Idhayathin Mozhiyaay Kadhal...

RajiPrema

Author
Author
SM Exclusive Author
#1
லதா...லதா...எங்க போனா இவ.!!!..தேடிக்கொண்டே உள்ளே சென்றான் சுந்தர்...!!!

இங்க தான் இருக்கியா!!!...நான் உன்ன வீடு முழுக்க தேடிட்டு வரேன்...!!!வளவுல செடிக்கு தண்ணி ஊத்திட்டு இருந்த லதாவை பார்த்து கேட்டான்...

"அப்படியா என்ன விஷயமா தேடினீங்க ???என லதா கேட்டாள்..."

"ம்ம்ம் சொல்றேன் வெயிட்"...

"அது இருக்கட்டும்...!!! நீ ஏன் கொஞ்சம் டல்லா இருக்கமாதிரி இருக்கு...."

"அதெல்லாம் ஒண்ணுமில்லயே என லதா கூற..."

"ஆஹான்!!! அதெல்லாம் இல்லை... ஏதோ ஒன்னு இருக்கு.... உண்மைய சொல்லு, உன் முகத்த பாத்தாலே எனக்கு தெரியாதா !!!...என்றான் சுந்தர்...

(கல்யாணம் ஆகி 6 மாசம் தான் ஆச்சுனாலும் லதாவின் முகத்தை பார்த்தே புரிந்துகொள்வான் சுந்தர் அவ்வளவு அந்நியோன்யம் இருவருக்கும்)

"ம்ம்ம் ஒண்ணுமில்லமா எனக்கு பொதுவாவே பிறந்தநாள் கொண்டாடுற பழக்கம்லாம் இல்ல...ஆனா என் பிறந்தநாள் அன்னைக்கு என் மனசுக்கு பிடிச்சவங்க எனக்கு வாழ்த்தணும்னு மட்டுமாச்சும் நினைக்குறதுல தப்பில்லையே"

"ஏதும் பேசாமல் அவள் விழிகளையும் வார்த்தைகளையும் மட்டும் நோக்கினான்..."

"அவள் மேலும் தொடர்ந்தாள்"

"இன்னைக்கு என் பர்த்டே....!!! நீ விஷ் பண்ணுவேன்னு நினைச்சேன் ஆனா ஒன்னுமே நீ சொல்லல..."

"ஓஹோ அதான் என்மேல கோவமா இருக்கியா!!!"

"கோவமா!!!ஹா ஹா என சிரித்தபடி தொடர்ந்தாள்"

"ஏன் சிரிக்கிற!!!"

"இல்ல உன்மேல எனக்கு கோவமே வரமாட்டேங்கு ஏன்னு தெரியல!!!...கோவம்லாம் இல்ல கொஞ்சம் வருத்தம் அதும் சரியாயிடும்...!!! கொஞ்ச நேரத்தில நானே வந்து பேசிடுவேன் நீ கவலைப்படாத!!!..."

"விழிகளை தூக்கியபடி ஆச்சர்யமாய் பார்த்தான்"...

"என்கூட வா உனக்கு ஒன்னு காட்றேன்"

"எங்க கூப்பிட்றன்னு சொல்லு"

"நீ வா"என அவளை கூட்டிச் சென்றான்...டிவியை ஆன் செய்துவிட்டு அவள் அருகில் சென்று அவனும் கவனிக்கலானான்"

"திரையில் அவள் ஒரு வருடத்திற்கு முன்பு அவள் சகோதரியின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் அவை...!!! ஒவ்வொரு காட்சிகளாய் விரிய வியப்பின் உச்சிக்கே சென்றாள்...!!!"

"அவள் விழிகளையே நோக்கியபடி இருந்தான் வீடியோவின் முடிவில் அவள் நோக்கி ஹாப்பி பர்த்டே என் செல்லம்...எனக் கூறி அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான்...!!! "

"விழிகள் நெகிழ்வில் சிவக்க,ஆதுரமாய் அவன் தோள்களில் சாய்ந்தாள்"

"அவள் விழிகளை பார்த்து உனக்கு இப்போ நிறைய கேள்விகள் இருக்கும் மனசில!!!எல்லாத்துக்கும் பதில் சொல்றேன்!!!..."

"உன்ன எனக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே தெரியும்... தெரியுமா??!!!"

"என்னது!!!ஏற்கனவே பெரிதாய் இருக்கும் அவள் விழிகள் மேலும் பெரிதாகியது!!!.."

"ஆமா எங்க அப்பவும்,உங்க அப்பாவும் அந்த காலத்தில இருந்தே நண்பர்கள்"

"ஹலோ அது எனக்கு தெரியாதோ"என சீற

"வெயிட் வெயிட் சொல்றேன்..."

"ம்ம் சொல்லு"

"ஒரு நாள் உங்க அப்பாவை பாக்க எங்கப்பா போனும்னு சொன்னாங்க நான் தான் கூட்டிட்டு வந்தேன் அப்பாவ உள்ள போக சொல்லிட்டு நான் வீட்டுக்கு வெளிய வெயிட் பண்ணினேன்!!!...போனை பார்த்துட்டே இருந்தப்போ உங்க எதிர் வீட்ல உள்ளவங்க உன்னைய கூப்டாங்கனு நீ வெளிய வந்த...சட்டுன்னு உன்னைய பாத்ததும் பிடிச்சுட்டு...நீ வீட்டுக்குள்ள போய்ட்ட...!!!கொஞ்ச நேரத்தில...அப்போ பார்த்து எனக்கு ரொம்ப பிடிச்ச லைன் கேட்டுச்சு "மாலையிடும் சொந்தம்....!!!முடிபோட்ட பந்தம்....!!! பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா !!!...னுபாட்டு ஓட..!!!எனக்கென்னவோ எனக்காகவே போட்ட மாதிரி இருந்துச்சு...!!!"

"செம்ம அப்புறம் "என அவள் ஆவலாய் கேக்க

"அப்புறம் என்ன!!! அப்பா வந்துட்டாங்க நானும் ஏக்க பெருமூச்சு விட்டுட்டே கிளம்பிட்டேன்!!!..."

"ஹா ஹா"என் சிரித்தாள்

"அதுக்கடுத்து அப்பா எப்போலாம் உங்க வீட்டுக்கு கூப்பிட்டாலும் நான் வீட்ல இருக்க நேரம் நான் தான் கூட்டிட்டு வருவேன்"

"ம்ம்ம்"

"அப்போத்தில இருந்து நான் ஊருக்கு வார நேரம் உன்ன பாலோ பண்றது தான் என்னோட பார்ட் டைம் வேலை"

"என் அக்கா கல்யாணத்துக்கு நீயும் வந்தியா"ன்னு லதா கேட்டாள்...

"எஸ் உங்க அக்கா மாப்பிள்ளையும் நானும் பிரெண்ட்ஸ்...எனக்கு தெரியும் நீ வருவேன்னு உன்னய பாத்து பேசணும்னு நினைச்சேன் ஆனா முடியல"!!!

"எவ்ளோ நடந்திருக்கு என்கிட்டே ஒண்ணுமே சொல்லல பாத்தியா"

"ஹா ஹா என சிரித்தபடி அன்னைக்கு நிஜமாவே என்னய போட்டோகிராபர்னே நினைச்சிருப்பாங்க...ஆனா என் கேமரா போகஸ் பண்ணது என்னமோ உன்னையதாங்கிறது எனக்கு தானே தெரியும்!!!...என மறுபடியும் சிரித்தான்..."

"எனக்கு தெரியாமலேயே எப்படி எடுத்த இத்தனை போட்டோஸ்"!!!

"அதான் நாம ஸ்டைல்"என பலமாக சிரித்தான்..!!!

"அவ்ளோ சந்தோசமா இருக்கு...thank you so much எனக் கூறினாள்!!"

"ஹே தேங்க்ஸ்லாம் சொல்லாத ப்ளீஸ்...அதுக்கப்புறம் தான் எங்கப்பாகிட்ட சொல்லி பொண்ணு கேக்க சொன்னேன்...நான் உன்னையை நோட் பண்ணினேன் !!!.... எங்கப்பா என்னைய நோட் பண்ணிருக்காங்க போல"!!!...நான் சொல்றதுக்கு முன்னாடியே மாமாக்கிட்ட பொண்ணு கேட்ருக்காங்க மாமாவும் ஒகே சொல்ல அவ்ளோ தான் கல்யாணம் முடிஞ்சுட்டு"என சொல்லிவிட்டு மெல்லிதாய் கண்ணடித்தான்"!!!

"ஐ ஆம் ரியலி இம்ப்ரெஸ்ஸட்...seriously telling to u i am blessed of having u as my hubby"!!!thanks to god!!!என் கூறியபடியே அவன் நெற்றியில் முத்தமிட்டாள்"
 

RajiPrema

Author
Author
SM Exclusive Author
#8
நன்றி தோழி ?...கதையின் களம் கற்பனை தாம் தோழி ? இப்படி இருந்தால் நல்லாயிருக்குமே என்று நினைத்தே வைத்தேன் ?...
 

Latest Episodes

Sponsored Links

Top