ஷ் இது வேடந்தாங்கல் 15 (2) 15(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bala sundar

Author
Author
Joined
Feb 12, 2019
Messages
26
Reaction score
74
Points
13
Location
Sivakasi
வீட்டின் மொட்டை மாடியில் ஏட்டையா மனைவி சொல்லச் சொல்ல கேட்காமல் துவைத்த துணிகளை உலர்த்தப்போனாள் ஸ்ரீ.

கொடிகளில் துணிகளை உலர்த்தப் போட்டுவிட்டு அங்கிருந்த துணி துவைக்கும் கல்லில் அமர்ந்தாள். மொட்டை மாடியில் அணில் ஒன்று வேகமாக அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தது.

பக்கத்து வீட்டு கொய்யா மரத்தின் கிளைகள் இவர்கள் வீட்டு மொட்டைமாடி வரையிலும் பரவி இருப்பதால் காய்களைத் திண்பதற்கு அணிலுக்கு நிழல் சூழ்ந்த இந்த மொட்டை மாடி வசதியாகப் போனது. எட்டாத ஒரு கொய்யாவை பறிக்க அணில் ஒன்று குதித்து குதித்துப் பார்த்தது. ஆனால் அதனால் அதைப் பறிக்க முடியாது. அதற்கு உயரம் போதாது. அது குதிப்பதே வேடிக்கையாக இருக்கும்.
அந்த அணிலைப் பார்ப்பது ஸ்ரீக்கு நிரம்பப் பிடிக்கும். எப்போதுதான் அந்தப் பழம் அதுக்கு எட்டப்போகுதோ? என்று அவளே ஏங்கிடுவாள்.

அணிலைப் பார்த்துக்கொண்டே காய்ந்த துணிமணிகளை எடுத்தவள் தவறுதலாக ராஜனின் யுனிபார்ம் சட்டையையும் எடுத்து வந்துவிட்டாள். ஏட்டையா மனைவியிடம் தந்தபோது அவரது மனைவி "இது ராஜன் சார் யுனிபார்ம். அவர்கிட்டயே கொடுத்திடுறியா? நான் இனிதான் குளிக்கவே போகணும். "என்றார்.
ஸ்ரீ உடனே சரி என்று கூறாமல் நிற்கவும் "ராஜன் தம்பி ரொம்ப நல்ல தம்பிமா.. நீ பயப்படாமல் போ.. " என்றார்.

ஸ்ரீ அப்போதும் அசையாது நின்றபோது ராஜன் அங்கு வந்துவிடவே புஷ்பம் ராஜனிடம் கேட்டார் "என்ன ராஜன் சார்? "

"சட்டை மாறிடுச்சுன்னு நினைக்கிறேன். "

"ஆமாம் சார். ஸ்ரீதான் மாத்தி எடுத்திடுச்சு. கொண்டுபோய் கொடுன்னு சொல்லிக்கிட்டிருந்தேன் அதுக்கு மாட்டேன்னு இங்கயே நிக்குது. நீங்க என்ன F.I.R ஆ போடப்போறீங்க?
உங்களப் பார்த்து பயப்படுது? "

'இப்போதா F.I.R பற்றி ஞாபகப்படுத்திருக்கணும்? இப்போதான் முகத்தைப் பார்த்து பேசுறா. குணச்சித்திர நடிகர் விவேக்கைவிட இவர் டைமிங் சென்ஸ் சூப்பராக இருக்கே!' என்று நினைத்தவன்
"ச்ச.. ச்ச.. சட்டையை மாத்தினதுக்கெல்லாம் F.I.R போட்டா டைப்பிஸ்ட் கைதான் வீங்கிடும்." என்று சொல்லி கேலியாகவே முடித்தான் ராஜன்.

இந்தக் கேலிக்கெல்லாம் ஸ்ரீயால் சிரிக்க முடியவில்லை. பவித்ராவின் ஞாபகங்களே எங்கும் எதிலும் முந்திக்கொண்டு வந்தது.

மறுநாளும் அணிலைப் பார்க்க ஸ்ரீ மொட்டை மாடிக்குப் போனாள். எட்டாத பழத்தை அணில் பறித்துவிட்டதா இல்லையா என்று தெரிந்துகொள்ள அவளுக்கும் ஆசையாக இருந்தது. அவளும் வாழ்க்கையில் எட்டாத நிம்மதிக்கு பெரு முயற்சி செய்கிறாள் அல்லவா? அதனால் வந்த எதிர்பார்ப்பும் ஆசையும். அவள் நுழையும் போது அங்கே பேச்சுக்குரல் பலமாகக் கேட்டது. ராஜனும் மற்றொருவரும் மாடியில் பேசிக் கொண்டிருந்தனர். அவளைப் பார்த்ததும் ராஜன் ஸ்ரீயை அழைத்தான்.

"ஸ்ரீ இங்க வாயேன். இது தான் சப் இன்ஸ்பக்டர் கோபிநாத். என் ஃப்ரண்ட். உன் கேஸை இவனும்தான் ஹேன்டில் பண்றான். ஹேம்நாத் பற்றி கொஞ்சம் தகவல் தந்தான். உன்னிடம் ஏதோ கேட்கணும் என்று சொன்னான். " என்றான்.

கோபிநாத் சரியான போதையில் இருந்தான்.

"ஆமாம். ராஜன் உன்னை ஹேன்டில் பண்றான். நான் கேஸை ஹேன்டில் பண்றேன். " என்று குளறினான்.
ராஜனுக்கு மிகுந்த சங்கடமாகிப் போனது. ஸ்ரீயின் முகமாறுதலைக் கண்டுகொண்டான்.

ஸ்ரீ அங்கே நிற்காமல் கீழே சென்றுவிட்டாள். ராஜன் அவள் பின்னே செல்லவில்லை. அவள் பின்னால் சென்று அவளை சமாதானம் செய்யும் பொறுமையும் அவனுக்கு இல்லவே இல்லை. கொஞ்சம் ஆற்பபோடுவோம் என்று விஷயத்தை ஆறப்போட்டான்.

ஆனால் மயில் இறகினால் சாமரம் வீசினாலும் ஆறமாட்டேன் என்றது ஸ்ரீ மனது. ஏட்டையாவின் வீட்டிற்குள் நுழைந்தவள் அமைதியாக ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் பார்வையைத் திருப்பினாள். ராஜன் ஒரு மணி நேரம் கழித்து ஏட்டையா வீட்டிற்குள் நுழைந்தான். யாரும் அருகில் இல்லாதபோது
"ஸ்ரீ அவன் போதையில் இருக்கான். அதை பெரிதாக நினைக்காத.. " என்றான்.

ஸ்ரீ ஒன்றும் பேசவில்லை.
"நிஜமாகத்தான் ஸ்ரீ. அவன் ரொம்ப நல்லவன். HE IS A NICE GUY. "

"ஆமாம் சார். நீங்க சொன்னால் சரிதான். இல்லைன்னு சொன்னா F.I.R போட்டிடுவீங்கல்ல? "

'எவன்டா இவளுக்கு இப்ப F.I.R ஞாபகப்படுத்தினது?' என்று நினைத்து கோபமாக நண்பனைத் திரும்பி பார்த்தபோது கோபிநாத் 'ஈ' என்று இளித்துக்கொண்டு போதையில் காற்றுடன் கை குலுக்கிக்கொண்டிருந்தான்.

அமைதியாக ஸ்ரீயிடம் திரும்பியவன் தன்னை அக்கூயூஸ்ட் ஆக்கிட்டானே பாதகன் என்று நண்பனை திட்டிவிட்டு ஸ்ரீயிடம் என்ன பேசுவது என்று தெரியாமல்
"ஸ்ரீ" என்று ஆரம்பித்தான்.

"போலிஸ்காரங்களை பகைச்சிக்க முடியுமா? நாங்கல்லாம் தர லோக்கல். உங்களை எதிர்த்து பேச முடியுமா?"

"ஸ்ரீ!"

"வேணும்ன்னா அவர்கிட்ட போய் நான் தப்பாவே எடுத்துக்கல்ல என்று சொல்லட்டுமா? இல்லை ரிட்டர்ன் ஸ்டேட்மன்டா எழுதித் தரணுமா? " "ஸ்ரீ!"

"ஓ! என்னை ஹேன்டில் பண்ணும் உங்களிடம் தான் நான் முதலில் உங்க ஃப்ரண்டை தப்பா நினைத்தற்கு மன்னிப்பு கேட்கணுமா? "

"ஸ்ரீ"

"ராஜன் சார். ரொம்ப சாரி. நீங்க போய் உங்க ஃப்ரண்டை ஹேன்டில் பண்ணுங்க. அவரை தனியாக விட்டுட்டு வந்திட்டிங்களா? மொட்டை மாடியில் இருந்து டைவ் பண்ணிடப் போறார்.. பார்த்துக்கோங்க. "

"ஸ்ரீ அந்த அணில் பழத்தை பறிச்சிடச்சு! "

"ஆ? "

"ஸ்ரீ அந்த அணில் பழத்தை ஒரே தாவுல தாவிப் பிடிச்சி பறிச்சிடுச்சு! "

"ஆ? "

"ஸ்ரீ அந்த அணில் பழத்தை ஒரு பிட் மிச்சம் வைக்காமல் கரும்பிடுச்சு! "

ஸ்ரீ விக்கவும் இல்லை விறைக்கவும் இல்லை. ஆனால் சிரித்தாள். இருபத்தியெட்டு நாட்களாக சிரிக்காதவள் அன்று சிரித்தாள். அணிலுக்கு கிட்டிய பழம் போல கிட்டாத நிம்மதி தனக்கும் கிட்டிடும் என்ற நம்பிக்கை அவளுக்கும் வந்தது.

ஸ்ரீயின் சிரிப்பில் தானும் கலந்தவன் அவளது சிரிப்பு அவன் இதயத்தை அவளை நோக்கி இன்ச் இன்சாக நகரச்செய்வதை நினைத்து அவளை அவன் அங்குலம் அங்குலமாக ரசிப்பதை நினைத்து நம்பமுடியாமல் திடுக்கிட்டான். ஆனால் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் போல மட்டும் இருந்தது. என்னவென்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபோதும் ஏதோ ஒன்று செய்யத் துடித்த மனதிடம் 'என்ன வேணும்?' என்று கேட்டுக்கொண்டிருந்தான்.


ஏட்டையா ராஜன் கிளம்பிக்கொண்டிருந்தபோது அவன் வீட்டிற்கு வந்தார். ராஜன் வீட்டிற்கு அவர் வருவதே இல்லை. அதனால் அவர் திடீரென்று வரவும் ராஜன் தனது ஃபைல்களை அதன் உறையில் போட்டுவிட்டு அவர் அருகில் சென்றான்.

"என்ன ஏட்டையா எதுவும் பேசணுமா? "

"ஆமாம் ராஜன் சார் புஷ்பாவின் அண்ணன் குடும்பம் நாளை வீட்டிற்கு வர்றாங்க. ஒரு கல்யாண வீடு. விஷேம் முடிய நாலு நாள் ஆகும். அதுவரை இங்கதான் தங்கப்போறாங்க. புஷ்பா அண்ணன் பையனுக்கு இங்கதான் வேலை கிடைச்சிருக்கு. அதனால் அவன் இன்னும் ஒரு பத்து நாள் இங்கதான் இருப்பானாம். ஸ்ரீ யை என்ன பண்ணலாம்? சென்னைக்கு அனுப்பிடலாமா? "

"அப்புறம் கௌன்சிலரிடம் என்ன சொல்வீங்க? ஃபைலை மூடும்போது யார்கிட்ட ஸ்டேட்மென்ட் வாங்குவீங்க? நீங்களும் நானும்தான் அப்ப டி.எஸ்.பியின் ஷ{வைப்பார்த்து நிற்கணும்." என்ற ராஜனிடம் மௌனம் காத்தார் ஏட்டையா.

வயதில் மூத்தவரிடம் கடுமை காட்டிவிட்டோம் என்ற நினைப்பில் "சரி சரி. அவளை இங்க என் வீட்டில் தங்க சொல்லுங்க. இரண்டு நாளில் நான் அவளை ஏதாவது ஹாஸ்டலில் சேர்த்து விடுறேன்." என்று சிக்கலுக்கு தீர்வு சொன்னவன் ஏதோ யோசித்துவிட்டு "நீங்க சொல்லவேண்டாம் நான் சொல்லிக்கிறேன். " என்று பேச்சை முடித்துவிட்டான்.

அவர் கிளம்பும் முன் 'நாளைதான் கல்யாண வீடு' என்று அவனுக்கு விபரம் சொன்னபோது 'இது நூடில்ஸ் சிக்கல் இல்லை இடியாப்ப சிக்கல் என்று சொல்லாமல் சொல்லிட்டீங்க' என்று அவனது மனதின் முணுமுணுப்பு கேட்டது.

ஏட்டைய்யா சென்றதும் அன்றைய பகலிலேயே ஸ்ரீயை அவன் வீட்டிற்கு பேச வேண்டும் என்று அழைத்தான். ஸ்ரீ உள்ளே நுழைந்ததும் அவளை சோபாவில் உட்காரச் சொன்னவன் பத்து நிமிடங்கள் கடந்த பிறகு அவளிடம் வந்து சேர்ந்தான். அமைதியாக சோபாவில் உட்கார்ந்தவன் அவளிடம் பேச்சை ஆரம்பித்தான்.

"ஸ்ரீ ஏட்டையா வீட்டிற்கு நாளை கெஸ்ட் வர்றாங்க. நீ இங்க என் வீட்டில் தங்கிக்கிறியா? பகலில் ஒரு அம்மா வந்து உனக்கு துணையிருப்பாங்க. பத்து நாள்தானே? அதுக்குள்ள நான் கேஸை கோபியை வைத்து முடிச்சிடுவேன். பத்து நாளில் உனக்கும் தலைவலி மிச்சம் எனக்கும் தலைவலி மிச்சம். "

"பத்து நாளில் ஒரு தெஃப்ட் கேஸ் முடிஞ்சிடுமா? என்ன ராஜன் சார். தமாஷா பண்றீங்க? அடப்பாவமே நம்ம தமிழ்நாடு கவர்மென்ட் இதைத்தெரியாமலா வருஷா வருஷம் முதல் நிலைக்காவலர் இரண்டாம்நிலைக் காவலர் என்று போலீஸ{க்கு ஆள் எடுக்கிறாங்க? நான் சென்னைக்கு போறேன் ராஜன் சார். நீங்க கூப்பிடும்போது மட்டும் மதுரை வர்றேன்." என்றாள் ஸ்ரீ.

"அட அறிவாளியே! எப்படி மடக்குறா பாரு." என்று நினைத்தவன் மனதில் கூட்டல் கழித்தல் கணக்கு போட ஆரம்பித்தான்.

ஒருவன் தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொண்டால் தானும் அவனுக்கு சளைத்தவன் அல்ல என்று முந்திக்கொண்டு காட்டிக்கொள்வான் அறிவாளியின் தோழன். ஆனால் எதிரி என்ன செய்வான்? அறிவாளியாக காட்டியவனை முட்டாளாக்க முயற்சிப்பான். எதிரி வலு இல்லாதவனாக இருந்தால்? அடி முட்டாளாக்க முயற்சிப்பான். போலீசும் திருடனும் (திருடன் என்று கருதப்பட்டால்கூட) எதிரிதானே?

அதேபோல் பணிவும் அன்பும் செல்லுபடியாகாத போது அராஜகமும் முரட்டுத்தனமும் தானாகப் பிறந்துவிடும். விதை விதைத்து முளைக்காத தானாகவே முளைத்திடும் வேம்பைப் போல.

ஸ்ரீ தன்னை அவனிடம் அறிவாளியாகக் காட்டிக் கொண்டதால் ராஜன் அவளை முட்டாளாக்க நினைத்தான். அவள் வலு இல்லாத எதிரி என்பதால் அவளை அடி முட்டாளாக்க நினைத்தான்.

"ஸ்ரீ உனக்கு படிப்பறிவும் கிடையாது சொல்புத்தியும் கிடையாது! டி.எஸ்.பி உன்னை தினம் வந்து ஸ்டேஷனில் கையெழுத்து போடச்சொன்னால்? அவர் உன்னை பார்க்கணும் என்று சொன்னால்? (இது பொய்.) இதுவரை உன்னை பார்க்காத கௌன்சிலரும் டி.எஸ்.பியும் சேர்ந்து உன்னை விசாரிக்கணும் என்று சொன்னால்? (இது முழுப்பொய். ராஜன் பவித்ராவுக்கு கொடுத்த சத்தியத்தை நிச்சயம் மீறப்போவதில்லை.) தினம் ஃப்ளைட் பிடித்து வருவியா? (இது முட்டாள் என்று சொல்லும் ஒரு விதம்.)"

ஸ்ரீ திரு திருவென்று முழிக்கவும் தனது வேலை முடிந்தது என்பதை உணர்ந்தான் ராஜன்.

"போ உன் டிரஸ்சையெல்லாம் எடுத்திட்டு வா. காலையில் வேலைக்கார அம்மா வருவாங்க. அவுங்களிடம் எதுவும் உளறாதே. நான் சொல்லி வச்சது போதும். பத்து நாளோ இருபது நாளோ ஒரு மாதமோ உன் கேஸ் முடியும் வரை இங்கதான். ஏதாவது ஹாஸ்டல் கிடைக்குதா என்று பார்க்கிறேன். "

'பத்து நாளா? இருபது நாளா? போய்யா போ ஒரு வாரம் தான்.
அப்புறம் நான் ஜுட் ' என்று ராஜன் அறையில் இருந்த ஸ்ரீ (ராஜனால் பெயர்சூட்டப்பட்ட அறிவாளி என்ற முட்டாள் இல்லை இல்லை முட்டாள் என்ற அறிவாளி) மனதில் சொல்லிக்கொண்டாள்.

காலை எழு மணி : பள்ளி எழுதல். குளித்தல்.

காலை எட்டு மணி : தனக்கு ராஜன் வாங்கிவந்த ரவா இட்லியைச் சாப்பிடுதல். இட்லிதான் வாங்கி வந்தான் ஆறு மணிக்கே ரோட்டோரமாய் இருந்த இட்லி கடையில் அது வாங்கப்பட்டதால் எட்டு மணிக்கு அது ரவா இட்லி போல சொர சொரப்பானது.

காலை பத்து மணி முதல் பன்னிரண்டு மணி வரை சோபாவில் உட்கார்ந்து எதிரே இருக்கும் சுவரைப் பார்த்தல். பிறகு அந்த கூண்டுப் பறவைகளைப் பார்த்தல். அந்த பறவைகள் கinஉhநள இனத்தைச் சேர்ந்தவை. பால் வெள்ளை நிறத்தில் ஆரஞ்சு அலகுடன் இருக்கும் பறவைகளை ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் வேடிக்கை பார்க்க முடியவில்லை. பொறுமை இழந்தாள். பறவைகள் மீது பொறாமை கொண்டாள்.

காலை பன்னிரண்டு மணி முதல் இரண்டு மணி வரை அழுக்கே இல்லாத அவளது துணியை ஒரு மணிநேரம் துவைத்து உலர வைத்தல்.

அதன்பிறகு வந்த அனைத்து மணித்துளிகளும் எப்படிப் பறந்தது என்று ஸ்ரீயிடம் கேட்டால் 'விட்டத்தைப் பார்த்தல் ' தான் அதற்கு பதிலாக இருந்திருக்கும்.

மாலை ராஜன் வரும்போது எதுவும் பேசாமல் அவன் வாங்கி வந்த சாப்பாட்டிற்கு காசை அவன் சட்டைப் பையில் வைத்துவிட்டு ஒரு தாங்க்ஸ் சொல்லிவிட்டு உள்அறையில் படுக்கச் சென்றிடுவாள். இதுவே தினசரி வழக்கமானது.

இரண்டு நாள்கூட அவளால் இப்படி கடிகாரம் சுழலுவதை பொறுக்க முடியவில்லை. அவள் பொறுமை காற்றில் நீர்ஆவிபோல் பறந்தேவிட்டது.

மூன்றாவது நாள் ராஜன் வரும்போது தனது மூட்டை முடிச்சிகளுடன் சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

ராஜன் வீட்டிற்குள் வந்ததும் தான் பார்த்த மூட்டை முடிச்சிகளைப் பற்றி ஏதும் கேட்காமல் முகம் கை கால் கழுவிவிட்டு ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான். ஸ்ரீக்கு அவனின் முகஇறுக்கம் மிகுந்த அச்சத்தைக் கொடுத்தாலும் அவள் அதைப்பற்றி அதிகம் யோசிக்காமல் துணிவை வரவழைத்துக்கொண்டு அவன் அருகே சென்று "ராஜன் சார்.. " என்றாள்.

"ம்? "

"ராஜன் சார். என்னால இங்க இருக்க முடியல. நாளுக்கு நாள் வெறுப்பா இருக்கு. நான் சென்னைக்கு போறேன்."

"அப்புறம்? "

"ரொம்ப கஷ்டமாக இருக்கு சார். "

அமைதியாக செய்தித்தாளை லேசாக விலக்கியவன் அவன் முகம் மட்டுமே அவளுக்கு தெரியும்படி வைத்துக்கொண்டு கேட்டான் அவனவன்கிட்ட காசுக்காக நின்னபோது கஷ்டமாக இல்லையா? "

ஸ்ரீ அவன் கேள்வியால் அதிர்ந்தாள். அவன் கூசாமல் பேசிய பேச்சால் இனி பேசிப் பயன் இல்லை என்று தெரிந்து அமைதியாக உள்ளே சென்றாள். கழுத்தைப் பிடித்து தள்ளியது போல் உணர்ந்தாள். வலித்தது. ஆனால் எங்கு? என்றுதான் சொல்லத் தெரியவில்லை அவளுக்கு.

வாக்குவாதத்தையோ வாயிதாவையோ விரும்பாதவன் போலிஸ்காரன். அவளுடன் இவ்விரண்டையும் விரும்பாதவன் பொறுமையிழந்ததால் போலீஸ்காரன் கையாளும் முறையைக் கையாண்டுவிட்டான்.

லத்தி சார்ஜ்!

பேச்சுக்கே இடம் இல்லாத வழிமுறை. கைகளில் லத்தி இல்லை அதனால் வார்த்தைகளால் ஒரு போடு போட்டு விட்டான். சும்மாவா சொன்னார்கள்? நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்று. இப்படித்தான் வார்த்தைகளால் சூடு போடுவார்களோ? அவர்களிடம் சொல்ல வேண்டும் இதயம் சதையால்தான் ஆனது என்று!
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top