• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சாத்திரம் ஏனடா..!-34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
484
Reaction score
705
Location
Theni
1714646841223.png

சாத்திரம் ஏனடா..!-34



”வாவ்.. அமேசிங், யூ ஆர் சோ டேலண்ட் சுமி. இவ்வளவு கலைப்பொருட்கள எப்படி கலெக்ட் பண்ண?” என்றார் ஜனார்த்தனன்.

“இந்த கலைப்பொருட்கள சேகரிக்க நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம், ஆனால் நம்ம பாரம்பரியத்தால மட்டுமே இதுவும் சாத்தியமாச்சு. நம்மளோட பாரம்பரியத்தில சீர் கொடுக்கிற முறை இருக்கு. தன்னோடத தன் பெண் பிள்ளைககுக்கு ஒவ்வொரு அம்மாவும் கொடுக்கிறது மூலமா ஒவ்வொரு வீட்டு பரன் மேலயும் குவிஞ்சு கிடைக்குது நம்மளோட பொக்கிஷங்கள். நாங்க பல ஊருகளுக்குப் போய் விசாரிச்சு கலெக்ட் பண்ணுனது இவ்வளவும். இந்த பொருட்களை பராமரிப்பதற்கு கஷ்டப்பட்டவங்க நாங்க கேட்கிறதுக்கு முன்னாடியே எடுத்துக் கொடுத்துட்டாங்க, இன்னும் பாதி பேர்கிட்ட போராடி என்னோட நோக்கத்தை சொல்லி கலெக்ட் பண்ணி வாங்கினது” சுமித்ரா தான் சேகரித்த கலைப் பொருட்களைப் பற்றி எடுத்துரைத்தார்.

“மை டியர்.. சச் எ ஆஸம் ஒர்க். பிஸினஸ் பக்கம் வராம ஒதுங்கி இருக்கியேன்னு நினைச்சேன். பட் லைப் இஸ் நாட் மணி, லைப் இஸ் எ பியூட்டிஃபுல் ஜெர்னி அண்ட் பிரீத் மீனிங்ஃபில். யூ ஆர் டிசர்வ்ட் மை டியர்” ஜனார்த்தனன் தன் மனைவியின் விடாமுயற்சியை மெச்சி பாராட்டிக் கொண்டிருந்தார்.

“ஏங்க.. நம்ம கண்காட்சியோட திறப்பு விழாக்கு கலாச்சாரத்துறை அமைச்சர் மதன் ரெட்டியை இன்வெய்ட் பண்ண ப்ளான் பண்ணியிருக்கோம், அவரை பார்க்கப் போறப்ப நீங்களும்கூட வரணும்”

“கண்டிப்பா போயிட்டு வரலாம் சுமி.. மொத்தம் எவ்வளவு கலெக்சன்ஸ் இருக்கு?”

“ஒவியங்கள் மட்டும் இருநூறு இருக்கு, எம்.எப்.ஹீசைன், பி. பிரபா, ஜி.ஆர்.சந்தோஷ் அதோட ரவி வர்மா ஒரிஜனல் பெயின்ட்டிங் இருக்கு, பழைய கலைப்பொருட்கள் மட்டும் நாநூறுக்கு மேல இருக்கு”

“நைஸ்.. இந்த அரிய கலைப்பொருட்கள என்.ஜி.எம்.ஏ(நேஷனல் கேலரி ஆஃப் மார்டன் ஆர்ட்) கேட்டு இருப்பாங்களே?”

“ஆமாங்க.. பெங்களுருல இருக்க தேசிய நவீன கலைக்கூடத்துல வைக்க கேட்டாங்க, எனக்கு விருப்பம் இல்லனு சொல்லிட்டேன்”

“ஏன் ..?”

“இங்க இருக்கிற அத்தனை பழமை மாறாத கலைப் பொருட்களும் தமிழ்நாட்டுல மட்டும் சேகரிச்சது, அதனால தமிழ்நாட்டுல இது இருந்தாதான் இதுக்கும் பெருமை, நம்ம ஊருக்கும் பெருமை. இதை யோசிச்சு பார்த்துட்டு நவீன கலைக்கூடத்தை நம்ம ஊருலயே பிரைவேட்டா அமைக்க முடிவு பண்ணிட்டேன்”

“நீ எது செஞ்சாலும் தெளிவா யோசிச்சு பண்ணுவ, எதுலயுமே யு ஆர் பெர்பெக்ட் டார்லிங்”

“இந்த டார்லிங் விடமாட்டிங்களா, எல்லோரும் வந்து போயிக்கிட்டு இருக்காங்க. ப்ளீஸ்.. எனக்கு இத பெர்பெக்ட்டா ஆர்கனைஸ் பண்ண ஆட்கள் தேவை, நீங்க கொஞ்சம் அதுக்கு சப்போர்ட் பண்ணுங்க”

“ஆர்கனைஸ் பண்ண... நம்ம ஆபீஸ் சீஃப் இன்டீரியர் டிசைனர் சாஸ்ருதிய வரச்சொல்றேன். இவ்வளவு பெரிய ஒர்க்க அந்த பொண்ண நம்பி தாராளமா கொடுக்கலாம். விஸ்வாகிட்ட சொல்லி சாஸ்ருதி டீமை அனுப்பி வைக்க சொல்றேன். அந்த டீம் உனக்கு ஒகேதான?”

“எஸ்.. நத்திங் இஸ்யூஸ்”

******

மும்மரமாக செய்தித்தாளை வாசித்தப்படி தேநீர்நீர் அருந்திக் கொண்டிருந்தான் விஸ்வா. அதைப் பார்த்துக் கொண்டே வந்த ரித்திகா அதீத கேலி வழிய, “என்ன ப்ரோ.. இன்னைக்கும் ஆறிப்போய் ஆடை விழுந்த டீயை குடிக்கிறீங்களா?”

“நோ டா.. இட்ஸ் ஹாட், உனக்கு இருக்க வாய்க்கு, நீயே செக் பண்ணு..” என்றவன் சூடான டீ கோப்பையை அவள் கையில் வைத்தான்.

“என்ன அண்ணா.. ஒர் பேச்சுக்கு கேட்டா இப்படியா செய்வீங்க..” சூடு பட்ட இடத்தை தேய்த்துவிட்டுக் கொண்டே, “நீங்க டீ குடிக்கிறத பார்த்தவுடனே அன்னைக்கு நீங்க சக்கரை இல்லாம ஆறிப்போன டீயை கூட ரசிச்சு குடிச்சிச்சீங்களே.. அந்த ஞாபகம் வந்துச்சு..”

“வரும்.. வரும்.. அம்மா நடத்தப்போற நவீன கலைப்பொருட்கள் கண்காட்சியைப் பத்தி நியூஸ் பேப்பர்ல போட்டிருக்காங்க. அதைதான் படிச்சிக்கிட்டு இருக்கேன்”

“அண்ணா.. நான் அந்த கண்காட்சிக்கு என்னோட ப்ரெண்ட் ஜானுவ கூப்பிட்டு வரலாமா?”

“கண்டிப்பா.. கூப்பிட்டு வா. உங்கள மாதிரி யங் ஜெனரேஷன் குழந்தைங்க நம்மளோட இந்த பழமையான பொருட்கள ஆர்வமா பார்க்கும்போது மட்டும்தான் அந்த பொருட்களோட மதிப்பு புரிய வரும். அந்த தொன்மை மாறாத கலைப்பொருட்களை நாம தொலைக்காம பாதுகாக்க வேண்டிய அவசியத்தை இது மூலமா தெளிவுபடுத்த வேண்டிதான், இந்த மாதிரி ஏற்பாட்டை உன்னோட பெரியம்மா செஞ்சிருக்காங்க. சோ நீ தாராளமா கூப்பிட்டு வா..”

“அதெல்லாம் சரி.. ஆல்ரெடி அந்த கண்காட்சி பத்தி பெரியம்மா கிளாஸ் எடுத்துட்டாங்க விச்சுண்ணா...என்னோட ப்ரெண்ட் ஜானவி உங்கள மீட் பண்ணனும்னு கேட்டா..”

விஸ்வா தேக அணுக்கள் சந்தோஷ கூச்சலிட்டது. இது தனக்கானவளின் பிரதேயகமான விளிப்பு ஆயிற்றே. “ஏய்.. ஜானவி உன்னோட ப்ரெண்டா..?” நிச்சயம் இது அப்ஸரா சார்ந்தவர்கள் மூலமாகவே இந்த அழைப்பு பற்றி ரித்திகாவுக்கு தெரிந்து இருக்கும் என யூகித்தான்.

“இல்ல.. என்னோட மோசமான எனிமி.. இரண்டு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும். எப்ப அபி அக்.. இல்ல.. அண்ணிக்கு பிடிச்ச செல்ல தங்கச்சின்னு தெரிஞ்சிச்சோ, அப்பயிருந்து அவ பின்னாடி அலையோ.. அலைன்னு அலைஞ்சு பெஸ்ட் ப்ரெண்ட் ஆகிட்டேன்

“உனக்கு சாராவ.. அவ்வளவு பிடிக்குமா..?” ஒரே நாளில் ஒருத்தரை இத்தனை பிடித்துவிடுமா என்ற வியப்புடன் கேட்டான்.

“ஆமா.. அவங்க நம்ம வீட்டுக்கு வந்தா தினமும் விளையாடலாமே...?”

‘ஹான்...’ என்ற அவனது முறைப்பில், ”ரொம்பா பிடிக்கும்.. உங்க சாராவ.. ஐ ஆல் சோ லவ் ஹெர்” என கத்திக்கொண்டே ஒடினாள்.

இவர்களின் சம்பாஷனையை கவனித்துக் கொண்டிருந்த ஜனார்த்தனன் சற்றே குழம்பினார். இத்தனை நாட்களாக அவன் காதலிப்பது தெரியும்.. அவன் காதலிக்கும் பெண் தங்கள் கம்பெனியில் பணிபுரியும் சாஸ்ருதி என தவறாக கணித்திருந்தார். அப்பெண் தன் மனைவியின் கோட்பாடுகளுக்கு ஒத்துவராதாவளாக இருப்பதால் சுமித்ரா இந்த காதலை ஏற்க மறுகிறாள் என உத்தேசிக்க, விஸ்வா காதலிக்கும் பெண் வேறு ஒருத்தியாக இருக்கையில் சுமித்ரா மறுப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என முதல் முறையாக அவருக்கு சந்தேகம் வலுப்பெறவே, தன் மகனிடமே நேரிடையாக கேட்டுவிட முடிவெடுத்தார்.

“என்னாச்சு ரித்து வந்தவுடனேயே கிளம்பிட்ட..?” விஸ்வாவின் எதிர்திசையில் அமர்ந்தவாரே கேட்டார் ஜனார்த்தனன்.

“கண்காட்சிக்கு ப்ரெண்ட கூப்பிட்டு வரவான்னு கேட்க வந்தா.. வந்த வேலை முடிஞ்சுச்சு கிளம்பிட்டா பா..” சிரித்தவாரே பதிலளித்தான்.

அவனது மகிழ்ச்சியில் அவரும் பங்கெடுத்ததின் அடையாளமாக அவர் இதழ்களிலும் புன்னகை, “ஓ.. கண்காட்சி அரேன்ஞ்மென்ட்ஸ பார்த்துக்க சாஸ்ருதிய அனுப்பி வைக்க சொல்லியிருந்தேனே..“

“அவ நேத்தே போயிட்டா பா.. நத்திங் டூ ஒரி. அவ எல்லாத்தையும் பார்த்துப்பா..” சாஸ்ருதியை பற்றி பேசும் போது அவன் கண்களில் காதல் அறவேயில்லை என கண்டுகொண்டார்.

“அந்த பொண்ணோட ஒர்க் நானும் கவனிச்சேன். ஷீ இஸ் எ பிரில்லியண்ட் கேர்ள்” சாஸ்ருதி பற்றிய பாராட்டுகளை தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டான்.

“விஸ்வா.. நீ எங்கேயாச்சும் அப்பா என்கிற உறவ மிஸ் பண்ணியிருக்கியா..? நிச்சயம் உன்ன அந்த நிலைமையில நிறுத்தி இருக்க மாட்டா.. சுமி மேல அந்த நம்பிக்கை இருக்கப்போய் நானும் வெளிநாட்டு பிஸினஸ கொஞ்சம் ஈடுபாட்டோட பார்த்துக்க முடிஞ்சுச்சு. இந்த குடும்பத்துல என்னோட ரோலையும் அவளே சேர்த்து பார்த்துக்கிட்டா.. நான் பிஸினஸ்ல மிக உயரத்தை அடைய முழுமுதற் காரணம்.. உங்க அம்மா மட்டும்தான்.”

“அம்மா ஒரு தேவதை.. என்னோட தேவைகள் என்னன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். அதேமாதிரி நீங்க எங்களுக்கு பக்கத்துல இல்லை என்கிற உணர்வையும் வரவிட்டது இல்ல..”

“ஆமா பா... சுமி எப்பவும் உனக்காக எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செய்யுறவ.. இப்ப உன்னோட கல்யாண விஷயத்திலயும் தப்பா முடிவு எடுத்து இருப்பான்னு நினைக்கிறீயா.. சுமி மேல நம்பிக்கை குறைஞ்சு போயிருச்சா என்ன..?”

“நிச்சியம் இல்லபா.. என்னோட பிடித்ததை பத்தி மட்டும் யோசிச்சு இருந்தா.. என்னோட காதலுக்குத் தடையா எதுவும் செஞ்சுருக்க மாட்டாங்க. ஆனா என்னோட கல்யாணத்துல அவங்க அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஸ்டேட்டஸ்க்கு.. அடுத்து அந்த பொண்ண வேரோட எடுத்துட்டு வந்து நம்ம வீட்டுல வைக்கணும்னு நினைக்கிறது. அப்படி நடந்தா நிச்சயம் எங்க வாழ்க்கை பட்டுப்போகும் பா.. அங்க வேர்விட்டு ஆழமா வளர்ந்தவள அங்கேயிருந்து பறிக்காம, தண்ணீர் ஊத்தி பராமரிச்சா போதும்.. தலைமுறைக்கும் நம்ம குடும்பத்துக்கு நிழலா இருப்பா... அதுலேயும் என்னோட சாரா.. குளிர்ச்சியோட வாசனை பூக்களையும் தூறலா பொழிவா..” தன் தாயின் எதிர்பார்ப்பும் அதில் அடங்கிய சங்கடங்களையும் துயரத்துடன் விளக்கினான்.

“உங்க அம்மா.. இப்படி எல்லாம் எதிர் பார்த்தாங்கன்னு அந்த பொண்ணு உன்கிட்ட சொல்லுச்சா..?” அதரங்களை எவ்வளவு விரிக்க முடியுமோ.. விரித்து பிரியா உதடுகளுடன் புன்னகை தந்தான் விஸ்வா. சாரா பற்றி அறியாதவர் ஆயிற்றே..!

“இல்லபா.. அவ அப்படி செய்ய மாட்டா.. அவள மீறி அகிலனும் சொல்ல மாட்டான். இது எல்லாமே அவ நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனவுடனேயே அம்மாவே என்கிட்ட சொல்லிட்டாங்க” என்றவன் அப்ஸராவை சந்தித்த தினம் முதற்கொண்டு கடைசியாக அவளிடம் சமாதானம் ஆன நாள் வரை அனைத்தையும் சொல்லி முடித்தான். ஆ..ங் அவனுக்கு தன்னவளுடன் நடந்த நிகழ்வுகளை எல்லாம் வரிசை மாறாமல் ஒப்புவித்தான், கனவிலும் வாழ்கிறானே..!



“அது மட்டுமில்ல பா.. எனக்காக அம்மா ஸ்டேடஸ தூக்கிப் போடவும் தயாரா இருந்தாங்க. ஆனா அகிலனோடு உள்ள நட்ப முறிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. அந்த நட்பு உடைய அவ ஒத்துக்கமாட்டா.. என் மேலேயுள்ள காதலுக்காக அப்படியே ஒத்துக்கிட்டாலும் அந்த நட்பை தொலைச்சிட்டு வெறுமையா வாழ்வா... அப்ப அவள பேஸ் பண்றது எனக்குக் கஷ்டம் பா..!” தன்னவளின் நிலையைப் பரிமாறிக் கொள்ளாமலே அவளை உணர்ந்தான்.

...........

“அம்மாகிட்ட நான் சொன்னது.. அகிலனோட நட்பைத் துறக்க அவளே தயாரா இருந்தாலும், எனக்கு விருப்பம் இல்லை பா. அவளோட சேர்ந்த அத்தனை உறவுகளும் எனக்கு வேணும்னு நினைக்கிறேன்..” விஸ்வாவின் நேசம் அந்த பெண்ணிடம் மட்டுமில்லை அவளுடன் இணைந்து இருக்கும் உறவுகள் மீதும் என்பதை புரிந்து கொண்டார்.

“உன்னோட மனசுல இவ்வளவு தூரம் பதிஞ்சிருக்க அந்தப் பொண்ண நானும் பார்க்கணும் விஸ்வா.. கண்காட்சிக்கு வரச்சொல்லு”

“இல்லபா.. அன்னைக்கு அம்மாவுக்கு ரொம்ப முக்கியமான நாள்.. அதுக்காக பல வருடங்களா கஷ்டப்பட்டு இருக்காங்க. அவளோட நான் வந்தா அது அம்மாவோட மனச பாதிக்கும்.. அது தேவையில்லாத வெறுப்பைக் கொண்டு வரும். கண்டிப்பா ஒரு நாள் உங்கள மீட் பண்ண வைக்கிறேன். எங்க காதல சேர்த்து வைக்க நீங்க உதவி பண்ணுங்க பா” தன் மகனின் தோளைத் தட்டி அதற்கு முழு சம்மதம் தந்தார்.

தொழிலில் அவனின் புத்திகூர்மையும், நேர்த்தியையும் கண்டவர் தனக்கு வாழ்க்கைத் துணையாக வரும் பெண்ணையும் சிரத்தையுடன் தேர்ந்தேடுத்து இருப்பான் என்பதில் ஐயப்பாடில்லை. விஸ்வா கூறியதை வைத்து.. அவர் யோசிப்பது சுமித்ரா அந்த பெண்ணை வெறுப்பதாகவும் தெரியவில்லை.. பின்னே எதற்காக இந்த பெண்ணை மறுக்கிறாள்.

ஆண்- பெண் நட்பு சமுதாய சீர் அழிவை உண்டாக்குவதாலா..?
 




Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
484
Reaction score
705
Location
Theni

AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,593
Reaction score
8,832
Location
Chennai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top