மனதின் சத்தம் - சிறகே பற!

Abhirami

Author
Author
தொட்டு விடும்
தூரத்தில் வெற்றி கனி
தான் இருக்க,
சிறகடித்து பறக்காமல்
பிறர் கூறிய பரிகாசங்களை
காதில் வாங்கிக் கொண்டு
கூண்டிற்குள் அடைந்து
கோழையாகி தான்
மாறுவேடம் பூண்டது ஏனோ?

போர் களத்தில்
வாள் வீசும்
அக்னி சிறகே,
உன் திறமைகளை
நான்கு சுவற்றிற்குள்
முடக்கி கொண்டு
இருப்பது நியாயமாகுமா?

தடைகளை கண்டு
துவளாதே சிறகே...
உன் அறிவு சாட்டையால்
சிறைகளை உடைத்து வா...
சிலையாக நீ மாற நினைக்க
உளியின் அடிக்கு
அச்சப் படுவது நியாயமா?

வியாபார உலகில்
மாட்டி கொள்ளாதே சிறகே!
பாதகம் செய்தவருக்கு
நெத்தி அடியாக
உன் வெற்றியை
பகிர்ந்திடு சிறகே!
பயத்தில் உன்
சிறகை மறக்காதே...
அச்சம் தாண்டி
சிறகை விரித்து
பற சிறகே!

எல்லை இல்லாத
பரந்து விரிந்த
வானில் பறக்க
வேண்டிய சிறகு நீ!
மண்ணில் வாழும்
கழுகு கூட்டத்திற்கு
மகிழ்ச்சி ஊட்டும்
காட்சி பொருளல்ல நீ!
வரும் துன்பத்தை
எண்ணி கவலையில்
துவண்டு போகாதே!

பாதைகள் அடைக்க பட்டால்
புது பாதையை
உருவாக்கி கொண்டு
செல் சிறகே!
சிறகை விரி பற...
சிகரம் உன்
காலடியில் வரும்
நாள் வெகுதூரம் இல்லை!

 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
???????????????அருமை அருமை அபி.... தடைகளை தகர்த்து தெறிக்க விடும் வரிகள்.... வார்த்தைகளின் அழுத்தமான தாக்கம் சிறப்பு??????????????????
 

Abhirami

Author
Author
?அழகு அபிக்குட்டி. ..
?துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு உற்சாகம் தருவதாய் உங்கள் கவி. ..
????????
??????????????

En kavithai ungaluku urchaagam oottinaaa unga padangal enaku orchaagam oottum... Enga padangalaaam ????
 

Advertisements

Advertisements

Top