சித்திரை திருவிழா

#1
ஹாய் மக்களே,

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்.
எல்லாரும் தமிழ் புத்தாண்டு கொண்டாட ரெடியா இருக்கீங்களா?
இந்த மாதம் முழுவதும் சித்திரை திருவிழா கொண்டாட போறோம்.

எப்படி?

இந்த தடவ நாம போட்டி எல்லாம் வைக்கல. ஒரு மாறுதலுக்காக , உங்க மனசுல இருக்கறத தெரிஞ்சுக்கலாம்னு ஒரு யோசனை வந்தது. என்னனு பாக்கறீங்களா?

1 நம்ம தளத்துல நிறைய கதைகளை படிச்சிருப்பீங்க. அதுல உங்களுக்கு சில கதைகளையோட போக்கு வேற மாதிரி அமைஞ்சிருந்தா நல்லா இருக்குமேனு தோன்றி இருக்கும்.
அப்படி நீங்க நெனச்ச கதைகளும், நீங்க ஆசைப் பட்ட கதையின் போக்கையும் நீங்க எழுதுங்க இல்லைன்னா சொல்லுங்க :)

இந்த பிரிவுக்கு பேர், 'நாட்டாம தீர்ப்ப மாத்து'

இந்த த்ரெட்ல வந்து உங்களுக்கு எப்படியெல்லாம் தோணுச்சோ, அதையெல்லாம் நீங்க எழுதலாம். இல்லைன்னா சொல்லலாம்.

எழுதறது சரி, இதை எப்படி சொல்ல போறோம் ?!

எழுதுவது சில பேருக்கு சிரமமா இருக்கும். அதுனால இதை ஒரு ஆடியோ வா மாத்தி youtube ல upload செஞ்சு அந்த லிங்க நீங்க போஸ்ட் பண்ணலாம். டைட்டில் மட்டும் மறக்காம கொடுத்துடுங்க. இதில் ஏதாவது சிரமம் இருந்தா அட்மின்க்கு ஒரு மெசேஜ் போடுங்க. உங்களுக்கு கைகொடுக்க நாங்க இருக்கோம்.

2. இரண்டாவது, கதை அந்தாக்ஷரி

இதுவும் ஒரு புது வித விளையாட்டு தான். நான் ஒரு கதையின் முதல் பத்தியை நான் துவக்கி வைக்கிறேன்.
அந்தக் கதையை உங்கள் கற்பனைத் திறனை பயன்படுத்தி நீங்கள் வழிநடத்திச் செல்லுங்கள்.
அடுத்த பத்தியை ஒருவர் எழுத அதற்கடுத்த பத்தியை அடுத்தவர் எழுத வேண்டும்.

இப்படியே இது தொடர வேண்டும். ஆனால் முதலில் இருந்து கதை எப்படி போகிறது என்று படித்து பின் எழுதவும்.
ஒரு அழகிய கதையை நாம் அனைவரும் சிறு சிறு பகுதியாகச் சேர்த்து உருவாக்குவோம்....
இதுவே கதை அந்தாக்ஷரி . அந்த கதை அந்தாக்ஷரி எந்தளவு போகுதுன்னு நாமளும் பாக்கலாமே!

இந்த ரெண்டு போட்டியிலும் அனைவருமே கலந்துக்கலாம்!


புது வருடத்தை புதுமையாக கொண்டாட வாங்க!

தமிழைப் போற்றுவோம். தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுவோம்!
 

Aparna

Author
Author
#3
சித்திரை திருநாள் வாழ்த்துகள் 😊😊 கதை அந்தாக்ஷரி பலே பலே.. பல நறுமணம் வீசும் கதம்ப மாலையாக மணக்க அனைவருக்கும் என் வாழ்த்துகள் 💐😊.. நானும் அதில் ப்ரஸன்ட் மிஸ் 😁
 

Advertisements

Latest updates

Top