அத்தியாயம் இருபத்து நான்கு
“ஒரு நிமிஷம்” கூர்மையாக முத்துவேல் அழைக்க, திரும்பிப் பார்த்தான் கீர்த்திவாசன்.
அவரது முகத்தில் குழப்ப ரேகைகள். முத்துவேலைப் பொறுத்தவரை குடும்ப கௌரவம், சாதி வெறி என்ற தளைகளில் சிக்கியிருந்தாரே தவிர, தான் பார்த்துத் தன் பெண்ணைத் தனது சாதியில் திருமணம் செய்விக்க வேண்டும் என்று நினைத்தாரே தவிர, தன் மகள் சிரமப்பட்டே ஆக வேண்டும் என்று நினைப்பவர் அல்லர்.
கௌரவத்தைக் காத்துக்கொள்ள வேண்டி மூத்த பெண்ணைப் பலி கொடுத்த வலி அவருக்கும் உண்டு; ஆம், அவரைப் பொறுத்தவரை அது அப்படித்தான்! இரண்டாவது பெண்ணாவது சந்தோஷமாக குடும்பம் நடத்த வேண்டுமே என்ற அவசரத்தில் கீர்த்திவாசனுக்குத் திருமணம் செய்வித்தார். அவனது பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அவர்களது மகளோடு சிறிது நாட்கள் இருந்துவிட்டு வருவதற்காகத் திருமணம் முடிந்த கையோடு சென்றுவிட, அதுவுமே அவருக்குச் சந்தோஷத்தையே கொடுத்தது.
ஆனால் தற்போது அவரது மகளின் முகத்தில் காணப்படும் வலி அவரை முதல் முதலாக அசைத்துப் பார்த்தது. ஆனாலும் குடும்ப கௌரவம் முக்கியமாயிற்றே! கொண்டவனை அனுசரித்துப் போக வேண்டும் தான், ஆனாலும் அதற்கும் மேல் ஏதோ நடக்கிறது என்ற அளவில் அவருக்குச் சந்தேகம் வந்தது.
“மாப்பிள்ளை! எனக்கு அந்தச் சக்தி மேல கோபம் உண்டு தான். நம்ம சாதிப் பொண்ணை இழுத்துட்டுப் போயிட்டான்னு வெறில இருக்கேன். ஆனா அவன் பொய் சொல்ல மாட்டான். சின்ன வயசுல இருந்து அவனை நான் பார்த்துட்டு இருக்கேன்” என்று கூறி இடைவெளி விட, என்னவென்பதைப் போல கீர்த்திவாசன் பார்த்தான்.
சித்ரா சற்று ஆர்வமாகத் தனது தந்தையைக் கவனிக்க ஆரம்பித்தாள். வேணியின் முகத்தில் நிம்மதி பிறக்கத் துவங்கியது!
“அதனால…”
“ஏதோ நடக்காம சக்தி இந்த அளவு கோபப்பட்டுட்டுப் போக மாட்டான். சொல்லுங்க… என்னாச்சு?” என்று கீர்த்திவாசனைப் பார்த்து கேட்க, அலட்டிக்கொள்ளாமல் பதில் வந்தது அவனிடமிருந்து.
“மாமா! ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ப்னா அவங்களுக்குள்ள இஸ்யூஸ் வரத்தான் செய்யும். இதுக்கு நடுவுல வர்றது எனக்குப் பிடிக்காது. அவன் மட்டுமில்ல நீங்களும் கூடத்தான்” தெளிவாகக் கூறிவிட்டு இதற்கு மேல் ஒன்றுமில்லை என்று நகரப் பார்க்க, கோபமாக வழியைத் தடுத்தார் முத்துவேல்!
“நான் பெத்தவன்! எனக்குக் கேட்க உரிமையில்லையா?” முகம் சிவக்க அவர் கேட்க,
“கட்டிக் கொடுத்தாச்சுல்ல… அப்புறம் என்ன பெத்தவன்?” மிகவும் இயல்பாகக் கூறிவிட்டுப் போக எத்தனிக்க,
“என்ன… என்னை என்ன கேனையன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா மாப்பிள்ளை? நீங்க என்ன பண்ணாலும் கேட்கக் கூடாதா? நாங்க ஒன்னும் எங்க பொண்ணை அடிமையா விக்கலை” அவனோ இயல்பான குணத்தைக் காட்டிக் கொண்டிருக்க, அந்தப் பதில் முத்துவேலின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துக் கொண்டிருந்தது.
“எவனோ ஒருத்தன் வந்து என்னை அடிச்சுட்டுப் போறான். நீங்க இப்படி நிற்க வெச்சு கேள்வி கேட்கறீங்க? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? உங்க பொண்ணு என் கூட வாழணுமா வேண்டாமா? வேண்டாம்னா இப்போவே கூட்டிகிட்டுப் போய்டுங்க. டைவர்ஸ் நோட்டீஸ் உங்க வீடு தேடி வந்துடும்” அவரை எப்படி அடித்தால் அரண்டுவிடுவாரோ அப்படி அடித்து முடிக்கப் பார்க்க, பெண்ணைப் பெற்றவர் வாயடைத்துப் போனார்!
அந்த நிமிடத்தில் தன்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து நொந்து கொண்டார். ஆம், அவ்வாறுதான் நினைத்துக் கொண்டார். அவசரத்தில் தனது சாதியா என்று பார்க்கத் தெரிந்தவருக்கு, அவன் நல்லவனா என்று பார்க்கத் தவறியதை அவரது மனம் கடிந்துரைக்க, மனம் இடிந்து போய் அமர்ந்தார். அவரது நிலை வேணிக்குக் கலக்கத்தைத் தந்தது என்றால், மகளின் நிலையோ வயிற்றில் புளியைக் கரைத்தது.
பெற்றவர்களின் கையறுநிலை சித்ராவுக்குக் கோபத்தை வரவழைத்தது என்றால், இன்னொரு புறத்தில் தன்னை இந்த நிலையில் நிறுத்தியதே அவர்கள் தானே என்ற கோபமும் சேர்ந்து கொண்டது. தனக்காகத் தன்னை நினைத்துப் பரிதாபப்படுவதா, அல்லது பெற்றவர்களின் மனக்கலக்கத்தை நினைத்துப் பரிதாபப்படுவதா என்று குழம்பிய நிலையில் இருவரையும் பார்த்தவள், தீர்மானமாகக் கீர்த்திவாசனை நோக்கினாள்.
“டைவர்ஸ் தானே… ரொம்ப சந்தோஷம். மியூச்சுவல் கன்சென்ட்னா ஈஸியா கிடைச்சுடுமாமே. எப்போ அப்ளை பண்ணலாம்?” உணர்வே இல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்க, எரித்து விடுவதைப் போலப் பார்த்து வைத்தான் அந்த கணவன்! அதிர்ந்து பார்த்தனர் பெற்றவர்கள் இருவரும்!
“ரொம்பத் தெளிவா இருக்கப் போல இருக்கு? சொல்லிக் கொடுத்துத் தான் கூட்டிகிட்டு வந்தானா?”
“ஆமான்னே வெச்சுக்கங்க. எப்போ டைவர்ஸ் தரப் போறீங்க?” என்று அதே உணர்வற்ற பார்வையோடு கேட்க,
“அறிவுகெட்டவளே! இதுக்கா உனக்கு ஊர் மெச்சக் கல்யாணம் பண்ணி வெச்சேன்?” அவளது தந்தை அதிர்ந்த குரலில் சப்தமிட, அவரை வெற்றிப் பார்வை பார்த்தான் கீர்த்திவாசன்!
“அப்பா! உங்களுக்குத் தெரியாதுப்பா. எனக்கு இவன் வேணாம்ப்பா”
“புருஷனை அவன் இவன்னு சொன்ன வாய்லையே ரெண்டு போட்டுடுவேன். புருஷன் பொண்டாட்டினா நாலும் தான் இருக்கும். அவர் தப்புப் பண்ணா கேட்க நாங்க இருக்கோம்ல. நீ என்ன டைவர்ஸ் அது இதுன்னு பேசற?”
தனக்காகப் பேச நினைத்த தந்தையையும் அடக்க வேண்டிய விதத்தில் அடக்கி விட்டானே என்று மனதில் நொந்து போனாள் சித்ரா!
“அப்பா… உங்ககிட்ட எப்படிச் சொல்றதுன்னே தெரியலப்பா. இவன் பண்ற கொடுமை” சக்திவேலிடம் சொல்ல முடிந்ததைக் கூடத் தனது தந்தையிடம் கூற முடியவில்லை. தாயைப் பரிதாபப் பார்வை பார்த்தாள் சித்ரா. அதுவரை வாய் திறவாமல் இருந்த வேணி,
“ஏங்க! புள்ளை சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க. காரணமில்லாம சொல்லாது” அவரது கணவனையும் பகைத்துக் கொள்ள முடியாமல், பெற்ற பெண்ணின் துன்பத்தையும் காணச் சகிக்காமல் அவர் தவித்துக் கொண்டிருக்க,
“இங்க பாருடி… அடிச்சுக்கறதும் சேர்ந்துக்கறதும் சகஜம். அதுல நாம தலையிடக்கூடாது. நீ முதல்ல கிளம்பு. இங்க இருந்தா நாலு பேச்சு வளரும். மத்ததை நாம ஊருக்குப் போயிட்டுச் சம்பந்திகிட்ட பேசிக்கலாம்” ஒரே அடியில் முடித்து விட்டுப் கிளம்பினார் முத்துவேல், எப்படியும் அவர்களது சம்பந்தியினர் நல்ல பதிலைக் கூறக்கூடும் என்ற நம்பிக்கையில்!
கிளம்பிய தந்தையை வெறித்துப் பார்த்த சித்ரா, மனமே இல்லாமல் கிளம்பிக் கொண்டிருந்த தாயைக் கூர்ந்து நோக்கினாள்.
‘இப்போவாச்சும் பெத்த பிள்ளைங்க முக்கியம்ன்னு நினையேன்மா. உன் வயித்துல வந்து பிறந்ததை விட நானும் அக்காவும் வேறென்ன தப்பு பண்ணிட்டோம்?’ அவள் கேட்க நினைத்ததை மெளனமாக கேட்க, அதைப் புரிந்த வேணி மனதுக்குள் புழுங்கினார்! ஆனால் காலம் காலமாக அவரது கணவனுக்கு அடிமைப்பட்டு அவரது சொல்லை மீறாமல் நடந்து கொண்டிருந்த இயல்பைச் சட்டென்று அவரால் மாற்றிக்கொள்ள இயலவில்லை!
இருவரும் சென்ற திசையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சித்ராவுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. ஆனாலும் நம்பிக்கை இருந்தது. நாளை நந்தினி சக்திவேலிடம் யோசனை கேட்கலாம் என்று முடிவு செய்து கொண்டு திரும்ப, புன்னகையோடு நின்றிருந்தான் கீர்த்திவாசன், நடந்தவற்றைக்காட்டிக்கொள்ளாத முகத்தோடு!
மனம் கடுத்தது சித்ராவுக்கு!
“என்ன சித்துக் குட்டி? சின்னப் பிள்ளையாட்டம் அப்பாகிட்ட கம்ப்ளைன்ட் பண்ற?” அவனது புன்னகை அதிகமாக, அவனை முறைத்து விட்டு உள்ளே செல்ல எத்தனித்தாள்! அவளது கையைப் பற்றிய கீர்த்திவாசன்,
“டின்னருக்கு என்னோட பிரெண்ட்ஸ் ரெண்டு பேர் வராங்க”
“யார் வந்தா எனக்கென்ன?” முறைத்தபடி அவள் கூற,
“அவங்க ஒய்ப் அழைச்சுட்டு வராங்க சித்து”
“அதனால?”
“கொஞ்சம் ரெடி பண்ணிடேன்”
“முடியாது”
“ஓகே… நான் ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிடறேன். நோ ப்ராப்ஸ்… பட் ஹோஸ்டெஸ் ஷுட் பி மைண்ட் ப்ளோயிங். ஓகே பேபி” புன்னகை மாறா முகத்துடன் அவன் கூற, அவனை முறைத்தாள்.
“முடியாது” கறாராக அவள் கூற, பற்றிய அவளது கையை கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கினான்.
“கண்டிப்பா நீ ரெடி ஆகிடுவ” இறுக்கம் அதிகமாகி அவன் கையை முறுக்கத் துவங்க,
“நோ… முடியாது” வலியைப் பொறுத்துக்கொண்டாலும் மறுத்தாள்!
“நோ வே சித்துக் குட்டி” முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தாலும், அவனது கை அவளது கையை கிட்டத்தட்ட உடைக்கும் நிலையில் முறுக்கிக் கொண்டிருந்தது. அவள் வலி தாங்க முடியாமல் துடித்து, வேறு வழியில்லாமல்,
“ஓகே… சரி… ரெடி ஆகறேன்” கண்ணோரம் நீர் வழிய ஒப்புகொள்ள, வெற்றிப் பார்வையோடு அவளது கையை விட்டான் கீர்த்திவாசன்!
கை இன்னும் உடையாமல் தான் இருக்கிறதா என்று கன்றிச் சிவந்து போன தனது கையைப் பார்த்தபடி இரவு விருந்துக்குத் தயாராகத் துவங்கினாள் சித்ரா.
***
இரவு விருந்துக்கு வந்தவர்களைப் புன்னகை வழிய வரவேற்றான் கீர்த்திவாசன்! வந்தது அவனது நண்பர்களும் அவர்தம் மனைவியரும். நாகரிகத்தின் உச்சத்தில் இருந்த அவர்களது ஒப்பனைக்கும் பாந்தமாகச் சேலையில் இருந்த சித்ராவின் ஒப்பனைக்கும் ஒட்டாமல் இருக்க, வந்த ஆண்களின் கண்கள் சித்ராவை ஊடுருவிப் பார்த்தன.
அந்த இருவரது பார்வை சித்ராவுக்குள் எரிச்சலை உண்டாக்க, உணவை அடுக்க உள்ளே செல்ல முயன்றவளைத் தடுத்துத் தனது கைக்குள் கொண்டு வந்தான் கீர்த்திவாசன்!
“ஹே டியூட்ஸ்… திஸ் இஸ் சித்ரா… மை லவ்” வந்திருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்த, அவர்களும் வெகு இயல்பாகக் கை கொடுக்க முயல, சித்ராவினால் சட்டென்று அதை அங்கீகரிக்க முடியாமல் கை குவித்து வணக்கம் தெரிவித்தாள்!
“வாஷ்… யுவர் ஒய்ப் இஸ் மைண்ட் ப்ளோயிங் டாமிட்” கீர்த்திவாசனிடம் அவனது நண்பனான சுஷாந்த் ஜொள்ள, அதை அங்கீகரித்துச் சிரித்தவன்,
“யு வான்ன டேஸ்ட் ஹெர்?” அடிக்குரலில் சித்ராவுக்குக் கேட்காமல் அவனிடம் வினவினான் கீர்த்திவாசன். அதே குரலில் அவனும்,
“ஹே ரைட் நவ் பேப்… ரைட் நவ்” சுஷாந்த் அவசரப்பட,
“ஹேவ் சம் பேஷன்ஸ் மேன். வி ஆல் கேன் ஹேவ் பன் ஆஃப்டர் டின்னர்” உடனிருந்த கௌஷல் அவனைச் சமாதானப்படுத்தினான்!
“வாட் அபௌட் ஸ்வாப்பிங்? ஆர் யு ஓகே வித் இட்?” உடன் இருந்த பெண்களுக்குத் தெரியாமல் மூவருக்கு உள்ளாகக் கீர்த்திவாசன் கேட்க, மற்ற இருவரும் உடனடியாகத் தலையசைத்தனர்.
“வாவ்… கிரேட் ஐடியா” மூவருக்கும் ஒன்றாகப் பிட்ஸ் பிலானியில் படித்த பழக்கம். அதன் பின் மேற்படிப்புக்காக மாசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகச் சேர, படிப்போடு கற்றுக்கொள்ளத் தேவையில்லாத அத்தனையும் அத்துப்படியானது!
சிறுவயது, அதாவது முதலாம் வகுப்பு முதலே மான்ட்போர்ட் ஹாஸ்டலில் தங்கிப் பெற்றோர் அரவணைப்பில்லாமல் படித்த கீர்த்திவாசனுக்கு வக்கிரம் என்பது இயல்பான ஒன்றாக ஆனது அந்த வெளிநாட்டு வாசத்தில் தான். அதற்கு முன்பும் வக்கிரங்கள் தலைகாட்டிக்கொண்டு தான் இருந்தன என்றாலும், முழுமையாக மாறியது இந்த இருவரின் கூட்டணிக்குப் பின்னர்தான் என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை!
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவனைப் போல் ஒரு நல்லவன் உண்டா என்று எண்ண வைத்தாலும், உள்ளே அத்தனையும் விஷம் என்பது சிலர் மட்டுமே அறிந்தது. அந்தச் சிலரில் அவனது பெற்றோரும் இல்லாதது தான் உண்மையில் வருத்தப்பட வைக்கும் உண்மை!
மகன் தைரியமானவனாக, அனைத்தும் அறிந்தவனாக வளர வேண்டும் என்று சிறுவயதிலேயே ஹாஸ்டலில் விட்டுவிட்ட பெற்றோர்களுக்கு, வளர்ந்தது தங்கள் மகனல்ல, உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அரக்கன் தான் என்பதை எங்கனம் அறிய முடியும்?
அறிந்த அந்தச் சிலர் என்பவர்கள் அவனிடம் நெருக்கமாகப் பழகிய பெண்களும் சுஷாந்த், கௌஷல் போன்ற ஆண்களும் தான். ஆம், ஆண்களும் தான்!
அவர்கள் மூவரின் கூட்டாலோசனைக்குப் பிறகு மற்ற இருவரும் தங்கள் மனைவியரிடம் கிசுகிசுத்துவிட, அவர்களும் வெட்கப் புன்னகையோடு அதை அங்கீகரித்துவிட, இதைச் சிறிதளவும் அறியாமல் உணவைப் பரிமாறிக் கொண்டு தானும் உண்பதாகப் பெயர் செய்து கொண்டிருந்தாள் சித்ரா!
வட்டமான மேஜையில் ஒருபுறம் கீர்த்திவாசனும் மறுபுறம் சுஷாந்துமாக அமர்ந்திருக்க, உணவு வேளை முடியும் தருவாயில் கீர்த்திவாசனின் ஏதோ ஒரு நகைச்சுவைக்குச் சுஷாந்தின் இடது கை இயல்பாகச் சித்ராவின் தொடையைத் தட்ட, சித்ரா அதிர்ந்து கீர்த்திவாசனையும் சுஷாந்தையும் மாறி மாறிப் பார்த்தாள்!
இதை எதையும் கண்டுகொள்ளாமல் உணவுக்குப் பின்னான மதுபானங்களில் இந்த மூவரும் மூழ்க, அந்தப் பெண்களின் கைகளில் ஒயின் கிண்ணங்கள்!
“ஹேவ் சம் ஒயின் டியர்” சித்ராவுக்கும் சேர்த்து அந்தப் பெண்கள் பரிமாற, அவசரமாக மறுத்தாள் சித்ரா!
“நோ… ஐ டோன்ட் ட்ரிங்க்” அவள் மறுத்ததைப் பார்த்துச் சிரித்துக்கொண்டவர்கள்,
“ஒய் பேபி? குட் பார் ஸ்கின், குட் பார் ஹெல்த். ஜஸ்ட் ஸ்டார்ட் வித் இட். ஈவன் வி டோன்ட் டேக் ஹாட் ட்ரிங்க்ஸ். ஜஸ்ட் ஒயின்” அவளிடம் வலுக்கட்டாயமாக ஒயின் கிண்ணத்தைத் திணிக்க, அதற்கு மேலும் மறுக்க முடியாமல் வாங்கி கையில் மட்டும் வைத்துக் கொண்டாள்.
மெல்லிய இசை அந்த ஹாலை நிறைத்தது.
மதுபானங்கள் உள்ளே செல்லும் போதே கௌஷல் சுஷாந்தின் மனைவியை முத்தமிட ஆரம்பிக்க, அதைக் காணச் சகிக்காமல் அதிர்ச்சியின் விளிம்பில் அமர்ந்திருந்தாள் சித்ரா! அவளது மூளை வேலை நிறுத்தம் செய்திருக்க, கீர்த்திவாசன் கௌஷலின் மனைவியின் இடையைப் பற்றிக்கொண்டு இசைக்கு ஏற்ப ஆடத் துவங்க, சித்ராவின் இதயம் பல மடங்கு வேகத்தில் துடிக்கத் துவங்கியது.
அதிர்ச்சியோடு தனித்து அமர்ந்திருந்த சித்ராவின் தோளைத் தொட்டான் சுஷாந்த்!





