பஞ்சு போல மிருதுவான இட்லி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,570
Reaction score
28,679
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி - 4 கிளாஸ்
முழு உளுந்து - 1 கிளாஸ்
லேசான அவல் / கெட்டி அவல் - 1 கிளாஸ்
உப்பு - தேவையான அளவு


செய்முறை :

அரிசியை நன்றாக கழுவி நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். (ஒரு சிலர் ஓவர் நைட் ஊற வைப்பாங்க, அப்படியும் வைக்கலாம் தப்பில்லை..)

உளுந்தையும் நன்றாக கழுவி அரிசி அரைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஊற வைத்தால் போதுமானது..


ஒரு மணி நேரம் உளுந்து ஊறிய பிறகு மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து நன்கு நைசாக, கெட்டியாக (தண்ணியாக இல்லாமல்) அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்,

அடுத்து அதில் அரிசியை சேர்த்து அரைக்க விடவும்.....

அரிசியை கிரைண்டரில் போட்டுவிட்டு, அவலை நன்கு கழுவி ஒரு பத்து நிமிடம் மட்டும் ஊற விடவும்....

பத்து நிமிடம் ஊறியதும், மிக்ஸியில் அவலை சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுத்து அரைத்து வைத்த உளுந்துடன் சேர்த்து (Hand Blender, Electric Beater) இருந்தால் அதில் கலக்கவும், இல்லையென்றால் கையிலேயே நன்றாக ஒரு பத்து நிமிடத்திற்கு விடாமல் கலந்து விடவும்...

அரிசியும் அரைத்து முடித்த பிறகு உளுந்து மாவு வைத்துள்ள பாத்திரத்தில் சேர்த்து இதனுடன் உப்பு சேர்த்து கலக்கவும்.. (ஒரு சிலர் அரிசி அரைச்சு முடிக்கும் போது அதுலயே உப்பு சேர்த்துடுவாங்க, அப்படி பண்ணாதீங்க ..... உப்பு சேர்த்து கையாலேயே கலந்து விடுங்க, அப்போதான் மாவு நல்லா பொங்கி வரும்.

அடுத்து முக்கியமான விஷயம் மாவு அரைச்சு முடிச்சதும் மிக்ஸி அல்லது கிரைண்டர் எதுவா இருந்தாலும் அதுல கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கழுவி அந்த தண்ணிய மாவுல கலந்து விடுங்க.

நல்லா எட்டு மணி நேரம் புளிக்க வச்சு இட்லி ஊத்தி பாருங்க இட்லி பஞ்சு போல வரும்.....


பி.கு. பஞ்சு போலனா எந்த பஞ்சு ? அது எதுக்கு? பஞ்சு எதுக்கு இட்லி மாவுல, இன்னும் பல புத்திசாலித்தனமான கேள்விகள் எதுவும் வந்துச்சு??? 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 adi veluthuruven da
Idly.jpg

Idly inga iruku panju yenganu kettenu vachukko da kadichuruven da
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,290
Reaction score
13,103
Points
113
Location
India
மிருது யாரு அவங்க இட்லிய நீங்க ஏன் எடுத்திட்டு வந்தீங்க அது தப்பில்ல🙄🙄🙄🙄🙄

வெறும் இட்லிய எப்படி சாப்பிட அட்லீஸ்ட் சர்க்கரை ஆச்சும் குடுங்க நான் தொட்டு சாப்ட்டுகிறேன்🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,570
Reaction score
28,679
Points
113
Location
India
மிருது யாரு அவங்க இட்லிய நீங்க ஏன் எடுத்திட்டு வந்தீங்க அது தப்பில்ல🙄🙄🙄🙄🙄

வெறும் இட்லிய எப்படி சாப்பிட அட்லீஸ்ட் சர்க்கரை ஆச்சும் குடுங்க நான் தொட்டு சாப்ட்டுகிறேன்🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
un oru kaiya udaichu unnoda innoru kailaye tharen athai thottu sapittukko
 
Last edited:

Advertisements

Latest Episodes

Advertisements