• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தடம் மாறும் பயணம் 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,398
Reaction score
1,835
Location
UAE
ஹாய் பட்டூஸ்

First Late ah வந்ததுக்கு Sorry sorry sorry. பசங்களுக்கு vacation, அது முடிஞ்சு திரும்பி வந்தா, dubai மலையில் online class மாட்டிக்கிட்டேன். இனி correct பதிவு வந்துரும்னு நம்புறேன். இன்னும் ஒரு மூணு பதிவில் கதை முடிஞ்சிடும்.

Happy reading

eiGHGDK83688.jpg

பயணம் 18


“இன்னும் ஒரு மாசத்துல எனக்கு கல்யாணம்!!!” அருந்ததி சொன்னதை கேட்ட பிரகாஷின் கைகள் சட்டென்று அவளிடமிருந்து விலகியது. தனிச்சையாக உடல் இரண்டடி பின் நகர்ந்தது. அதுவரை சுற்றியிருந்த மோக வலை அறுந்தது. தன் காதில் விழுந்த வார்த்தைகளை உறுதி படுத்திக்கொள்ள அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.


அவன் விலகலை உணர்ந்தாலும் பதுமையின் விழிகள் மூடியே இருந்தது. அதனால் பிரகாஷால் அவள் விழிகளை கொண்டு அவளது உணர்வுகளை படிக்க முடியவில்லை. ஆனால் அவன் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது, “உங்களை பிடிக்கலைன்னு நிரூபிக்க இதை விட பெரிய ப்ரூப் வேணுமா?” என்ற அவளது அலட்சியமான கேள்வி. அந்த அலட்சியத்திற்கு பின் கொட்டி கிடந்தது மழையளவு துயரமும் வருத்தமும்.


புருவம் சுருக்கியவன், “நீ என்ன சொல்ல வர?”


இப்போது கண்களை திறந்து அவன் முகம் பார்த்து, “என் கல்யாணத்துக்கு தேதி குறிச்சாச்சு. இன்னும் இருபத்தாறு நாளில் என் கல்யாணம். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறாங்க.” தெளிவாக, அழுத்தமாக சொன்னாள். தனக்குத்தானே மனதில் பதிய வைக்க முயன்றதால், அந்த அழுத்தம் என சொல்லவும் வேண்டுமா???


ஆம்! அருந்ததியின் சம்மதம் கிடைத்தவுடன் ஜோசியரைப் பார்த்து, ஒரே முகூர்த்த நாளில் அடுத்தடுத்து மூன்று திருமணங்களையும் நடத்த நாள் குறித்து விட்டனர். திருமணத்தை கோவையிலும், திருமண வரவேற்பை சென்னையிலும் நடத்த உள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை திருமண ஜவுளி, மாங்கல்யம் எடுக்க உள்ளனர். அன்றே பத்திரிக்கையை தேர்வு செய்து அச்சிடக் கொடுக்க போகின்றனர்.


“இந்தக் கல்யாண ஏற்பாடு உன்னோட விருப்பத்தோடு தான் நடக்குதா?”


“என் சம்மதம் இல்லாமல் எங்க வீட்டில எதுவும் செய்ய மாட்டாங்க?”


“அப்ப இது உன் விருப்பம்?”


“ஆமா!”


“மாப்பிள்ளை யார்? பேர் என்ன? என்ன பண்றான்?” அடுக்கடுக்காக கேட்டான்.


அவன் கேள்விகளுக்கு பதில் தெரியாத அருந்ததி, “ப்ச்! அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப் போறீங்க? வீட்ல பேசி முடிச்சிட்டாங்க. இனி என் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிப் போயிருங்க.”


“வீட்ல பேசி முடிச்சாங்க ஓகே. உனக்கு விருப்பமா?” மீண்டும் அதையே கேட்டான்.


“ஆமா”


“நல்ல யோசிச்சு சொல்லு, அந்த கல்யாணத்தை நீ விரும்பறையா?”


‘நானே கஷ்டப்பட்டு மனசு ரெடி பண்ணா இவன் வேற?’ என கோபம் வந்தது. அந்த எரிச்சலை மறைக்காமல், “ஆமா! ஆமா! ஆமா! ஏன் திரும்ப திரும்ப இதையே கேட்கறீங்க? நீங்க எத்தனை முறை கேட்டாலும் என்னோட பதில் ஒன்னு தான்… என் சம்மதத்தோடு தான் எல்லாம் நடக்குது” கத்தினாள்.


“சத்தமா பேசிட்டா ஒரு பொய் உண்மையாகிடாது. நான் கேட்டது உன் விருப்பத்தை பத்தி. சம்மதத்தை இல்லை”


அருந்ததியின் புருவங்கள் முடிச்சிட்டது. “ரெண்டும் ஒன்னு தான்…”


“இல்லை, ரெண்டும் வேற வேற… விருப்பம் இல்லாமலும் சம்மதம் சொல்லலாம்”


“அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் சம்மதிச்சு, என்னோட கல்யாண ஏற்பாடும் தொடங்கியாச்சு. நீங்க விலகிடுங்க…” அதுலயே நின்றாள்.


ஆடவனுக்கு கோபம் வந்தது. “அப்ப நீ என்னை விரும்புறது பொய்யா? ஈஸியா விலக சொல்ற…”


“குட் ஜோக்! நான் உங்களை விரும்புறேன்னு எப்ப சொன்னேன்? உங்க கற்பனைக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது” திடமாக சொன்னாலும் பதுமையின் மனம் கதறி துடித்தது.


“வெல் அது என் கற்பனையாகவே இருக்கட்டும்… அப்ப உன் காதல் உனக்கு வேண்டாம்?”


“நான் உங்களை காதலிக்கவே இல்லை, அப்புறம் வேண்டாமான்னு கேட்டா என்ன அர்த்தம்?” மனதை கல்லாக்கி கொண்டு சீறினால்.


“உன் மனச தொட்டு சொல்லு. நீ என்னை காதலிக்கலை?” உஷ்ணமாக கேட்டான்.


“இல்லை”


“என் மேல் சத்தியம் பண்ணு. அதை நான் நம்புறேன்.” சரியாக கிடுக்கு பிடி போட்டான்.


அருந்ததி மனம் பதற, “சத்தியம் எல்லாம் பண்ண முடியாது” அவசரமாக மறுத்தாள்.


“அப்ப வா, உங்க வீட்ல வந்து என்னை விரும்புறேன்னு சொல்லு.”


“உங்க பேச்சைக் கேட்டு, அவங்க சந்தோஷத்தை நான் கெடுக்க மாட்டேன்.”


“அதுக்காக விருப்பமே இல்லாம வீட்ல சொல்ற பையனை கல்யாணம் பண்ண போறயா?” எரிச்சலாக கேட்டான்.


அடிபட்ட பார்வை பார்த்தவள், “என் குடும்ப சந்தோஷம் எனக்கு முக்கியம். அதுக்காக நான் எதுவும் செய்வேன்.”


“சோ உன் குடும்பத்துக்காக உன் காதலை விட தயாராகிட்ட.”


“...”


“உன் குடும்பத்தை யோசிச்ச நீ, என்னை பத்தி யோசிச்சியா?”


‘உங்களைப் பத்தி யோசிச்சதாலும் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்… உங்களுக்கு நான் வேண்டாம்…’ சத்தமின்றி உள்ளம் கதறியது.


“நானும் என்னோட காதலும் உனக்கு ஒண்ணுமே இல்லையா?”


பதிலின்றி போக சற்று நேரம் அவளை வெறித்தவன், “ஓகே ஃபயின்! நம்ம காதலை உணர்ந்தும் நீ இப்படி ஒரு முடிவெடுத்திருக்க. தெரிஞ்சே எல்லாம் செய்ற உன்கிட்ட பேசி எந்த யூசூமில்லை. இனி நீயா வந்து என்னை விரும்புறதா சொல்ற வரை இதைப் பத்தி பேச மாட்டேன். அதுக்குள்ள காலம் கடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுக்கிறேன். இன்னைக்கு ஒரு நாள் என்னை அட்ஜஸ்ட் செஞ்சுக்கோ.” என்றவன் அடுத்த நொடி அந்த டென்ட்டை விட்டு வெளியேறினான்.


கால்கள் பலமில்லாமல் மடிய, சரிந்து கீழே அமர்ந்த அருந்ததி, முகம் மூடி, ‘நான் உங்க காதலுக்கு தகுதி இல்லாதவ. அந்தஸ்துக்கு பொருத்தமில்லாதவ. என்னை மறந்துட்டு உங்களுக்கு பொருத்தமான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ... நான் உங்களுக்கு வேண்டாம்’ என மனதோடு அறற்றினாள்.


தன் அழுகை அவனுக்குத் தெரியக்கூடாது என மௌனமாக கண்ணீர் வடித்தாள். நீர் வற்றும் வரை அழுது கரைந்தவள், அந்த அயர்வில் அப்படியே உறங்கியிருந்தாள்.


🌺🌺🌺


அவளை விட்டு சென்ற பிரகாஷ் மனம் கொதிக்க குளிரில் நின்றிருந்தான். கோபத்தில் மனம் எரிமலையாக கொதித்தது.


‘பைத்தியக்காரி! பொய் மேல பொய்! நீ என்னை விரும்பலைன்னு சொன்னா அதை நான் நம்பிடுவேனா? நான் என்ன, பிறந்த குழந்தை கூட அதை நம்பாது. நீ என்னை விரும்பாமத்தான், என்னை நம்பி ஆளில்லாத இந்த இடத்தில், என்கூட தனியா இருக்கியா? இந்த நம்பிக்கை உன் காதலை சொல்லலையா? காதல் இல்லாமல் தான் நான் தொடும் போது ஐஸ் கட்டியா உருகுனியா? ஒரு துளி பிடித்தமின்மையை, நீ காட்டியிருந்தாலும் நான் உன்னைவிட்டு விலகி இருப்பேன். ஆனா உன் குடும்பத்துக்காக நம் காதலை தூக்கிப் போட தயாராகிட்ட இல்ல.’ பிரகாஷின் மனம் தகித்தது. மனதோடு மருகி நின்றான். மனதின் வெம்மை கடுங்குளிரை கூட உணர விடவில்லை.


அதை நினைக்க நினைக்க பிரகாஷுக்கு மனம் ஆறவில்லை. நேரம் கடக்க, கோபம் குறைவதற்கு பதில் ஏறியது, ‘டாமிட்! நம் காதலுக்காக நான் என்னவெல்லாம் செஞ்சிருக்கேன் நீ ரொம்ப ஈஸியா அதை தூக்கி போடுற. இனி நீயா உன் காதலை சொல்லி, நான் தான் உனக்கு முக்கியம்னு வரணும். அதுவரை நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.’ கோபத்தில் பிதற்றினான்.


நீண்ட நேர அலைக்கழிப்பிற்கு பின் மனம் சற்று சமன்பட்டது. அதன் பிறகே ஊசியாக உடலை துளைத்த குளிரை உணர்த்தவனின் கால்கள், டென்ட்டை நோக்கி நகர்ந்தது. வாசலில் வந்து நின்றவன் சில நொடி தயக்கத்திற்கு பின் உள் நுழைந்தான்.


அமர்ந்தவாறு உறங்கியிருந்த தன் பேபி டாலை பார்த்தவனின் மனம் வலித்தது. அவள் கன்னங்களில் படிந்திருந்த கண்ணீரின் தடம் அவனுக்கு வேதனை அளிப்பதற்கு பதில் மகழ்ச்சியை கொடுத்தது. அவனுக்காக அவனவள் சிந்திய கண்ணீர், அவனுக்கு மகிழ்ச்சியளிக்காமல் இருக்குமா என்ன?


இவ்வளவு நேரம் மனதிலிருந்த தகிப்பு அடங்கியது. எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்த உணர்வின் கொந்தளிப்பு அடங்கியது. உதடுகள் லேசாக விரிந்தது. உடல் தளர அவளை நெருங்கி, பூப்போல் அவளை கைகளில் அள்ளி படுக்கையில் கிடத்தினான்.


சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், “ஏன் பேபி தேவையில்லாமல் உன்னை நீயே வருத்திகிற. உன் மனசில் என்ன குழப்பம்? அது என்னவா இருந்தாலும் அதை தூக்கி போடு. நான் உன்னை அப்படியே விட மாட்டேன். உன் கழுத்தில் தாலினு ஒன்னு ஏறுனா அது என் கையால் தான்… அது இன்னும் உனக்கு புரியலையா? இட்ஸ் ஓகே சீக்கிரம் புரிஞ்சிடும். அதுக்கு முன்னாடி உன் லவ்வை நீ என்கிட்ட சொல்லனும்…” அவள் முகம் மறைத்த முடியை விலக்கி பிறை நுதல், நாசி, கண்கள், கண்ணம் என இதமாக உதடு பதித்தவன், “ரொம்ப காக்க வச்சிடாத ஸ்மால் பேபி” என மீண்டும் ஒரு ஆழ்ந்த முத்தத்தை பதித்து, அவளை அணைத்துக்கொண்டு படுத்தான்.


அவன் தன்னை தூக்கியது, பேசியது, முத்தமிட்டது என எதையும் உணராமல் பதுமையென கிடந்தால் அருந்ததி. காலையில் அவள் எழும் முன்பே அவன் எழுந்து வெளியே சென்று விட்டான். அதனால் அது அவளுக்கு தெரியாமலே போனது. ‘நான் எப்படி படுக்கைக்கு வந்தேன்?’ என்ற குழப்பத்துடன் அன்றைய நாளை தொடங்கினாள். ‘மேபி தூக்க கலக்கத்தோடு வந்து படுத்திருப்பேன். அதனால் மறந்திருக்கும்’ தனக்குத்தானே பதிலும் சொல்லிக் கொண்டாள்.


சிறிது நேரத்தில் உள்ளே வந்த பிரகாஷின் பார்வை அவளில் படிந்தது. இரவு அணிந்திருந்த புடவையை இன்னும் மாற்றவில்லை. சிற்பமாக தன்முன் நின்ற பெண்ணை ரசிக்க தொடங்கிய கண்களுக்கு கஷ்டப்பட்டு தடை விதித்தான். அவளுக்கு தேவையான பேஸ்ட், பிரஸ், உடையை கொடுத்துவிட்டு சட்டென்று வெளியேறினான். பேசாமல் செல்லும் அவனை மனதில் வலியுடன் பார்த்திருந்தால் அருந்ததி.


அதன் பிறகும் பேசிக்கொள்ளாமல் தயாரானவர்கள், அவர்களது விமானம் வரவும், அதிலேறி சென்னையை அடைந்தனர். அவளது அப்பார்ட்மெண்ட் வாசலில் விட்டவன், “ஃபுட்டுக்கு ஆர்டர் போடுறேன். கொஞ்ச நேரத்தில் வந்துடும்” என அவள் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு, முறையாக விடை பெறாமல் காரை கிளப்பினான். அவனது பாராமுகம் அருந்ததியின் மனவலியை இரட்டிப்பாக்கியது.
 




Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,398
Reaction score
1,835
Location
UAE
அருந்ததி வீட்டை அடைந்ததும், உணவு இல்லாமல் உயிரை விட்டிருந்த கைபேசிக்கு உணவு வழங்கி அதை உயிர்பிக்க, ஏகப்பட்ட தவறவிட்ட அழைப்புகள் வரிசை கட்டி நின்றது. அதில் அன்னை, அண்ணன்கள், அனன்யாவின் அழைப்புகளை பார்த்து, மீண்டும் அவர்களுக்கு அழைத்து, “போன்ல ப்ராப்ளம். ரிப்பேருக்கு கொடுத்திருந்தேன். இப்பதான் கிடைச்சது” என பொய் சொல்லி சமாளித்தாள். கிட்டத்தட்ட இருபத்தி ஆறு மணி நேரம் அவளுடன் பேசாமல் பயந்திருந்தவர்களுக்கு இப்போது நிம்மதியானது.

அனன்யாவுக்கு அந்த சமாளிப்பு போதவில்லை. ஏதோ நெருடியது. ‘நான் கிளம்பும் வரை நல்லா இருந்த போன், திடீரென எப்படி ரிப்பேர் ஆகும்?’ தோன்றிய கேள்வி மனதோடு முடிந்தது. வார்த்தையாக வடிவம் பெறவில்லை.

“இன்னைக்கு நைட் கிளம்பி மார்னிங் வந்துருவேன் டார்லு” என்ற அனன்யாவிற்கு, “சரி” ஒற்றை வார்த்தை மட்டுமே பதிலாக கிடைத்தது.

“ஆர் யூ ஓகே டார்லு?” என்ற அனன்யாவின் சந்தேக கேள்வியில் சற்று சுதாரித்தவள், “எஸ் அனு, ஐ அம் ஓகே. நீ வா. மார்னிங் பேசிக்கலாம்.” என்றால் படபடப்புடன். அனன்யாவின் மூளை ஏதோ தவறாக உள்ளது என அடித்துக் கூற, உடனடியாக அவளிடம் செல்ல மனம் தவித்தது. ஆனால் அது முடியாதே. அவளது பஸ் மாலையில் தான் இருந்தது. பல்லை கடித்து பொறுத்துக்கொண்டாள்.

பிரகாஷ் ஆர்டர் செய்த உணவு வரவும், அதை உண்டு முடித்தவள் படுக்கையில் விழுந்தாள். மனம் முழுவதும் நேற்றைய சந்தோஷ தருணங்களின் ஊர்வலம். ஆனால் இப்போது மகிழ்ச்சிக்கு பதில் கண்களில் நீர் சுரந்தது.

மாலையில் எழுந்தவள் இருந்ததை கொறித்துவிட்டு, சிறிது நேரம் தொலைக்காட்சியில் ஆழ்ந்தாள். அதில் வந்த காதல் பாடல்கள் ஏக்கம் கொள்ள வைத்தது.

உள்ளம் பாரமாக தொலைக்காட்சியை அணைத்தவள், தன்னவனின் நினைவில் மூழ்கினாள். சோஃபாவில் குறுகி படுத்தவள் தன்னை மறந்து உறங்கியிருந்தால். காலிங் பெல் சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்தவளுக்கு, பொழுது விடிந்ததே அப்போதுதான் தெரிந்தது. அனன்யா வந்து விட்டிருந்தால்.

அருந்ததியை பார்த்த அனன்யாவிற்கு, தான் செல்லும்போது இருந்த நிலையை விட, இப்போது இன்னும் மோசமாகி இருப்பதாக தோன்றியது. ‘இவளை தனியே விட்டு சென்றிருக்கக் கூடாது’ என நினைத்த மனம் வேதனையுற்றது. அதை அருந்ததியிடம் காட்டிக் கொள்ளாமல், “இப்பதான் எழுந்திருக்கிறாயா டார்லு? ஆபீஸுக்கு டைம் ஆச்சு. சீக்கிரம் கிளம்பு” என அவளை அவசரப்படுத்தி குளியலறைக்குள் தள்ளிவிட்டு, அவளும் தயாரானால்.

அருந்ததிக்கு அலுவலகம் செல்ல மனமே இல்லை. பிரகாஷை எதிர்கொள்ளும் தைரியம் சுத்தமாக இல்லை. ஆனால் ஆசை கொண்ட மனம், ‘இன்னும் கொஞ்ச நாள். இன்னொருத்தருக்கு மனைவியாகிட்டா பிரகாஷை பார்க்கிற தகுதியையும் இழந்திடுவ’ என அவளை வீட்டில் முடங்க விடாமல் துரத்தியது.

பயமும் பதற்றமுமாக அலுவலகம் நுழைந்தாள். அவள் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. பிரகாஷ் எப்போதும் போல் அவளுக்கு வேலை சொல்லிக் கொண்டிருந்தான், சில மாற்றமாக அவனது முகம் இறுகிப் போயிருந்தது. ஆளை கவர்ந்திருக்கும் காந்த பார்வை மாயமாகியிருந்தது. அவனிடமிருந்த பழைய கலகலப்பு காணாமல் போயிருந்தது.

🌺🌺🌺

“அருமா ஃப்ரீயா? உன் கூட பேசலாமா?” என வந்து நின்றான் ஹரி. இருக்கும் மனநிலையில் அவனுடன் சகஜமாக பேச முடியுமா? என தெரியாமல் ஏனோதானோவென தலையை உருட்டி வைத்தாள் அருந்ததி.

“ஆக்சுவலி அன்னைக்கு பார்ட்டி முடிஞ்சதுமே உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன். பட் ஒர்க்ல மாட்டிக்கிட்டேன். இப்பதான் அது கம்ப்ளீட் ஆச்சு.”

இதை எதற்கு என்னிடம் சொல்கிறான் என புரியாமல் பார்த்தாள்.

“விபி உனக்கு பர்ஃபெக்ட் மேட்ச். உனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்குன்னு புரிஞ்சது. அவருக்கும் தான். சில பார்ட்டிகளுக்கு நானும் அவர்கூட போயிருக்கேன். எத்தனையோ பெண்கள் அவரை அட்ராக்ட் பண்ண முயற்சி பண்ணுவாங்க. அவங்களையெல்லாம் எட்ட நிறுத்திடுவார். ஆனா அவர் உன்கிட்ட நெருங்கி வர மாதிரி இருந்தது. உங்க விருப்பத்தை சொல்லிட்டீங்களா தெரியாது, பட் மனசார சொல்றேன் போத் ஆஃப் யூ ஆர் மேட் ஃபார் ஈச் அத...” என்றவனுக்கு நெஞ்சம் அடைத்தது. பேச்சை பாதியில் நிறுத்தினான். கண்களை இறுக மூடி, நெஞ்சை நீவி தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றான். அதிர்ந்து அவனைப் பார்த்திருந்த அருந்ததிக்கு அவனது வேதனை மனதில் பதியவில்லை.

சிறிது நேர அமைதிக்கு பிறகு, ஒரு பெருமூச்சுடன், “உனக்கு துரோகம் பண்ணி உன் வாழ்க்கையை கெடுத்துட்டேனு ரொம்ப தவிச்சிட்டு இருந்தேன். இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா நல்லா இருக்கும். சரி டைம் ஆச்சு. உன்னை அப்புறம் பார்க்கிறேன்” தன் மனதில் உள்ளதை கடகடவென பேசிவிட்டு விடைபெற்றான். அவள் பதில் பேசாததை அவன் உணரவே இல்லை.

அருந்ததி ஸ்தம்பித்துப் போயிருந்தாள். ‘ஹரி மாதிரியே அன்னைக்கு பார்ட்டியில் எங்களை பார்த்த எல்லோரும், நாங்க லவ்வர்ஸுனு நினைச்சிருப்பாங்கல? இதை எப்படி யோசிக்காம விட்டேன்? இப்ப எனக்கு வேற ஒருத்தரோட மேரேஜ்னு இன்விடேஷன் கொடுத்தா, எல்லாரும் என்னை தப்பான பொண்ணா நினைப்பாங்க. அதனால் இங்க இருக்க யாருக்கும் என்னோட கல்யாணம் தெரிய வேண்டாம்’ என தன் திருமணத்தை அலுவலகத்தில் மறைக்க முடிவு செய்தால்.

இதை அவள் மட்டும் முடிவு செய்தாள் போதுமா என்ன?

🌺🌺🌺

அவர்கள் அந்தத் தீவிற்கு சென்று வந்து ஐந்து நாட்கள் கடந்திருந்தது. பிரகாஷின் இறுக்கம் சற்றும் குறையவில்லை. இஞ்சி தின்ற குரங்கு போல் முகத்தை வைத்துக்கொண்டு சுற்றினான். அருந்ததியின் மனம் படாத பாடுபட்டது. கடக்கும் ஒவ்வொரு நொடியும் நரகமாக நகர்ந்தது. அவன் பிறந்த நாள் பார்ட்டியில் (முதல் சந்திப்பு) சிரித்த முகமாக இருந்த அவனின் முகம் கண் முன் தோன்றியது. அந்த சிரித்த முகத்தை மீட்டெடுக்க பேராவல் கொண்டது பதுமையின் உள்ளம். அது தன்னால் முடியும் என்றாலும், அதை செய்ய முடியாத தன் கையாலாகாத தனத்தை அறவே வெறுத்தாள்.

ஹரியின் துரோகத்தால் காதலையே வெறுத்து, தவறான வழியில் சென்று கொண்டிருந்த அருந்ததி, பிரகாஷை சந்தித்த பிறகு தன்னை மாற்றினாள். இப்படிக்கும் அவன் அட்வைஸ் செய்து அவளை மாற சொல்லவில்லை. குடிக்காரி, பல ஆண்களுடன் பழகும் பெண் என தூற்றவில்லை. ஏன் இப்படி இருக்கிறாய் என அருவருப்பாக பார்க்கவில்லை. அவளை அவளாகவே பார்த்தான். அன்று அவன் வரம்புகளை மீறி பேசி இருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும் அதில் துளி காமம் இல்லை.

‘நீ என்னவள். எனக்கே எனக்கானவள்’ என்ற உரிமை மட்டுமே அவன் தொடுதலில் உணர்ந்தாள். வரம்பு மீறிய பார்வையும் பேச்சும் அவளிடம் மட்டுமே காட்டினான் என்பதும் அவளுக்குத் தெரியும். ஏனோ அவன் தொடுதலை அவள் உடலும் மனமும் ஏற்றுக்கொண்டது. அதை உணர்ந்து மனம் அதிர்ந்தாலும் அவன் நெருக்கத்தை ரசித்தால். உரிமை இல்லாத அவன் தொடுதலை மறுக்காததால், தன்னைத் தவறாக நினைத்திருப்பான் என தெரியும்… ஆனாலும் மனம் அவன் அன்மையை ஏற்றது.

அதன் பிறகும் சந்தித்த ஒவ்வொரு முறையும் அவனது நெருக்கத்தை காட்டினான். உரிமையாக பேசினான். சிரிக்க வைத்தான். முறைக்க வைத்தான். வெட்கப்பட வைத்தான். உலகை ரசிக்க வைத்தான். மொத்தத்தில் அவனையே நினைக்க வைத்தான். அவளுக்குத் தெரியாமலேயே அவளது மன வேதனையில் இருந்து வெளிக்கொண்டு வந்தான்.

அலுவலகத்தில் எடுக்கும் முடிவுகளை அவளை கேட்டே எடுத்தான். தான் வேறு அவள் வேறு அல்ல என அனைத்து இடத்தில் பறைசாற்றினான். அவனுடன் இருக்கும்போது அருந்ததியின் மனதில் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தது.

அவளுக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தான் என சொல்ல முடியாது, ஆனால் உன்னுடன் நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை விதைத்தான். அவனுடன் இருக்கும் போது பாதுகாப்பாக உணர்ந்தால். காதலை வெறுத்தவள் அவன் காதலில் கட்டுண்டால்.

மூன்றெழுத்து மந்திர வார்த்தையை சொல்லவில்லை. ஆனால் அதை உணர செய்தான் அந்த கள்வன், அவளை முழுதாக ஆட்கொள்ள போகும் பதுமையின் கள்வன்.

அப்படிப்பட்ட பிரகாஷின் பாராமுகம் பெண்ணை வதைத்தது. எப்போதும் குறுகுறுவென பார்த்து, துருதுருவென பேசும், அவனின் தற்போதைய அமைதி, அருந்ததியின் அமைதியை குலைத்தது. அவள் விழிகள் ஏக்கத்துடன் அவனை தழுவியது. அதை உணர்ந்தாலும் அதற்கான எதிர் வினையாற்றாமல் கல் போல் இறுகி இருந்தான் ஆடவன்.

அவள் நினைத்தால், தானே அடைப்பட்ட கூண்டிலிருந்து எளிதாக வெளிவரலாம். அதை உடைத்து வெளிவராமல், அவளையும் வருத்தி அவளவனையும் வருத்திக் கொண்டிருக்கிறாள் அந்த பதுமை பெண்.

அன்று (வியாழன்) மாலை பிரகாஷிடம் விடை பெற்று வெளியில் வந்தால் அருந்ததி. அனன்யாவிற்கு ஏதோ அவசர வேலை இருந்ததால் தங்களது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டாள். புக் செய்த கேப் வருவதற்காக நுழைவாயிலில் காத்திருந்தாள் அருந்ததி.

அந்த நேரம் வெளியில் வந்த பிரகாஷ் அவளை கண்டும் காணாமல் கடந்து சென்றான். அருந்ததியின் பார்வை ஏக்கத்துடன் அவனைத் தொடர்ந்தது.

சில அடி தூரம் நடந்திருப்பான், “விபி சார்” என கேட்ட குரலில் திரும்பினான். அருந்ததியின் பார்வையும் குரல் வந்த திசையில் திரும்பியது. அவசர அவசரமாக அவனை நெருங்கினாள் மாயா.

“ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” கொஞ்சி நின்றாள். என்ன என்பது போல் பார்த்தான் பிரகாஷ். அருந்ததியின் புருவங்கள் முடிச்சிட்டது. கண்கள் அவளை அளந்தது. முகம் கழுவி, அதீத ஒப்பனையுடன், ஃப்ரஷாக வந்திருந்தாள். அவள் உடையோ பயங்கர கவர்ச்சியாக இருந்தது. அதை கண்ட பதுமை பெண்ணின் முகம் ஒவ்வாமையை காட்டியது.

“என்னோட ஸ்கூட்டியை சர்வீஸ்க்கு கொடுத்திருக்கேன். போற வழியில் என்னை ட்ராப் பண்ண முடியுமா?” கண்கள் பட படக்க, நெளிந்து வளைந்து நாணி கேட்டாள். அருந்ததியின் கண்கள் அதிர்ந்து விரிந்தது. மாயாவை ஒரு தினசாக பார்த்தவன், திரும்பி அருந்ததியை பார்த்தான். அவள் முகத்தில் என்ன கண்டானோ?

“ஸுயர்” என தன் காரை நோக்கி நடந்தான். அருந்ததியை பார்த்து வெற்றி புன்னகை சிந்திய மாயா அவனை பின் தொடர்ந்தால். மாயாவின் எண்ணம் புரிந்த அருந்ததி சிலையாக நின்றாள்.

அடுத்து நடந்த நிகழ்வை பார்த்த அருந்ததியின் காலின் கீழ் பூமி நழுவியது.

🌺🌺🌺

ஒரு பெண்ணை விரும்பி, நிச்சயம் முடிந்த நிலையிலும் மாயாவிடம் தடுமாறி நின்றான் ஹரி. பிரகாஷ் அருந்ததியின் இடையிலான உறவு உறுதிப்படாத நிலையில், மாயாவிடம் அவன் உள்ளம் தடுமாறுமா?

🌺🌺🌺

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை, அழகாக புடவை உடுத்தி அலுவலகம் வந்தாள் அருந்ததி. பிரகாஷின் ரசனை பார்வைக்காக காத்திருந்தவளுக்கு கிடைத்ததோ ஏமாற்றம். அன்று அவன் அலுவலகத்துக்கு வரவே இல்லை.

முன்தின மாலை நடந்த நிகழ்வு, இன்று அலுவலகம் வராத பிரகாஷ், முன்பு ஹரியுடன் ஏற்பட்ட இதே நிலை, அனைத்தையும் இணைத்து பார்த்த அருந்ததியின் உள்ளம் தடுமாற தொடங்கியது…

அலுவலகத்திற்கு மீண்டும் வந்தபோது அவள் வேலையை ரிசைன் பண்ணுவதற்கு சம்மதித்திருந்தான் பிரகாஷ்.

தடம் மாறுமா பயணம்…
 




vijirsn1965

இணை அமைச்சர்
Joined
Dec 10, 2018
Messages
928
Reaction score
642
Location
chennai
Eppadi eruvarukkum sariyaka pokirathu theriyavillai naduvil Maya vanthu kuzhappukiraale sikkal perithaki konde pokirathe
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top