• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Thedum nyaanam vignyaanam aayinum 20

Messages
154
Likes
441
Points
52
Location
coimbatore
#1
இடம் : பூமி..

பாங்களூரில் உள்ள நாஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் ஸ்பேஸ் சைன்ஸ் (National Institute of Space Science) சுருக்கமாக என் ஐ எஸ் எஸ் (NISS)..

உலகின் தலைசிறந்த ஸ்பேஸ் சைன்ஸுக்கான கல்வி நிலையம் அது..

ஒவ்வொரு டிப்பார்ட்மெண்ட்டிலும் ஆண்டுக்கு மொத்தம் முப்பது முப்பத்தைந்து நபர்களே..

பிரம்மிப்பாகவும் பெருமையாகவும் இருந்தது ஸ்ரீக்கும் நந்தனுக்கும்..

சுமார் சில கோடி பேர் அந்த டிப்பார்ட்மெண்ட்டுக்காக என்ட்ரன்ஸ் எக்ஸாம் (entrance exam) எழுத அதில் மூன்றாவது நபராக செலக்ட்டாகியிருந்தாள் வசிஷ்டரா..

வசி கல்லூரியில் சேர்ந்த பின்பு அவளைப் பற்றி யாராவது விசாரித்தால் போதும்.. அவள் என் ஐ எஸ் எஸ்ஸில் சேர்ந்ததைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக கூறுவார்கள் இருவரும்..

வசியின் தம்பி க்ரிஷ் தான் படிக்கும் ஸ்கூல் முழுவதும் அவளது புகழ் பரப்புச் செயலாளராக மாறியிருந்தான்..

வாழ்க்கை அதன் போக்கில் நன்றாகத் தான் போய்க்கொண்டிருந்தது அனைவருக்கும்..

வசியைப் பற்றி சர்வேஷ் ஸ்வரூபனிடம் செய்தி போகும் வரை..

அடுத்த வந்த சில நாட்களுக்குள் அவளை இஸ்ரோவின் தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்திருந்தார் சர்வேஷ்..

மனம் முழுதும் எதற்காக தன்னை இங்கு அழைத்திருக்கிறார்கள் என்ற கேள்வி சூழ்ந்திருந்தபோதிலும் ஒரு வித மகிழ்ச்சியே வசிஷ்டராவிற்கு..

அவளது நீண்ட நாள் கனவு அது.. இஸ்ரோவில் வேலைப் பார்க்க வேண்டும் என்று..

அதன் முதல் படியாகவே இந்த விசிட்டைக் கருதினாள் வசிஷ்டரா..

பெரியதொரு விசிட்டர்ஸ் அறையில் அவள் அமர்த்தப்பட்டிருக்க சுற்றியும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவளை சர்வேஷின் அறைக்குள்ளே போகும்மாறு பணிந்தாள் சர்வேஷின் பி ஏ..

அவளுக்கு ஒரு நன்றியை உரைத்துவிட்டு கொஞ்சமே கொஞ்சம் நடுக்கத்துடனும் பதற்றத்துடனும் சர்வேஷின் அறையைத் தட்டித் திறந்து, “மே ஐ கெட் இன் சார்..”, என்றாள் வசீ..

“எஸ் மிஸ். வசிஷ்டரா.. கெட் இட்..”, பிசிறில்லாமல் கம்பீரமாக ஒலித்த அந்த ஒலியில் ஈர்க்கப்பட்டு சிறுப் புன்னகையுடன் அறைக்குள் பிரவேசித்தாள் வசீ..

ஆங்காங்கே நரைமுடிகள் முளைத்திருக்க கம்பீரம் குறையாமல் ஒரு மிடுக்கோடும் கண்களுக்குப் புலப்படாத சன்னச் சிரிப்போடும் அமர்ந்திருந்த இஸ்ரோவின் தலைவரைக் கண்டு பிரம்மிதவளைக் கண்டுகொள்ளாதவராக இருக்கையைக் காட்டி, “டேக் யுவர் சீட் கேர்ள்..”, என்றாள்..

அவள் அமரும் வரை காத்திருந்தவர், “டூ யூ நோ வை யூ ஆர் ஹியர்..?? (Do you know why you are here..??)”, கேள்வி முளைத்தது சர்வேஷிடமிருந்து..

“நோ சார்..”

(இவர்கள் உரையாடல் இனி ஆங்கிலத்தில் என்பதால் நாம் அதனை தமிழில் பார்ப்போம் வாருங்கள்..)

“நீ ஆல்பா ப்ராக்ஸிமாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா..??”

“யெஸ் சார்.. சூரிய குடும்பத்தைப் போன்ற மற்றொரு குடும்பம்..”

“எக்ஸாக்ட்லி..”, என்றவர், “அங்கு செல்ல நீ தயாராகிக்கொள்..”, என்றார் கட்டளையாக..

சர்வேஷின் வார்த்தைகள் அவள் செவிகளுக்கு எட்டினாலும் இவர் என்ன சொல்கிறார் என்பது போல் பார்த்திருந்தாள் வசிஷ்டரா..

அவள் பதில் கூறுவதற்கு முன்னே, “ஆர் யூ ரெடி..??”, என்று கேட்டார் சர்வேஷ்..

“சார் இந்த ஆபரை அக்செப்ட் செய்வதற்கு முன்னால் உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்..”

“யா.. கோ அஹெட்.. (Ya.. Go ahead)”

“ஆல்பா ப்ராக்ஸிமா செல்வதற்காக இஸ்ரோ எந்த ஒரு தேர்வும் கண்டெக்ட் செய்தமாதிரி தெரியவில்லையே..??”, தயக்கமாக கேள்வியைத் தொடுத்தாள் வசீ..

“இது ஒரு சீக்ரெட் மிஷன் வசிஷ்டரா.. இரு நாட்டின் முக்கிய பிரமுகர்களைத் தவிர இதைப்பற்றி வேறு யாருக்கும் தெரியாது இதைப்பற்றி..”, என்ற சர்வேஷ், “சில நாட்களாக உன் நடவடிக்கைகளையும் உன் திறமைகளையும் நாங்கள் கவனித்துக்கொண்டே தான் இருக்கிறோம்.. வி பீல் யூ ஆர் எலிஜிபிள் பார் திஸ் ப்ராஜெக்ட் (We feel you are eligible for this project)..”, என்றார்..

இது நல்ல ஒரு ஆபர் (offer) தான்.. இருந்தாலும் இதைப்பற்றி யோசித்து முடிவு செய்யவேண்டும் என்று நினைத்தவள், “சார்.. எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்..”, என்றாள்..

“எதற்கு..??”

“நீங்கள் கொடுத்திருக்கும் ஆபரைப் பற்றி யோசிக்க..”

“இதில் யோசிக்க ஒன்றும் இல்லை வசிஷ்டரா.. யூ ஆர் செலெக்டட்.. உங்கள் படிப்பு முடிந்தவுடன் நீங்கள் இங்கு வந்து ஜாயின் செய்யவேண்டும்.. இதற்கு இடையில் உங்களது விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் பயிற்சியும் அளிக்கப்படும்.. பீ ரெடி..”, என்றார் இப்பொழுது ஒவ்வொரு வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து கட்டளைப்போல்..

ஒரு வகை மோடுலேஷனில் ஒலித்த அவர் குரலில் அவள் மிரண்டு போனாள் என்று சொல்லத்தான் வேண்டும்..

சுத்தமாக ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை பெண்ணால்.. இந்த நல்ல ஆபர் தான்.. இல்லை என்று ஒரு சதவிகிதம் கூட மறுக்கமுடியாது..

ஆனால் நீ அவசியம் இதற்கு ஒத்துக்கொள்ளவேண்டும் என்று சர்வேஷ் கட்டளையிடுவது போல் சொன்னது தான் வசிஷ்ட்ராவிற்கு இங்கோ எதுவோ இடிப்பது போல் தோன்றியது..

அவரை ஒரு நொடி பார்த்தவள் இவரிடம் மல்லுக்கட்டினால் இவரது பவரை யூஸ் செய்து தன் குடும்பத்திற்கு தொந்தரவு கொடுக்கவும் வாய்ப்புள்ளது என்று நினைத்தவளுக்கு இவரிடம் ரெக்வெஸ்ட் (request) செய்தால் என்னவென்று தோன்றியது..

கண்களை லேசாக மூடித்திறந்தவள், “சார்.. ஐ ஹேவ் அ ரெக்வெஸ்ட்..”, என்றாள்..

“சொல்லுங்க வசிஷ்டரா..”, இப்பொழுது அமைதியாக..

“ஐ ஆம் ஓ கே வித் யுவர் ஆபர் (I am ok with your offer).. இதை நான் அக்ஸப்ட் செய்ய ரெடி தான்.. பட் எனக்கு நீங்கள் ஒரு வாரம் டைம் தரவேண்டும்..”, என்றாள்..

வசியை உற்றுப்பார்த்த சர்வேஷ், “சரி.. டேக் யுவர் டைம்.. ஆனால் அக்செப்ட் செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் எதற்காக..??”, என்று கேட்டார்..

“உங்களுக்கே தெரியும் எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது.. இதுவரை எந்த ஒரு விஷயமாயினும் அதைப்பற்றி அவர்களிடம் டிஸ்கஸ் செய்யாமல் எந்தவொரு முடிவுக்கும் வந்ததில்லை.. எனது முடிவு தான் அவர்களது முடிவாயினும் அவர்களிடம் நீங்கள் கூறிய விஷயத்தைப்பற்றி விளக்காமல் உங்களிடம் ஓ கே சொல்வதற்கு என் மனம் ஒப்பவில்லை..”, என்றாள்..

வசிஷ்ட்ராவைப் பற்றி மனதில் செண்டிமென்டல் பூல் (Sentimental fool) என்று நினைத்துக்கொண்ட சர்வேஷ் இவள் எப்படி என்றாலும் ஆல்பா பிராக்ஸிமா செல்ல ஒப்புக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடன், “சரி.. வரும் வாரம் திங்கள் அன்று எனக்கு அழைத்துச் சொல்லுங்கள்..”, என்று ஒரு கார்டை எடுத்து அவளிடம் நீட்டியவர், “அடுத்த ஞாயிறு முதல் பயிற்சி ஆரம்பிக்கும்..”, என்று முடித்தார்..

சிஷ்டரா கல்லூரிப் படிப்பை முடித்து வருடம் ஒன்றைக் கடந்திருந்த சமயம் அது..

முழு நேரம் ஆல்பா பிராக்ஸிமா செல்வதற்கான கடும் பராக்டீஸ்கள் இப்பொழுது..

ஆத்யா அபித் சாய் அத்வைத் என தன்னுடன் ஆல்பா ப்ராக்ஸிமாவிற்கு செல்பவர்கள் நான்கு நபர்கள் இருந்தாலும் இன்னும் சாய்யைத் தவிர யாருடனும் ஒட்டுதல் வரவில்லை அவளுக்கு..

கல்லூரியில் படிக்கும் வரையில் சமயத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது பெற்றோரையும் தம்பியையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது அவளுக்கு..

இஸ்ரோவில் சேர்ந்த பிறகு ஆறு மாதம் ஒரு வருடம் என அவர்களைக் காணாது தவித்துப்போனாள் வசீ..

வீட்டில் இருக்கும் வரை மூவரிடமும் ஒட்டித்திரிந்தவள் தற்சமயம் அவர்களை மிகவும் மிஸ் செய்தாள்..

இதனால் சில சமயம் பயிற்சிக்கு செல்ல மாட்டாள் அவள்..

ஆல்பா ப்ராக்ஸிமா ப்ராஜெக்ட்டை சேர்ந்த ஒருவர் தங்கள் பயிற்சியை பங்க் செய்தால் அவர்களுக்கு பனிஷ்மென்ட்டுடன் திட்டுக்கள் நிச்சயம்..

ஆனால் அதில் வசிஷ்டரா மட்டும் விதிவிளக்கு..

இது சர்வேஷின் வேலை.. ஆயினும் இதைப்பற்றி யாருக்கும் தெரியாது..

இந்த விதிவிளக்கினாலே சாய்யைத் தவிர மற்ற மூவரும் அவளைக் கொஞ்சம் தள்ளியே வைத்தனர்..

அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லாதவள் இப்பொழுதும் தன் வீட்டு நியாபகமாகவே சுற்றிக்கொண்டிருந்தாள்..

இவளே இப்படி இருக்க ஸ்ரீயின் நிலையைப்பற்றி சொல்லவேண்டியதே இல்லை..

ஆல்பா ப்ராக்ஸிமா செல்வதற்கு தன்னை செலெக்ட் செய்திருக்கிறார்கள் என்று அவள் வந்து சொன்ன போது வீட்டில் மூவரும் அவளைத் தலையில் வைத்து கொண்டாடாத குறைதான்..

எல்லாம் அவள் சர்வேஷிற்கும் தனக்கும் நடந்த உரையாடலை சொல்லும் வரை தான்..

கிருஷ் அதை நல்ல ஆபர்.. அது எப்படி கிடைத்தால் என்ன என்ற மனநிலையில் இருக்க..

ஆனால் நந்தனுக்கும் ஸ்ரீக்கும் பலத்த யோசனை.. எதற்காக வசியை செலெக்ட் செய்ய வேண்டும் என.. இதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ என்ற பயம் வேறு..

யோசிக்க யோசிக்க ஸ்ரீக்கு ஆல்பா பிராக்ஸிமா ஒருவேளை வசி பிறந்த கிரகமோ என்ற தாட் (thought)..

அப்படியிருந்தால் வசீ தன்னை விட்டு போய்விடுவாளே என்ற கவலை வேறு புதிதாய் முளைத்தது..

அதை நந்தனிடம் பகிர்ந்தவள் அவனையும் ஒரு குழப்பு குழப்பிவிட்டாள்..

நந்தனும் அதைப்பற்றி சிந்தித்தான் தான்.. ஆனால் ஒரு பக்கம் மனதில் அப்படி எல்லாம் ஒன்றும் இருக்காது என்று மனதில் சிறு நம்பிக்கை..

தன்னால் முடிந்த அளவு ஸ்ரீயைத் தேற்றியவன் வசியிடம் அவளது முடிவு என்னவென்று கேட்டான்..

“சர்வேஷ் என்னிடம் கட்டளையிடுவது போல் நீ கண்டிப்பாக அந்தப் பார்ஜெக்ட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொன்னது பிடிக்கவில்லைப்பா.. இருந்தாலும்..”, என்றவள் தந்தையையும் தாயையும் நேராகப் பார்த்து, “இருந்தாலும் இந்த வேலை அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது யாருக்கும்.. இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆப்புர்ச்சுனிட்டியாகவே (opportunity) நினைக்கிறேன்..”, என்றாள் தெளிவாக..

ஸ்ரீயைப் ஒருமுறைப் பார்த்த நந்தன் வசியிடம் திரும்பி, “சிறு வயதில் இருந்தே நீ எடுக்கும் முடிவுகள் என்றும் தவறாகிப் போனதில்லை வசீ.. இப்பொழுதும் தவறாக நீ எந்த முடிவும் எடுக்கமாட்டாய் என்று நாங்கள் நம்புகிறோம்.. நீ என்ன முடிவு செய்தாலும் கண்டிப்பாக எங்கள் சப்போர்ட் உனக்கு நிச்சயம்..”, என்றார்..

கண்களில் நீர் தங்கினாலும் அதை வெளிபடுத்தாது தாங்க்ஸ்ப்பா தாங்க்ஸ்ம்மா என்று இருவரையும் கட்டிக்கொண்டவள், “கண்டிப்பாக நான் தவறான முடிவு எடுக்கமாட்டேன்..”, என்றாள் நிமிர்வுடன்..

நந்தன் இப்படித்தான் சொல்வான் வசீ இப்படித்தான் முடிவெடுப்பான் என்று நன்றாகத் தெரிந்தாலும் அவள் இந்த ப்ராஜெக்ட்டிற்கு ஓகே சொன்னது ஸ்ரீக்கு வசீ அவளை விட்டு ரொம்ப தூரம் தள்ளிச்செள்ளவது போல் தோன்றியது..

இருந்தாலும் இது வசியின் எதிர்காலம்.. அவளே முடிவு எடுக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தவர் எதையும் வெளிக்காட்டமலேயே இருந்துகொண்டார்..

-தேடலாம்..
 
Advertisement

Latest Episodes

Advertisements

Top