மின்மினியின் ஆசைகள் - ஜான்சி மிக்கேல் ரிவ்யூ

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
மின்மினியின் ஆசைகள்! (Tamil Edition)" by Sandhiya Sri. Sandhiya Sri
Start reading it for free: http://amzn.in/4IF210x
எழுத்து நடை, கதாபாத்திரங்கள், காட்சிகள் உணர்வுகள் வெளிப்படுத்துதல் எல்லாம் சிறப்பு.
கதை மிகுந்த நாடகத்தன்மையோடு நகர்கின்றது.
இப்படிப்பட்ட ஒரு வகை வடிவம் கொண்ட கதைகளை முன்பு வாசித்திருக்கிறேன்...அவை நிஜ வாழ்க்கைக்கு சற்றும் நெருக்கமானவை அல்ல.
வழக்கமான குடும்ப கதை வகையறாவில் சேர்க்கவியலாது. சரி தவறு என பகுக்க இயலாத கதை.எந்த விதத்திலும் நாயகியான மேகாவின் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எனக்கு சிந்தையில் அகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள்...
நிமிர்வான சுய சிந்தனை கொண்டவள்,தனியாக வாழும் திடம் பெற்றவள், திருமணம் செய்தே ஆக வேண்டும் எனும் எந்த வற்புறுத்தலும் அவளை பணிய வைக்க இயலாததாக கதையின் ஆரம்பமும் இறுதியும் காண்பிக்க அந்த திருமணத்தை ஏன் செய்து கொள்ள வேண்டும்?
கணவன் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டாம் ஆனால் அதற்காக குழந்தையை பெற்று கொடுத்து விட்டு பிரிவது, தன் சொந்த குழந்தைக்கு கொடுக்காத பாசத்தை யாரோ ஒரு சிறுவனுக்கு கொடுப்பது.(?)
பிரிவில் நேசத்தோடு வாழ்வது...அவள் ஒரு குழப்பவாதி என்று காண்பிக்கின்றதே தவிர அவள் வாழ்வினின்று கற்றுக் கொள்ள எதுவுமில்லை.
அவள் தெளிவான பெண்ணா? குழப்பவாதியா? என நம்மை வெகு சாதுர்யமாக கதை முழுக்கவே குழப்பி விட்டு கதை நிறைவுறுகின்றது.
எழுத்து சிறப்பு....வாழ்த்துகள் 🎊
83883319_684512458976592_8956537057467957248_o.jpg 83802513_684512508976587_5874561825432928256_o.jpg
 
Advt

Advertisements

Top