பகுதி-23

#1
தொடையை இறுக்கி பிடித்த ஷாட்ஸ் சின்ன பனியன் போட்டுக்கொண்டு தோட்டத்தில் தண்ணீர் காட்டிக்கொண்டிருந்தாள் யாழ். இவனைப் பார்த்ததும் உடன் ஆடிய பெண்ணை அடித்து விட்டு ஓடி வந்து கட்டி பிடித்து இவன் மேல் விழுந்தாள்.

"ஹனி, ரன் வர லேட்?" தோளைப் பிடித்து தொங்கியபடி கொஞ்சினாள்.

" புது தொழிற்சாலை சம்பந்தமாக சில அரசு அதிகாரிகள் அடுத்த வாரம் பார்க்கணும். அதுபற்றி மீட்டிங் லேட்டாயிடுச்சு . எங்க நீதான் ஆபீஸ் வருவதில்லையே சரி நீ தயாரா இருந்து இருக்கலாம்ல.

"வர மாட்டீங்களா நெனச்சேன்".

"என்னைக்கு சொல்லிட்டு வராம இங்கிருந்து இருக்கேன்?"

இருந்தாலும் இப்ப எல்லாம் மகனே சொல்லிட்டு தட்டறதில்லை. வருவீங்களா வர மாட்டீங்களா நான் தவம் கிடந்து கொடுக்க வேண்டியது இருக்கு.... ஒரே வீட்டில் இருந்தா எந்த பிரச்சினையும் கிடையாது இல்லையா? உங்க மனைவி அங்கீகாரம் இல்லாமல் எத்தனை வருஷம் இப்படித்தான்...."

கண்களைக் கசக்கிக் கொண்டாள்.

அப்படியே அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

"இன்னும் அப்படியே சின்ன பொண்ணு மாதிரி இருக்கே?" என்றவன், எனக்கும் கஷ்டமா தான் இருக்கு யாழ்" என்று வருத்தப்பட்டான்.

"அப்ப சீக்கிரம் வா நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ங்க.... ஊர்ல ஏதோ நான்தான் உங்க.... எப்படி சொல்றது.... தப்பா பேசறாங்க உரிமை உள்ளவர் தான் விட்டுக்கொடுத்து இப்போ இந்த பேரு பொறுமைக்கும் எல்லை உண்டு.

பேசியபடியே உள்ளே போனார்கள்.

"சரி, சரி.. எனக்கும் கஷ்டமாக இருக்குனு தானே சொல்றேன்.

"சொல்லிக்கிட்டே இருந்தா? எப்ப நான் உரிமையோட உங்க வீட்டுக்கு வந்த வாழப்போறேன்? குழந்தைக்காக குழந்தைக்காக சொல்லி சொல்லியே பத்து வருஷத்துக்கு மேல ஓடிப்போச்சு 13 வயசு பொண்ணு புரிஞ்சுக்க மாட்டாளா? நான்தான் இனி அம்மா. அந்த மிருதுளா வெறும் ஆயானு சொல்றதுன்னா என்ன கஷ்டம்? அவ டீனேஜ் பொண்ணு. இனியும் குழந்தை இல்லை இப்போதெல்லாம் விட்டால் எப்போது சொல்லப்போறீங்க அடுத்த வருஷம் ஒன்பதாவது அப்புறம் பத்தாவது பப்ளிக் எக்ஸாம் இதெல்லாம் காரணம் காட்டி தள்ளிப்போடுவது தான் சரியான காலகட்டம் சொல்லிடுங்க."

சோபாவில் அமர்ந்த அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

"இதயா, நீங்க வரும் சில மணி நேரங்கள் தான் எனக்கு சொர்க்கம். மீதி நேரமெல்லாம் நரகத்துல கழிக்கிறேன் உங்களுக்கு வீட்டுக்கு போனா சேகரம் செய்ய அந்த மிதுலா இருக்கா அன்புக்குரிய அம்மா மகன் இருக்காங்க எனக்கு இங்க தனிமனித பெருமையா இருக்கு ரக்ஷனா சின்ன பொண்ணு இந்த வரைக்கும் இங்கதானே அதிக நேரம் செலவிட முடிந்தது இப்ப அப்பா விவரம் புரிஞ்சுகிட்ட வரேன்னு சொல்லி உங்க அம்மா நீங்க வரதுக்கு வச்சுக்கோங்க உங்களுடைய போனை பிறந்தநாள் விழா என்ன நடந்துச்சுன்னு நினைவிருக்கா? கேக்கை வெட்டி எனக்கு ஊட்ட வந்த போது குறுக்கே நிறுத்தி, 'அப்பாகிட்ட கேட்க வாங்கிக்கோ என்று உங்க அம்மா என்னை முறைத்து பார்க்கலை..."

அவன் அவளை அப்படியே தட்டிக் கொடுத்தான்.

"நீ சொல்றதெல்லாம் சரிதான் யாழ்."

எனக்கு ரொம்ப பயமா இருக்கு, இதயா. இப்படியே என்னை வெட்டி விட்டுவாங்களோனு..." அவள் கண்ணீர் அவன் நெஞ்சை நனைத்தது.

இன்னும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன், "என்ன, யாழ் . அப்ப நீ என்னை நம்பலையா? இப்படி பேசினா அது என்னை எவ்வளவு பாதிக்கும்னு உனக்குப் புரியாதா?" என்றான்.

" உங்களை நம்பித்தானே பத்து வருஷமா இப்படி ஒரு வாழ்க்கை வாழறேன். என் அண்ணா கூட இப்பல்லாம் பொறுமை இழந்து விட்டான் . அமெரிக்க வந்துடுங்கறான். போன முறை அவன் இங்க வந்திருந்தானே, அப்ப அவன் கூட ஒரு நண்பர் வந்திருந்தார் இல்ல. பிரான்ஸ்ல ஃபேஷன் டிசைனரா இருக்கார். ரெண்டு கப்பல். ஒரு சொகுசுப் படகு எல்லாம் இருக்காம். ஐரோப்பாலே நாலு வில்லா, ரெண்டு பங்களானு மல்டி மில்லியன்ர். என்னை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறாராம்."

"யாழ், அந்தக் கதையெல்லாம் எதுக்கு? உன் மனசு எனக்குத் தெரியாதா குத்துவிளக்கு அம்சமான அழகு உரிமையோடா - மிருதுளா வீட்ல இருக்கா. நான் அவளையே திரும்பி கூட பாக்கல என் மனசு உன் கிட்ட உன் மனசு என்கிட்டயும் கட்டுண்டு கிடக்கும் அப்புறம் என்ன நானே கொஞ்சநாள் சீக்கிரமா உன்னை வீட்டில் சேர்த்துக்கணும் நினைக்கிறேன்

"எப்ப சோத்துக்கப் போறீங்க?"

"அம்மா கிட்டயும் மிருதுகிட்டயும் பேசுகிறேன்."

"மிருதுவான?"

"ம், ஆமாம்.... ஏன்?

"மிருதுளா எப்போ மிருதுவா மாறினா?"

"ஒ, அதுவா . டோன்ட் பி ஸில்லி.
குழந்தைக்காக சில சமயம் அப்படி கூப்பிடறதுண்டு."

"குத்து விளக்கு மாதிரி அழகுனு அவளை வர்ணிக்கறீங்க."

"ஐய்யோ, என்னவோ ஆயிடுச்சு இன்னைக்கு உனக்கு வா வெளியே போய்ட்டு அப்படியே டின்னர் சாப்பிட்டு வந்துடலாம் கிளம்பு கிளம்பு".

அவள் அவனிடம் தன்னை பிரித்துக் கொண்டு எழுந்து போனான்.

சில நாட்களுக்குப் பிறகு....

வெள்ளிக்கிழமை மற்ற நாட்கள் விட சற்று விமரிசையாக பூஜை செய்தாள் மிருதுளா‌‌. காலையிலேயே லலிதா சஹஸ்ரநாமம் கனகதாரா ஸ்தோத்திரம், அஷ்டோத்திரம் என்று பூக்களை அர்ச்சித்து செய்வாள்.

மாலை அபிராமி அந்தாதி, பதிகம் என்று பாடி சவுந்தர்யலஹரி ஸ்லோகங்களையும் ராகமாய் இசைப்பாள்.

இன்றும் அப்படி அவர் விளக்கேற்றி பாட, பாகீரதியம்மாள் மனம் கசிந்தார்.

"அம்மா, ஜகன்மாதா. இந்தப் பொண்ணு இப்படி மனசு உருகி உன்னை துதிக்கிறாளே. மனசு இரங்க மாட்டியா? உன்னை வணங்கினா இதல்லாம் கிடைக்கும்னு அபிராமி பட்டர் சொல்லி இருக்கார்.
 
Latest Episodes

Advt

Advertisements

Top