• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓ மை ஏஞ்சல் -- அத்தியாயம் 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
962
Reaction score
113,430
Location
anywhre
வணக்கம் டியர்ஸ்,

omy.jpeg


அத்தியாயம் 8



“ஏஞ்சல்!”

“ஹ்ம்ம்ம்”

“என்ன ஒரே யோசனையா இருக்க நீ?”

“ஒன்னுமில்ல சங்கு! சும்மா ஏதேதோ நினைவுகள்.”

அன்று படிக்க வேண்டுமென இவனுக்கு மேசேஜ் போட்டு விட்டு நூலகத்துக்கு வந்திருந்தாள் தேவதா.

கல்லூரி ஆரம்பிக்கும் முன்னும் முடிந்த பின்னும் மட்டுமே அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள்! சனிக்கிழமைகளில் பல சமயம் இவனுக்கு ப்ராஜெக்ட் வேலைகள் இருக்கும். அவளுக்கும் சில சமயங்களில் அந்நாளில் காலை வகுப்புகள் இருக்கும். அதோடு அந்த நாளில்தான் தேவையானப் பொருட்களை வாங்கி வர மேகலாவுடன் வெளியே செல்வாள். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவதாவுக்கு துணிகளைத் துவைக்க, முகம் மற்றும் தலை முடி பராமரிப்பு என அதற்கே நேரம் சரியாய் இருக்கும்.

மாதத்திற்கு இரு ஞாயிறாவது, அனிதா சமைத்ததை எடுத்து வந்து அவளுக்கும் அவளது தோழி மேகலாவுக்கும் கொடுத்து விட்டுப் போவான் சங்கத்தமிழன்.

“ஏன் சங்கு சிரமப்படறீங்க?” எனக் கேட்டால்,

“ஞாயிறு வீட்டுல சமையல் தடபுடல் படும் தேவதா. அப்பா அன்னைக்குத்தான் ஃபுல் டே வீட்டுல இருப்பாரு! அதனால அம்மா ஜமாய்ச்சிடுவாங்க! ஒரு காலத்துல ஃபுல் கட்டு கட்டிட்டு ஜாலியா வீட்டுல உள்ளவங்க கூட அவுட்டிங் போவேன். இப்போலாம் எதாச்சும் ஸ்பெஷல் சாப்பாடு இருந்தா, உன் ஞாபகம் வந்திடுது! ஹாஸ்டல்ல வெந்ததையும் வேகாததையும் நீ சாப்பிட்டு இருக்கறப்போ, நான் மட்டும் நல்லா சாப்பிடறதான்னு ஒப்பமாட்டுது ஏஞ்சல். எவ்ரி சண்டே கூட கொண்டு வந்து குடுப்பேன்! நீதான் வேணாம்னு என்னைத் தடுத்து வச்சிருக்க!” என்பான்.

நூலகத்துக்கு வந்திருந்தவளைக் காண வந்திருந்தான் சங்கத்தமிழன். அவளும் படிக்க வேண்டும், அவனுக்கும் அவளைப் பார்க்க வேண்டும்! அவள் படித்துக் கொண்டிருக்க, அருகிலேயே அமர்ந்து அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். படிப்பதும் நோட்ஸ் எடுப்பதுமாக அவள் இருந்தாலும், ஏதோ சரியில்லை எனப் புரிந்தது இவனுக்கு! அதனால்தான் என்ன யோசனை எனக் கேட்டான். அவளிடம் இருந்து மழுப்பலான பதில் வரவும்,

“வெளிய போய் பேசலாம் வா” என அழைத்தான்.

“படிக்கனும் சங்கு”

“நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன்! இவ்ளோ நேரம் ஒரு பக்கம் கூட நீ முழுசா படிக்கல! எப்பவும் உன் பக்கத்துல நான் உட்கார்ந்திருந்தா, படிக்கற பாடத்தோட சாராம்சத்த மெல்லியக் குரல்ல எனக்கு விளக்கிட்டே நோட்ஸ் எழுதுவ! இன்னிக்கு உன்னோட கான்சேண்ட்ரேஷன் மிஸ்ஸிங்! சும்மா இங்க உட்கார்ந்து டைம் வேஸ்ட் பண்ணாம ஹாஸ்டல்ல போய் படி! இப்போ வா” என வலுக் கட்டாயமாக வெளியே அழைத்து வந்தான்.

அவர்கள் எப்போதும் அமரும் மரத்தடியில் அன்றும் அமர்ந்தார்கள்.

“அப்பாவ மிஸ் பண்ணுறியாடா?”

இல்லையெனத் தலையாட்டியவள்,

“அப்பா இறந்துட்டதா நான் நெனைக்கறது இல்ல சங்கு! கோவைல எப்பவும் போல அவர் சேலை வியாபாரம் செஞ்சிகிட்டு பத்திரமா இருக்கறதாத்தான் என் மூளையையும் மனசையும் ஏமாத்தி வச்சிருக்கேன்! பல வருஷமா அவரை விட்டுத் தள்ளித்தானே இருந்திருக்கேன்! சோ இப்பவும் அப்படித்தான் இருக்கறதா நெனைச்சிக்கறேன்! அது கஷ்டமாவும் இல்ல” என்றாள் பெண்.

பெருமூச்சுடன் அவளது கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தான் இவன்.

“வேற என்ன பிரச்சனை? என் கிட்ட எதாச்சும் சொல்லனுமாடா?” எனக் கேட்டான் சங்கத்தமிழன்.

நெற்றியைத் தேய்த்துக் கொண்டவள்,

“அப்படி ஒன்னும் இல்ல சங்கு” என்றாள்.

“உன் கிளாஸ் மேட் உமேஷ் பத்தி கூட சொல்ல வேண்டாமா என் கிட்ட?”

அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள் தேவதா.

“எப்படித் தெரியும்?”

“உன்னை என் வைஃப்னு சும்மா சொல்லி வச்சேன்னு நெனைக்கறியா தேவதா? உன் பெர்சனல் ஸ்பேஸ்ல தலையிடாம ஒதுங்கி நிக்கறதுனால, பெர்சனலா உன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்காம இருப்பேனா?” எனக் கேட்டான் இவன்.

அமைதியாக இருந்தாள் தேவதா.

“நீயே என் கிட்ட சொல்லுவன்னு வெய்ட் பண்ணிட்டே இருந்தேன்டா! தள்ளி வச்சிட்டப் பார்த்தியா என்னை! மனசு வலிக்குது தேவதா”

“தள்ளி எல்லாம் வைக்கல சங்கு! காலேஜ் லாஸ்ட் இயர்ல, உனக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு நெனைச்சித்தான் எதையும் உன் கிட்ட சொல்லல! என் மேல நீ எவ்ளோ போசெசிவ்வா இருக்கன்னு எனக்குத் தெரியாதா! அடிதடின்னு போய்ட்டா, உனக்குத்தான் பிரச்சனையாகிடும் சங்கு! அதான் நானே ஹேண்டில் பண்ண முயற்சி பண்ணேன்” என்றவளுக்குக் கண்கள் கலங்கியது.

“நீ இண்டிபெண்டெண்டா இருக்கனும்னு நினைக்கற பாலிசிய நானும் மதிக்கறேன் ஏஞ்சல். அதனாலத்தான் நீயே ஹேண்டில் பண்ணிக்குவன்னு வெய்ட் பண்ணேன். எப்போ முயற்சி பண்ணேன்னு பாஸ்ட் டென்ஸ்ல சொன்னியோ, அப்பவே உன் கை மீறிப் போய்டுச்சுன்னு புரிஞ்சிருச்சு! இனி நான் பார்த்துக்கறேன்”

“பெருசா பிரச்சனை பண்ணிடாதே சங்கு!”

“டோண்ட் வொரி! இந்த பிசாத்து பையன எல்லாம் நெனச்சி நீ டென்ஸ்ட் ஆகாதே! தலைவலி வந்திடப் போகுது! கோவைல இருந்து வந்ததுல இருந்து அடிக்கடி தலைவலிக்குதுன்னு சொல்லற! நானும் டாக்டர்ட்டலாம் கூட்டிட்டுப் போய்ட்டேன்! ஸ்ட்ரேஸ்னால வந்த தலைவலின்னு சொன்னாருதானே அவரு! இப்போ பாரு, இன்னிக்கு முழுக்க நெத்தியைத் தேய்ச்சுட்டே இருக்க! மருந்து கொண்டு வந்தியா?”

“இருக்கு சங்கு”

“மருந்து போட்டுட்டு, போய் ஹாஸ்டல்ல ரெஸ்ட் எடு தேவதா”

“வேணாம்”

“என்ன வேணாம்?” எனக் கேட்டவன் டென்ஷன் ஆகியிருந்தான்.

“சும்மா மருந்து போடக் கூடாதுடா! அப்புறம் அதுவே அடிக்ட் ஆகிடும்! லேசா வலிச்சா கூட மருந்து போடனும்னு தோணும்!”

“எல்லாத்துக்கும் ஒரு வியாக்கியானம் சொல்லு, பாட்டிக் கிழவி” எனத் திட்டியவன் எழுந்து நின்று அவளது நெற்றியை மிருதுவாக நீவி விட்டான்.

அப்படியே சரிந்து அவனது வயிற்றில் முகத்தைத் புதைத்துக் கொண்டாள் இவள்.

“அச்சோ ஏஞ்சல்! ஆளுங்க நடமாடற இடம்! உரசாம தள்ளுடி!”

“இப்போ என்ன கிஸ்ஸா அடிச்சேன்! ஓவரா பண்ணாதே சங்கு!” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்துக் கண்ணடித்தாள்.

விரிந்த புன்னகையுடன் இரு விரலால் அவள் உதட்டைக் கிள்ளி, தன் விரலுக்கே முத்தமிட்டுக் கொண்டான் இவன்.

“சைவ முத்தம் வேணா போ” எனச் சிணுங்கினாள் இவள்.

“அது அதுக்கு நேரமிருக்கு, காலமிருக்கு ஏஞ்சல்!” எனச் சொல்லியவன் குனிந்து அவள் உச்சியில் இதழ் பதித்தான்.

“இப்போ கிளம்பிப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு” எனப் பிள்ளையார் இருப்பிடம் வரை விட்டு விட்டுப் போனான் சங்கத்தமிழன்.

ஹாஸ்டல் உள்ளே இவள் நுழைய,

“தேவதா!! உனக்கு விசிட்டர் வந்திருக்காங்க” எனக் குரல் கேட்டது.

“விசிட்டரா? என்னைத் தேடி வர அளவுக்கு அப்படி யாரும் இல்லையே” என முணுமுணுத்தபடியே அலுவலக அறைக்குப் போனாள் தேவதா.

அங்கே ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார்.

அவரைப் பார்த்ததும்,

“மஞ்சு அத்தை?” எனக் கேள்வியாகக் கேட்டாள் இவள்.

அவர் முகம் மலர்ந்து போனது.

“குட்டிமா!!! என்னைத் தெரியுமாடா உனக்கு?”
 




vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
962
Reaction score
113,430
Location
anywhre
“தாத்தா போட்டோ காட்டிருக்காரு! அதுல யங்கா இருந்தீங்க! இப்போ அடையாளமே தெரியல! ஆனா அந்தக் கண்ணுக்குக் கீழ கன்னத்துக்கு மேல இருக்கற அந்த மச்சம்தான் காட்டிக் குடுத்தது!” எனப் புன்னகைத்தாள் பெண்.

“என் மேல கோபமாமா?”

“வாங்கத்தை! வெளிய போய் உட்கார்ந்து பேசலாம்!” என வார்டனிடம் சொல்லி விட்டு மஞ்சுவை வெளியே போடப்பட்டிருக்கும் மர பெஞ்சுக்கு அழைத்துப் போய் அமர்த்தினாள்.

“இங்கயே உக்காந்திருங்க! ரெண்டே நிமிஷத்துல வந்திடறேன்” என ஓடிப் போனவள் கையில் இரண்டு கப் காபியுடன் வந்தாள்.

“குடிங்க அத்தை” என நீட்டியவளைக் கண் கலங்கப் பார்த்திருந்தார் மஞ்சு.

“ம்ப்ச்! காபி ஆறிடும் முன்னே குடிங்க! ஆறிடுச்சுனா எங்க ஹாஸ்டல் காபி வாயில வைக்க முடியாது” என்றாள் இவள்.

மெல்லிய முறுவலுடன் காபியை அருந்தினார் மஞ்சு.

இருவரும் காபி அருந்தியதும், பேப்பர் கப்பை குப்பையில் வீசி விட்டு மஞ்சுவின் அருகே மீண்டும் வந்து அமர்ந்தாள் தேவதா.

“உங்கப்பாவோட இறப்பு விஷயம் எனக்கு இப்போத்தான்டா தெரியும். தெரிஞ்சதும் தாங்கிக்கவே முடியல. வயசாகுதா, மனசு சொந்தபந்தங்கள தேடுது! இளமைல கணவர், அவரோட பேச்சு, அவரோட ஆசை இது மட்டும்தான் முக்கியம்னு மத்த எல்லாத்தையும் மறந்துட்டுட்டு வாழ முடிஞ்சது! வாழ்க்கைல புள்ளைங்க வளர்ந்து, புருஷனும் நம்மள விட மத்த விஷயங்கள் முக்கியம்னு இருக்கறப்போத்தான் ஒரு பொண்ணு நின்னு நிதானமா தன்னைப் பத்தி யோசிக்க ஆரம்பிப்பா! அந்த டைம்லதான் எவ்ளவோ இழந்துட்டோமேன்னு மனசுக்கும் மூளைக்கும் புரியும்! அப்போ சொந்த பந்தம், ஆரோக்கியம், இளமை இப்படி திரும்பி வர முடியாத பலது நம்மள விட்டுப் போயிருக்கும்! நானும் அந்த ஸ்டேஜ்லதான் நிக்கறேன்” எனப் பெருமூச்சுடன் சொன்னவருக்குக் கண்கள் கலங்கி நின்றது.

அவரது கையை ஆறுதலாகப் பற்றிக் கொண்டாள் தேவதா.

“என் கூட பழகிட்டு என்னைக் கண்டுக்காம விட்டுட்டுப் போயிருந்தா கோபம் இருக்குமோ என்னமோ! ஆனா நாமதான் பார்த்துக்கிட்டதே இல்லையே! அப்படி இருக்கறப்ப எப்படி உங்க மேல கோபம் வரும்?” என இதற்கு முன் அவர் கேட்டக் கேள்விக்குப் பதிலளித்தாள் தேவதா.

“உரிமைப்பட்டவங்க கிட்டத்தானே கோபத்த காட்ட முடியும்னு சொல்ற” என்றவருக்குக் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அச்சோ! அத்தை! என்னதிது!!! ப்ளீஸ் அழாதீங்க! சரி, சரி! உங்க மேல கோபம்தான்! போதுமா?” எனக் கேட்டவளைப் பார்த்து அப்படி ஓர் அன்பு பொங்கியது இவருக்கு.

அவளை மெல்ல அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டார் மஞ்சு. இது போன்ற பாச செய்கைகளை சங்கத்தமிழனிடம் மட்டுமே உணர்ந்திருந்த தேவதாவுக்கும் கண்கள் கலங்கியது.

“உங்க அப்பா இறப்பு தெரிஞ்சதும், தாத்தாவ ஆள் வச்சித் தேடிப் போய் பார்த்துட்டு வந்தேன். அவர்தான் உன்னைப் பத்தி சொல்லி, இங்க படிக்கறன்னு அட்ரஸ் குடுத்தாரு!”

“அடிக்கடி வந்துட்டுப் போங்கத்த! என்னையும் பார்க்க ஆள் வராங்கன்னு நெனைக்கறப்போ அவ்ளோ ஹேப்பியா இருக்கு” என்றாள் இவள்.

“என் கதையைப் பத்தி தெரிஞ்சா இப்படி ஆசையா கூப்பிட மாட்ட நீ”

“தெரியும்! தாத்தா சொல்லிருக்காரு”

மஞ்சு, தேவதாவின் அப்பா தேவராஜீன் ஒன்று விட்டத் தங்கை. தேவராஜ் மஞ்சுவைத் தன் சொந்த உடன்பிறப்பு போலத்தான் பார்த்தார், நடத்தினார். படிக்க வைத்து திருமணம் முடித்துக் கொடுக்க மாப்பிள்ளைத் தேடிய நேரம்தான் மஞ்சு இவர்கள் தலையில் இடியை இறக்கி இருந்தார். அவரை விட பதினைந்து வயது அதிகமான ஒருத்தரை திருமணம் முடித்துக் கொண்டு வீட்டு வாசலில் வந்து நின்றார். மனது கேட்காமல் தேவராஜ் விசாரித்துப் பார்த்ததில் மஞ்சு மணம் முடித்திருந்தவருக்கு ஏற்கனவே இன்னொரு குடும்பம் இருந்தது சென்னையில் எனத் தெரிந்து மஞ்சுவுமே கூட ஆடிப் போனார்.

காதலனின் பணப் பகட்டு, அழகு, மயக்கும் காதல் மொழிகள் எனத் தலைக் குப்புற விழுந்து கிடந்த மஞ்சுவுக்கு தான் இரண்டாவது மனைவி என்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

தேவராஜ் கோபத்தில் மஞ்சுவின் கணவனை அடித்தே விட்டார். மற்றவர்கள் தடுத்துப் பிடித்துப் பஞ்சாயத்து செய்தார்கள். தன் மீது கை ஓங்கி விட்ட தேவராஜ் மீது அப்படி ஒரு கோபம் மஞ்சுவின் மணாளனுக்கு.

“ரெண்டாவதுனா என்ன மஞ்சு!!! முதல் மனைவிய பிடிக்காம போகவும்தானே உன்னைக் காதலிச்சுக் கட்டிக்கிட்டேன்! என் கிட்ட மயங்கி நின்ன உன்னை என் இஷ்டத்துக்கு வளைச்சிருக்கலாம். நீயும் வளைஞ்சி குடுத்துருப்ப! ஆனா நான் அப்படி செய்யல! உன்னை ஒரு தடவ தொட்டுட்டு விட்டுட முடியும்னு தோணல எனக்கு! அதான் கட்டிக்கிட்டேன்! ராணி மாதிரி வச்சிப்பேன்டி உன்னை! எனக்கு நீ வேணும்! ஹ்ம்னு ஒத்த வார்த்தை சொல்லு பெரியவள அத்து விட்டுடறேன்” என உருகி நின்றவரை விட்டு விட முடியவில்லை மஞ்சுவால்.

தேவராஜ் வேண்டாமெனத் தடுக்கத் தடுக்க கணவனுடன் கிளம்பி விட்டார் அவர். தேவராஜீன் மேல் கடுப்பில் இருந்த அந்தக் கணவர், அதன் பிறகு பிறந்த வீட்டுப் பக்கமே மஞ்சுவைத் தொடர்பு கொள்ள விடவில்லை. அப்படியே அண்ணன் தங்கை உறவு விட்டுப் போனது! தன்னை மீறிப் போனத் தங்கையை தேவராஜூம் அடியோடு வெறுத்து ஒதுக்கி விட்டார்.

“காதல் கண்ணை கட்டவும் எல்லாத்தையும் தலை முழுகிட்டுப் போனேன் இவர் கூட! ஆனா கடைசில எனக்குக் கிடைச்சது வைப்பாட்டின்ற பட்டம் மட்டும்தான். மூத்த தாரத்த வெட்டி விடவே இல்ல. என் உடம்புல இளமை இருக்கற வரைக்கும் என் வீடே கதின்னு கிடந்தாரு! இப்போ இன்னொரு சின்னப் பொண்ணக் கட்டிக்கிட்டு அவ வீட்டுல விழுந்து கிடக்காரு! நான் அவர் வாழ்க்கைல வந்தப்ப அந்த முதல் பொண்டாட்டியும் அவரோட புள்ளயும் என்ன துடி துடிச்சிருப்பாங்க! இப்போ நானும் என் மகனும் அதே போல கிடந்து துடிக்கறோம்! கர்மாம்மா! விடாது கருப்பு அது!” என்று சொல்லி அழுதவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது இவளுக்கு.

“என் அய்த்தை மகன் என்ன செய்யறான்?”

அவரது அழுகையை நிறுத்தக் கேட்டாள் இவள்.

முகம் ஒளிர,

“ஊட்டில படிக்கறான்! புள்ள வேணாம்னு இருந்தாரு! என்னமோ தப்பிப் பொறந்துட்டான். உன்னை விட சின்னப்பையன்தான் அவன்! பேரு இந்திரன்” என்றார் மஞ்சு.

அதன் பிறகு இன்னும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அண்ணன் பொண்ணுன்னு உன்னை வீட்டுல கூட்டிப் போய் ஆசையா சீராட்ட முடியாது கண்ணு என்னால! அந்தப் பாவப்பட்ட வீட்டுல உன் கால் பட வேணாம் ராஜாத்தி. அடிக்கடி வர முடியாது என்னால! முடிஞ்சப்ப வந்து பார்க்கறேன்! அத்தை போன் நம்பர் குடுத்துட்டுப் போறேன்! உன் ஹாஸ்டல்லயும் குடுத்து வை கார்டியன்னு! எதாச்சும் அவசரத் தேவைன்னா கண்டிப்பா கூப்பிடு!” என்றவர் ஒரு கட்டுப் பணத்தை பேகில் இருந்து எடுத்து அவள் கையில் திணித்தார்.

“வேணாம் அத்தை” எனத் திடமாக மறுத்தாள் இவள்.

“ஓ!!! சரிடா!! புரியுது! நான் சம்பாரிச்ச பணம் இல்ல இது! என்னை சேர்த்துக்கிட்டவரோட பணம்னு நினைச்சு வேணாம்னு சொல்லறியா!!! ஆனா இந்த சங்கிலி உன் அப்பா எனக்கு செஞ்சு போட்டது! இதையாச்சும் மறுக்காம போட்டுக்கோ” எனக் கழுத்தில் கிடந்த சங்கிலியைக் கழட்டி அவளுக்கு அணிவித்தார் மஞ்சு.

“வரேன்டா கண்ணு! உன்னைப் பார்த்ததுல மனசு நெறைஞ்சிடுச்சு! மகராசியா இருடாம்மா” என அணைத்து விடுவித்து விட்டுக் கிளம்பினார் அவர்.

ட்ரைவர் ஓட்ட, காரில் அமர்ந்து போகும் அவரையே, கழுத்து சங்கிலியை வருடியபடி பார்த்து நின்றாள் இவள். தனக்கும் ஆபத்து அவசரத்துக்கு அழைக்கவென ஒரு சொந்தம் இருக்கிறது எனும் எண்ணம் மன நிறைவைக் கொடுத்தது தேவதாவுக்கு. மஞ்சு அத்தையைப் பற்றி சங்கத்தமிழனிடம் பகிர்ந்து கொண்டாள். அவரது இரண்டாம் தார வாழ்க்கையைப் பற்றியெல்லாம் அவனிடம் சொல்லிக் கொள்ளவில்லை. அத்தையாக இருந்தாலும் இன்னொரு பெண்ணின் அந்தரங்கத்தைக் கடைப்பரப்ப விரும்பவில்லை இவள்.

பகிர்ந்திருக்கலாமோ எனும் எண்ணம் ஒரு காலத்தில் தோன்றித் தொல்லைச் செய்யப் போகிறது என அறிந்திருக்கவில்லை இவள்.

(மை ஏஞ்சல்???)

(இனி திங்கள், புதன், வெள்ளிகளில் ஏஞ்சல் வருவாள்)

 




CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
172
Reaction score
732
Location
Ullagaram
ஐ திங்க்....இந்த மஞ்சு அத்தையாளோ, இல்லை அவங்களை கட்டிக்கிட்ட பல தார மணாளனாலேயோ ஏதோ பிரச்சினை வரப்போகுதுன்னு
என்னோட இன்னர் இன்ஸ்டின்ட்டும் சொல்லுது. சங்கு கிட்ட சொன்னது தான் சொன்னாலே, தன் அத்தையோட முழு கதையையும் சொல்லி இருக்கலாம் இல்ல. என்ன பொண்ணோ இவ...? நாம எதை முக்கியம் இல்லைன்னு நினைக்கிறோமோ, அது தான் முக்கியமாகிடும்ன்னு இன்னும் தெரியலையே இந்த ஏஞ்சலுக்கு.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top