• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தென்கொரியாவில் தேன்மொழி - 42

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

துமி

மண்டலாதிபதி
Author
Joined
Mar 15, 2022
Messages
412
Reaction score
1,653
Location
Karur
அத்தியாயம் 42

கொரிய வகுப்பிற்கு செல்வதற்கு தயாராகி, பேருந்து நிறுத்ததை நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தாள் தேன்மொழி. அவளை தூரத்தில் கண்டதுமே, ஏதோ ஒன்று தோன்ற அவள் முன் வந்து நின்றான் ஜீ சோ.

"அன்யோங் டேன்மொயா…" என்றவாறே, எதிரில் வந்து நின்றான் ஜீ சூ.

"என் பேரு டேன்மொயா இல்லை… தேன்மொழி. தே… ன்… மொ… ழி… தேன்மொழி…" என்று வகுப்பெடுத்தாள் தேன்மொழி.

"டேன்மொயி…"

"தேன்மொழி…"

"தேன்மொயி…"

"தேன்மொழி…"

"தேன்மொயி…"

"உன் நாக்குல வசம்பை வச்சி தேய்ச்சாலும் என் பேர் உனக்கு ஒழுங்காவே வராது போல…" என்று அவனை முறைத்துக் கொண்டே சொன்னாள்.

"என்ன?" என்று ஜீ சோ கேட்க,

"ஒன்னுமில்லை…" என மறுத்தாள்.

"டேன்னா எனக்கு ஒரு ஹெல்ப்பு பண்ணுறியா?"

"என்ன‌ ஹெல்ப்?"

"புதுசா ஒரு டிராமா புரொடக்ஷன் கம்பெனில ஜாயின் பண்ணிருக்கேன்."

"ம்ம்ம்…"

"இப்ப புது டிராமா அதுல ஒன்னு எடுக்கறாங்க. அதுல ஹீரோயின் இந்டியாவுல இருந்து தான் வந்துருக்க மாதிரி இருக்கும். அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும்." என்று தலையும் வாலும் புரியாத மாதிரியே பேசினான் ஜீ சோ.

'பைத்தியமா இவன்' என்பது போல் அவனை பார்த்தவள்‌, "இல்ல எனக்கு டைம் இல்லை." என்றவாறே நடக்க ஆரம்பித்தாள்.

"டேன்மொயா…" என்று அவள் பின்னோடு வந்தவன், அவளை நிறுத்துவதற்காக அவள் கையை பிடிக்க, அனிச்சை செயலாக, பிடித்த அவனை கையை முறுக்க ஆரம்பித்தாள் தேன்மொழி.

"ஆஆஆஆ…" என்று ஜீ சோ வலியில் அலற,

"பக்கத்து வீட்டு பையனாச்சே… அடிக்கடி ஹெல்ப் பண்ணுறீயேனு பேசினா, கையவா பிடிக்கற…" என்று அவனை அடிக்க ஆரம்பித்தாள் தேன்மொழி.

"க்ருமான் டேம்மொயா… க்ருமான்…" என்று‌ அவன் அலற,

"எப்ப பாத்தாலும் என்‌ பேரை ஏன் டா கொதறி வைக்கிற?" என்று அதற்கும் சேர்த்து இரண்டு அடி போட்டாள் தேன்மொழி.

எப்படியோ அவள் அடிகளில் இருந்து ஒருவாறு தப்பித்து, மூச்சு வாங்க பார்க்கவே மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்தான் ஜீ சோ.

"டேன்மொயா நான் சொல்லுறத கொஞ்சம் கேளேன்." என்று பொறுமையாக விளக்க ஆரம்பித்தான்.

ஜீ சோ இப்பொழுது புதிதாக, சின்ன திரை நாடகங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணி புரிய ஆரம்பித்துள்ளான். இப்பொழுது, அவர்கள் துவங்கியிருக்கும் நாடகத்தில், கதாநாயகி இந்தியாவை சேர்ந்தவள். அதற்காக, நாயகியாக நடிக்கப் போகும் பெண்ணிற்கு, நடை, உடை, பாவனைகளை பற்றி சொல்லி தர ஆள் வேண்டும் என்பதால், தேன்மொழியிடமே கேட்கலாம் என்று வந்திருந்தான்.

"ஓஓஓஓ… அப்படியா?" என்று புரிந்தது போல கேட்டுக் கொண்டவள், "முடியாது." என்று‌ மறுத்தாள்.

"வே? வே? வே?" என ஏன் என்பதையே விடாமல் கேட்டான் ஜீ சோ.

"டிராமா பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நான் அங்க வந்து என்ன சொல்லி தருவேன். நீங்க வேணா வேற‌ யாரையாச்சும் கூப்பிட்டுக்கோங்க…"

"இல்ல டேன்மொயா நீ தான் கரெக்ட்டா சொல்லி தருவ…"

"ம்ஹூம்… என்னால முடியாது."

"பார்ட் டைம் வேலைக்கு குடுக்கற காசுக்கு மேல டபுளு டைம் காசு வாங்கி தர்றேன். ப்ளீச்சு டேன்மொயா…" என்று கெஞ்சினான் அவன்.

பணம் என்றதும் மூளைக்குள் ஒரு பட்சி ஓடியது தேன்மொழிக்கு. எல்லாவற்றிற்கும் தந்தையையே நாடி செல்ல வேண்டி உள்ளது என்பது, உண்மையில் அவளுக்கு தர்மசங்கடத்தை அளித்தது. ஏனெனில், சொந்த ஊரில் இருந்தது போல, இங்கு அவர்கள் ஒன்றும் செல்வ செழிப்பாக வாழவில்லையே! ஆகையாலே, எதாவது கேட்க வேண்டுமென்றாலும் தயக்கம் தான் வருகிறது தேன்மொழிக்கு.

ஜீ சோ பகுதி நேர வேலைக்கு தரும் பணத்தை விட இருமடங்கு தருகிறேன் என்றதும், உள் மனது கணக்கு போட்டது.

"இரண்டு மடங்கு காசு யாராச்சும் தருவாங்களா? சும்மா சொல்லாத…" என்று கொஞ்சம் பிகு செய்தாள் தேன்மொழி.

"ட்ரஸ்ட்டு மீ டேன்மொயா… நான் உனக்கு மூனு மடங்கு சம்பளம் வாங்கி தர்றேன்." என்றான், உணர்ச்சி வேகத்தில், அவளை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு!

"மூனு மடங்கா…!" என்று அதிர்ந்தவள்,

"ஓகே நான் வர்றேன். ஆனா இன்னைக்கு கொரியன் கிளாஸ் இருக்கு. அது முடிஞ்சதும் தான் வருவேன். ஓகே யா?" என்று கேட்டாள்.

"கோல்…" என்று ஒப்புக் கொண்டான் ஜீ சோ.

"டேன்மொயா கொரியன் கிளாஸ்க்கு தனியாவா போற?" என்ற கேட்டபடியே அவளோட நடந்தான்.

சிறிது தூரம் அவளோடு நடந்தவன், அப்படியே அவள் பயிலும் வகுப்பிற்கும் சென்றான். அவள் உள்ளே சென்ற பின்பும் அங்கேயே நின்றிருந்தான் அவன்.

தேன்மொழி சரியாக வெளியே வரும் நேரம், அவளுக்கென ஒரு ஐஸ்கிரீம் மில்க் ஷேக்கையும், அவனுக்கு ஒரு டின் காபியினையும் வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.

"மோகோ…" என்றா சொல்லி அவளிடம் ஒன்றை கொடுத்தான்.

லேசாக அதை உறிஞ்சியவளுக்கு அதன் சுவை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

"என்னதிது? டேஸ்ட் சூப்பரா இருக்கு!" என்றாள் தேன்மொழி.

"ஐஸ்சுகிரீம் மில்க் ஷேக்கு…" என்றான் ஜீ சோ.

"ஓஓஓஓ…" என்றவள் அதை ரசித்துக் குடித்தாள்.

"டேன்னா இப்போ நாம கிளம்பலாமா?" என்று கேட்டான் ஜீ சோ.

"எங்க?" என்றா முன்பு நடந்த பேச்சு வார்த்தைகளை மறந்தவளாய் கேட்டாள் தேன்மொழி.

"அதான் சொன்னேனே… டிராமா செட்டுக்கு…" என்றான் ஜீ சோ.

அவன் சொன்ன பின்பு தான் நியாபகம் வந்தது தேன்மொழிக்கு. பணம் என்றதும் காலையில் ஒப்புக் கொண்டாள்; இப்பொழுதோ பெரும் தயக்கமாக உணர்ந்தாள். ஏனெனில் தெரியதா ஊர், புரியாத மொழி, உதவி கேட்பவனோ அயலான். மனம் அடித்துக் கொண்டது.

"ஒப்பா…" என்றாள் தேன்மொழி. தன்னிடம் இருக்கும் அத்தனை பற்களையும் காட்டினான் ஜீ சோ.

"ஏ டேன்மொயா…"

"இல்ல நான் அவசியம் வந்தே ஆகணும்?" நெளிந்துக் கொண்டே கேட்டாள்.

"ஏன் உனக்கு விருப்பம் இல்லையா டேன்மொயா? நீ வருவன்னு டிராமா காம்தோங்னிம் (இயக்குனர்) கிட்ட சொல்லிட்டேனே…" என்று தலையில் கையை வைத்துகஅ கொண்டான் ஜீ சோ.

"அதில்லை… நீங்க சொல்லுற இடம் வீட்டுல இருந்து ரொம்ப தூரமா இருக்கும் போல… அவ்வளவு தூரம்லாம் அப்பா இல்லாம நான் வெளிய போனதில்லை." என்று தன் தயக்கத்தை எடுத்துரைத்தாள் தேன்மொழி.

அதை கேட்டதும், "அவ்வளவு தானா? நான் கூட நீ வர மாட்டியோன்னு நினைச்சி பயந்துட்டேன்." என்று சிரித்தான்‌ ஜீ சோ.

"இரு அஜூசிட்ட கேட்டுட்டே உன்னை கூட்டிட்டு போறேன். அப்ப உனக்கு ஓகே தானே?" என்று கேட்டான் ஜீ சோ. குழப்பமாக மண்டையை ஆட்டினாள்.

தேன்மொழியிடம் இருந்து எண்ணைப் பெற்று சத்யனுக்கு அழைத்து விசயத்தை சொன்னான் ஜீ சோ. இதுவரை தேன்மொழியை எங்கேயும் வெளியே, சுற்றிப் பார்க்கவென அழைத்து செல்லாமல் இருந்தது அப்பொழுது தான் சத்யனுக்கு உரைத்தது. இந்த சந்தர்ப்பத்திலாவது, அவள் வெளியே சென்றுவிட்டு வரட்டும், கூடவே அன்று நடந்த களேபரத்தினால், அவள் மனதில் ஏதேனும் கசடு இருந்தால், அதற்கு சற்று வடிகாலாகவும் இது இருக்குமென்று எண்ணி, அதற்கு சம்மதித்தார் சத்யன்.

முதன் முறையாக சொந்தங்களின் துணை இன்றி, வெகு தூரம், அந்நியன் ஒருவனுடன் பயணிப்பது, அடிமனதில் லேசான பயத்தை கொடுத்தாலும், அந்த பயணமானது அவளுக்கு மகிழ்ச்சியையும் தராமலில்லை. சன்னலின் வழியே தெரிந்த வானூயரந்த கட்டிடங்களையும், மனிதர்களையும், சாலையின் இருமங்கிலும் இருந்த மரங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றாள் தேன்மொழி.

"டேன்னா இறங்கி இடம் வந்துடுச்சு…" என்று சொல்லி, அவளை அழைத்துக் கொண்டு இறங்கினான் ஜீ சோ.

ஜீ சோவும் தேன்மொழியும் வந்து சேர்ந்தது, புக்சோன் ஹானோக் கிராமம் (Bukchon Hanok village) எனுமிடத்திற்கு தான். அங்கிருக்கும் வீடுகளையும், ஹான்பொக் எனும் பாரம்பரிய உடை அணிந்து அங்கும் இங்கும் அழகாய் நடமாடும் பெண்களையும் ஆவென்று பார்த்துக் கொண்டே நடந்தாள் தேன்மொழி. அவள் கண்களை வியப்பில் விரிவதை ரசித்துக் கொண்டே நடந்தான் ஜீ சோ.

"இன்னும் எவ்வளவு தூரம் நடக்கனும்?" என்று கடுப்போடு கேட்டாள் தேன்மொழி. ஏனெனில்‌, எப்பொழுது பார்த்தாலும் கொரியர்கள் நடந்துக் கொண்டே இருப்பதால், தானும் நடக்க வேண்டி இருப்பதால், வந்த கடுப்பு அது.

"பக்கத்துல வந்துட்டோம் டேன்னா… அதோ அந்த இடம் தான்." என்று ஒரு இடத்தை சுட்டிக் காட்டினான் ஜீ சோ.

அவன் காட்டிய இடத்திற்கு செல்ல எப்படியும் அரை பர்லாங்கு தூரமாவது இருக்கும்.

"அவ்வளவு தூரமா?" என்று மூக்காலே அழுதாள் தேன்மொழி.

ஜீ சோ நினைத்திருந்தால், வாடகை காரிலே அவளை அழைத்து வந்திருக்கலாம். ஆனால் அவனோ தேன்மொழியிடம் தன்னை ஒரு பணக்காரனாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை. முடிந்தவரை தன்னை எளிமைபடுத்திக் கொண்டான்.

"கொஞ்ச தூரம் தான். வா டேன்மொயா…" என்று அவன் சொல்ல, அவனை முறைத்துக் கொண்டே நடந்தாள்.

இருவரும் படப்பிடிப்பு இடத்தை நெருங்க, அந்த நாடகத்தின் புரொடக்ஷன் மேனேஜர் ஜீ சோவை கண்டு விட்டார். அவரிடம் தான் ஜீ சோ உதவியாளராக புதிதாக சேர்ந்துள்ளான்.

"ஜீ சோயா…" என்று அவர் கத்தி அழைக்க, அவரை நோக்கி வேகமாக ஓடினான் ஜீ சோ.

ஜீ சோ தன்னை விட்டு செல்வதை கூட கவனிக்காமல், பெரிய பெரிய கட்டிடங்களாய் இருந்தவற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எவ்வளவு பெருசா இருக்கு! இதுலாம் என்னனே தெரியலையே…" என்று ஜீ சோ அருகில் இருப்பதாக எண்ணிக் கொண்டே பேசினாள் தேன்மொழி.

பின்னாடி பாராமலே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள், யாரின் மீதோ மோதினாள்.

"அயிஷ்…" என்று சத்தம் வரவே திரும்பி பார்த்தாள் தேன்மொழி.

அழகாய் கொரிய பாரம்பரிய உடையில், ஒரு பெண் தரையில் விழுந்து கிடந்தாள்.

அவசர அவசரமாக, "ஜிசோம்பித்தா… ஜிசோம்மித்தா…" என்று மன்னிப்பு கேட்டாள் தேன்மொழி.

நின்றுக் கொண்டே அவள் மன்னிப்பு கேட்டது, கீழே விழுந்த பெண்ணிற்கு, தேன்மொழியை திமிரானவளாய் காட்டியது. ஏனெனில் அவர்கள் கலாச்சாரத்தில், முகமன் செலுத்துவதற்கும், மன்னிப்பை கேட்டபதற்கும், இடை வரை குனிய வேண்டும். நெருங்கிய நட்பு அல்லது சுற்றத்திடம் அவ்வாறு குனிய வேண்டிய அவசியமில்லை.

"பாபுயா…" என்று ஆரம்பித்து அந்த பெண் திட்டிய வார்த்தைகள் தேன்மொழிக்கு சுத்தமாக புரியவில்லை. அவளோ ஜீ சோ எங்கிருக்கிறான் என்று கண்களால் தேடிக் கொண்டிருந்தாள்.

தேன்மொழி தன்னிடம் கவனம் செலுத்தாமல், அங்கும் இங்குமாய் பார்ப்பதை கண்ட அந்த கொரியப் பெண், தனக்கான அவமரியாதையாய் கருதிக் கொண்டு அவளை அடிக்க கை ஓங்கினாள்.

தேன்மொழி திரும்பி பார்க்க, அந்த பெண்ணின் கையானது மிகச் அருகில் வரவும், அனிச்சை போல், தேன்மொழி அந்தப் பெண்ணின் கையை பிடிப்பதற்குள், அழகிய இளம் பெண் ஒருத்தி, அந்த கொரியப் பெண்ணின் கரத்தினை பிடித்தாள்.

தேன்மொழி வருவாள்…
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top