பகுதி -21

#1
எளிமையான திருமணம் நடந்தது குடும்பத்தினர்தான் அவள் சார்பாக வந்திருந்தனர் தொழி நந்தினி தன் அப்பாவுடன் வந்திருந்து கலகலவென்று வைத்தால் முதல் வரிசையில் வழக்கம்போல் குந்தன் வைத்த டிசைனர் புடவை நடுவே தலையை கோதியபடி வந்து அமர்ந்தார்ள் யாழ். அவளைப் பார்த்தவுடன் பெரிதாய் சிரித்தான் இதயா.


ஜம்முனு மணப்பெண் வந்ததெல்லாம் மடியில் வந்து உட்கார்ந்தார். கொண்டாள் ரக்ஷனா குட்டி. அவளை மடியில் வைத்தபடியே தான் இதயாவின் தாலியை ஏற்றால் . ஜோராக கை தட்டினால் ரக்ஷனா.


இதோ......


(எப்படியோ ஒரு வழியா பிளாஷ்பேக் முடிச்சிட்டேன் இனிமே நிகழ்காலத்தில் நடக்கிறது பார்க்கலாம் வாங்க)


பதினொரு வருடங்கள் ஓடிவிட்டன.


இந்த உறவு சிக்கல் வெளியே தெரியாத அழகான குடும்பப் பின்னலாய் எல்லாரும் நடமாடிக் கொண்டு.......


எல்லாம் ரக்ஷனாவிற்காக.


முதலில் பாகீரதியம்மாளின் கண் முன் இருவரும் அந்நியோன்யமாக தம்பதியா தான் நாடகமாடினார்.


குழந்தையோட அவளையும் அழைத்துக்கொண்டு கோவில் கடை சினிமா என்று கூறி வருவான் இனிப்பு என்று வாங்கி வந்து தருவான்.


பாகீரதியம்மாளின் முகம் அப்படியே மலரும். கணவன்-மனைவிக்கு இடையில் தான் எதற்கு என்று நாசுக்காக நடந்து கொள்வார்கள் அவர் நகர்ந்து தன் நாக்கை சட்டென சுற்றுவார்கன்.


என் குழந்தையை பார்த்துக்கொள்ளும் ஆயாவுக்கு என்ற படியே அவள் கைகளில் வைப்பான்.


(பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. எவ்வளவு பொய் சொன்னாலும் அந்த பொய் சீக்கிரமா வெளியே வந்துவிடும்)


ஆனால் ,கெட்டிக்காரன் பொய் பத்து நாட்கள் கூட தாங்காது என்பது போல் இரண்டு மூன்று வருடங்களில் இவர்கள் உணர்வு நிலையை பாகீரதியம்மாள் மோப்பம் பிடித்து விட்டார்.


முதல் சந்தேக விதை யாழ் பிறந்த நாளன்று விழுந்தது. அன்று அலுவலகம் நிமிர்த்தமாக கோவைக்கு போவதாய் கூறி இருந்தான் .மாலை அவன் திரும்பிய சற்று நேரத்துக்கெல்லாம் யாழ் வந்து பாகீரதியம்மாள் காலில் விழுந்து, "என்னை ஆசீர்வதியுங்கள்" என்றாள்.


இந்த வரை தன் மகனின் வாழ்வு இருந்த விலகினாலும் என்ற சந்தோஷத்தோடு மனதார வாழ்த்தினார் பாகீரதியம்மாள்.


வந்தவுடன் ஏதாவது பேச்சு கொடுக்க வேண்டும் என்பதற்காக என்னம்மா வாங்கிக்கிட்ட பிறந்த நாளுக்கு?" என்றார்.


கழுத்தில் கைகளில் கடந்த வைர நகைகளைக் காட்டி கோவையில் ஒரு பிரபலமான நகை கடையில் வாங்கிக் கொண்டதாக சொன்னாள்.


"நல்லா இருக்குமா என நான்கு ஐந்து லட்சம் இருக்குமா?"


சற்று இன்னும் முழித்தவள் சுதாரித்துக் கொண்டு "ஆமாம்" என்பது போல் தோள் குலுக்கி சிரித்து சமாளித்தாள்.


" உங்க அண்ணா அமெரிக்காவிலிருந்து வாழ்த்து சொன்னாரா?"


"ம், சொன்னாரு ஏதாவது வாங்கிக்கோனு பணம் டிரான்ஸ்பர் பண்ணிட்டார்."


" அதுல தான் இதெல்லாம் வாங்கிட்டியா? சரி, உனக்கு அண்ணன், அண்ணனுக்கு நீன்னு இருக்கீங்க. அப்பா அம்மா இருந்தா உங்க 2 பேரும் இப்படி வைத்திருப்பார்களா நீயும் இதயாவும் விரும்பினீங்கம்மா. பரிதாபம் வேற மாதிரி ஆயிருச்சு என்ன செய்ய இதெல்லாம் மறந்துட்டு .உன் அடுத்த பிறந்த நாள் குள்ள உனக்கு கல்யாணமாகி , நீ உன் கணவரோடு என் ஆசீர்வாதத்தையும் வாங்கணும்மா"என்றார் மனப்பூர்வமாய்.


விஷமச் சிரிப்போடு இதயாவை ஓரக்கண்ணால் பார்த்தாள், யாழ்.


அங்கு இரவு உணவு எடுத்துக் கொண்டு விட்டு அவள் கிளம்பிப் போன பின் இதயா சீக்கிரமே படுக்கப் போனான்.


மிருதுளா வீட்டு கதவுகளை எல்லாம் ஆட்கள் சரியான சாத்திப் பூட்டிவிட்டார்களா என்று சரிபார்த்துக் கொண்டிருந்த.


மாத்திரைகளைப் போட்டுக் கொண்டிருந்த பாகீரதியம்மாளிடம் காரோட்டி வந்து நின்றார்.


"என்னப்பா?"


"இல்லம்மா. "ஆடி" காரை காலை சர்வீசுக்கு விடச் சொன்னாரு, ஐயா. இன்னைக்கு அதுல தான் கோவை போய் வந்தாரு. நாளை காலை சீக்கிரமே வண்டியை எடுத்துப் போயிடுவேன் மா.அதுனால கார்ல இருந்த முக்கியமான பேப்பரை கொடுத்து விட்டு போக வந்தேன் என்றான் சில பைல்களை, காகிதங்களையும் பணிவாக அவர் முன் இருந்த மேஜை மேல் வைத்துவிட்டு போனான்.மருமகளை அழைத்து அவற்றை பத்திரப்படுத்தச் சொல்ல நினைத்துக் கொண்டு, எடுத்தார். பொத்தென ஒரு நகைக்கடை உறை விழுந்தது. குனிந்து எடுத்தார். மாலை யாழ் சொன்ன கோவை நகைக்கடை பிரித்துப் பார்த்தார். 9 லட்சத்திற்கு வைர நகை வாங்கியதற்கான பில் மற்றும் வைரங்களின் தரத்திற்கான அட்டைகள்....


மருமகளுக்குத் தான் மகன் வாங்கிக் கொடுத்திருக்கிறான் என்று நினைத்து ஒரு நொடி மகிழ்ந்தவர், மிருதுளா ஏன் தன்னிடம் சொல்ல வில்லை. போட்டும் காட்டவில்லை என்று சின்னதாய் மருமகள் மீது கோபம் எழ சட்டென, " மிருதும்மா " என குரல் கொடுத்தார்.


அதற்குள் அந்த வைர தர அட்டைகளை சரியாய் பார்த்தவர் ஒரு நொடி அதிர்ந்தார். அதில் நகைகளின் புகைப்படம் அச்சாகி இருந்தன. ஒரு நொடி அதிர்ந்தார். இந்த நகை தான் மாலை யாழ் போட்டிருந்தவை.


அப்படியென்றால் ....ஒரு பிறந்த நாளுக்க 9 லட்ச ரூபாய்க்கு வாங்கித் தருவது என்றால்....


"அத்தை?" என்றபடி மிருதுளா அங்கு வர சட்டென அந்த அட்டைகளோடு நகைநகைக்கடை ரசீதை மட்டும் மறைந்தவர் மற்றவற்றை அவளிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொல்லிட்டு படுக்கப் போனார்.


உறக்கம் வர மறுத்தது.


மகன் இன்னும் அந்தப் பெண்ணோடு உறவில் இருக்கிறானா? இந்த அப்பாவிப் பெண்ணுக்கு துரோகம் செய்கிறானா ?


தான் இனி சற்று விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.


அடுத்த வாரம் முழுவதும் அவரால் இயல்பாய் இருக்க முடியவில்லை. மனம் கொதித்தது.


இதற்கு என்ன செய்வது என்று தவித்தவர் , ரஞ்சனி அப்பா போன்ற சில முக்கிய ஆட்கள் தொடர்பு கொண்டு யாழ்க்கு நல்ல படித்த பணக்கார பையனாக வரன் பார்க்க சொன்னார்.


இடையே யாழ்வின் அண்ணனுக்கும் அமெரிக்காவிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.


"என்னப்பா, தங்கைக்கு வரன் பார்க்க வேண்டாமா? இப்படியே விட்டா எப்படி?"


"ஒ, அத்தையம்மா .உங்க மகன் தான் மாப்பிள்ளையைனு நாங்க அவ்வளவு ஷ்யூரா இருந்தோம்.....


"அது தான் இல்லைன்னு ஆயிடுச்சே..."


" ஓ.கே. நீங்களே ஒரு வரனைப் பாருங்க. "


" ஏன் உங்க அமெரிக்காவில் பார்க்கலாமே? இடம் மாறினா மனசும் மாறும்..."


"பார்க்கறேன்"...


"சரி, நீ ஏன் இன்னும் பண்ணிக்கலாம்? "


"கல்யாணமா?" என்றவன் பகபகவென சிரித்தான்.


"அத்தையம்மா, நான் ஒரு பொண்ணோட வாழறேன்"


பாகீரதியம்மாளுக்குப் புரியவில்லை. "என்னது? கல்யாணம்னா பொண்ணோட வாழணும்."


"அப்படி இல்ல.. லிவிங் டுகெதர்னு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கல்யாணம் பண்ணிக்கலாம ஒரே வீட்ல ஒண்ணா வாழறதை...."


பாகீரதியம்மாளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. கலாசாரம், பண்பாடு என்று வாழும் அவருக்கு இதையெல்லாம் ஏற்கும் மனோநிலை இல்லை.


"சரிப்பா, அதையெல்லாம் நீ உன்னோட வச்சுக்கோ. இங்க, உன் தங்கையும் அப்படி ஆராம்பிச்சுடப் போறா..."


என்ன சொல்றான் அவன்? தன் மகனோட அவள் அப்படித்தான் வாழ்கிறார்?


அந்தப் பெண்ணுக்கு அவள் பணக்கார வட்டத்திலேயே ஒருவனைப் பிடித்து எப்படியும் திருமணம் முடிந்து விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டார்.


"யாழ் என் பொண்ணு மாதரி. அவளுக்குனு யாரு இருக்கா? ஒரே ஒரு அண்ணனும் அமெரிக்காவில். நல்ல பையனா இந்த சொல்லுங்களேன்" என்று குடும்ப டாக்டர் முதல் ஊர் கோவில் பூசாரி வரை சொல்லி வைத்தார்.


மிருதுளாவிடம் சொல்லி இன்டர்நெட்டில் வரன் தேடச் சொன்னார். மிருதுளா மனதுக்குள் விரக்தியில் சிரித்துக். கொண்டாள் போகாத ஊருக்கு இவர் ஏன் வழி தேடணும்?


பாகீரதியம்மாளுக்கோ மருமகள் மேல் சற்று கோபம் வந்தது. என்ன பெண் இவள். எப்போதும் குழந்தை பின் ஓடுகிறாளே தவிர, கணவனை மயக்கி கைக்குள் வைத்துக் கொள்ளத் தெரியவில்லையே, என்று.
 
Latest Episodes

Advt

Advertisements

Top