• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

episode1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
~1~
கதிரவன் செங்கதிர்களை வீசக் குயில்கள் இன்பமாய் கூவ பறவைகள் இங்கும் அங்குமாய் பறந்தோட உலகத்திற்குப் பிரிய விடை கொடுத்து சென்ற சந்திரன் மறைய நம்பிக்கையின் ஆதாரமாய் உதிக்கத் தொடங்கியது சூரியன்.
இரவு முழுவதும் மனதை ஆக்கிரமித்த சிந்தனையால் தூக்கத்தை உதறி காலையில் சாக்குமூட்டையை போல் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் நம் ஹீரோ.

தூக்கத்தைக் களைக்கும் பொறுப்பு வீட்டில் ஒருவருக்கு மட்டும் எப்போதும் இருப்பதைப் போல அவனது தூக்கத்தை கலைத்தார் தந்தை பத்மநாபன்.

“டேய் துருவ் எழுந்து ஆபீஸ் கிளம்பு பா டைம் ஆச்சு” என்று செய்தித்தாளை ஆராய்ந்தவாறு ஹாலில் இருந்து கத்தினார்.

ஆமாங்க நம்ம ஹீரோ பேரு துருவ்,செல்லமா அவன் அம்மா மட்டும் ‘லட்டு குட்டி’னு கூப்டுவாங்க நாம கூப்பிடகூடாது.
அவர் சத்தத்தில் கனவுலகிற்குப் பை பை சொல்லிவிட்டு பூலோகம் வந்தடைந்தான் துருவ் .

தன் அருகில் குழந்தை தனம் மாறாமல் அழகாய் தூங்கி கொண்டிருந்த தன் தம்பி கிரிஷை சிறிது நேரம் ரசித்துவிட்டு எழுத்து காலை கடன்களை முடித்துவிட்டு டைன்னிங் டேபிள் போனவனுக்குச் சுடச் சுட மணக்க மணக்க காபி போட்டு வைத்து அவனுக்காக காத்திருந்தார் கிரீஷின் தாய் தேவி.

மணி ஏழைக் கடந்துவிட்டதை உணர்ந்தவன் அவசரமாய் குளித்துவிட்டு வந்து தன் தாயின் போட்டோ முன் சிலையாய் நின்றான் .துருவின் தாய் லட்சுமி .பத்மநாபனின் முதல் மனைவி.பன்னிரண்டு வயதில் தன் தாயை இழந்தவனின் மனநிலையில் சற்றும் மாற்றமில்லாமல் இருந்தது. தன் குறும்புத்தனத்தை மட்டுமே விரும்பிய தாயின் பிரிவால் சோர்ந்த துருவ் இதுவரை மாறவில்லை.

“டேய் அண்ணா டெய்லி உன்னால தான் நான் ஸ்சூல்க்கு லேட்டா போறேன் “என்ற கிரிஷின் குரலில் தன்னிலை அடைந்தவன் லேட்டானதை உணர்ந்தான்.

“சரி குட்டிமா சாப்டு வா நாம போகலாம் “செல்லமாக கிரிஷின் நெற்றியில் இதழ் பதித்து அனுப்பிவைத்தான்.தினமும் கிருஷ் துருவுடன் தான் ஸ்கூல் போவான்.

கண்ணாடி முன் நின்றவனின் அழகு அப்பாற்பட்டது. இவனைப் பற்றி அறிந்தவருக்கு மட்டும் தான் திடமான உடற்கட்டுக்குள் இருக்கும் மென்மையான மனம் புரியும்.. சரியான உயரம் அதற்கு ஏற்ற எடை.கூர்நாசி அழகாய் அடுக்கப்பட்ட பல்வரிசை.உதடு சுளித்து சிரிக்கும் நொடியில் ஈர்க்கும் பல பெண்களை.

கப்போர்டிலிருந்து ஒரு நேவி ப்ளூ ஷர்ட் எடுத்தணிந்தவன் நடிகர் சூர்யாவை போல இருந்தான் (உண்மை தான் ஏன் ஹீரோ ல கண்டுகாதிங்க மக்களே)..
வசிகரமாய் இருக்கும் அவன் தேகத்தின் அழகில் மயங்காத பெண்களே இல்லை.அவன் ஆபிஸில் உள்ள பெண்கள் பலர் அவனைச் சுற்றி வந்தனர்.ஆனால் அவன் மனம் என்னவோ காவ்யாவை தான் சுற்றியது.காவ்யா ஒரு பிரபலமான பிரைவேட் நிறுவனத்தில் ஹெச்சாரக பணிபுரிகிறாள்.காவ்யாவும் துருவும் பாலிய நண்பர்கள் .
துருவ் வேலைப் பகுதி நேரம் என்பதால் நண்பனின் கடையில் பார்ட் டைம் வேலை செய்கிறான்.அவன் வீட்டில் இருக்கும் நேரம் இரவு மட்டும் தான்.
சிற்றன்னையான தேவி அவனை எந்த விதத்திலும் தன்னை காயம் செய்யாவிடினும் தன் தாயின் இடத்தில் இன்னொரு பெண்ணை அவனால் ஏற்க முடியவில்லை.
காலை ஒன்பது மணிக்குத் தொடங்கும் வேலைக்கு அவன் எட்டு மணிக்கே கிளம்ப வேண்டும்.
தனது ராயல் என்பீல்டில் ஏறிப் போகும் அழகை நின்னு ரசித்து செல்லாத ஆளே இல்லை என்றால் பார்த்துகோங்க நம்ம ஆளோட மதிப்பை..

வேளச்சேரி கால் சென்டர் வளாகம்:

வருகைப் பதிவேட்டில் கையொப்பம் வைத்துவிட்டு உள்ளே நுழைந்தான். தனது கேபின் அருகே இருக்கும் கார்த்திக்கை காணாததால் அவனுக்கு அழைப்பு விடுக்க

“அடைமழை அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் “ எனப் பாடும் அவனின் காலர் ட்யூனை நினைத்து சளித்துகொண்டவன்.

“டேய் மச்சான் ஏன் டாஇன்னும் வரல?” என்றான் தனது குரலில் சலிப்பைக் காட்டி

“துருவ்..தங்கச்சிக்கு உடம்பு முடில டா .ஒன்அவர் பெர்மிஷன் வாங்கிருக்கேன் மச்சான்.”என்றான் மறுமுனையில் கார்த்திக்.

“சரி டா அனிதாவ பாத்துக்கோ” தனக்குத் தங்கை இல்லை என துருவ் நினைக்காததற்குக் காரணம் அனிதா தான்.

“மச்சான் ஒரு ஹெல்ப் டா, நம்ம அரவிந்த் சார்க்கு ஒரு மெயில் பார்வர்ட் பண்ணுனேன் அதுக்கு ரிப்ளை பண்ணிட்டாங்கலானு பாத்து சசி கிட்ட சொல்லிடு டா” என்றான் வேலையின் பளுவை நினைத்து.

“சரி டா நான் பாத்துக்கிறன், நீ அனிகுட்டிய பாத்துக்கோ” என்றான் அவனுக்கு ஆதரவாக.

போனை வைத்தவன் கார்த்திக்கின் வேலையை முடித்து தன் வேலையில் முனைந்தான்.

ஒரு மணி நேரம் கழித்து வந்த கார்த்திக், தனது வேலையில் மூழ்கிவிட உணவு இடைவேளை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம் வரையிலும் அயர்ந்து தூங்கிய துருவை நோக்கி புன்னகித்தான் கார்த்திக்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்த துருவ் உணவு உண்ண நண்பனுடன் சென்றான்.

“என்ன மச்சான் நைட்லாம் தூங்கல போல” என விஷமமாய் கேட்டகார்த்திக்கை நோக்கி முறைத்தவன்

“ஆமாம் டா நைட் புல்லா உன் தங்கச்சி காவ்யாட பேசிட்டு கொஞ்சிட்டு இருந்தேன்.. போடா நீ வேற. உனக்குத் தெரியும் நான் என்ன பண்ணிருப்பேனு..” சோகமாய் முகத்த வச்சிட்டு சொன்னவன்னை பாவமாய் பார்த்தான் கார்த்திக்.

“அம்மா உன்ன விட்டுஎங்கேயும் போகல டா .. நீ சந்தோஷமா இருந்தா தான் அவங்களும் நிம்மதியா இருபாங்க.இருகிறவங்கள் கஷ்டபடுதாம நீயும் கஷ்டபடாம இரு டா..”என்றான் அவன் கை பிடித்து.

தன்னை நேசிக்கும் நெஞ்சங்கள் கொஞ்சம் இருக்கிறது என்ற மனநிலையோடு ”விடு டா மச்சான்,அப்புறம் சத்யாகிட்ட பேசினியாடா ,அவ ரொம்ப பீல் பண்றா.”
சத்யாவும் கார்த்திக்கும் லவ் பண்றாங்க.எல்லாருமே ஸ்கூல் பிரிண்ட்ஸ்தான்.

“இல்லை டா அவ இஷ்டத்துக்கு பேசுறா.எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா அவளுக்கு கல்யாணம் பண்ணாம நான் எப்புடி டா அவகூட வாழ்றது,சொன்ன புரிஞ்சிக்கனும் டா”என்றான் கார்த்திக்.

“சரி டா நான் சொல்றேன் அவகிட்ட.நீ சாப்பிடு..”துருவ் கார்த்திக்கின் நட்பு பதினெட்டு ஆண்டுகளாய் இருப்பது.இவர்களின் பரஸ்பரத்தை பார்த்து பொறமை படாதவர்கள்இல்லை.
சாப்பிட்டு முடித்தவர்களை மறுபடியும் வேலை இழுத்துக் கொள்...சரியாக மூன்று மணிக்கெல்லாம் தனது வேலையை முடித்துவிட்டு துருவிற்கு அழைப்பு விடுத்தாள் காவ்யா..

“வெண்மதி வெண்மதியே நில்லு –நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு “ மின்னலே படத்தின் பாடல் இசைக்க..அழைப்பது யாரென அறிந்தவனின் இதழில் புன்னகை விரிய கைபேசியை எடுத்தான் துருவ்.

“சொல்லு காவ்யா.. எனக்கு வேலை முடியல இன்னிக்கி நீயா போயிடு..” தன் கணினியை ஆராய்ந்தவாறு பேசினாலும் இதழில் சிரிப்பு மிச்சமிருந்தது..

“ஏன் டா படபடனு பேசுற கொஞ்சம் மூச்சு விடு மாமா..”செல்லாமாய் அதட்டினால் காவ்யா.

“சரி நீ சொல்ல வந்தத சொல்லு டி எனக்கு நிறைய வேலை இருக்கு..” என்றவனுக்கு கண்கள் கணினியில் இருந்தாலும் மனம் என்னவோ அவளது பேச்சில் இலயித்திருந்தது..

“நானும் வரலனு சொல்ல தன் கால் பண்ணுனேன்.. அம்மாக்கு செக் அப்க்கு கூட்டிட்டு போனும் அததான் சொல்ல வந்தேன் மாமா..”
அவ அம்மா னு சொன்னது துருவோட சித்தியை தான்.காவ்யாவிற்கு துருவ் சித்தி அப்பா தம்பி என்றால் அவளின் குடும்பமாக பாவித்து பார்த்து கொள்ளுமளவிற்கு பிரியம்

“ஓஓ நான் மறந்துட்டேன் . எப்போ முடியும்னு சொல்லு நானும் வரேன்.. “ என்றான்.

“சரி மாமா..முடிஞ்சதும் சொல்றேன்.. “என்று கூறிவிட்டு போனை அணைத்ததும் வேலைப் பளுவின் காரணமாகச் சிறிது கண் அயர்ந்தவனின் நினைவு பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்தவற்றை அசைப்போட துவங்கியது…(அதாவது ப்ளாஷ்பாக்)

“துருவ்… அம்மாக்கு நெஞ்சு வலிக்குது டா அப்பாவ போய்கூட்டிட்டு வா டா.. “என்றால் லட்சுமி.

“அம்மா நான் தான் விளையாடிட்டு இருக்கேன்ல மா , நீயே எழுந்து போ மா..”என்றான் துருவ்.
பத்மநாபன் அப்பொழுது தான் பேப்பர் வாங்கக் கடைக்கு போனார்.அவர் வர பத்து நிமிடம் ஆச்சு.அதற்குள் லட்சுமி மயங்கியே விழுந்துவிட்டார்.விழுந்த சத்தம் கேட்டு ஓடிய துருவ் வாசலிலே சிலையென நின்றுவிட்டான் . சில மணித்துளிகள் பின்பே சுய நிலையை அடைந்த துருவ் போட்ட கூச்சலில் வீடு அருகில் இருந்த அனைவரும் உதவிக்கு வர லட்சுமி ஹாஸ்பிட்டல் அழைத்துச் செல்லப்பட்டார்.

சிறிது நேரம் கழித்தே வீட்டிற்கே வந்தடைந்த பத்மநாபன் செய்தி கேட்டு அலறி அடித்து ஓடினார் லட்சுமியிடம். அவரைப் பரிசோதித்த டாக்டர் உயிர் பிழைப்பது கஷ்டமெனக் கூறிவிட,
 
kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
துருவ் மனதில் தன்னால் தான் அம்மா இறந்துவிட்டாள் என்ற நினைப்பு ஆழப் பதிந்துவிட அவனது அழுகை அதிகமாகியது..

சிறு மழலையாய் இருந்த அவன் குரல் மருத்துவமனை முழுதும் பரவியது.காவ்யாவின் தயார் பத்மநாபனின் தங்கை.லட்சுமியும் வனிதாவும்(காவியாவின் தாய்) தோழிகள்.

தன் தோழியின் பிரிவில் மனம் தளர்ந்த அவரும் மயங்கி விழ, லட்சுமியின் பிரிவில் வாடிய குடும்பம் வனிதவையும் எண்ணி வருந்தியது.
அனைவரும் வனிதவை பார்க்க துருவ் மட்டும் தன் தாயின் சேலையை பிடித்தவாறு அழுதுக் கொண்டிருந்தான்.

“அம்மா எழுந்திரு மா , நீ கூப்பிட்டு அப்போ வரலனு இப்போ நீ என்கிட்ட பேசமாட்டுக்க, பேசு லட்டுமா “ என்று கதறி அழும் பன்னிரண்டு வயது துருவை பார்த்த அனைவரின் மனமும் கலங்கியது.

கண்களில் நீர்த்துளி பொங்க கனவில் இருந்த துருவை நிகழ்வுக்கு மீட்டியது அவன் கைப்பேசி..கைப்பேசியை எடுத்தவன் சத்தியாவின் பெயரைப் பார்த்ததும் கார்த்திக்கை தேடி அவன் எங்கும் இல்லாது போக அழைப்பை ஏற்றான்.

“துருவ் நா சத்யா,கார்த்திக் ரொம்ப பிரச்சனை பண்ணுறான் .அவன் உண்மையா என்ன லவ் பண்ணிருந்தா இந்த மாதிரி பேசிருக்கமாட்டன்” என்று ஆதங்கமாய் பேசிய சத்யா மூச்சுவிட இடைவெளி கொடுக்க

“சத்யா அவன் சொல்றத நீ புரிஞ்சிக்கணும்மா.. அவனுக்குத் தங்கச்சி இருக்கிறா அவளுக்கு முன்னாடி இவன் கல்யாணம் பண்ணிகிட்ட ஊரு என்ன பேசும்மா..” என்றான் வேகமாக

சிறிது நேரம் அமைதி காத்தவள் “கார்த்திக் வந்ததும் போன் பண்ண சொலுங்க துருவ்”கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டாள் சத்யா.
சசி இவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் மேனேஜர்..சசி இருவருக்கும் வேலை செய்யும் அனைவரிடமும் நட்புடனே பழகுவான்.

துருவ் கார்த்திக்கிடம் தனி பாசம் .இருவரையும் சகோதரனாக நினைத்து பழகுவான்.சசியை பார்த்துவிட்டு வந்த கார்த்திக்கிடம் நடந்ததை அப்படியே கூறினான்.தன்னைக் காப்பாற்றிய தன் நண்பனைக் கட்டி அனணத்துவிட்டு அவன் கைப்பேசியை எடுத்து ஓடினான்.

இவர்களின் சம்பாஷனைகளை கேட்ட துருவ், காவ்யா அவன் மீது கொண்ட காதலை எண்ணினான்.துருவின் பேச்சிற்கு மறுவார்த்தை பேசாத பெண்.தன்னைக் கேள்வி கேட்டால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்ததால் இம்சை செய்யும் எந்த விஷயமும் காவ்யா செய்வதில்லை.

காவ்யா துருவ்வின் காதல் தொடங்கியது ஜனவரி 11,2015. துருவின் நட்புக்கு பாத்திரமாய் விளங்கியவளுக்கு தன்னுள் காதல் மலர்ந்த நொடி நினைவில் இல்லாமல் போகலாம்.ஆனால் காதலை வெளிப்படுத்திய நாள் மனதை விட்டு நீங்காத ஒன்று.

ஜனவரி 11,2௦15,துருவ் இல்லத்தில் வைத்து விண்ணைத் தாண்டி வாருவாய சிம்பு போல் அவள் காதலை அவனிடம் சொன்னாள்.

“துருவ்,உன்கூட இருக்கிற அப்போ உன்ன தவிர வேற எதுமே ஏன் மனசல இல்லை.உன் பிரண்டா உன்ன நல்லா புரிஞ்சிகிட்டேன்.காதல்ல புரிதல் இருந்தாலே எல்லாமே வந்துரும்.இதுவும் நீ சொன்ன வார்த்தை தான்.உன் பாஸ்ட்ல ஒரு பொண்ணு இருந்தா இன்னும் உன் மனசுல இருக்கலாம் தப்பு இல்ல.முதல் காதல்னு ஒன்னு எல்லேருக்குமே இருக்கு.அதுல ஜெயிச்சா அவனைவிட பாக்கியசாலி யாரும் இல்ல.இதுவரை உன்கூட வாழ்ந்த நான்... இனிமே உனக்காக வாழனும்னு ஆசை இல்லை பேராசை படுறேன்,” சிம்பு ஸ்டைலுல முட்டி போட்டு சொன்னாள் காவ்யா.

“உனக்கும் என்ன புடிச்சா இந்த ரோஸ்ஸ வாங்கிக்கோ., என்னை பிடிகலனா என்னை உன் வாழ்கைல ஒரு நலம் விரும்பியா என நினைச்சிக்கோ”
பாவமாய் பார்த்தவளை என்ன செய்வது என்று தெரியாவிட்டாலும் தனக்கென இருப்பது அவள் மட்டும் தான் என்பதை உணர்ந்தவன்.அதற்காக அவனுக்குக் காதல் இல்லை என்று ஆகாது.துருவிற்கு காவ்யா மேல் இருக்கும் பாசம் எதனால் என்று அன்று வரை புரியவில்லை .தெளியவைத்தது என்னவோ அவளின் வார்த்தைகள் தான்.
அவளைப் பிடித்து தூக்கி நிறுத்தி “எனக்கென எல்லாம் என் அம்மாக்கு அப்புறம் பண்ணுனது நீதான் உன்ன எந்த சூழ்நிலையிலும் விட்டுத் தரமாட்டேன் உன்னையும் விட்டுக் கொடுக்கமாட்டேன் பப்பு மா. ஐ லவ் யூ ” என்றவனை நோக்கி நடந்தது கனவா என விழித்து நோக்கினாள்.
அவள் எண்ணத்தைப் புரிந்து கொண்டவனாய் அவளைக் கில்லி விட்டு

“இது நிஜம் தான் கனவு இல்ல கண்மணி..” என்று செல்லமாய் அவள் காதோரமாய் கிசுகிசுத்தான்.
அவன் பேச்சில் மயிர்கால் சிலிர்க்க தன் உள்உணர்சிகளின் மந்திரத்திற்குக் கட்டு பட்டவள் போல சிலையாய் நின்றாள் காவ்யா..
அச்சிலைக்கு உயிர் கொடுக்க விரும்பியவன் காற்றும் புகா வண்ணம் இறுக்கி அணைக்க மொத்த காதலும் தென்றலாய் அந்நொடி அவர்களை வருடிச் சென்றது..

வளத்தைச் சூறையாடி அடையும் சிறைவிட
உன் உள்ளத்தைச் சூறையாடி அடையும்
உன் கைச்சிறையே எனது பேராசை...
என்றான் அவள் முகத்தை ஏந்தி....
காதலின் பிடியில் சிக்கும் எவரும் தெரிந்து விழுவதில்லை. தன் காதலை முதல் முயற்சியிலேயே ஏற்பான் என நினைக்காத காவ்யா உணர்ச்சியின் சுழற்சியில் இருந்து மீளாமல் அவனது கைகளுக்குள் சுருண்டாள் இன்பமாக…
****

மருத்துவமனைக்குள் முதலாய் நுழைந்த காவ்யா ஜெர்க் ஆகி நிற்க, அவளது பின்னோடு வந்த தேவியும் தனது முகத்தில் அப்பட்டமாய் அதிர்ச்சியை காட்டினார்..

அவர்கள் பார்த்தது வேறு யாருமில்லை நம்ம பர்ஸ்ட் ஹீரோயினே தான்.ஆம் சாஷினி டயபெட்டிஸ் வல்லுநராக தற்போது தான் பணியமர்ந்தாள்.

சிறிதும் தயங்காமல் ஓடி வந்தவள், ”அம்மா என்னாச்சு? எப்டி இருக்கீங்க? என்ன ஹாஸ்பிடல்...நார்மல் செக்அப் தான மா..” என்றாள் சற்று உரிமையாக.

“ஆமா .நீ இங்க தான் வேலை பார்கிறாயா” என்ற தேவியும் பழைய பாசத்தை தேக்கி கேட்க அங்கு நடக்கும் சம்பாஷணைகளில் சிறிதும் கலந்துக் கொள்ளாமல் தனித்து நின்ற ஜீவன் நம் காவ்யா தான்.
அவளுக்கு இவள் பரிச்சியம் தான் என்றாலும் தனக்கு கணவனாக போறவனின் முதல் காதலி என்றால் யாருக்குத் தான் விருப்பு வரும்.
சற்று ஒதுங்கியே இருந்தவளைக் கவனித்த இருவர் மனதிலும் போர்க்களம்.

“காவ்யாவ பத்தி சாஷினி என்ன நினச்சிட்டு இருக்கிறானு ஒன்னும்புரியலையே” என மனதார குழம்பி கொண்டிருந்தார் தேவி.

“தன் ஆசை நாயகனின் மனைவி இவள் தானோ” என உள்ளுக்குள் புழுங்கி கொண்டால் அவள்.

“அம்மா காவ்யா இது தான் சாஷினி”என்றார் உதட்டில் சிறு வளைவோடு.

“ஹாய் சாஷினி,எப்டி இருக்கீங்க”என்றால் பணிவோடு.

“நான் சூப்பர் காவ்யா “என்றவள் அவளை ஏற இறங்கப் பார்த்தாள்.
மெல்லிய தேகம் நீண்ட கேசம் ஹோம்லி லுக் பார்க்க ரொம்பவே அழகா இருந்தாள் காவ்யா.

காவியாவிற்கு எந்த விதத்திலையும் குறைவு இல்லாம அழகும் மனதும் உடையவள் நம் சாஷினி. அழகும் அழகும் மோதும் காட்சி அங்கிருந்தது.இருவரும் மாறி மாறி எதிரில் இருப்பவரை எடை போட வந்தடைந்தான் நம் ஹீரோ.

அவன் வந்ததில் அதிர்ச்சி அடைந்தது இரு இளம் பெண்கள் மட்டுமால்ல.பேரதிர்ச்சிக்குள் ஆனது நம் தேவியும் தான்.
இரு பெண்களையும் ஒருங்கே சந்தித்ததில் அடைய வேண்டியது இன்பமா துன்பமா என்று யோசித்து பதில் கிடைக்காது குழம்பி நின்றான் துருவ்..

கனவுகள் தொடரும்…
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய இந்த
"கனவிலும் உன்
நிழலாவேன்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கஸ்தூரி டியர்
 
Last edited:

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,074
Reaction score
7,776
Location
Tirunelveli

வாழ்த்துக்கள் பேபி...கதை அருமை
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top