• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

❤️MPK 23❤️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
962
Reaction score
1,301
Location
Banglore
eiJGM8914752.jpg
வணக்கம் தோழமைகளே,

இதோ 'மனம் பறித்த காரிகையே - 23'

படிச்சிட்டு கண்டிப்பா மறக்காம உங்களோட கருத்துகளை பகிர்ந்துக்கோங்க...


போன எபிக்கு 'லைட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்' மூலம் நீங்க கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏.


Happy reading😀📖
 




Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
962
Reaction score
1,301
Location
Banglore
மனம்❤️23

ஏதோ தன் தந்தையே தெய்வமாக இருந்து தனக்காக பார்த்த பெண்ணை தன்னிடம் அனுப்பியது போல மனம் வெதும்ப கண்களில் மெல்லிய நீர் படலம் ராமிற்கு.

“சது நீ சொல்றது எல்லாம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அப்பா ஏன் என்கிட்ட இத பத்தி எல்லாம் பேசவே இல்ல?”

“எங்களுக்குள்ள நாங்க விளையாட்டா பேசிக்கிட்டதுதான் பரஸ். மே பீ தேவையில்லாம உங்களை எதுக்கு குழப்பனும் உங்ககிட்ட சொல்லாம இருந்திருக்கலாம்.”

“அதுதான் ரீசனா இருக்குன்னு நினைக்கிறேன்.” என்றவன் தந்தையின் நினைவுக்குள் சென்றான்.

கணவனின் கவலை அவளுக்கு புரிந்து தான் இருந்தது. தன் அருகே அமர்ந்திருந்த அவனின் கைகளை பற்றினாள்.

அவளை திரும்பி பார்த்தவன் அவள் தோள் சாய்ந்து கொண்டான்.

ஒவ்வொரு ஆண்ணும் தன் மனைவியிடம் குழந்தையாக மாறிவிடுகிறான். அவனுடைய இன்ப துன்பங்களை யாரிடம் பகிர்ந்து கொள்கிறானோ இல்லையோ தன் மனைவி தனக்கு உறுதுணையாக இருப்பாள் என்ற நம்பிக்கை இருக்கும் பச்சத்தில் ஒவ்வொருவரும் அவரின் சுக துக்கங்களை தங்கள் மனைவியுடன் பகிர்ந்து கொள்வார்கள். அனைத்து ஆண்களுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கு பின் அவர்களை மட்டுமே நேசிக்கும் மற்றொரு உறவு மனைவி. எனவேதான் தாய்க்கு பின் தாரம் என சொல்வதுண்டு.

அப்படித்தான் ராமும் அவனுடைய சதுவிடம் அவனுடைய வருத்தங்களை பகிர்ந்துக் கொண்டான். இதுவரை யாரிடமும் அவன் பகிர்ந்து கொள்ளாத வருத்தங்கள் அது.

தந்தையை பற்றிய அவனின் நினைவுகள்…

தந்தையின் மறைவில் மிகவும் உடைந்து போயிருந்தான் அவன். எந்த ஒரு பிள்ளைக்கும் தந்தை தானே முதல் ஹீரோ. அப்படித்தான் தேவராஜ் ராமிற்கு.

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தன்னம்பிக்கையோடு இருக்கும் மனிதர் அவர். அவ்வளவு சீக்கிரத்தில் உடைந்து போய்விட மாட்டார். ஆனால் அவருக்கு நேர்மாறாக அவரின் மனைவி வரலட்சுமி மிகவும் மென்மையான மனம் படைத்தவர். சீக்கிரம் உடைந்து விடுபவர்.

தந்தையை மிகவும் பிடிக்கும் அவனுக்கு. தந்தையின் மறைவு அவனுக்கு பெரிய அடியாக இருந்தது. அதிலிருந்து வெளிவர மிகவும் சிரமப்பட்டான். அர்ஜுன் மிகவும் உறுதுணையாக இருந்தாலும் ரத்தினசாமி தேவராஜன் மறைவுக்குப் பின் மிகவும் உடலளவில் பாதிக்கப்படவே அர்ஜுன் தந்தையையும் தன் நண்பனையும் மாறி மாறிப் பார்த்து மிகவும் சோர்ந்துப் போனான்.

அவனின் அந்த நிலை ராமை மிகவும் கஷ்டப்படுத்த, தான் நன்றாக தேறி விட்டது போல் அவனிடம் காட்டிக் கொண்டான். தாயிடம் கூட பகிர முடியவில்லை ஏனென்றால் அவர் ஏற்கனவே மிகவும் உடைந்து போயிருந்தார் அவரிடம் சென்று தந்தையை பற்றி பேசினால் அவர் இன்னும் அழுது உடைய வாய்ப்பிருப்பதால் அவரிடம் தந்தையை பற்றி பேசவில்லை.

ரத்தினசாமியிடம் கேட்கவே வேண்டாம் ஏற்கனவே உடல் அளவில் மிகவும் நொந்து போய் இருப்பவரிடம் போய் என்னவென்று பேச இவன். தன் தங்கையை திருமணம் செய்த பின் தேவராஜை தன் மாப்பிள்ளையாக பார்ப்பதை விட ஒரு நல்ல நண்பராக பார்த்திருந்தார் அவர். எனவே, அவரின் பிரிவு இவரை மிகவும் பாதித்து இருந்தது. எனவே, இவனின் சோகங்களை இவனுக்குள் மறைத்துக் கொண்டான்.

“ரொம்ப கஷ்டமா இருந்துச்சு சது.” என அவள் தோளில் சாய்ந்தபடியே அவளின் கைகளோடு தன் கைகளை அழுத்தமாக கோர்த்தபடி கூறினான். ஏதோ இப்பொழுதுதான் அந்த நிகழ்வு நடந்ததை போல.

“தேவையில்லாம அப்பாவை பத்தி ஞாபகப்படுத்திட்டேன்ப்பா?” என குற்றவுணர்வோடு கேட்டாள் சாத்வி.

“மறந்தா தானே நீ ஞாபகப்படுத்தற்துக்கு.” என்றான் கசந்த முறுகலுடன்.

“பெரிய இழப்புதான்ப்பா ஆனா நீங்க ரொம்ப ஸ்ட்ராங் இல்லையா?” என அவனை சமாதானப்படுத்த முயல,

“உண்மைதான் சது நிறைய விஷயத்துல நான் ஸ்டாங் தான். ஆனா அப்பா விஷயத்துல ரொம்ப வீக். எனக்கு என்ன அட்வைஸ்னாலும் அவர் கிட்ட தான் கேட்பேன் ரொம்ப தெளிவான மனுஷன். நான் ஸ்கூல் முடிச்ச உடனேவே தொழிலை பத்தி என்கிட்ட டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. அதனாலதான் அக்ரி எடுக்கறதுக்கே நான் யோசிச்சேன். நம்ம தொழில் எப்படியா இருந்தாலும் புட் பேஸ்டா இருக்கு அக்ரி படிச்சா நிச்சயம் யூஸ்ஃபுல்லா இருக்கும்னு தோணுச்சு. அப்பா மட்டும் என்கிட்ட தொழிலை பத்தி அந்த நேரத்துல டிஸ்கஸ் பண்ணலனா என்ன எடுத்து இருப்பேன்னு எனக்கு தெரியல. அப்புறம் ஒருநாள் சொன்னாரு நான் உன்கிட்ட தொழிலைப் பத்தி பேசினது அடுத்து உன்னோட படிப்பு அத நோக்கி நகரனும்னு தான். நீயும் அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிட்டடா ரொம்ப புத்திசாலியா இருக்க தொழில்ல சீக்கிரம் முன்னேறுவ அப்படின்னு என்கிட்ட சொன்னாரு. அந்த அளவுக்கு எந்த ஒரு விஷயத்துலயும் ரொம்ப தெளிவா இருக்க மனுஷன் அவரு.” தன் தந்தையின் பேச்சுகளை ஞாபகத்துக்கு கொண்டு வந்திருப்பான் போல சற்று நேரம் அமைதியாக இருந்தான்.

அவன் கோர்த்திருந்த கைகளை அழுத்து பிடித்து உனக்கு நான் இருக்கிறேன் என செய்கையாலேயே சமாதானம் கூறினாள் சாத்வி.

ஒரு பெருமூச்சை வெளியிட்டவன் மீண்டும் தொடர்ந்தான், “உனக்கு ஞாபகம் இருக்கா அர்ஜுன் சொன்னானு நீ என்கிட்ட கேட்டயில்ல நான் பொண்ணுங்கள எல்லாம் விரட்டி விட்டேன்னு.” என அவளுக்கு அந்த விஷயத்தை ஞாபகப்படுத்த,

“ஞாபகம் இருக்குப்பா.” என்றவளுக்கு அந்த கஷ்டத்திலும் சிறிதாக புன்னகை எட்டிப் பார்த்தது.

“அது கூட அப்பாவோட அட்வைஸ் தான்.” என்றவனின் உதடுகளிலும் இப்பொழுது மெல்லிய புன்னகை.

“மாமாவா!” என்றவளுக்கு நம்ப முடியவே இல்லை.

“ஆமா முதல் முதலில் நான் காலேஜ் போன புதுசுல ஒரு பொண்ணு எனக்கு ப்ரொபோஸ் பண்ணா. அதை எப்படி டீல் பண்றதுன்னு எனக்கு தெரியல ஏன்னா அந்த பொண்ணு மேல எந்தவிதமான ஃபீலிங்ஸ்ஸும் எனக்கு வரல. ஆனா முதல் முதல்ல லவ்வ சொல்லும்போது அதை எப்படி அப்போஸ் பண்றதுன்னு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அத பத்தியே நான் யோசிச்சிட்டு இருக்கும் போது தான் அந்த பொண்ணு இன்னொரு பொண்ணு கூட பேசறது நான் கேட்க வேண்டியதா போச்சு.”

“என்ன பேசுனா?” என்றவளின் குரலில் ஏதோ மாறுதல் பட நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

“முகத்தில் லைட்டா பொறாம தெரியற மாதிரி இருக்கே.” என மெல்லிய சிரிப்போடு அவன் கூற,

தன்னை கண்டு கொண்டு விட்டானே என தன்னையே நொந்து கொண்டாள் அவள்.

“நான்தான் சொன்னேனே எனக்கு அந்த பொண்ணு மேல எந்த இன்ட்ரஸ்டும் வரலைன்னு அப்புறம் என்ன?”

ஒன்றுமில்லை என தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

“அந்தப் பொண்ணு இன்னொரு பொண்ணு கிட்ட என்னோட ஸ்டேட்டஸ் காகவும் பணத்துக்காகவும் தான் என்ன கல்யாணம் பண்ணிக்க விரும்புறதா பேசிட்டு இருந்தா?”

“அப்பாடா இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு.”

“ஏன்டி அந்த பொண்ணு அப்படி பேசினப்ப எனக்கு எவ்வளவு கடுப்பா இருந்துச்சு நீ என்ன நிம்மதியா இருக்குங்கற.”

“இல்ல எங்க அந்த பொண்ணு உங்கள உண்மையா லவ் பண்ணளோனு மனசு கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு. இப்ப ஏனோ ரொம்ப நிம்மதியா இருக்கு.” என மனதில் நினைத்ததை அவள் மறையாமல் கூட இவனுக்கு சிரிப்பு வந்தது.

“ரொம்ப தான் நிம்மதி.” என அவளை கேலி பேசியவன் மீண்டும் தொடர்ந்தான்.

“அப்படி அந்த பொண்ணு பேசின உடனே செம கடுப்புல அப்படியே வீட்டுக்கு போன அப்பா ஏதோ கேட்க, அவர்கிட்ட கொஞ்சம் லைட்டா அந்த கடுப்பு காட்டிட்டேன். அவர் ஈஸியா கண்டுபிடிச்சு என்னடா பிரச்சனைனு விசாரிக்க ஆரம்பிச்சுட்டாரு. விஷயத்தை சொன்ன உடனே, ‘விடுடா மகனே இது ஒரு பிரச்சனையா அந்த பொண்ணு உண்மையா லவ் பண்ணி உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லனா நீ கஷ்டப்படலாம். அந்த பொண்ணே உன்னை பணத்துக்காக லவ் பண்றேனும் போது மறுக்கிறதுல உனக்கு பிரச்சனையே இல்லையே. அந்த பொண்ணா விலகுற ஆளா பாரு. இல்ல ரொம்ப டார்ச்சரா தெரிஞ்சுச்சுன்னா அதுக்கு மேல நீ டார்ச்சர் பண்ணு அவ்வளவுதான் காலம் ஃபுல்லா இந்த டார்ச்சர் நம்மளால தாங்க முடியாது சாமினு ஓடிடவா.’ அப்படின்னு கூலா சொன்னாரு நானும் அத ட்ரை பண்ண அந்த பொண்ணு ஓடியே போய்ட்டா அதுக்கப்புறம் இந்த மாதிரி யாரு என்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணாலும் அதை பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன்.”

“ஒத்துக்குறேன் மாமா செம கூல்தான்.”

“அந்த அளவுக்கு என் கூட நல்ல பிரண்டையா மூவ் பண்ண மனுஷன் திடீர்னு என்கூட இல்லன்னு நினைக்கும் போது ஒரு மாதிரி உலகமே அப்படியே டக்குனு ஸ்டாப் ஆயிட்ட மாதிரி ஆயிடுச்சு. அம்மாவ பாக்கறதா இல்ல மாமாவ பாக்கறதா எனக்கு ஒண்ணுமே புரியல. அம்மா மாமா ரெண்டு பேருமே உடம்புலயும் மனசுலளவுலயும் அப்பாவை நினைச்சு ரொம்ப டவுன் ஆயிட்டாங்க. அஜ்ஜு தான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டான். என்னையும் சேர்த்து மூணு பேரையும் சமாளிக்கணுமே. அதிலிருந்து வெளி வரலைன்னாலும் வெளிவந்த மாதிரி காட்டிக்க ஆரம்பிச்சிட்டேன்.” என்றவன் குரல் கரகரத்தது.

“என்னால புரிஞ்சுக்க முடியுதுப்பா.” என அவள் கூறவும் அவ்வளவு நேரம் தோளில் சாய்ந்து கொண்டும் சிறிது நேரம் நிமிர்ந்து அவளை பார்த்த வாரும் பேசிக் கொண்டிருந்தவன் அவளின் மடியில் படுத்துக்கொண்டான்.

அவனின் நிலை உணர்ந்து கொண்டவள் மெதுவாக அவனின் சிகையை கோதி விட, படுத்தபடியே அவளின் முகத்தைப் பார்த்தான்.

அவனின் அந்த பரிதாப பார்வை அவளை ஏதோ செய்தது.

“என்னப்பா?” என மிக மிருதுவாக அவள் கேட்க,

“மனசு லேசான மாதிரி இருக்கு.” என இவ்வளவு நாள் அவன் உள்ளுக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த வருத்தங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டதில் உண்மையாலே அவனுக்கு மனம் லேசானது போல் உணர்ந்தான்.

எதுவும் பேசாமல் மெலிதாக சிரித்தவள் அவன் சிகையை கோதி விடுவதை நிறுத்தவில்லை. அப்படியே மெது மெதுவாக விழி மூடியவன் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

மெத்தையில் தான் இருவரும் அமர்ந்திருந்தார்கள் என்பதால் அவன் உறங்கியதும் அந்த சலனம் இல்லாத முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ச்ச இப்படி சட்டுனு அவர்கிட்ட எல்லாத்துக்கும் ஓகேன்னு சொல்லிட்டோமே கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம போயிடுச்சு வரவர.’ எனத் தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாள்.

தூக்கத்திலேயே திரும்பிப் படித்தவன் அவளின் இடுப்பை கட்டிக் கொண்டான்.

உள்ளுக்குள் ஏதோ செய்தது அவளுக்கு. இருந்தாலும் அவனை கீழே படுக்க வைக்க மனம் வரவில்லை தன் மடியில் சாய்ந்து இருந்தபோது மனம் லேசாக இருந்தது என்று அவன் கூறியது இன்னமும் அவள் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது.

பின் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தவள் மெதுமெதுவாக அமர்ந்த வாக்கிலேயே உறங்க துவங்கினாள்.

காலையில் கண்விழித்த ராம் முதலில் உணர்ந்தது தன் மனைவியின் வாசத்தை தான். அப்பொழுதுதான் புரிந்து கொண்டான் தான் இன்னும் அவள் மடியில் தான் இருக்கிறோம் என்பதை அது மட்டும் இல்லாமல் அவளின் வயிற்றில் அவன் தலையை முட்டிக் கொண்டிருந்தான். கண் விழித்த பிறகு கூட அந்த நிலையில் இருந்து மாறாமல் சற்று நேரம் அப்படியே அவளைப் பார்த்தான் அதன் பிறகு தான் இரவு முழுவதும் இப்படியேவா உறங்கினோம் என்பது தோன்ற சற்றென்று அவள் மடியில் இருந்து எழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் அவளுக்கும் துயில்கலைந்தது.

“லூசு நைட் ஃபுல்லா இப்படியேவா உட்கார்ந்துகிட்டு தூங்குன?” என அவளைக் கேட்க,

மெதுவாக ஆம் என்று தலையாட்டினாள்.

“ஏன்டா என்ன கீழ் போட்டுட்டு ஃப்ரீயா படுத்து இருக்கலாம் இல்ல?” இரவு முழுவதும் இப்படியே உட்கார்ந்து இருக்கிறாளே அதுமட்டுமில்லாமல் கால்களை மடக்காமல் அப்படியே இருந்தது நிச்சயம் கால் மறுத்து போய் இருக்குமே என்ற கரிசனத்தில் அவளிடம் வினவ,

“மனசு வரலப்பா.” என்றவளை ஆழ்ந்து பார்த்தான்.

நிச்சயம் முன்புதான் யோசித்தார் போல் தான் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்யவில்லையே என வருத்தத்தில் இருந்தவன் இப்பொழுது அதில் இருந்து முழுவதுமாக வெளிவந்தான் உண்மையில் தானே தேடி தேடி சென்று ஒரு பெண்ணை காதலித்து இருந்தால் கூட இந்த அளவுக்கு தன் மேல் பாசத்தை பொழியும் பெண் கிடைத்திருப்பாளா என்ற கேள்வி தான் எழுந்தது அவனுள்.

மெதுவாக எழுந்து காலைக்கடன்கள் முடித்து அவனுக்கு காபி கலக்கலாம் என எழப்போனவள் அப்படியே மீண்டும் அமர்ந்தாள்.

“கால் மறுத்துடுச்சா?” என சற்று கோபமாகவே கேட்டான் ராம்.

“ம்…”

“கொஞ்சம் கூட அறிவே இல்ல சது உனக்கு உன் பாசத்தைக் காட்றதுக்கு இதுதான் வழியா?” எனச் சற்று அதிகமாகவே குரல் உயர்த்த,

இவளின் முகம் சட்டென்று மாறியது. அவளின் அந்த முகமாற்றம் இவனை ஏதோ செய்ய,

“இல்லடா எனக்கும் கொஞ்சம் கில்டியா பீல் ஆயிடுச்சு. என்னால தானே அதான் கொஞ்சம் டென்ஷன் ஆயிடுச்சு சாரி.” என அவள் அருகில் அமர்ந்து அவள் கால்களை எடுத்து தன் மடிமீது வைத்துக் கொண்டான்.

மெதுவாக கால்களை பிடித்து விட துவங்க அவள் சிரித்துக் கொண்டே அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவனும் அவள் முகத்தைப் பார்க்க அவளின் சிரிப்பை பார்த்தவன், “என்ன அப்படி ஒரு கிண்டல் சிரிப்பு?”

“இல்ல அம்மா அடிக்கடி சொல்லுவாங்க நான் இருக்கிற இறப்புக்கு நிச்சயம் என் புருஷன் என்ன நல்லா செம்மையா கவனிப்பாருன்னு அவங்க அடிய நெனச்சு சொல்ல இங்க உண்மையாலே என் புருஷன் கிட்ட எனக்கு செம கவனிப்பு தான் இத மட்டும் இப்ப அவங்க பார்த்தாங்கன்னு வச்சுக்கோங்க அவங்களுக்கு ஹார்ட் அட்டேக்கே வந்துரும்.” என அவள் சிரிக்க இவனும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டான்.

“இன்னும் உன்ன கவனிக்கவே ஆரம்பிக்கலையே?” என நேற்று நீரில் நனைந்த அவளை நினைத்து ஒரு மாதிரி குரலில் புருவத்தை ஏற்றி இறக்க,

ஏனோ அவளுக்கு மனம் தடதடத்தது.

“இப்ப எதுக்கு இப்படி ட்ரெயின் ஓட்டிக்கிட்டு இருக்க.” என அவன் அவளை ஓட்ட,

“எனக்கு இப்ப கால் சரியாயிடுச்சு.” என்றவள் விட்டால் போதும் என்று எழுந்து குளியலறை நோக்கி ஓடிவிட்டாள்.

“உனக்கு வெறும் வாய் மட்டும் தான் சது.” என்ற அவனின் கிண்டல் குரலும் சிரிப்பும் அவள் காதில் கேட்டது.

இப்படி நன்றாக விடிந்த அந்த பொழுது சற்று நேரத்தில் வந்த போன் காலில் முற்றிலுமாக மாறிப்போனது.

மனம் கொள்ளை போகுமா…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top