General Audience Site Day 2020 வாசகர் புனைவுக்கதை போட்டி (Fan Fiction Contest) முடிவுகள்

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
நட்பூஸ் வந்துட்டேன்...

வாசகர் புனைவுக் கதைப் போட்டி முடிவுகள் பற்றிய அறிவிப்பு

SM தளத்தின் சைட் டே 2020 கொண்டாட்டத்தினை முன்னிட்டு, போட்டிகள் பல நடைபெற்று, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வாசகர் புனைவுக் கதைப் போட்டி பற்றிய முடிவுகளை அறிவிக்க எண்ணி வந்தேன்.

முடிவுகளை அறிவிக்க எண்ணி, ஒரு முடிவோடு வந்த என்னை மொத்தமே இரண்டு நபர்கள் மட்டுமே பங்கு கொண்டு, பதறிக் கதறியிருந்த மனதை இலகுவாக்கி விட்டனர்.

‘ஏன்னா... எத்தனை பேரு பார்ட்டிசிபேட் பண்ணாங்கனு தெரியாம ஒரு பாதுகாப்பு கருதி உடம்பு முழுக்க எண்ணைய தடவிக்கிட்டு வந்துட்டேன்.


நம்ம சைட்டுல இருக்கிற வாசகர்களான அனைவரையும் இங்க எதிர்பார்த்து வந்தேன்.
ஆழி கடல்னு நினைச்சு வந்த இடத்துல சின்ன குளம்னு தெரியல.
ஏன்னா ரெண்டு பேரு தான் பார்ட்டிசிபண்ட்ஸ்


நான் ஏன் அப்டி வந்தேன்னு யோசிக்காதிங்க.... எல்லாம் ஒரு பயந்தான்'வாங்க டியர்ஸ், வந்த ரெண்டு எபிய பாப்போம்.

நம் தளத்தில் வெளிவந்த அகிலா கண்ணன் அவர்கள் எழுதிய “லவ்லி லவி” க்கு, பிரேம்ஸ் எழுதிய எபிலாக்கை முதலில் நமது பார்வைக்கு எடுத்துக் கொள்வோம்.

பதிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போது, நமது தளத்தின் புதிர் ராணி அகிலா கண்ணனின் “லவ்லி லவி”, வாசகர்கள் மத்தியில் உண்டாக்கிய எதிர்பார்ப்புகள் ஏராளம். அதில், பல்லவி எனும் பெண்ணின் குணாதிசியங்களை அருமையாக சித்தரித்திருப்பார், நம் அகிலா.

வாசகர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா போல நமக்கு பதிவுகள் மூலம் தந்து திருப்தி செய்திருந்தார் அகிலா என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆயினும், ஃபேன் ஃபிக்சன் போட்டியின் வாயிலாக, எபிலாக் பிரேமாவின் கைவண்ணத்தில் குஸ்காவிற்கும், சிக்கன் ஃபிரைட்ரைஸூக்கும் இடைப்பட்ட ஒரு சிறப்பான “குசிக் ஃப்ரை”யாக வழங்கப்பட்டுள்ளது.

எபியில் லவியைப் படிக்கும் போதே மனம் குபீரென மகிழ்கிறது. லவியைப் படித்து... சாரி எபியைப் படித்து அதன் சுவையறிந்து, அது பற்றிய விமர்சனங்களை விலாவாரியாக விவாதித்து மகிழ்ந்து வருகின்றனர்.

அருமையாக, சுவையுடன், மணம் பரப்பும் வகையில் முடிவு தந்து வாசகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி திருப்தியுறச் செய்துள்ளது இந்த எபிலாக் என்பதை நானும் ஒரு வாசகியாக உளமார உணர்ந்தேன்.

உணவின் சுவை எப்படி உணவைச் சமைப்பவர்களின் மனம், குணம், ஆற்றல் சார்ந்து அதிகரிக்கிறதோ, அதே போன்று, இக்கதையின் எபிலாக் அருமையாக வந்திருப்பதற்கு நமது தளத்தின் வாசகத் தோழி, பிரேமலதாவின் தமிழும், எழுத்தும் ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது. மறக்கவும் முடியாது. அப்படி ஒரு அருமையான எபி.

பரவச எபி தந்த பிரமேலதா அரவிந்தனுக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளை உளமார, இந்த தளத்தின் சார்பாகவும், வாசகர்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.அடுத்து மற்றுமொரு ஃபேன் ஃபிக்சன் போட்டிக்கான எபிலாக்.

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டிவியில் திரைப்படம் போடுவது போல, நம் SM தளத்தில் முதல் முறையாக அழகியாரின் கை வண்ணத்தில் உருவான “ஏய், நீ ரொம்ப அழகா இருக்கே”, என்ற குறுநாவலுக்கு, நமது தளத்தின் வாசகர் சுவிதா அவர்கள் எழுதிய எபி அருமையாக உள்ளது.

யாருக்கும் தோன்றாத என்பதை விட, அழகியாருக்கு எபிலாக் எழுதும் தைரியம் வராத வாசகர்கள் மத்தியில் ஆரோக்கியமான அருமையான ஒரு முயற்சி, ஒரு வாய்ப்பு நம் சுவிக்கு தோன்றி, அதை அருமையாகச் செயல்படுத்தியிருப்பது.

ஆனாலும் அழகியார் தந்திருந்தால் அதில் போதை வஸ்து ஏதும் இன்றி நம்மை மயங்கச் செய்திருப்பார் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஆனால், இது வேறு ரகம். ஆனாலும் அருமையாக தந்து நம்மை ஆச்சரியப்பட வைத்தார் சுவி.

நன்றாக இருந்தது என்று ஒற்றை வரியில் சொல்ல முடியாது. காலைக் குளிரில் ஸ்வெட்டர் இல்லாமல் நடைபயின்றவனுக்கு, கிடைக்கும் அருமையான சுவையான நறுமணம் தரும் சூடான ஏலம், இஞ்சி கலந்த ஊட்டித் தேனீர் தரும் புத்துணர்ச்சி போன்று அருமையாக இருந்தது.

தங்களின் எழுத்து அருமையாக இருந்தது சுவிதா.

புதுவித எபி தந்த சுவிதா அவர்களுக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளை உளமார, இந்த தளத்தின் சார்பாகவும், வாசகர்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலந்து கொண்ட இருவரும், அவரவர் பாணியில், நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கியமைக்கு வாழ்த்துகளை மட்டும் கூறிக் கொள்கிறேன்.

மேலும், மேலும் இது போன்ற புதிய ஆக்கப் பூர்வமான விடயங்கள் மூலம் நம்மை சந்தர்ப்பம் கிடைக்கும் போது தங்களின் எழுத்துக்களால் ஆனந்தமடையச் செய்ய வேண்டுமென அன்போடு இரு தோழிகளையும் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

நன்றி!
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#5
சூப்பர் சரோ அந்த வாடகை கைகுட்டை யாருக்கு அதை சொல்லுங்கள் முதலில்
யாரு வாடகை கொடுக்கறாங்களோ அவங்களுக்கு அந்தக் கைக்குட்டைய கைல கொடுத்துவிடலாம் மணிக் கா:p :love: :LOL: :ROFLMAO: இல்லைனா உங்க விருப்பம் போல செய்யலாம் :unsure:
 
#8
பிரியாணி போட்டில எத்தனை பேரு கலந்துக்கிட்டோம்? இப்போ என்னாச்சு? :unsure::unsure::unsure:

அடடே...!!!!! நிறைய பேரு ஆத்தர் ஆகிட்டாங்கல்ல???;);):giggle:

போட்டி அதிகமா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

@Suvitha மதனி... & @Premalatha ப்ரேமி... வாழ்த்துகள்..
 
Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#9
அலசி ஆராய்ந்து, பிய்த்து பீராய்ந்து அற்புதமாக எடுத்துரைதீர்கள் சரோ டாலி..???
எபிலாக் தந்தவர்கள், எழுத்தாளர்களாக
விரைவில் தளத்தில் வலம் வருவார்கள் என்ற ஆவலுடன் ?????
 
Manikodi

Brigadier
SM Team
#10
அலசி ஆராய்ந்து, பிய்த்து பீராய்ந்து அற்புதமாக எடுத்துரைதீர்கள் சரோ டாலி..???
எபிலாக் தந்தவர்கள், எழுத்தாளர்களாக
விரைவில் தளத்தில் வலம் வருவார்கள் என்ற ஆவலுடன் ?????
அந்த கைகுட்டை எங்க டாலி
 
Latest Episodes

Advt

Advertisements

Top