• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிறுத்துங்கள் போரை...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,226
Location
Erode
நிறுத்துங்கள் போரை!
…………..

முன்னேற்றப் பாதையில்
முன்னோக்கிப் போகிறோம் என
நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில்,
ஆதி காலத்திற்கே திருப்ப
போய் விட்டோமா?
என சந்தேகிக்க வைக்கிறது
இந்தப் போர்!

இயற்கை, பேரிடராய் சீறினால்,
மனித உயிர் வாங்கினால்,
அது தவிர்க்க முடியாதது!
தடுக்க இயலாதது!
ஆனால்,
மனிதன் மனிதனை அழிப்பது,
போரால் நாட்டையே சிதைப்பது,
வன்முறையின் மிச்சம்!
கொடூரத்தின் உச்சம்!

குண்டு மழையில், நனைந்து கருகும் மலருக்கும் தெரியாது!
மழலைக்கும் புரியாது!
எதற்காக மரணிக்கிறோம் என்று!

சிட்டுக்குருவிக்கும், சிங்கத்துக்கும் வலிமை வேறு வேறு தான்!
ஆனால் வலி ஒன்றுதான்!
வலியோன் , எளியோனை வதைப்பதை,
எவனுமே தட்டிக் கேட்கவில்லையெனில்,
மனிதம் மரித்து விட்டது,
என்று தானே அர்த்தம்!

உறைவிடமிழந்து, உறவிழந்து, வீதியில் நிற்கவும் பயந்து,
ஓடி ஒளிந்து, இறுதியில் மடிந்து போகும் மக்களின் மனங்கள்
மன்னிக்குமா?
ஆதிக்கத்துக்கு ஆதரவாக,
மௌனம் சாதிக்கும்
உலக நாடுகளை!

எங்கோ நடக்கிறது போர் என, வேடிக்கை பார்க்கும் கூட்டமே!
அங்கு வீசும் குண்டு,
உன் வீட்டு அடுப்பங்கரையில் வெடிக்கும்!
தோட்டா பட்டு தெறிக்கும் ரத்தம், உலக வரைபடம் எங்கும் சிதறும்!

போர் எல்லைகளை விரிவுபடுத்தும், ஆனால் மனிதத்தை
மொத்தமாய் இழிவுபடுத்தும்!
ஆறாம் அறிவின் செறிவோடு, நெஞ்சத்தில் ஈரம் கொஞ்சம்
மீதமிருந்தால்,
நிறுத்தி விடுங்கள்
உங்கள் போரை!

……

பொன்.தமிழ்ச்செல்வி
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
17,613
Reaction score
38,080
Location
Vellore
👏👏👏👏
ரொம்ப நாள் கழித்து உங்கள் கவிதை அருமை மா...
போர்... சொல்ல ஒன்றுமில்லை, வலியோடு வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம் 😞😞😞
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,226
Location
Erode
👏👏👏👏
ரொம்ப நாள் கழித்து உங்கள் கவிதை அருமை மா...
போர்... சொல்ல ஒன்றுமில்லை, வலியோடு வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம் 😞😞😞
Thanks sister.. ஒருவன் வலிமை,அடுத்தவருக்கு வலி தான் தருகிறது,போர் அப்படிப்பட்டது தான்
 




Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,775
Location
Sri Lanka , Colombo
கவிதை நல்லா இருக்கு கா💐

யாரா இருந்தாலும் மன்ஷன்தான்
போர் முடிந்தால் மகிழ்ச்சி
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,226
Location
Erode
கவிதை நல்லா இருக்கு கா💐

யாரா இருந்தாலும் மன்ஷன்தான்
போர் முடிந்தால் மகிழ்ச்சி
நன்றி சகி
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top