• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சித்திரையில் பிறந்த சித்திரமே 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,873
Location
MADURAI
"லெட்சுமி சொன்னதை கேட்டு கடுப்பின் உச்சிக்கே சென்ற உதயா அவளை அடித்தாலும் தவறில்லை எனும் விதத்தில் அவளை முறைத்துக்கொண்டிருக்க லெட்சுமியோ ஐயோ காப்பத்த கூட ஆள் இல்லாம இந்த காக்கிசட்டைகிட்ட மாட்டிக்கிட்டோமோ என நினைத்துக்கொண்டிருந்தாள்"

"அந்த நேரம் பார்த்து எதிரே வந்த இருவர் ஒரு பெண்ணை வேண்டும் என்றே இடிக்க அதை பார்த்த உதயா அவர்களின் கன்னத்தை அறைந்திருக்க அந்த அறை தனக்கு விழுந்திருக்க வேண்டியது என்பது லெட்சுமிக்கு விளங்கியது"

"முன்னால் சென்ற குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் பின்னால் சத்தம் கேட்க வந்து பார்த்தால் உதயா அவர்களை வெளுத்து கொண்டிருப்பது தெரிந்தது"

"டேய் உதயா விடுடா முதமுதல்ல பொண்டாட்டியோட கோவிலுக்கு வரும் போதும் இப்படி தான் இருப்பியா?" என உதயாவின் அம்மா அவனை திட்ட(ஆமா உன் மருமகள ஒன்னும் கேட்காத என்ன மாமியார் நீ)

"அதற்குள் கோவிலில் பாதுகாப்பிற்க்கு இருந்த போலீஸ்காரர்கள் வந்து விட்டதால் வந்தவர்கள் உதயாவை கண்டு சல்யூட் அடித்து விட்டு அவர்களை பிடித்து கொண்டு சென்று விட்டனர்"

"மாமா"

கோவமாய் அவள் புறம் திரும்பியவனை கண்டு வந்த வார்த்தை வாய்க்குள்ளே போக அமைதியாகிவிட்டாள்

"டேய் நாங்க எல்லாரும் கார்ல வீட்டுக்கு போறோம் நீ என் மருமகள எங்கயாவது வெளிய கூட்டிட்டு போயிட்டு வா" என உதயாவின் தந்தை கூற

"எனக்கு வேலை இருக்கு பா"

அதை கேட்டு லெட்சுமியின் முகம் சுருங்க

"உனக்கு எப்பவும் தான் வேலை இருக்கு ,மரியாதையா என் மருமகள கூட்டிட்டு போ"என கூறி விட்டு அங்கிருந்து அனைவரையும் அழைத்து கொண்டு சென்றுவிட்டார்.

"அவளை அழைத்து கொண்டு பைக்கில் சென்றவன்.கூட்டிக்கொண்டு சென்றது அழகர் கோவில் மலைக்கு சுற்றிலும் மரங்கள் சூழ்ந்திருக்க மிகவும் ரம்மியமான காதலர்களுக்கு ஏற்ற இடம்
ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் உதயா இல்லை காரணம் அவன் கருவாடார்லிங் கூறிய வார்த்தை"


"வண்டியை யாருமற்ற இடத்தில் நிறுத்தியவன் அமைதியாய் சென்று ஒரு பாறையில் அமர்ந்து விட்டான்"

"அவன் பின்னாலே சென்றவள் "

"மாமா"

...................

"மாமா பிளிஸ் நான் என்ன சொல்லுறேன்னு கேளுங்க "

"என்னடி சொல்லுவ என் மனச கஷ்டபடுத்திற மாதிரி எதையாவது சொல்லுவ"

"இல்ல மாமா பிளிஸ்,அப்பா இறந்ததுக்கு அப்பறம் அம்மா எவ்ளோ கஷ்டபட்டாங்க தெரியுமா அப்பா இல்லாமா அவங்க காதல் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க ,ஆனா எங்களுக்காக தான் அவங்க இப்பவும் உயிரோட இருக்காங்க,அது மாதிரி எல்லாம் என்னால சத்தியமா இருக்க முடியாது மாமா நீங்க இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது மாமா"

"பதினெட்டு வருஷமா இருந்தேன் தான் ,ஆனா உங்கள காதலிச்ச நாள் இருந்து என்னால அப்படி யோசிக்க முடியலை மாமா,எங்க அப்பா இருந்தப்போ நான் எவ்ளோ பாதுகாப்பா உணர்ந்தேனோ அதே பாதுகாப்ப இப்பவும் உணரேன் மாமா"

"இனிமே நீங்க இல்லாம என்னால எப்பவும் இருக்க முடியாது மாமா "என கண்ணீரோடு கூறியவளை தன் அணைப்பில் கைது செய்து கொண்டான் அந்த கடமை தவறாத போலீஸ.

"நீ இல்லாம நான் மட்டும் இருந்திருவேணாடி ,ரெண்டு பேரும் ஒன்னாவே போலாம்டி இப்போவே கூட ஆனா உன்ன விட்டுட்டு என்னாலையும் இருக்க முடியாது டி லூசு பொண்டாட்டி"

அவனை விலக்கி விட்டு கோவமாக முறைத்தவள்

"ஹம் என்ன சொன்னீங்க இப்பவே போலாமா ,அப்போ என் அத்தையும் மாமாவையும் யார் பார்த்துப்பாங்க ஹம் வேலை மட்டும் கரெக்டா பண்ணினா போதாது மிஸ்டர்,உதயா குடும்பத்தையும் ஒழுங்கா கவனிக்கனும் என்னையும் சேர்த்து தான் சொல்லுறேன் புரிஞ்சிதா"

"புருஷனையே பேர் சொல்லி கூப்பிடற அளவுக்கு தைரியம் வந்துருச்சு உன்ன"

"ஹம் போலீஸ் காரன் பொண்டாட்டிக்கு தைரியம் நிறையா தான் இருக்கனும் அசிஸ்ட்டண்ட் கமிஷனர் உதயா பொண்டாட்டினா சும்மாவா"
என கூறியவளின் அருகே அவளை நெருங்கி நின்று அவளின் இடையில் தன் கையை அழுத்தமாக பதித்திருந்தான்


"என்னடி கேடி(கருவா டார்லிங்) இப்போ பேச்சையே காணோம்"

"ஹம் " வார்த்தைகள் அவளுக்கு தடுமாற

"மாமா பிளிஸ்"

"உங்க தைரியம் இந்த உதயா கிட்ட செல்லாது மிஸஸ் உதயா"

"ஹம்,போங்க மாமா" என அவள் சினுங்க

"சரி வா டைம் ஆச்சு வீட்டுக்கு போலாம்,ஹம் ஒரு நிமிஷம்,அதென்னடி காலைல உங்கிட்ட காபி கேட்டா உங்க மாமியார் என் கூட சண்டைக்கு வர்ராங்க"

"ஹம் என்ன என் மாமியார்கிட்ட சொல்லவா"

"ஹம் சொல்லு நேத்து நைட் நான் பண்ணதையும் சேர்த்து சொல்லு"

"மாமா " என அவள் முறைக்க

"சரி வா போலாம்"

இருவரும் வேடு வந்த சமயம் லெட்சுமியின் அம்மாவும் அவள் தம்பியும் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தனர்.

"என்னம்மா அதுக்குள்ள கிளம்பிட்டீங்க"

"ஆமா வீட்டுல கல்யாணத்தப்ப போட்டது எல்லாம் அப்படி அப்படியே கிடக்கு,போய் எல்லாத்தையும் ஒதுங்க வைக்கனும் கிளம்புறோம்"

"ஹம் சரிம்மா"

"சரி பார்த்து இரு இன்னும் சின்ன பிள்ளை மாதிரி இருக்க கூடாது"

"உங்க அத்தை மாமா என்ன சொன்னாலும் கேட்டு நட ,எதிர்த்து பேசதா சரியா,நானும் அப்பாவும் உன்ன எதாவது சொன்னா எப்படி எடுத்துப்பியோ அப்படித்தான் உன் அத்தை மாமா பேசுனாலும் இருக்கனும் புரிஞ்சிதா"

"அத்தை நீங்க என்ன தப்புதப்பா சொல்லிகொடுக்கிறீங்க,எல்லாரும் எதாவது பிரச்சனைனா உடனே அம்மாகிட்ட வந்து சொல்லுனு சொல்லுவாங்க நீங்க இப்படி சொல்லுறீங்க"என உதயா கேட்க

"மாப்பிள்ளை பொண்ணு கட்டி கொடுக்கிறது வாழுறதுக்கு தானே தவிர பொசுக்குபொசுக்குனு அம்மா வீட்டுக்கு வர இல்ல மாப்பிள்ளை"

"அண்ணியோ அண்ணனோ அவள திட்டுனா கூட அது அவளோட நல்லதுக்கா தான் இருக்கும் அதை அவ புரிஞ்சிகிட்டாலே போதும் மாப்பிள்ளை புரிஞ்சிப்பானு நினைக்கிறேன்"

"சரித்தை நான் பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்க,ஒரு நிமிஷம் டிரைவர கூப்பிடுறேன் கார்லேயே கிளம்புங்க"

"வேணாம் மாப்பிள்ளை,நீங்க எந்த வரதட்சனையும் வாங்காததே எங்களுக்கு ஒரு மாதிரி இருக்கு இதுல இப்படியெல்லாம் பண்ணா அது இன்னும் ஒரு மாதிரி இருக்கும் மாப்பிள்ளை"

"என்னம்மா இப்படியெல்லாம் பேசுற நாங்க எங்க மருமகள பதினெட்டு வருசமா பத்திரமா பார்த்துகிட்டதுக்கு நாங்க தான் உனக்கு எல்லாம் செய்யனும் நீ என்னமோ வரதட்சனை பத்தி பெருசா பேசிக்கிட்டு இருக்க " என உதயாவின் அப்பா கூற

"இது போதும் அண்ணன் என் மக இந்த வீட்டுல ரொம்ப சந்தோசமா இருப்பா"

"நீங்க பத்திரமா பார்த்து போயீட்டு வாங்க அண்ணி என் மருமகள நான் நல்லா பார்த்துப்பேன் " என உதயாவின் அம்மா கூற

"நிறைவுடன் விடை பெற்றனர் உதயாவின் அம்மாவும் தம்பியும்"

"அத்தை மாமா சாப்பிடீங்களா"

"நாங்க சாப்பிட்டோம் மா,நீயும் உதயாவும் சாப்பிடுங்க வாங்க"

"இருவரும் அமர்ந்து உண்ண"

"டைனிங் டேபிளில் அவளை பார்த்து பார்த்து கவனித்தனர் உதயாவின் பெற்றோர்"

"இங்கு உதயாவுக்கு தான் பிபி எகிறியது"

"என்ன பெத்ததும் என்ன கவனிக்க மாட்டீங்குது நான் கட்டுனதும் என்ன கவனிக்க மாட்டீங்குது என்ன வாழ்க்கைடா உதயா என மனதிற்க்குள் புலம்பி கொண்டான்"

"அத்தை போதும் பிளிஸ்"

"என்ன சாப்பிடுற நீ நல்லா சாப்பிடு ,நாளை பின்ன குழந்தை பிறந்தா தாங்குறதுக்கு தெம்பு வேணாம்"

"ஹம் இப்படி வகையா அவளுக்கு கொடுத்து அவள தூங்க வச்சா குழந்தை எங்கிருந்து வரும் தூக்கம் தான் வரும் என மானசீகமாய் தலையில் அறைந்து கொண்டான்"

இப்படியாக சாப்பாடு நேரம் கழிய

"உதயாவின் அம்மாவின் கால்களை அப்பொழுது தான் கவனித்தாள் லெட்சுமி"

அவரின் பாதம் மிகவும் வீங்கீருந்ததது

"அத்தை என்ன இது இப்படி வீங்கியிருக்கு உங்க காலு"

"இல்லமா ரொம்ப வேலைல அதான் மருந்து போட்டா சரியாகிடும்"

"மருந்து எங்க இருக்குனு சொல்லுங்க நானே உங்களுக்கு போட்டுவிறேன்"

"வேண்டாம்மா"

"ஏங்க எங்க மருந்து இருக்குனு நீங்க சொல்லுங்க நான் அத்தைக்கு போட்டு விடனும்"

"உதயாவும் அவள் கேட்டதை எடுத்து கொடுக்க"

"லெட்சுமி தனது மாமியாரின் காலை எடுத்து தன் மடியில் வைத்து நீவி விட நெகிழ்ந்து போயினர் கணவன் மனைவி இருவரும் தங்களுக்கு கிடைத்திருக்கும் மருமகளின் குணத்தை எண்ணி"

"உதயாவும் மனது நிறைந்து இருந்தது இப்படி ஒரு மனைவி கிடைத்தற்க்கு"

ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்



ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே




நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பனிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்திருபோம்
அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே
 




Last edited:

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,873
Location
MADURAI
மறு நாள் காலையில் அலாரத்தின் சத்தத்தில் விழித்த உதயா

"கேடி அலாரத்தை ஆப் பண்ணுடி " என கூற அவள் அங்கு இருந்தால் தானே

கீழே அவளின் சிரிப்பு குரலும் அவனின் பெற்றோரின் சிரிப்பு குரலும் கேட்க கடுப்புடன் எழுந்தவன்

"இந்த வேணிக்கும் மகேஸ்வரனுக்கும் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா மருமகள எல்லா வேலையும் மகனுக்கு செய்ய சொல்லாம இவங்க ரெண்டு பேரும் அவள பக்கத்தில உட்கார வைச்சு கொஞ்சிக்கிட்டு இருக்காங்க" என மனதிற்க்குள் வசைபாடியவன்

"லெட்சுமி எனக்கு காபி கொண்டு வா " என கத்தி அழைத்து விட்டான்

(கல்யாணம் பண்ணா அம்மா அப்பாவ கூட பேர சொல்லி திட்டுற அளவுக்கு போயிடுறாங்க இவங்கள எல்லாம் வைச்சுகிட்டு நானும் கதை எழுதி)

"இந்தாம்மா காபியை கொண்டு போய் கொடு இல்லனா அதுக்கும் கத்துவான் அவன் " என வேணி சொல்ல

"காபியை எடுத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள்"

"அங்கே அவளை முறைத்து கொண்டு உதயா நின்றிருந்தான்"

"ஐயோ காக்கி சட்டை கஞ்சி போட்ட சட்டை மாதிரி நிக்கிதே என மனதிற்க்குள் புலம்பியவள்,வெளியே சிரித்து கொண்டே "

"மாமா காபி " என்றாள்

".................."

"இப்போ காபி கேட்டுட்டு ஏன் இப்படி நிக்கிறீங்க மிஸ்டர் காக்கி சட்டை "

"அடிங்க என்னடி ஓவரா பேசுற அது என்னடி புதுசா காக்கி சட்டை"

"ஹாங் நீங்க காக்கி சட்டை தான,அப்படி தான் சொல்லுவேன் என்ன ஏதாவது மிரட்டுனா என் மாமாகிட்ட சொல்லி கொடுத்துடுவேன் அவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் தெரியுமா"

"போடி போய் சொல்லு போய் இதையும் சேர்த்து சொல்லு " என வன்மையாக அவள் இதழை சிறைசெய்தான்


"விடுங்க மாமா வேலை இருக்கு" என அவன் அணைப்பிலிருந்து விலகியவாறே கூற


"ஆமா கட்டுன புருசன் கூட பேசும் போது வேலை வந்துரும் உன் மாமியாரோட பேசும் போது மட்டும் வேலை இருக்காது" என அவன் கோவமாக கேட்க

"ஐயோ காக்கி சட்டை கலவரத்துல இறங்கிருச்சே என மனதிற்க்குள் நினைத்தவள்"


"ஐயோ அப்படியெல்லாம் சொல்லல மாமா நான்,என் புருசன் வேலைக்கு கிளம்பி போகுறதுக்குள்ள நான் சமைச்சு என் மாமாகிட்ட பாராட்டு வாங்க வேணாமா" என கூறி சமாளித்தாள்

"முகம் பிரகாசமாக அவளை விட்டவன் "

"சரி போ நான் ரெடியாகி வரேன் " என விட்டான்

"கீழே வந்தவள் எல்லாவற்றையும் சமைத்து முடித்தி டைனிங் டேபிளில் அடிக்கினாள்"

"எல்லாரும் சாப்பிட அமரவும் இவளே பரிமாறினால்"

"வேணிக்கும் ,மகேஸ்வரனுக்கும் தங்கள் மருமளின் மேல் உள்ள பாசத்தை இன்னும் கூட்டியது அவளின் சமையல்"

"சாப்பிட்டு முடித்து உதயா கை கழுவ செல்ல ,"

"நீயும் போய் கை கழுவிட்டு வாம்மா சாப்பிடலாம் " என வேணி கூற

"அங்கே கை கழுவி கொண்டிருந்த உதயா இவளின் முந்தானையில் கையை துடைத்துவிட்டு "

"சாப்பாடு சூப்பரா இருந்துச்சு கிப்ட் நைட் தரேன் இப்போதைக்கு இது என" அவளின் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு சென்றான்.

"அம்மா நான் ஸ்டேசன் போயிட்டு வரேன் " என கிளம்பி சென்று விட்டான்.

"வேலை பளு எல்லாத்தையும் முடித்துவிட்டு கொஞ்சம் ஃப்ரி ஆனவுடன் மனைவிக்கு அழைத்தான்"

மறுமுனையில் போன் எடுக்க பட்டவுடன்

"என்ன பண்ணற டி கருவா டார்லிங் " என கேட்க

"சும்மா தான் மாமா இருக்கேன்"

"ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு,உடம்பு எதுவும் சரியில்லையா என்ன"

"இல்ல ஒன்னும் இல்ல"

"சரி நீ ரெஸ்ட் எடு ,நான் அப்பறம் கூப்பிடுறேன்"என கூறி கட் செய்தவன் வீட்டிற்கு கிளம்பி விட்டான்,ஏனோ அவள் பொய் சொல்வது போல் தோன்ற

"அத்தை அவர் இப்போ போன்ல பேசுனத வைச்சே உடம்பு சரியில்லையான்னு கேட்குறாரு ,எனக்கு பயமாயிருக்கு என்ன பண்ண தெரியலை அத்தை"

"இதுக்கு தான் நான் அப்போவே சொன்னேன் ,காய்ச்சல் வரும் வேணாம்னு கேட்டியா,அவன் வேற வந்து என்ன சொல்லபோறான்னு தெரியலை" என வேணி பயந்து கொண்டே கூற

"இதையெல்லாம் உள்ளே நுழைகையிலேயே கேட்டு கொண்டே தான் உள்ளே நுழைந்தான் உதயா"

"எனக்கு தெரியாமா இரண்டு பேரும் என்ன பண்ணி வைச்சிருக்கீங்க " என உதயா கம்பீர குரலில் கேட்க இரண்டு பேருக்கும் அடிவயிறு பிசைந்தது.

"ஓன்னும் இல்ல"என லெட்சுமி கூற

"ஒன்னும் இல்லாம தான் உனக்கு காய்ச்சல் வந்துச்சா?",அம்மா நீங்க சொல்லுங்க என்னாச்சு"

அவரும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் பயந்து கொண்டே

"இல்லடா,நானும் அவளும் கோவிலுக்கு போனோம் ,அங்க அவ உன் பேர பச்சை குத்திக்கிட்டா,அதான் காய்ச்சல் வந்துருச்சு"என கூற

"உதயா இருவரையும் முறைத்த முறைப்பில் லெட்சுமியின் தலை நிமிரவே இல்லை"

"அவ லூசு மாதிரி பண்ண போனானா நீங்களும் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தீங்களா"

"இல்லை டா,நீங்க மட்டும் மாமா பேர பச்சை குத்திருக்கீங்கள்ள அப்படினு அடம் பிடிச்சு குத்திக்கிட்டாடா" என கூற

"இருவரையும் பார்த்து தலையில் அடித்து கொண்டான்"

"ஏய் என்னடி ஒன்னும் தெரியாத மாதிரி அமைதியா உட்கார்ந்திருக்க" என கோவமாக கேட்க

"காபி கொண்டு வரவாங்க"

"மேல ரூம்க்கு டீ கொண்டு வா" என கூறி விட்டு செல்ல

"இவள் பயந்து கொண்டே ரூம்மிற்க்கு சென்றாள்"

அங்கு கோபத்தோடு உதயா அமர்ந்திருந்தான்

"மாமா"

"உன்ன வைச்சுக்கிட்டு என்ன தாண்டி நான் பண்ணுறது ,டெய்லி இப்படி ஏதாவது பண்ணுற"

"இப்ப நீ பச்சை குத்தினா தான் என் பொண்டாட்டனு அர்த்தமா, சொல்லுடி"

"இல்ல மாமா "

"பேசாத ஒழுங்கா போய் ஹாஸ்பிடல் கிளம்பு"

"இல்ல மாமா எனக்கு காய்ச்சல் போயிருச்சு ,ஹாஸ்பிடல் வேணாம்"

"ஏற்கனவே கடுப்புல இருக்கேன் மரியாதையா கிளம்பு"

"ஹம் சரி"

"இருவரும் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணி விட்டு வந்த பின்பும் கூட உதயா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

"மாமா பிளிஸ்,என்ன அடிக்க கூட செய்ங்க ,ஆனா இப்படி இருக்காதீங்க"

"காதல் அப்படீங்கிறது காயப்படுத்திக்குறதுள இல்லடி ,நீ இப்படி லூசு தனமா பண்ணிட்டு வந்திருக்கீயே ,உனக்கு வலிக்கும் அப்படினு நினைக்கும் போதே எனக்கு வலிக்குது டி"

"ஸாரி மாமா"

"போடி"

"அதான் சாரி சொல்லிடேன்ல அப்பறம் போடி சொல்றீங்க"

"இப்ப நீ சாரி சொன்னவுடனே உன் காய்ச்சல் போயிடுமா"

"இல்ல,என் புருசன் பக்கத்துல இருந்தா சரியாகிடும் "

மெலிதாய் ஒரு புன்னகை உதயாவிடத்தில் "கேடி பேசியே கவுத்திடுவா" என மனதிற்குள் நினைக்க

"சரி நீ ரெஸ்ட் எடு நான் போயீட்டு சீக்கிரம் வரேன் " என கூறி சென்றான்.

அவளை படுக்க வைத்து அவள் தலை கோதி விட்டே சென்றான்.

செல்கையில் சிறு கண்ணீர் துளி அந்த வலியை எவ்வாறு தாங்கியிருப்பாள் என்று

காக்கி சட்டையும் கலங்கியது கருவா டார்லிங்கின் கரை கடந்த அன்பினால்

உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது


அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலி லாலி லாலி
அபிராமி லாலி லாலி லாலி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
66,494
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தாழைக்கனி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
66,494
அடியே லெட்சுமி
பச்சை குத்தித்தான் உன்னோட பாசத்தை மாமனுக்கு காட்டணுமா?
போலீஸ் இப்போ பொளந்து காட்டுவான் பாரு
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top