• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

❤️MPK 17❤️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
958
Reaction score
1,298
Location
Banglore
eiJGM8914752.jpg
வணக்கம் தோழமைகளே,


இதோ 'மனம் பறித்த காரிகையே - 17'


படிச்சிட்டு கண்டிப்பா மறக்காம உங்களோட கருத்துகளை பகிர்ந்துக்கோங்க...


போன எபிக்கு 'லைட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்' மூலம் நீங்க கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏.


Happy reading😀📖
 




Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
958
Reaction score
1,298
Location
Banglore
மனம்❤️17

எப்படியோ துணிமணிகள் எல்லாம் அடுக்கி முடித்துவிட்டு நேரம் பார்க்க, அது மாலை ஐந்து என காட்டியது.

“துணியை பேக் பண்ணதலையும் அடுக்குனதுலயும் டைம் போனதே தெரியல.” என்ற சாத்வி, “இங்க எல்லாருக்கும் டீயா இல்ல காபியா?” என விசாரித்தாள்.

அனைவருக்கும் தேவையானதை அவன் கூற, சட்டென்று கீழே இறங்கி போனாள். அவள் போன பின் தான் எடுத்து வச்ச மூச்சை விட்டான் அவன்.

‘ஒரு பொண்ணு கூட இருக்கணும்னா எவ்வளவு விஷயத்தை பார்க்க வேண்டியது இருக்குயா.’

பல வருடங்கலாய் அவன் தனியாகத்தான் இருக்கிறான் அவனுக்கு விவரம் தெரிந்ததிலிருந்து அவனுக்கு தனி அறை தான். எப்போதாவது அர்ஜுனும் இவனும் ஒன்றாக தூங்கியிருக்கிறார்கள் ஆனால் அது கூட மினி தியேட்டர் இருக்கும் அந்த ரூமில் படம் பார்த்துக் கொண்டே, இந்த ரூமில் பல காலமாக அவன் மட்டும்தான் தங்கிக் கொண்டிருக்கிறான் இப்பொழுது தன்னுடன் ஒரு பெண் தங்க போகிறாள் என்ற நினைவை அந்த கல்யாண பட்டுப்புடவை எடுக்க சென்றதிலிருந்து மனதில் ஏற்றி கொண்டிருந்தான். அதன் பின் சாத்வியுடன் பழகுவது அவனுக்கு சுலபமாக இருந்ததனால் இதை இவ்வளவு கடினமாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

சாத்வினுடைய வீட்டில் தனியாக தங்கும் பொழுது கூட, இரவில் தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டான். இதோ இனி இந்த அறையில் அவளுடன் தான் அவன் தங்க வேண்டும். ஒரு பெண்ணின் அருகாமை நிச்சயம் தன்னை தன் வசம் இழக்க வைக்காது என்றுதான் அவன் நம்பி இருந்தான்.

ஆனால் எப்பொழுது முதல் முதலில் அவளை முத்தமிட தோன்றியதோ அப்பொழுதே இவள் தன்னை வசம் இழக்க வைக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான். ஆனால் அது ஏன் என்பது தான் இவனுக்கு புரியவில்லை இத்தனை நாள் எந்த பெண்ணிடமும் ஏற்படாத உணர்வுகள் இவளிடம் மட்டும் ஏன் ஏற்படுகிறது? இந்த கேள்வி அவனை பூதாகரமாக தாக்கியது.

சிறிது நேரத்தில் சாத்வியிடம் இருந்து அழைப்பு வர, எப்பொழுதும் போல் தோட்டத்திற்கு சென்றான்.

இவர்கள் குடும்பத்தின் டீ டைம் எப்பொழுதும் தோட்டத்தில் தான்.

வீட்டு தோட்டம்!

அங்கே அனைவருக்குமான சூடான பானம் தயாராக இருந்தது. சாத்வி கீழே இறங்கி வந்த சிறிது நேரத்தில் சந்தியாவும் வந்து விட, இருவரும் சேர்ந்து அனைத்தையும் செய்தார்கள்.

“இந்தாக அத்தை உங்களுக்கு சக்கரை இல்லாத பால். அப்பா உங்களுக்கு சர்க்கரை இல்லாத டீ.” என வரலட்சுமிக்கும் ரத்தினசாமிக்கும் சாத்வி தர,

“உங்களுக்கு சக்கரையோட டீ. உங்களுக்கு காபி.” என குணவதிக்கும் அர்ஜுனுக்கும் சந்தியா கொடுத்தாள்.

“உங்களுக்கு.” என சாத்வி நீட்டிய காபியை வாங்கிக் கொண்டான் ராம்.

சாத்வியும் சந்தியாவும் அவரவருக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு அவர்களும் அந்த கூட்டத்துடன் ஐக்கியமானார்கள்.

சூடான பானம் மட்டுமில்லாமல் அனைவருக்கும் சூடான முந்திரி பக்கோடாவும் தயாராக இருந்தது.

“என்னப்பா பாலி போறதுக்கு ரெடியாயிடுச்சா?” என குணவதி கேட்க,

“துணி எல்லாம் பேக் பண்ணியாச்சு ம்மா.” என வேகமாக சொன்ன சாத்வியை அனைவருமே ஆச்சரியமாக பார்த்தார்கள்.

அவன் நினைத்தார் போல் அர்ஜுன் அவனை கிண்டலாக பார்க்க,

‘இவ ஒருத்தி கூட்டத்துல நம்ம மானத்தை நல்லா வாங்குறா. நாம ஏதோ அலைஞ்சுகிட்டு ரெடியான மாதிரி தெரியாது கடவுளே.’ என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் ராம்.

அனைவரும் சிரிக்கவும் தான் தான் ஏதோ தவறாக கூறிவிட்டோமோ என விழித்தாள் சாத்வி. அவள் அப்படி திருத்துருவென விழிப்பதில் ராமுக்குமே சிரிப்பு தான் வந்தது.

‘இம்ச மத்ததெல்லாம் நல்லா வாயாடி இதை மட்டும் புரிஞ்சுக்காத.’ என மனசுக்குள் அவளோடு பேச வேறு செய்தான்.

அர்ஜுன் சந்தியாவின் அறை!

“உனக்கு என்ன தோணுது சந்தி அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்களா? இல்லையா? எனக்கு ஒன்னும் புரியல.” என நண்பனை பற்றி கவலை கொண்டான் அர்ஜுன்.

“கவலைப்படாதீங்க அஜ்ஜு எல்லாமே டக்கு டக்கு நடந்துராது. ஆனா ரெண்டு பேருக்கும் ஒருத்தரும் ஒருத்தர் புடிச்சிருக்கு அது மட்டும் தெளிவா தெரியுது. அது அவங்களுக்கு தெரியணும் அதுதான் விஷயம். சாத்விய பாக்கும் போதெல்லாம் அண்ணா கண்ணு மின்னுது. சாத்வி மட்டும் என்ன நான் அவகிட்ட அண்ணா பத்தி பேசும் போதெல்லாம் அவ மூஞ்சி அவ்ளோ பிரகாசமா ஆகுது. ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் அது புரியலனு நினைக்கிறேன்.” என நீண்ட விளக்கம் கொடுத்தாள் சந்தியா.

“எப்படி அத புரிய வைக்கிறது?” என கேட்டான் அர்ஜுன்.

அவனுக்கும் நண்பனுக்கு சாத்வியை பிடித்திருக்கிறது என்பது புரிந்தே இருந்தது. இல்லையென்றால் இந்த திருமணம் நிச்சயம் நடந்திருக்காது. எதையாவது செய்து திருமணத்தை என்னிடத்துவது தானா அவனுக்கு பெரிய விஷயம். அப்படி நிறுத்துவதற்கு அவன் பெரிதாக முயலாத போதே அவனுக்கு அவளை பிடித்திருக்கிறது என்பது தானே நிதர்சனம்.

“நம்மளால மட்டும் இல்ல யாராலயும் எதுவும் செய்ய முடியாது அது அவங்களாக புரிஞ்சுகிட்டா தான் உண்டு.” என்றாள் நிதர்சனத்தை.

“மேபி இந்த ட்ரிப் அங்களுக்கு ஒரு மாற்றமா இருக்கலாம்.” என்றாள் சந்தியா தொடர்ந்து,

“நீ சொன்ன மாதிரி இந்த ட்ரிப் அவங்களுக்கு ஒரு மாற்றமா இருந்து அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தாங்கனா எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என்றான் அர்ஜுன் அவன் மனதிற்குள் ஒரு சிறிய குற்ற உணர்வு எட்டிப் பார்த்தது என்னவோ உண்மை. ஏனென்றால் இருவருக்கும் ஒன்றாக திருமணம் நடந்து இவன் மட்டும் அவன் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க, தன் நண்பன் இன்னும் குடும்ப வாழ்க்கையை தொடங்காமல் இருப்பது இவனுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

அருகே வந்த அமர்ந்தவள் அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “கவலைப்படாதீங்க அஜ்ஜு அவங்க ரெண்டு பேரும் மேட் போர் ஈச் அதர்(made for each other). அத சீக்கிரமே அவங்க புரிஞ்சுபாங்க. நாமளாச்சு இத்தனை வருஷம் லவ் பண்ணி இருக்கோம். பட் அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்து பார்த்து பண்றது பார்த்தாலே தெரியுது அவங்களுக்குள்ள எவ்ளோ லவ் இருக்குனு. என்ன அத அவங்களுக்கு புரிஞ்சுக்க கொஞ்சம் டைம் வேணும். லேட் தெம் டேக் தேர் ஓன் டைம்(அவங்களுக்கு நிறைய தேவையான நேரத்துல அவங்க எடுத்துக்கட்டும்).” என்றவளை தலையசைத்து ஆமோதித்தான்.

அன்று இரவு குணவதி மருமகள்கள் இருவரையும் சமைக்க விடவில்லை.

“நாளை காலைல கிளம்பி போகணும் நல்லா ரெஸ்ட் எடுக்கணும் இப்ப வேலைய பாத்தா உங்களுக்கு கஷ்டமா இருக்கும் நானும் லட்சுமி வேலைய பார்த்துக்கிறோம்.” என்று இரண்டு பெண்களிடமும் சொல்லிவிட்டார்.

சாப்பிட்டு முடித்த பின் ராம் அறைக்கு சென்று விட்டான் வெகு நேரமாகியும் சாத்வியை காணவில்லை.

‘என்னடா இது? ஆளையே காணோம்’ என இவன் யோசித்துக் கொண்டிருந்த நேரம் அறையில் நுழைந்தாள் அவள்.

“என்னச்சி இவ்வளவு நேரம்?” என ராம் கேட்க,

“அத்தைகிட்ட பேசிட்டு இருந்தேன்.”

“அம்மாகிட்டயா!” என ஆச்சரியமாக கேட்டான் இவன்.

“குணா அம்மா அத்தை இன்னும் மாமாவுடைய இறப்புல இருந்து வெளியே வரவில்லைன்ற மாதிரி பேசிட்டு இருந்தாங்க. அதான் கொஞ்ச நேரம் போய் அவங்க கிட்ட பேசிட்டு வந்தேன். பேசுவாங்களான்னு ஃபர்ஸ்ட் தெரியல சும்மாதான் போய் உக்காந்தேன் ஆனா நான் நினைச்ச மாதிரி அவங்களுக்கு பேச்சு துணைக்கு ஆள் தேவைப்பட்டு இருக்கு நல்லா பேசினாங்க. இனி தினமும் நைட் அவங்க கிட்ட பேசிட்டு தான் வரணும்.” என்றவளை கண்ணெடுக்காமல் பார்த்தான் ராம்.

தந்தையின் துயரிலிருந்து அவனே இன்னும் வெளி வராத நிலையில் தாய் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது அவனுக்கு தெரியாதா?

“நான் அவங்க கிட்ட பேச நினைக்கும் போது மட்டும் என்கிட்ட சரியா பேசல உன்கிட்ட மட்டும் நல்லா பேசுறாங்களா?” என அவன் உரிமைப் போராட்டம் செய்ய,

“குழந்தை மாதிரி நடந்துக்காதீங்க. நீங்களும் அப்பாவோட நினைப்புல இருந்து இன்னும் வெளியே வரல இல்லையா அதனால உங்க கிட்ட அவங்க அந்த மாதிரி பேச முடியாதே ஏன்னா அவங்க அதிகமா என்கிட்ட சொன்ன விஷயமே மாமாவை பத்தி தான்.” என அவள் கூறியதும் தான் இவனுக்கும் விஷயம் விளங்கியது.

“புரியுது.” என்றவன் அமைதியாகினான்.

தேவையில்லாமல் தான் அவன் காயங்களை கீறிவிட்டோமோ என எண்ணியவள். அவனை திசை திரும்ப முயன்றாள்.

“வீட்டு பக்கத்துல இருக்க பீச்க்கு ஒரு சின்ன வாக் போகலாமா?”

“ம்…போகலாம்.” என எழுந்துக் கொண்டான்.

காரின் டிரைவர் சீட்டில் இவள் ஏறவும் சிரித்துக் கொண்டான். இவள் திரும்பி இவனை பார்க்க, இவனும் அவளையே பார்த்தான்.

“வழி?”

“வண்டிய எடு அப்படியே சொல்றேன்.”

சரி எனக்கு தலையை உருட்டியவள். வண்டியை கிளப்பினாள் நைட் காவலுக்கு இருக்கும் செக்யூரிட்டி இவர்களின் கார் வருவதை பார்த்து கதவை திறந்து விட்டார்.

அவன் வழி சொல்லச் சொல்ல அருகிலேயே இருந்த கடற்கரைக்கு சீக்கிரமாகவே சென்று சேர்ந்தனர்.

இரவின் நிசப்தத்தில் யாரும் இல்லாமல் இவர்கள் மட்டுமே இருந்தார்கள் அந்த கடற்கரையில். மெதுவாக காரிலிருந்து இறங்கி கடற்கரை மணலில் கால் புதைய புதைய நடக்க துவங்கினார்கள்.

சிறிது நேரத்தில்!

“சது உன் கைய புடிச்சிட்டு நடக்கட்டா?” என இறைஞ்சுதலாக கேட்டான் ராம்.

ஆச்சரியமாக அவனை திரும்பி பார்க்க, அவனும் எங்கோ வெறித்தபடி அப்படியே நடந்து வந்தான். அதைப் பார்த்தவுடன் இவளுக்கு என்னவோ போலிருக்க அவளே அவன் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள். அந்த அழுத்தம் உணர்ந்து அவளை திரும்பி பார்த்தான் ராம்.

“என்னாச்சி?” என அவனை விசாரித்தாள் சாத்வி.

“ஒன்னும் இல்ல இந்த மாதிரி நடந்து ரொம்ப நாளாச்சு. நாள் கணக்கு கூட சொல்ல முடியாது வருஷமே ஆயிடுச்சு. ஃபர்ஸ்ட்லாம் நானு, அப்பா, மாமா, அஜ்ஜு எல்லாருமே வருவோம். அஜ்ஜுவும் பிசி ஆயிட்டான் அப்பாவும் இல்ல மாமாவும் உடம்பு முடியாம போயிட்டாரு தனியாக வர ஒரு மாதிரி இருந்துச்சு.” என ராம் கூறவும் அவனின் வருத்தம் புரிந்தது இவளுக்கு.

“லைஃப்ல எல்லாரும் எப்பவும் கூட வர மாட்டாங்க. ஒரு ஒரு ஸ்டேஜ்ல ஒவ்வொருத்தர் அங்கங்க நின்னுடுவாங்க. ஆனா லைப் யாருக்காகவும் எதுக்காகவும் நிக்காது அது பாட்டு மூவாயிட்டே தான் இருக்கும். லைஃப் போற போக்குல நாமளும் போய் தான் பாக்கணும். நமக்காக ஏதோ ஒரு விஷயத்தை அது வெச்சிருக்கும். அந்த விஷயம் இத்தனை நாள் நம்ம இழந்ததை விட பெருசா இருக்கும். கிட்டத்தட்ட ஒரு ட்ரஷர் ஆன்ட்டிங் மாதிரினு வச்சுக்கோங்க. புதையல் எடுக்கிறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லை அதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு கடினப்பட்டு தான் அத கண்டுபிடிக்கணும் ஆனா கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் அந்த கஷ்டங்கள் எல்லாம் எங்க போச்சுன்னு நமக்கு தெரியாது ஏன்னா அவ்வளோ பெரிய பொக்கிஷமே நமக்கு கிடைச்சிருக்கும் போது அதுக்காக கொஞ்சம் கஷ்டப்படுறது தப்பில்லன்னு தான் தோணும்.” என அவள் பேசப் பேச கண்கள் விரிய அவளை பார்த்தான்.

“எப்படி சது உன்னால மட்டும் லைஃபை எவ்வளவு ஈஸியா எடுத்துக்க முடியுது.”

“சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். எனக்கு பாட்டி தாத்தானா ரொம்ப பிடிக்கும். இப்ப நான் உங்களுக்கு சொன்ன விஷயங்கள் கூட பாட்டி எனக்கு சொன்னது தான். அந்த பாட்டி தாத்தா இறந்தது மனசுக்கு அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு என்னால அதை ஏத்துக்கவே முடியல. அதுல இருந்து வெளியே வர ரொம்ப கஷ்டப்பட்டேன். அதுக்கப்புறம் பாட்டி சொன்னதுக்கு ஏத்த மாதிரி நாம இனிமே இருக்கணும்னு தோணுச்சு அப்படித்தான் பாட்டி சொன்ன மாதிரி வாழ்க்கையை அது போக்குல வாழ்ந்து பார்த்தேன் எனக்கு வாழ்க்கையும் நிறைய கொடுத்துச்சு அன்பான அப்பா, அம்மா, நல்ல ஃப்ரெண்ட்ஸ். இதோ இந்த ரெண்டு மூணு நாளா நான் உங்களை பார்க்கிறேன் என்னோட அனுமதி இல்லாம என் சுண்டு விரலை கூட புடிச்சது இல்ல நீங்க. சின்னதா நான் முகம் சுளித்தாலும் எனக்கு ஏதோ ஒரு கஷ்டம்னாலும் கரெக்டா அத புரிஞ்சு நடந்துக்கிட்டீங்க. எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லை.”

“அது எப்படி எனக்கு கெட்ட பழக்கம் இல்லைன்னு சொல்ற?” என கேட்க,

“நல்லா ரெட்டா இருக்க லிப்ஸ்ச பார்த்தாலே தெரியுது புகை விடுற பழக்கம் இல்லைன்னு.”

“அப்போ தண்ணி?” என அவன் கேட்க,

“அடிப்பீங்களா என்ன?” என அவள் கூற,

“மாட்டேன்.”

“நான் கரெக்டா சொன்னனா?” என அவள் கூறவும்.

“இதுதான் போட்டு வாங்குறதா?” என சிரித்துக் கொண்டே கேட்டாள் அவன்.

“ஆமா ஆமா நான் எதுவும் கேட்கலப்பா நீங்களா தான் சொன்னீங்க.” என அவனுடன் வம்பு இழுத்தாள்.

அதன் பின் அந்த ஏகாந்தத்தை இருவருமே அனுபவித்தார்கள். சிறிது நேரம் கடற்கரையில் அமரலாம் என்று அவள் கூற, அவனும் அமர்ந்தான்.

“இந்த மாதிரி கரையில் உட்கார்ந்து கடலை பாக்குறது ரொம்ப புடிக்கும் போல.” எனக் கேட்டான் ராம் ஏனென்றால் அன்றும் அவள் இப்படித்தானே கரையில் அமர்ந்துக் கடலை வெறித்துக் கொண்டிருந்தாள்.

“ஆமா எங்கோ படிச்ச ஒரு வரி ஞாபகம் வரும் எப்பவுமே இந்த மாதிரி உட்கார்ந்து பார்க்கும்போது.”

“என்னது அது?”

மனம் கொள்ளை போகுமா…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top