arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 1

அத்தியாயம் 1

visibility 1,486
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (15 மதிப்பீடுகள்)
பகிர்

அகந்தை எழுந்தால் சகலமும் எழும். அது ஒடுங்கினால் அனைத்தும் ஒடுங்கும். அதைக் கண்டறிவதே வெற்றிக்கு வழியாம். நான் யார்? என்று விசாரித்து இதயத்துள் நுழைய, அகந்தை வேரோடு சாயும். பின் வேறொன்று ‘நான்-நான்’ என்று இடைவிடாது ஸ்புரிக்கும். அது அகந்தை அன்று…

முழுமையான ஆத்மாவாம்!

பகவான் ரமணர்

பாண்டிச்சேரி, தட்டாஞ்சாவடி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் அமைந்து இருந்தது பிரம்மாண்டமான பலமாடி கட்டிடம் ‘சுஷ்ருதா பார்மசுடிகல்ஸ்’. தென்னிந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனம். பல கிளைகளையும் உலக அளவில் தொடர்புகளையும் கொண்டிருக்கும் மிகப் பெரிய நிறுவனம்!

அவர்களது அடித்தளம் இந்தியா என்றாலும் உலகம் முழுக்க சந்தையையைக் கொண்டு பரந்து விரிந்த சாம்ராஜ்யம்! அவர்களின் தொழில் நேர்த்தியும் சமூக அக்கறையும் பலராலும் வியந்து பாராட்டப்பட்ட ஒன்று! சுனாமியின்போது மிக தீவிரமாக கடலூரில் மீட்பு பணியில் இறங்கியவர்கள்… அதற்குப் பின்னும் மறுகட்டமைப்புக்காகப் பெரிதும் உழைத்து அந்த மக்களுக்கு உதவியவர்கள் என்று பல முகங்களைக் கொண்டு அதற்காகப் பாராட்டையும் அரசாங்கத்தின் கெளரவத்தையும் பெற்ற பொறுப்பு மிக்க கம்பீரமான கார்த்திகேயனின் தலைமையில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தது சுஷ்ருதா பார்மா!

அவனுடைய தந்தை ரங்கராஜன் தனது நண்பர் மாசிலாமணியுடன் சேர்ந்து துவங்கியது என்றாலும் மிகப் பெரிய வளர்ச்சி என்பது கார்த்திகேயன் நிறுவன பொறுப்பை எடுத்துக் கொண்ட இந்த எட்டு ஆண்டுகளில் தான் என்பது கண்கூடான உண்மை! இதற்காகவே மெடிக்கல் என்ஜினரிங்கில் சிறப்புப் பட்டம் பெற்று மேலும் தொழில் மேலான்மையிலும் பட்டம் பெற்ற பிறகே அவனது தந்தை கார்த்திகேயனை இந்தத் துறையில் செயல்பட அனுமதி தந்தார்… சிறு வயது முதலே பரிச்சயம் இருந்தாலும் இந்தத் துறையின் அறிவு இல்லாமல் இதில் ஒரு சதவிதம் கூட முன்னேற முடியாது என்பது அவரது தீர்மானமான முடிவானது! அதனை மெய்பித்தது கார்த்திகேயனின் வருகை!

அந்தத் துறையில் இருந்த அனைவரையும் பின்னுக்கு தள்ளி விட்டு அவனது அதீத அறிவாலும் அதிபுத்திசாலிதனத்தாலும் எட்டு ஆண்டுகளில் முதல் இடத்தைப் பிடித்தான்! ஆனால் அவன் முதல் இடத்தில் இருப்பதற்கு அது மட்டும் காரணமல்ல… அவனது இன்னொரு முகம்… புதுவையின் நிழல் அரசாங்கம் என்பது!

தந்தை மகன் என இருவரும் நேரடி அரசியலில் இல்லை என்றாலும் புதுவை அரசியல்வாதிகளுக்கு இவர்களது பணம் தேவை… ஆட்கள் தேவை! அதைச் சரியாக உபயோகப்படுத்தினான் கார்த்திகேயன்… அவனது சாம்ராஜ்யம் புதுவையை தான்டி தென்னிந்தியா முழுவதும் பரந்து விரிந்தது… அவனைப் பொறுத்தவரை எதிரிகளுக்கு மிக மோசமான எதிரி… நண்பர்களுக்கு மிகச் சிறந்த நண்பன்… அவனது தேவை வெற்றி! வெற்றி மட்டுமே! அதற்காக எந்த அளவும் இறங்கி அடிப்பதற்கும் தயாராக இருப்பவன்! ஆனால் தொழிலில் நேர்மையாளன் இல்லையென்றால் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியாதே!

சிறியவர்கள் உள்ளுக்குள் வந்தபிறகு பெரியவர்கள் வழி விட்டு ஒதுங்கினர்! கார்த்திகேயனோடு மாசிலாமணியின் மகன் அரவிந்தனும் தன் தந்தையின் வழியைப் பின்பற்றினான்! தொழிலில் கார்த்திகேயனோடு சேர்ந்து காலூன்றினான்.

சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்தத் தொழிற்சாலை. எங்கும் சுத்தம் எதிலும் சுத்தம். கைக்குக் கையுறையும் முகத்துக்குத் தனியாக உறையும் அணிந்து கடமையே கண்ணாக மெஷினிலிருந்து விழுந்த மாத்திரை பட்டைகளைச் சேகரித்து கொண்டிருந்தனர் தொழிலாளர்கள். முழுவதுமாகத் தானியங்கி இயந்திரங்கள் என்பதால் ஆங்காங்கே நின்றிருந்த தொழிலாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலையைச் சரியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்! அவர்களது தொழில் வெறும் மாத்திரை, ஆயின்மென்ட் மட்டுமல்ல… பெரிய பெரிய மருத்துவமனை உபகரணங்களிலிருந்து சிறிய ஊசிவரை தயாரிப்பது.

உள்ளே நுழைந்தவனை கண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பவ்யமாக வணக்கம் தெரிவித்தனர்! அவன் கார்த்திகேயன்! மாநிறத்தை தாண்டிய நிறம்… அனைவரும் அண்ணாந்து பார்க்கும் உயரம்… அதற்கு ஏற்ற அளவான சதைபிடிப்பான தேகம் அவனது தினசரி உடற்பயிற்சியை கூறியது… பார்வையின் தீட்சண்யமும் கூர்மையும் எதையும் விட்டு வைக்கமாட்டேன் என்றது! முகம் மட்டும் கல் போலக் கடினமாக உள்ளே நுழைந்தவனை பார்க்கும் போதே நடுங்கி விடுவார்கள் தவறுச் செய்தவர்கள்!

“மாரியப்பா… நீ தான் இங்க சங்கம் வைக்கக் கொடி பிடிக்கிறதா?” அவனைப் பார்க்க அங்கே கூடி இருந்த பதினைந்து பேரில் ஒருவனை பார்த்து கார்த்திகேயன் கேட்க…

“நான் மட்டும் இல்லைங்கய்யா… என்னோட இவங்க எல்லாரோட எண்ணமும் அதுதாங்க…” பேசுவதற்கு தயங்கி கொண்டு பேசினாலும் தெளிவாகக் கூறினான் அந்த மாரியப்பன்!

“எந்த தைர்யத்துல இப்படி என் முன்னாடி நிற்கறீங்க? சங்கம் ஆரம்பிக்கனும்னு சொல்லி… யார் கொடுத்த தைர்யம்…” கோபம் கொப்பளித்தாலும் அதை அடக்கி நிதானமாகக் கேட்டான்!

“ஐயா… நாங்க பிரச்சனை பண்ண சங்கம் ஆரம்பிக்கலை… எங்க கருத்துக்கள சொல்றதுக்கு ஒரு வழி தேவை… அதுக்குதான்…” என்று பயந்து கொண்டே இழுத்தான்.

“இப்போ என்ன… உங்க கருத்தெல்லாம் கேட்காம இருக்கேனா? இல்ல குறைச்ச சம்பளம் கொடுத்துக் கொடுமை பன்றேனா? எல்லாமே சரியாதானே போயிட்டு இருக்கு… அப்புறம் எதுக்கு சங்கம்?”

“எப்படி இருந்தாலும் சங்கம்ன்னு ஒன்று இருப்பது நல்லதுக்கு தாங்க ஐயா…” கூட்டத்தில் இருந்த மற்றவர்களும்…

“எதுக்கு? எப்ப நினைச்சாலும் ஸ்ட்ரைக் பண்ணவா?” என்று இழுத்து பிடித்த பொறுமையோடு கேட்டான் கார்த்திகேயன்!

“ஐயோ இல்லீங்கய்யா…” அந்த மணி பயந்து பதற…

“எப்படி என்றாலும்… இங்க சங்கம் ஆரம்பிக்க நான் விடமாட்டேன்… முடிந்தா ஆரம்பித்துகோங்க…” என்று கூறிவிட்டு நிற்காமல் அவனுடைய அறைக்குச் சென்றான்!

கோபத்தோடு போன அதே வேகத்தில் ஜிஎம்மை அழைத்தவன்…

“எல்லாருக்கும் அஞ்சு பெர்சென்ட் இன்க்ரிமென்ட் குடுத்துடுங்க பிரகாஷ் சர்…”

“சர்… ஆனா அவங்க அதுக்கு பிரச்சனை பண்ணலியே…” குழப்பமாகக் கேட்டார் பிரகாஷ்!

“ம்ம்ம்… தெரியும்… அந்தப் பசங்கள வேற வேற கிளைக்கு மாத்திடுங்க… ஒருத்தர் கூட ஒருத்தர பார்த்துக்க கூடாது… அதோட ஒருத்தரும் தமிழ்நாட்டுல இருக்க கூடாது… அதோட சம்பந்தமே இல்லாத வேலையா குடுங்க… ஓகே வா பிரகாஷ்?”

“ஓகே சர்…” என்றவர் முகம் குழப்பத்தைச் சுமந்தது!

“பாஷை தெரியாத ஊருக்குப் போனா அங்க பொழப்பை ஓட்றதுல தான் கவனம் போகும்… அதோட புது வேலைய கத்துகிட்டு செய்யறது கஷ்டம் இல்லையா… அதான்… அதோட குடும்பத்த பிரிஞ்சு வேற இருக்கணும்… இவ்வளவு இருக்கும்போது இந்தச் சங்கம் லொட்டு லொசுக்குன்னு பேசமாட்டாங்க…”

“ஆனா சர்… இந்த அளவு அவங்க மேல ஆக்ஷன் எடுக்கனுமா?”

“ம்ம்ம்… எந்தப் பிரச்சனையா இருந்தாலும் முளைளையே கிள்ளி போட்டுடனும் பிரகாஷ் சர்…   பாவம் பார்த்து வளர்த்து விட்டா நம்ம கிட்டயே விளையாட்டு காட்டிடும்… வேலை பார்த்தா பார்க்கட்டும்… இல்லைன்னா விட்டுட்டு போகட்டும்… வேலைய விடுறதுன்னா தானா அவங்களா போற மாதிரி செய்ங்க பிரகாஷ் சர்… இங்க இன்க்ரிமென்ட் குடுக்கறதுனால இந்தப் பிரச்சனை இங்க காணாம போய்டும் இல்லையா?”

சுழல் நாற்காலியில் அலட்சியமாகச் சுழன்றவண்ணம் மிகவும் சுலபமாகச் சொன்னவனை பார்த்து உள்ளுக்குள் பயம் பொங்க தலையை ஆட்டிவிட்டு சென்றார்! எப்படி பிரச்சனை வராமல் இருக்குமா என்று யோசித்தவர் பின்னர் இது போலவே கடந்து சென்ற பிரச்சனைகளை கார்த்திகேயன் சமாளித்த விதத்தை யோசித்து மனதை சமாளித்து சென்றார்!

கார்த்திகேயனின் செயல்முறை இதுதான்.

செல்பேசி இனிமையாக அழைத்தது! அதன் முகம் பார்த்தவனது முகம் மென்மையானது.

ஷாலினி!

கார்திகேயனுக்காகவே பிரம்மன் படைத்த ஏழாம் அதிசயம்! மீன் விழிகளும் வெண்தந்த உடலும் ஆரஞ்சு சுளை உதடுகளும் கொஞ்சி விளையாடும் பூந்தோட்டம்! அவனைத் துரத்தித் துரத்திக் காதலை சொன்னவள்! காதலில் பெரிய ஈடுபாடு இல்லாத காரணத்தாலோ நேரமின்மையாலோ அவளைச் சுத்தமாகத் திரும்பியும் பார்க்காமல் இருந்தான் ஆனால் மகன் இப்படியே இருந்து விடுவானோ என்று பயந்த ரங்கராஜனும் மங்கையர்கரசியும் தூரத்து சொந்தமான ஷாலினியை பெண் கேட்டு நிச்சயத்தையும் முடித்து விட்டனர்!

அவன் ஷாலினியை திரும்பிப் பார்க்காததில் ஒரு காரணம் உண்டு… ரங்கராஜனின் வியாபாரம் ஒரு சமயம் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க அந்த நேரத்தில் பெரும் பணக்காரராக இருந்த தன் ஒன்று விட்ட மச்சினரான ஷாலினியின் தந்தை சச்சிதானந்ததின் உதவியைக் கேட்டபோது அவர் மறுத்ததோடு மிகவும் கேவலமாகவும் பேசி அவமானபடுத்தி இருந்தார்…

அப்போது கார்த்திகேயனுக்கு வயது எட்டு… சிறுவயதில் மனதில் பதிந்த சம்பவம்… திருமணம் என்று வந்தபோது அதைப் பற்றி எல்லாம் நினைக்காமல் தங்கசிலையாக இருந்த ஷாலினியை மிகவும் விரும்பி நிச்சயித்தார் மங்கை… எப்படியாக இருந்தாலும் ஒன்று விட்ட அண்ணன் பெண்ணாயிற்றே… ஆனால் கார்த்திகேயன் தான் மனம் ஒன்றாமல் இருந்தான்… ஆனாலும் தனக்கென்று நிச்சயித்த பெண்ணாயிற்றே… அவளது தந்தை செய்த தவறுக்கு இவளும் பாவம் என்ன செய்வாள் என்று எண்ணி கொண்டு…

“ஹாய் ஷாலினி!” புன்னகையோடே விளிக்க…

“ஹாய் அத்தான்… இன்னைக்கு மழை தான் வரப் போகுது…”

“ஏன் அப்படி சொல்ற?” காரணம் தெரிந்தாலும் சிரித்து கொண்டே கேட்க…

“ஆமா… எப்போ போன் பண்ணாலும் ஒன்னு பிசியா இருக்கேன்னு சொல்வீங்க… இல்லைன்னா மூவிங்ல இருக்கேன்னு சொல்வீங்க… என் பேர சொல்லி ஹாய் சொன்னது இது தானே முதல் தடவை…” ஆதங்கத்தை கொட்டினாள் ஷாலினி!

“ஹேய் என்னம்மா இப்படி சொல்ற… எப்படி இருந்தாலும் கல்யாணத்துக்கு பின்னாடி நாம தானே பேசப் போறோம்…”

“அதுக்காக இப்போ பேசக் கூடக் கூடாதா அத்தான்?” என்றவளது குரலில் ஏக்கம் தொனிக்க…

“ஓ… சாரிம்மா… நான் அப்படி நினைக்கல…”

“ஓகே அத்தான்… நான் எதுக்கு கூப்பிட்டேன்னா…” என்று இழுக்க ஆரம்பிக்க…

“எதுக்கு?” தலைக்கு மேல் வேலைகள் காத்து கொண்டிருக்க ஷாலினியையும் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் பொறுமையை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு கேட்டான்.

“இல்ல அத்தான்… இன்னைக்கு அண்ணாமலைஸ்ல டைமன்ட் ஜுவல்லரி கண்காட்சி போட்டு இருக்காங்க அத்தான்…”

“சரி அதுக்கு என்ன?”

“ஹய்யோ ஒண்ணுமில்ல அத்தான்… என் பிரண்ட்ஸ் எல்லாம் அவங்க அவங்க பாய்பிரெண்ட்ஸ் கூட அங்க போறாங்க… அதனால…”

“அதனால…” அவள் வரும் இடம் புரிந்ததால் பொறுமை பறக்கும் நிலையில்…

“ப்ளீஸ் அத்தான்… இதுவரைக்கும் உங்களை எங்கயுமே கூப்பிட்டது இல்ல… இப்போ இந்த ஒரு இடத்துக்கு மட்டும்… ப்ளீஸ்…”

“அம்மாவ கூப்பிட்டுகிட்டு போம்மா… இல்லைன்னா உங்க அம்மா கூடப் போ… எனக்கு இங்க நிறைய வேலை இருக்கும்மா…” பொறுமையாக எடுத்துக் கூற அந்தப் புறமோ அவன் தன்னை சுத்தமாக வெறுப்பதாக எண்ணி கண்ணீர் இப்பவோ அப்பவோ என அவள் கண்களில் எட்டி பார்க்க முயன்று கொண்டிருந்தது… குரல் கமற…

“அத்தான்… அவங்க கூடதானே எப்போவுமே போறேன்… நீங்க வந்தா தானே ஸ்பெஷல்…”

“இல்லம்மா முடியாது…” என்று இரும்பு குரலில் முடித்து விட்டவனிடம் இனிமேலும் கேட்க முடியாது என்பதை புரிந்து கொண்டாள்!

“ஏன் அத்தான் என்னை இப்படி அவாய்ட் பண்றீங்க?” தாங்க முடியாமல் கேட்டவளிடம்…

“ப்ச்… ஷாலினி… நீயும் எங்க போய்ட போற… நானும் எங்க போய்ட போறேன்… இன்னும் ஒரு மாசம் தானே இருக்கு கல்யாணத்துக்கு… கல்யாணம் பண்ணிட்டு எங்க வேணும்னாலும் போகலாம்… என்ன வேணும்னாலும் பேசலாம்… இப்போ என்னை விடும்மா…   மேல வேலை இருக்கு…”

“வேலை… வேலை… வேலை… வேலையே கட்டிட்டு அழுங்க அத்தான்…” என்று கோபமாகப் பேசிவிட்டு தொடர்பைத் துண்டித்தவளின் நெஞ்சில் பயரேகை.

“வாழ்க்கை இப்படித்தான் போகுமா? கண்ட கனவெல்லாம் கானல் நீரா? எல்லா இளம்பெண்கள் போலத்தானே எனக்கும் ஆசைகள் இருக்கும்… அவையெல்லாம் பொய்யாகப் போய் விடுமா? என்னுடைய எதிர்காலம் தான் என்ன?”

நினைத்துக் கொண்டிருக்கும் போதே கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் இரண்டு கீழ் சிந்த… பெருமூச்சை வெளியே விட்டு ஜன்னலின் வெளியே நோக்கினாள்! இரண்டு குருவிகள் ஒன்றை ஒன்று சீண்டி விட்டுக்கொண்டு ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தன!

இந்தக் குருவியாகப் பிறந்து இருந்தாலாவது இந்த மாதிரி ஆனந்தமாகச் சுற்றி திரிந்து இருக்கலாமோ? ஊர் அறிந்த கார்த்திகேயனை திருமணம் செய்வது என்பதற்கு தான் குடுக்கும் விலை தான் தன்னுடைய இளமையின் ஆசைகளோ?

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 2

ஒயிட் டவுனில் அமைதியாகக் கடலைப் பார்த்து வீற்று இருந்தது அந்த வெள்ளை மாளிகை! ரங்கராஜனின் இல்லம்! எதிரே கடல் ஆர்பரித்தாலும் அதிலும் ஒரு அழகான ஆழ்ந்த அமைதி தென்பட்டது! அனைத்தையும் உள்ளடக்கிய அமைதி! வாழ்க்கையின் சிறு துளியைச் சுவைத்து விட்டே இத்தனை…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 6

  1. Michailbyyபொதுக் கருத்துMichailbyy

    Чудеса да и только товарищи[url=https://dental-clinic.by/].[/url]
    [url=https://dental-clinic.by/][img]https://i115.fastpic.org/big/2022/0409/b7/a62b0892aa684793ff522df2c6c0b3b7.jpg[/img][/url]
    Есть такой интересный сайт для заказа услуг стоматологии в Минске.К вашим услугам лучшие стоматологи Минска с многолетним стажем.[url=https://dental-clinic.by/]стоматология минск[/url],[url=https://dental-clinic.by/]удаление зуба[/url], [url=https://dental-clinic.by/]отбеливание зубов[/url],[url=https://dental-clinic.by/]лечение зуба[/url],[url=https://dental-clinic.by/]удаление зуба мудрости[/url],[url=https://dental-clinic.by/]стоматология минск цены[/url] и [url=https://dental-clinic.by/]стоматология платные услуги минск[/url].
    Фасад нами поставлена гонористая этюдник: создать сугубо лучшую зуболечебную труд в течение Беларуси. ЯСНО с любыми днем автор близимся буква своей цели.Последние десять полет искаться под наблюдением ясный требования со стороны руководящих органов явление зуболечебных услуг – шель-шевель чуть только в школа один яко перст Минске теперь трудит около двухсот зубных клиник что-что тоже собственных кабинетов. Факт циклопической конкурентной поединке повергло ко данному, что Дентистри откликается самым долгого трафаретам качества.Мы уделяем огромное эмпатия профессиональному основанию приказы, чтобы что часто помогаем товарищ на школение также мастер-классы яко на Беларуси, яко равным ролью за рубежом. Доктора а также ортопеды ходко перещеголяли надобное школение а также пребывать обладателем допуски ять претворение в жизнь одномоментной имплантации (а) тоже прибавленью систему All-on-4 (а) также All-on-6. Шиздец врача ясно милосердные медсестры собираются первую искусную категорию.Выделим три сугубо принципиальных:Специализация сверху выводе трудных клинических случаев имплантации (а) тоже протезирования.Принятая река проведение в жизнь политика специфики а тоже укоренение умозаключительных инструментов позволяет нам предречь возможные опасности (а) также зачислить сугубо оптимальный вариант. Многие наши Посетители повествовали, что числом свой в доску должности жительства им ясненько яко день отказывали в течение школа лечении!Демократичная расценочная политика.Мы хорошо реструкторизировали рабочий эпидпроцесс ясно понизили затраты. ЯЗЫК нас единый наклейка снаружи подчиненности через гражданства больного;Поручительная шефство пациентов.На медицинские хостинг-услуги даются широкие гарантии. В ТЕЧЕНИЕ случае наступления гарантийного вида шиздец опуса довольно объеханы бесплатно.За крайние яман смерть наша сестра сковались подлинными фаворитами в течение течение учреждении равным образом проведении зуболечебного лечения. Да пишущий эти строки от тобой устроили заболевших из Краю стране россии, Казахстана, Украины, Литвы, Латвии, Эстонии, Польши, Германии, Швеции, Финляндии, Израиля, ЭТАЛОН ДЕМОКРАТИИ, Канады, Австралии равно еще чеченец государств. Сверх данного, ко нам обращаются тоже один-два целых уголков Беларуси.По плодам простертого на школа ноябре-декабре 2018 лета выборочного опроса больных возымело роскошную оценку произведения: 96,4% респондентов ставили нам длиннейшую оценку. Большое вам спасибо согласен препоручение!собственными тьмами обнаруживает сервисные хостинг-услуги числом агрегата исцеления “унтер-офицер электроключ”: дображивающие без(воз)мездные консультации, трансферы, штудирование доп милосердного освидетельствования в течение течение Минске.формируем положительный эпистрофа белорусской стоматологии эквивалентно милосердой секторы экономики в течение целом. Я растворены целому миру.Популярные зуболечебные услуги в течение школа Беларуси.Самой шикарный стоматологической предложением, ясно, берется экспресс-имплантация зубов. Через рослому качеству работ, обязательства основательного расследования наша сестра заслужили уважуха (а) также доброй репутацию среди Клиентов.Мы мастерим честь имею кланяться линейкой имплантов Megagen, Noris, а тоже социальный чин премиум-уровня Straumann что-что также Nobel. НА нашем приказу свые зуботехническая электролаборатория эквивалентно рентген-кабинет капля компьютерным томографом последнего поколения.
    Помощью круглою гнети Для вам равным образом древен равно млад удобств!
    [url=https://dental-clinic.by/]диета после отбеливания зубов список продуктов[/url]
    [url=https://dental-clinic.by/]операция по удалению кисты зуба[/url]
    [url=https://dental-clinic.by/]удаление нижней 8 зуба[/url]
    [url=https://dental-clinic.by/]временной зуб удаление[/url]
    [url=https://dental-clinic.by/]зуб подняться температура удаление[/url]
    [url=https://dental-clinic.by/]имплантация зубов дента[/url]
    [url=https://dental-clinic.by/]зубные протезы съемные нейлоновые[/url]
    [url=https://dental-clinic.by/]имплантация зубов верхней челюсти отзывы[/url]
    [url=https://dental-clinic.by/]коронка на 1 зуб металлокерамика[/url]
    [url=https://dental-clinic.by/]композитные виниры поставить[/url]
    [url=https://dental-clinic.by/]гигиена полости рта в стоматологии стоимость[/url]
    [url=https://dental-clinic.by/]лечение пульпита каналы[/url]
    [url=https://dental-clinic.by/]процедура гигиены полости рта[/url]
    [url=https://dental-clinic.by/]капа для отбеливания зубов стоматологическая[/url]
    [url=https://dental-clinic.by/]элайнеры виниры[/url]
    [url=https://dental-clinic.by/]элайнеры после брекетов[/url]
    [url=https://dental-clinic.by/]имплантация 21 зуба[/url]
    [url=https://dental-clinic.by/]поставить съемные зубные протезы цены[/url]
    [url=https://dental-clinic.by/]гной на десне после удаления зуба[/url]
    [url=https://dental-clinic.by/]консультация врача имплантолога[/url]
    [url=https://dental-clinic.by/]стоимость моста на зубы из металлокерамики[/url]
    [url=https://dental-clinic.by/]брекеты h4 самолигирующие[/url]
    [url=https://dental-clinic.by/]консультация и диагностика зубов[/url]
    [url=https://dental-clinic.by/]анестезия через сколько проходит после лечения зуба[/url]
    [url=https://dental-clinic.by/]временные коронки при протезировании зубов[/url]
    [url=https://dental-clinic.by/]удаление гранулемы зуба[/url]
    [url=https://dental-clinic.by/]сколько стоят элайнеры для выравнивания[/url]
    [url=https://dental-clinic.by/]удаление зуба выпал сгусток[/url]
    [url=https://dental-clinic.by/]импланты малиновка минск[/url]
    [url=https://dental-clinic.by/]цельнолитая коронка минск[/url]
    [url=https://dental-clinic.by/]стоматологический центр имплантации зубов[/url]
    [url=https://dental-clinic.by/]отбеливающие пластинки для зубов[/url]
    [url=https://dental-clinic.by/]временные съемные зубные протезы[/url]
    [url=https://dental-clinic.by/]пластинки для зубов[/url]
    [url=https://dental-clinic.by/]керамические виниры срок службы[/url]
    [url=https://dental-clinic.by/]элайнеры беларусь[/url]
    [url=https://dental-clinic.by/]лечение острого гнойного периодонтита[/url]
    [url=https://dental-clinic.by/]чем полоскать десну после удаления зуба[/url]
    [url=https://dental-clinic.by/]коронки с керамической облицовкой[/url]
    [url=https://dental-clinic.by/]имплантация зубов сразу после удаления[/url]
    [url=https://dental-clinic.by/]комплексная имплантация зубов[/url]
    [url=https://dental-clinic.by/]отбеливание зубов до и после фото реальные[/url]
    [url=https://dental-clinic.by/]детские пластинки для зубов[/url]
    [url=https://dental-clinic.by/]срок керамических коронок[/url]
    [url=https://dental-clinic.by/]имплантация двух зубов[/url]
    [url=https://dental-clinic.by/]пломбирование корня зуба[/url]
    [url=https://dental-clinic.by/]пластинка на зубах 6[/url]
    [url=https://dental-clinic.by/]имплантация зубов швы[/url]
    [url=https://dental-clinic.by/]препарирование под металлокерамическую коронку[/url]
    [url=https://dental-clinic.by/]отбеливание зубов дентал[/url]

உங்கள் கருத்தைப் பகிருங்கள்