arrow_back
தித்திக்குதே அத்தியாயம் இருபது
தித்திக்குதே chevron_right பகுதி 20 / 26

அத்தியாயம் இருபது

visibility 2
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

இரவு படுப்பதற்கு வெகு நேரமாகிவிட்டதால் சக்தி விழிக்க நேரமாகிவிட, அதற்கு முன்னரே எழுந்துவிட்ட நந்தினி அவனை விழியகலாமல் ரசித்துக் கொண்டு படுத்திருந்ததையோ, குளித்துவிட்டு வந்த பின்னரும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்ததையோ அவன் உணரவில்லை.

என்றைக்கும் இல்லாத திருநாளாக விடிந்த பின்னரும் உறங்கும் கணவனைப் பார்வையிட்டவாறே காபியைக் கலந்து கொண்டு வந்து அமர்ந்தாள். கையில் புத்தகத்தோடு அமர்ந்தவளுக்கு அவனது புத்தகங்கள் மலைப்பைத் தந்தன. நந்தினி படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவாளே தவிர அவளது பாடப்புத்தகத்தை விட்டு அசையமாட்டாள்; ஆனால் அது தவறென்று கூறித் தனது புத்தக கலெக்ஷனிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்து வாசிக்கப் பழகியிருந்தான்.

ஒவ்வொன்றும் ரத்தினமாகத் தோன்றியது நந்தினிக்கு. தமிழ் இலக்கியத்திலிருந்து உலக இலக்கியம் வரையிலான அந்தப் புத்தகங்கள் அவளுள் ஒரு வகையில் பீதி உணர்வை ஊட்டிவிட்டது என்றே கூற வேண்டும். அரசியல், சட்டம், பொருளாதாரம், மனிதநேயம் என்று ஒவ்வொரு தளத்திலும் அவன் வாசித்தவை அவளுக்குப் பெரும் வியப்பைக் கொடுத்தது. பொருளாதாரத்தையும் மனிதநேயத்தையும் ஒரு சேர வாசிக்கும் வாசகனா என்ற நகைப்பு கலந்த வியப்பு அவளுள் வழிந்து கொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் புத்தகத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தாள்.

“ரொம்ப தீவிரமான வாசிப்போ?” அவனுடைய காபியைக் கலந்து கொண்டு அன்றைய பேப்பரோடு தரையில் அவளருகில் வந்து அமர்ந்தவனை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தாள். கையிலிருந்த காபி அவளது முகத்தைச் சுருங்க வைத்தது.

“ஏன் இப்படியே செய்றீங்க? ஒரு குரல் கொடுத்திருந்தா நான் காபி போட்டுத் தந்திருக்க மாட்டேனா?” அவன் எழுந்ததைக் கூட உணராமல் புத்தகத்தில் ஆழ்ந்துவிட்ட குற்ற உணர்வில் அவள் கூற,

“இதில் என்ன நந்தினி இருக்கு? படிக்கிற பொண்ணைத் டிஸ்டர்ப் பண்ணித்தான் நான் காபி குடிக்கணுமா? எக்ஸாமுக்கு இன்னும் ஒன் வீக் தானே இருக்கு. முதல்ல நீ படி. எனக்குக் காபியும் போடத் தெரியும்; உன் அளவு இல்லைனாலும் ஏதோ ஓரளவுக்குச் சமையலும் பண்ணத் தெரியும்” சிறு புன்னகையோடு அவன் கூற, அவனைப் பெருமையாகப் பார்த்தாள் நந்தினி! மீட்க முடியாத பார்வை; அவனுள் மூழ்க விரும்பும் பார்வை.

என்ன மாதிரியான மனிதன் இவன்? தங்கள் சுகமே பெரிதென எண்ணிக்கொண்டிருக்கும் ஆண் வர்க்கத்தின் பெரும்பாலானவர்களின் நடுவே, ஒவ்வொன்றையும் தனக்காகப் பார்த்துச் செய்யும் இவனைக் கணவனாக அடைய என்ன தவம் செய்துவிட்டேன்?

அவளது அன்னையிடம் உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது “என்னுடைய சக்தியைப் பார் அம்மா” என்று! கண்ணின் மணியாக எனைத் காத்துக் கொண்டிருக்கும் என் கணவனைப் பார்; எனது தேர்வு, எனது காதலன், என்னுடைய கணவன் பொய்த்துப் போகவில்லை என்று மேடையேறிக் கூற வேண்டும் போலிருந்தது.

திருமணம் செய்யும் முன் அவனை வெறுமனே பிடித்திருந்தது மாறி, திருமணத்திற்குப் பின் அவனை காதலிப்பதாக நினைத்திருந்தாள்; ஆனால் அதுவல்ல காதல், இப்போது தான் உணர்வதே மாறாத காதல் என்று அந்த நொடியில் உருகினாள்.

எங்கிருந்தோ வந்தான் இடைசாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்- கண்ணன் எங்கிருந்தோ வந்தான்

அவனுக்கு மிகவும் நெருங்கி அமர்ந்தவள்,

“நீ மட்டும் எப்படிடா இப்படி இருக்க?” குரலில் ததும்பி வழிந்த நேசமும் காதலும் சக்தியையும் தொற்றிக்கொள்ள, புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டான்.

“எப்படி?” இதழ் கடையோரம் மலர்ந்த சிரிப்பினூடே அவன் கேட்க, அவனை வம்பிழுக்க ஆசைப்பட்டது அவளது மனது. எழுந்து ஓட ஆயத்தமாகிக் கொண்டு,

“ம்ம்ம்ம்… இப்படி லூசு மாக்கானா” என்று சிரித்துக் கொண்டு கூறியவள் ஓட முயல, அவளது கையைப் பிடித்து ஓட முடியாமல் அவன் தடுக்கப் பார்க்க, எழுந்துவிட்டவள் அவன் மேல் சரிந்து விழுந்தாள்.

இருவரது சிரிப்பும் உறைய, கண்கள் நான்கும் பின்னிக் கொள்ள, அவன் மேல் சரிந்திருந்த நந்தினி வெட்கத்தின் பிடியில் சிக்கியிருக்க, சக்தியோ புறவுலகை மறந்து இருவருக்கும் மட்டுமான உலகில் பிரவேசிக்கத் துவங்கியிருந்தான்.

மிகவும் நெருக்கமாக இருந்த அந்தச் செர்ரி பழ உதடுகள் அவனை முத்தமிட வாவென அழைக்க, கைகள் அவளது இடையின் மென்மையைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தச் சோதனையோ அவனுக்கே சோதனையாகி மீள முடியாமல் அவளிடம் மூழ்கக் கூற, நந்தினி வெட்கப் புன்னகையோடு அவனது கழுத்தில் கைகளை மாலையாக்கிக் கொண்டிருந்தாள்.

கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்வுகளை அடக்கும் வழி தெரியாமல் சக்தி தவிக்க, இன்னுமே நெருங்கி அவனது தவிப்பை அதிகப்படுத்திக் கொண்டிருந்தாள் அவனது மனையாள்.

“நந்து…” போதையாக அவளை அழைக்க, அவளால் பதில் கூற இயலவில்லை.

“ம்ம்ம்ம்ம்ம்…”

“முடியலடி…”

“ம்ம்ம்ம்ம்ம்…” அவளுக்குமே தவிப்பு அதிகமாக,

“ப்ளீஸ்ஸ்ஸ்… நீயே எழுந்திரி”

“ம்ஹூம்ம்ம்ம்…”

“வெய்ட் தாங்க முடியலடி” அவனது குரலில் குறும்பு வழிந்ததை உணர்ந்தவள், சட்டென நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.

“அடப்பாவி! இந்நேரம் வரைக்கும் அதுக்குத் தான் இப்படிப் பம்முனியா?” அவன் மடியிலிருந்து எழாமலேயே அவனது தோளில் அடிக்க ஆரம்பிக்க,

“ஷப்பா… என்னத்தைடி கொட்டிக்கற? இப்படி அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி இருக்கு” அவளது கைகளை வளைத்துப் பிடித்தவாறே வேண்டுமென்றே சக்தி கேட்க, அவளது முறைப்பு இன்னுமே அதிகமானது.

“ச்சே… நீயெல்லாம் மியூசியம்ல இருக்க வேண்டிய கேசு. உன்னைப் போய்…” என்று ஆரம்பித்தவள் உதட்டைக் கடித்துக் கொள்ள, அவனது புன்னகை விரிந்தது.

“ம்ம்ம்… உன்னைப் போய்… என்ன… சொல்லி முடி” குறும்புத்தனம் மாறாமல் அவன் கேட்க,

“ம்ம்ம்ம்… சொல்ல முடியாது போடா” கோபமாக கூற நினைத்தாலும் அவளையும் மீறி கொஞ்சலில் முடித்தாள்.

“சரி சொல்லாத. இப்போ எழுந்திரிங்க அம்மிணி. முடியல” வேண்டுமென்றே முடியாதவன் போல நடிக்க,

“நான் என்ன அவ்வளவு வெய்ட்டா? சும்மா பொய் சொல்லாதீங்க” அவள் சினுங்க,

“என்ன ஒரு அம்பத்தி ஒன்பதரை கிலோ இருப்பியா?” என்றான் அவனது குரலில் குறும்பு கொப்பளிக்க.

“அடப்பாவி! எப்படி இந்த அளவு பக்காவா சொல்றீங்க?” ஆச்சரியத்தோடு கேட்க,

“நான் எத்தனை மூட்டைய தூக்கியிருக்கேன். இந்த அரிசி மூட்டையோட வெய்ட்டைச் சொல்றதுதான் பெரிய விஷயமா?” அவளிடம் விடாமல் வம்பு வளர்க்க,

“என்னது நான் அரிசி மூட்டையா?” கோபத்தோடு அவனிடமிருந்து விலகி அமர்ந்து இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவனை முறைக்க,

“ம்ம்ம் அரிசி மூட்டை மாதிரிதான் என் கண்ணுக்குத் தெரியற” சொல்லிவிட்டு அவன் சிரித்து விட்டு, முறைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து,

“ஆனா அரிசி மூட்டைக்கு இவ்வளவு அழகா முட்டை முட்டையாக் கண்ணு இருக்காது” இறங்கிய குரலில் போதையாகக் கூற, பேஸ்தடித்தது போலப் ‘பே’ என்று அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இவ்வளவு ஷார்ப்பா நோஸ் இருக்காது” மூக்கைப் பிடித்து ஆட்ட,

“ஹாஆஆங்” அடப்பாவி என்பது போல விழித்தவளைப் பார்த்துச் சிரித்தவன்,

“காஷ்மீர் ஆப்பிள் மாதிரி குண்டு குண்டா கன்னம் இருக்காது. அதை விட இப்படி ஜூசியா, ப்ரூட்டியா, லிப்ஸ் இருக்காதே அரிசி மூட்டை” அவளது உதட்டை இழுத்துப் பிடித்து விளையாடியவனை அதிர்ந்து பார்த்தாள்.

“என்ன்னன்ன்ன்ன்ன” அவன் வர்ணிக்க அவள் அதிர, அவனது குறும்புப் புன்னகை இன்னமும் விரிய,

“அப்புறம்… வழுவழுன்னு இப்படிக் கழுத்து இருக்காது. அப்புறம்…” என்று அதே குறும்பான பார்வையோடு நிறுத்த,

“ஐயோ… ஸ்டாப் ஸ்டாப்!” அவசரமாக நிறுத்தினாள் சிவந்துவிட்ட முகத்தோடு.

“அடப்பாவி… உங்களைப் போய் நல்லவன்னு நினைச்சேனே. நீங்க இந்தளவு கெட்ட பையனா இருக்கீங்க” உள்ளே சென்றுவிட்ட குரலில் அவள் கூற,

“நான் உன்னை நல்லவன்னு நினைச்சுக்கோன்னு எப்பவாவது சொல்லியிருக்கேனா? நீயா நினைச்சுகிட்டா நான் என்னடி பண்றது?” அவளை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டு அவன் கூற, அவளது முகம் வெட்கத்தில் சிவந்தது.

“ச்சீ… போ” என்று அவள் எழுந்து கொள்ள, அவனும் சிரித்துக் கொண்டு எழுந்தான்.

“சரி… இந்தியன் எக்கனாமிக்ஸ் கொஞ்சம் பாக்கி இருந்துதே. அதை முடிச்சுட்டியா?” பேச்சை மாற்றி அவளது படிப்பைப் பற்றிக் கேட்க,

“ம்ம்ம்… ஆச்சு. ஆனா கரண்ட் அபெர்ஸ் தான் ரொம்பப் பயமா இருக்கு”

“பயமே வேண்டாம். ஜஸ்ட் இது வார்ம் அப் தான் நந்து. ரிசல்ட் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். நோ ஒர்ரிஸ் ஓகே” என்று அவளது தோளைத் தட்டிக் கொடுக்க, அவளுக்கு இன்னமும் பலம் வந்தது போலிருந்தது.

அவள் இட்லி தட்டில் மாவை ஊற்ற, அவன் வெங்காயத்தை நறுக்கத் துவங்கினான். இந்நேரம் வரை இவன் தானா தன்னிடம் வம்பு வளர்த்தது என்று ஆச்சரியமாக இருந்தது; ஆனால் அதுவரை இருந்த குழப்பங்கள் மறைவது போலத் தோன்றியது அவளது மனதில். மனம் தெளிவாக இருந்தது.

“சக்தி…”

“சொல்லுடா”

“இவ்வளவு சப்ஜெக்ட் படிச்சு இருக்கீங்க. நிறைய விஷயம் பேசறீங்க. என்ன படிச்சு இருக்கீங்க மாமா? சொல்ல மாட்டீங்களா?” ஏக்கமாக அவள் கேட்டதில் அவளைத் திரும்பிப் பார்த்தவன், உதட்டில் உறைந்த புன்னகையோடு,

“எம்பிஏ நந்து… கரஸ்ல தான்” என்று இயல்பாக அவன் கூற, ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

“ஏன் எம்பிஏ படிச்சுட்டு வேன்…” என்று தடுமாற,

“படிக்கிறது அறிவை வளர்க்கத்தான் நந்து. அதுக்குத் தகுந்த வேலைதான் பார்ப்பேன்னு சொல்றது சரி கிடையாது. எனக்குத் தெரிஞ்ச தொழில் அதுதான். பதினஞ்சு வயசுல இருந்து எனக்குச் சாப்பாடு போட்டது” என்று கேரட்டை நறுக்க ஆரம்பித்தவன் உணர்வைத் துடைத்த குரலில் கூற,

“பதினஞ்சு வயசுலயேவா?” அவளது முகத்தில் அவன் குறித்த கவலை தெரிய,

“ம்ம்ம் ஆமா. ஆஸ்ரமத்துல நடக்கற அநியாயத்தைத் தட்டி கேட்டேன்னு என்னை பதினஞ்சு வயசுல வெளிய அனுப்பிட்டார் அந்த நிர்வாகி” மாறாத குரலில் அவன் கூற,

“ஆஸ்ரமத்துல…” அவள் குரல் வெளியே வராமல் தவித்தது.

“ம்ம்ம் அஞ்சு வயசுல எங்க அம்மா அப்பா ஒரு தீ விபத்துல இறந்து போய்ட்டாங்க. எங்களைச் சுத்தி இருந்தவங்க என்னை ஆஸ்ரமத்துல சேர்த்திட்டாங்க நந்து” அவன் நிமிர்ந்து பார்க்காமல் கூற, அவளது உள்ளம் துடித்தது.

அவனைத் தன் புறம் திருப்பியவள், நிமிர்ந்து அவனது கண்களைப் பார்க்க, லேசாகக் கலங்கியிருந்த அந்தத் கண்கள் அவளது மனதை இன்னமுமே தவிக்கவிட்டது. அவளது மனதில் அவனுக்கு எவ்வளவு உயர்ந்த இடம் இருந்தாலும், அப்போது பார்க்கையில் சிறு குழந்தையாக, அன்புக்கு ஏங்கும் குழந்தையாகத் தெரிந்தான்.

முன்னர் காட்டிய அவனது கடுமை எல்லாம் அவனது ஏக்கத்தை மறைக்க அவனிட்ட வேடமாகவே தோன்றியது.

“சக்தி…” ஆதரவாக அவனை அணைத்துக்கொண்டவளின் அணைப்பில் சிறிது சிறிதாகக் கரைந்து போனான் சக்தி. சிறுவயதில் இழந்த தன் தாய் மடி மீண்டும் கிடைத்தது போலத் தோன்றியது; காமமில்லாத அந்த அணைப்பு அவனுக்குள் அமைதியை ஏற்படுத்தியது.

“பேசாம உன்னையே காபி போட்டுத் தரச் சொல்லிருக்கலாம்” திடீரென அவன் இப்படிக் கூறவும், நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் முகத்தில் கேள்வி தெரிய,

“ஏன்?”

“பின்ன பேசிகிட்டே இவ்வளவு நேரத்தை வேஸ்ட் பண்ணிட்ட படிக்காம” மலர்ந்த புன்னகையோடு அவன் நந்தினியை வார,

“அடப்பாவி! நான் மட்டும் தான் பேசினேனா?” தோளில் அடித்தவளிடமிருந்து லாவகமாகத் தப்பித்தவனுக்கு அப்போதுதான் நினைவு வந்தது, சித்ராவைப் பற்றி அவளிடம் கூறவில்லை என்பது.

“நந்து… அந்தப் பொண்ணு சித்ரா. அதான் நகமும் சதையுமா பின்னிட்டு இருப்பீங்களே அந்த…” என்று கிண்டலாக ஆரம்பிக்க, நந்தினியின் முகம் கடுமைக்கு மாறியது.

“ஏன் அவளுக்கு என்ன?” வார்த்தைகளிலும் அந்த கடுமை தெரிய, அவனுக்கு ஏன் என்று முதலில் புரியவில்லை. யோசித்தபோது தான் அந்தப் பெண்ணுக்காக நந்தினி தன்னிடம் ரெக்கமெண்டேஷனுக்கு வந்தது புரிந்து, நந்தினியைச் சீண்டிப் பார்க்கும் ஆசை வந்தது. அதோடு கல்லூரியில் நடந்த பிணக்கைக் கூறி இவனிடம் வேறு வெடித்திருந்தாளே!

“அதான் நந்து… நீ கூட என்கிட்டே சொன்ன இல்லையா, அந்தப் பொண்ணு என்னை லவ் பண்றா அவளைக் கல்யாணம் பண்ணிக்கங்கன்னு. அதே பொண்ணுதான்” அவளைக் கூடுமான அளவு எரிச்சல் படுத்திக் கொண்டிருந்தவனை எரிப்பது போல முறைத்து வைத்தாள் அவனது மனையாட்டி! முன்பே சித்ரா கல்லூரியில் பேசியதைப் பற்றி கூறியும் இப்படிக் கிண்டலடிக்கிறானே என்று கடுப்பாக இருந்தது அவளுக்கு.

“சும்மா சித்ரான்னு சொன்னாலே அந்தப் பிரகஸ்பதியைத் தெரியும். நீங்க ஒன்னும் டிஸ்க்ரிப்ஷன் கொடுக்க வேண்டாம்” பட்டாசாக வெடித்தவளின் கோபத்தில் குளிர் காய்ந்தான் சக்தி; அவளது கோபம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

“ஹே அரிசி மூட்டை கூல்… கூல்… எதுக்கு இப்படிக் கோபப்படற?” கேரட் சட்னிக்கு வதக்கியவள், சித்ரா மேலிருந்த கோபத்தை அடுப்பில் காட்டிக்கொண்டு,

“இப்போ எதுக்கு அவ பேரை இழுக்கறீங்க?” கடுப்பாகக் கேட்க,

“ஒன்னும் இல்ல. அந்தப் பொண்ணை நேத்து பார்த்தேன். அதான்” என்று கூறவும் அவளது முகம் ஜிவுஜிவு எனச் சிவந்தது. ‘உர்ர்’ என முறைத்துக்கொண்டு கையில் தோசை கரண்டியை எடுத்தவள் அவனுக்கு முன் நீட்டி,

“டேய் பிசாசு!”

“என்னது டேய் பிசாசா?”

“ஆமான்டா பிசாசு! அவ இங்க நிக்கறா இவ அங்க நிக்கறான்னு எவளையாவது பார்த்த, இந்தத் தோசை கரண்டி பழுத்துரும். அவ உன் முன்னாடியே வந்தாலும் நீ யூ டர்ன் அடிச்சுத் திரும்பலை உன்னை பிச்சுப் போடுவேன்” அவள் மிரட்டுவது போல மிரட்ட, சக்திக்கு அவளது அந்த அவதாரம் சிரிப்பை வரவழைக்க, சித்ராவைப் பார்த்த முறையையும் அந்தச் சூழ்நிலையையும் அவளது விரக்தியான தோற்றத்தையும் கூற மறந்து போனான்.

அங்குச் சித்ராவோ இறந்துவிட மாட்டோமா என்று கீர்த்திவாசனிடம் சித்ரவதைப்பட்டுக்கொண்டிருந்தாள்.

***

காலையில் எழும் போதே தலைசுற்றிக் கொண்டு வந்தது சித்ராவுக்கு. நேற்றைய இரவு வயிற்றுக்கு ஒன்றும் போடாமலிருந்தது வேறு வயிற்றை அலறச் செய்து கொண்டிருந்தது. அருகில் பரப்பிக் கொண்டு படுத்திருந்த தன் கணவனைப் பார்த்தாள்; அருவருப்பாக இருந்தது.

விடிந்தவுடன் எழுந்த போது தான் தான் உயிருடன் இருப்பதையே நம்பினாள் சித்ரா. ஏனென்றால் இரவு அவன் செய்த சித்ரவதையின் போதே உயிர் பிரிந்து விடாதா என்று ஏங்கினாள்; ஆனாலும் இறைவனுக்குக் கருணை இல்லையே!

சோபாவில் விஸ்கி பாட்டிலோடு அமர்ந்தவனைப் பார்த்த போது உள்ளுக்குள் குளிரெடுத்தது. அவன் குடிக்காத போது மிருகம் என்றால் குடித்த பிறகு அரக்கனாகி விடுவானே! மெளனமாக வறுத்த முந்திரியை அவன் முன் வைத்தபோது அவன் பார்த்த பார்வையில் நடுங்கினாள். இன்று என்ன திட்டமிட்டிருக்கிறானோ? ஆண்டவா காப்பாற்று!

அதன் பின் ஒவ்வொன்றாக அரங்கேறியபோதும் எப்போது அவனது திட்டம் வெளிவருமோ என்ற நினைவே இருந்தது. ஒரு கட்டத்தில் அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட போதுதான் அவனது ஆட்டம் ஆரம்பித்தது. அவளது இரு கைகளையும் கட்டிலில் இருபுறமுமாகக் கட்டினான்.

“ஏன்? என்ன பண்றீங்க?” கேட்கும் போதே அவளுக்கு உள்ளூற பயப்பந்து உருண்டது.

“ஜஸ்ட் சின்ன விளையாட்டுத்தான் சித்து குட்டி” அவன் கண்ணடித்துக் கூற, எச்சிலை விழுங்கிக் கொண்டாள் சித்ரா. சிறிய விளையாட்டா?

“ப்ளீஸ் என்னை கழட்டி விட்டுடுங்க. பயமா இருக்கு” பயத்தில் நடுங்கியது அவளுக்கு.

“கழட்டி விடவா இவ்வளவு செலவு பண்ணி இதை வாங்கினேன்?” என்று மெதுவாக அதைப் பிரித்தான் கீர்த்திவாசன். அது ஒரு சிறிய ரக மிஷினை போன்ற தோற்றத்தில் இருந்தது. எதற்காக இதை வாங்கினான் என்று யோசிக்கும் போதே அதை எடுத்துக் கொண்டு அவளருகில் வந்தான்.

நிதானமாக அவளைப் பார்வையிட்டவன் அருகில் அமர்ந்து சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை உள்ளிழுத்து அவளது முகத்தில் ஊதினான். முகத்தை மூடிக்கொள்ளவும் முடியாதபடி கட்டி வைக்கப்பட்டிருக்க, நெடி தாங்க முடியாமல் அவள் இருமினாள்.

மெதுவாக அதில் எதையோ திருக, ‘கிர்ர்ர்’ என்ற ஓசையுடன் அது இயங்க ஆரம்பித்தது.

“என்னது இது?” சுதாரித்துக் கொண்டு அவள் கேட்க,

“வைப்ரேட்டர்” ஒற்றை வரியில் அவன் முடிக்க, அது எதற்கு என்று புரியாமல் சித்ரா பார்க்க, பார்த்துக் கொண்டிருக்கும் போதே உடம்பில் அதை இயக்க ஆரம்பித்தான்.

மென்மையான பாகத்தில் வைப்ரேட்டர் அதன் பணியைச் செய்ய, தனக்கு ஏதோ நேர்கிறது என்ற உணர்வில் சித்ரா அவளையும் மீறி அழ ஆரம்பித்தாள்.

“அம்மா… ப்ளீஸ்… வேண்டாம்” அழுது கொண்டிருந்தவளுக்கு உணர்வுகள் தூண்டிவிடப்பட்டு கொண்டிருக்க, அழுகை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

உடல் அவளையும் மீறி வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பிக்க, பயத்தில் மீண்டும் அழ ஆரம்பித்தாள். கீர்த்திவாசனோ விடாமல் அதை இயக்கிக் கொண்டிருக்க, விடாமல் உடல் துடித்தது.

அவனது சிகரெட் முடியும் தருவாயில் இருக்க, அவளுடைய உடலும் மீண்டும் துடிக்க, முடிந்த சிகரெட்டை அவளது வயிற்றில் நசுக்கி அணைத்தான்.

“ஐயோ அம்மாஆஆஆ!” அவளது அலறல் அறையை கிழித்துக் கொண்டு சென்றது. அவளது அந்த அழுகை அவனுக்குச் சொல்ல முடியாத பேரானந்தத்தைத் தர, பெருங்குரலில் சிரித்தான்.

“திஸ் இஸ் ஆர்கசம் வித் பெய்ன்! எப்படி பார்த்தியா? ரெண்டு எக்ஸ்ட்ரீமும் ஒரே நேரத்துல… வாவ் வாவ்” தன்னைத் தானே பாராட்டிக் கொண்டிருந்தவனைப் பயத்தோடு பார்த்தாள் சித்ரா.

“ப்ளீஸ் வேணாம். என்னை விட்டுடுங்க. ப்ளீஸ்ஸ்ஸ்” அவளுடைய கெஞ்சல் எல்லாம் காற்றில் கரைய, அவனது மூன்றாவது சிகரெட் முடியும் வரை, அவள் மயங்கிச் சரியும் வரை அந்தச் சித்ரவதை தொடர்ந்தது.

காலையில் தடுமாறிக் கொண்டு குளியல் அறையில் நுழைந்தவளுக்குச் சுற்றுப்புறம் தட்டாமாலை சுற்றியது. ஷவரைத் திறந்து விட்டு நின்றவளுக்கு உடலில் ஒவ்வொரு பாகமும் எரிய, ஒரு வழியாகக் குளித்து முடித்து வந்தாள்.

காலை டிபனை மெளனமாகச் செய்ய ஆரம்பித்தவளைக் கலைத்தது அவனது குரல்.

“ஹாய் ஸ்வீட்டி” பின்னோடு அணைத்துக் கொண்டவனை எரிந்து கொண்டிருந்த அடுப்பில் தள்ளி முகத்தை எரித்து விடலாமா என்று யோசித்தாள். உடல் மிகவும் பலவீனமாக இருந்தது; கைகள் இன்னமுமே நடுங்கிக் கொண்டிருக்க, அவளது நிலையைப் பார்க்கும் போது அவனது மகிழ்ச்சி அதிகரித்தது.

“சித்து குட்டி” கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அவன் அழைக்க, பிரயத்தனப்பட்டு வாய் திறந்தாள்.

“ம்ம்ம்”

“இன்னைக்கு ஈவினிங் ஒரு பார்ட்டி. ரெடியா இரு” என்று கூறிவிட்டு இன்னும் சில சில்லறைச் சில்மிஷங்களைச் செய்து விட்டு அவன் குளிக்கப் போக, மௌனமாகவே டிபன் செய்து முடித்து விட்டு, அவனது வயிற்றுக்கு அதைத் தந்துவிட்டு, வேலைக்கு வந்தவரிடம் பாத்திரங்களை ஒழித்துப் போட்டுவிட்டுச் சோபாவில் தொப்பென்று அமர்ந்தவளுக்கு அவளது வாழ்க்கையை நினைத்துப் பயம் பீடித்தது.

இந்த வாழ்க்கை தேவையா என்று அவள் மிகவும் யோசித்துக் கொண்டிருந்தாள். தாயிடம் இலைமறைவு காய்மறைவாகக் கூறிய போது, ‘அனுசரித்துக் கொண்டு போ’ என்பதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை.

அவனுக்கு இருந்த பிற பெண் நட்புகளைப் பற்றி கூறியபோதோ,

“அவன் ஆம்பிளை. அப்படித்தான் இருப்பான் கண்ணு. நீ தான் வேற எவளைப் பத்தியும் அவன் நினைக்காத மாதிரி நடந்துக்கணும்” என்ற அறிவுரை அவளுக்கு இன்னமும் அருவருப்பைத் தந்தது.

அவளுக்கு ஒரு புறம் எச்சிலிலையில் அமர்ந்து உண்பது போலக் கேவலமாக இருக்க, மறுபுறமோ அவனது சைக்கோத்தனமான சித்ரவதைகள் உயிரைக் கொன்றன.

கண்களை இறுக மூடித் திறந்தவள் செல்பேசியை எடுத்துச் சக்திவேலின் எண்ணைப் பார்த்தாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் இருபத்து ஒன்று

நந்தினியை எக்ஸாம் ஹாலுக்கு அனுப்பி வைத்து விட்டு குடோனுக்கு வந்தவனுக்கு அவளைக் காட்டிலும் பரபரப்பாக இருந்தது. அவளிடம் 'ஜஸ்ட் சும்மா போய் பார்த்து விட்டு வா' என்று தைரியம் கூறினாலும், உள்ளுக்குள் பதட்டம் குறையாமலிருந்தது. அவள் தைரியமாக இருப்பாளா, முடிவு சரியாக…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்