• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய் தோழர் தோழிகளே இன்றோடு நான் இந்த தளத்தில் கால் பதித்து :unsure::unsure::unsure: கை தானே பதிக்க முடியும். சரி கை பதித்து ஓராண்டு ஆகுது. இன்று எபி குடுக்கலன்னா எப்படி? அதான் வந்துட்டேன் ட்ரீடோட. படித்து ட்ரீட் எப்படி இருக்கிறது என்று சொல்லிட்டு போங்க. அப்படியே கடைசில இருக்குற அந்த லைக்க ஒரு கிளிக் ப்ளீஸ் :love::love::love::love::love:

[பின் குறிப்பு: இனி வாரம் ஒருமுறை தான் எட்டிப் பார்க்க முடியும் தோழமைகளே. நாளை முடியுமா என்று தெரியவில்லை அதனால் மனிச்சு...:(:(:(]

அப்புறம் ஹீரோ ஹீரோயின் படம் கேட்டிங்க போடுறேன். படம் பார்த்து படிக்குறவங்க படிங்க. பிடிக்காதவங்க இதை அப்படியே விட்டுட்டு உங்க கற்பனையில் வரதை வைத்து படிங்க. ப்ரோப்ளம் சால்வ் ;););)

IMG_20190504_193410.jpg

மழை - 11

போட்டோவை பதிவேற்றியதும் போன் ஆப் ஆகிவிட்டது. ‘வீட்டுக்கு போய் சார்ஜ் போடணும்’ என்று எண்ணிக்கொண்டு அரசனைப் பார்த்தாள்.

அவனோ சீட்டில் கண்மூடி சாய்ந்திருந்தான். மதி ஒன்றொன்றும் பார்த்துப் பார்த்து செய்ய இவனிற்கு காதல் வராமல் ‘தனக்கு ஒன்றும் தெரியவில்லையே எப்படி வாழ போறோம்?’ என்றுதான் மனம் அரற்றியது. யாருக்கும் தெரியாமல் மீண்டும் காட்டிற்கு சென்றுவிடுவோமா? என்ற நிலையில் இருந்தான். அவனிற்கு அங்கிருக்கும் காற்றைக் கூட சுவாசிக்க முடியவில்லை. நமக்கு எப்படி மலைப்பகுதிக்கு சென்றால் சுத்தமான காற்றுக்கு மனம் இதமாகுமோ அது போல் தானே அவனிற்கும் இந்தக் காற்றுச் சுவாசித்து மனம் பாதிக்கும்.

வேறு வேலை இல்லாததால் மதி அவனை தன் குறுகுறு விழிகளால் ஆராய அதாவது சைட் அடிக்க, அவனின் தலைமுடி தோள் தொடுவதைப் பார்த்து, “அச்சோ மறந்துட்டேனே...” என்று தலையில் அடித்தாள்.

அதில் அரசன் தன் சிந்தனை கலைந்து எழ, “இன்னும் ஒன்னே ஒன்னு பண்ணனும் மாமா. வீட்டுல எல்லாரும் நம்மளைப் பார்க்க தான் வருவாங்க. அங்க இப்படி போனா நல்லவா இருக்கும்?” என்று அவனின் முடியை தொட்டுக் காமித்தவள், “இது வரை வெட்டிக்கலாம் என்று பின்கழுத்தைத் தொட்டு அளவு சொன்னாள்.

அரசனும் கடையில் பெரும்பாலான ஆடவரை பார்த்திருந்தானே. தான் மட்டும் தனித்து தெரிய வேறு வழியின்றி சம்மதித்தான். நல்ல வேலை முடியை தோள் வரை வளர்த்து திரிபவர்கள் இவன் கண்ணில் படவில்லை.

முதலில் தாத்தாவின் செல்பேசியில் இருந்து தாயிடம் கூறி அனுமதி வாங்கினாள். பின் செல்லும் வழியில் உள்ள பிரபல பியுட்டி பார்லரின் அருகில் காரை நிறுத்தச் சொல்லி அவனின் கைபிடித்து இழுத்துச் செல்ல, அப்போது தான் அரசன் இன்று அவளின் நடவடிக்கை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான். இதுவரை அவள் துடிப்பானவள், உற்சாகமானவள் என்று நினைத்திருந்தாலும் இன்று அதனையும் மீறி இன்று நெருக்கம் அதிகமாக இருப்பதாக தோன்றவும் கையை உருவி தானே வருவதாக கூறி விலகினான்.

அவன் விலகியதும் மதி கேள்வியாக பார்க்க, அவன் சற்று சங்கடமாக வரவும்தான் தன் தொடுகை அவனை சங்கோஜப்படுத்தியதை உணர்ந்தாள். ‘சோ ஸ்வீட் மாமோய்’ என்று மனதினுள் எண்ணியவள் வெளியே ஒன்றையும் காட்டிக்கொள்ளாமல் அங்கிருப்பவரிடம் அரசனுக்கு செய்ய வேண்டியதைக் கூறி காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்தாள்.

அவனை கண்ணாடியைப் பார்த்து இருக்கும் இருக்கையில் அமரச் செய்து ஜாக்கெட்டை அணிவித்து குளிர்ந்த நீரை முடியில் ஸ்ப்ரே செய்து கரக் கரக் என்று வெட்டத் தொடங்கினார் முடி அலங்கரிப்பவர். அந்த சத்தத்தில் அரசனுக்குத் தூக்கம் சொக்கியது. அவன் கடினப்பட்டு கண்ணை மூடாமல் அமர்ந்திருக்க அவனையும் மீறி அவன் தூங்கும்முன் பாவம் பார்த்தோ இல்லை வேலை முடிந்ததாலோ சீப்பால் தலையைச் சீவி ஜாக்கெட்டை கழற்றி உதறினார்.

ஹப்பாடி என்று அரசன் நிமிரவில்லை அதற்குள் மீண்டும் அதைப் போர்த்தினார். அரசன் தன்னைப் பார்க்காமல் கண்ணாடி வழியாக பின்னால் அமர்ந்திருந்த மதியை பார்த்தான். அவள் அங்கிருக்கும் பேப்பரைப் பார்த்தாளே ஒழிய இவனுக்கும் பக்கமே திரும்பவில்லை.

அதற்குள் கையில் ட்ரிம் செய்ய தேவையான பொருட்களோடு அரசனின் முகத்தில் கை வைக்க அவர் செய்ய போவதை உணர்ந்து, “இல்லை வேணாம். இதுவே போதும்” என்று கூறி எழுந்துவிட்டான்.

“மேடம்” என்று அரசன் எழுந்ததும் அவர் மதியை அழைக்க, அவளுக்கு பார்த்ததும் புரிந்தது என்ன நடந்திருக்கும் என்று. இதற்கு மேல் பேச தெம்பில்லாமல் பார்வையால் கெஞ்சினாள் போய் உட்காரும்படி. அவன் கேட்காமல் ஜாக்கெட்டை கழட்ட முயற்சிக்க எழுந்து வந்தவள், “மாம்ம்மா... ப்ளீஸ் சீக்கிரம் போகணும் உங்க தாடிய ஒன்னும் பண்ண மாட்டங்க. ஜஸ்ட் அங்க இங்க ஸ்டைல் பண்ணி விட்ருவாங்க” என்று கூறியவாறே தோளைப் பிடித்து உட்கார வைத்து முடியும்வரை அருகிலேயே நின்றுக்கொண்டாள். ட்ரிம் செய்த தாடியில் தன்னைக் கண்டவனுக்கு ஒரு நொடி நம்பத்தான் முடியவில்லை.

அவனுக்கே ஆச்சரியமாக இருக்க தொட்டு பார்த்து அப்படியும் இப்படியும் திரும்பி பார்க்க மதி, “எல்லாம் நல்லா தான் இருக்கு” என்று கூறி பணம் செலுத்தி அங்கிருந்து கிளம்ப அவளைப் பின்பற்றினான் இவன்.

காரில் ஏறியதில் இருந்து அரசனின் புது தோற்றத்தில் மேலும் மேலும் மயங்கினாள் வான்மதி. “அச்சோ மாமா மயக்குறாரே” என்று வேறு முனகிக்கொண்டாள். முன்னர் அடங்கியிருந்த முடி இப்போது அடங்காமல் அலைபாய அதைப் பிடித்து அடங்க வைக்க முயற்சி செய்து முடியாமல் மதியை ‘என்னதிது?’ என்பது போல் பார்த்தான்.

அதில் வந்த சிரிப்பை அடக்கியவள், “இப்படி தள்ளுங்க” என்று அவன் கலைத்து முன்னால் போட்ட முடியை ஓரமாகத் தள்ளி சரி செய்தாள். காரில் நடப்பதை கண்டும் காணாமல் ஓட்டும் தாத்தாவிற்குக் கூட மதியின் மனது புரிந்தது. அரசனுக்குத் தான் புரியவில்லை. அவன் எங்கே இதை கவனிக்கும் மனநிலையில் இருந்தான்? இடமாற்றம் மொழிமாற்றம் செயல்மாற்றம் என அவனிற்குள் சிக்கித் தவிக்கையில் மதியின் மனமாற்றமா தெரியப் போகிறது?

ஆனால் இது எதனையும் அவன் யாருடனும் பகிர்ந்துக்கொள்ளவில்லை. அரண்மனைக்கு வந்ததும் அரசனின் இப்போதைய தேவைக்கு மட்டும் வேண்டிய உடையை எடுத்து ஒரு பையில் வைத்தாள். கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்து இறங்க தயங்கியவனை முதுகில் ஒற்றை கைவைத்து அவசர அவசரமாக வெளியில் இருக்கும் படிக்கட்டு வழியாக மாடி ஏறி பால்கனி வழியாக அறை இருக்குமிடம் வந்தாள்.

அரசனிற்கு அப்போதுதான் இப்படி ஒரு வழி இருப்பதே தெரிந்தது. எதிர் எதிர் அறையில் இருவரும் தங்கியிருந்தனர். மேலே ஆறு அறைகள் இருக்க மதிக்கு பக்கத்து அறையில் கீதா – அழகேசனும் அரசன் அவர்களின் எதிர்புறமும் மீதம் மூன்று அறைகள் பயன்படுத்தாமல் பூட்டி வைத்தும் இருந்தனர்.

“இந்தாங்க குளிச்சி இதை போட்டுட்டு வாங்க” என்றவள் சும்மா இல்லாமல், “மாமா குளிக்க தெரியுமா இல்லை நான் உதவி பண்ணவா?” என்று கண்ணடித்து கேட்டாள்.

அவள் கேள்வியில் அதிர்ந்து திரும்பியவன் பின் அவளின் குறும்பை உணர்ந்து “போடி...” என்று சிவந்த முகத்தை காட்டாமல் உள்ளே சென்று கதவடைத்தான்.

அவன் மறைத்தாலும் அது அவனையே பார்த்துக்கொண்டிருந்த மதியின் பார்வையில் விழுந்து விட, “மாமாக்கு வெட்கம் வந்துடிச்சி டோய்... என்ன நான் பண்ண வேண்டியதெல்லாம் மாமா பண்ணிட்டு போறாரு” என்று கூறி தலையில் செல்லமாக அடித்தவள் மறக்காமல் அவள் செல்லையும் அரசனின் செல்லையும் சார்ஜரில் போட்டுவிட்டு மனதில் தோன்றிய பாடலை வாய்விட்டு
பாடியபடி தயாராகத் தொடங்கினாள்.


கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா
ஒஹ் கொக்கரக்கோ சேவலா
கோழிக்கி நீ காவலா
நம்மோட கூட்டணிதான் ஆடும் மெர்சலா
ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அரசனுக்கு மெரூன் கலர் வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்ததால் தன்னிடம் இருந்த மெரூன் கலர் தாவணியை அணிந்துக்கொண்டாள். “இப்போதைக்கு ட்ரெஸ் மேட்ச். அப்புறமா நாம ரெண்டு பெரும் ஒருத்தர்க்கு ஒருத்தர் மேட்ச்” என்று அரசனை நினைத்துக் கண்ணாடியை பார்த்துக் கொஞ்சி வெளியே வர இன்னும் அரசன் அறைக்கதவு மூடியிருந்தது.

‘கீழே கிளம்பிட்டாங்களா?’ என்று நினைத்து ‘ச்ச ச்ச அவ்ளோ தைரியம் இன்னும் மாமனுக்கு வரல’ என்று வாரி, “மாமா” என்று கதவை நெருங்கித் தட்டினாள். உள்ளே தலைவழியாக மட்டுமே சட்டையை இதுவரை அணிந்திருந்ததால் பனியன் மட்டும் அணிந்து சட்டையை தலைவழியாக உள்ளே செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருந்தான் அரசன்.

மதி அழைக்கவும் சட்டையைக் கையில் வைத்து பனியனுடன் கதவைத் திறந்தான். “என்ன மாமா இன்னுமா சட்டைய போடல” என்று வினவியவாறு உள்ளே வந்தாள் மதி. “இல்லை இது தலைக்கு உள்ள போகல” என்று பட்டன் உள்ள சட்டையை காமித்துச் சொல்லவும், “மாமா அது இப்படி போடணும்” என்று நிமிடத்தில் பட்டனைத் திறந்து கையை நுழைக்கச் செய்து பட்டன் போட்டுவிட்டாள்.

கடைசியில் மேலே இரண்டு பட்டன் போடும்போதே நியாபகம் வந்து, “அப்போ அப்பா சட்டைய எப்படி போட்டீங்க” என்ற கேள்விக்கு “தலைவழியாகத் தான்” என்று பதில் கூறினான் அரசன். அது சற்று பெரிதாக இருந்ததால் தலைவழியாக போட்டிருக்கிறான் என்று புரிய கலகலவென நகைத்தாள் மதி.

அவள் நகைத்ததில் முகம் சுருக்க அவள் கையைத் தட்டிவிட்டுத் தானே போட முயற்சி செய்தான் அரசன். சில நிமிடங்களில் அவன் அதை முடித்து அடுத்த பட்டனில் கைவைக்கவும் அதுவரை கைகட்டி வேடிக்கை பார்த்த மதி அவன் கையை தட்டிவிட்டு தானே போட்டுவிட்டு காலரை சரி செய்தாள்.

அவன் அப்போதும் முகம் சுருங்கியிருக்க, “மாமா கோவமா? தெரியாம சிரிச்சிட்டேன்... சாரி சாரி” என்று காதைப்பிடித்து மன்னிப்பு கோர அவன் ஒன்னும் சொல்லாமல் செல்லவும், “அரசு மாமா நீங்க பேசாம போனா நான் வரமாட்டேன்” என்று அங்கேயே நின்றாள்.

தயங்கி அவளைப் பார்த்தவன் மெதுவே இட வலமாக தலையாட்டி “வா...” என்று அழைத்தான். அதில் மகிழ்ந்து அருகில் வந்தவள் “மாமான்னா மாமா தான். ஐ வான்ட் டு மேர்ரி யு மாமா” என்று சற்று முன் பாடிய பாடலின் ராகத்தில் அவனின் ட்ரிம் செய்த தாடையை பிடித்து ஆட்டி தன் மனதின் ஆசையை கூறிவிட, அவளின் கையை எடுத்தவாறு “என்ன மதி” என்று அவள் கூறியது புரியாமல் சலித்தான் அரசன்.

அதில் சட்டென்று சுதாரித்தவள், ‘அடியே பொறுமை பொறுமை. அவன் கொஞ்சம் தெளிஞ்ச பிறகு காதலை சொல்லுடி லூசு. இன்னும் படிப்பே முடிக்கல அதுக்குள்ள கல்யாணம் வேணுமாம் கல்யாணம்’ என்ற மனட்சாட்சியின் குரலில் “ஒன்றும் இல்லை கீழே கூப்பிட்டாங்க” என்று கூறி நகர்ந்தாள்.

இருவரும் ஒருவர் பின் ஒருவராக நடுக்கூடத்திற்கு வர அங்கே தகவல் தெரிந்து அனைத்து சொந்தங்களும் மீண்டும் கூடியிருந்தது. வேட்டியின் நுனியை பிடித்து அரசன் இறங்கி வர சக்திவேலை அறிந்தவர்களுக்கு ஆச்சரியம் எப்படி தந்தையை பார்த்தும் அறியாதவன் தந்தையின் நடை உடை பாவனையில் மிளிர்கிறான் என்று.

அங்கு மதி பிழைத்ததை விட சக்திவேலின் மகன் வரவே முக்கிய பேச்சாக இருக்க கிட்டதட்ட பலவருடங்களாக தொடர்பு விட்டுப் போன சொந்தங்களும் வந்திருந்தனர். அதில் முக்கிய சொந்தமாக வந்திருந்தவர் மதுரை ஜமின்தார் கலியபெருமாள். இவர் புனிதாவின் அண்ணன் சுருங்கச் சொல்லினால் நிலவரசனின் தாய்மாமன்.

தங்கை இறந்துவிட்டாள் என்று இருபத்தாறு வருடம் முன்பு வந்தவர் மீண்டும் இப்போது தான் அரண்மனையினுள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் தன் தங்கை மகனுக்காக.

கண் இமைக்காமல் தங்கை மகனை நோக்கியவர் அப்படியே அவன் அப்பாவை உரித்து வைத்திருக்கிறான் என்று எண்ணத் தவறவில்லை. அவர் மட்டுமே வந்திருந்ததால் தன் குடும்பத்தினரிடம் அவனைக் காண்பிக்க புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

அவனுடன் தான் யார் என்று கூறி அவனின் அம்மாவைக் குறித்து சிறிது பேசி விடைபெற கீதா சாப்பிட சொல்லியும், “இல்லம்மா இன்னொரு நாள் குடும்பத்தோட வந்து தங்கிட்டுப் போறோம். இப்போ மருமகனை பார்க்க தான் வந்தேன். கொஞ்சம் வேலை இருக்குமா வர்றேன்” என்று கூறி விடைபெற்றார்.

இதற்குள் தாயிடம் போன் எடுத்ததற்கு மாட்டி உறவினர் இருந்ததால் கொஞ்சம் கம்மியாக திட்டு வாங்கி தப்பித்திருந்தாள் வான்மதி.

அனைவரும் அரசனிடம் பேச நினைக்க கீதா அதற்கு வழிவிடாமல் சமாளித்துக்கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை அண்ணன் மகன் திரும்ப வந்துவிட்டான் அதுவே போதும். ஆனால் மற்றவர்க்கு அப்படி இருக்காதே. அதுவும் வம்பு பேசவென்றே எங்கும் எதிலும் ஒரு கூட்டம் இருக்க, அரசன் இத்தனை நாள் எங்கிருந்தான் எப்படி வந்தான் என்று தோண்டித்துருவினர். மதி டூர் போன இடத்தில் இவனைப் பார்த்ததாக கூறி அதற்கு மேல் இதைப்பற்றி பேச ஒன்றுமில்லை என்பது போல் விருந்து நடக்குமிடம் அழைத்துச் சென்றுவிட்டார்.

பக்கத்தில் இருந்தே பார்த்ததால் நிலவரசனின் முகத்தைத் தவிர வேறெங்கும் தன் பார்வையைத் திருப்பியிராத வான்மதி தூரத்தில் அவன் புன்னகையுடன் தாத்தாவிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டு அவனின் ஒட்டு மொத்த உருவத்தையும் மனதில் நிறைத்தாள். என்ன தான் அவனைப் பார்க்கக்கூடாது என்று நினைத்தாலும் தறிக்கெட்டு ஓடும் மனதை அடக்கத்தான் முடியவில்லை முதல்முதலாய் காதல் பூ பூத்த அந்த இளநெஞ்சத்திற்கு.

காரில் சென்றுக்கொண்டிருந்த கலியபெருமாள் வீட்டில் இருக்கும் தாயிடமும் தாராத்திடமும் அரசனைப் பார்த்ததைக் குறித்து சொல்லிக்கொண்டிருக்க அவரது இன்னொரு எண்ணில் இருந்து லண்டனில் எம்பிஏ படிக்கும் அவரது செல்லமகள் ரூபிணியின் அழைப்பு வந்தது. அவர்களிடம் அதைக் கூறி வைத்துவிட்டு மகளின் அழைப்பை ஏற்றார்.

எடுத்ததும், “அப்பா காலையில் நீங்க தான தினம் கூப்பிடுவீங்க. இன்னக்கி உங்க தங்கச்சி பையனை பார்த்த சந்தோசத்துல என்னை மறந்துட்டீங்க” என்று சிணுங்க, “அடடா அப்பா உன்னை மறப்பேன்னா. இப்போ தாண்டா அங்கிருந்து கிளம்புனேன். உனக்கு மெசேஜ் பண்ணிட்டு தான போனேன்” என்று சமாதானம் செய்தார்.

“ஹ்ம்ம்.. சரி நானும் சும்மா தான் கேட்டேன். ஆமா எப்படி இருக்காரு உங்க தங்கச்சி பையன்” என்று கேட்டுக்கொண்டே கல்லூரி கிளம்ப, “அவனுக்கென்ன அப்படியே ஜம்முன்னு அப்பாவை உரிச்சி வச்சிருக்கான்... எனக்கு தான் ரொம்ப பேச முடியல. ஈவினிங் மீட்டிங் வேற இருக்கு” என்று கூறி வருந்தியவர் பின் “அவனை உங்க கிட்டலாம் காமிக்க போட்டோ கூட எடுத்தேன் ஒரு நிமிஷம்” என்றவாறு அரசனின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் தட்டிவிட்டார்.

தந்தை கூறியதில் ஆர்வமாய் அதைப் பார்த்த ரூபிணி தன்னையும் மீறி, “அப்பா ஹி இஸ் சோ ஹண்ட்சம்” என்று கூறவிட, இதுவரைக்கும் அவளிற்கு அனுப்பிய பத்திற்கும் மேற்ப்பட்ட மாப்பிள்ளை போட்டோக்களைப் பார்த்தும் அவள் கூறாத வார்த்தையை அரசனைப் பார்த்ததும் கூறியதைக் கேட்டவர் “ஹாஹா... பின்ன அவன் யாரு என் தங்கச்சி மகனாச்சே” என்றார். பின் இன்னும் சிறிதுநேரம் பேசி வைத்தவர் முகம் ஏதேதோ எண்ணிப் புன்னகையுடன் ஒளிர்ந்தது.

அரசனை இவரைத் தவிர இன்னொருவனும் புகைப்படம் எடுத்திருந்தான். அவனும் அதை வேறு ஒருவர்க்கு அனுப்பி விருந்து உண்டு சென்றுவிட, அவன் அனுப்பிய புகைப்படமானது ஏற்காட்டில் பெரும்பாலான ஏக்கரை ஆக்கிரமித்த ராயல் எஸ்டேட்டினுள் இருக்கும் பங்களாவில், குடும்பத்துடன் உணவருந்தி முடித்து நீரைப் பருகியபடி பார்த்த ஐம்பது வயது நெருங்கிய சுதர்சனை புரையேறச் செய்தது.

மழை வரும்...

உன்னைப் பார்க்க எண்ணி வளர்ந்ததும் போதும்

நீ பார்க்காததால் தேய்ந்ததும் போதும்

இனி நீ பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கவலையில்லை.

உன்னுடன் எப்போதும் நானிருக்க

மழையாக நான் வரவா?

எபி பாட்டு.. ??

 




Last edited:

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு அக்கா...அரசன் பாவம்தான்..எல்லாமே புதிது என்றால் மனம் சிரமப்படும்தானே ஏற்க....மதி இது ரொம்ப தப்பு அந்த புள்ளையே எல்லாம் புதுசா இருக்கவே மிரண்டு போய் இருக்கு...அவர்கிட்ட போய் பாட்டு வேற பாடுறே...பயந்து ஓடிருவாரு பார்த்துக்க....ரூபிணி நீ வில்லியா ஆகிடாத மா....சுதர்சன் நீங்க சீக்கிரம் தன் வினை தன்னைச் சுடும் என்பதை உணரப் போகிறீர்கள்...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top