• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மல்லிப் பூவே 🌸 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,373
Reaction score
6,472
Location
India
Hi friends ❣
இதோ கதையின் அடுத்த பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் 🙏🙏🙏🙏🙏
SM ஈஸ்வரி 🥰 🥰 🥰 🥰 🥰

1000001118.jpg

9
வைகாசி மாசத்துல
பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழ மரம் கட்டப் போறேன்டி
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழ மரம் கட்டப் போறேன்டி

பந்தல் ஒண்ணு போட்டா போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா
பந்தல் ஒண்ணு போட்டா போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா

பொண்ணில்லாத கல்யாணமா
நீ இல்லாம நான் ஏதம்மா
பொண்ணில்லாத கல்யாணமா
நீ இல்லாம நான் ஏதம்மா…

மண்டபவாயிலில் ஒலிபெருக்கியில் பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது.
இரவே பெண்ணழைப்பு முடிந்து, இதோ அதிகாலை முகூர்த்தமும் நெருங்கிவிட்டது. வழக்கமான சடங்குகள் ஆரம்பித்துவிட்டன.‌

இருவீட்டார் சொந்த பந்தங்கள், அங்காளி பங்காளி, மாமன் மச்சான், தொழில்ரீதியான நட்புவட்டங்கள் என மண்டபம் நிரம்பி வழிந்தது. பத்திரிகையில் பெயர் போட்டதற்கு பாதகமில்லாமல் அனைவரும் வந்துவிட்டனர்.

ரெங்கநாதனும் செல்வியோடு வந்திருந்தார். அம்மையப்பன் குடும்பம்தான் பகை. ஆனால் மாணிக்கம் உள்ளூர்க்காரர். பலகாலப் பழக்கம். வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் என்ற முறையில் தவிர்க்க முடியவில்லை. அதே காரணம் கொண்டு செல்லப்பாண்டியும் மனைவியோடு வந்திருந்தார்.

தன்னோடு கிளம்பிய செல்வியை ரெங்கநாதன் சந்தேகமாகப் பார்க்க, “நாளப்பின்ன பாக்கியம் அக்கா மூஞ்சில முழிக்க வேண்டாமா? வீட்டுக்கு வந்து கூப்புட்டவங்களுக்கு என்ன மரியாதி. நமக்கும் ரெண்டு புள்ளைக இருக்குல்ல. நமக்கும் நாலு சனம் வேணாமா?” செல்வி நீட்டி முழக்க,

‘அம்புட்டு நல்லவளா நீ’ என ரெங்கநாதனால் மனைவியை ஒரு பார்வை பார்க்காமல் இருக்க முடியவில்லை.‌

மண்டபம் வந்தவர்களை வாசலில் நின்ற மாணிக்கம் தம்பதி வரவேற்க, உள்ளே சென்றனர். காலையிலேயே பலவகைப் பலகாரங்களுடன் பந்தி கலைகட்டியது.

கணபதிக்கு இந்த ஊருக்கு வந்ததில் இருந்தே பலவித எண்ணங்கள் பின்னோக்கிச் செல்ல ஒரு ஓரமாக சேரில் அமர்ந்து கொண்டார்.‌ அவருடன் தங்கை வித்யாவதியும்.

“ஒன்னப்பத்தி அக்கா நெனைக்கல பாருண்ணே. நெனச்சுருந்தா இந்த ஊருக்கு பொண்ணக் கொடுக்குமா. இதென்ன இன்னையோட முடியற காரியமா. அடுத்து நல்லது கெட்டது எல்லாத்துக்கும் இங்கதானே வரணும்.” தனது மன பொறுமலை அண்ணனிடம் கொட்டிக் கொண்டிருந்தார்.

“விடு வித்யா… அவங்க பிள்ள விசேஷம். அவங்க இஷ்ட்டம்” என‌ தங்கை பேச்சிற்கு மலுப்பலாக பதில் சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.

அவருக்கு இங்கு வந்ததிலிருந்து இங்குதானே மகள் இருக்கிறாள் என்ற‌ எண்ணம் உள்ளுக்குள் முனுமுனுவென ஒரு மூலையில் அரித்துக் கொண்டிருந்தது. மகளுக்கும் திருமணவயது வந்துவிட்டதுதானே. இதுவரை அவளைப் பற்றி எண்ணியதில்லை. அதற்கு தனக்கு என்ன தகுதி இருக்கிறது. பெற்றவளும் விட்டுப்போய்விட அவமானம், கோபம், ஆதங்கமென தானும் மகளைக் கண்டுகொள்ளவில்லை. இன்றும் கூட சிலர் தன்னை யாரென அடையாளம் காண உற்றுப்பார்ப்பது போல் ஒரு பிரமையில் ஒதுங்கித்தானே அமர்ந்திருக்கிறார். இந்த ஊரும், திவ்யாவை மணக்கோலத்தில் பார்த்ததும் மகளை நினைவூட்ட... இறுகிப்போய் அமர்ந்திருந்தார்.

முகூர்த்த நேரம் நெருங்க, “நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ண அழச்சுண்டு வாங்கோ” எனும் மாற்றமில்லா ஐயரின் அழைப்போடு அலங்கார தேவதையாக மணமகள் திவ்யா மணப்பந்தல் வந்தாள். முத்துப்பேச்சி நாத்தனார் முறைக்கு மிஞ்சி போட, தட்டில் புடவையும், செயினும் வைத்து நாத்தனாருக்குக் கொடுக்கப்பட்டது.
மண்டப வாயிலில் இருந்த பிள்ளையார் கோவில் அழைத்துச் சென்று, மச்சான் முறைக்கு வேந்தன் மதியழகனுக்கு மிஞ்சி போட, அவனுக்கும் உடையும், மோதிரமும் வைத்து மதியழகன் கொடுத்தான்.‌

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ?
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
மணக்கோலம் கொண்ட மகளே
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழப் பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ

திருநாளைக் கண்டு மகிழாதோ…
ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்க,
அப்பொழுதே அம்மையப்பன் கண்கள் கலங்கிவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் மகள் இன்னொருவன் உடமையென. இந்தப் பாடல் ஒலிக்காமல் நம்மூர்கள்ல கல்யாணம் கலைகட்டாது. (அதுலயும் தங்கச்சிய கேலி பண்ணி தோழிகள் பாட, சிவாஜி அவர்கள் லைட்டா வெட்கப்பட்டு கடந்து போவாரு பாருங்க… அட.. அட…
சரி… சரி… கதைக்கு வந்துட்டேன்)

முழங்கையால் இலேசாக அம்மையப்பனை விலாவில் இடித்து, “நீங்க அழுது அவளையும் அழவச்சுறாதீங்க. ஏற்கனவே உங்க புள்ள பொண்ணழச்சுட்டு வந்ததுலருந்து அழுதுட்டுதான் இருக்கா.” சிறுபிள்ளையை அதட்டுவது போல் கணவனை அதட்டினார் தாமரை. இவர் தேவலாம் என்றிருந்தது அண்ணன்மார் முகம்.

“ஆனந்தா… என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறே. அதுல ஆனந்தக் கண்ணீர மட்டும்தான் பாக்கணும்” என்ற வசனம் மட்டும்தான் பாக்கி இந்த பாசமலர்களுக்கு. சந்தோஷம் பாதி, துக்கம்‌ மீதியென கைகளைக் கட்டிக்கொண்டு மேடையில் நின்றிருந்தனர்.‌

திருமாங்கல்யத்தை ஆசீர்வாதம் வாங்க எடுத்துவந்த முத்துப்பேச்சி, அனைவரிடமும் காட்டிவிட்டு, பெற்றொர்களிடமும், இறுதியாக அண்ணன்களிடம் வந்தவள், இவர்களது முகத்தைப் பார்த்துவிட்டு,

“முத்துக்கருப்பன், உங்க தங்கச்சிய எங்க அண்ணே நல்லா பாத்துப்பாரு. டோன்ட் வொர்ர்ர்ர்ரி…‌ பி ஹேப்பி” என அழுத்திச்சொல்ல,

“நானொன்னும் எந்தங்கச்சிய நெனச்சு ஃபீல் பண்ணல. உங்க அண்ணன நெனச்சுதான் ஃபீல் பண்றே” மீசையில் மண் ஒட்டவில்லை என கெத்தைவிடாமல் செழியன் பதில் கொடுக்க,

“தோடா… அப்பறம் உங்கள நெனச்சு எங்க அண்ணன் ஒரு நாள் இதே மாதிரி ஃபீல் பண்ணவேண்டிய நெலமை வந்துறப்போகுது.” பெண்ணவள் நக்கலில் ஒருகணம் திகைத்தவன், அடுத்த நொடி அவளது உள்குத்துப் பேச்சில் சட்டென கவலை மறந்து புன்னகை பூசிய முகமாக செழியன் அவளை ஆழப்பார்வை பார்க்க,

“யார்கிட்ட. எங்ககிட்டயேவா?” என அவனை மிதப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு திருமாங்கல்யத்தை ஆசிர்வாதம் வாங்கி எடுத்துச்சென்றாள். அருகில் நின்ற வேந்தன் காதில் விழுந்தாலும் கண்டும் காணாமல் இருந்து கொண்டான். இதுமாதிரி கேலிப் பேச்சுக்கள் சகஜம்தானே உறவுகளுக்குள் என.

கெட்டிமேளம் முழங்க, அட்சதை மழை தூவ, பெரியவர்கள் ஆசீர்வாதத்தோடு திருப்பூட்டு நிகழ்ந்தது. எத்தனை அடக்கியும் தாரைவார்த்துக் கொடுக்கும் பொழுது அம்மையப்பனால் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்கள் கலங்கி நின்ற தந்தையைப் பார்த்ததும்‌ மீண்டும் திவ்யாவின் கண்கள் உடைப்பெடுத்தது. இவ்வளவு நேரம் கணவருக்கு தைரியம் சொல்லிய தாமரையும் உடைந்துவிட, அங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறியது.

கணபதியின் கண்கள் இமைக்க மறந்து வெறுமையோடு இதைப் பார்த்துக் கொண்டிருந்தது. தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வாய்க்குமா? ஆசைப்படவும் அருகதை வேணும்.‌ கணவனாகவும் ஒரு பெண்ணிற்கு நியாயம் செய்யவில்லை. தகப்பனாகவும் தனது கடமையைச் செய்யவில்லை எனும்பொழுது இதற்கெல்லாம் ஆசைப்பட தனக்கு என்ன தகுதி இருக்கிறது என மனதை ஆற்றிக்கொண்டார்.
மற்ற சடங்குகள் ஆரம்பிக்க, திருப்பூட்டி முடிந்ததால் பந்திக்குச் செல்பவர்கள் சென்றனர்.

*****
“ஏன்டி மங்கா… உங்கத்தை சொல்ற மாதிரி நீ ஊமக்கோட்டான் தான்டி.” கோபம் தெரித்தது ஆர்த்தியின் குரலில்.

“இப்ப என்னத்தக் கண்ட? எங்க இருக்க? ஒரே எறச்சலா இருக்கு?” கைபேசியில் ஆர்த்தி பேசுவது தெளிவாக கேட்கவில்லை மங்கைக்கு.

“முத்துப்பேச்சி அண்ணே கல்யாணத்துலதான்டி இருக்கே. பொண்ணு வீட்டுக்காரவுக உனக்கு அத்தையாம்ல. கல்யாணப் பொண்ணு அத்தை மகளாம்ல” ஆச்சர்யத்தில் ஆர்த்தி வாய் பிளப்பது மனக்கண்ணிலேயே தெரிந்தது மங்கைக்கு.

மங்கை அமைதிகாக்க, “இப்பயாவது வாயத்தொறக்குறாளா பாரு… நீ என்னைக்கு வாயத்தொறந்து பேசுன.‌ அமுக்குனிதான்டி நீ. இங்க உன்னோட அப்பாவ அம்மா கமிச்சாங்கடி. நல்லவேள மங்கா… நீ உங்கம்மா மாதிரி போல. நல்லா கருப்பண்ணசாமி சிலையாட்டம் மீசையும் கீசையுமா இருக்காருடி உங்கப்பா. நீ அவர் மகன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க” சிரித்தபடி ஆர்த்தி கேலியாகச் சொல்ல சுருக்கென்றது மங்கையர்க்கரசிக்கு.

“மங்கா… லைன்ல இருக்கியா?”

“ம்ம்ம்… சொல்லுப்பா.” சுரத்தையின்றி ஒலித்தது குரல்.

“உன் அத்தை மகனுங்க சூப்பர்ப்பா. அன்னைக்கி கண்டக்டரா வந்தார்ல அவரும் உங்க அத்தை மகனாம்ல. என்னைய அடையாளம் கண்டு விசாரிச்சார்ப்பா” என்றவளிடம் என்ன விசாரித்தான் என கேட்கவில்லை. ஆர்த்திக்கு இவர்கள் எல்லாம் சொந்தம் எனத் தெரிந்துகொண்ட வியப்பும், ஆர்வமும் அவள் பேச்சில் தெரிந்தது. இவள் இங்கு அமைதியாகவே இருக்க,

“என்னடி பொறாமையா? எனக்கு அவங்க அண்ணன் முறைடி. நீதான் எனக்கு முறை. நான் மட்டும் ஆம்பளப்பையனா இருந்தா உன்னைத் தூக்கிட்டுப் போயி தாலிகட்டிருப்பேன்.” எப்பொழுதும் சொல்வதை இன்றும் சொல்லிச் சிரிக்க,

“உனக்கு வேற வேலையே இல்ல. எப்ப பாரு இதையே சொல்லிக்கிட்டு.” வழக்கம்போல இவளும் நொடிக்க,

“என்னடி பண்றது… இப்ப, உங்கப்பா உங்கம்மாவக் கட்டப்போயிதானே நீயெல்லாம் இம்புட்டுச் செவப்பா பொறந்திருக்க. அவர மாதிரியே கட்டிருந்தார்னு வையி… நெனச்சுப் பாரு…” அங்கே ஆர்த்தி கற்பனைக்குள் செல்ல,

இங்கு அப்பா முகம் எப்படியிருக்கும் என தன் மூளை அடுக்குகளை தூசிதட்டிக் கொண்டிருந்தாள் மங்கையர்க்கரசி.

*******
ரெங்கநாதன் பங்காளிகளை பஞ்சாயத்து பேசவேண்டுமென செல்லப்பாண்டி, பந்திக்கு விடாமல் பிடித்து வைத்துக்கொண்டார்.‌ சாப்பாடு முடிந்தால் மொய் வைத்துவிட்டு கிளம்பி விடுவார்கள். மீண்டும் ஒன்று சேர்ப்பது கடினம்.

“கல்யாணத்துக்கு வந்த எடத்துல என்னப்பா பஞ்சாயத்து.‌ அதெல்லாம் நல்லாருக்காது?” செல்லப்பாண்டி சொல்லியதைக்கேட்டு ஒருவர் மறுப்பு சொல்ல,

“இப்பத்தானே ஒன்னு சேந்துருக்கோம்.‌ மறுபடியும் எல்லாரும் கூடறது திருவிழாவுக்குதானே. அப்ப இதெல்லாம் பேசமுடியாது. இப்பவே பேசி முடிச்சுவைங்க.”

“ஏம்ப்பா… இம்பூட்டு நாளா விட்டுப்புட்டு இப்ப கேக்குறீங்க. அதுவும் மாணிக்கம் வீட்டு விசேஷத்துல. அம்மையப்பனுக்குத் தெரிஞ்சா பங்காளிகளுக்குள்ள சங்கட்டமப்பா. என்னாண்ணே நீங்களும் இப்படி பண்ணிட்டீங்கனு கேட்டா மூஞ்சிய எங்க வைக்கிறது?” ஒரு பெருசு நியாயத்தை எடுத்துச்சொல்ல,

“இப்ப விட்டா இதுக்குனு‌ வேலவெட்டிய விட்டுப்புட்டு எல்லாரும் இன்னொரு நாள் வருவீங்களா? நமக்கு கேஸு, கோர்ட்டுனு போயி பழக்கமில்லைல. எதுவாயிருந்தாலும் நமக்குள்ள பேசி முடுச்சுக்கறதுதான. வந்த கையோடு இதையும் பேசி முடிச்சுவிட்ருங்க மாமா.‌ நாங்களும் பிள்ளைக்கு மாப்பிள்ளை பாக்கணும்ல.” செல்லபாண்டி எடுத்துச் சொல்ல, இதுவும் நியாயம் எனத்தான் பட்டது வந்தவர்களுக்கும்.

இதுவரை போலீஸ் ஸ்டேஷனோ, கோர்ட்டுக்கோ சென்றதில்லை. பங்காளிகளின் நீக்கு போக்கு தெரியும் என்பதால், சொத்துப் பிரச்சினையோ, அண்ணன் தம்பி தகராறோ, யாருக்கும் பாதகமில்லாமல் தங்களுக்குள்ளே பேசி முடித்துக் கொள்வர்.

அதனால் தான் அன்று ஊருக்குள் பேசப்படும் பஞ்சாயத்துகள் எல்லாம் நடுநிலை தவறாமல் நடந்தது. ஏனென்றால் ஆள் எப்படி, அவன் குடும்பம் எப்படி, இதை இவன்‌ செய்திருப்பானா… மாட்டானா? என ஒருத்தரைப் பற்றி தலைமுறை தலைமுறைகளாக ஊருக்குள் தெரியும் என்பதால் நாலாவிதமாக அலசி ஆராய்ந்து நடுநிலையாக தீர்ப்பு வழங்க முடிந்தது.

“கெழவி செத்தப்பமட்டும் மகன் வயித்துப் பேத்தி நெய்ப்பந்தம் புடிக்க வரணும்னு சொன்னீங்கள்ல. அதே மாதிரி பேசி சொத்தையும் வாங்கிக் கொடுங்க” செல்வி சொல்ல,

‘இது நடந்து எத்தன வருஷமாகுது. அப்பவே இத மனசுல வச்சுட்டு தான் மங்கைய அனுப்பிருக்கா’ என இன்றுதான் ரெங்கநாதனுக்கு உரைத்தது.

இத்தனை நாள் இல்லாத ஒட்டு உறவு இப்ப மட்டும் எதற்கென கணபதி அம்மாவின் இறப்பிற்கு மங்கையை அனுப்ப ரெங்கநாதன் மறுத்துவிட்டார். செல்வி தான் நல்லதுக்கு தள்ளுனாலும் கெட்டதுக்கு தள்ளக்கதடாதென்று, அம்மாச்சியையும், பேத்தியையும் அனுப்பி வைத்தார். முறை செய்ய உரிமையிருக்குல்ல. அதே மாதிரி சொத்தையும் வாங்கிக் கொடுங்க என இப்பொழுது விடாப்பிடியாக நின்றார்.

இந்த மாதிரி சின்னச்சின்னதாக நாம் செய்யும் சாங்கியங்களும்,‌ உறவுகளுக்குள் செய்யும் செய்முறைகளும் தான் நம் உரிமையையும், உறவையும் நிலைநாட்டுகின்றன.

மாலையெடுத்துப் போட தாய்மாமன், மூன்றாம் முடிச்சுக்கு நாத்தனார், துணை மாப்பிள்ளைக்கு அண்ணன், தம்பி என சுபகாரியங்களிலும்,

தாய்க்கு தலைமகன், தந்தைக்கு கடைசி மகன், மாரடித்து அழ பொம்பள மக்க, நெய்ப்பந்தம் பிடிக்க பேரம்பேத்தி, நீர் மாலைக்கு அங்காளி பங்காளி, பசியமர்த்த கொண்டான்,‌ கொடுத்தான் என துக்க வீடுகளிலும் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை கொடுத்தே நம் சாங்கியங்களும் சடங்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இது வெறும் சாங்கியம் மட்டுமல்ல. உறவுகளை இணைத்துப் பிடிப்பதற்கான மாயக்கயிறு.

நாலாவித யோசனைகளும், சமரசமும் செய்து பங்காளிகளை செல்லப்பாண்டி நிறுத்திவைக்க, தன்னுடன் மனைவி கிளம்பி வந்ததன் காரணம் அப்பொழுதுதான் ரெங்கநாதனுக்கு விளங்கியது.
இதற்கு சகளையும் உடந்தை. கல்யாணக் கூட்டத்தில் இது எவ்வளவு பெரிய அவமானம்.

“செல்வி, இது சரியில்ல. ஊரான்வீட்டு விசேஷத்துல வந்து பஞ்சாயத்துப் பண்றது. இது அம்மையப்பன் அண்ணன் வீட்டு விசேஷம் மட்டுமில்ல. இதுல மாணிக்கம் குடும்பமும் இருக்கு. உள்ளூர்க்காரவுக… ஒரே கடைவீதியில தொழில் பண்றோம். என் தங்கச்சி புள்ளைக்கு செய்ய எனக்குத் தெரியும். இவங்ககிட்ட வாங்கித்தான் செய்யணும்னு இல்ல. அந்தளவுக்கு வக்கத்துப்போல. மொதல்ல இங்கருந்து கெளம்பு” கோபமாக ரெங்கநாதன் மனைவியை அதட்டி கிளம்பச்சொல்ல,

“நம்ப ஒன்னும் சும்மா கேக்கல. கொடுத்ததத்தான கேக்கப்போறோம். இன்னைக்கு ஒரு புள்ளய கட்டிக்கொடுக்கறதுன்னா லேசுப்பட்ட காரியமா. அங்க பாத்தீங்கள்ல சீர்செனத்திய. எப்படி அடுக்கிருக்காங்கன்னு. உங்க தொங்கச்சி மகளுக்கே செஞ்சீங்கனா எம்பிள்ளைக என்ன தெருவுல போறதா?”

“ஏன்டி இப்படி அந்தப்புள்ளய கரிச்சுக் கொட்டுற. இங்க என்ன ஒன்னுமில்லாமையா இருக்கு. உன் நியாயப்படி பாத்தா, என் தங்கச்சிக்கு சொத்துல இருக்க உரிமை அந்தப் புள்ளைக்கும் இருக்குல்ல” என கேட்டதுதான் தாமதம். சாமி வந்தவராட்டம் ஆடிவிட்டார் செல்வி. இதுவரை சொந்தபந்தங்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போலத்தான் தோன்றியது. ஆனால் இப்பொழுது செல்வியின் குரல் ஓங்கி ஒலிக்கவும்தான் அனைவரின் கவனமும் அங்கு திரும்பியது.

“ஓ… பங்கு வேற கொடுப்பீகளோ? நீங்களே நூல்புடுச்சு அளந்து விடுவீக போல. அவ ஆத்தாளுக்கு சீர் செஞ்சதெல்லாம் எதுல சேத்தி. இவள இம்பூட்டு நாளா சோறு போட்டு வளத்து, துணிமணி எடுத்துக் கொடுத்து, நல்லது கெட்டது பாத்து, படிக்க வச்சு, ஊர் மெச்ச சடங்கு சுத்தணும்னு உங்க ஆத்தா பேச்சக்கேட்டு அத்தன லட்சம் செலவு செஞ்சதெல்லாம என்ன கணக்காம். ‌ பெத்தவரு கல்லுக்குண்டாட்டம் இருக்கார்ல. அங்க என்ன ஒன்னுமில்லாமையா இருக்கு நம்ப எடுத்துச் செய்ய. இது எந்த ஊரு நியாயம்” ஆங்காரமாகக் கேட்க, அங்கு கூட்டம் சேர்ந்தது. சலசலக்கவும் தொடங்கியது. ரெங்கநாதனுக்கு பங்காளிகள் முன் தலைகுனிவாகப் போயிற்று.

மைக் செட் சத்தத்தில் இது எதுவும் தெரியாமல் கல்யாண வீட்டார் பந்தியை கவனித்துக் கொண்டிருக்க, இந்தத் தகவல் வேந்தனின் காதுகளுக்கு எட்டியது. தம்பியிடம் பொறுப்பை விட்டுவிட்டு அங்கு விரைந்தான். மேடையில் மணமக்கள் நண்பர்கள் சூழ ஃபோட்டோ எடுப்பதில் மும்மரமாக இருந்தனர். ஓரளவிற்கு உறவுகள் எல்லாம் எடுத்து முடித்து விட்டனர்.‌
அம்மையப்பனிடம் சென்றான். மணமக்களை மறுவீடு அனுப்புமாறு சொல்ல, இன்னும் நேரமிருப்பதாக கூறினார்.

“மறுவீடு போய்ட்டு இங்கதானப்பா மறுபடியும் வரணும். மதிய சாப்பாடு முடிச்சு நம்ப வீட்டுக்குப் போயிட்டு மறுபடியும் ராத்திரி மாப்பிள்ளை வீடு திரும்ப லேட்டாயிரும்ப்பா. சீக்கிரம் அனுப்பி விடுங்க” விளக்கு வைத்தபின் பிறந்த மகளை வீட்டைவிட்டு அனுப்ப முடியாதென, மகன் சொல்வதும் சரியெனப்பட, தனது தம்பிகளை அழைத்தார் அம்மையப்பன்.

இவர்கள் ஏதாவது பிரச்சினை கிளப்பும் முன் தங்கையை சந்தோஷமாக மறு வீடு அனுப்பும் வேலையில் மும்மரமானான் வேந்தன். மாணிக்கத்திடம் சென்று சொல்ல அவருக்கும் சரியெனப்பட, மகளையும், மனைவியையும் உடன் தன் தங்கையையும் மணமக்களுடன் போகச் சொன்னார். அம்மையப்பன் மணமக்களோடு தன் பெரிய தம்பியையும் அவர் மனைவியையும் அனுப்பி வைத்தார். சித்தப்பா பிள்ளைகளும் திவ்யாவுடன் சேர்ந்து கொள்ள, உள்ளூர்தான் என்பதால் மணமக்கள்,‌ முத்துப்பேச்சி, பிள்ளைகளோடு ஒரு காரிலும், பெரியவர்கள் ஒரு காரிலும் என இரண்டு கார்களில் பிரிந்து ஏறிக் கொண்டனர்.

அரைமணி நேரத்தில் மணமக்களை மறு வீடு அனுப்பிவிட்டு, எதுவானாலும் அவர்களே வரட்டும் என மீண்டும் பந்தியைக் கவனிக்க சென்றுவிட்டான்.
பங்காளிகள் சிலர் மட்டும் இன்னும் சாப்பிட வராமலிருக்க, இப்பொழுது பந்தியில் கூட்டமும் சற்று குறைந்திருக்க அம்மையப்பன் அவர்களை அழைக்க வந்தார்.

“என்னண்ணே… இன்னும் சாப்பிடலயா?” என கேட்டுக் கொண்டே வர,

“வா அம்மையப்பா… உக்காரு” தன்னருகே இருந்த சேரை நகர்த்திப் போட, மரியாதைக்காக அமர்ந்தார்.

“நம்ப வீட்டு சாப்பாடுதானப்பா. வந்தவங்க மொதல்ல சாப்பிடட்டும். நமக்கென்ன அவசரம். உன் பங்காளி என்னமோ கேக்குறாப்ல” என பீடிகை போட,

“யாரு… இங்க இருக்குற எல்லாருமே எனக்கு ஒன்னுவிட்ட, ரெண்டுவிட்ட பங்காளிகதான். இதுல யாரச் சொல்றீங்க?” அங்கு ரெங்கநாதன் இருந்ததையும் கவனித்துவிட்டுதான் கேட்டார். அவரது சகளைப்பாடி செல்லபாண்டியையும் கவனித்தார். ‘இவன் சரியான மொடா முழுங்கியாச்சே… இவங்களோட என்ன பண்றான்’ எனவும் யோசனை ஓடியது.

“உன் மச்சான வரச்சொல்லு அம்மையப்பா” என,

“உங்களுக்கு தேவைனா நீங்க கூப்பிடுங்க” என வேந்தன் அங்கு வந்தான். எங்க அப்பா என்ன நீங்க வச்ச ஆளா என்ற கேள்வி தொக்கி நின்றது‌ அவனது அழுத்தமான பதிலில்.

அம்மையப்பன் இவர்களிடம் வந்தவுடன் அதைக் கவனித்துவிட்டு வேந்தனும் அங்கு வந்தவன் தன் தந்தையின் பின் நின்று கொண்டான். மார்பின் குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு அவன் நின்ற தோரணையே எதுவானாலும் பார்த்துப் பேசுங்கள் என்றது. தன் மாமனை அழைக்கச் சொல்ல, அதுவும் தன் அப்பாவைவிட்டே அழைக்கச் சொல்ல, சொன்னவர் மூத்தவரே என்றாலும் கோபம் வந்தது.

“தம்பிக்கு மூக்கு மேல கோவம் வருது. ஃபோன்ல தாம்ப்பா கூப்புடச் சொன்னே. ஒரு எட்டு தூரத்துல இருந்தாலும் இப்பெல்லாம் ஃபோன்ல தான கூப்புடுறோம். எங்கிட்ட உன் மாமன் நம்பர் இல்ல. இருந்தா நானே கூப்புட்ருவே” என ஏதோ பெரிய காமெடி சொல்லியதுபோல் அவரே சிரித்துக் கொண்டார்.

“என்ன விஷயம்னு சொன்னா கூப்புடலாமா வேண்டாமானு யோசிக்கலாம்.” என்றான்.‌

“எல்லாரையும் பாத்து ரொம்ப நாளாச்சு. ஒதுங்கி உக்காந்துருக்காப்ல. பெரியவங்க நாங்க ஏதாவது பேசுவோம்ப்பா” என, இவர்கள் பேச்சு ஏதோ சரியில்லை எனப்பட்டது அம்மையப்பனுக்கு.

“என்னண்ணே… எதுனாலும் ஒடச்சுப் பேசுங்க. எங்களுக்கு வேலையிருக்கு.” அம்மையப்பன் தேங்காய் உடைத்ததுபோல் பட்டென்று கேட்க.

“என்ன மாமா… சும்மா சவளப்பிள்ளையாட்டம் நயநயன்ட்டு.‌ அதா அவரே ஒடச்சுப் பேசச் சொல்றாருல. அவரு மச்சான்கிட்ட பிள்ளைக்குச் சேரவேண்டியத வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க மாமா?” ஆண்கள்‌ மத்தியில் செல்வி குரல் ஓங்கி ஒலிக்க,

“ஆம்பளைக பேசுறாங்கள்ல செல்வி. நீ அமைதியா இரு” என ரெங்கநாதன் அடக்க, கணவர் பேச்சுக்கு அடங்கிவிட்டால் எப்படி…

சத்தம் கேட்டு தாமரை அங்கு விரைய, அக்காவைப் பார்த்துவிட்டு கணபதியும், வித்யாவும் அவர் பின்னாலே எழுந்து வந்தனர்.

ஆலமரமில்லாமல், செம்பு இல்லாமல், தமுக்கடிக்காமல், நாட்டாமையில்லாமல் அங்கு ஒரு பஞ்சாயத்து தன்னால் கூடியது.

******

அடுத்த எபி…

“அவங்க கேக்குறதுல தப்பில்ல. சரியாத்தான கேக்குறாங்க. மாமாவோட பங்கு அவரு மகளுக்குத்தானே. வேற யாருக்குமா கேக்குறாங்க. கொடுத்துருவோம்ப்பா” வேந்தன் எளிதாகச் சொல்ல…
மகனின் எத்தனை வருட உழைப்பு அது. அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டான் என மனம் அடித்துக் கொண்டது அம்மையப்பனுக்கு. மகனின் கனவு நிறுவனம் அது. அதை சரியாகப் பிரித்து இன்னொருவனை அமர வைப்பதா?
………

“எப்படினாலும் ஒன்டிக்கட்டையான அண்ணனின் பங்கு பொதுச் சொத்துதானே. நாளைக்கு நம்பிள்ளைகளுக்கும் ஏதாவது கிடைக்கும் என எண்ணியிருந்த வித்யாவின் நினைப்பில் மண், கல் எல்லாம் விழுந்தது.

………

செல்லபாண்டியின் கைபேசி ஒலிக்க, மகள் எனத் தெரிந்து, செல்வராணியிடம் போனைக் கொடுத்தார்.‌ இவர்கள் சப்தத்திலும், ரேடியோ இறைச்சலிலும் பேச முடியாமல் எழுந்து மண்டபம் விட்டு வெளியேவந்தார் செல்வராணி. ஒரு காதை கையால் மூடிக்கொண்டு, மறு காதில் வைத்து அழைப்பை ஏற்க, அவர் கேட்ட செய்தியில்,

“யாத்தே… பாவிமக எங்குடியக் கெடுத்துட்டாளே…” என நெஞ்சில் கைவைத்து அமர்ந்துவிட்டார்.
 
Last edited:

Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,577
Reaction score
6,866
Location
Salem
Hi friends ❣
இதோ கதையின் அடுத்த பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் 🙏🙏🙏🙏🙏
SM ஈஸ்வரி 🥰 🥰 🥰 🥰 🥰

View attachment 41322

9
வைகாசி மாசத்துல
பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழ மரம் கட்டப் போறேன்டி
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழ மரம் கட்டப் போறேன்டி

பந்தல் ஒண்ணு போட்டா போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா
பந்தல் ஒண்ணு போட்டா போதுமா
பொண்ணு கிண்ணு வேணாமா

பொண்ணில்லாத கல்யாணமா
நீ இல்லாம நான் ஏதம்மா
பொண்ணில்லாத கல்யாணமா
நீ இல்லாம நான் ஏதம்மா…

மண்டபவாயிலில் ஒலிபெருக்கியில் பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது.
இரவே பெண்ணழைப்பு முடிந்து, இதோ அதிகாலை முகூர்த்தமும் நெருங்கிவிட்டது. வழக்கமான சடங்குகள் ஆரம்பித்துவிட்டன.‌

இருவீட்டார் சொந்த பந்தங்கள், அங்காளி பங்காளி, மாமன் மச்சான், தொழில்ரீதியான நட்புவட்டங்கள் என மண்டபம் நிரம்பி வழிந்தது. பத்திரிகையில் பெயர் போட்டதற்கு பாதகமில்லாமல் அனைவரும் வந்துவிட்டனர்.

ரெங்கநாதனும் செல்வியோடு வந்திருந்தார். அம்மையப்பன் குடும்பம்தான் பகை. ஆனால் மாணிக்கம் உள்ளூர்க்காரர். பலகாலப் பழக்கம். வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் என்ற முறையில் தவிர்க்க முடியவில்லை. அதே காரணம் கொண்டு செல்லப்பாண்டியும் மனைவியோடு வந்திருந்தார்.

தன்னோடு கிளம்பிய செல்வியை ரெங்கநாதன் சந்தேகமாகப் பார்க்க, “நாளப்பின்ன பாக்கியம் அக்கா மூஞ்சில முழிக்க வேண்டாமா? வீட்டுக்கு வந்து கூப்புட்டவங்களுக்கு என்ன மரியாதி. நமக்கும் ரெண்டு புள்ளைக இருக்குல்ல. நமக்கும் நாலு சனம் வேணாமா?” செல்வி நீட்டி முழக்க,

‘அம்புட்டு நல்லவளா நீ’ என ரெங்கநாதனால் மனைவியை ஒரு பார்வை பார்க்காமல் இருக்க முடியவில்லை.‌

மண்டபம் வந்தவர்களை வாசலில் நின்ற மாணிக்கம் தம்பதி வரவேற்க, உள்ளே சென்றனர். காலையிலேயே பலவகைப் பலகாரங்களுடன் பந்தி கலைகட்டியது.

கணபதிக்கு இந்த ஊருக்கு வந்ததில் இருந்தே பலவித எண்ணங்கள் பின்னோக்கிச் செல்ல ஒரு ஓரமாக சேரில் அமர்ந்து கொண்டார்.‌ அவருடன் தங்கை வித்யாவதியும்.

“ஒன்னப்பத்தி அக்கா நெனைக்கல பாருண்ணே. நெனச்சுருந்தா இந்த ஊருக்கு பொண்ணக் கொடுக்குமா. இதென்ன இன்னையோட முடியற காரியமா. அடுத்து நல்லது கெட்டது எல்லாத்துக்கும் இங்கதானே வரணும்.” தனது மன பொறுமலை அண்ணனிடம் கொட்டிக் கொண்டிருந்தார்.

“விடு வித்யா… அவங்க பிள்ள விசேஷம். அவங்க இஷ்ட்டம்” என‌ தங்கை பேச்சிற்கு மலுப்பலாக பதில் சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.

அவருக்கு இங்கு வந்ததிலிருந்து இங்குதானே மகள் இருக்கிறாள் என்ற‌ எண்ணம் உள்ளுக்குள் முனுமுனுவென ஒரு மூலையில் அரித்துக் கொண்டிருந்தது. மகளுக்கும் திருமணவயது வந்துவிட்டதுதானே. இதுவரை அவளைப் பற்றி எண்ணியதில்லை. அதற்கு தனக்கு என்ன தகுதி இருக்கிறது. பெற்றவளும் விட்டுப்போய்விட அவமானம், கோபம், ஆதங்கமென தானும் மகளைக் கண்டுகொள்ளவில்லை. இன்றும் கூட சிலர் தன்னை யாரென அடையாளம் காண உற்றுப்பார்ப்பது போல் ஒரு பிரமையில் ஒதுங்கித்தானே அமர்ந்திருக்கிறார். இந்த ஊரும், திவ்யாவை மணக்கோலத்தில் பார்த்ததும் மகளை நினைவூட்ட... இறுகிப்போய் அமர்ந்திருந்தார்.

முகூர்த்த நேரம் நெருங்க, “நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ண அழச்சுண்டு வாங்கோ” எனும் மாற்றமில்லா ஐயரின் அழைப்போடு அலங்கார தேவதையாக மணமகள் திவ்யா மணப்பந்தல் வந்தாள். முத்துப்பேச்சி நாத்தனார் முறைக்கு மிஞ்சி போட, தட்டில் புடவையும், செயினும் வைத்து நாத்தனாருக்குக் கொடுக்கப்பட்டது.
மண்டப வாயிலில் இருந்த பிள்ளையார் கோவில் அழைத்துச் சென்று, மச்சான் முறைக்கு வேந்தன் மதியழகனுக்கு மிஞ்சி போட, அவனுக்கும் உடையும், மோதிரமும் வைத்து மதியழகன் கொடுத்தான்.‌

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ?
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
மணக்கோலம் கொண்ட மகளே
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழப் பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ

திருநாளைக் கண்டு மகிழாதோ…
ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்க,
அப்பொழுதே அம்மையப்பன் கண்கள் கலங்கிவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் மகள் இன்னொருவன் உடமையென. இந்தப் பாடல் ஒலிக்காமல் நம்மூர்கள்ல கல்யாணம் கலைகட்டாது. (அதுலயும் தங்கச்சிய கேலி பண்ணி தோழிகள் பாட, சிவாஜி அவர்கள் லைட்டா வெட்கப்பட்டு கடந்து போவாரு பாருங்க… அட.. அட…
சரி… சரி… கதைக்கு வந்துட்டேன்)

முழங்கையால் இலேசாக அம்மையப்பனை விலாவில் இடித்து, “நீங்க அழுது அவளையும் அழவச்சுறாதீங்க. ஏற்கனவே உங்க புள்ள பொண்ணழச்சுட்டு வந்ததுலருந்து அழுதுட்டுதான் இருக்கா.” சிறுபிள்ளையை அதட்டுவது போல் கணவனை அதட்டினார் தாமரை. இவர் தேவலாம் என்றிருந்தது அண்ணன்மார்கள் முகம்.

“ஆனந்தா… என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறே. அதுல ஆனந்தக் கண்ணீர மட்டும்தான் பாக்கணும்” என்ற வசனம் மட்டும்தான் பாக்கி இந்த பாசமலர்களுக்கு. சந்தோஷம் பாதி, துக்கம்‌ மீதியென கைகளைக் கட்டிக்கொண்டு மேடையில் நின்றிருந்தனர்.‌

திருமாங்கல்யத்தை ஆசீர்வாதம் வாங்க எடுத்துவந்த முத்துப்பேச்சி, அனைவரிடமும் காட்டிவிட்டு, பெற்றொர்களிடமும், இறுதியாக அண்ணன்களிடம் வந்தவள், இவர்களது முகத்தைப் பார்த்துவிட்டு,

“முத்துக்கருப்பன், உங்க தங்கச்சிய எங்க அண்ணே நல்லா பாத்துப்பாரு. டோன்ட் வொர்ர்ர்ர்ரி…‌ பி ஹேப்பி” என அழுத்திச்சொல்ல,

“நானொன்னும் எந்தங்கச்சிய நெனச்சு ஃபீல் பண்ணல. உங்க அண்ணன நெனச்சுதான் ஃபீல் பண்றே” மீசையில் மண் ஒட்டவில்லை என கெத்தைவிடாமல் செழியன் பதில் கொடுக்க,

“தோடா… அப்பறம் உங்கள நெனச்சு எங்க அண்ணன் ஒரு நாள் இதே மாதிரி ஃபீல் பண்ணவேண்டிய நெலமை வந்துறப்போகுது.” பெண்ணவள் நக்கலில் ஒருகணம் திகைத்தவன், அடுத்த நொடி அவளது உள்குத்துப் பேச்சில் சட்டென கவலை மறந்து புன்னகை பூசிய முகமாக செழியன் அவளை ஆழப்பார்வை பார்க்க,

“யார்கிட்ட. எங்ககிட்டயேவா?” என அவனை மிதப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு திருமாங்கல்யத்தை ஆசிர்வாதம் வாங்கி எடுத்துச்சென்றாள். அருகில் நின்ற வேந்தன் காதில் விழுந்தாலும் கண்டும் காணாமல் இருந்து கொண்டான். இதுமாதிரி கேலிப் பேச்சுக்கள் சகஜம்தானே உறவுகளுக்குள் என.

கெட்டிமேளம் முழங்க, அட்சதை மழை தூவ, பெரியவர்கள் ஆசீர்வாதத்தோடு திருப்பூட்டு நிகழ்ந்தது. எத்தனை அடக்கியும் தாரைவார்த்துக் கொடுக்கும் பொழுது அம்மையப்பனால் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்கள் கலங்கி நின்ற தந்தையைப் பார்த்ததும்‌ மீண்டும் திவ்யாவின் கண்கள் உடைப்பெடுத்தது. இவ்வளவு நேரம் கணவருக்கு தைரியம் சொல்லிய தாமரையும் உடைந்துவிட, அங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறியது.

கணபதியின் கண்கள் இமைக்க மறந்து வெறுமையோடு இதைப் பார்த்துக் கொண்டிருந்தது. தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வாய்க்குமா? ஆசைப்படவும் அருகதை வேணும்.‌ கணவனாகவும் ஒரு பெண்ணிற்கு நியாயம் செய்யவில்லை. தகப்பனாகவும் தனது கடமையைச் செய்யவில்லை எனும்பொழுது இதற்கெல்லாம் ஆசைப்பட தனக்கு என்ன தகுதி இருக்கிறது என மனதை ஆற்றிக்கொண்டார்.
மற்ற சடங்குகள் ஆரம்பிக்க, திருப்பூட்டி முடிந்ததால் பந்திக்குச் செல்பவர்கள் சென்றனர்.

*****
“ஏன்டி மங்கா… உங்கத்தை சொல்ற மாதிரி நீ ஊமக்கோட்டான் தான்டி.” கோபம் தெரித்தது ஆர்த்தியின் குரலில்.

“இப்ப என்னத்தக் கண்ட? எங்க இருக்க? ஒரே எறச்சலா இருக்கு?” கைபேசியில் ஆர்த்தி பேசுவது தெளிவாக கேட்கவில்லை மங்கைக்கு.

“முத்துப்பேச்சி அண்ணே கல்யாணத்துலதான்டி இருக்கே. பொண்ணு வீட்டுக்காரவுக உனக்கு அத்தையாம்ல. கல்யாணப் பொண்ணு அத்தை மகளாம்ல” ஆச்சர்யத்தில் ஆர்த்தி வாய் பிளப்பது மனக்கண்ணிலேயே தெரிந்தது மங்கைக்கு.

மங்கை அமைதிகாக்க, “இப்பயாவது வாயத்தொறக்குறாளா பாரு… நீ என்னைக்கு வாயத்தொறந்து பேசுன.‌ அமுக்குனிதான்டி நீ. இங்க உன்னோட அப்பாவ அம்மா கமிச்சாங்கடி. நல்லவேள மங்கா… நீ உங்கம்மா மாதிரி போல. நல்லா கருப்பண்ணசாமி சிலையாட்டம் மீசையும் கீசையுமா இருக்காருடி உங்கப்பா. நீ அவர் மகன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க” சிரித்தபடி ஆர்த்தி கேலியாகச் சொல்ல சுருக்கென்றது மங்கையர்க்கரசிக்கு.

“மங்கா… லைன்ல இருக்கியா?”

“ம்ம்ம்… சொல்லுப்பா.” சுரத்தையின்றி ஒலித்தது குரல்.

“உன் அத்தை மகனுங்க சூப்பர்ப்பா. அன்னைக்கி கண்டக்டரா வந்தார்ல அவரும் உங்க அத்தை மகனாம்ல. என்னைய அடையாளம் கண்டு விசாரிச்சார்ப்பா” என்றவளிடம் என்ன விசாரித்தான் என கேட்கவில்லை. ஆர்த்திக்கு இவர்கள் எல்லாம் சொந்தம் எனத் தெரிந்துகொண்ட வியப்பும், ஆர்வமும் அவள் பேச்சில் தெரிந்தது. இவள் இங்கு அமைதியாகவே இருக்க,

“என்னடி பொறாமையா? எனக்கு அவங்க அண்ணன் முறைடி. நீதான் எனக்கு முறை. நான் மட்டும் ஆம்பளப்பையனா இருந்தா உன்னைத் தூக்கிட்டுப் போயி தாலிகட்டிருப்பேன்.” எப்பொழுதும் சொல்வதை இன்றும் சொல்லிச் சிரிக்க,

“உனக்கு வேற வேலையே இல்ல. எப்ப பாரு இதையே சொல்லுக்கிட்டு.” வழக்கம்போல இவளும் நொடிக்க,

“என்னடி பண்றது… இப்ப, உங்கப்பா உங்கம்மாவக் கட்டப்போயிதானே நீயெல்லாம் இம்புட்டுச் செவப்பா பொறந்திருக்க. அவர மாதிரியே கட்டிருந்தார்னு வையி… நெனச்சுப் பாரு…” அங்கே ஆர்த்தி கற்பனைக்குள் செல்ல,

இங்கு அப்பா முகம் எப்படியிருக்கும் என தன் மூளை அடுக்குகளை தூசிதட்டிக் கொண்டிருந்தாள் மங்கையர்க்கரசி.

*******
ரெங்கநாதன் பங்காளிகளை பஞ்சாயத்து பேசவேண்டுமென செல்லப்பாண்டி பந்திக்கு விடாமல் பிடித்து வைத்துக்கொண்டார்.‌ சாப்பாடு முடிந்தால் மொய் வைத்துவிட்டு கிளம்பி விடுவார்கள். மீண்டும் ஒன்று சேர்ப்பது கடினம்.

“கல்யாணத்துக்கு வந்த எடத்துல என்னப்பா பஞ்சாயத்து.‌ அதெல்லாம் நல்லாருக்காது?” செல்லப்பாண்டி சொல்லியதைக்கேட்டு ஒருவர் மறுப்பு சொல்ல,

“இப்பத்தானே ஒன்னு சேந்துருக்கோம்.‌ மறுபடியும் எல்லாரும் கூடறது திருவிழாவுக்குதானே. அப்ப இதெல்லாம் பேசமுடியாது. இப்பவே பேசி முடிச்சுவைங்க.”

“ஏம்ப்பா… இம்பூட்டு நாளா விட்டுப்புட்டு இப்ப கேக்குறீங்க. அதுவும் மாணிக்கம் வீட்டு விசேஷத்துல. அம்மையப்பனுக்குத் தெரிஞ்சா பங்காளிகளுக்குள்ள சங்கட்டமப்பா. என்னாண்ணே நீங்களும் இப்படி பண்ணிட்டீங்கனு கேட்டா மூஞ்சிய எங்க வைக்கிறது?” ஒரு பெருசு நியாயத்தை எடுத்துச்சொல்ல,

“இப்ப விட்டா இதுக்குனு‌ வேலவெட்டிய விட்டுப்புட்டு எல்லாரும் இன்னொரு நாள் வருவீங்களா? நமக்கு கேஸு, கோர்ட்டுனு போயி பழக்கமில்லைல. எதுவாயிருந்தாலும் நமக்குள்ள பேசி முடுச்சுக்கறதுதான. வந்த கையோடு இதையும் பேசி முடிச்சுவிட்ருங்க மாமா.‌ நாங்களும் பிள்ளைக்கு மாப்பிள்ளை பாக்கணும்ல.” செல்லபாண்டி எடுத்துச் சொல்ல, இதுவும் நியாயம் எனத்தான் பட்டது வந்தவர்களுக்கும்.

இதுவரை போலீஸ் ஸ்டேஷனோ, கோர்ட்டுக்கோ சென்றதில்லை. பங்காளிகளின் நீக்கு போக்கு தெரியும் என்பதால், சொத்துப் பிரச்சினையோ, அண்ணன் தம்பி தகராறோ, யாருக்கும் பாதகமில்லாமல் தங்களுக்குள்ளே பேசி முடித்துக் கொள்வர்.

அதனால் தான் அன்று ஊருக்குள் பேசப்படும் பஞ்சாயத்துகள் எல்லாம் நடுநிலை தவறாமல் நடந்தது. ஏனென்றால் ஆள் எப்படி, அவன் குடும்பம் எப்படி, இதை இவன்‌ செய்திருப்பானா… மாட்டானா? என ஒருத்தரைப் பற்றி தலைமுறை தலைமுறைகளாக ஊருக்குள் தெரியும் என்பதால் நாலாவிதமாக அலசி ஆராய்ந்து நடுநிலையாக தீர்ப்பு வழங்க முடிந்தது.

“கெழவி செத்தப்பமட்டும் மகன் வயித்துப் பேத்தி நெய்ப்பந்தம் புடிக்க வரணும்னு சொன்னீங்கள்ல. அதே மாதிரி பேசி சொத்தையும் வாங்கிக் கொடுங்க” செல்வி சொல்ல,

‘இது நடந்து எத்தன வருஷமாகுது. அப்பவே இத மனசுல வச்சுட்டு தான் மங்கைய அனுப்பிருக்கா’ என இன்றுதான் ரெங்கநாதனுக்கு உரைத்தது.

இத்தனை நாள் இல்லாத ஒட்டு உறவு இப்ப மட்டும் எதற்கென கணபதி அம்மாவின் இறப்பிற்கு மங்கையை அனுப்ப ரெங்கநாதன் மறத்துவிட்டார். செல்வி தான் நல்லதுக்கு தள்ளுனாலும் கெட்டதுக்கு தள்ளக்கதடாதென்று, அம்மாச்சியையும், பேத்தியையும் அனுப்பி வைத்தார். முறை செய்ய உரிமையிருக்குல்ல. அதே மாதிரி சொத்தையும் வாங்கிக் கொடுங்க என இப்பொழுது விடாப்பிடியாக நின்றார்.

இந்த மாதிரி சின்னச்சின்னதாக நாம் செய்யும் சாங்கியங்களும்,‌ உறவுகளுக்குள் செய்யும் செய்முறைகளும் தான் நம் உரிமையையும், உறவையும் நிலைநாட்டுகின்றன.
மாலையெடுத்துப் போட தாய்மாமன், மூன்றாம் முடிச்சுக்கு நாத்தனார், துணை மாப்பிள்ளைக்கு அண்ணன், தம்பி என சுபகாரியங்களிலும்,

தாய்க்கு தலைமகன், தந்தைக்கு கடைசி மகன், மாரடித்து அழ பொம்பள மக்க, நெய்ப்பந்தம் பிடிக்க பேரம்பேத்தி, நீர் மாலைக்கு அங்காளி பங்காளி, பசியமர்த்த கொண்டான்,‌ கொடுத்தான் என துக்க வீடுகளிலும் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை கொடுத்தே நம் சாங்கியங்களும் சடங்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

நாலாவித யோசனைகளும், சமரசமும் செய்து பங்காளிகளை செல்லப்பாண்டி நிறுத்திவைக்க, தன்னுடன் மனைவி கிளம்பி வந்ததன் காரணம் அப்பொழுதுதான் ரெங்கநாதனுக்கு விளங்கியது.
இதற்கு சகளையும் உடந்தை. கல்யாணக் கூட்டத்தில் இது எவ்வளவு பெரிய அவமானம்.

“செல்வி, இது சரியில்ல. ஊரான்வீட்டு விசேஷத்துல வந்து பஞ்சாயத்துப் பண்றது. இது அம்மையப்பன் அண்ணன் வீட்டு விசேஷம் மட்டுமில்ல. இதுல மாணிக்கம் குடும்பமும் இருக்கு. உள்ளூர்க்காரவுக… ஒரே கடைவீதியில தொழில் பண்றோம். என் தங்கச்சி புள்ளைக்கு செய்ய எனக்குத் தெரியும். இவங்ககிட்ட வாங்கித்தான் செய்யணும்னு இல்ல. அந்தளவுக்கு வக்கத்துப்போல. மொதல்ல இங்கருந்து கெளம்பு” கோபமாக ரெங்கநாதன் மனைவியை அதட்டி கிளம்பச்சொல்ல,

“நம்ப ஒன்னும் சும்மா கேக்கல. கொடுத்ததத்தான கேக்கப்போறோம். இன்னைக்கு ஒரு புள்ளய கட்டிக்கொடுக்கறதுன்னா லேசுப்பட்ட காரியமா. அங்க பாத்தீங்கள்ல சீர்செனத்திய. எப்படி அடுக்கிருக்காங்கன்னு. உங்க தொங்கச்சி மகளுக்கே செஞ்சீங்கனா எம்பிள்ளைக என்ன தெருவுல போறதா?”

“ஏன்டி இப்படி அந்தப்புள்ளய கரிச்சுக் கொட்டுற. இங்க என்ன ஒன்னுமில்லாமையா இருக்கு. உன் நியாயப்படி பாத்தா, என் தங்கச்சிக்கு சொத்துல இருக்க உரிமை அந்தப் புள்ளைக்கும் இருக்குல்ல” என கேட்டதுதான் தாமதம். சாமி வந்தவராட்டம் ஆடிவிட்டார் செல்வி. இதுவரை சொந்தபந்தங்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போலத்தான் தோன்றியது. ஆனால் இப்பொழுது செல்வியின் குரல் ஓங்கி ஒலிக்கவும்தான் அனைவரின் கவனமும் அங்கு திரும்பியது.

“ஓ… பங்கு வேற கொடுப்பீகளோ? நீங்களே நூல்புடுச்சு அளந்து விடுவீக போல. அவ ஆத்தாளுக்கு சீர் செஞ்சதெல்லாம் எதுல சேத்தி. இவள இம்பூட்டு நாளா சோறு போட்டு வளத்து, துணிமணி எடுத்துக் கொடுத்து, நல்லது கெட்டது பாத்து, படிக்க வச்சு, ஊர் மெச்ச சடங்கு சுத்தணும்னு உங்க ஆத்தா பேச்சக்கேட்டு அத்தன லட்சம் செலவு செஞ்சதெல்லாம என்ன கணக்காம். ‌ பெத்தவரு கல்லுக்குண்டாட்டம் இருக்கார்ல. அங்க என்ன ஒன்னுமில்லாமையா இருக்கு நம்ப எடுத்துச் செய்ய. இது எந்த ஊரு நியாயம்” ஆங்காரமாகக் கேட்க, அங்கு கூட்டம் சேர்ந்தது. சலசலக்கவும் தொடங்கியது. ரெங்கநாதனுக்கு பங்காளிகள் முன் தலைகுனிவாகப் போயிற்று.

மைக் செட் சத்தத்தில் இது எதுவும் தெரியாமல் கல்யாண வீட்டார் பந்தியை கவனித்துக் கொண்டிருக்க, இந்தத் தகவல் வேந்தனின் காதுகளுக்கு எட்டியது. தம்பியிடம் பொறுப்பை விட்டுவிட்டு அங்கு விரைந்தான். மேடையில் மணமக்கள் நண்பர்கள் சூழ ஃபோட்டோ எடுப்பதில் மும்மரமாக இருந்தனர். ஓரளவிற்கு உறவுகள் எல்லாம் எடுத்து முடித்து விட்டனர்.‌
அம்மையப்பனிடம் சென்றான். மணமக்களை மறுவீடு அனுப்புமாறு சொல்ல, இன்னும் நேரமிருப்பதாக கூறினார்.

“மறுவீடு போய்ட்டு இங்கதானப்பா மறுபடியும் வரணும். மதிய சாப்பாடு முடிச்சு நம்ப வீட்டுக்குப் போயிட்டு மறுபடியும் ராத்திரி மாப்பிள்ளை வீடு திரும்ப லேட்டாயிரும்ப்பா. சீக்கிரம் அனுப்பி விடுங்க” மகன் சொல்வதும் சரியெனப்பட, தனது தம்பிகளை அழைத்தார் அம்மையப்பன்.

இவர்கள் ஏதாவது பிரச்சினை கிளப்பும் முன் தங்கையை சந்தோஷமாக மறு வீடு அனுப்பும் வேலையில் மும்மரமானான் வேந்தன். மாணிக்கத்திடம் சென்று சொல்ல அவருக்கும் சரியெனப்பட, மகளையும், மனைவியையும் உடன் தன் தங்கையையும் மணமக்களுடன் போகச் சொன்னார். அம்மையப்பன் மணமக்களோடு தன் பெரிய தம்பியையும் அவர் மனைவியையும் அனுப்பி வைத்தார். சித்தப்பா பிள்ளைகளும் திவ்யாவுடன் சேர்ந்து கொள்ள, உள்ளூர்தான் என்பதால் மணமக்கள்,‌ முத்துப்பேச்சி, பிள்ளைகளோடு ஒரு காரிலும், பெரியவர்கள் ஒரு காரிலும் என இரண்டு கார்களில் பிரிந்து ஏறிக் கொண்டனர்.

அரைமணி நேரத்தில் மணமக்களை மறு வீடு அனுப்பிவிட்டு, எதுவானாலும் அவர்களே வரட்டும் என மீண்டும் பந்தியைக் கவனிக்க சென்றுவிட்டான்.
பங்காளிகள் சிலர் மட்டும் இன்னும் சாப்பிட வராமலிருக்க, இப்பொழுது பந்தியில் கூட்டமும் சற்று குறைந்திருக்க அம்மையப்பன் அவர்களை அழைக்க வந்தார்.

“என்னண்ணே… இன்னும் சாப்பிடலயா?” என கேட்டுக் கொண்டே வர,

“வா அம்மையப்பா… உக்காரு” தன்னருகே இருந்த சேரை நகர்த்திப் போட, மரியாதைக்காக அமர்ந்தார்.

“நம்ப வீட்டு சாப்பாடுதானப்பா. வந்தவங்க மொதல்ல சாப்பிடட்டும். நமக்கென்ன அவசரம். உன் பங்காளி என்னமோ கேக்குறாப்ல” என பீடிகை போட,

“யாரு… இங்க இருக்குற எல்லாருமே எனக்கு ஒன்னுவிட்ட, ரெண்டுவிட்ட பங்காளிகதான். இதுல யாரச் சொல்றீங்க?” அங்கு ரெங்கநாதன் இருந்ததையும் கவனித்துவிட்டுதான் கேட்டார். அவரது சகளைப்பாடி செல்லபாண்டியையும் கவனித்தார். ‘இவன் சரியான மொடா முழுங்கியாச்சே… இவங்களோட என்ன பண்றான்’ எனவும் யோசனை ஓடியது.

“உன் மச்சான வரச்சொல்லு அம்மையப்பா” என,

“உங்களுக்கு தேவைனா நீங்க கூப்பிடுங்க” என வேந்தன் அங்கு வந்தான். எங்க அப்பா என்ன நீங்க வச்ச ஆளா என்ற கேள்வி தொக்கி நின்றது‌ அவனது அழுத்தமான பதிலில்.

அம்மையப்பன் இவர்களிடம் வந்தவுடன் அதைக் கவனித்துவிட்டு வேந்தனும் அங்கு வந்தவன் தன் தந்தையின் பின் நின்று கொண்டான். மார்பின் குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு அவன் நின்ற தோரணையே எதுவானாலும் பார்த்துப் பேசுங்கள் என்றது. தன் மாமனை அழைக்கச் சொல்ல, அதுவும் தன் அப்பாவைவிட்டே அழைக்கச் சொல்ல, சொன்னவர் மூத்தவரே என்றாலும் கோபம் வந்தது.

“தம்பிக்கு மூக்கு மேல கோவம் வருது. ஃபோன்ல தாம்ப்பா கூப்புடச் சொன்னே. ஒரு எட்டு தூரத்துல இருந்தாலும் இப்பெல்லாம் ஃபோன்ல தான கூப்புடுறோம். எங்கிட்ட உன் மாமன் நம்பர் இல்ல. இருந்தா நானே கூப்புட்ருவே” என ஏதோ பெரிய காமெடி சொல்லியதுபோல் அவரே சிரித்துக் கொண்டார்.

“என்ன விஷயம்னு சொன்னா கூப்புடலாமா வேண்டாமானு யோசிக்கலாம்.” என்றான்.‌

“எல்லாரையும் பாத்து ரொம்ப நாளாச்சு. ஒதுங்கி உக்காந்துருக்காப்ல. பெரியவங்க நாங்க ஏதாவது பேசுவோம்ப்பா” என, இவர்கள் பேச்சு ஏதோ சரியில்லை எனப்பட்டது அம்மையப்பனுக்கு.

“என்னண்ணே… எதுனாலும் ஒடச்சுப் பேசுங்க. எங்களுக்கு வேலையிருக்கு.” அம்மையப்பன் தேங்காய் உடைத்ததுபோல் பட்டென்று கேட்க.

“என்ன மாமா… சும்மா சவளப்பிள்ளையாட்டம் நயநயன்ட்டு.‌ அதா அவரே ஒடச்சுப் பேசச் சொல்றாருல. அவரு மச்சான்கிட்ட பிள்ளைக்குச் சேரவேண்டியத வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க மாமா?” ஆண்கள்‌ மத்தியில் செல்வி குரல் ஓங்கி ஒலிக்க,

“ஆம்பளைக பேசுறாங்கள்ல செல்வி. நீ அமைதியா இரு” என ரெங்கநாதன் அடக்க, கணவர் பேச்சுக்கு அடங்கிவிட்டால் எப்படி…

சத்தம் கேட்டு தாமரை அங்கு விரைய, அக்காவைப் பார்த்துவிட்டு கணபதியும், வித்யாவும் அவர் பின்னாலே எழுந்து வந்தனர்.

ஆலமரமில்லாமல், செம்பு இல்லாமல், நாட்டாமையில்லாமல் அங்கு ஒரு பஞ்சாயத்து தன்னால் கூடியது.

******

அடுத்த எபி…

“அவங்க கேக்குறதுல தப்பில்ல. சரியாத்தான கேக்குறாங்க. மாமாவோட பங்கு அவரு மகளுக்குத்தானே. வேற யாருக்குமா கேக்குறாங்க. கொடுத்துருவோம்ப்பா” வேந்தன் எளிதாகச் சொல்ல…
மகனின் எத்தனை வருட உழைப்பு அது. அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டான் என மனம் அடித்துக் கொண்டது அம்மையப்பனுக்கு. மகனின் கனவு நிறுவனம் அது. அதை சரியாகப் பிரித்து இன்னொருவனை அமர வைப்பதா?
………

“எப்படினாலும் ஒன்டிக்கட்டையான அண்ணனின் பங்கு பொதுச் சொத்துதானே. நாளைக்கு நம்பிள்ளைகளுக்கும் ஏதாவது கிடைக்கும் என எண்ணியிருந்த வித்யாவின் நினைப்பில் மண், கல் எல்லாம் விழுந்தது.

………

செல்லபாண்டியின் கைபேசி ஒலிக்க, மகள் எனத் தெரிந்து, செல்வராணியிடம் போனைக் கொடுத்தார்.‌ இவர்கள் சப்தத்திலும், ரேடியோ இறைச்சலிலும் பேச முடியாமல் எழுந்து மண்டபம் விட்டு வெளியேவந்தார் செல்வராணி. ஒரு காதை கையால் மூடிக்கொண்டு, மறு காதில் வைத்து அழைப்பை ஏற்க, அவர் கேட்ட செய்தியில்,

“யாத்தே… பாவிமக எங்குடியக் கெடுத்துட்டாளே…” என நெஞ்சில் கைவைத்து அமர்ந்துவிட்டார்.
Nirmala vandhachu 😍😍😍
Today update varum nnu nenaichen esh ma
 
SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,594
Reaction score
7,771
Location
Coimbatore
அருமையான பதிவு
கல்யாணம் அந்த கலகலப்பை😍🌺🌹🌷
அனுபவிக்க விடாமல் இந்த
செல்வி சதி ஆலோசனை கூட்டம்
கலாட்டாவ ஆரம்பிச்சுட்டாங்க

என்ன பத்மா ஓடிப்போயிட்டாளா
 
Sindhu siva

மண்டலாதிபதி
Joined
May 10, 2023
Messages
131
Reaction score
102
Location
Trichy
பத்மா கல்யாணம் பண்ணிட்டாளா இல்ல வேற எதுவுமா?!
Waiting for nxt epi
 
Labal

மண்டலாதிபதி
Joined
Aug 25, 2019
Messages
187
Reaction score
158
Location
Chennai
Padma Kalyanam pannikitta pola.Inime SelvaPandikku veetu panchayat mudikkave time irukkadhu
Mamgakku sothula urimai ketkalaam thappillai aana ketka vendiya idam time murai illai
Ranganathan konjam nyayamanavaraa theriyaraar
 
amuthasakthi

இணை அமைச்சர்
Joined
Sep 10, 2019
Messages
534
Reaction score
748
Location
Kamuthi
கல்யாண வீட்ல இந்த பஞ்சாயத்து நடந்திருக்க வேணாம்...

செல்வி கேக்கலனாலும் கணபதி சொத்து மங்கைக்கு தானே...என்ன தான் வேந்தன் இத்தனை வருஷம் உழைச்சாலும் உரிமை இல்லையே....அம்மையப்பர் இதெல்லாம் முதல்லயே யோசிக்கலயா..

பத்மா கல்யாணம் பண்ணிக்கிட்டாளா இல்ல வேற முடிவா...
டீய ஆத்தி எதிர்பார்ப கூட்டி விட்டிங்க😄
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top