22 (இறுதி) நிழலின் காதல்

#1
ப்ரவிகாவைப் பெற்றெடுத்த பின்னர் இந்திராணி சுதாவிடம் விடாப்பிடியாக மறுத்து விட்டார்...

"குழந்தை உன் குழந்தை தான்... ஆனால் மூனு மாதம் தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும்... மூனு மாதம் வரை எங்கள் வீட்டிலே இரு... மூன்று மாதம் கழித்து குழந்தையை வாங்கிக் கொண்டு உங்க அமெரிக்காவுக்கே போய்டு" என்று கறாராக கூறிவிட்டார்...

மூன்று மாதங்கள் கண்மூடித் திறப்பதற்குள் போய்விட்டது... அதுவரை பாப்பாவுக்கும் ராஜ உபச்சாரம் தான்... உடலைத் தேற்றுகிறேன் என்று பல லேகியங்கள், மருந்துக் குழம்பு என பாப்பா ஒரு சுற்று பெருத்து தான் இருந்தாள்...

மூன்று மாதங்கள் குழந்தை இருந்ததாலும், சுதாவும் பாப்பாவின் அறையில் தங்கியதாலும், அருள் பாப்பாவை பார்ப்பது கூட அபூர்வமாக இருந்தது...

சுதா டேவிட், ப்ரவிகாவுடன் இன்று அமெரிக்கா செல்கின்றனர்... என்ன தான் உரிமை இல்லை என்றாலும், பெற்றெடுத்த தாய் அல்லவா? மாளவிகாவின் முகமே மாறியது...

உண்மையில் குழந்தையைப் பிரிய மாளவிகா விரும்பவே இல்லை... ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தாள்... அதை அருள் கண்டு கொண்டவுடன், பாப்பாவின் தோளில் கை போட்டு தன்னோடு சேர்த்துக் கொண்டான்...

அன்று இரவு தூக்கத்தில் திடீரென, "பாப்பாவுக்கு பசிக்கும்... இப்போ பாப்பா எந்திரிக்குமே... சுதா பார்த்துப்பாளா?" என புலம்ப ஆரம்பித்தாள் பாப்பா...

"அவர்கள் குழந்தை அது... அவர்கள் எடுத்துச் சென்று விட்டனர்" என்று புரியவைக்க அருள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது...

பெற்றெடுத்த தாயவளின் கண்ணீர் ஒரு மாதம் வரை நீடித்தது... தன்னை மீட்டெடுக்க நினைத்து, பாப்பாவே சில முயற்சிகள் மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டு இருக்கிறாள்...

அன்று காலை பத்து மணி வரை படுக்கையில் தூங்கிய அருளை ஆச்சரியமாகப் பார்த்தபடியே எழுப்பினாள் பாப்பா...

"அருள்... என்ன இப்படி தூங்கறீங்க? எழுந்திரிங்க அருள்"

"ப்ளீஸ் பாப்ஸ்... ஒரு ஃபைவ் மினிட்ஸ்"

"இப்படியே சொல்லி சொல்லி பத்து மணி ஆகிச்சு... நீங்க இன்னும் எந்திரிக்கலையானு அத்தை வேற கேக்கிறாங்க... அவங்க வேற ஏதோனு நினைக்கிறாங்க... எனக்குத் தான் ஒருமாதிரி இருக்கு"

"அவங்க என்ன நினைக்கிறாங்க?"

"அது நைட்டு... நாம... இப்போ அது அவசியமா? வாங்க அருள்... எந்திரிங்க"

"அதானே... எதையும் சொல்லிடாதே... ஏன் பாப்ஸ் இப்படி செஞ்சா எப்புடி?"

"என்னது?"

"கீழே உன் மாமியார் நமக்குள்ள நைட் ஏதோ சம்திங் சம்திங்... சீக்கிரமே பேரனோ பேத்தியோ வரப்போகுதுனு சந்தோஷமா இருக்காங்க தானே"

"ரொம்ப முக்கியம்"

"ஆமான்டி... முக்கியம் தான்... நாம ஏன் அதை உண்மையாக்கக் கூடாது?"

"காலையிலே என்ன பேச்சு? சீக்கிரம் பிரஷ் பண்ணிட்டு வாங்க... அதை அப்றமா பேசிக்கலாம்"

"மீ பாவமில்லையா?"

"இந்தாங்க பிரஷ்... நான் போறேன்... சரவணா அண்ணா வந்திருக்காங்க"

"எப்படித்தான் இன்னும் இங்கே வந்து சாப்பிட்டு இருக்கானோ? ரொம்ப கஷ்டம்" என்று புலம்பியவாறு, குளித்து முடித்து வந்தான் அருள்...

அருளைப் பார்த்தவாறே, மாளவிகாவை அழைத்தான் சரவணன்... "பாப்பா, இங்கே வாயேன் கொஞ்சம்"

"சொல்லுங்க அண்ணா"

"இந்தாங்க... உங்க ரெண்டு பேருக்கும் அந்தமான் டிக்கெட்... மார்ச் வரை தான் சீசன்... அப்றோம் ஹெவி ரெயின் வந்துடும்... நாளைக்கு கிளம்பறீங்க... ஓகேவா?"

"எதுக்கு அண்ணா?" எனக்கேட்ட பாப்பாவை பரிதாபமாகப் பார்த்தான் சரவணன்...

தலையில் அடித்துக்கொண்ட அருள், "நம்ம ஜாலியா ஹனிமூன் போறதுக்கு... தயவுசெய்து ஹனிமூன்னா என்னனு கேட்டுறாதீங்க சயின்டிஸ்ட் மேடம்... நான் கத்து தர்றேன்"

அருளை முறைத்தவள், சரவணனிடம் "நல்ல வேளை... நாளை கிளம்ப வேண்டும்... இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான இடத்திற்கு செல்ல வேண்டும் அண்ணா"

"என்னை எங்கே கூட்டிட்டு போறே பாப்பா?"

"சஸ்பென்ஸ்... ஈவ்னிங் நாலு மணிக்கு வந்துடுங்க" என்றவள் சரவணனைப்.பார்த்து சிரித்தபடியே சென்றாள்...

அன்று மாலை அனைவரும் சென்றது ஒர் பூங்கா... பூங்காவில் சிறுகுழந்தைகள் இங்கும் அங்கும் ஓடும் அழகை ரசித்துக்கொண்டு இருந்தான் சரவணன்...

"சரவணா"
'குரலைக் கேட்டதும் மனம் படபடத்தது... இது அவளின் குரல் தான்... திரும்பவா? வேண்டாமா? அவளைப் பார்க்க எனக்கு துணிவில்லையே... பார்க்கவில்லை என்றால் சென்று விடுவாளோ? பார்க்கவா? வேண்டாமா?' பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருந்தான் சரவணன்...

"அண்ணா... சரவணா அண்ணா" பாப்பாவின் குரலைக் கேட்டதும் அனிச்சையாக தலை திரும்பியது... அங்கே பாப்பா, பாப்பாவின் அருகே பார்கவி, பார்கவி கையைப் பிடித்தவாறே ஐந்து வயது குழந்தை, சரவணனின் பெற்றோர் நின்றிருந்தனர்...

பார்கவியைப் பார்த்த மாத்திரத்தில், கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது சரவணனுக்கு... அவன் மார்பில் தஞ்சமடைந்தாள் பார்கவி... இருவரும் பல வருடங்கள் கழித்து இணைந்ததால், சுற்றம் மறந்து அணைத்துக்கொண்டு நின்றிருந்தனர்...

சரவணனின் அப்பா பேச ஆரம்பித்தார்... "நீ விரும்புகிறாய் என்று தெரிந்தும், இவளை வேண்டாம் என மறுத்தது தவறு தான் சரவணா... எங்களை மன்னித்து விடு" அப்பா கேட்டதும் அதிர்ந்து பார்த்தான் சரவணன்...

நடந்தது இதுதான்... சரவணனின் முறைப்பெண் தான் பார்கவி... விவரம் தெரிந்த நாட்களில் இருந்தே விரும்புகின்றனர் இருவரும்... திடீரென பார்கவியின் அக்கா பிரசவத்தில் இறந்து போக, அக்காவின் கணவரும் குழந்தையைத் தலைமுழுக, வேறு வழியில்லாமல் பார்கவியின் பொறுப்பில் வந்தது குழந்தை...

'குழந்தையை ஆசிரமத்தில் சேர்த்தால் சரவணனைத் திருமணம் செய்து கொள்ளலாம்' என சரவணனின் பெற்றோர் வலியுறுத்த இரவோடு இரவாக காணாமல் போனாள் பார்கவி...

தேடித்தேடி கலைத்த சரவணன் பெற்றோரை வெறுத்து, தனியாக வந்தான்... அன்று சரவணன் வீட்டில் தங்கிய பாப்பா, சரவணனுக்கு வீட்டில் யாரும் இல்லை என்று பார்த்து, அருளிடம் விசாரித்தவள், தனியாக பிரைவேட் டிடெக்டிவ்விடம் கொடுத்து தேடியும் பிடித்தாள்... ஆனால் அதற்கு நான்கு மாதங்களாகி விட்டன... முதலில் பார்கவியை ஒத்துக்கொள்ள வைத்த பாப்பா, பின் சரவணன் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கியவள் இப்போது சரவணனைச் சந்திக்க வைத்துள்ளாள்...

பார்கவியோடு சிறிது நேரம் பேசிய சரவணன், "அப்பா அம்மா, உங்களை மன்னித்து விட்டேன்... என் பையனைக் கூட்டிட்டு போங்க... நான் பாரு கூட தனியா பேசனும்... வீட்டுக்கு போறேன்... தேங்க்ஸ் பாப்ஸ்... என் வாழ்க்கையை எனக்குத் திரும்ப தந்து இருக்கிறாய்... அப்றமா பொறுமையா நன்றி சொல்றேன்... பாய்..." என்றவாறு விரைவாக கிளம்பினான் சரவணன்...
சரவணனின் பெற்றோரும் தங்கள் பேரனைத் தூக்கிக்கொண்டு கிளம்ப, பாப்பாவும் அருளும் தனித்திருந்தனர்...

"பாப்பா... ஏய் பாப்ஸ்... உன்னைத் தாண்டி"

"என்னடா அருள்?" அவளின் முதல் "டா"வில் மயங்கியவன்,
"டா எல்லாம் சொல்றே"

"நீ டீ சொல்றேல... அதனாலதான்டா என் புருடா"

"எனக்கு பிடித்திருக்கிறது"

"அய்யோ... பிடிச்சிருக்கா? நீங்க கோபப்படுவீங்கனு பார்த்தேன்... கொஞ்சம் சீண்டலாம்னு நினைத்தேன்"

"இந்த நீங்க வாங்க போங்கவை விட, டா தான் நெருக்கமாக இருக்குது" என்றவாறு நெருங்கி அமர்ந்தான் அருள்...

"பப்ளிக்... பப்ளிக்... நாம் வீட்டுக்கு கிளம்பலாமா?" கூச்சத்தில் நெளிந்தவாறே கேட்டாள் பாப்பா
அவளின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்தவன், "லவி... என் செல்ல லவி... ஏன்டி இவ்ளோ லவ் பண்றே என்னை?"

"இப்போ என்ன பண்ணிட்டேன் நான்?"

"முதல்ல அந்த மோனிக்கா... அவளும் பாதிக்கப்பட்டு இருக்கானு கூட நான் நினைச்சது இல்லை... நீ உதவி இருக்கிறே... ரெண்டாவது குணா... சுகுணா அத்தை பாவம்னு நினைத்து இருக்கேன்... ஆனால் அவங்க உனக்கு சித்தி... அவங்களுக்கு வாழ்க்கை அமைத்து கொடுக்கனும்னு நீ நினைத்து இருக்கிறாய்... இப்போ சரவணா... என் பெஸ்ட் பிரெண்ட்... ஏனோ அப்பா அம்மா கிட்ட சண்டைனு நான் நினைத்தேன்... உன் அண்ணானு சொல்லி, அவங்க அம்மா கிட்டவே காரணம் கேட்டு, அவனையும் செட்டில் பண்ணிட்டே... சுதா வயிற்றில் இருந்த குழந்தை போனதுக்கு நான் தான் காரணம்... அதுக்கும் நீயே தாயாக மாறி பெற்றுக் கொடுத்திட்ட... எல்லாருக்கும் எல்லாம் செஞ்ச... என்னை மட்டும்...?!"

அவனை விநோதமாகப் பார்த்தவள், "உங்களுக்கு என்ன?" எனக் கேட்க,

"நீ என் நிழல்னு சொன்னேன்... ஏன் நிஜத்துக்கு வர மாட்றே? என்னால முடியலை... உன்கூட பழகனும், திரும்பவும் லவ் பண்ணனும், பர்ஸ்ட் மாதிரியே கவிதைல பேசனும், நிறைய டிராயிங்க்ஸ் நாம சேர்ந்து வரையனும்... அதையெல்லாம் நம்ம பிள்ளைங்க ரசிக்கனும்னு ஆசையா இருக்குடி"

"சோ? நான் என்ன பண்ணனும்?"

"ஒன்னும் பண்ண வேண்டாம்... முதல்ல ஒரு ரெண்டு பிள்ளைங்கள பெத்துக்கலாம்... அப்றமா லவ் பண்ணலாம்... என்ன சொல்ற நீ?"

"அடப்பாவி... முதல்ல லவ் பண்ணலாம்னு சொன்னாக் கூட பரவாயில்லை... உனக்கு புள்ளை கேக்குதா? ஏன்டா என்னைப் பார்த்தா உனக்கு புள்ளை பெத்துப் போடுற மெஷின் மாதிரி இருக்கா?" அடித்துத் தள்ளினாள் பாப்பா...

"ஹேய்... பப்ளிக் டி செல்லம்... வீட்டுக்கு வந்து கன்ட்டினியு பண்லாம் வா" என்றவாறே அழை(ணை)த்துச் சென்றான் அருள்...


மூன்று வருடங்கள் கழித்து....


"ஹேய் லவி... லவ் பண்ணலாமா?"

"டேய் லூசா நீ... ரெண்டு பிள்ளை பெத்தாச்சு... இப்ப வந்து கேக்கிற கேள்வியைப் பாரு"

"ஆமாடி... இனிமே ஃப்ரீயா எந்த வொரியும் இல்லாமல் லவ் பண்ணலாம்"

"காலையில யார் சமைப்பது?"

"நீ தான்"

"பிள்ளைங்களுக்கு ஆயா வேலை பாக்கிறது யார்?"

"நீ தான்"

"உன் லேப்டாப் பர்ஸ் கண்ணாடி தேடித் தர்றது யார்?"

"நீ தான்"

"பாத்திரம் கழுவறது, துணி துவைக்கிறது, தொட்டில் ஆட்டறது, வீடு பெருக்கிறது, செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, துணி காய வைக்கிறது, காய்ந்த துணியை மடிக்கிறது எல்லாம் யாருடா?"

"ஏய் நீ தானடி வேலைக்கு யாரும் வேணாம்னு அனுப்பி வைத்தாய்"

"இப்படித்தான் எங்க லவ்வைக் காட்ட முடியும்.... நானும் டிப்பிகல் வொயிஃப் தான்"

"நீ சயின்டிஸ்ட் டி"

"என் அருளோட லவி டா நான்"

"அப்போ லவ் பண்ணலாம்டி"

"டேய் இருக்கிற வேலையில கவிதையாவது ஓவியமாவது? ஓடிப்போ..." துரத்திக்கொண்டு ஓடிய லவி, இரவில் காத்திருந்தாள் அடிவாங்கும்போது ஓடிய அருளின் தத்ரூப ஓவியத்துடன்... அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசியது...


அனைவர் வாழ்க்கையிலும் வீசும் தென்றல், நம் வாழ்விலும் வீசட்டும்... வார்த்தைகளால் கூறுவது மட்டும் தான் காதல் அல்ல... இரவு பகல் பாராது அலுவலகத்திலோ வீட்டிலோ வேலை பார்ப்பது கூட காதல் தான்... வார்த்தையால் காதலை எதிர்பார்த்தால் ஏமாற்றங்கள் தான் மிஞ்சும்...
நன்றி...
 
Advt

Advertisements

Top