• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Kadhal Kadan - 17

Messages
620
Likes
2,717
Points
133
Location
Bangalore
#1
காதல் கடன் - 16க்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இதோ நான் சொன்னதுபோலவே உங்களுக்காக அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன். இதுக்கும் உங்களோட ஆதரவையும் அன்பையும் ஆவலோட எதிர்பார்க்கிறேன். படிச்சுட்டு லைக்ஸ் கமெண்ட்ஸ் குடுக்க மறந்துடாதேள்...நான் ரொம்ப ஆவலோட காத்துண்டு இருக்கேன்.

காதல் கடன்
(17)

தனது அலுவலக அறைக்குச் சென்று சிறிது நேரம் ஏதாவது வேலையைப் பார்க்கலாம் என்று மடிக்கணினியைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்த பரத்தின் மனம் எதிலும் லயிக்காமல் அலையில் அகப்பட்ட துரும்பாய் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது.

ஆறுதலடையும் வகை தெரியாமல் மடிக்கணினியை மூடிவிட்டு எழுந்து சென்று ஃப்ரெஞ்ச் ஜன்னலைத் திறந்து பால்கனியில் சென்று நின்றுகொண்டான். எப்போதும் ஆறுதலளிக்கும் குளிர்ச்சியான கடல்காற்றும் கூட இன்று வேதனையையே அளித்தது.

ஆயிரம் எரிமலைகள் மனதுக்குள் குமுறி வெடித்துச் சிதறிக்கொண்டிருக்க அவற்றின் லாவாவாக வெளிப்படத் துடிக்கும் கோபத்தையும் ஆற்றாமையையும் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அலுவலக அறைக்குள் வந்து அடைந்துவிட்டிருந்தான்.

தன்னுடைய இந்த இயலாமையையும் கோபத்தையும் யாரிடமும் அவ்வளவு எளிதாகக் காட்டிவிட முடியாது அவனால். ஏனென்றால் இந்த வீட்டில் யாருடைய மனம் புண்பட்டாலும் அது நெருஞ்சி முள்ளாய் அவன் மனதைத்தான் தைத்துக் கிழிக்கும் என்பதை அறியாதவனல்லவே அவன்...

இப்படி யார் மனமும் புண்பட்டுவிடக்கூடாது என்று அவன் நினைத்ததால்தானே இன்று அவிழ்க்கமுடியாத முடிச்சொன்றைப் போட்டுவிட்டு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறான். மீளவே முடியாத ஆழிச்சூழலில் அவனைத் திணறத் திணற மூழ்கடித்துவிட்டு எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது அவனுக்கு.

எவ்வளவு நேரம் இப்படியே நின்றிருந்தாலும் இந்தச் சிக்கலிலிருந்து விடுபடமுடியாது என்று உணர்ந்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாய் அறையை விட்டு வெளியேறி ஸ்டோர் ரூமை நோக்கி நடந்தான். அறை வாசலில் லேசாகத் தயங்கியவன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று விளக்கை உயிர்ப்பித்தான். வேண்டாத பொருட்களை போட்டுவைக்கும் அறையாக இருந்தாலும் அதையும் நேர்த்தியாகவே பராமரித்திருந்தார் பர்வதம் மாமி. எல்லா பொருட்களும் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அறையைக் கண்களால் துளாவிய பரத்தின் பார்வையில் அவன் தேடிய பொருள் தென்பட்டது. அங்கே ஒரு மூலையில் தேவையில்லாத சாமான்களில் ஒன்றாக அவனுடைய உயிர்த்துடிப்பான அந்த பொருள் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அது...பரத்தின் அறையில் இருந்து பர்வதம் மாமியால் அகற்றப்பட்ட லக்ஷ்மியின் புகைப்படம்.

அந்தப் புகைப்படத்தைக் கண்ணால் கண்டபின்புதான் இதுவரையில் சூறாவளியாய்ச் சுழன்றடித்துக்கொண்டிருந்த எண்ணங்கள் அனைத்தும் ஒரு மையத்தில் வந்து அமைதியடைந்தது போலிருந்தது அவனுக்கு. இது புயலுக்கு முந்தைய அமைதியா அல்லது பிந்தைய அமைதியா என்று கேள்வி கேட்ட மனதைச் சட்டை செய்யாமல், ஒரு பூங்கொத்தை ஏந்துவது போல் அந்தப் புகைப்படத்தைத் ஏந்திக்கொண்டு தன்னறை நோக்கி நடந்தான்.

சாதாரணமாக ஒருவரால் தூக்கிவிட முடியாத அந்தப் புகைப்படம் இன்று அவனுடைய மனதின் பாரத்தை விடவும் எடை குறைவாகவே இருப்பதாகத் தோன்றியது. அதை ஒருவழியாக தன்னுடைய அறைக்குக் கொண்டு சென்று அதனிடத்தில் மாட்டியபிறகே அவனது மனம் சிறிது சமன்பட்டது போலிருந்தது.

ஏணியிலிருந்து இறங்கி லக்ஷ்மியின் புகைப்படத்தைப் பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டான் பரத்...

பரத் அப்படி நின்றிருந்த காட்சியைத்தான் குளியலறையில் இருந்து உடை மாற்றிக்கொண்டு வந்த ராதிகாவும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். மறுபடியும் வேறொருவரின் அந்தரங்கத்திற்குள் அத்துமீறி எட்டிப்பார்க்கும் உணர்வு வந்து அவளைச் சூழ்ந்துகொண்டது. கடந்த நான்கு நாட்களாக மனதில் நிறைந்திருந்த மகிழ்ச்சி, நெருப்பில் கரையும் மெழுகாக உருகிக் கரைந்து விலகுவது போன்ற உணர்வில் பரத்தையும் மீண்டும் சிம்மாசனம் ஏறியிருந்த லக்ஷ்மியின் புகைப்படத்தையும் மாறி மாறி பார்த்தபடி நின்றிருந்தவளைத் திரும்பி ஒரு வெறுமையான பார்வை பார்த்துவிட்டு மெளனமாக அறையை விட்டு வெளியேறினான் பரத்.

பரத்தின் பார்வையில் தெரிந்த வெறுமை இப்போது ராதிகாவின் மனதிலும் குடியேறியது. விலகிச் சென்றுவிட்டது என்று நினைத்த நிழல் காரிருளாய் தன் மீது வந்து கவிந்தது போன்ற உணர்வு வந்து சூழ்ந்துகொண்டது அவளை.

அன்று போலவே இன்றும் மூச்சு முட்டுவதுபோல் இருக்க, அதற்கு மேலும் அந்த அறையில் இருக்கமுடியாமல் வெளியே விரைந்தாள். வேகமாக மாடிப்படி இறங்கியவள் ஹாலில் அமர்ந்திருந்த பர்வதம் மாமியைப் பார்த்து, தன்னை சிறிது சுதாரித்துக்கொண்டு அவரருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.

“வா ராதும்மா, கொஞ்ச நாழியாவது ரெஸ்ட் எடுத்துண்டியா? காஃபி சாப்பிடறியா?” என்று கேட்டவரிடம் வேண்டாமென்று தலையசைத்துவிட்டு, “மணி ஆறாகப் போறதேம்மா, நான் ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிட்டு வரட்டுமா?” என்று கேட்க, “இதெல்லாம் கேக்கணுமா கண்ணம்மா, பேஷா பண்ணு, இன்னும் ஸ்வாமி விளக்கேத்தலை, நீ ஏத்திடு,” என்று அவளுடைய தலையை ஆதுரமாகத் தடவிவிட்டு எழுந்து சென்றார் அவர்.

ஏனோ மாமியாரிடம் எதையுமே சொல்லத் தோன்றவில்லை ராதிகாவிற்கு. அவரிடம் லக்ஷ்மியின் புகைப்படம் மீண்டும் சுவறேரியதைச் சொல்லியிருந்தால் அது உடனே அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கும், ஆனால் அந்தப் புகைப்படத்தை வலுக்கட்டாயமாகச் சுவற்றிலிருந்து மட்டுமே அகற்றுவது அவளுடைய வாழ்க்கைக்கு எந்தவிதத்திலும் பிரயோஜனப்படாது என்று நன்றாகவே புரிந்தது அவளுக்கு.

தன் மனதில் நீர்க்குமிழிகளாய் எழும் கேள்விகளுக்கு எப்படி விடை கிடைக்கப் போகிறதோ என்ற குழப்பத்துடனேயே ஸ்வாமி விளக்கேற்றியவள், பகவானின் சான்னித்தியமாவது நிம்மதியை அளிக்காதா என்ற வேண்டுதலுடன் சிறிதுநேரம் கண் மூடி பூஜையறையிலே உட்கார்ந்துகொண்டாள். மனிதர்கள்தான் என் கேள்விகளுக்கு விடை கொடுக்க மாட்டார்கள், நீயாவது எனக்கொரு பதிலைச் சொல்ல மாட்டாயா என்று அம்பிகையிடம் இறைஞ்சியது அவள் மனம். அந்த இறைஞ்சல் பாடலாக வெளிப்பட்டது. இதுநேரம் வரை விழுந்துவிடவா என்று அச்சுறுத்திக் கொண்டிருந்த கண்ணீர் இமையென்னும் கரை தாண்டி வழியத் தொடங்கியது. யாரிடம் வேண்டுமானாலும் மனதை, மனக்கவலையை மறைக்கலாம், ஆனால் உலகாளும் உமையன்னையிடம் மறைக்கமுடியுமா...மனக்குமுறல் மொத்தத்தையும் கொட்டிவிட்டாள் ராதிகா...
 
Messages
620
Likes
2,717
Points
133
Location
Bangalore
#2
எந்த நாளைக்கும் ஈன்றருள் தாயென
வந்த சீரருள் வாழ்கஎன் றுன்னுவேன்
சிந்தை நோக்கந் தெரிந்து குறிப்பெலாந்
தந்து காக்குந் தயாமுக்கண் ஆதியே

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, குமரா
உமையாள் மைந்தா, மறை நாயகனே

கொடியே இளவஞ்சிக் கொம்பே
எனக்கு வம்பே பழுத்த படியே
மறையின் பரிமளமே பனி மால் இமயப் பிடியே
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

நானிலத்தில் பல பிறவி எடுத்து
திண்டாடினது போதாதா தேவி உந்தனுக்கு

நான் ஒரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு

அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா

ஒருபுகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுள்ளம் இறங்காதா தேவி உந்தனுக்கு

நான் ஒரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு...

(கர்நாடக சங்கீதம் கேட்பதற்குப் பொறுமை உள்ளவர்கள் இந்தப் பாடலை இந்த லிங்கில் கேட்கலாம். மனதை உருக்கும் பாடல், மிகவும் அருமையாகப் பாடப்பட்டிருக்கிறது, நிச்சயமாக ராதிகாவின் மனக்குமுறலுக்கு இந்தப் பாடல் ஒரு உருவம் கொடுக்கும்)

ராதிகா பாட்டுப் பாடும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பூஜையறையில் கூடிவிட்டனர். அவள் நெக்குருகிப் பாடிய பாடல் அனைவரின் மனதையும் தொட்டிவிட்டிருந்தது. பிறந்த வீட்டினரின் பிரிவால் ராதிகா மனவருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டனர் அனைவரும்.

ராதிகாவின் மனமுருக்கும் இந்தப் பாடல் அம்பிகையின் உள்ளம் தீண்டியதோ என்னவோ, தீண்டவேண்டியவனின் மனதை நிச்சயமாகத் தீண்டியிருக்க வேண்டும். அவளுடைய பாடலின் வரிகள் அவனுடைய உள்ளம் தைத்திருக்க வேண்டும். வெளியே போகலாம் என்று பைக் சாவியை எடுத்துக்கொண்டு மாடிப்படி இறங்கிக்கொண்டிருந்தவன், ராதிகாவின் பாடல் கேட்டு அப்படியே மாடிப்படியில் உட்கார்ந்துவிட்டான்.

ராதிகா அம்பிகையிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் தன்னிடமே கேட்கப்பட்டது போல் உணர்ந்தான் பரத். எந்தத் தவறுமே செய்யாமல் சூழ்நிலைக் கைதியாய் தன் வாழ்வில் வந்திருக்கும் இந்தப் பெண்ணுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் என்ற கேள்வி அவன் முன்னால் பூதாகாரமாய் எழுந்து நின்று தாண்டவமாடியது.

பிரளயம் வெளியில் இருந்தால் அதிலிருந்து தப்பி ஓடலாம், மனதுக்குள் உண்டாகிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் பிரளயத்திலிருந்து தப்பி எங்கே ஓடமுடியும்?

ராதிகாவின் கேள்விகளுக்கெல்லாம் விடையானவனே விடையறியா சிக்கலறைக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான்.

பாடலைப் பாடிமுடித்த ராதிகா எழ மனமின்றி பூஜையறையிலே உட்கார்ந்திருக்க, அவளுடைய பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த துளசி மெதுவாக அவளுடைய தோளைத் தட்டி அவளின் மோனத்தைக் கலைத்தாள். அப்பொழுதுதான் அங்கு குடும்பத்தினர் அனைவரும் குழுமியிருப்பதை உணர்ந்த ராதிகா, யாரும் பார்த்துவிடும் முன்னரே கண்களைத் துடைத்துக்கொண்டு, நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்துகொண்டாள்.

தாயறியா சூலில்லை என்ற கூற்றை உண்மையாக்குவதுபோல், ராதிகாவின் கலங்கிய கண்களைக் கண்டுகொண்ட பர்வதம், ராதிகாவின் முதுகில் ஆறுதலாகத் தட்டி, “என்னமா, அம்மா அப்பா நியாபகமா இருக்கா? அவாள்லாம் ஊருக்குப் போய் சேர்ந்துட்டாளான்னு ஃபோன் பண்ணிக் கேளேன், அவாளோட குரலைக் கேட்டால் உனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்,” என்றார்.

ராதிகாவுக்குமே அம்மாவின் குரலைக் கேட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, சரி என்பது போல் தலையாட்டிவிட்டு தனது ஃபோனை எடுக்க மாடிக்குச் செல்ல முற்பட்டாள்.

அங்கு அவளுடைய பாடலைக் கேட்டு வெறித்த பார்வையுடன் சிலையாய்ச் சமைந்து மாடிப்படியில் அமர்ந்திருந்த பரத்தை எதிர்பார்க்காமல் திடுக்கிட்டவள், எதுவும் பேசாமல் அவனைச் சுற்றிக்கொண்டு மாடியேறிச் சென்றுவிட்டாள்.

ராதிகா அவனெதிரில் வந்து நின்றதை அவளுடைய கொலுசுகளின் சலனம் உணர்த்தினாலும், அவளை நிமிர்ந்து பார்க்காமலே உட்கார்ந்திருந்த பரத்தும், ராதிகா தன்னைக் கடந்து சென்றதும் எழுந்து வெளியில் சென்றுவிட்டான்.

மாடியில் அவர்கள் அறைக்குச் சென்று தனது ஃபோனை கைப்பையிலிருந்து வெளியில் எடுத்த ராதிகாவிற்கு அப்போதுதான் தனது பழைய சிம்கார்டை உடைத்து குப்பைத்தொட்டியில் போட்டதும், அதற்கு பதிலாக அத்தையின் மருமகள் அம்பிகா கிளம்பும் தருவாயில் ஒரு புதிய சிம்மைக் கொடுத்து அதைப் பயன்படுத்துமாறு கூறியதும் நினைவுக்கு வர, இருக்கும் கவலை போதாதென்று முன்னமே வருத்திய கவலையும் சேர்ந்துகொண்டது.

விதி விளையாடும் விளையாட்டில் இன்னும் என்னவெல்லாம் திருப்பங்களைச் சந்திக்க நேரிடுமோ என்ற எண்ணமே ஆயாசாமாக இருக்க, ஃபோனை அப்படியே வைத்துவிட்டு, அறையின் பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றாள் ராதிகா.

பால்கனி போல் சிறிதாக இல்லாமல் மொட்டைமாடித் தோட்டம்போல இருந்தது அந்த இடம். வாயிலில் இருந்து வெளியே வந்தவுடன் இருந்த வராண்டாவில் ஒரு பக்கம் சிப்பி வடிவில் வடிவக்மைக்கப்பட்ட ஒரு தாழ்வான மூங்கில் சோபாவும், இன்னொரு பக்கத்தில் ஒரு ஊஞ்சலும் இருந்தது. தோட்டத்தின் ஒரு ஓரத்தில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது, அதனடியில் தேங்கியிருந்த நீரில் சில கோய் மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. தோட்டம் முழுவதும் பச்சைபசேலென புல்தரையும், ஆங்காங்கே திட்டமிட்டு சரியான இடங்களில் பூச்செடிகளும் க்ரோட்டன்சும் நடப்பட்டு, பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருந்தது. மற்றொரு மூலையில் தொங்கும் தாவரங்களுடன் கூடிய கசிபோ எனப்படும் ஒரு சிறிய மண்டபம் அமைக்கப்பட்டு, உட்கார்வதற்கான பெஞ்சும் போடப்பட்டிருந்தது.

மெதுவாக அந்தத் தோட்டத்தின் ஊடாக நடந்து சென்ற ராதிகா எதிரே இருக்கும் கடலைப் பார்க்கும்படியாக அமைக்கப்பட்டிருந்த கசிபோவில் உள்ள பெஞ்சில் சென்று அமர்ந்துகொண்டாள். திருமணமான நாளிலிருந்து இப்போதுதான் தனியாக உட்கார்ந்து சிறிது யோசிக்கும் நேரம் கிடைத்திருந்தது ராதிகாவிற்கு. கண்ணெதிரே தெரிந்த ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகளைப் போலவே அவளுடைய மனமும் ஓய்வொழிச்சலின்றி அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஆழ்ந்த பெருமூச்சுக்களை விட்டு தன்னைத்தானே சமன்படுத்திக் கொண்டவள், தன்னிலையை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்.

எந்த நிலைக்குமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கும் ரகமில்லை அவள். எந்த சிக்கலுக்கும் ஒரு தீர்வு இருக்கும் என்று தீர்க்கமான நம்பிக்கை கொண்டவள், காரணமில்லாமல் காரியமில்லை என்பது ராதிகாவின் அசைக்கமுடியாத நம்பிக்கை. சிரிப்போ அழுகையோ கோபமோ பாசமோ எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவளும் இல்லை, வயதுக்கு மீறிய பக்குவமும் பண்பும் நிறைந்த பெண் ராதிகா.

ஆனால் இப்போது அவளுக்கு வந்திருக்கும் சிக்கலுக்கு தீர்வு காணமுடியாமல் திக்குமுக்காடிப் போயிருந்தாள் அவள். மனிதர்களால் ஏற்படும் சிக்கலுக்குத் தீர்வு காணலாம், மனிதர்களே சிக்கலாக இருக்கும்போது எப்படித் தீர்வு காண்பது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொரு நாளையும் அது வரும்பொழுது வரும்படி எதிர்கொள்ளலாம் என்று ஒருவாறாக முடிவெடுத்து, நிம்மதியாக கீழே இறங்கிச் சென்று சமையலறையில் இரவு உணவு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் சென்று இணைந்துகொண்டாள்.

மனதில் ஏகப்பட்ட குழப்பங்களுடன் அவனுடைய ராயல் என்பீல்ட் பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பரத், இலக்கென்பதே இல்லாமல் மனம் போன போக்கில் வண்டியைச் செலுத்தினான். வண்டியின் கட்டுப்பாடு பரத்தின் கையில் இருந்தாலும், மனமென்னும் குதிரையின் கடிவாளம் அவன் வசம் இல்லை. எல்லா திக்குகளிலிருந்து அலைமோதிய எண்ணங்களை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், தன்னை எதிர்நோக்கியிருக்கும் சிக்கல்களுக்கு உடனடியாக ஒரு தீர்வைக் காண்பது இயலாத காரியம் என்ற ஒரு முடிவிற்கு வந்திருந்தான். பாலம் வரும்போது அதைக் கடந்துகொள்ளலாம், இப்போதே அதைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்று முடிவெடுத்தவன், வீட்டை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்து வண்டியை வீடுநோக்கித் திருப்பினான்.
 
Aparna

Author
Author
Messages
2,690
Likes
10,080
Points
353
Location
Queen city
#5
Nice song selection, apt for the situation..bharath ah parthu pada thonaradhu.."Ena kavi paadinalum undan ulam iranga vilai..inum Ena sodanaiya..muruga(bharatha..)" nu.. chattunu lakshmiya marakaradu enbathu rombave kashtam..that too they had a baby ..in the same time he needs to justify radhika..the innocent soul, who had not done any mistake except marrying him.. happy that radhika didn't behave childish and creating a scene for the photo.. it's just fingers crossed situation.. it's about the journey of their emotions.. I am eagerly waiting to travel with them...nice meeting you after a long gap Shiva.. hope everything is fine at your end...do come with such beautiful updates when time permits and asap as we are waiting for these guys n ur words..best wishes ?
 
Messages
1,183
Likes
2,537
Points
155
Location
chennai
#9
எந்த நாளைக்கும் ஈன்றருள் தாயென
வந்த சீரருள் வாழ்கஎன் றுன்னுவேன்
சிந்தை நோக்கந் தெரிந்து குறிப்பெலாந்
தந்து காக்குந் தயாமுக்கண் ஆதியே

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, குமரா
உமையாள் மைந்தா, மறை நாயகனே

கொடியே இளவஞ்சிக் கொம்பே
எனக்கு வம்பே பழுத்த படியே
மறையின் பரிமளமே பனி மால் இமயப் பிடியே
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

நானிலத்தில் பல பிறவி எடுத்து
திண்டாடினது போதாதா தேவி உந்தனுக்கு

நான் ஒரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு

அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா

ஒருபுகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுள்ளம் இறங்காதா தேவி உந்தனுக்கு

நான் ஒரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு...

(கர்நாடக சங்கீதம் கேட்பதற்குப் பொறுமை உள்ளவர்கள் இந்தப் பாடலை இந்த லிங்கில் கேட்கலாம். மனதை உருக்கும் பாடல், மிகவும் அருமையாகப் பாடப்பட்டிருக்கிறது, நிச்சயமாக ராதிகாவின் மனக்குமுறலுக்கு இந்தப் பாடல் ஒரு உருவம் கொடுக்கும்)

ராதிகா பாட்டுப் பாடும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பூஜையறையில் கூடிவிட்டனர். அவள் நெக்குருகிப் பாடிய பாடல் அனைவரின் மனதையும் தொட்டிவிட்டிருந்தது. பிறந்த வீட்டினரின் பிரிவால் ராதிகா மனவருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டனர் அனைவரும்.

ராதிகாவின் மனமுருக்கும் இந்தப் பாடல் அம்பிகையின் உள்ளம் தீண்டியதோ என்னவோ, தீண்டவேண்டியவனின் மனதை நிச்சயமாகத் தீண்டியிருக்க வேண்டும். அவளுடைய பாடலின் வரிகள் அவனுடைய உள்ளம் தைத்திருக்க வேண்டும். வெளியே போகலாம் என்று பைக் சாவியை எடுத்துக்கொண்டு மாடிப்படி இறங்கிக்கொண்டிருந்தவன், ராதிகாவின் பாடல் கேட்டு அப்படியே மாடிப்படியில் உட்கார்ந்துவிட்டான்.

ராதிகா அம்பிகையிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் தன்னிடமே கேட்கப்பட்டது போல் உணர்ந்தான் பரத். எந்தத் தவறுமே செய்யாமல் சூழ்நிலைக் கைதியாய் தன் வாழ்வில் வந்திருக்கும் இந்தப் பெண்ணுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் என்ற கேள்வி அவன் முன்னால் பூதாகாரமாய் எழுந்து நின்று தாண்டவமாடியது.

பிரளயம் வெளியில் இருந்தால் அதிலிருந்து தப்பி ஓடலாம், மனதுக்குள் உண்டாகிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் பிரளயத்திலிருந்து தப்பி எங்கே ஓடமுடியும்?

ராதிகாவின் கேள்விகளுக்கெல்லாம் விடையானவனே விடையறியா சிக்கலறைக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான்.

பாடலைப் பாடிமுடித்த ராதிகா எழ மனமின்றி பூஜையறையிலே உட்கார்ந்திருக்க, அவளுடைய பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த துளசி மெதுவாக அவளுடைய தோளைத் தட்டி அவளின் மோனத்தைக் கலைத்தாள். அப்பொழுதுதான் அங்கு குடும்பத்தினர் அனைவரும் குழுமியிருப்பதை உணர்ந்த ராதிகா, யாரும் பார்த்துவிடும் முன்னரே கண்களைத் துடைத்துக்கொண்டு, நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்துகொண்டாள்.

தாயறியா சூலில்லை என்ற கூற்றை உண்மையாக்குவதுபோல், ராதிகாவின் கலங்கிய கண்களைக் கண்டுகொண்ட பர்வதம், ராதிகாவின் முதுகில் ஆறுதலாகத் தட்டி, “என்னமா, அம்மா அப்பா நியாபகமா இருக்கா? அவாள்லாம் ஊருக்குப் போய் சேர்ந்துட்டாளான்னு ஃபோன் பண்ணிக் கேளேன், அவாளோட குரலைக் கேட்டால் உனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்,” என்றார்.

ராதிகாவுக்குமே அம்மாவின் குரலைக் கேட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, சரி என்பது போல் தலையாட்டிவிட்டு தனது ஃபோனை எடுக்க மாடிக்குச் செல்ல முற்பட்டாள்.

அங்கு அவளுடைய பாடலைக் கேட்டு வெறித்த பார்வையுடன் சிலையாய்ச் சமைந்து மாடிப்படியில் அமர்ந்திருந்த பரத்தை எதிர்பார்க்காமல் திடுக்கிட்டவள், எதுவும் பேசாமல் அவனைச் சுற்றிக்கொண்டு மாடியேறிச் சென்றுவிட்டாள்.

ராதிகா அவனெதிரில் வந்து நின்றதை அவளுடைய கொலுசுகளின் சலனம் உணர்த்தினாலும், அவளை நிமிர்ந்து பார்க்காமலே உட்கார்ந்திருந்த பரத்தும், ராதிகா தன்னைக் கடந்து சென்றதும் எழுந்து வெளியில் சென்றுவிட்டான்.

மாடியில் அவர்கள் அறைக்குச் சென்று தனது ஃபோனை கைப்பையிலிருந்து வெளியில் எடுத்த ராதிகாவிற்கு அப்போதுதான் தனது பழைய சிம்கார்டை உடைத்து குப்பைத்தொட்டியில் போட்டதும், அதற்கு பதிலாக அத்தையின் மருமகள் அம்பிகா கிளம்பும் தருவாயில் ஒரு புதிய சிம்மைக் கொடுத்து அதைப் பயன்படுத்துமாறு கூறியதும் நினைவுக்கு வர, இருக்கும் கவலை போதாதென்று முன்னமே வருத்திய கவலையும் சேர்ந்துகொண்டது.

விதி விளையாடும் விளையாட்டில் இன்னும் என்னவெல்லாம் திருப்பங்களைச் சந்திக்க நேரிடுமோ என்ற எண்ணமே ஆயாசாமாக இருக்க, ஃபோனை அப்படியே வைத்துவிட்டு, அறையின் பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றாள் ராதிகா.

பால்கனி போல் சிறிதாக இல்லாமல் மொட்டைமாடித் தோட்டம்போல இருந்தது அந்த இடம். வாயிலில் இருந்து வெளியே வந்தவுடன் இருந்த வராண்டாவில் ஒரு பக்கம் சிப்பி வடிவில் வடிவக்மைக்கப்பட்ட ஒரு தாழ்வான மூங்கில் சோபாவும், இன்னொரு பக்கத்தில் ஒரு ஊஞ்சலும் இருந்தது. தோட்டத்தின் ஒரு ஓரத்தில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது, அதனடியில் தேங்கியிருந்த நீரில் சில கோய் மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. தோட்டம் முழுவதும் பச்சைபசேலென புல்தரையும், ஆங்காங்கே திட்டமிட்டு சரியான இடங்களில் பூச்செடிகளும் க்ரோட்டன்சும் நடப்பட்டு, பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருந்தது. மற்றொரு மூலையில் தொங்கும் தாவரங்களுடன் கூடிய கசிபோ எனப்படும் ஒரு சிறிய மண்டபம் அமைக்கப்பட்டு, உட்கார்வதற்கான பெஞ்சும் போடப்பட்டிருந்தது.

மெதுவாக அந்தத் தோட்டத்தின் ஊடாக நடந்து சென்ற ராதிகா எதிரே இருக்கும் கடலைப் பார்க்கும்படியாக அமைக்கப்பட்டிருந்த கசிபோவில் உள்ள பெஞ்சில் சென்று அமர்ந்துகொண்டாள். திருமணமான நாளிலிருந்து இப்போதுதான் தனியாக உட்கார்ந்து சிறிது யோசிக்கும் நேரம் கிடைத்திருந்தது ராதிகாவிற்கு. கண்ணெதிரே தெரிந்த ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகளைப் போலவே அவளுடைய மனமும் ஓய்வொழிச்சலின்றி அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஆழ்ந்த பெருமூச்சுக்களை விட்டு தன்னைத்தானே சமன்படுத்திக் கொண்டவள், தன்னிலையை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்.

எந்த நிலைக்குமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கும் ரகமில்லை அவள். எந்த சிக்கலுக்கும் ஒரு தீர்வு இருக்கும் என்று தீர்க்கமான நம்பிக்கை கொண்டவள், காரணமில்லாமல் காரியமில்லை என்பது ராதிகாவின் அசைக்கமுடியாத நம்பிக்கை. சிரிப்போ அழுகையோ கோபமோ பாசமோ எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவளும் இல்லை, வயதுக்கு மீறிய பக்குவமும் பண்பும் நிறைந்த பெண் ராதிகா.

ஆனால் இப்போது அவளுக்கு வந்திருக்கும் சிக்கலுக்கு தீர்வு காணமுடியாமல் திக்குமுக்காடிப் போயிருந்தாள் அவள். மனிதர்களால் ஏற்படும் சிக்கலுக்குத் தீர்வு காணலாம், மனிதர்களே சிக்கலாக இருக்கும்போது எப்படித் தீர்வு காண்பது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொரு நாளையும் அது வரும்பொழுது வரும்படி எதிர்கொள்ளலாம் என்று ஒருவாறாக முடிவெடுத்து, நிம்மதியாக கீழே இறங்கிச் சென்று சமையலறையில் இரவு உணவு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் சென்று இணைந்துகொண்டாள்.

மனதில் ஏகப்பட்ட குழப்பங்களுடன் அவனுடைய ராயல் என்பீல்ட் பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பரத், இலக்கென்பதே இல்லாமல் மனம் போன போக்கில் வண்டியைச் செலுத்தினான். வண்டியின் கட்டுப்பாடு பரத்தின் கையில் இருந்தாலும், மனமென்னும் குதிரையின் கடிவாளம் அவன் வசம் இல்லை. எல்லா திக்குகளிலிருந்து அலைமோதிய எண்ணங்களை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், தன்னை எதிர்நோக்கியிருக்கும் சிக்கல்களுக்கு உடனடியாக ஒரு தீர்வைக் காண்பது இயலாத காரியம் என்ற ஒரு முடிவிற்கு வந்திருந்தான். பாலம் வரும்போது அதைக் கடந்துகொள்ளலாம், இப்போதே அதைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்று முடிவெடுத்தவன், வீட்டை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்து வண்டியை வீடுநோக்கித் திருப்பினான்.

Nice update
 
Advertisement

Latest Episodes

Advertisements

Top