தனக்குக் குழந்தை மீது பாசம் இருந்து விடப் போகிறது? என்ற மூட நம்பிக்கையில் திருமலையும் அரைகுறையாக தலையாட்டவும் கமலாம்மாவிடம் அவரது மகனுக்காக என்று வாயை அடைத்து வதுக்குட்டியை திருநெல்வேலிக்கு அவள் மலங்க மலங்க விழிக்க அதைக் கண்டு கொள்ளாமல் இதயத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.

ஏழு வருட தவத்திற்குப் பிறகு கிடைத்த தன் செல்ல அழகு மகளை தான் பட்ட துன்பம் அவளையும் நெருங்கவிடக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டும் பிரியத் துணிந்தார் வேம்பு. தனது மகனுக்கு ஆபத்து என்கவும் கமலாம்மா சம்மதித்துவிட்டார்.

வதுக்குட்டி அவளுக்கு இவர்கள் வைத்த பெயருக்கேற்ற மாதிரி வாழ முடியவில்லை. அந்தப் பெயரே அவரை உறுத்தவே நானும் பெயர் வைப்பேன் என்று ஊடாடிய தன் கணவனை சமாதானப் படுத்தி இந்த சேற்றில் முளைத்த அவளுக்கு செந்தாமரை என்று பெயர் வைத்து போராடி கெஜட்டில் பதிவும் செய்துவிட்டார்.

இப்போது…
 
SM Support Team

Administrator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
71
Reaction score
655
Points
83
இத்தனையும் சொன்னால் மகளது மனநிலை என்ன ஆகும் என்று தெரியாது. கதிரவனுக்கு அவன் தாய் மாமா மகளை மணமுடிக்க பேசுகிறார்கள். அந்தத் திருமணம் முடிந்தபின் இவளிடம் இந்தக் கதையை சொல்லிக் கொள்ளலாமா? என்று ஒரு கணம் யோசித்தவர் தனது முடிவை கொஞ்சமாக மாற்றிக் கொண்டார்.

மெதுவாக தேநீரை அருந்தியவர் அந்த நேரத்திற்குள் தன் மகளிடம் சொல்ல வேண்டிய விசயத்தை முடிவு செய்தார். சும்மா ஒரு கோடி காட்டி விட்டு விட்டுவிடலாம். மகள் புரிந்து கொள்வாள் என்று முடிவு செய்தார்.

“பாப்பா”

“ம். சொல்லுங்க”

“வந்து… அந்தத் தம்பி .. கதிரவனோட சேர்த்து எதாவது யாராவது சொல்லிட்டா பெரிய சங்கடமாயிடும். அதான் இதை சாக்கு வச்சு உன்னை அனுப்பிட்டேன்” என்று கஷ்டப்பட்டு எச்சில் விழுங்கினார்.

முதலில் புரியாவிட்டாலும் சற்று புருவத்தை நெறித்து யோசித்துப் புரிந்து கொண்டவள் பொரிந்தாள்.

“சும்மா உளறாதீங்கம்மா. இதுல்லாம் ஒரு காரணமா? ஊர் உலகத்துல இவனை விட்டா வேற ஆம்பளைங்களே இல்லியா? திருநெல்வேலிக்குப் போன இடத்துல அப்படி எதாச்சும் பேச்சு வந்திருந்தா என்ன செய்திருப்பீங்க? நீங்களும் உங்க லாஜிக்கும்?”

ஆனால் அப்போது அவருக்கு அதுதான் சரியாகப்பட்டது என்று சொன்னால் இப்போது இவளுக்குப் புரிந்து கொள்வது சிரமம்தான். அன்றைய சூழ்நிலை , மக்கள் அப்படி. இப்போது இருக்கும் சூழ்நிலை வேறு.

“ச்சே ச்சே. அப்படி இல்லடா. இந்தக் குடும்பத்து ஜனங்க யாரும் உன் வாழ்க்கையில வர்றது எனக்கு; பிடிக்கலைடா. எப்டியும் ஏதாவது விசேஷத்துல ஒருத்தரை ஒருத்தர் பார்க்கணும். வீணாண மன உளைச்சல்தான் வரும். உன்னால சமாளிக்க முடியாது.”

“எது எப்படியோ இப்ப எங்க கஷ்ட காலம் முடிஞ்சிருச்சு போல. உன்னோட இருபத்தோரவது வயசில இந்த நிலமை மாறும்னு சொன்னார் அந்த சாமியார். இப்ப அந்தத் தம்பிக்கு வேற இடத்துல கல்யாணம் முடிவாயிடும் போல இருக்கு. நாம இனி நிம்மதியா இருக்கலாம்.” என்றதும் முறைத்தாள்.

“எதாவது சொல்லிடப் போறேன். விட்ருங்க. அந்த கவி…..கதிரவனை நான் பெரிய ஆளா இதுவரை நினைக்கலை. இனியும் அப்படித்தான். ஆனா இனி உங்க கூட இருக்க முடியும்னும் தோணலைமா” என்ற போது வேம்பு பெரிதாக அதிர்ந்து விடவில்லை. எப்படியும் கல்யாணம் செய்து கொண்டு இன்னொரு வீட்டிற்குப் போகப் போகிறவள் தானே? என்று தேற்றிக் கொண்டார். ஒரு பேரன் பேத்தி பிறந்தால் மகள் சமாதானமாகி விடுவாள் என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டார்.

“நான் செஞ்சது தப்புதான் பாப்பா. அப்ப எனக்கு இது சரின்னு தோணுச்சு. என் கதையில துளசி பட்ட கஷ்டம் அதிகம். என்னால இந்தக் கஷ்டம் அவளுக்கு வந்திருச்சேன்னு நான் எத்தனை நாள் கவலைப் பட்டிருக்கேன் தெரியுமா? அவ நல்லா இருக்கறதா தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் நான் நிம்மதியா இருந்தேன். இந்தக் கவலையும் என் உடம்பை பாதிச்சிருக்கலாம். விடு பாப்பா. இப்ப படிக்கிற வழியப் பாரு. அப்புறம் நீ ஒரு வேலைக்கு..”

“அடாடா. அம்மா அப்பா என்னை அந்தக் கதிரவன் கிட்ட வேலை செய்ய சொல்லி இருக்கார்மா” என்று நக்கலாக செந்தாமரை சிரிக்கவும் வேம்பு தலையில் அடித்துக் கொண்டார்.

இவருக்கு வேறு வேப்பிலை அடிக்க வேண்டுமா?

செந்தாமரைக்கு தன் தாய் அவளது எதிர்காலம் குறித்து பயந்து கொண்டு நிகழ்காலத்தை பாழாக்கியது புரிந்தது. முற்றிலுமாக பாழ் என்று சொல்ல முடியாது. கற்பகம் பாட்டியும் செல்வா அண்ணனும் அவளை இவர்கள் நெல்லைக்கு அனுப்பியதால் கிடைத்த சொந்தங்கள் அல்லவா?

உறுதியில்லாத ஒரு புரளிக்காக மட்டும் இந்தப் பாடு என்று சொல்லிவிட முடியாது. அவரது கணவர் மேல் அவர் வைத்திருந்த பிள்ளையை விடப் பெரிதான நேசமும்தான் காரணம் என்று நினைத்தாள். இவர் இத்தனை கதை சொல்லியும் இந்தக் கடைசி வரிதான் உண்மை என்று தோன்றியது. கொஞ்சம் பெருமையாகவும் கொஞ்சமே கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது.

இப்படிப்பட்ட – தன் துணைக்காக எதையும் இழக்க தயாரான பிரியம் அவள் மீது வேறு யாராலும் வைக்க முடியும் என்று தோன்றவில்லை.
சொந்த வீட்டில் அவள் மூன்றாம் மனுசியாக உணர்ந்தாள். அப்படி அவள் நினைத்துவிடக் கூடாது என்றுதான் இத்தனை கதையையும் சொல்லி இருந்தார் வேம்பு. பிடிவாதக்கார அந்தக் குழந்தைக்கு அதுவும் தப்பாகத்தான் தோன்றியது.

செந்தாமரை மலர் கூம்பியது. அது கதிரவனைப் பார்த்து மலருமா?
------------------------------------------------

கள்ளிப்பட்டி முருகன் கோவில் வாசலில் தன் செருப்புகளை விட்டாள் வந்தனா. யாசின் பெரியம்மாவிடம் லிப்ட் வாங்கி வந்திருந்தாள். படிக்க ஆரம்பிப்பதற்கு முன் கடவுளிடம் ஆசீhவாதம் வாங்க வந்திருப்பதாக ஒரு கதை வேறு சொல்லி இருந்தாள். “ இன்னும் படிக்க ஆரம்பிக்கலியா?” என்ற கேள்விக்கு “ அதுக்குள்ள யாராச்சும் படிப்பாங்களா?” என்று எதிர்க் கேள்வி கேட்டு யாசின் பெரியம்மாவை விழிக்க வைத்திருந்தாள்.

அவளை இறக்கி விட்டு விட்டு கசாப்பு கடைக்கு வண்டியைத் திருப்பினார் யாசின். காலையிலேயே திருமதி நீலா சுந்தரம் – வந்தனாவின் அம்மா – மகளுக்காக மட்டன் பிரியாணி செய்துதர வேண்டியதுடன் தேவையான பொருட்கள் வாங்கியும் கொடுத்திருந்தார். மட்டனைத் தவிர. அதை மட்டும் “நீங்களே பார்த்து வாங்குங்க மாமி” என்று சொல்லி பணமும் கொடுத்து இருந்தார்.

“இன்னிக்கு உங்க அம்மா என்னை மட்டன் பிரியாணி செஞ்சு தர சொல்லியிருக்கா. உனக்குப் பிடிக்குமேன்னுதான். ஆனா.. நீ… சாப்பிடுவியா?”

“ஒய் நாட் பெரியம்மா? சாமி கும்பிட்டு முடிச்சதும் நான்வெஜ் சாப்ப்pடலாம். தப்பில்லை”

யாசின் வண்டியைக் கிளப்பியதும் அவள் எதிரே வந்து குதித்தான் ராஜ்கமல்!

திகைத்து விழித்தாலும் மனதின் ஓரம் நிம்மதி வந்து சேர்ந்தது அவளுக்கு. அவனும் அவளை நினைத்திருப்பானா? ச்சே ச்சே தப்பாக ஒன்றும் இல்லை என்று தனக்கு தானே தேறுதல் சொல்லிக் கொண்டவளைப் பார்த்து,

“என்ன இன்னிக்கு ஒரு பாட்டும் பாடலியா?” என்றான்.

“அதுல்லாம் உங்களுக்கு எதுக்கு? “ என்று முறைத்துக் கொண்டே படியேறினவளை அவனும் பின் தொடர லேசாகத் திரும்பிப் பார்க்கவும், “இது கோவில்மா வந்தனா. யாரும் வரலாம் போகலாம்” என்றான்.

“இவனைப் போய் பார்க்க வேண்டும் என்று தோன்றியதே? என்று கோபம்தான் வந்தது. என்னா தெனாவெட்டு? ஆனால் அந்தத் தெனாவெட்டு அவளுக்காகத்தான் என்று புரியவில்லை அந்த லூசுக் குட்டிக்கு.

“டிங்டாங் கோயில்மணி கோயில்மணி நான் கேட்டேன்
என் பேர் உன் பெயரில் சேர்ந்ததுபோல் …..”

என்று பக்கத்து டீக்கடையில் பாடல் கேட்கவும் சட்டென்று ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

“ஆமா உங்க பேரு என்ன?” என்று முதல் அடியை எடுத்து வைத்தாள் வந்தனா.

“ராஜ்கமல்” என்று அவள் அவனிடம் பெயர் கேட்டதே அவார்டு வாங்கியதைப் போன்ற பெருமையில் பதில் இளித்தான்!

அவனது ராஜ் என்ற ஆரம்ப வார்த்தையை கேட்டதும் அவளறியாமல் அவளது வாய்

“ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் …” என்று ஆரம்பித்து அச்சச்சோ பாவனையில் நிறுத்த

“காதல் தேசம் நீதான்” என்று முடித்து வைத்தான் ராஜ்கமல்!.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top