ஏன் அழுதான்?

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#12
ஏன் அழுதான்?

இலைகளினூடே சில்லறையாய்
இறைந்திருந்த வெய்யில்.
மரத்தின் நிழல்
மனதுக்கும் உடலுக்கும் இதம்.

காலையில் சாப்பிடாத வயிறு
கண்களைத் தாலாட்ட
வந்த கனவிலும் பசி.

ஏதோ ஒரு கை
(பார்த்தேயிராத அம்மாவுடையதோ?)
ஒரு கவளம் சோறு
ஊட்ட யத்தனித்தபோது
உதை விழுந்தது.

வலியில் துடித்து விழித்தன கண்கள்.

"மாட்டுக்குத் தண்ணி வக்காம
தூக்கம் என்னலே சவமே? த்தூ..."

மேலே வழிந்த எச்சிலில்
பன்னீர் புகையிலை வாசம்.

அழுக்குச் சட்டையால்
அவமானத்தைத் துடைத்துக் கொண்டு
மாட்டுக்குத் தண்ணி வைக்கையில்
அது சிரித்த மாதிரி இருந்தது.

திரும்ப யத்தனித்தக் கால்கள்
தனிமையை உணர்ந்து
தான் வாங்கிய உதையை
மாட்டுக்குத் தானம் செய்தது.

"சிரிப்பால சிரிச்ச?"

மாடு அழுதது.
எதற்கென்று தெரியாமல்
அவனும் அழுதான்.
nice
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#16
தங்களின் தமிழ் மிகவும் அருமை சகோதரரே 😍😍😍 மிகுந்த வலியுடன் கூடிய ஒரு கவிதை அருமை🤩🤩
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#18
நம் இயலாமையை நம்மைவிட எளியவரிடம் காட்டுவதே வழக்கம்... அருமை தோழரே...
 

Maha

Author
Author
SM Exclusive Author
#19
ஏன் அழுதான்?

இலைகளினூடே சில்லறையாய்
இறைந்திருந்த வெய்யில்.
மரத்தின் நிழல்
மனதுக்கும் உடலுக்கும் இதம்.

காலையில் சாப்பிடாத வயிறு
கண்களைத் தாலாட்ட
வந்த கனவிலும் பசி.

ஏதோ ஒரு கை
(பார்த்தேயிராத அம்மாவுடையதோ?)
ஒரு கவளம் சோறு
ஊட்ட யத்தனித்தபோது
உதை விழுந்தது.

வலியில் துடித்து விழித்தன கண்கள்.

"மாட்டுக்குத் தண்ணி வக்காம
தூக்கம் என்னலே சவமே? த்தூ..."

மேலே வழிந்த எச்சிலில்
பன்னீர் புகையிலை வாசம்.

அழுக்குச் சட்டையால்
அவமானத்தைத் துடைத்துக் கொண்டு
மாட்டுக்குத் தண்ணி வைக்கையில்
அது சிரித்த மாதிரி இருந்தது.

திரும்ப யத்தனித்தக் கால்கள்
தனிமையை உணர்ந்து
தான் வாங்கிய உதையை
மாட்டுக்குத் தானம் செய்தது.

"சிரிப்பால சிரிச்ச?"

மாடு அழுதது.
எதற்கென்று தெரியாமல்
அவனும் அழுதான்.
அருமைன்னு எப்பிடி சொல்றது 😒
இந்த கவிதை அப்பிடி மனதை அழுத்துதே

நான்கு வரியில் புரிந்தது
ஒரு சிறுவனின் தாயின் ஏக்கம்,
பசியின் கொடுமை ,
ஒரு மானிட மிருகத்தின் கொத்தடிமை, மாட்டை அடித்து அதன் வலி
அவன் உணர்ந்தால் வந்த அழுகை

கவிதை தானே சொல்லிட்டு போயிடே இரு என்று சொன்னது ஒரு மனது ...!!

படிச்சதும் சுட்டது வலிக்குது தவிக்கிதே என்றது
இன்னொரு மனம்..,!!


Very nice sago👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
 

Advertisements

Top