நிலா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AniRaje

Well-known member
Joined
Dec 8, 2018
Messages
198
Reaction score
477
Points
63
Location
Universe
நிலா


விறு விறு வென்று கோபமாய் வீட்டுக்குள் நுழைந்த நிலா, கோபமாக தன் அறைக்குள் நுழைந்து கதவைப் படாரென்றுச் சாத்தினாள். கோபத்தின் உச்சமாக தன் அறையில் இருக்கும் குறுந்தட்டு ஒலிநாடாவில் “டாடி மம்மி வீட்டில் இல்லை, தடை போட யாருமில்லை” பாடலை அதிர ஒலிக்க விட்டாள்.சத்தம் கேட்ட அம்மா ரேகா, அப்பா சந்திரன், அண்ணன் சுரேன், எல்லோரும் படுக்கை அறையை விட்டு வெளியே வந்தார்கள். அவள் திரும்பி வந்ததை நினைத்து அப்பா சந்தோசத்தில் பேச மறந்தார். இரண்டு நாளாய் நிலாவை காணாமல் தவித்து இந்த நொடி வரை அழுது கொண்டிருந்த அம்மா, நிலா உண்மையாக வந்துவிட்டாளா? என்பதை புத்தி உணராது, குழப்பமாய் மூடிய கதவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.நிலாவின் பதிணெட்டு வயது அண்ணன் சுரேன், “நிலா, எதுக்கு போனாள்? எங்க அன்பை புரிஞ்சிக்காம போனவ அப்படியே போக வேண்டியது தானே… எதுக்கு இப்படி எங்கள் உயிரை எடுக்கனும்? ஏன் திரும்பி வந்தாள்? என்னாச்சு இவளுக்கு? நியாயமா பார்த்தா அம்மா, அப்பா, நான் தானே இவ வீட்டைவிட்டு போனதற்கு கோபப்படனும். இவ ஏன் கோபமா கதவை பூட்டிட்டு இந்த ஆட்டம் போடுறா? எல்லாம் இவள் மேல் நாங்க வைச்ச பாசத்தை தெரிந்து தான் பண்ணுறா… இவள் என்ன பண்ணினாலும் கேட்க மாட்டோம், சரி பரவாயில்லைனு மன்னிச்சுடுவோம் என்கிற தைரியம். இதுக்கு இன்னைக்கி ஒரு முடிவு கட்டணும்” என்று மனதில் முடிவெடுத்தான். அதே மனது, “நீ நிலாவை கேள்வி கேட்க போற?” என்று அவனை திருப்பிக் கேட்டு கேலி பண்ணியது.ரேகா, அரசு பள்ளியில் கணித ஆசிரியர். சந்திரன், நீதிமன்றத்தில் தலைமை வக்கீல். நரேன், இரண்டாம் வருட மருத்துவ மாணவன். இந்த மூவரும் ஒரு விசயத்தில் மட்டுமே ஒத்துப் போவார்கள். அது நிலா மேல் கொண்ட அளவிட முடியாத அன்பு.நிலா, பேருக்கு ஏற்றமாதிரி வட்ட முகம். 12 வயது, ஏழாவது படிக்கும் பெண். படிப்பில், விளையாட்டில், பண்பில், அன்பில் எல்லாவற்றிலும் சூரப்புலி, சுட்டிப்புலி. நரேன் மீது கொள்ளை அன்பு. அப்பாவின் செல்லச் சிட்டு. அம்மாதான் இவளை கண்டிக்கும் ஒரே நபர். அம்மாவையும் கட்டியணைத்து நிலவு குளிரவைக்கும். வயதைத் தாண்டிய விவரம். எதிலும் நேர்மை.இரண்டு நாளுக்கு முன் அப்பா அலமாரியில், அவசரத்துக்கு பணம் எடுக்கும் போது பார்த்த ஆவணத்தில் இருந்த விசயம் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால், வீட்டை விட்டு யாரிடமும் சொல்லாமல் கூடுதலாக 1000 ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டாள்.போனவள் சும்மா போகாமால் “என் வேரைத் தேடி போறேன், நானே திரும்பி வரும் வரை, காத்திருக்கவும். என்னைத் தேடினால் நான் திரும்பி வரவே மாட்டேன்.” என்று ஒரு கடிதத்தையும் எழுதி அதை அப்பாவின் தினசரி நாள்குறிப்பேட்டில் கண்ணில் படும்படி வைத்துச் சென்று விட்டாள்.மாலையில், அந்தக் கடிதத்தைப் பார்த்த, அப்பா, தன் காவல் நண்பரிடம் சொல்லித் தேட, இவர் நினைத்த மாதிரியே நிலாவும், அந்த இடத்தில் இருப்பதை அறிந்து மனம் ஆறுதல் அடைந்தார். இதைக் கேட்ட ரேவதி தான், அந்த நொடி முதல் அழுகை, ஆர்ப்பாட்டம். நரேன் தான், நிலாவின் இயல்பு புரிந்து, அமைதியாய் அப்பா அம்மா விற்கு ஆறுதலாய் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து அவர்களைத் தூணாய் தாங்கினான்.எப்படியும் நிலா வந்திடுவா என்கிற நம்பிக்கை நரேனுக்கு. அதே போல் நிலாவும் வந்துவிட்டாள். ஆனால் இப்படி ஒரு அலட்ச்சியத்தைத் தான் இவன் எதிர்பார்க்கவில்லை. வருவாள், அழுவாள், அதன்பின், அம்மா, அப்பா, இவனைக் கட்டிக் கொள்ளுவாள் என்று நினைத்தான். ஆனால் அவளோ? பண்ணுறத பண்ணிவிட்டு… ம்ம்ம்… ரொம்ப நெஞ்சழுத்தம் தான்! வெளிய வரட்டும்… இருக்கு அவளுக்கு. நரேன் மனதில் குமறினான்.வெளிய வந்த நிலா… “அம்மா, இரண்டு நாளா குளிக்கலை. கசகசனு இருந்துச்சு. அதான், வந்தவுடனே குளிச்சுட்டேன். இப்ப எனக்கு பசிக்குது, என்ன இருக்கு சாப்பிட?” இயல்பாய் கேட்டாள்.அம்மாவிற்கு, அவள் அம்மானு சொன்ன நொடி இதழ் மலர, முகம் மலர “இருடா நிலா, பத்து நிமிசம். அம்மா, உனக்கு பிடிச்ச கார சட்டினி, ஊத்தாப்ப தோசை செஞ்சு தாரேன்.” என்று சமையல் அறைக்குள் நுழைந்தார். நிலா, மனதிற்குள், “அப்பாடா, ஒரு விக்கெட் எடுத்தாச்சு.” என்று நினைத்துக் கொண்டாள்.நிலா அடுத்து, “அப்பா, நாளைக்கு எனக்கு கணக்கு பரீட்சை இருக்குப்பா. அதுக்கு, க்ராஃப் வேணும். நான் கொஞ்சம் கணக்கு போட்டு பார்க்கணும். ப்ளீஸ்ப்பா… க்ராஃப் தாள், பிரிண்ட்அவுட் எடுத்துத் தாங்கப்பா. இல்லைனா கைடையில் வாங்கித்தாங்கப்பா” என்றாள்.அப்பா, உடனே, மகள் இயல்பாய் இருக்க முனைவதை அறிந்து, அதுக்கு ஏற்ற மாதிரி, தானும், “சரிடாம்மா, இதோ, முக்கு கடையில் போய் வாங்கிட்டு வாரேன்” என்று சொல்லி, சட்டை அணியச் சென்றார். “அப்பாடி, இரண்டாவது விக்கெட்டும் எனக்கு தான்” என்று மனதில் சொல்லிக்கொண்டாள் நிலா.நரேன், இவளைக் குறுகுறு என்று பார்த்தான். அய்யோ, இவன் இப்படி பார்க்குறானே… அண்ணா… நீ மட்டும் ஏன்டா இப்படி அன்பை விட கொஞ்சம் அறிவா இருக்கிற? “முருகா, இவனை மட்டும் இன்னைக்கி நான் சமாளிச்சுட்டா, அவனுக்கு மொட்டை போட்டு, அவனோட முடியை காணிக்கையா உனக்குத் தந்துடுறேன்” அவசரமா மனதில் முருகனிடம் ஒரு ஒப்பந்தம் போட்டாள் நிலா.“எங்க போன? எதுக்கு திரும்பி வந்த?” நரேன் கேட்ட நொடி, அப்பாவும், அம்மாவும் தங்கள் இடத்தில் இருந்து மனதில் பதைப் பதைப்போடு நிலாவின் பதிலுக்காக காத்திருந்தனர்.“அட பாவி அண்ணா, நான் உன் தங்கை டா” – இது நிலா.

“அப்படியா? வேர்களைத் தேடி போனனு எழுதி இருந்த?” - நரேன்

“அதுவா? அது.”

“அது தான்… சொல்லு இப்ப… அம்மா, அப்பா வை சமாளிச்ச மாதிரி என்னை ஏமாத்த முடியாது. சொல்லு இப்ப”

“அண்ணா, நான் பிறந்த வருடத்தில், ஒரு குழந்தையை நம்ம அப்பா, அம்மா தத்து எடுத்ததா ஒரு ஆவணம் அப்பா அலமாரியில் பார்த்தேன். அது நானானு தெரிஞ்சுக்க போனேன்” தலையை கவிழந்து சொன்னாள் நிலா.

“நிலாம்மா… என்னடா… என்கிட்ட கெட்டு இருக்கலாம்ல? நான் சொல்லி இருப்பேன் தானே?”

“நான் கேட்டா நீங்க வருத்தப் படுவீங்கனு தான் கேட்கலை”

“சரி, என்ன தெரிஞ்சுக்கிட்ட?”

“அது… நான் தான் அந்த குழந்ததைனு தெரிஞ்சுகிட்டேன். என்னை பெத்து அங்க விட்டவங்க யாருனு அந்த ஆசிரமத்தில் யாருக்கும் தெரியாதுனும் தெரிஞ்சுகிட்டேன். அண்ணா, நான் உங்க ஆறாவது பிறந்த நாளில் தான், அந்த ஆசிரமத்தில் பிறந்து தொப்பில் கொடி காயாத குழந்தையா வந்ததா சொன்னாங்க. நீங்க தான் நிலானு எனக்கு பேரு வச்சீங்கனு சொன்னாங்க. உங்க பிறந்த நாள் பரிசா என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்கனு சொன்னாங்க” என்றாள் நிலா.

“சரி. இப்ப என்ன பண்ண போற?”

“சாப்பிட போறேன், அண்ணா. நீயும் சாப்ப்பிட வரியா?”

“நிலா, நான் என்ன கேட்டேன்னு உனக்குப் புரியும். சொல்லாமல் வீட்ட விட்டு போறது சரியா?”

“தப்புதான், நான் அப்படி செஞ்சிருக்க கூடாது. எனக்கு அப்ப ரொம்ப குழப்பமா இருந்துச்சு. தனியா இருந்தேன். அந்த ஆசிரமத்தில் கேட்கனும்னு தோணுச்சு. அதான் எதையும் யோசிக்காமல் கிளம்பிட்டேன். அப்பா என் பாதுகாப்புக்கு, ஆள் ஏற்கனவே போட்டு இருக்கிறது எனக்கு தெரியும். அதான் என் பாதுக்காப்ப பத்தி யோசிக்காமல் கிளம்பிட்டேன். ஸாரிண்ணா.”

“நிலாம்மா, உன்னால் அம்மா, அப்பா கவலை ஆகிட்டாங்க. நீ இப்படி பண்ணி இருக்க கூடாது”

“எனக்கு நான் அவங்க குழந்தையில்லைனு தெரியவும் கஷ்டமாகிடுச்சு. நீ உண்மையா என் அண்ணா இல்லைனு தெரியவும் கடுப்பாகிடுச்சு. அதுதான்…” நிலா சொல்லிக்கிட்டே தேம்ப.உள்ள இருந்து கேட்டுக்கொண்டு இருந்த, அம்மா, அப்பா இருவரும் ஒரே நேரத்தில், “நரேன், பாப்பாவை எதுக்கு அழ வைக்கிற” என்று பதறினார்கள். மேலும், “நிலாம்மா, நீ எங்க பொண்ணுதான். எதுக்கு அழுற?” என்று அவளைச் சமாதானம் செய்தார்கள்.நிலா ஓடிபோய் இருவரையும் கட்டிக்கொண்டாள். “அப்பா, அம்மா நான் உங்க பொண்ணு தானே? சொல்லுங்க? அண்ணா? நான் உன் குட்டி வாலு தங்கை தானே? சொல்லுண்ணா?” என்று மேலும் அழுதாள்.மருத்து மாணவனாய் அவள் அழுது மனம் தெளிந்ததை உணர்ந்த நரேன், “சரி. இதுக்காகவெல்லாம், நான் என் கணினியை உனக்கு தரமாட்டேன். என் ரூம்குள்ள எதையும் நோண்டக் கூடாது. என் சட்டையை எடுத்து போடக்கூடாது. அம்மா செய்யும் லட்டும் அதிரசமும் எனக்கு தான்” என்று நரேன் அடுக்கிச் சொல்ல சொல்ல… கடுப்பாகிய நிலா, “அப்படித்தாண்டா உன்னதை எடுப்பேன். உனக்கு தராமல் நானே எல்லா லட்டையும் சாப்பிடுவேன். சாப்பிட முடியலைனா, அதை பூந்தியாக்குவேன். இப்ப என்ன பண்ணுவனு” அவனிடம் சண்டையிட்டு நரேனை அடிக்கத் துரத்த ஆரம்பிச்சா.

இவர்கள் சண்டையை மன நிறைவோடு ரேவதியும், சந்திரனும் பார்த்தார்கள்.
 
Sugaaa

Well-known member
Joined
Jun 23, 2019
Messages
4,626
Reaction score
17,565
Points
113
Location
Tamil Nadu
? super...

?அழகான... அன்பான... குறும்பான... அறிவான... நிலா cfcdda1dbe545efacd844a4f608b8dcf.jpg
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top