• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ராவணனே காதலனாய்..! 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ramanitamil

புதிய முகம்
Joined
Nov 21, 2022
Messages
8
Reaction score
12
Location
Tamil Nadu salem
அத்தியாயம் 2

"ஏய் வினோ பெட்டியில் உனக்கு தேவையானதெல்லாம் எடுத்து வச்சுக்கோ அப்புறம் அங்க போய் அது இல்லை இது இல்லை அதை மறந்துட்டேன் இதை மறந்துட்டேன் என்று போன் பண்ணி கத்துற வேலை வச்சுக்காத"

என்று அவளை விரட்டி கொண்டிருந்தாள் கயல்விழி.
"சும்மா விரட்டாத அக்கா எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கிட்டு தானே இருக்கிறேன்" என்று பதில் குரல் கொடுத்தாள் வினோதினி.

(அவள் பெட்டியை அடிக்க முடிப்பதற்குள் நாம் அவளை கொஞ்சம் நோட்டம் விடுவோம்)
அவ கன்னம் பால் பணியாரம், அவள் மூக்கு முந்திரி கேக்குங்க, அவ கண்ணோ தேனில் ஊறின திராட்சை பழம், அவ உதடுகளோ வெட்டி வைத்த ஆரஞ்சு பழம், மொத்தத்துல புள்ள சூப்பர் ஃபிகர்.

வினோ படித்து முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு பெரிய ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்வதற்காக புறப்பட்டு கொண்டிருக்கிறாள்.

வினோதினிக்கு அம்மா அப்பா இல்லை அக்காவின் பாதுகாப்பில் வளர்கிறால் வினோதினி சிறு வயதில் இருக்கும்பொழுது அப்பா இறந்து விட்டார் இரண்டு வருடங்களுக்கு முன் அம்மாவும் இறந்துவிட்டார் அவளுக்கென்று இருக்கும் உறவு அக்கா குடும்பம் தான்..

அக்கா கயல்வழிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் தான் ஆர்மியில் வேலை பார்க்கும் ரவீந்திரனுடன் திருமணம் முடிந்து ஒன்றரை வயதில் அமுதினி யும் பிறந்திருந்தாள்.

கோவை பீளமேட்டில் உள்ள அவர்களின் சொந்த வீட்டில் தான் வசித்து வந்தார்கள் இப்பொழுது அக்காவை விட்டு தனியாக பெங்களூருக்கு வேலைக்கு செல்கிறாள்.

வரும் திங்கட்கிழமை அவள் வேலையில் ஜாயின் பண்ண வேண்டும் என்று வெள்ளிக்கிழமையே கிளம்புகிறாள். முதலில் பெங்களூரில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்று தங்கி கொண்டு பின்னர் அங்கிருந்து வேறு இடம் பார்த்துக் கொள்வதாக முடிவாகி இருந்தது.

"அக்கா நீ அம்மு குட்டியை வச்சுக்கிட்டு தனியா இருந்துக்குவியா.? எனக்கு என்னமோ பயமா இருக்கு.."
"ஏய் எதுக்கு பயப்படற இது நாம பிறந்து வளர்ந்த இடம் இங்கு எனக்கு ஒன்னும் பயமில்லை நீதான் புது இடத்துக்கு போற பார்த்து பத்திரமா இருக்கணும் புரியுதா.?"

"எனக்கு என்னக்கா பயம். எனக்கு தான் அங்க என் பிரண்ட் இருக்கா இல்லையா? நான் மேனேஜ் பண்ணிக்குவேன் நீ அம்மு குட்டியை பத்திரமா பாத்துக்கோ இப்ப அவளுக்கு கால் முளைத்துவிட்டது இல்லையா? தூள்னு ஒரு இடத்துல நிக்க மாட்டேங்குற எப்பவும் அவ மேல ஒரு கண்ண வச்சுக்கோ."

"சரிடி நான் பாத்துக்குறேன் ட்ரெயினுக்கு நேரமாச்சு நீ கெளம்பு ஆட்டோ புடிச்சு போயிடு பஸ்சுக்கெல்லாம் வெயிட் பண்ணாத".

"சரிக்கா உடம்ப பாத்துக்கோ நான் போயிட்டு போன் பண்றேன் பாய் பாய் அம்மு குட்டி" என்று அமுதினியின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு டாடா காட்டிவிட்டு கிளம்பினாள் வினோதினி..

ஒரு ஆட்டோ பிடித்து கோவை ஜங்ஷன் வந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தால் காலை 6 மணிக்குள் பெங்களூர் வந்து விட்டாள்.

தோழிக்கு அழைக்கலாம் என்று போனை எடுத்தால் ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது அதை ஆன் பண்ணி பார்த்தால் தோழி 16 மிஸ்டு கால் கொடுத்திருந்தாள்.

எதற்காக இத்தனை டைம் கூப்பிட்டு இருக்கிறாள் என்று யோசனையோடு திரும்பவும் தோழிக்கு அழைத்தாள். வினோதினியின் தோழி மாதவி "நைட்டு இருந்து எத்தனை டைம் உனக்கு கூப்பிடுறேன் போன ஏன் எடுக்கவே இல்ல?" என்று கேட்டாள்..

"என்னோட தாத்தா திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு அதனால ஊருக்கு கிளம்பும் படி ஆச்சா அதை இன்ஃபார்ம் பண்றதுக்கு தான் உனக்கு இத்தனை தரம் கூப்பிட்டேன் இப்ப நீ எங்க இருக்கிற?" என்று கேட்டாள்..

"ஏய் ஆல்ரெடி நான் பெங்களூரை ரீச் ஆயிட்டேன் இப்ப வந்து இப்படி சொல்றியே நான் என்ன பண்ணுவன்" தடுமாறினால் வினோதினி..
"ஒன்னும் பிரச்சனை இல்லடி ஒரு டூ டேஸ் மேனேஜ் பண்ணிக்கோ அதுக்குள்ள நான் வந்துருவேன்" என்று சொன்னால் மாதவி..
"இப்படி சொன்னா எப்படி.? இங்கே யாரை எனக்கு தெரியும்.? இப்போ போய் நான் எப்படி மேனேஜ் பண்ணுவேன்.?"

"பயப்படாத டி இந்த ஹோட்டல்ல ரூம் புக் பண்ணு சேப்டியான ஹோட்டல்தான் அது அங்க தங்க நான் வந்துடறேன் இப்ப பிஸியா இருக்கிறேன் டி அப்புறம் கூப்பிடுறேன்" என்று ஒரு ஹோட்டலின் பெயரைச் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள் மாதவி..
அடிப்பாவி இவள நம்பி வந்தா இப்படி பண்ணிட்டாலே என்று குழம்பிப் போனால் வினோதினி..

பின்னர் ஒரு ஆட்டோவை பிடித்து மாதவி சொன்ன ஹோட்டலின் பெயரைச் சொல்லிவிட்டு ஏறி அமர்ந்தாள்.

அந்த பிரபலமான ஹோட்டலின் முன் வந்து ஆட்டோ நின்றது இறங்கிப் பார்த்த வினோதினி பிரமித்து போனாள்..

"அடிப்பாவி இவ்வளவு பெரிய ஹோட்டல்ல தங்கச்சொல்லி இருக்கிறாளே இதுல தங்கணும்னா எவ்வளவு காசு செலவாகிறதாம்.! என்று புலம்பிக்கொண்டே வேறு வழி இல்லாமல் அந்த ஹோட்டலுக்குள் சென்று ரிசப்ஷனை அடைந்தாள்.

ரிசப்ஷனில் இருந்த பெண் இவளை பார்த்து அழகாக புன்னகைத்து வரவேற்றாள்.

"ஆத்தா உன் சிரிப்பு நல்லா தான் இருக்கு ஆனா உங்க ஹோட்டல் ரூம் பில்லு நல்லா இருக்காது என்ன பண்ண நான்" என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே வெளியில் அவளை பார்த்து சிரித்துக் கொண்டு "ரூம் புக்கிங்" என்றாள்..

"உங்கள் அறை மூன்றாவது தளத்தில் உள்ளது அந்தப் பக்கம் உள்ளது" என்று கைகாட்டி விட்டு ரூம் பாயை அழைத்து லக்கேஜ்களை எடுத்துச் செல்லுமாறு பணித்தாள்..
லிப்டில் நுழைந்து மூன்றாவது தளத்திற்கு வந்து தனது அறைக்குள் சென்றவள் அந்த அறையில் அழகில் லைத்து போனாள்.

சுத்தமான படுக்கை விரிப்புகளும், திரைச் சீலைகளும், அப்பழுக்கற்ற தறையும், அதன் கண்ணாடி போன்ற பல பலப்பும், நுரை மெத்தையும். என்று அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது..
அப்படியே ஓடிப் போய் மேத்தையில் விழுந்தால் வினோதினி. மெத்தை அவளை அரை அடி உள்வாங்கியது. அதன் சுகத்தில் மெய் மறந்து படுத்திருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்..

அவள் நன்றாக தூங்கி எழுந்த போது மணி பதினொன்று பசி வயிற்றை கிளியது ரூம் சர்வீஸை அழைக்கலாமா என்று யோசித்தவள் வேண்டாம் தானே ரெஸ்டாரண்டுக்கு போய் என்ன இருக்கிறது என்று பார்த்து சாப்பிடலாம் என்று முடிவு பண்ணி குளித்து ரெடியாகி கீழே சென்றாள்..

தனது சுடிதாரில் உள்ள சுருக்கங்களை நீவிகொண்டு ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தவள் அவன் மீது மோதிக் கொண்டால் தடுமாறி நிமிர்ந்து பார்த்தால் அவன் கோவையில் அவள் மீது மோதியவன் ஷியாம் சுந்தர்..

அவளுக்கு வந்ததே ஆத்திரம் அவன் தான் வேண்டுமென்றே தன் மீது வந்து மோதியதாக நினைத்துக் கொண்டு,
"பொறுக்கி ராஸ்கல் கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்கா உனக்கு திரும்பத் திரும்ப வந்து மேல இடிக்கிறியே" என்று கோவையில் இடித்ததற்கும் சேர்த்து இங்கே திட்டினாள்..
. ரெஸ்டாரண்டில் பணி புரியும் வேலையாட்கள் ஓரிருவர் இவளை திரும்பிப் பார்த்தனர். அவசரமாக அருகில் நெருங்கினர். ஷியாம் ஒரு கை அசைவினால் அவர்களை தடுத்து விட்டு ஆளிடம் எதுவும் பேசாமல் மடமடவென்று சென்று விட்டான்..

வினோதினி அவனின் முதுகை முறைத்துக் கொண்டே உள்ளே சென்று ஒரு டேபிளில் அமர்ந்து இரண்டு இட்லி மட்டும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டாள். அவளுக்கு சாப்பிடும் மூடே போய்விட்டது..

ஹோட்டலுக்குள் சென்ற ஷியாம் நேராக லிப்டிற்குள் நுழைந்து நான்காவது தளத்தில் இருந்த தனது ஆரைக்குச் சென்றான்..
அந்த அறை ஒரு விஐபி சூட். ஒரு வரவேற்பறை, ஒரு பெட்ரூம், பாத்ரூம், ட்ரெஸ்ஸிங் ரூம், என்று சகல வசதியுடன் இருந்தது அறை..

அந்த ஹோட்டலின் முதலாளியே ஷியாம் சுந்தர்தான். அந்த ஹோட்டலின் கிளைகள்,பெங்களூர், சென்னை, ஹைதராபாத், என்று விரிந்து இருந்தது..

மேலும் விரிவு படுத்தவே அவன் கோயம்புத்தூரை நோக்கி படையெடுத்தான். அப்பொழுதுதான் அங்கே வினோதினியை பார்த்தான். அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் நாம் முன்பே அறிந்ததுதான் அது இங்கேயும் தொடர்கிறது..

தொடரும்.....
வணக்கம் தோழமைகளே,
இந்த தொடரை பற்றிய உங்களது கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கும்,
அன்பு தோழி,
ரமணிதமிழ் 😊❤🙏
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top