• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி -22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
161
Reaction score
857
Age
31
Location
Pudukkottai
புயலாய் விட்டிற்குள் நுழைந்தான் இதயா.


"அம்மா, அம்மா. .. "


பூஜை அறையில் ரமாயணம் படித்துக் கொண்டிருந்தவர், புத்தகத்தை மூடி விட்டு மெல்ல எழுந்து வந்தார்.


"யாழ்க்கு வரன் பார்கறியா? எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை? " எடுத்தவுடன் மகன் இப்படி தன்னிடம் சீறுவான் என்று அவர் நினைக்கவில்லை.


"ஏம்பா, அவளுக்கு வயசு கூடக்கிட்டே போகுதா. வீட்ல பெரியவங்க யாரும் இல்லை. உன்னை விரும்பினா. உனக்குன்னு இப்ப வேற ஒருத்தியை பிரம்மன் எழுதிட்டான். அப்ப நாம தானே அவளுக்கு பொறுப்பா ஏத்து கல்யாணம் செஞ்சு வெக்கணும்."


"உன் மகனுக்கு மனைவியா வாழும் ஒருத்திக்கு நீ ஏன் வேற இடத்தில கல்யாணம் பேசணும்?"


முகத்திற்கு நேராக மகனிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்பதை அவர் எதிர்பார்க்க வில்லை . என்ன தான் பல நிறுவனங்களை திறம்பட நிர்வகித்தாலும் அம்மாவிடம் அவன் மரியாதை குறைவாய் இதுவரை நடந்து கொண்ட தில்லை. இப்போதோ பளிச்சென்று இப்படி பேசுகிறான்.....


"என்ன சொல்றே? உனக்குன்னு வீட்ல ஒருத்தி இருக்கும் போது...."என்று கம்பீரம் குறையாமல் கேட்டார்.


"அவ எனக்கு இல்லை. குழந்தைக்குனு வந்தவ. குழந்தைகுழந்தைக்கு அம்மாவா மட்டும் இருக்கா. உனக்கும் நல்ல மருமகள்னு வேணும்னாலும் சொல்லாம். ஆனா, வெறும் பேச்சுக்கு மட்டும் தான் எனக்கு மனைவியா வாழறா. இது ஒரு ஒப்பந்த அடிப்படையில் கல்யாணம். குழந்தை கிட்ட இந்த விவரம் சொல்ல சந்தர்ப்பம் வரும் போது, உண்மையை சொல்லிட்டு அவ என் வாழ்விலிருந்து விலகிடுவா . யாழ்லா அப்ப நான் மணந்துப்பேன். இதுக்கு சம்மதிச்ச தான் அவ என்ன கல்யாணம் செஞ்சுகிட்டடா."


கேட்டவுடன் அப்படியே உட்கார்ந்து விட்டார் பாகீரதியம்மாள். மெல்ல சுதாரித்தவர் நிதானமாய் மகனிடம் சொன்னார்...‌


"இதயா, இதயத்தின் அரசன் அந்த ஸ்ரீராமன் மாதிரி என் மகன் இருக்கணும்னு உனக்கு இருதயராசன் பேர் வைத்தேன் . நீ எப்படிப்பா இப்படி?"


"நாம ராமர் வாழ்ந்த யுகத்தில் வாழலாமா .இது கலியுகம்."


அதுக்காக கலாச்சாரம் மாறிவிடுமா?"


இங்கு கலாச்சாரம் என்ன கெட்டுது ? நான் சொல்லிட்டுத் தானே மிருதுளாவை மணந்தேன். என் நகக்கண் கூட அவ மேலபடாமதானே வாழறேன்.


அப்படியென்றால் அக்னிசாட்சியாக கரம்பிடித்தார் என்ன அர்த்தம் ?தாலி கட்டுவதல் வாழ்வதும் ஒரு வாழ்வா?


பாகீரதியம்மாவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை


உன் அப்பா போனபோது நானும் போய் இருக்கணும் எனக்கு எதுக்கு இதெல்லாம் பாக்கணும் தலையெழுத்து என்று கண்கலங்கி எழுந்து போனார்


கொஞ்சம் யோசி மாதி நான் யாருக்கும் நஷ்டம் இல்லை அவர் தேவை பூர்த்தியாகும் புரிஞ்சுக்கோ "என்ற மகனின் சமாதான பேச்சு காதை எட்டினாலும் அவர் மனசை எட்டவில்லை.


மாலை குழந்தையை பள்ளியில் இருந்து கூட்டிட்டு வந்த மருமகளிடம் பேத்திக்கு தெரியாமல் சீறினார்.


"என்ன பைத்தியக்காரத்தனம் இது?"


நான் என்னத்த செய்வேன் இது முதல்ல உங்க மக என்கிட்ட சொன்ன போது நானும் இப்படித்தான் கொந்தளித்த அந்த அரசு குமாஸ்தா கட்டிக்கிட்டு செட்டில் ஆயிடலாம் நினைச்சேன். ஆனா, விதி என்ன இங்க தான் கட்டிப் போட்டுது. ரக்ஷனா முதல் தடவை என்ன அம்மான்னு கூப்பிட போது அந்த பிஞ்சு தான் உலகம் என்று தோணுச்சு . அந்த குழந்தைக்காக எத வேணும்னாலும் ஏற்கலாம் நினைச்சேன் .அவளுக்கும் எனக்கும் எந்த ஜென்மத்து பந்தமோ? குழந்தைக்கு எப்ப உண்மையை தெரிந்திருக்கும் பக்குவம் வந்திருக்குனு நிர்ணயிச்சு‌ , எப்ப இவர் எல்லாத்தையும் சொல்ல போறான்னு தெரியல கவலைப்படாதீங்க, அது வரைக்கும் நான் தான் உங்களுக்கு மருமகள்"


சோகமாய் சொல்லி சிரிக்கும் அவர் பார்த்தார். கண்களில் நிறைந்தது மனம் கனத்தது.



நேற்று நடந்த போலிருந்தது எல்லாம் மிருதுளாவிற்கு. ஆயிற்று வருடங்கள் உருண்டோடின அப்போது 13 வயது ஆகிவிட்டது.


காலப்போக்கில் மகனும் மருமகனும் விரைந்து விடமாட்டார்களா இயங்கிக் கொண்டு இருந்தார்
பாகீரதியம்மாள்.


மகனோ மகளிடம் உண்மையை எடுத்துக் கூற சமயம் பார்த்துக் கொண்டிருந்தான் இப்போது கூட யாழ் விட்டில் தான்..‌‌.


இதில் எதிலேயும் தான் சம்பந்தப்படாத கர்மயோகி போல் ரக்ஷனாவையும் பாகீரதியம்மாளையும் பராமரிப்பது ஒன்றே வாழ்வாய்.


இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முடிவு எங்கே எப்போது


கடந்த கால நினைவுகள் உதறி எழுந்த மிருதுளா தன் அறைக்கு படுக்கப் போனாள். தாலி ஒன்று நெஞ்சில் புரண்டு நாளும் அதற்குரிய வேறு அறிவு இல்லை ஒரே படுக்கையில் தலைமையில் வழக்கம்போல் படுத்தவள் பின்னிரவில் தூங்கி போனாள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
66,494
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top