• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓ மை ஏஞ்சல் -- அத்தியாயம் 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
962
Reaction score
113,429
Location
anywhre
வணக்கம் டியர்ஸ்,

omy.jpeg

அத்தியாயம் 6

சென்னை செண்ட்ரல் ரயில் நிலைய பத்தாவது ப்ளாட்பாரத்தில் நின்றிருந்தாள் தேவதா. அவளோடு ரயில் வரும் பாதையைப் பார்த்தபடி நின்றிருந்தான் சங்கத்தமிழன்.
அவனது கையைப் பற்றிய தேவதா,
“வீட்டுல திட்ட மாட்டாங்களா சங்கு?” எனக் கேட்டாள்.
“என்னையா? திட்டறதா? அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னைப் பார்த்து விளையாட்டா திட்டக் கூட மனசு வராது ஏஞ்சல்! அவங்க ப்ரின்ஸ் நானு! எது செஞ்சாலும் அதுக்கு காரணம் இருக்கும்னு புரியும்! உன்னைப் பத்தியும் அவங்களுக்குத் தெரியும்! ராத்திரி ட்ரைன்ல எப்படி உன்னைத் தனியா கோவை வரைக்கும் அனுப்பறது! அதான் நான் கூடப் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டேன்! ஓகேன்னு தலையாட்டிட்டாங்க! என் தங்கச்சி மலர் இருக்காளே, அவளும் வரேன்னு நின்னா! நான் என்ன ட்ரீப்கா போறேன்! இன்னொரு தடவை கூட்டிப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன்” எனப் புன்னகைத்தான் இவன்.
“உன்னோட ஃபேமிலி செம்ம ஸ்வீட் சங்கு”
“உதை வாங்கப் போற நீ” எனக் கடுகடுத்தான் இவன்.
“ஏன்???”
“அது என்ன உன்னோட ஃபேமிலி? நம்மளோட ஃபேமிலினு சொல்லு!” என்றான் இவன்.
முகம் மலர, இன்னும் நெருங்கி நின்றாள் இவள்.
“கீப் டிஸ்டன்ஸ்!” என முறுக்கிக் கொண்டான் தமிழ்.
“சங்கு! என் செல்லம்ல! ஐம் சாரி! இனிமே இப்படி பிரிச்சுப் பேச மாட்டேன்!”
“நான் சட்டுன்னு கமிட் ஆக மாட்டேன் ஏஞ்சல்! கமிட் ஆகிட்டா ஹண்ட்ரெட் பெர்ஸண்ட் குடுப்பேன்! வேலையாகட்டும், இல்ல உறவாகட்டும்!”
முந்தைய தினம் மோதிரம் மாற்றி காதல் சொல்லி முடித்து, இவள் ஹாஸ்டல் அறைக்குப் போன நொடி, இவளது அப்பா தேவராஜீடம் இருந்து போன் வந்திருந்தது. தாத்தா இவளைப் பார்க்க ஆசைப்படுவதாகவும், மறுநாளே கிளம்பி வா என்றும் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார் அவர்.
உடனே இவள் சங்கத்தமிழனுக்கு அழைத்து விட்டாள்.
“என்னடா! அதுக்குள்ள என்னை மிஸ் பண்ணுறியா?”
“என் பக்கத்துல இல்லாத எல்லா நொடியும் உன்னை மிஸ் பண்ணிட்டுத்தான் இருப்பேன் சங்கு! இது வேற விசயம்”
“என்னாச்சு ஏஞ்சல்?”
“அப்பா நாளைக்கே கிளம்பி கோவைக்கு வர சொல்லிருக்காரு! குரல் வேற சரியில்ல அவருக்கு! ட்ரேன் டிக்கேட் வாங்கற முன்னுக்கு உன் கிட்ட சொல்லிடனும்னுதான் போன் பண்ணேன்”
“மாமா ஏன் திடீர்னு வர சொல்லிருக்காரு?”
“மாமாவா?” என அதிர்ச்சியானாள் இவள்.
அந்த பக்கம் சற்று நேரம் அமைதி.
“சங்கு?”
“ஹ்ம்ம்”
“என்ன சைலண்டாகிட்டீங்க?”
“உங்கப்பாவ நான் மாமான்னு கூப்பிட்டதுல உனக்கு ஏன் இவ்ளோ அதிர்ச்சி?”
“இப்போத்தான் மோதிரம் போட்டு விட்ட நீ! உடனே எங்கப்பாவ மாமான்னு நீ மென்ஷன் பண்ணா எனக்கு ஜெர்க் ஆகுமா ஆகாதா!!! கொஞ்சம் டைம் குடு மேன்”
“நான் படிச்சு முடிக்கனும், அப்பா கன்சர்ன்ல புகுந்து செட்டிலாகனும்! நீயும் படிச்சு முடிக்கனும்! உனக்குப் பிடிச்சது போல எதாவது வேலைக்கு சேரனும்! நீ செட்டிலான அடுத்த செகண்டே நாம ரெண்டு பேரும் லீகலா ஃபேமிலியா ஆகற வேலையப் பார்க்க ஆரம்பிச்சிடுவேன்! அதன் பிறகு இந்த சாங்கியம், சடங்கு, தாலி, இதெல்லாம் நம்ம பெத்தவங்களோட சாய்ஸ்! அதெல்லாம் நடக்க பல வருசங்கள் எடுக்கலாம்! நாம இப்போதிலிருந்தே இதுக்கெல்லாம் நம்மள தயார்ப்படுத்திக்கனும் ஏஞ்சல்! இந்த நொடி என் மனசுல நீ என்னோட மனைவியாத்தான் பதிஞ்சு இருக்க! அதை காட்டத்தான் உன்னோட பிள்ளையார் முன்னாடி நமக்குள்ளயே ஒரு குட்டி ஒப்பந்தமா மோதிரம் மாத்திக்கிட்டோம்! சோ, நான் மனைவியா நெனைக்கற உன்னோட அப்பா எனக்கு மாமாத்தானே?” எனப் பெரிதாய் விளக்கம் கொடுக்க, இவளுக்கு மனம் நெகிழ்ந்து விட்டது.
“சங்கு!”
“ஹ்ம்ம்”
“நான் வேணும்னா நம்ம உறவுக்கு ஆரம்பப்புள்ளிய வச்சிருக்கலாம். ஆனா நீதான் அதை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துட்டுப் போயிருக்க! எனக்கு சந்தோஷத்துல பேச்சே வரல சங்கு!”
“இனிமே எதிலயும் என்னைத் தள்ளி வைக்கக் கூடாது! ஊருக்குப் போறேன்னு லாஸ்ட் மினிட்ல சொல்லாம, டிக்கேட் போடற முன்னே கால் பண்ணதுனால உன்னை மன்னிச்சி விடறேன்! சரி விஷயத்துக்கு வா! மாமா எதுக்கு வர சொன்னாரு?”
“தாத்தாவுக்கு அடிக்கடி உடம்பு முடியாம போகும்! வயசாச்சில்ல! எப்பவும் உள்ளதுதானேன்னு தாத்தாவுக்கு இப்படி இருக்குமான்னு மட்டும் போன் போட்டு சொல்வாரு! இந்த முறைதான் வர சொல்லுறாரு! கொஞ்சம் சீரியஸ் போல! ஆனா என் கிட்ட காட்டிக்கல உங்க மாமா”
உங்க மாமா எனும் பதத்தில் புன்னகை வந்தது இவனுக்கு.
“சரி! நான் டிக்கேட் போடறேன் தேவதா”
“ஏன்? இத்தனை வருஷம் நான் டிக்கேட் போட்டு போய்ட்டு வரலயா? முன்னாடியே சொல்லிருக்கேன்! நான் குடுக்கனும், நீ எடுக்கனும் பாலிஸிலாம் வேணாம்னு”
“நமக்கு டிக்கேட் நான் எடுக்கறேன்! சாப்பாடு வேணும்னா நீ பார்த்துக்கோ”
“நமக்கா?”
“எஸ்! நமக்குத்தான்! தனியா போக வேணாமே! நானும் துணைக்கு வரேன்”
“ஹலோ!!!!”
“புரியுது! இத்தனை நாளா தனியாத்தானே போனேன்!!! அதானே!!! அப்போ நீ தேவதா தேவராஜ்! இப்போ தேவதா சங்கத்தமிழன்! தனியாலாம் அனுப்ப முடியாது”
“ஓவர் பிடிவாதம் சங்கு உனக்கு”
“இருந்துட்டுப் போகுது”
“சரி வாங்க! டிக்கேட் போட்டுட்டு டீட்டேய்ல் அனுப்புங்க! பாய்”
“லவ் யூ ஏஞ்சல்”
“சொல்லமாட்டேன்! கோபமா இருக்கேன்”
அந்தப் பக்கம் சிரிப்புச் சத்தம் கேட்டது.
“நான் செம்ம அடமண்ட் தெரியுமா! உனக்காகத்தான் நெறைய விட்டுக் குடுக்கறேன் தேவதா! ப்ளீஸ்! கோபப்படாத!”
“இண்டிபெண்டனா இருக்கனும்னு பழக்கப்படுத்தப்பட்டிருக்கேன் சங்கு! சட்டுன்னு டிபெண்டனா இருக்க வரல! ஆனாலும் எனக்குன்னு செய்ய ஆள் இருக்குன்னு நெனைக்கறப்போ சந்தோஷமாத்தான் இருக்கு! கிவ் மீ சம் டைம் டு அட்ஜஸ்ட் சங்கு”
“கண்டிப்பாடா! இப்போ லவ் யூ சொல்லு”
“ஐ லவ் யூ சங்கு” எனப் புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
இவள் சங்கத்தமிழனின் தாடையைப் பிடித்துக் கொஞ்சி கெஞ்சி மலை இறக்கவும், சேரன் எக்ஸ்பிரஸ் வந்து சேரவும் சரியாக இருந்தது. பண்டிகை தினங்களாக இல்லாமல் இருக்க, பயண சீட்டு எடுப்பதில் சிரமம் இருக்கவில்லை இவனுக்கு. ஏசி கோச்சில் மேலும் கீழும் பெர்த் எடுத்திருந்தான் இருவருக்கும். உள்ளே சென்று சீட்டுக்குக் கீழே பேக்கை வைத்து விட்டு, ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள் இருவரும்.
கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். இவர்கள் பக்கத்து பெர்த் இரண்டுமே காலியாகத்தான் இருந்தது. ஆனால் நடைப்பாதைக்கு அந்தப் பக்கம் இருந்த சீட்டில் வயதான கணவன் மனைவி இருவர் வந்து அமர்ந்தார்கள். இவர்களைப் பார்த்து அவர்கள் புன்னகைக்க, இவர்களும் புன்னகைத்து வைத்தார்கள். சிறிது நேரம், எந்த ஊர் எங்கே போகிறார்கள் எனப் பேச்சு வார்த்தை நடந்தது. தன் மனைவி என்றே தேவதாவை அறிமுகப்படுத்தினான் சங்கத்தமிழன். அவனது உரிமை உணர்வு இவளுக்கும் இனிக்கவே செய்தது.
டி.டி.ஆர் வந்து பயணச் சீட்டைப் பரிசோதித்து விட்டு செல்லும் வரை காத்திருந்தார்கள் அந்த வயதானவர்கள். அதன் பிறகு அந்த கணவர் மேல் பெர்த்தில் படுத்துக் கொள்ள, மனைவி கீழ் பெர்த்தில் படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் மெல்லிய குறட்டைச் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது.
இவன் தனது பேகில் இருந்து, கனமான சால்வை ஒன்றை எடுத்து, தேவதாவுக்குப் போர்த்தி விட்டான். அவளோ அவளது பேக்கில் இருந்து தனது ஸ்வெட்டரை எடுத்து அவன் மேல் போட்டு நீளக் கையை கழுத்தில் கட்டி விட்டாள். மீண்டும் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டார்கள்.
“நாமளும் பல வருஷம் கடந்து இப்படி ஆகிருவோம்ல” என அந்த வயதானவர்களைக் காட்டிக் கேட்டான் சங்கத்தமிழன்.
“ஆக மாட்டோம்”
“ஏன்டி?”
“அந்த பாட்டி, தாத்தாவுக்கு குளிருமேன்னு ஒரு ஸ்வெட்டர் கூட எடுத்துக் குடுக்கல! அந்த தாத்தாவோ, பாட்டிக்கு சீட்ட அட்ஜஸ்ட் பண்ணி படுத்துக்க ஹெல்ப் பண்ணல! அவங்கவங்க வேலைய அவங்கவங்க பார்க்கறாங்க! நாம அப்படி இருக்க மாட்டோம் சங்கு டியர்! எனக்கானத எல்லாத்தையும் செய்யனும்னு நீ ஒத்தக் காலுல நிப்ப! என் சங்குக்குத் தேவையானத நான்தான் செய்வேன்னு நானும் நிப்பேன்!” எனச் சொல்லி முறுவலித்தாள் தேவதா.
இவனும் புன்னகையுடன் அவள் கைப்பற்றிக் கொண்டான்.
“பசிக்குதா சங்கு?”
 
vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
962
Reaction score
113,429
Location
anywhre
“லேசா! அசைண்ட்மேன்ட் பெண்டிங் இருந்தது! அவசரமா முடிச்சிட்டு இமேயில் பண்ணிட்டு ஓடி வரேன்! அம்மா அரக்கப் பறக்க ரெண்டு இட்டிலி ஊட்டி விட்டாங்க! அது ரயில் ஸ்டேசன்ல நடந்ததுலேயே கரைஞ்சிடுச்சு!”
“நான் வர வழில உங்களுக்கு பிரியாணி ஒரு பாக்கேட் வாங்கிட்டு வந்தேன். எனக்கு ரெண்டு இட்லி!” என்றவள் உணவை எடுத்துப் பிரித்து வைத்தாள்.
“நீ போய் கை கழுவிட்டு வா! பிறகு நான் போறேன்” என்றான் இவன்.
இவள் எழுந்து போகவும், மர்மப் புன்னகை இவன் முகத்தில். திரும்பி வந்தவளிடம்,
“கால் வலிக்குது ஏஞ்சல்! நடந்து போய் கை கழுவ முடியுமான்னு தெரில! நீயே ஊட்டி விட்டுடேன்” எனப் பாவமாய் கேட்டான்.
“ஊட்டி விடனும்னா நேரா கேளுடா சங்கு! இப்படிலாம் ட்ரிக் பண்ண வேணா” என்றவள், அவனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.
“நீயும் ரெண்டு வாய் சாப்பிடு!”
“தூரப் பயணத்துக்குலாம் நான் ஹெவியா சாப்பிட மாட்டேன் சங்கு!”
“ரெண்டு வாய்தான்!” என உணவை அள்ள வந்தவன் கையில் ஒன்றுப் போட்டாள் இவள்.
“கைய கழுவாம சாப்பாட்டுல கை வச்சா, பேஜாராகிப்புடும் பார்த்துக்கோ” என மிரட்டியவளை, சிரிப்புடன் பார்த்தான் இவன்.
“ரொம்ப வயலன்ஸா பிகேவ் பண்ணறடி! தேவதைலாம் சாந்தமா, சாத்வீகமா இருக்கனும்!”
“சாத்வீகம்லாம் கிடைக்காது! நாலு சாத்து வேணும்னா கிடைக்கும்!”
“உன் கைலத்தான் எனக்கு சங்குன்னு சொன்னதுக்கு அர்த்தம் இதானா?” என இவன் பயந்தது போல நடிக்க, இவள் கெத்தாய் பார்த்து வைத்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்து, ப்ளாஸ்கில் இவன் எடுத்து வந்திருந்த காபியை ஒரே பேப்பர் கப்பில் மாற்றி மாற்றிக் குடித்தார்கள்.
“தூக்கம் வருதாடா?”
“இன்னும் இல்ல! வந்தாலும் எனக்குத் தூங்க வேண்டா! இந்த மாதிரி ஒன்னா பயணம் பண்ணற சான்ஸ் இனி எப்போ கிடைக்குமோ! பேசிட்டே இருக்கலாம் சங்கு” எனக் கெஞ்சலாய் கேட்டாள் இவள்.
“ஏஞ்சல்! அங்க உங்க வீட்டுல என்ன சிட்டுவேஷனோ! இப்பவே கொஞ்சம் தூங்கி எழுந்துக்கோ! அங்க போய் ரெஸ்ட் எடுக்கக் கூட டைம் கிடைக்குமே என்னமோ!” என்றவனின் கரிசனத்தில் கண்ணில் இருந்த தூக்கமும் ஓடி ஒளிந்து கொண்டது இவளுக்கு.
“தூங்க மாட்டேன்” என்றவள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
புன்னகையுடன் அவள் தலை மேல் தன் கன்னம் வைத்துச் சாய்ந்து கொண்டான் சங்கத்தமிழன்.
“டீ ஏஞ்சல்”
“ஹ்ம்ம்”
“நம்மள பத்தியே பேசறோமே, ஒரு சேஞ்சுக்கு என் மாமனார பத்தியும் தாத்தா பத்தியும் சொல்லேன்” என்றான் இவன்.
தன்னைப் பற்றி, தன்னைப் பெற்றவள், வளர்த்த அனிதா, தந்தை, குடும்பம் என அடிக்கடிப் பேசுவான் சங்கத்தமிழன். இவளோ குடும்பத்தைப் பற்றி அவ்வளவாகப் பேச மாட்டாள். இவன் கேட்டால் மட்டும் கொஞ்சமாய் சொல்வாள்.
தொண்டையைச் செறுமிக் கொண்டவள்,
“அப்பா தேவராஜ். அம்மா தாட்சாயிணி! அவங்க ரெண்டு பேரோட பெயரின் முதல் எழுத்த தான் எனக்கு தேவதான்னு வச்சாங்க. தாத்தா பேர் சிவலிங்கம். அம்மா கான்சர்ல உயிர் விட்டப்போ எனக்கு வயசு நாலு. எந்நேரமும் சிரிச்ச முகமா, சோறு ஊட்டற அம்மாவ கொஞ்சமாத்தான் எனக்கு ஞாபகம் இருக்கு. மத்த அப்பாங்க போல லிட்டில் பிரின்சஸ்னு தூக்கி வச்சிக் கொண்டாடறவரு இல்ல என் அப்பா! எனக்குன்னு எல்லாமே செய்வாரு! அதுல அக்கறை இருக்கும்! ஆனா அன்ப நான் உணர்ந்தது இல்ல! அதை அவருக்குக் காட்டத் தெரியல போல! ஆரம்பத்துல அவரோட அரவணைப்ப ரொம்பத் தேடுவேன்! அழுவேன்! ஆனா ஒரு முறைப்போட ஒதுங்கிப் போய்டுவாரு! தாத்தாவுக்கும் அதெல்லாம் வரல! எனக்குப் புடிச்சத சமைச்சிக் குடுப்பாரு! அதுலதான் தாத்தாவோட அன்பு வெளிப்படும்! ஏழு வயசு வரைக்கும் இப்படியே போச்சு!”
“பிறகு என்னாச்சி?” எனக் கேட்டவன், அவளைத் தன் மடி சாய்த்துக் கொண்டான்.
“வளர ஆரம்பிச்சா தேவதா! ரெண்டு ஆம்பளைங்களுக்கு ஒரு பொம்பளப் புள்ள வளர்ச்சிய பார்த்து எப்படி ஹேண்டில் பண்ணறதுன்னு தெரியல! அவ அம்மா இருந்திருக்கலாம்பான்னு எங்கப்பா அடிக்கடி அவங்கப்பாட்ட சொல்லறத கேட்டிருக்கேன்! ஓன் ஃபைன் டே, என்னைக் கொண்டுப் போய் ஹாஸ்டலோட இருக்கற ஸ்கூல் சேர்த்துட்டாங்க! அப்படியே வளர்ந்து வந்துட்டா இந்த தேவதா! லீவுக்கு வீட்டுக்குப் போவேன்! அப்போ கூட எப்படி இருக்க, செலவுக்கு பணம் வேணுமா! அப்படிங்கற வார்த்தையோட பேச்சு வார்த்தை முடிஞ்சிடும்! கஷ்டமா இருக்கும் சங்கு! மகளேன்னு கொஞ்ச வேணா! வார்த்தையாலயாச்சும் கொஞ்சம் அன்பு, மென்மை, பாசம் காட்டலாம்ல! என்னமோ போ! அம்மாவ எரிச்சிட்டாங்க! இவர் உயிரோட மரிச்சிட்டாரு!”
படுத்திருந்தவள் எழுந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, நானிருக்கிறேன் உனக்கு என்பது போல இறுக்கமாகக் கட்டிக் கொண்டான் சங்கத்தமிழன்.
“இது வரை நான் கடந்து வந்த ஆண்கள் கிட்ட பார்க்காத ஒரு மென்மையான சைட உன் கிட்ட பார்த்தேன் சங்கு! ரூபா கிட்ட நீ பேசனப்போ அந்த குரல்ல தெரிஞ்ச மென்மையும், அனுசரணையும் என்னை உன் பக்கம் ஈர்த்துச்சு! நீ எனக்கே வேணும்னு தோண வச்சிது! இப்போ பழக, பழக உன்னோட அன்பும் அக்கறையும், இனிமே நீ இல்லாம நானில்லைன்னு உணர வச்சிடுச்சு! ஐ லவ் யூ சங்கு! லவ் யூ சோ மச்”
மென்னகையுடன் லவ் யூ சொல்ல வந்தவனின், உதட்டைப் பட்டெனக் கௌவிக் கொண்டாள் இவள். அதிர்ச்சியில் விழி விரித்தான் சங்கத்தமிழன். இத்தனை நாளாய் அவளுக்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவனுக்கு, தேவதாவின் அதிரடி ஆச்சரியம் கலந்த இன்பத்தைக் கொடுத்தது. தட்டுத் தடுமாறி முத்தம் வைத்தவள், வெட்கத்துடன் இவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இப்போ நீ முத்தம் குடுத்தியா இல்ல என் உதட்ட ஜவ்வு மிட்டாயா நெனைச்சி சப்பி வச்சியா?” எனக் குறும்பாய் இவன் கேட்க,
“போடா சங்கு!” என அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள் தேவதா.
மெல்ல அவளை விலக்கியவன், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு,
“நெக்ஸ்ட் டைம் இச்சு வைக்கறப்போ, கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்துக்கடி! இப்படிலாம் தடால்னு பாயக் கூடாது!” என இன்னும் பேசப் போனவனின் வாயை மீண்டும் தன் வாயால் மூடினாள் இவள்.
“இவள!!!” என வாய்க்குள் முனகியவன், அதிரடியாய் திருப்பிக் கொடுத்தான் தன் பதிலை.
மூச்சு வாங்க விலகிய இருவரும், ஒருத்தரை ஒருத்தர் பார்த்து வெட்கமாய் புன்னகைத்துக் கொண்டார்கள்.
“எனக்கு உடம்பெல்லாம் சூடாகி, படபடன்னு வருது ஏஞ்சல்! இன்னும் வேற என்னமெல்லாமோ பண்ணனும்னு தோணுது! அது சரியில்லடா! ப்ளீஸ்! இத்தோட நிப்பாட்டிக்க! என்னை வச்சி செய்யாதே!” என்றவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் இவள்.
“ப்ராமிஸ் பண்ணு எனக்கு”
“என்னன்னு?”
“இதை ஆரம்பிச்சு வச்சிட்ட நீ! இனிமே இது இல்லாம என்னால இருக்க முடியுமான்னு தெரில! அதனால ஒரு நாளைக்கு ஒன்னுன்னு மட்டும் லிமிட் பண்ணிப்போம்! ப்ராமீஸ் பண்ணு, அதுக்கும் மேல என்னை டெம்ப்ட் பண்ண மாட்டேன்னு”
“என்ன சங்கு இதுக்கெல்லாம் லிமிட் வைக்கறீங்க! அவன் அவன் லவ்வருக்கு கணக்கில்லாம குடுக்கறான்” எனச் சிணுங்கினாள் இவள்.
“அவங்க லவ்வர்ஸ்டி! நாம அப்படியா? வீ ஆர் லைக் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்! கண்ட்ரோல் இல்லாம போய்டும் தேவதா! ஐ ரெஸ்பெக்ட் யூ சோ மச்! எல்லை மீறிப் போய் உனக்கொரு பிரச்சனைய இழுத்து வைக்க விரும்பல நான்!”
அவனைப் பிடித்தது. அவனது கொள்கையையும் நிரம்பப் பிடித்தது இவளுக்கு.
“நான் ரொம்ப லக்கி சங்கு”
“இல்ல! இந்த தேவதை கிடைச்சதுல நான்தான் லக்கியோ லக்கி! இப்போ தூங்கு நீ”
“பாட்டுப் பாடுங்க நான் தூங்கறேன்”
“சரி கண்ண மூடு” என மடியில் படுக்க வைத்துக் கொண்டான் தன் தேவதைப் பெண்ணை.
“ஆகாசவாணி நீயே என் ராணி
சோஜா, சோஜா, சோஜா”
“சங்கு இந்தப் பாட்டு வேணா”
“ஏன்?”
“அதுல ஹீரோ, ஹீரோயினால சைக்கோவாகிடுவான்!”
“சரி வேணா! இந்த பாட்டுக் கேளு!
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா”
“இதும் வேணா”
“இதுக்கென்ன தேவதா?”
“இதுல ரெண்டு ஹீரோயினும் மர்கையா! ஹீரோ மட்டும் உசுரோட இருப்பாரு”
“இப்படியே ஒவ்வொன்னா குறை சொல்லிட்டே இரு, அடி வெளுக்கறேன்! படுடி” எனக் குரலை உயர்த்த, கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள் பெண்.
அலைச்சல், தாத்தாவுக்கு என்னவோ எனும் மன உளைச்சல் என உறங்க முயன்றாலும் முடியவில்லை. இவனுக்கக அசையாமல் அப்படியே படுத்திருந்தாள். இவனும் பின்னால் சாய்ந்து தூங்கிப் போனான்.
சுமார் எட்டு மணி நேரத்துக்குப் பிறகு கோவையை அடைந்தார்கள் இவர்கள். ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தவள், தகப்பனுக்கு அழைக்க, அவரது போனை தாத்தா எடுத்தார்.
“வந்துட்டியாமா?”
“ஆமா தாத்தா! ஆட்டோ எடுத்து வீட்டுக்கு வந்துடறேன்”
“நேரா கேர் ஹாஸ்பிட்டல் வாம்மா! உங்கப்பாவ இங்கத்தான் அட்மிட் பண்ணிருக்கு” என்றவரின் குரலில் கண்ணீரின் தடம்.
“என்னாச்சு தாத்தா?” எனப் படபடத்தாள் இவள்.
“நேருல வாடா” என அழைப்பைத் துண்டித்தார் தாத்தா.
இவள் பதட்டத்தில் பயந்து போனான் சங்கத்தமிழன்.
“என்னாச்சு டியர்?”
“அப்பா அட்மிட்டட்டாம்”
“அச்சோ! சரி வா, போகலாம் மாமாவ பார்க்க”
“சங்கு!”
“என்னடி?”
“நீங்க இனிஷியல் ப்ளான் போல லாட்ஜ்ல ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்புங்க! யூ லுக் டயர்ட்! நான் இங்க பார்த்துக்கறேன்”
“ஒரே அறைல மூஞ்சு வீங்கிக்கும் தேவதா!!! இங்க நிலைமை இப்படி இருக்க, என்னைக் கிளம்பிப் போகச் சொல்றியா? அதெல்லாம் முடியாது!”
“உங்களுக்கு ப்ராஜக்ட் வர்க்லாம் இருக்கு”
“அந்த ஆணிய நான் புடிங்கிப்பேன்! இப்போ வா!” எனக் கை பிடித்து ஆட்டோ இருக்கும் இடத்துக்கு அழைத்துப் போனான் இவன்.
இவள் இடம் சொல்ல, ஆட்டோ கிளம்பியது!
மருத்துவமனையில் எங்கிருக்கிறார் எனக் கேட்டு, தேடிப் போனார்கள் இருவரும். ஐ.சி.யூ எனச் சொல்லப்பட்டிருக்க, தேவதாவுக்கு இதயம் துடிதுடித்தது.
‘அப்பா! அப்பா!’ என மனம் ஓலமிட்டது.
அறைக்கு வெளியே ஒரு பெஞ்சில் தாத்தா ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார். இவளைப் பார்த்ததும் அழுகையுடன் கட்டிக் கொண்டார். அமைதியாகவே பக்கத்தில் நின்றிருந்தான் சங்கத்தமிழன்.
“உள்ளே போம்மா! உங்கப்பா உனக்காகத்தான் காத்திட்டு இருக்கான்” என்றவர் தள்ளாட, அவரை தமிழ் தாங்கிக் கொண்டான்.
நர்ஸ் வந்து இவளை உள்ளே அழைக்க, கண்ணீருடன் உள் நுழைந்தாள் தேவதா.
சில நிமிடங்களில் படாரெனும் சத்தம் வெளியே கேட்க, தாத்தாவை அமர வைத்து விட்டு அறைக்குள்ளே ஓடினான் சங்கத்தமிழன். அங்கே மயங்கி கீழே விழுந்து கிடந்தாள் தேவதா!
“ஏஞ்சல்!!!!!!!!!!”

(மை ஏஞ்சல்???)
 
CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
171
Reaction score
728
Location
Ullagaram
அவளுக்கானது எல்லாத்தையும் தான் தான் செய்வேன்னு அவனும், அவனுக்கானது அத்தனையும் தான் தான் செய்வேன்னு இவளும்....
வாவ்...! இது போதும், இது போதும், இது போதுமே....! வேறென்ன வேண்டும்... இது போதுமே...!வாழ்க்கை முழுக்க இவங்க ரெண்டு பேரும் இப்படி சந்தோஷமாவே வாழணும்ன்னு தோணுது.
ஆனா, நம்ம ஏஞ்சல் சொல்றதைப் பார்த்தா ஸம்திங் இஸ் பிஷ்ஷி..!

என்னாச்சு..? ஏஞ்சலை அடிச்சுட்டாரோ...? அப்ப அவருக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதெல்லாம் ட்ராமா வா...?
இந்த சங்கு வேற பயங்கர கோபக்காரன், பிடிவாதக்காரன் ஆச்சே..! இப்ப அவளை அடிச்சதுக்கு அவனோட மாமனாரையே வைச்சு செய்வானோ, என்னவோ....???
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,620
Reaction score
10,146
Location
Sharjah
இப்படி எல்லாம் போச்சுன்னா இது nishling ஸ்டோரியே இல்லையே??
என்னமோ எங்கேயோ ஆப்பு ரெடியா இருக்கு.
Wanted uh வந்து மாட்டிக்கிட்டாங்களா??
 
Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,577
Reaction score
6,866
Location
Salem
“லேசா! அசைண்ட்மேன்ட் பெண்டிங் இருந்தது! அவசரமா முடிச்சிட்டு இமேயில் பண்ணிட்டு ஓடி வரேன்! அம்மா அரக்கப் பறக்க ரெண்டு இட்டிலி ஊட்டி விட்டாங்க! அது ரயில் ஸ்டேசன்ல நடந்ததுலேயே கரைஞ்சிடுச்சு!”
“நான் வர வழில உங்களுக்கு பிரியாணி ஒரு பாக்கேட் வாங்கிட்டு வந்தேன். எனக்கு ரெண்டு இட்லி!” என்றவள் உணவை எடுத்துப் பிரித்து வைத்தாள்.
“நீ போய் கை கழுவிட்டு வா! பிறகு நான் போறேன்” என்றான் இவன்.
இவள் எழுந்து போகவும், மர்மப் புன்னகை இவன் முகத்தில். திரும்பி வந்தவளிடம்,
“கால் வலிக்குது ஏஞ்சல்! நடந்து போய் கை கழுவ முடியுமான்னு தெரில! நீயே ஊட்டி விட்டுடேன்” எனப் பாவமாய் கேட்டான்.
“ஊட்டி விடனும்னா நேரா கேளுடா சங்கு! இப்படிலாம் ட்ரிக் பண்ண வேணா” என்றவள், அவனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.
“நீயும் ரெண்டு வாய் சாப்பிடு!”
“தூரப் பயணத்துக்குலாம் நான் ஹெவியா சாப்பிட மாட்டேன் சங்கு!”
“ரெண்டு வாய்தான்!” என உணவை அள்ள வந்தவன் கையில் ஒன்றுப் போட்டாள் இவள்.
“கைய கழுவாம சாப்பாட்டுல கை வச்சா, பேஜாராகிப்புடும் பார்த்துக்கோ” என மிரட்டியவளை, சிரிப்புடன் பார்த்தான் இவன்.
“ரொம்ப வயலன்ஸா பிகேவ் பண்ணறடி! தேவதைலாம் சாந்தமா, சாத்வீகமா இருக்கனும்!”
“சாத்வீகம்லாம் கிடைக்காது! நாலு சாத்து வேணும்னா கிடைக்கும்!”
“உன் கைலத்தான் எனக்கு சங்குன்னு சொன்னதுக்கு அர்த்தம் இதானா?” என இவன் பயந்தது போல நடிக்க, இவள் கெத்தாய் பார்த்து வைத்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்து, ப்ளாஸ்கில் இவன் எடுத்து வந்திருந்த காபியை ஒரே பேப்பர் கப்பில் மாற்றி மாற்றிக் குடித்தார்கள்.
“தூக்கம் வருதாடா?”
“இன்னும் இல்ல! வந்தாலும் எனக்குத் தூங்க வேண்டா! இந்த மாதிரி ஒன்னா பயணம் பண்ணற சான்ஸ் இனி எப்போ கிடைக்குமோ! பேசிட்டே இருக்கலாம் சங்கு” எனக் கெஞ்சலாய் கேட்டாள் இவள்.
“ஏஞ்சல்! அங்க உங்க வீட்டுல என்ன சிட்டுவேஷனோ! இப்பவே கொஞ்சம் தூங்கி எழுந்துக்கோ! அங்க போய் ரெஸ்ட் எடுக்கக் கூட டைம் கிடைக்குமே என்னமோ!” என்றவனின் கரிசனத்தில் கண்ணில் இருந்த தூக்கமும் ஓடி ஒளிந்து கொண்டது இவளுக்கு.
“தூங்க மாட்டேன்” என்றவள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
புன்னகையுடன் அவள் தலை மேல் தன் கன்னம் வைத்துச் சாய்ந்து கொண்டான் சங்கத்தமிழன்.
“டீ ஏஞ்சல்”
“ஹ்ம்ம்”
“நம்மள பத்தியே பேசறோமே, ஒரு சேஞ்சுக்கு என் மாமனார பத்தியும் தாத்தா பத்தியும் சொல்லேன்” என்றான் இவன்.
தன்னைப் பற்றி, தன்னைப் பெற்றவள், வளர்த்த அனிதா, தந்தை, குடும்பம் என அடிக்கடிப் பேசுவான் சங்கத்தமிழன். இவளோ குடும்பத்தைப் பற்றி அவ்வளவாகப் பேச மாட்டாள். இவன் கேட்டால் மட்டும் கொஞ்சமாய் சொல்வாள்.
தொண்டையைச் செறுமிக் கொண்டவள்,
“அப்பா தேவராஜ். அம்மா தாட்சாயிணி! அவங்க ரெண்டு பேரோட பெயரின் முதல் எழுத்த தான் எனக்கு தேவதான்னு வச்சாங்க. தாத்தா பேர் சிவலிங்கம். அம்மா கான்சர்ல உயிர் விட்டப்போ எனக்கு வயசு நாலு. எந்நேரமும் சிரிச்ச முகமா, சோறு ஊட்டற அம்மாவ கொஞ்சமாத்தான் எனக்கு ஞாபகம் இருக்கு. மத்த அப்பாங்க போல லிட்டில் பிரின்சஸ்னு தூக்கி வச்சிக் கொண்டாடறவரு இல்ல என் அப்பா! எனக்குன்னு எல்லாமே செய்வாரு! அதுல அக்கறை இருக்கும்! ஆனா அன்ப நான் உணர்ந்தது இல்ல! அதை அவருக்குக் காட்டத் தெரியல போல! ஆரம்பத்துல அவரோட அரவணைப்ப ரொம்பத் தேடுவேன்! அழுவேன்! ஆனா ஒரு முறைப்போட ஒதுங்கிப் போய்டுவாரு! தாத்தாவுக்கும் அதெல்லாம் வரல! எனக்குப் புடிச்சத சமைச்சிக் குடுப்பாரு! அதுலதான் தாத்தாவோட அன்பு வெளிப்படும்! ஏழு வயசு வரைக்கும் இப்படியே போச்சு!”
“பிறகு என்னாச்சி?” எனக் கேட்டவன், அவளைத் தன் மடி சாய்த்துக் கொண்டான்.
“வளர ஆரம்பிச்சா தேவதா! ரெண்டு ஆம்பளைங்களுக்கு ஒரு பொம்பளப் புள்ள வளர்ச்சிய பார்த்து எப்படி ஹேண்டில் பண்ணறதுன்னு தெரியல! அவ அம்மா இருந்திருக்கலாம்பான்னு எங்கப்பா அடிக்கடி அவங்கப்பாட்ட சொல்லறத கேட்டிருக்கேன்! ஓன் ஃபைன் டே, என்னைக் கொண்டுப் போய் ஹாஸ்டலோட இருக்கற ஸ்கூல் சேர்த்துட்டாங்க! அப்படியே வளர்ந்து வந்துட்டா இந்த தேவதா! லீவுக்கு வீட்டுக்குப் போவேன்! அப்போ கூட எப்படி இருக்க, செலவுக்கு பணம் வேணுமா! அப்படிங்கற வார்த்தையோட பேச்சு வார்த்தை முடிஞ்சிடும்! கஷ்டமா இருக்கும் சங்கு! மகளேன்னு கொஞ்ச வேணா! வார்த்தையாலயாச்சும் கொஞ்சம் அன்பு, மென்மை, பாசம் காட்டலாம்ல! என்னமோ போ! அம்மாவ எரிச்சிட்டாங்க! இவர் உயிரோட மரிச்சிட்டாரு!”
படுத்திருந்தவள் எழுந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, நானிருக்கிறேன் உனக்கு என்பது போல இறுக்கமாகக் கட்டிக் கொண்டான் சங்கத்தமிழன்.
“இது வரை நான் கடந்து வந்த ஆண்கள் கிட்ட பார்க்காத ஒரு மென்மையான சைட உன் கிட்ட பார்த்தேன் சங்கு! ரூபா கிட்ட நீ பேசனப்போ அந்த குரல்ல தெரிஞ்ச மென்மையும், அனுசரணையும் என்னை உன் பக்கம் ஈர்த்துச்சு! நீ எனக்கே வேணும்னு தோண வச்சிது! இப்போ பழக, பழக உன்னோட அன்பும் அக்கறையும், இனிமே நீ இல்லாம நானில்லைன்னு உணர வச்சிடுச்சு! ஐ லவ் யூ சங்கு! லவ் யூ சோ மச்”
மென்னகையுடன் லவ் யூ சொல்ல வந்தவனின், உதட்டைப் பட்டெனக் கௌவிக் கொண்டாள் இவள். அதிர்ச்சியில் விழி விரித்தான் சங்கத்தமிழன். இத்தனை நாளாய் அவளுக்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவனுக்கு, தேவதாவின் அதிரடி ஆச்சரியம் கலந்த இன்பத்தைக் கொடுத்தது. தட்டுத் தடுமாறி முத்தம் வைத்தவள், வெட்கத்துடன் இவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இப்போ நீ முத்தம் குடுத்தியா இல்ல என் உதட்ட ஜவ்வு மிட்டாயா நெனைச்சி சப்பி வச்சியா?” எனக் குறும்பாய் இவன் கேட்க,
“போடா சங்கு!” என அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள் தேவதா.
மெல்ல அவளை விலக்கியவன், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு,
“நெக்ஸ்ட் டைம் இச்சு வைக்கறப்போ, கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்துக்கடி! இப்படிலாம் தடால்னு பாயக் கூடாது!” என இன்னும் பேசப் போனவனின் வாயை மீண்டும் தன் வாயால் மூடினாள் இவள்.
“இவள!!!” என வாய்க்குள் முனகியவன், அதிரடியாய் திருப்பிக் கொடுத்தான் தன் பதிலை.
மூச்சு வாங்க விலகிய இருவரும், ஒருத்தரை ஒருத்தர் பார்த்து வெட்கமாய் புன்னகைத்துக் கொண்டார்கள்.
“எனக்கு உடம்பெல்லாம் சூடாகி, படபடன்னு வருது ஏஞ்சல்! இன்னும் வேற என்னமெல்லாமோ பண்ணனும்னு தோணுது! அது சரியில்லடா! ப்ளீஸ்! இத்தோட நிப்பாட்டிக்க! என்னை வச்சி செய்யாதே!” என்றவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் இவள்.
“ப்ராமிஸ் பண்ணு எனக்கு”
“என்னன்னு?”
“இதை ஆரம்பிச்சு வச்சிட்ட நீ! இனிமே இது இல்லாம என்னால இருக்க முடியுமான்னு தெரில! அதனால ஒரு நாளைக்கு ஒன்னுன்னு மட்டும் லிமிட் பண்ணிப்போம்! ப்ராமீஸ் பண்ணு, அதுக்கும் மேல என்னை டெம்ப்ட் பண்ண மாட்டேன்னு”
“என்ன சங்கு இதுக்கெல்லாம் லிமிட் வைக்கறீங்க! அவன் அவன் லவ்வருக்கு கணக்கில்லாம குடுக்கறான்” எனச் சிணுங்கினாள் இவள்.
“அவங்க லவ்வர்ஸ்டி! நாம அப்படியா? வீ ஆர் லைக் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்! கண்ட்ரோல் இல்லாம போய்டும் தேவதா! ஐ ரெஸ்பெக்ட் யூ சோ மச்! எல்லை மீறிப் போய் உனக்கொரு பிரச்சனைய இழுத்து வைக்க விரும்பல நான்!”
அவனைப் பிடித்தது. அவனது கொள்கையையும் நிரம்பப் பிடித்தது இவளுக்கு.
“நான் ரொம்ப லக்கி சங்கு”
“இல்ல! இந்த தேவதை கிடைச்சதுல நான்தான் லக்கியோ லக்கி! இப்போ தூங்கு நீ”
“பாட்டுப் பாடுங்க நான் தூங்கறேன்”
“சரி கண்ண மூடு” என மடியில் படுக்க வைத்துக் கொண்டான் தன் தேவதைப் பெண்ணை.
“ஆகாசவாணி நீயே என் ராணி
சோஜா, சோஜா, சோஜா”
“சங்கு இந்தப் பாட்டு வேணா”
“ஏன்?”
“அதுல ஹீரோ, ஹீரோயினால சைக்கோவாகிடுவான்!”
“சரி வேணா! இந்த பாட்டுக் கேளு!
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா”
“இதும் வேணா”
“இதுக்கென்ன தேவதா?”
“இதுல ரெண்டு ஹீரோயினும் மர்கையா! ஹீரோ மட்டும் உசுரோட இருப்பாரு”
“இப்படியே ஒவ்வொன்னா குறை சொல்லிட்டே இரு, அடி வெளுக்கறேன்! படுடி” எனக் குரலை உயர்த்த, கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள் பெண்.
அலைச்சல், தாத்தாவுக்கு என்னவோ எனும் மன உளைச்சல் என உறங்க முயன்றாலும் முடியவில்லை. இவனுக்கக அசையாமல் அப்படியே படுத்திருந்தாள். இவனும் பின்னால் சாய்ந்து தூங்கிப் போனான்.
சுமார் எட்டு மணி நேரத்துக்குப் பிறகு கோவையை அடைந்தார்கள் இவர்கள். ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தவள், தகப்பனுக்கு அழைக்க, அவரது போனை தாத்தா எடுத்தார்.
“வந்துட்டியாமா?”
“ஆமா தாத்தா! ஆட்டோ எடுத்து வீட்டுக்கு வந்துடறேன்”
“நேரா கேர் ஹாஸ்பிட்டல் வாம்மா! உங்கப்பாவ இங்கத்தான் அட்மிட் பண்ணிருக்கு” என்றவரின் குரலில் கண்ணீரின் தடம்.
“என்னாச்சு தாத்தா?” எனப் படபடத்தாள் இவள்.
“நேருல வாடா” என அழைப்பைத் துண்டித்தார் தாத்தா.
இவள் பதட்டத்தில் பயந்து போனான் சங்கத்தமிழன்.
“என்னாச்சு டியர்?”
“அப்பா அட்மிட்டட்டாம்”
“அச்சோ! சரி வா, போகலாம் மாமாவ பார்க்க”
“சங்கு!”
“என்னடி?”
“நீங்க இனிஷியல் ப்ளான் போல லாட்ஜ்ல ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்புங்க! யூ லுக் டயர்ட்! நான் இங்க பார்த்துக்கறேன்”
“ஒரே அறைல மூஞ்சு வீங்கிக்கும் தேவதா!!! இங்க நிலைமை இப்படி இருக்க, என்னைக் கிளம்பிப் போகச் சொல்றியா? அதெல்லாம் முடியாது!”
“உங்களுக்கு ப்ராஜக்ட் வர்க்லாம் இருக்கு”
“அந்த ஆணிய நான் புடிங்கிப்பேன்! இப்போ வா!” எனக் கை பிடித்து ஆட்டோ இருக்கும் இடத்துக்கு அழைத்துப் போனான் இவன்.
இவள் இடம் சொல்ல, ஆட்டோ கிளம்பியது!
மருத்துவமனையில் எங்கிருக்கிறார் எனக் கேட்டு, தேடிப் போனார்கள் இருவரும். ஐ.சி.யூ எனச் சொல்லப்பட்டிருக்க, தேவதாவுக்கு இதயம் துடிதுடித்தது.
‘அப்பா! அப்பா!’ என மனம் ஓலமிட்டது.
அறைக்கு வெளியே ஒரு பெஞ்சில் தாத்தா ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார். இவளைப் பார்த்ததும் அழுகையுடன் கட்டிக் கொண்டார். அமைதியாகவே பக்கத்தில் நின்றிருந்தான் சங்கத்தமிழன்.
“உள்ளே போம்மா! உங்கப்பா உனக்காகத்தான் காத்திட்டு இருக்கான்” என்றவர் தள்ளாட, அவரை தமிழ் தாங்கிக் கொண்டான்.
நர்ஸ் வந்து இவளை உள்ளே அழைக்க, கண்ணீருடன் உள் நுழைந்தாள் தேவதா.
சில நிமிடங்களில் படாரெனும் சத்தம் வெளியே கேட்க, தாத்தாவை அமர வைத்து விட்டு அறைக்குள்ளே ஓடினான் சங்கத்தமிழன். அங்கே மயங்கி கீழே விழுந்து கிடந்தாள் தேவதா!
“ஏஞ்சல்!!!!!!!!!!”

(மை ஏஞ்சல்???)
Nirmala vandhachu 😍😍😍
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top