உறவுகளே

#1


"உள்ளம் நிறைய
உணர்வுகள்
கொட்டித்தீர்த்திட
உடன் இல்லை
உறவுகள்"

"இதயம் முழுவதும்
நேசங்கள்
பாசங்கள்
அதனால்
உண்டானது
சில கசப்புகள்"

"ஆனந்த கடலில்
ஆழ்த்திடும்
உறவுகள்
தான்
அனாதையாய் விட்டுச்செல்கிறது
கஷ்ட காலத்தில்"

"ஏதோ ஒரு
வெறுமை
ஒன்றாய்
இருந்திட்ட உறவுகள்
எல்லாம்
மேகத்தில் ஒளிந்த
நிலவாய் ஆனதில்"

"அழுகை வரவில்லை
ஆனால்
அமைதி இல்லை
அகத்தில்"

"கோபம்
கடலளவு இருக்கிறது
நேசம் அதில்
நீங்காத இடம்
பெற்றிருக்கிறது"

"கலைந்து சென்ற
உறவுகளே
கணத்த மனதின்
காயம் ஆற்றிட
களிம்பாய் வாருங்கள்
களிப்புற்று இருக்க"
chidambara-vilas.jpg
 

Sponsored

Advertisements

New threads

Top