அன்றில் 12
அன்றில் 12
உன்னையத்தான் கேட்கிறேன். யாரு பர்மிஷன் கொடுத்தா?” தனது பற்களைக் கடித்துக்கொண்டு கேட்டான். அவனுக்கு வந்த ஆத்திரத்துக்கு, கிஷோரி அருகில் இருந்திருந்தால் அவளைத் தள்ளிவிட்டிருப்பான்.
வேணிக்கோ கடும் எரிச்சல். இதெல்லாம் இவளுக்குத் தேவையா என்று நொந்திருந்தாள். ‘ரொம்ப ஓவரா பண்றானே!’ வெளியே கூற முடியாத நிலையில், வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்.
வேங்கைப் பார்வை குறையாமல் கிஷோரியை நோக்கி வேகமாக நடந்து வந்தவனின் கோபம், தொண்டையைச் செருமிக்கொண்டு அவளுக்குப் பின்னால் வந்த ராஜிமாவின் கண்டனப் பார்வையில் அடங்கிப்போனது. ஆழிப்பேரலையாய் எழுந்த கோபம், சாதாரணக் கடல் அலையெனச் சுருங்கி அவனது மனதிற்குள்ளேயே அடங்கியது.
“வாங்கடா” என்று பொதுவாகக் கிஷோரியையும் வேணியையும் அழைத்தார் ராஜிமா.
இத்தனை நாட்களாக வீட்டுக்குள் நுழைந்தவர்களை அனுமதித்துவிட்டு, இன்று மட்டும் ஏன் அனுமதி கொடுக்கவில்லை என்று ராஜிமாவுக்கே சந்தேகம் எழுந்தது.
ராஜிமா ஒவ்வொரு இடமாகப் பிடித்துப் பிடித்து நடக்க, கிஷோரி அவரது ஒரு கையைப் பிடித்துக்கொண்டாள். வேணி மறுகையைப் பிடித்துக்கொண்டாள்.
ராஜிமாவிடம் எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் தயங்கிய கிஷோரியின் சோர்வான விழிகளைப் பார்த்த ராஜிமா, என்ன செய்தி என்று வேணியிடம் புருவங்களால் வினவினார்.
கிஷோரியின் தயக்கத்தைக் கலைப்பதற்காக, “ஏய்! நீ சொல்றியா, நான் சொல்லட்டுமாடீ?” என்று உலுக்கினாள் வேணி.
“அது… அது வந்து, வேணி… நானே சொல்றேன்” என்றவள், கைக்குட்டையால் முகத்தை நன்கு துடைத்துக்கொண்டாள். எச்சிலைப் பெருக்கி விழுங்கினாள்.
இன்னும் ஒரு நிமிடம் எதுவும் கூறவில்லை என்றால் ராஜிமா பதறிவிடுவார்.
“என்னதம்மா ஆச்சு? அன்னைக்கு உனக்குக் கட்டு மாத்தக் கூட்டிட்டுப் போனவன், அவனுக்கு ரெண்டு மூணு கட்டுப் போட்டுட்டு வந்திருந்தான். உண்மையா எனக்குப் பயமாத்தான் இருந்துச்சு. என்னதான் ஆச்சு?” என்று ராஜிமா கிஷோரியின் கையைப் பற்றிக் கேட்டார்.
தந்தையிடம் கூறியதைப் போலவே, காரில் நடந்ததைத் தவிர மற்ற அனைத்தையும் கூறினாள்.
“உங்க பையனைத் தெரியாமலேயே நான் லவ் பண்ணிட்டேன் மா. நான்தான் அவசரப்பட்டு அப்பா கிட்ட ரெண்டு பேருமே லவ் பண்றோம்னு சொல்லிட்டேன்”
கிஷோரி நடந்ததைக் கூறக் கூற, ராஜிமாவின் மனதில் அவள் உயர்ந்துகொண்டே போனாள். தன் மகனை மணக்கோலத்தில் காண மாட்டேனா என்ற ஏக்கத்தைத் தாங்கியிருந்த விழிகளிலிருந்து சிறு துளி நீரும் சிந்தியது.
ராஜிமா கண் கலங்குவதைப் பார்த்துக் கிஷோரி மறுத்துத் தலையசைத்தாள்.
“உங்க பையன் எங்கூடப் பழகுறதை நான்தான் தப்பா புரிஞ்சுகிட்டேன் ராஜிமா”
அவள் தந்தையின் முன் அவன் எதுவுமே கூறவில்லையே!
அவள் தொடர்ந்து பேசுவதற்குள் குறுக்கிட்டார் ராஜிமா.
“அவன் உன்னையத் தவிர எந்தப் பொண்ணுகிட்டயும் பேசினதை நான் பார்த்ததே இல்ல. அவனை எப்படி வழிக்குக் கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்டா. உங்க அப்பாகிட்ட வந்து நான் பேசுறேன். நீ எதுவும் யோசிக்காத”
தன் மகனுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் அவருக்கு எட்டவில்லை.
ஆறுதலாகக் கூறுகிறாரா, தனக்குத் தாயில்லை என்ற அனுதாபத்தில் கூறுகிறாரா என்று புரியாமல், ராஜிமாவின் வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியாத நிலையில் இருந்தாள் கிஷோரி.
“இல்லம்மா” என்று மறுத்துக் கூற வந்த கிஷோரியின் வாயை ஒற்றை விரலால் மூடியவர்,
“இதுக்கு மேல நான் பார்த்துப்பேன்னு சொல்லிட்டேன். விட்டுரு”
ராஜிமா எப்படிக் கூறினாலும், அவள் மனதை ஏதோவொன்று உறுத்திக்கொண்டே இருந்தது. காதலே இல்லாத மனதில் வற்புறுத்தலால் காதலை வரவழைப்பதெல்லாம் அவளுக்கு விருப்பமில்லை. இருப்பினும், அன்று நிகழ்ந்த அந்த இதழ் ஒற்றலில் அவனுக்கு உணர்ச்சியே இல்லையா என்ற கேள்வி எழுந்தது.
நடப்பதைப் பார்த்த வேணியோ, ‘அவன் லவ் பண்ணாம உன்னை யாருடீ அப்பாகிட்ட சொல்லச் சொன்னா? இதுக்குப் பேருதான் ஆர்வக்கோளாறோ!’ எனச் சுவற்றில் தலையை முட்டிக்கொள்ளாத குறையாக நொந்தாள்.
சுபாஸின் தொலைபேசி எண்ணை ராஜிமா கிஷோரியிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
“அம்மா, அப்பாகிட்ட இப்பவே அவசரப்பட்டு எதுவும் பேச வேணாம். உங்க பையன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுச் சொல்றேன்” என்று தாழ்மையாகக் கோரினாள்.
இதைப் பற்றியே பேசிப் பேசி சில நிமிடங்கள் கழிந்தன. ராஜிமாவின் காலைப் பரிசோதிக்கப் பிசியோதெரபிஸ்ட் வந்திருந்ததால், கிஷோரியும் வேணியும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.
வந்தவள் வீம்பாக வீரா இருக்கும் இடத்திற்கே சென்று, அவன் முன்னே நின்றாள். அவனோ மடிக்கணினி வழியாக முக்கியமான மீட்டிங்கில் இருந்தான்.
இரண்டு புதிய அடியாட்கள் அவன் அருகில் இருந்தனர். வைத்தியும் அருகில் அமர்ந்திருந்தார். இவர்கள் வந்ததை லேசாக இருமிக் காட்டியிருந்தார் வைத்தி.
“வீட்ல இருந்து போறதுக்கெல்லாம் பர்மிஷன் கேக்கத் தேவையில்லை. போகச் சொல்லுங்க வைத்தி” என்று உதடுகளை லேசாக அசைத்தவாறு கூறினான்.
அவன் உதடுகள் ஒட்டியும் ஒட்டாமலும் பேசுவதைப் பாம்புக்காது கொண்டு கேட்டவள்,
“ஆமா, இவன் பெரிய இவன்! வெளியே போறதுக்கு இவங்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு நிக்கிறாங்க பாரு” என்று கண்களைப் பெரிதாக்கி, சற்றுக் குரலை உயர்த்தி, ஜீன்ஸ் அணிந்த மேற்கத்தியக் காளியாய் நின்றிருந்தாள்.
கூட்டத்தில் இருந்தவர்களிடம் ஐந்து நிமிட இடைவெளி கேட்டு, மீட்டிங்கை மியூட்டில் வைத்துவிட்டு, நேராக வேணியிடம் திரும்பியவன்,
“ப்ளீஸ், உங்க ஃப்ரெண்டைக் கூட்டிட்டுப் போங்க. எனக்கு, நீங்க பண்ற பெரிய ஹெல்ப்பா இருக்கும்” என்றான்.
வேணியிடம் கையேந்திக் கும்பிடாத குறைதான்!
அதற்குக் கிஷோரியோ,
“கூட்டிட்டுப் போயிருவியா என்னைய? அவன் சொன்னா நீ என்னையக் கூட்டிட்டுப் போயிருவியா?” என்று மிரட்டலாகவே கேட்க, வேணி நடுவில் பச்சிளம் பிள்ளையென மாட்டிக்கொண்டாள். பாவம்!
அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்ட வேணி, வைத்தியின் முகத்தைப் பார்த்தாள்.
‘என்னைய மட்டும் மாட்டிவிட்டுராதம்மா’ என்று சைகையிலேயே இறைஞ்சினார் வைத்தி.
“வீரா, நான் உங்கூடத் தனியா பேசணும். என்னோட கொஸ்டின்ஸுக்கு ஆன்சர் பண்ணினா, நான் என் பாட்டுக்குப் போயிடுவேன்” அவள் மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, பிடிவாதமாக அங்கேயே நின்றிருந்தாள்.
“நீயும் நானும் தனியா பேசுறதுக்கு என்ன இருக்கு? ஒண்ணும் இல்ல. எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லு” அவன் பேசிய வேகமே அவன் பொறுமையை இழந்திருந்ததை உணர்த்தியது.
“இருக்கு வீரா. நீ வேணும்னே பண்றியோன்னு எனக்குத் தோணுது”
வீம்புக்காரி காரணம் அறியாமல் அங்கிருந்து செல்லவே மாட்டாள்.
“ஆமா, வேணும்னே பண்றேன். உனக்கு என்ன இப்போ?”
அவனது தெனாவட்டான குரலில் அதிகாரம் தலைதூக்கியது.
அவனுடன் போராட முடிவெடுத்தவள், தரையில் அமர்ந்துவிட்டாள்.
“வாடீ, போலாம். இவங்கிட்ட போய்க் கெஞ்சிட்டு இருக்க! உன் பின்னாடி எத்தனை பசங்க அலையுறாங்க. அதுல ஒருத்தனைக் கரெக்ட் பண்ணுவியா? அதை விட்டுட்டு இவன் பின்னாடி போய்க்கிட்டு இருக்க?” வேணிக்கோ மானக்கேடாக இருந்தது.
சூழ்நிலையைப் புரிந்துகொண்ட வைத்தியோ ஓர் அடி பின்னால் எடுத்து வைக்க,
“வைத்தி, டோன்ட் கெட் பேக்” என்றான் வீரா.
“வீரா பாய், மீட்டிங்ல இருந்து கால் வந்துகிட்டே இருக்கு” என்று வைத்தி அறிவுறுத்தினார்.
இவள் தரையில் அமர்ந்திருந்தால் தனக்கு என்னவென்று மீண்டும் மடிக்கணினி முன்னால் அமர்ந்தான் வீரா.
வீம்பாக அவள், “நீ லேப்பை ஆன் பண்ணு. நான் கத்து கத்துனு கத்துறேன். அப்பதான் அவங்களுக்கும் தெரிய வரும்” என்றாள்.
மீட்டிங்கிள் மீண்டும் சென்றவன், உடனே வெளியே வந்தான். “எவ்ரிஒன் கெட் அவுட்”
வீரா கூறியதற்கிணங்க, வேணியையும் சேர்த்து அனைவரும் வெளியேறினர்.
“உனக்கு இப்ப என்ன பிராப்ளம்? சொல்லு”
அவனுடைய நாற்காலியில், அவன் காலுக்கு மேல் காலிட்டபடி அமர்ந்திருந்தாள் அவள். அதனைச் சிறிதும் பொறுக்காத, கொஞ்சம் அதிகமாகவே திமிர் பிடித்தவள்,
“இங்க வந்து உட்காரு” என்று அவனுக்கே கட்டளையிட்டாள்.
அவனிடம் இல்லாத ஒன்றான பொறுமையை வரவழைத்துக்கொண்டு, அவன் இருக்கையை விட்டு எழுந்து கீழே வந்து அமர்ந்தான்.
அவன் சற்று இடைவெளி விட்டு அமர்ந்ததும், அவள் அந்த இடைவெளியை நிரப்பும் விதமாகக் கேட்டாள்.
“உனக்குப் ஃபீலிங்ஸ் இல்லையா வீரா?”
“எதுல ஃபீலிங்ஸ் இல்லையான்னு கேக்குற?” புரிந்திருந்தாலும் புரியாததைப் போலவே கேட்டான்.
“என் மேல?” என்ன கூறுவானோ என்று முட்டை விழிகள் பிதுங்க, அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“உன் மேல எனக்கு எதுக்கு ஃபீலிங்ஸ் வரணும்?” அவளைப் பேசவிடாமல் அவனே தொடர்ந்தான்.
“ஐ மீன், ஐம் இன் லவ் வித் யூ”
கெஞ்சுதலுடன் அவனது விழிகளை இமைக்காமல் பார்த்தாள். அவனோ அவளை மிஞ்சும் வகையில் இமைக்காமல் பார்த்தான்.
“உன் மேல எனக்கு லவ் வரல கிஷோரி” அவனது கண்களும் குரலும் எந்தவித உணர்வுகளையும் வெளிக்காட்டவில்லை.
“கார்ல லிப் லாக் பண்ணும்போதுகூட உனக்கு…” தடுமாறியவள், மீண்டும் கேட்டாள்.
“என் மேல லவ் வரலையா?”
அவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.
புரிந்துகொண்டவன், “அப்படிப் பார்த்தா உன்மேல எனக்கு லவ்வே வராது” என்று எடுத்த எடுப்பிலேயே கூறினான்.
“அதான் ஏன்னு கேக்குறேன்?”
அவளது கலைந்திருந்த தலைமுடியைச் சரிசெய்துகொண்டாள்.
“ஏன்னா, உன்னோட லிப்ப எனக்குப் பிடிக்கல. குட்டியா இருக்கு. எனக்கு வாட்டமா இல்ல” இதெல்லாம் ஒரு காரணமா தன்னைப் பிடிக்கவில்லை என்பதற்கு? அவன் கூறிய பதிலைக் கேட்டவள், தனது உதடுகளைத் தொட்டுப் பார்த்தாள். அவை சிறியதாக இருக்கின்றனவா என்று குழம்பிப்போனாள்.
“என்ன லவ் பண்றேன்னு தயவுசெஞ்சு எங்க வீட்டு பக்கம் வராத” என்றதோடு எழுந்தவன், மடிக்கணினியைத் திறந்தான்.
இவளும் எழுந்து வெளியே வந்தாள்.
“என்னடி ஆச்சு? என்னடி சொன்னான்?” என்று படபடப்போடு கேட்டாள் வேணி.
கிஷோரி எதுவுமே கூறவில்லை.
வீட்டுத் தோட்டத்தில் இருந்த பெரிய பெரிய சிவந்த ரோஜா இதழ்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கூறியதை ஏற்க முடியாதவள், செல்ஃபி கேமராவைத் திறந்து தனது உதடுகளை உற்றுப் பார்த்தாள்.
“அவன் புடிக்கலைன்னு சொல்லிட்டான்னு புரியுது. நம்ம இனி வெளியே போகலாம். இங்கே இருந்து என்ன பிரயோஜனம்?”கிஷோரியின் முகத்தைப் பார்க்கவே வேணிக்குப் பாவமாக இருந்தது.
“புடிக்கலைன்னு சொல்லல. பட், வேற ஒண்ணும் சொன்னான்” ரோஜாப் பூக்களைப் பார்த்தவாறே வேணியிடம் பேசினாள்.
“என் மேல லவ் வரலையாம். என் லிப் சின்னதா இருந்ததால லவ்வே இல்லன்னு சொல்லிட்டான்டீ”
பேய் அறைந்த முகத்துடன் அவள் கூறிய காரணத்தைக் கேட்டு, வேணிக்கு ஒரு நிமிடம் இதயமே ஸ்தம்பித்தது. தலை சுற்றுவதுபோல் இருந்தது.
வேணியின் குரலை மீறி மீண்டும் வேகமாக உள்ளே சென்றாள் கிஷோரி.
“ஏய், நில்லுடீ!” என்று கத்தியதோடு சரி. வேணி அவள் பின்னால் உள்ளே செல்லவில்லை.
நேராக வீராவின் அருகில் சென்றாள் கிஷோரி. அவன் அமர்ந்திருந்த நிலையில், அண்ணாந்து பார்ப்பதற்குள் அவள் குனிந்து அவனுடைய சட்டைக் காலரைப் பற்றிப் பலமாக இழுத்தாள். செர்ரிப் பழத்தைப் போலச் சிவந்திருந்த தனது இதழ்களை அவனது அதரங்களோடு அழுத்திப் பொருத்தினாள்.
இக்காட்சியைக் கண்ட வைத்தியோ, ‘ஆ!’ என்று வாயைப் பிளந்து, தனது சட்டைக்குள் முகத்தை மறைத்துக்கொண்டார். அவனுடைய அடியாட்களும் வேறு பக்கம் திரும்பிக்கொண்டனர்.
இதழ்ச் சிறையில் சிக்குண்டவனோ வெளியேற முயற்சிக்க, அதில் தோற்றுத்தான் போனான். அவள் அவனுடைய கேசத்தை இடது கையால் கொத்தாகப் பற்றியிருந்தாள்.
மடிக்கணினித் திரையில் இருந்தவர்களோ, இது வீரா பாய்தானா என்று இமை சிமிட்டாமல் வியப்புடன் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதழ் யுத்தம் முடிவடைந்தது.
வீராவுக்கு மூச்சு வாங்கியது. மடிக்கணினியை மூடியவன்,
“வாட் ஹேவ் யூ டன்… ஹோ ஷிட்!”
என்று சீறினான்.
அனலாய் எழுந்த கோபம் அவன் கண்களில் குருதிச் சிவப்பை ஏற்றியது. கழுத்தில் புடைத்திருந்த பச்சை நரம்புகளோடு, தீப்பிழம்பாக வார்த்தைகள் தெறித்தன. ஆக்ரோஷத்தில் தனது வலது காலைத் தரையில் ஓங்கி மிதித்தான்.
அவன் கத்திய சத்தம் சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடாக, அனைவரின் செவிப்பறைகளையும் கிழித்தது.
********
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே 🙏❤️






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!