• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஷேர்‌ மார்க்கெட்‌ சூதாட்டமா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
ஷேர்‌ மார்க்கெட்‌ சூதாட்டமா?

தினசரி வாழ்வில்‌ நான்‌ கடந்து வரும்‌ ஆட்களிடம்‌ பங்குச்‌ சந்தை

தொடர்பான இரண்டு கேள்விகளை எதிர்‌ கொள்கிறேன்‌.

  1. ஸார்‌.. ஷேர்‌ மார்க்கெட்னா சூதாட்டம்னு சொல்றாங்களே. நீங்க ஏன்‌ ஸார்‌ எப்ப பாத்தாலும்‌ அதைப்‌ பத்தியே பேசறீங்க?
  2. இப்ப என்ன ஷேர்‌ வாங்குனா நல்லா போகும்‌? சும்மா சொல்லுங்க ஸார்‌.. நாங்களும்‌ நாலு காசு பாக்கறோமே!!

இந்த இரண்டு கேள்வியும்‌ வேவ்வேறானவையாக உங்களுக்குத்‌ தோன்றலாம்‌. நன்றாக ஆராய்ந்து பார்த்தால்‌ இரண்டும்‌ ஒன்றுதான்‌ என்பது புலப்படும்‌. என்னடா பங்குச்சந்தை என்றாலே சூதாட்டம்‌ என்று தெறித்து ஓடுகிற ஆளின்‌ கேள்வியும்‌, பங்குச்சந்தையைப்‌ பற்றி தெரிந்து கொண்டு என்ன வேர்‌ வாங்கலாம்‌ என வினவும்‌ ஒருவரின்‌ கேள்வியும்‌ எப்படி ஒன்றாகும்‌ என நினைக்கிறீர்களா?

இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடை தேடும்‌ முயற்சியில்‌ இறங்கும்‌ பட்சத்தில்‌ நமக்குக்‌ கிடைக்கும்‌ பதிலின்‌ ஆழத்தில்‌ அடங்கியிருக்கிறது வாழ்க்கை எனும்‌ விடுவிக்க முடியாத விடுகதையின்‌ விடைகள்‌.

வரலாறு நெடுகிலும்‌ நாம்‌ கண்டிருக்கிறோம்‌. ஒற்றைக்‌ கேள்வி சில சாமானியர்களை ஞானிகளாக மாற்றியிருக்கிறது. சிலரது தன்மானத்தை உசுப்பி விட்டு கற்பனைக்கும்‌ எட்டாத விஷயத்தை சாதிக்கத்‌ தூண்டியிருக்கிறது. சில சாம்ராஜ்ஜியங்கள்‌ சிதறுண்டு போகக்‌ காரணமாக இருந்திருக்கிறது. சிலரது அறிவுத்‌ தேடலைத்‌ முடுக்கி விட்டு மாபெரும்‌ உயரங்களுக்குச்‌ செல்ல உதவியிருக்கிறது.

கேள்விகளை ஏவுவது பதிலைக்‌ கோருவதற்காக மட்டுமல்ல. செயலைக்‌ கோருவதற்கும்‌ தான்‌. சிந்தனையைத்‌ தூண்டுவதற்கும்‌ தான்‌. பகுத்தறிவு பிறந்ததெல்லாம்‌ கேள்விகள்‌ கேட்பதனாலே! எம்‌.ஜி.ஆர்‌. பாடல்‌ கூட உள்ளதே.

தமிழக கல்வித்‌ துறை செயலாளராக இருந்த உதயசந்திரனை நம்‌ அனைவருக்கும்‌ தெரிந்திருக்கும்‌. 10 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ மாணவர்கள்‌ பெற்ற ரேங்க்‌ அறிவிப்பதில்லை என்ற முடிவு உட்பட பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌ பல மாற்றங்களை புகுத்துவதில்‌ அவரது பங்கு முக்கியமானது. ஆனால்‌ அவர்‌ IAS ஆனதற்கு முக்கியமான காரணம்‌ அவர்‌ பள்ளியில்‌ படித்த போது ஆசிரியர்‌ கேட்ட கேள்வி.

அந்த ஆசிரியர்‌ வகுப்பு ஆரம்பிக்கும்‌ முன்னர்‌ பாடம்‌ சம்பந்தமான கேள்விகளை கேட்காமல்‌, “பஞ்சாப்‌ முதலமைச்சர்‌ யார்‌?” என்ற ரீதியில்‌ கேட்பாராம்‌. அது பொது அறிவின்‌ மீதான காதலை உதயசந்திரனுக்கு ஊட்டியிருக்கிறது. அப்படியொரு கேள்வி கேட்பதால்‌ தன்‌ மாணவர்‌ ஐ.ஏ.எஸ்‌ அதிகாரியாவார்‌ என்றெல்லாம்‌ அந்த ஆசிரியர்‌ நினைத்திருக்க மாட்டார்‌. எனினும்‌ அவர்‌ கேட்ட கேள்விக்கான பதிலைத்‌ தேடும்‌ பயணம்‌ ஒரு மாணவனை எத்தனை தூரம்‌ கொண்டு செல்லும்‌ என்பது உதயசந்திரன்‌ வடிவில்‌ நம்‌ முன்னால்‌ சான்றாக வந்து நிற்கிறது.

அப்படியொரு கேள்வியாகத்தான்‌ ஷேர்‌ மார்க்கெட்னா சூதாட்டம்னு பேசிக்கறாங்களே?” என 19 வயது இளைஞர்‌ ஒருவர்‌ கேட்டார்‌.

வாரன்‌ பஃப்ட்டின்‌ வாழ்க்கை வரலாற்றை வாசித்து விட்டு அவரைப்‌ போலவே பணக்காரன்‌ ஆகும்‌ கனவு வந்திருக்கிறது அந்த இளைஞருக்கு. 19 வயது வாழ்க்கையை ஆரம்பிக்கும்‌ வயது. ஏதேனும்‌ ஒரு துறையில்‌ நுழைந்து அதில்‌ நிபுணத்துவம்‌ எய்தி அந்தத்‌ துறையின்‌ உச்சத்துக்கு செல்லலாம்‌. ஆனால்‌ அவருக்கு பொறுமையில்லை.
“ஷேர்‌ மார்க்கெட்‌ பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டு அதுல கூட நீங்க ஈடுபடலாம்‌” என்றேன்‌.

“அது வேண்டாம்‌ ஸார்‌. சூதாட்டம்‌”

“யாரு சொன்னாங்க?”
இணைய தளத்தில்‌ இயற்கை உணவு பற்றி நிறைய கருத்துச்‌ சொல்கிற ஒரு பிரபலம்‌ சொன்னாராம்‌. ஷேர்‌ மார்க்கெட்‌ மாபெரும்‌ சூதாட்டக்களம்‌. யார்‌ வேண்டுமானாலும்‌ எப்போது வேண்டுமானாலும்‌ ஷேர்களை ஏற்ற முடியுமாம்‌. இறக்க முடியுமாம்‌. அவர்‌ அது போல எத்தனை முறை ஏற்றி இறக்கியிருக்கிறார்‌ என்று கேட்டேன்‌. பதிலில்லை. இப்படித்தான்‌ நமக்கு தப்புத்‌ தப்பான கற்பிதங்களை சொல்லி வைத்திருக்கிறார்கள்‌. குறிப்பாக நாம்‌ பேசுவதை நாலு பேர்‌ கேட்கிறார்கள்‌ என்ற நினைப்பு வந்தவுடன்‌ ஒட்டிக்கொள்ளும்‌ மேதாவித்தனம்‌ இருக்கிறதே.... அப்பப்பா!

ஷேர்‌ மார்க்கெட்‌ சூதாட்டம்‌ என்றால்‌ நீங்கள்‌ மாநகர வீதியில்‌ இரு சக்கர வாகனம்‌ ஓட்டுவதும்‌ சூதாட்டம்‌. திருமணம்‌ செய்து கொள்வதும்‌ சூதாட்டம்‌. அவ்வளவு ஏன்‌... நமது நாட்டின்‌ முதுகெலும்பாக நினைக்கும்‌ விவசாயம்‌ கூட சூதாட்டம்தான்‌. இன்னும்‌ சொல்லப்‌ போனால்‌ ஷேர்‌ மார்க்கெட்டை விடப்‌ பெரிய சூதாட்டம்‌ விவசாயம்‌.

மழை, வெயில்‌, புயல்‌, பூச்சிகள்‌, நோய்‌ தாக்குதல்‌ என பல்வேறு சக்திகளோடு பகடையாடி வெள்ளாமையை விளைவித்தாலும்‌ அது என்ன 'விலை விக்கும்‌” என்று தெரியாது. குடியானவன்‌ போட்ட மூலதனம்‌, அவனது உழைப்பிற்கான கூலி என்றெல்லாம்‌ கணக்குப்‌ போட்டு பார்த்தால்‌ சில நேரங்களில்‌ நட்டமே மிஞ்சும்‌.

ஆனால்‌ விவசாயிக்கு தெரியும்‌. எந்தப்‌ பருவத்தில்‌ பயிரிட வேண்டும்‌. எப்போது மழைக்‌ காலம்‌, எப்போது கோடை காலம்‌, எப்போது காற்றுக்‌ காலம்‌, எந்தக்‌ காலத்தில்‌ என்ன விதைக்கலாம்‌, எந்தப்‌ பருவத்தில்‌ எது வளரும்‌, எது அழுகும்‌, எது கருகும்‌, எது விற்கும்‌ என இயற்கையோடு பழகி ஓரளவிற்கு புரிதலை உருவாக்கி வைத்திருக்கிறார்‌ அவர்‌.

பாட்டனார்‌ விவசாயம்‌ செய்ததை பார்த்து வளர்ந்திருக்கிறார்‌. தகப்பனார்‌ விவசாயம்‌ செய்ததை உடனிருந்து கற்றிருக்கிறார்‌. அதனால் அந்த உழவுத்‌ தொழிலின்‌ நெளிவு சுழிவு தெரியும்‌. அதையும்‌ தாண்டி சில சமயங்களில்‌ இயற்கையோ, சந்தையோ அல்லது இரண்டுமோ வஞ்சித்து விடுவதுண்டு. இம்மாதிரியான ரிஸ்க்‌ எல்லாத்‌ தொழிலும்‌ இருக்கும்‌. அதை அறிந்துதான்‌ குடியாவன்‌ விதைக்கிறான்‌.

ஆனால்‌ விவசாயம்‌ பற்றி எதுவுமே தெரியாத சாஃப்ட்வேர்‌ ஆசாமி, “நான்‌ ஒரு பத்து ஏக்கர்‌ நிலம்‌ வாங்கி விவசாயம்‌ செய்யலாம்னு இருக்கேன்‌. இந்த விவசாயிங்க எல்லாம்‌ என்னமா சம்பாதிக்கிறாங்க தெரியுமா ப்ரோ.. இத்தனைக்கும்‌ அவங்க வருமானத்துக்கு நோ இன்கம்டேக்ஸ்‌” என்று சொன்னால்‌ எப்படியிருக்கும்‌!

ஒரு தொழிலைப்‌ பற்றி எதுவுமே தெரியாமல்‌ அது இலாபகரமான தொழில்‌ என்ற நினைப்பில்‌ பணத்தையெல்லாம்‌ கொட்டி பத்து ஏக்கர்‌ நிலம்‌ வாங்குவது தான்‌ சூதாட்டம்‌. அதே போலத்தான்‌ ஷேர்‌ மார்க்கெட்‌ சூதாட்டம்‌ என்ற தப்பான நினைப்பில்‌ அந்தப்‌ பக்கமே போகாமல்‌ இருப்பதும்‌.

என்னால்‌ உறுதியாகச்‌ சொல்ல முடியும்‌. ஷேர்‌ மார்க்கெட்டில்‌ முதலீடு செய்வது சூதாட்டம்‌ அல்ல. அதைப்‌ பற்றி ஒன்றுமே புரிந்து கொள்ள முயற்சிக்காமல்‌ ஒதுங்கிப்‌ போவதுதான்‌ சூதாட்டம்‌. குதிரைக்கு கடிவாளம்‌ போட்ட மாதிரி உடும்புப்‌ பிடியாக ஒரு எண்ணத்தை உருவாக்கி வைத்துக்‌ கொண்டு இருப்பதால்‌ தொடர்ச்சியாக புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும்‌ முட்டுக்கட்டை போட்டு, மூளை துருப்பிடித்துப்‌ போக அனுமதிக்கிறோமே அதுதான்‌ சூதாட்டம்‌.

பங்குச்‌ சந்தையை கவனிக்கத்‌ தொடங்குகிற ஒருவனின்‌ அறிவு கவட்டி கவட்டியாக விரியும்‌. அவ்வாறு அறிவு அகலமாகாமல்‌ தனக்குத்தானே வைத்துக்‌ கொள்ளும்‌ ஆப்புக்கு பெயர்தான்‌ ஷேர்‌ மார்க்கெட்‌ சூதாட்டம்‌' எனும்‌ மனத்தடை.

ஷேர்‌ மார்க்கெட்டில்‌ நுழைவது எப்படி, நுழைந்து என்ன செய்வது, எப்படி/எதைச்‌ செய்வது என்ற வழிமுறைகளுக்கெல்லாம்‌ முக்கியம்தான்‌.

அதற்கு முன்‌ ‘இது சூதாட்டம்‌ கிடையாது’ என்ற மனநிலை முக்கியம்‌.

முதல்‌ கேள்வியின்‌ பதிலாகக்‌ கிடைத்த மனநிலையில்‌ இருந்து, “இப்ப என்ன ஷேர்‌ வாங்குனா நல்லா இருக்கும்‌?” என்ற இரண்டாவது கேள்வியின்‌ பதிலாக வழிமுறை பிறக்கும்‌.

லைக்‌ பண்ணாட்டியும்‌ பரவாயில்லை... ஷேர்‌ பண்ணுங்க...
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
காய்கறி மார்க்கெட்டும்‌ ஷேர்‌ மார்க்கெட்டும்‌ ஒண்ணா?

என்‌ மகள்‌ என்னிடம்‌ கேட்டாள்‌.

"அப்பா பூ மார்க்கெட்ல என்ன விக்கறாங்க?

“பூ” என்றேன்‌.

“மீன்‌ மார்க்கெட்ல?”

“மீன்”

“அப்ப சூப்பர்‌ மார்க்கெட்ல?

“சூப்பர்‌...” என இழுத்து விட்டு “கேள்விடா” என சமாளிக்க வேண்டியதாகப்‌ போனது.

இந்த விளையாட்டு வெகுவாக யோசிக்க வைத்தது. எப்போதுமே என்னை நானே வினவிக்கொள்ளும்‌ ஒரு கேள்வி மறுபடியும்‌ மனக்கண்‌ முன்‌ வந்து போனது. அது என்ன கேள்வி என்கிறீர்களா!!

“அப்ப ஷேர்‌ மார்க்கெட்ல?”

ஷேர்களை வாங்கி விற்கும்‌ இடம்‌! தக்காளி, வெங்காயம்‌, கொத்தவரங்காய்‌ மாதிரி ஷேர்களை வாங்கலாம்‌. விற்கலாம்‌. நிறையப்‌ பேர்‌ போட்டி போட்டு வாங்கும்‌ ஷேரின்‌ விலை அதிகரிக்கும்‌.

வேண்டாம்‌ என விற்கும்‌ ஷேரின்‌ விலை குறையும்‌. அந்த வகையில்‌ ஷேர்‌ மார்க்கெட்‌ மற்ற மார்க்கெட்களைப்‌ போலத்தான்‌. ஆனாலும்‌ மற்ற மார்க்கெட்களிடமிருந்து ஷேர்‌ மார்க்கெட்‌ அடிப்படையில்‌ எவ்வாறு வேறுபட்டது என்பதை நாம்‌ உணர வேண்டும்‌.

ஷேர்களை வாங்கி விற்பது வியாபாரம்‌. ஷேர்கள்‌ என்றில்லை, எதை வாங்கி விற்றாலும்‌ அது வியாபாரம்தான்‌. ஷேர்‌ மார்க்கெட்‌ என்பது ஷேர்களை வாங்கி விற்பதற்கான இடம்‌. ஆனால்‌ ஷேர்களை வாங்குவதன்‌ மூலம்‌ என்னவாகிறோம்‌? நமக்கு என்ன நடக்கிறது?

ஷேர்களை வாங்கியவுடன்‌ நமக்கும்‌ ஷேர்‌ மார்க்கெட்டிற்குமான உறவு முடிந்து விட்டதாக நினைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. அதை தமிழ்‌ மேட்ரிமோனி இணையதளம்‌ போல கற்பனை செய்து கொள்ளுங்கள்‌.

நமக்கு ஏற்ற வாழ்க்கைத்‌ துணையை அணுகுவதற்கான இடம்‌. அணுகி அச்சாரம்‌ போட்ட பிறகு நமக்கும்‌ அந்த துணைக்குமான வாழ்க்கை ஆரம்பிக்கிறது. அதன்‌ பிறகு மேட்ரிமோனி வெப்சைட்டிற்கு எந்தவொரு முக்கியத்துவமும்‌ கிடையாது. கல்யாணம்‌ ஆன பிறகும்‌ அந்த வெட்சைட்டில்‌ தினமும்‌ நான்கைந்து மணி நேரம்‌ மேய்ந்து கொண்டிருந்தால்‌ மனைவி உதைக்க வருவார்‌. தினமும்‌ மனைவியை விவாகரத்து செய்து விட்டு இன்னொரு மனைவியை மணக்க நினைத்தால்‌? சட்டப்படி அது சாத்தியமில்லை. ஒரு வேளை மேட்ரிமோனி வெட்சைட்களில்‌ அப்படி செய்வது சட்டரீதியாக சாத்தியம்‌ என்றாலும்‌ கூட நாம்‌ செய்வோமா? இல்லையல்லவா!

தாலி கட்டி விட்டான்‌ என்பதற்காக பிடிக்காத கணவனோடு வாழ்ந்தே ஆக வேண்டுமென ஒரு பெண்ணை கட்டாயப்படுத்துதல்‌ எத்தனை அவமானகரமானதோ அதேயளவு அவமானகரமானது (அறிவீனமானதும்‌ கூட) தினந்தோறும்‌ மனைவியை மாற்றும்‌ வாய்ப்பு கிடைத்தால்‌ மாற்றிக்கொண்டே இருக்க முயற்சிப்பது. வாழ்க்கை என்பது வாழ்க்கைத்‌ துணையோடு வாழ்வதுதானே ஒழிய அதனை மாற்றுவதோ அல்லது அதற்கான தேவை கூடிக்‌ குறைகிறதா என்று பொழுதனிக்கும்‌ கம்ப்யூட்டர்‌ திரை முன்னர்‌ உட்கார்ந்து பார்ப்பதுவோ கிடையாது.

தமிழ்‌ மேட்ரிமோனி வெட்சைட்டை அணுகுவது போலத்தான்‌ ஷேர்‌ மார்க்கெட்டையும்‌ அணுக வேண்டும்‌. மேட்ரிமோனி தளம்‌ மூலமாக வாழ்க்கைத்‌ துணையோடு இணைகையில்‌ வாழ்க்கையை பங்கு போட்டுக்கொள்கிறோம்‌. ஷேர்‌ மார்க்கெட்‌ மூலமாக ஷேர்‌ வாங்க்குகையில்‌ குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின்‌ பிசினஸை பங்கு போட்டுக்கொள்கிறோம்‌. அதோடு ஷேர்‌ மார்க்கெட்டை மறந்து விட்டு அந்த நிறுவனத்தை கவனிக்கத்‌ துவங்க வேண்டும்‌.

உதாரணத்திற்கு உங்கள்‌ வீதியில்‌ ஒரு டீக்கடை உள்ளது என்று வைத்துக்‌ கொள்ளுங்கள்‌. அந்தக்‌ கடை நீண்ட காலமாக அதே வீதியில்‌ உள்ளது. ஆனால்‌ டீக்கடைக்கார நண்பருக்கு நிதி நெருக்கடி.

அவசரமாக ஒரு இலட்ச ரூபாய்‌ வேண்டும்‌. பல பேரிடம்‌ கடன்‌ கேட்டுப்‌ பார்க்கிறார்‌. யாருமே உதவ முன்வரவில்லை. நீங்கள்‌ அந்தத்‌ தொகையை தந்து உதவினால்‌ தனது டீக்கடையில்‌ உங்களை பார்ட்னர்‌ ஆக்குவதாகச்‌ சொல்கிறார்‌. என்ன செய்வீர்கள்‌?

கடனாகக்‌ கொடுத்தால்‌ பரவாயில்லை. வியாபாரத்தில்‌ இலாபமோ, நஷ்டமோ அந்த நபர்‌ வாங்கிய கடனை வட்டியோடு திருப்பித்‌ தர வேண்டும்‌. ஆனால்‌ வியாபாரத்தில்‌ பார்ட்னர்‌ என்றால்‌? ஒரு வேளை நீங்கள்‌ போடும்‌ முதலீடு அமோகமாக இலாபம்‌ தரலாம்‌. அல்லது ஒன்றுமே இல்லாமல்‌ போகலாம்‌. என்ன வேண்டுமானாலும்‌ ஆகலாம்‌.

எதுவாக ஆனாலும்‌ நீங்கள்‌ கேட்ட மாத்திரத்தில்‌ தூக்கிக்‌ கொடுக்க மாட்டீர்கள்‌. நிறைய யோசித்து, ஆராய்ந்து அதன்‌ பிறகே டீக்கடையில்‌ பார்ட்னர்‌ ஆகும்‌ முடிவுக்கு வருவீர்கள்‌.

அந்தக்‌ கடை எத்தனை காலமாக அங்கே இயங்குகிறது? தினமும்‌ எத்தனை பேர்‌ வந்து போகிறார்கள்‌? சராசரியாக தினசரி வியாபாரம்‌ எவ்வளவுக்கு நடக்கிறது? அதில்‌ எவ்வளவு செலவாகிறது, மீதம்‌ எவ்வளவு இலாபம்‌ நிற்கும்‌? என்னதான்‌ நாமும்‌ பார்ட்னர்‌, ஏற்கனவே கடை நடத்தும்‌ டீக்கடைக்கார நண்பரும்‌ பார்ட்னர்‌ என்றாலும்‌, அவர்‌ கடையைக்‌ கவனித்துக்‌ கொள்வதால்‌ அவருக்கு சம்பளம்‌ என்ற ஒரு விஷயம்‌ தர வேண்டும்‌. அது போக மீதமிருக்கும்‌ இலாபத்தைத்தான்‌ இருவரும்‌ பங்கு போட முடியும்‌.

அப்படியானால்‌ அவரது சம்பளம்‌ எவ்வளவு? தினசரி எவ்வளவு வியாபாரம்‌ நடக்கிறது என்ற கணக்கு வழக்கு விபரங்களை ஒளிவு மறைவின்றி நம்மிடம்‌ சொல்லி விடுவாரா அல்லது ஆயிரம்‌ ரூபாய்க்கு நடக்கும்‌ வியாபாரத்தை வெறும்‌ அறுநாறு ரூபாய்‌ என்று ஏமாற்றி விடுவாரா? அந்த ஏரியாவில்‌ வேறு ஏதாவது தேநீர்‌ கடைகள்‌ உள்ளனவா அல்லது இது ஒன்றுதானா? வேறு கடைகள்‌ இல்லையென்றால்‌ அவை வருவதற்கான சாத்தியம்‌ உள்ளதா?

அப்படி வந்தால்‌ இந்தக்‌ கடையில்‌ வியாபாரம்‌ பாதிக்கப்படுமா? அந்தக்‌ கடைக்கு வரும்‌ வாடிக்கையாளர்கள்‌ தினசரி வந்து போகும்‌ வழக்கமான வாடிக்கையாளர்களா அல்லது எப்போதாவது வந்து போகும்‌ வழிப்‌ போக்கர்களா? வாடிக்கையாளர்களின்‌ எண்ணிக்கைக்கும்‌ கடை அமைந்திருக்கும்‌ கட்டித்திற்கும்‌ தொடர்பு உள்ளதா? கட்டிட உரிமையாளர்‌ இனிமேல்‌ கடை வாடகைக்கு கிடையாது என்று சொல்வதற்கு வாய்ப்புண்டா? அப்படி நடந்தால்‌ வியாபாரம்‌ பாதிக்காத வகையில்‌ வேறு இடத்திற்கு கடையை மாற்ற முடியுமா? பி.ஃபார்ம்‌ படித்தவர்கள்‌ தான்‌ மருந்துக்கடை நடத்த வேண்டும்‌ என்பது போல இனிமேல்‌ ஹோட்டல்‌ மேனேஜ்மெண்ட்‌ படித்தவர்கள்‌ மட்டுந்தான்‌ டீக்கடை நடத்த வேண்டும்‌ என சட்டம்‌ ஏதாவது வந்து தொலைக்குமா?

நமது டீக்கடைக்கார நண்பர்‌ இதே போல எப்போதும்‌ தேநீர்‌ மட்டும்‌ விற்பதோடு நிறுத்திக்‌ கொள்வாரா அல்லது பஜ்ஜி, வடை போன்ற பலகாரங்களையும்‌ சுடுவதற்கு திட்டம்‌ வைத்திருக்கிறாரா? அதை பேக்கரியாக மாற்றும்‌ எண்ணமிருக்கிறதா? காலப்‌ போக்கில்‌ வெவ்வேறு கிளைகள்‌ திறக்க திட்டமுண்டா? ஒரு வேளை அவருக்கும்‌ நமக்கும்‌ ஒத்துவரவில்லை எனும்‌ நிலைமை ஏற்பட்டு நாம்‌ வெளியேறினால்‌ அப்போது நமக்கு அவர்‌ எவ்வளவு தருவார்‌. அதே ஒரு இலட்ச ரூபாயா அல்லது அதிகமாகவா அல்லது குறைவாகவா அல்லது அப்போது பேசி தீர்மானிப்பதா அல்லது நாமே இன்னொரு பார்ட்னரை கொண்டு வந்து சேர்த்து விட்டு அந்த புதிய பார்ட்னரிடம்‌ பணம்‌ பெற்றுக்கொள்ள வேண்டுமா?

இப்படியெல்லாம்‌ யோசிப்போமா இல்லையா! நாம்‌ ஒரு இலட்சம் ரூபாய்‌ கொடுத்து டீக்கடையில்‌ பார்ட்னர்‌ ஆனால்‌ ஒரு வருடத்தில்‌ எவ்வளவு இலாபம்‌ கிடைக்கும்‌? நமது பணம்‌ முழுவதுமாக நமக்குத்‌ திரும்பி வர எத்தனை காலம்‌ பிடிக்கும்‌? இப்படியெல்லாம்‌ கணக்கு போடுவோமா இல்லையா?

ஒரு தொழிலில்‌ பார்ட்னர்‌ ஆகும்‌ நோக்கம்‌ இருந்தால்‌ இதெல்லாம்‌ செய்துதான்‌ தீர வேண்டும்‌. ஒரு நிறுவனத்தின்‌ ஷேர்களை வாங்கும்‌ போதும்‌ அப்படித்தான்‌. ஷேர்களை வாங்குவதன்‌ மூலம்‌ நாம்‌ அதன்‌ பார்ட்னர்‌ ஆகிறோம்‌. அதன்‌ இலாப நஷ்டத்தில்‌ நமக்கு பங்குண்டு. நல்லது கெட்டதில்‌ பொறுப்புண்டு.

நாம்‌ என்ன கம்பெனியின்‌ பங்குகளை வாங்குகிறோம்‌, அந்த கம்பெனி என்ன பிசினஸ்‌ செய்கிறது என்று கூட யோசிக்காமல்தான்‌ இது வரைக்கும்‌ வாங்கியிருக்கிறீர்களா? மேட்ரிமோனி வெட்சைட்டில்‌ நம்‌ வீட்டுப்‌ பெண்ணுக்கு வரன்‌ தேடும்‌ போதும்‌ “மாப்பிள்ளையின்‌ கேரக்டர்‌ எப்படி? எங்கே வேலை செய்கிறார்‌?” என்றெல்லாம்‌ யோசிக்காமல்‌ நிச்சயம்‌ செய்திருக்கிறீர்களா?

அப்படியானல்‌ ஒப்புக்கொள்வோம்‌. ஷேர்‌ மார்க்கெட்‌ சூதாட்டக்களமல்ல. நாம்தான்‌ சூதாடிகள்‌ என்று.
 




Last edited:

Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
பங்குச்‌ சந்தை... முதலீடுகளின்‌ சிம்ம சொப்பனம்‌!

ஒரு மேலை நாட்டு அறிஞரும்‌, பேரழகியொருத்தியும்‌ பார்ட்டி ஒன்றில்‌ சந்தித்துக்‌ கொள்கிறார்கள்‌.

கையில்‌ மதுக்‌ கோப்பையோடு அறிஞரை அணுகிய அவ்வழகி கேட்கிறாள்‌: “நாம்‌ ஏன்‌ திருமணம்‌ செய்து கொள்ளக்‌ கூடாது?”

அதற்கு அந்த அறிஞர்‌, “உங்களுக்கு அப்படியொரு யோசனை வரக்‌ காரணம்‌ என்னவோ?”

“நாம்‌ இருவரும்‌ திருமணம்‌ செய்து கொண்டால்‌ நமக்கு பிறக்கும்‌ குழந்தை உங்களது அறிவையும்‌, எனது அழகையும்‌ ஒன்றாக்‌ கலந்த விநோதக்‌ குழந்தையாக பிறக்கும்‌.”

“வேண்டாம்‌” என்கிறார்‌ அறிஞர்‌. அவளுக்கோ குழப்பம்‌. தன்‌ கடைக்கண்‌ பார்வைக்காக ஏங்கும்‌ செல்வந்தர்கள்‌ ஏராளம்‌ என அவளுக்குத்‌ தெரியும்‌ என்பதால்‌ ஆச்சரியம்‌ கலந்த குழப்பம்‌.

குழப்பம்‌ தீர்க்கும்‌ வகையில்‌, “ஒரு வேளை என்னுடைய அழகும்‌, உங்களது அறிவும்‌ சேர்ந்து பிறந்து விட்டால்‌ கஷ்டம்‌ அல்லவா!” என்கிறார்‌ அறிஞர்‌.

ஷேர்‌ மார்க்கெட்டில்‌ முதலீடு செய்வதிலும்‌ இப்படியாக நடக்கலாம்‌.

பொதுவாக குறைவான விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது புத்திசாலித்தனமான அணுகுமுறை என்பார்கள்‌. நம்மில்‌ பலருக்கும்‌ அதிக விலைக்கு வாங்கி குறைவான விலைக்கு விற்கும்‌ பிராப்தமே அமைகிறது.

ஒரு வேளை நாம்‌ பங்குச்‌ சந்தையில்‌ பங்குகளை வாங்கிய பிறகு விலை சரிந்தால்‌ என்னாவது? நம்ம ராசி அப்படித்தான்‌ என சமாதானம்‌ செய்து கொண்டு அதன்‌ பிறகு மார்க்கெட்‌ பக்கமே எட்டிப்‌ பார்க்க மாட்டோம்‌.

ஷேர்‌ மார்க்கெட்‌ ரிஸ்க்‌ என நம்மில்‌ பலரும்‌ கருதுவதற்கு முக்கியமான காரணமே இதுதான்‌. விலை சரிந்தால்‌ இதயம்‌ துடிக்கும்‌ வேகம்‌ அதிகரிக்கும்‌.

குறுகிய காலத்தில்‌ ஏற்ற இறக்கங்கள்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ நீண்ட கால அடிப்படையில்‌ மற்ற முதலீட்டு வடிவங்களை விட பங்கு முதலீடுகள்‌

இலாபகரமானவை என்பதை பல ஆய்வுகள்‌ நிரூபித்திருக்கின்றன. வங்கி வைப்பீடுகள்‌, தங்கம்‌, ரியல்‌ எஸ்டேட்‌ இவற்றையெல்லாம்‌ விட பங்கு முதலீடுகள்‌ சிறந்தவை என்பது நிறுவப்பட்ட உண்மை.

“நான்‌ பிறந்தப்ப தங்கம்‌ ஒரு பவுன்‌ வெறும்‌ 500 ரூபாய்‌ தான்‌. இப்ப எவ்ளோ விக்குது பாருங்க.”

“மேடவாக்கத்துல ஒரு கிரவுண்ட்‌ ஜஸ்ட்‌ 10 இலட்சத்துக்கு வாங்கினோம்‌. இப்ப ஒன்‌ C போகும்‌.”

இப்படியெல்லாம்‌ பேசக்‌ கேட்டிருப்போம்‌ நாம்‌. தங்கல்‌, ரியல்‌ எஸ்டேட்‌ எல்லாம்‌ பன்மடங்கு உயர்ந்த மாதிரி தெரியும்‌. ஆனால்‌ அதே கால அளவுக்கு ஷேர்‌ மார்க்கெட்டில்‌ முதலீடு செய்திருந்தால்‌ நம்‌ பணம் அதைக்‌ காட்டிலும்‌ பெருகியிருக்கும்‌.

மும்பை பங்குச்‌ சந்தையில்‌ குறியீடு சென்செக்ஸ்‌1979 முதல்‌ தற்போது வரை எவ்வாறு உயர்ந்துள்ளது என்ற விவரம்‌ கீழே.

1979 ஆம்‌ ஆண்டு வெறும்‌ 118 புள்ளியில்‌ முடிந்த சென்செக்ஸ்‌ இப்போது 31 ஆயிரத்துக்கும்‌ மேலே. சுமார்‌ 260 மடங்கு பெருகியிருக்கிறது.

ஷேர்‌ மார்க்கெட்‌ ரிஸ்க்‌ என்றும்‌, தங்கம்‌ பாதுகாப்பானது என்றும்‌ கருதுவோர்‌ ஒரு கிராம்‌ தங்கத்தின்‌ விலை 1979 லும்‌, தற்போதும்‌ என்னவென்று கணக்குப்‌ போட்டு பார்த்தால்‌ உண்மை புரியும்‌.

சென்செக்ஸ்‌ பயணம்‌

எனினும்‌ பங்குச்‌ சந்தையின்‌ இந்தப்‌ பயணம்‌ நேர்‌ கோட்டில்‌ இல்லை. குறிப்பாக 2008 ஆம்‌ ஆண்டை மட்டும்‌ எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. அந்த ஆண்டு 20325.27 புள்ளியில்‌ ஆரம்பித்து 21206.77 இல்‌ உச்சம்‌ தொட்டு அதன்‌ பிறகு 7697.39 க்கு சரிந்து. இத்தனையும்‌ ஒரே வருடத்திற்குள்‌.

இத்தகைய சரிவில்‌ இருந்து 2-3 ஆண்டுகளில்‌ பங்குச்‌ சந்தை மீண்டு வந்தது. ஒரு நீண்ட பயணத்தில்‌ பொது அவ்வப்போது ஓய்வெடுப்பது மாதிரித்தான்‌ இதுவும்‌.

1979 முதல்‌ தற்போது வரைக்கும்‌ நீண்ட கால அடிப்படையில்‌ 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வைத்திருந்தால்‌ சராசரியாக ஆண்டுக்கு 16.24% வளர்ச்சி கிடைத்திருக்கும்‌. இது ஆண்டு முடிவில்‌ வாங்கி 5 வருடம்‌ கழித்து ஆண்டு முடிவில்‌ விற்றால்‌ வரும்‌ கணக்கு. ஆனால்‌ எந்த ஐந்தாண்டு கால இடைவெளியிலும்‌ சந்தை சில உயரங்களைத்‌ தொட்டு அதிக இலாபத்தில்‌ விற்பதற்கான வாய்ப்புகளை உண்டாக்கி தந்தே தீரும்‌.

ஒரு ஆண்டில்‌ மிக்‌ குறைந்த புள்ளியில்‌ முதலீடு செய்து அடுத்த ஆண்டின்‌ அதிகப்‌ புள்ளியில்‌ விற்றிருந்தால்‌ கடந்த 21 ஆண்டுகளில்‌ சராசரியாக ஆண்டுக்கு 77.70% இலாபம்‌ ஈட்டியிருக்கலாம்‌. 21 இல்‌ 8 ஆண்டுகள்‌ முதலீட்டை இரட்டிக்க வாய்ப்பு ஏற்படுத்திக்‌ கொடுத்திருக்கும்‌.

ஒரு வேளை அறிஞரின்‌ அழகோடும்‌, அழகியின்‌ அறிவோடும்‌ குழந்தை பிறப்பது போல ஒரு வருத்தின்‌ உச்சியில்‌ வாங்கி விட்டு அடுத்த வருடம்‌ பள்ளத்தில்‌ விற்றால்‌? அதே 21 ஆண்டுகள்‌ சராசரியாக 26.46% நட்டம்‌ ஏற்படுத்தித்‌ தந்திருக்கும்‌.

அவ்வாறு நடக்காமல்‌ தடுக்க நாம்‌ அறிஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சரிவின்‌ போது மனம்‌ கலங்காமல்‌ ஷேர்களை நீண்ட கால முதலீடாக கருதி காத்திருந்தால்‌ போதும்‌... சொல்வதற்கு எளிதாக இருக்கும்‌. ஆனால்‌ நம்‌ முதலீடு பாதியாக்‌ குறைந்திருப்பதைக்‌ காண மனது வலிக்கும்‌. சிரமம்தான்‌. ஆனாலும்‌ சாத்தியம்‌. முதலீட்டாளனுக்கான பண்புகளைக்‌ கற்பது நீச்சல்‌ கற்பதைப்‌ போலத்தான்‌. பயிற்சியால்‌ முடியாது ஏதுமில்லை.

நெருப்பில்‌ வெந்தால்‌ மட்டுமே தங்கம்‌ ஆபரணமாகும்‌. ஒரு சரிவினை தாக்குப்‌ பிடித்து நிற்கையில்‌ நல்ல முதலீட்டாளன்‌ உருவாகிறான்‌.
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
ஷேர்‌ மார்க்கெட்‌ என்றால்‌?

இந்த தொடர்‌ ஆரம்பிக்கிற போது “என்றால்‌ என்ன?” “எப்படி?” என்கிற ரீதியில்‌ அமைந்து விடக்‌ கூடாது என முடிவு செய்திருந்தோம்‌. அதாவது,

“ஷேர்‌ மார்க்கெட்‌ என்றால்‌ என்ன?”

“ஷேர்‌ மார்க்கெட்டில்‌ பணம்‌ சம்பாதிப்பது எப்படி?” மாதிரியான கேள்விகள்‌..

ஆனால்‌ யோசித்துப்‌ பார்க்கையில்‌ இந்த தொடருக்கான நோக்கம்‌ அம்மாதிரியான கேள்விகளுக்கான பதிலை தேடுவதற்கு ஒரு உந்து சக்தியாக இருக்கட்டுமே என்று படுகிறது..... கார்‌ என்றால்‌ அதில்‌ கியர்‌ இருக்கும்‌, கிளட்ச்‌ இருக்கும்‌, பிரேக்‌ இருக்கும்‌, ஆக்சலரேட்டர்‌ இருக்கும்‌ என்பது போல..

சென்ற அத்தியாயத்தில்‌ தெரிந்தோ தெரியாமலோ ஷேர்‌ மார்க்கெட்டையும்‌, சென்செக்ஸையும்‌ தொட்டு விட்டோம்‌. இரண்டுக்குமான அறிமுகம்‌ மேலோட்டமாக தேவைப்படுகிறது. இந்த வாரம்‌ ஷேர்‌ மார்க்கெட்டை பற்றி மேலோட்டமாக பார்த்து விடலாம்‌.

தேவைப்பட்டால்‌ அடுத்த வாரமும்‌..

டீக்கடை ஒன்றில்‌ பங்குதார்‌ ஆவது குறித்து முன்பொரு வாரம்‌ பேசினோம்‌. நமது தெருவில்‌ உள்ள தேநீர்‌ கடையில்‌ நாம்‌ முதலீடு செய்தால்‌ நாம்‌ அதன்‌ பங்குதார்‌ ஆவோம்‌. நாம்‌ செலுத்தும்‌ முதலீட்டுக்கு ஏற்ப நமது ஷேர்‌ அந்த தொழிலில்‌ முடிவாகும்‌. ஏற்கனவே கடையை நடத்தும்‌ நபருக்கு ஐந்தில்‌ நான்கு பங்கு ஷேர்‌ என்றால்‌ நமக்கு ஐந்தில்‌ ஒரு பங்கு ஷேராக இருக்கும்‌. அந்த பிசினஸின்‌ இலாபம்‌ 100 ரூபாய்‌ என்றால்‌ அதில்‌ ரூ 80 ஐ அவர்‌ எடுத்துக்‌ கொள்வார்‌. மீதி ரூ 20 நமக்கு.

மாறாக டீக்கடைக்கு ஆயிரம்‌ ரூபாய்‌ கடன்‌ இருக்கிறதென்றால்‌ அதில்‌ 600 ரூபாயை அவரும்‌ மீதி 200 ரூபாயை நாமும்‌ சுமக்க வேண்டியிருக்கும்‌. இதுதான்‌ அடிப்படை. இரண்டு பேர்‌ மட்டுமே பங்குதாரராக பரிணமிக்கும்‌ டீக்கடையை எப்படி அணுகுகிறோமோ அதே மாதிரித்தான்‌ பல இலட்சம்‌ அல்லது கோடி ஷேர்கள்‌ உள்ள ஒரு பெரிய நிறுவனத்தையும்‌ அணுகவேண்டும்‌.

ரிலையன்ஸ்‌ நிறுவனத்தில்‌ ஒரு ஷேர்‌ வைத்திருந்தாலே அம்பானியும்‌, நாமும்‌ பங்குதாரர்‌ ஆகிறோம்‌. அதே மாதிரி விப்ரோ நிறுவனத்தில்‌ ஒரு ஷேர்‌ வாங்கி விட்டாலே நாம்‌ அஜீம்‌ பிரேம்ஜியின்‌ பங்காளி. ஆனால்‌ சம பங்காளியா, பிசினஸில்‌ அவர்களுக்கும்‌ நமக்கும்‌ சம செல்வாக்கு ஆதிக்கம்‌ உள்ளதா என்பது வேறு விஷயம்‌. அது ஆழமான சப்ஜெக்ட்‌.

பின்பு பேசுவோம்‌.

இப்போது நாம்‌ ரிலையன்ஸ்‌ அல்லது விப்ரோவில்‌ ஷேர்‌ வாங்கி வைத்திருக்கும்‌ போது நாம்‌ அந்த நிறுவங்களின்‌ ஷேர்‌ ஹோல்டராக அந்தந்த நிறுவங்களின்‌ பங்குதாரர்‌ ஆகியிருக்கிறோம்‌. அந்த குறிப்பிட்ட கம்பெனியில்தான்‌ நாம்‌ முதலீடு செய்திருக்கிறோமே தவிர ஷேர்மார்க்கெட்டில்‌ முதலீடு செய்யவில்லை. அடிப்படையில்‌ நாம்‌ புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்‌.

ஒரு பிசினஸின்‌ சக அங்கத்தினராக நம்மை இணைத்துக்‌ கொள்கிறோம்‌. அந்த பிசினஸ்‌ நன்றாக போனால்‌ நமது முதலீடு வளரும்‌. தொழில்‌ சுணங்கினால்‌ நாம்‌ போட்ட பணமும்‌ சுணங்கிப்‌ போகும்‌. அதே நேரம்‌ நமது ஷேரை மற்றவர்களுக்கு விற்க நினைத்தால்‌ அதை அம்பானியிடமோ, பிரேம்ஜியிடமோ கொண்டு போய்‌ விற்க முடியாது.

விற்கவும்‌ கூடாது.

அவற்றை விற்பதற்கான இடம்தான்‌ ஷேர்‌ மார்க்கெட்‌. ரிலையன்ஸ்‌ ஷேர்கள்‌ என்ன விலைக்கு விற்கின்றன என்பதனை அம்பானியும்‌, விப்ரோ பங்குகள்‌ விற்கும்‌ விலையை பிரேம்ஜியும்‌ தீர்மானிப்பதில்லை.

அவர்களது கம்பெனிகளின்‌ ஷேர்களுக்கு சந்தையில்‌ நிலவும்‌ கிராக்கியே அதை தீர்மானிக்கும்‌. அது தினசரி விலையை தீர்மானிக்கும்‌ காரணி மட்டுமே. ஆனால்‌ அந்த நிறுவனத்தின்‌ இலாபமீட்டும்‌ திறம்‌, நிர்வாக நேர்மை, தொழிலின்‌ எதிர்காலம்‌ ஆகியன அதன்‌ நீண்ட கால விலையை தீர்மானிக்கும்‌. நாம்‌ அவசர தேவைக்காக நகையை விற்க நேரிடுவதால்‌ தங்கத்தின்‌ விலை அடுத்து வரும்‌ ஆண்டுகளில்‌ சரிய வேண்டுமென்ற அவசியமில்லை அல்லவா! அது போலத்தான்‌.

சுருங்கச்‌ சொன்னால்‌ பல கம்பெனிகளின்‌ ஷேர்கள்‌ விற்கும்‌ இடமே ஷேர்‌ மார்க்கெட்‌. அதற்கும்‌ விற்பனையாகும்‌ ஷேர்களுக்கு உரித்தான நிறுவங்களுக்கும்‌ நேரடியான தினசரி தொடர்பில்லை. அதே நேரம்‌ ஷேர்‌ மார்க்கெட்டில்‌ எல்லா நிறுவனங்களின்‌ ஷேர்களும்‌ விற்க வேண்டிய அவசியமில்லை. பொது மக்களிடம்‌ ஏற்கனவே பங்குகளை வெளியிட்டு பஃப்ளிக்‌ லிமிடேட்‌ கம்பெனியாக மாறிய நிறுவனங்களின்‌ பங்குகளை மட்டுமே ஷேர்‌ மார்க்கெட்டில்‌ விற்கவோ, வாங்கவோ முடியும்‌.

ஒரு நிறுவனம்‌ தனது பங்குகளை பொதுவில்‌ வெளியிட்டு அனைவர்‌ மத்தியிலும்‌ அதன்‌ ஷேர்கள்‌ புழங்குமாறு செய்வதற்கு IPO (Initial public offering) என்பார்கள்‌. அதன்‌ பிறகு ஷேர்கள்‌ அனைவர்‌ மத்தியிலும்‌ புழங்கும்‌ ஆகையால்‌ அவற்றை விற்பதற்கான பொதுவான இடமாக பங்குச்‌ சந்தையை பயன்படுத்துகிறார்கள்‌. ஏற்கனவே வெளியே புழங்கும்‌ ஷேர்களை விற்று வாங்கும்‌ இடம்‌ என்பதால்தானோ என்னவோ வேர்‌ மார்க்கெட்களை செகண்டரி மார்க்கெட்‌ என்கிறார்கள்‌. முதன்முதலாக ஒரு நிறுவனம்‌ தமது பங்குகளை வெளியிடும்‌ 110 நிகழ்வுகளை பிரைமரி மார்க்கெட்‌ என குறிக்கிறார்கள்‌.

ஆக பங்குச்‌ சந்தைகள்‌ எல்லாமே செகண்டரி மார்க்கெட்கள்‌. குறிப்பாக இந்தியாவை எடுத்துக்‌ கொண்டால்‌ BSE எனப்படும்‌ மும்பை பங்குச்சந்தையும்‌, NSE எனப்படும்‌ தேசிய பங்குச்‌ சந்தையும்‌ பிரதானமானவை. BSE 140 ஆண்டு பாரம்பரியம்‌ கொண்டது. ஆசியாவின்‌ இரண்டாவது பழமையான பங்குச்சந்தை. அதற்கு மாறாக NSE, 1991 இல்‌ பொருளாதார சீர்திருத்தங்கள்‌ மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில்‌ உருவான புதிய பங்குச்சந்தை. தற்போது இவை இரண்டும்‌ சேர்ந்து இந்தியாவின்‌ ஒட்டு மொத்த பங்குச்‌ சந்தை பரிவர்த்தனையை தமது கட்டுப்பாட்டில்‌ வைத்துள்ளன.

BSE, NSE இவை இரண்டிலுமாக மாதம்‌ ரூ 860 இலட்சம்‌ கோடி முதல்‌ ரூ 1.4 கோடி கோடி வரையிலுமாக (2017 ஆம்‌ ஆண்டில்‌) பங்கு வியாபாரம்‌ நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்‌ இயக்கிய பிராந்திய பங்குச்சந்தைகள்‌ (கோவை பங்குச்சந்தை, சென்னை பங்குச்சந்தை போன்றவை) இன்று காணாமல்‌ போயிருக்கின்றன.

ஷேர்‌ மார்க்கெட்டில்‌ ஒரு நாளைக்கு எத்தனை ரூபாய்க்கு வியாபாரம்‌ நடக்க்கிறது என்பது குறிப்பிட்ட நிறுவனங்கள்‌ எவ்வாறு இயங்குகின்றன என்பதற்கோ, அவற்றின்‌ பிசினஸ்‌ ஸ்திரத்தன்மையின்‌ அளவுகோலாகவோ, பொருளாதாரம்‌ ஒட்டுமொத்தமாக எவ்வாறு இயங்குகிறது என்பதற்கோ சற்றும்‌ தொடர்பில்லாதது. ஆயினும்‌ அவை முக்கியமாக கவனிக்க வேண்டிய எண்கள்‌.

ஒரு குறிப்பிட்ட நாளில்‌ நடக்கும்‌ பங்கு வியாபாரத்தின்‌ அளவு, வேகம்‌, துரிதம்‌ ஆகியன பல காரணிகளால்‌ தீர்மானிக்கப்ப்படுகிறது.

உதாரணமாக நாட்டின்‌ வேலையின்மை விகிதம்‌, பணவீக்கம்‌, வட்டி வீதம்‌, அரசியல்‌ ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை, ஷேர்‌ மார்க்கெட்‌ தவிர்த்த ஏனைய முதலீடுகளின்‌ நிலவரம்‌, அந்நிய முதலீடுகள்‌ என பல காரணிகளை மேற்கோள்‌ காட்டலாம்‌.

எளிமையாகச்‌ சொன்னால்‌ எவையெல்லாம்‌ பங்குச்சந்தையில்‌ புழங்கும்‌ பணத்தின்‌ அளவை மாற்றும்‌ வல்லமை கொண்டதோ அவையெல்லாம்‌ கவனிக்கத்தக்க காரணிகள்‌.

ஆனால்‌ இவற்றில்‌ ஒன்று கூட அன்றைய தினத்தில்‌ அல்லது அந்த வாரம்‌/மாதம்‌ குறிப்பிட்ட ஒரு நிறுவனம்‌ ஈட்டும்‌ இலாபத்தில்‌ மாற்றத்தை உருவாக்காமல்‌ போகலாம்‌. ஒரு கம்பெனியின்‌ ஷேர்‌ 100 ரூபாய்க்கு விற்கிறதா, 90 ரூபாய்க்கு விற்கிறதா அல்லது 110 ரூபாய்க்கு விற்கிறதா என்ற செய்தி அதன்‌ பிசினஸை பாதிக்காமல்‌ போவதற்கே வாய்ப்புகள்‌ அதிகம்‌. அதனால்‌ ஷேர்‌ மார்க்கேட்டில்‌ விற்கும்‌ விலையை விட அதன்‌ தொழில்‌ எவ்வாறு போகிறது என்பதில்‌ கூடுதல்‌ கவனம்‌ தேவை.

நல்ல நிறுவனம்‌ அல்லது தொழில்‌ என வட்டம்‌ போட்டு குறித்து வைத்துக்‌ கொண்டால்‌ அதன்‌ ஷேர்களை வாங்கி விட வேண்டியதுதானே!!!

அப்படி வாங்குவதற்கு நாம்‌ செய்ய வேண்டியது என்ன?

பேசலாம்‌..
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
பங்கு வியாபாரத்தின்‌ ஃபர்ஸ்ட்‌ ஸ்டெப்‌!

நீங்கள்‌ ஏதேனும்‌ வங்கியில்‌ பாதுகாப்பு பெட்டக சேவையை பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால்‌ என்ன மாதிரியான விஷயங்களை அதில்‌ வைப்பீர்கள்‌? பொதுவாக விலையுயர்ந்த ஆபரணங்கள்‌, பொற்காசுகள்‌, நமது சொத்துகள்‌ தொடர்பான பத்திரங்கள்‌ முதலியற்றை அந்த லாக்கரில்‌ பூட்டி வைப்போம்‌. யாருக்கும்‌ தெரியாத ரகசியங்கள்‌, பழைய காதலியுடனான புகைப்படங்கள்‌ என்பதெல்லாம்‌ வெகு சிலருக்கும்‌ மட்டுமே வாய்க்கும்‌ சாத்தியங்கள்‌.

முக்கியமான ஆவணங்களை முறையாக பாதுகாத்து வைப்பது ஒரு கலை. நம்‌ தாத்தா தாம்பரத்தில்‌ வாங்கிய நிலப்‌ பத்திரம்‌, அப்பா அரக்கோணத்தில்‌ வாங்கிய வீட்டுமனையின்‌ பத்திரம்‌, இருபது வருடம்‌ கழித்து பணம்‌ திரும்ப வரும்‌ இன்சூரன்ஸ்‌ பாலிஸி என எல்லாமுமே நம்மிடம்‌ பத்திரமாக இருக்க வேண்டும்‌. திடீரென ஒரு நாள்‌ கேட்டால்‌ நம்மால்‌ தேடி எடுக்க முடியுமா? அப்படி எடுக்க முடியாதவர்கள்‌ பேங்க்‌ லாக்கரில்‌ பாதுகாப்பாக வைக்கலாம்‌.

நிலங்களின்‌ உரிமைப்‌ பத்திரங்கள்‌ இப்படியென்றால்‌ கம்பெனிகளின்‌ உரிமைப்‌ பத்திரங்களை எப்படி பாதுக்காக்க வேண்டும்‌? பங்குப்‌ பத்திரங்களைப்‌ பற்றித்தான்‌ பேசுகிறேன்‌. ஒரு கம்பெனியில்‌ நாம்‌ ஒரேயொரு பங்கு கூட வைத்திருக்கலாம்‌ அல்லது ஆயிரக்‌ கணக்கில்‌ பங்குகளை வைத்திருக்கலாம்‌. முன்பொரு காலத்தில்‌ அதெல்லாம்‌ LIC இன்சூரன்ஸ்‌ பாலிஸி போல இருக்கும்‌. இப்போது டிஜிட்டல்‌ ஆக்கி விட்டார்கள்‌. இப்போது என்றால்‌ அதற்கான ஆயத்தங்கள்‌ துவங்கி இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. கடந்த பத்தாண்டுகளில்‌ பத்திர வடிவில்‌ ஷேர்களை பார்த்திருக்கவே இயலாது என்கிற நிலைதான்‌.

டிஜிட்டல்‌ வடிவிலான ஷேர்களை சேமித்து வைக்க டீமேட்‌ அக்கவுண்ட்‌ இருக்க வேண்டும்‌. அது ஒரு டிஜிட்டல்‌ லாக்கர்‌. நாம்‌ மட்டும்‌ அதிலுள்ள ஷேர்களை பார்க்க முடியும்‌. அல்லது நாம்‌ அனுமதியளிக்கிற ஆள்‌ பார்க்கலாம்‌. ஆனால்‌ வெறும்‌ டீமேட்‌ அக்கவுண்ட்டை மட்டும்‌ வைத்துக்கொண்டு பங்குச்‌ சந்தையில்‌ வியாபாரம்‌ செய்ய இயலாது.

அந்த டீமேட்‌ கணக்கில்‌ ஷேர்களை வாங்கி சேகரிக்க பங்குத்‌ தரகர்‌ (ஷேர்‌ புரோக்கர்‌) ஒருவரோடு டிரேடிங்‌ அக்கவுண்ட்‌ ஒன்று துவங்க வேண்டும்‌.

ஷேர்‌ மார்க்கெட்டுக்குள்‌ நாம்‌ நுழைய முடியாது. ஷேர்‌ புரோக்கர்கள்‌ மட்டுமே உள்ளே போக முடியும்‌. ஒவ்வொரு பங்குச்‌ சந்தையிலும்‌ குறிப்பிட்ட சில புரோக்கர்கள்‌ மட்டுமே அங்கத்தினராக இருப்பார்கள்‌. புதிய அங்கத்தினர்கள்‌ சேர்வது குதிரைக்‌ கொம்பு.

நாம்‌ வைத்திருக்கும்‌ பங்குகளை விற்கச்‌ சொன்னால்‌ நம்‌ சார்பில்‌ புரோக்கர்‌ விற்பார்‌. நாம்‌ சொல்லும்‌ விலைக்கு வாங்க ஆளிருந்தால்‌ விற்கும்‌. இல்லையென்றால்‌ விற்காமல்‌ திரும்பி வந்து விடுவார்‌. எதோ ஒரு விலைக்கு விற்று விடுங்கள்‌ என்றால்‌ கேட்கிற விலைக்கு தள்ளி விடுவார்‌. இன்னிக்கு இவ்வளவுக்குத்தான்‌ வித்துச்சு என்பார்‌.

நாம்‌ ஷேர்களை வாங்க விரும்பினாலும்‌ அப்படித்தான்‌. நாம்‌ குறிப்பிடும்‌ நிறுவனம்‌, குறிப்பிடும்‌ விலை, எல்லாமே நம்‌ சாய்ஸ்‌... ஆனால்‌, “போய்‌ ஆயிரம்‌ ரூபாய்க்கு அசோக்‌ லைலாண்ட்‌ வேர்‌ வாங்கிட்டி வாங்க” என்றால்‌ அவர்‌ உடனே ஓடிப்‌ போய்‌ வாங்கி வந்து விடுவாரா என்ன?

அதற்குத்தான்‌ அவரிடம்‌ டிரேடிங்‌ அக்கவுண்ட்‌ துவங்குகிறோம்‌. அவரிடம்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ பணம்‌ கொடுக்க வேண்டும்‌. அதாவது நாம்‌ அவரிடம்‌ வைத்திருக்கும்‌ டிரேடிங்‌ கணக்கில்‌ நாம்‌ செலுத்தி வைத்திருக்கும்‌ தொகை ஆயிரம்‌ ரூபாயாவது இருந்தால்‌ மட்டுமே நம்மால்‌ ஆயிரம்‌ ரூபாய்க்கு அவரை ஷேர்‌ வாங்குமாறு கேட்க முடியும்‌.

ஆயிரம்‌ என்பது ஒரு உதாரணத்திற்குச்‌ சொன்னது. நாம்‌ எவ்வளவு தொகைக்கு வாங்க விரும்புகிறோமோ அவ்வளவு தொகையை ஏற்கனவே நாம்‌ அவரிடம்‌ கொடுத்து நம்‌ டிரேடிங்‌ கணக்கில்‌ வைத்திருக்க வேண்டும்‌ என்பது நியதி. நாம்‌ பணம்‌ கொடுத்து அனுப்பினால்‌ அந்தப்‌ பணத்திற்கு ஷேர்களை வாங்கி நம்மிடம்‌ கொண்டு வந்து சேர்ப்பார்‌.

புரோக்கர்‌ முன்பெல்லாம்‌ பங்குப்‌ பத்திரமாக வாங்கி வருவார்‌.

இப்போதெல்லாம்‌ பங்குகள்‌ டீமேட்‌ வடிவில்‌ உள்ளதால்‌ ஷேர்களை வாங்கி டீமேட்‌ அக்கவுண்டில்‌ சேர்த்து விடுவார்‌. விற்கும்‌ போது டீமேட்‌ அக்கவுண்டில்‌ இருந்து எடுத்து விற்று விடுவார்‌. நமது டீமேட்‌ கணக்கில்‌ இருந்து நம்‌ சார்பில்‌ பங்குகளை எடுத்து விற்பதற்கு நாம்‌ நம்‌ தரகருக்கு முழு அனுமதி அளித்திருப்போம்‌.

பங்குத்‌ தரகர்‌ எனும்‌ ஷேர்‌ புரோக்கர்‌ பங்குச்‌ சந்தையின்‌ உள்ளே சென்று இந்த நிறுவனத்தின்‌ ஷேர்‌ இந்த விலைக்கு விற்க விரும்புகிறோம்‌, யார்‌ வாங்குகிறீர்கள்‌ என்று கூச்சல்‌ போட்டு விற்ற காலமெல்லாம்‌ மலையேறி விட்டது. இப்போது கம்ப்யூட்டர்‌ திரையில்‌ கண்டு விடலாம்‌.

ஷேர்‌ மார்க்கெட்‌ என்பது மிகப்‌ பெரிய சாஃப்ட்வேர்‌ சர்வர்‌. மும்பை பங்குச்‌ சந்தை ஒரு சர்வர்‌. அதே போலத்தான்‌ தேசிய பங்குச்‌ சந்தையும்‌. ஒவ்வோரு தரகர்‌ வாயிலாக நாம்‌ விற்க விரும்பும்‌ விலைகள்‌ மற்றவர்களுக்கு (மற்ற தரகர்கள்‌ மூலமாக விற்று வாங்கும்‌ ஆட்களுக்கு) தெரிய வரும்‌.

நாம்‌ தரகரிடம்‌ விவரமாக போனில்‌ சொல்லியனுpபுவதெல்லாம்‌ இப்போது கிடையாது. அந்த தரகரின்‌ வெட்சைட்டில்‌ நாம்‌ செய்ய விரும்பும்‌ வியாபாரத்தை உள்ளீடு செய்யலாம்‌. கம்ப்யூட்டர்‌ மவுஸின்‌ ஒரு கிளிக்‌ மூலம்‌ தரகர்‌ வாயிலாக நாம்‌ பங்குச்‌ சந்தையின்‌ சர்வரில்‌ வேறு எதாவது தரகர்‌ மூலமாக இன்னொருவர்‌ உலகின்‌ எதாவதொரு மூலையிலிருது போடும்‌ ஆர்டரை ஏற்றுக்கொண்டு பரிவர்த்தனையை நடத்த முடியும்‌. நாம்‌ நினைப்பது போல ஷேர்‌ புரோக்கர்‌ எனும்‌ பங்குத்‌ தரகர்‌ ஒரு தனியாளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஒரு மிகப்‌ பெரிய நிதி நிறுவனமாக இருக்கலாம்‌. சின்ன பங்குச்‌ சந்தைகளும்‌, பங்குத்‌ தரகர்களும்‌ காணாமல்‌ போய்‌ விட்டனர்‌. பெரிய சைஸ்‌ புரோக்கர்கள்‌ மட்டுமே நிலைக்க முடிகிறது.

வாடிக்கையாளர்களுக்கு அவர்கள்‌ அளிக்கும்‌ சிம்ப்ளிஃபிகேஷன்‌ அதற்கு முக்கியமான காரணம்‌. டீமேட்‌ அக்கவுண்ட்‌, டிரேடிங்‌ அக்கவுண்ட்‌ எல்லாம்‌ இப்போது எளிமையாகி விட்டன. த்ரீ இன்‌ ஒன்‌ கணக்குகள்‌ இப்போது கிடைக்கின்றன. வங்கியின்‌ சேமிப்புக்‌ கணக்கு, டீமேட்‌ கணக்கு, டிரேடிங்‌ கணக்கு ஆகிய மூன்றுமே ஒரே நிறுவனம்‌ வைத்திருந்தால்‌ ஒரே login இல்‌ எல்லாவற்றையும்‌ செய்து விடலாம்‌...

ஒரு கிளிக்‌ செய்தால்‌ வங்கிக்‌ கணக்கிலிருந்து டிரேடிங்‌ கணக்கிற்கு பணம்‌ சென்று விடும்‌. ஷேர்‌ வாங்கியவுடன்‌ டிரேடிங்‌ கணக்கில்‌ பணம்‌ குறைந்து விடும்‌. வாங்கிய ஷேர்‌ டீமேட்‌ கணக்கில்‌ சேர்ந்து விடும்‌.

(விற்கும்‌ போது இதற்கு நேரெதிர்‌)

ஷேர்‌ புரோக்கர்‌ நம்‌ சார்பில்‌ பங்குச்‌ சந்தையில்‌ நிகழ்த்தும்‌ ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும்‌ ஒரு கமிஷன்‌ எடுத்துக்‌ கொள்வார்‌. கோயம்பேடு மார்க்கெட்டில்‌ நடக்கும்‌ அதே சங்கதிதான்‌. லாரியில்‌ கொண்டு வந்து இறக்கும்‌ மொத்த வியாபாரியிடமோ, விவசாயியிடமோ சென்னையின்‌ சில்லறை வியாபாரி காய்கறிகளை வாங்கினாலும்‌ அதற்கான கமிஷனை மார்க்கெட்டில்‌ கடை வைத்திருக்கும்‌ நபரிடம்‌ தந்தாக வேண்டும்‌.

அப்படித்தான்‌ ஷேர்‌ மார்க்கெட்‌ வியாபாரமும்‌. நாம்‌ ஷேர்களை விற்றாலும்‌, வாங்கினாலும்‌ புரோக்கருக்கு கமிஷன்‌ தந்தாக வேண்டும்‌. நாம்‌ என்ன தருவது? அவர்களே எடுத்துக்‌ கொள்வார்கள்‌. டிரேடிங்‌ அக்கவுண்டில்‌ உள்ள பணத்தில்‌ இருந்து கமிஷன்‌ தானாகவே போய்‌ விடும்‌.

அதனால்தான்‌ நல்ல முதலீட்டாளர்கள்‌, “அடிக்கடி விற்று வாங்கினால்‌ முதலீட்டாளர்களாகிய நாம்‌ பணக்காரர்‌ ஆக மாட்டோம்‌. நமது ஷேர்‌ புரோக்கர்‌ வேண்டுமானால்‌ பணக்காரர்‌ ஆகலாம்‌” என்று கூவுகிறார்கள்‌.
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
பங்குகளை எப்படி வாங்கலாம்‌, விற்கலாம்‌?

மாட்டுச்‌ சந்தைக்கு போன அனுபவம்‌ உள்ளதா உங்களுக்கு? இல்லையேல்‌ குறைந்தபட்சம்‌ சினிமாவிலாவது பார்த்திருப்பீர்கள்‌. மாடு விற்கிறவரும்‌, வாங்குகிறவரும்‌ ஒரு துண்டைப்‌ போட்டு அதற்குக்‌ கீழே விரல்களைப்‌ பிடித்து விலை பேசுவார்கள்‌. என்ன விலையை quote செய்கிறார்கள்‌ என்ற விவரம்‌ மற்றவர்களுக்கு தெரியாமல்‌ பார்த்துக்‌ கொள்வதற்கே அந்த ஏற்பாடு. சில projectகளை முடிவு செய்யும்‌ போது அரசாங்கம்‌ டெண்டர்‌ கோரும்‌. அதில்‌ எந்த நிறுவனம்‌ எந்த விலைக்கு quote செய்கிறது என்ற விவரம்‌ வெளிப்படையாகத்‌ தெரியாது.

இதற்கு நேரெதிரானவை ஏலம்‌ மூலம்‌ நடக்கும்‌ பரிவர்த்தனைகள்‌. யார்‌ ஏறிக்‌ கேட்கிறார்களோ அவர்களுக்கு பொருள்‌ கிடைக்கும்‌. ஒருவர்‌ நூறு ரூபாய்க்கு கேட்கும்‌ பொருளை நாம்‌ 101 ரூபாய்க்கு கேட்கலாம்‌. துண்டுக்கு அடியில்‌ விரலைப்‌ பிடித்து முன்னூறு ரூபாய்க்கு விலை வைக்க வேண்டிய சிக்கல்‌ கிடையாது. ஏலத்தின்‌ சிறப்பே இதுதான்‌.

ஷேர்‌ மார்க்கெட்‌ டெண்டர்‌ முறையில்‌ இயங்குவதில்லை. ஏலம்‌ மூலம்‌ நடக்கிறது. ஷேர்‌ மார்க்கெட்‌ என்பது மிகப்பெரிய கம்ப்யூட்டர்‌ சர்வர்‌ என்று பேசினோம்‌. அந்த சர்வர்தான்‌ ஏலம்‌ நடக்கும்‌ மெய்நிகர்‌ திடல்‌ (virtual platform).

குறிப்பிட்ட ஒரு கம்பெனியின்‌ பெயரை தட்டினாலே அது தொடர்பான quote எல்லாவறையும்‌ நம்‌ முன்னால்‌ கொட்டி விடும்‌. உதாரணத்திற்கு நேற்று கடைசியாக என்ன விலைக்கு விற்றது (previous day close), இன்றைய தினம்‌ துவங்கும்‌ போது என்ன விலைக்கு வியாபாரம்‌ ஆனது(day open), இன்று அதிகபட்சமாக என்ன விலைக்கு விற்றது(day high), குறைந்தபட்சமாக என்ன விலைக்கு விற்றது(day low), இன்று இது வரைக்கும்‌ எவ்வளவு ஷேர்கள்‌ விற்றுள்ளன (day volume), கடைசியாக விற்பனையான விலையும்‌ நேரமும்‌ (last traded price and time ), கடந்த ஒரு வருத்தில்‌ குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின்‌ அதிகபட்ச விலை (52 week high‌), குறைந்தபட்ச விலை(52 week low), அதன்‌ வாழ்நாள்‌ உச்சம்‌(lifetime high), வாழ்நாளின்‌ குறைந்தபட்சம்‌ விலை(lifetime low) என சகல விஷயங்களையும்‌ ஒரே கிளிக்கில்‌ காணலாம்‌.

இதையெல்லாம்‌ விட முக்கியமானது தற்போது வாங்க விரும்பினால்‌ என்ன விலைக்கு வாங்க இயலும்‌ (best offer price), அந்த விலைக்கு எத்தனை ஷேர்கள்‌ கிடைக்கும்‌ (best offer quantity), விற்க விரும்பினால்‌ என்ன விலைக்கு வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள்‌ (best bid price), எத்தனை ஷேர்களை வாங்க விரும்புகிறார்கள்‌ (best bid quantity) என்ற விவரம்‌. இதன்‌ தொடர்ச்சியாக நாம்‌ கவனிக்க வேண்டியது best 5 bid offers என்ற தகவல்‌.

உதாரணத்திற்கு ஸ்டீல்‌ அத்தாரிட்டி ஆஃப்‌ இந்தியா (SAIL) நிறுவனத்தின்‌ best 5 bids offer ஐ பாருங்கள்‌.

share1.JPG

நீங்கள்‌ 200 ஷேர்களை (அல்லது 200 க்கு குறைவாக) விற்க விரும்பினால்‌ ரூ 58.65 க்கு வாங்க ஆளிருக்கிறது. 500 ஷேர்களை விற்க விரும்பினால்‌ ரூ 58.65 க்கு 200ம்‌, ரூ 58.60 க்கு 300 ம்‌ விற்கலாம்‌. ஒரு வேளை நாம்‌ 200 ஷேர்களை வாங்க விரும்பினால்‌ ரூ 58.60 க்கு 150ம்‌, ரூ 58.85ம்‌, ரூ56.90 க்கு 10ம்‌ வாங்கலாம்‌.

இதில்‌ நாம்‌ கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்‌ உள்ளது. அது என்னவென்றால்‌ நாம்‌ ஷேர்களை வாங்கவோ விற்கவோ விழையும்‌ போது இரண்டு வகையில்‌ ஆர்டரை உள்ளிடலாம்‌. ஒன்று மார்க்கெட்‌ விலை. இன்னொன்று லிமிட்‌ விலை. இதில்‌ லிமிட்‌ விலை என்னவென்று முதலில்‌ பார்த்து விடலாம்‌.

நம்மிடம்‌ 100 ஸ்டீல்‌ அத்தாரிட்டி ஆஃப்‌ இந்தியா நிறுவனத்தின்‌ பங்குகள்‌ உள்ளதாக கருதுவோம்‌. அதை விற்க விரும்புகிறோம்‌. யாரோ ஒருவர்‌ 140 ஷேர்களை ரூ 58.80 க்கு விற்க விரும்புகிறார்‌ என்பதை best 5 bids offer ல்‌ பார்க்கிறோம்‌. அதை விட குறைவாக நாம்‌ விலை சொன்னால்‌ அவரது 140 விற்பதற்குள்‌ நம்முடைய 100 ஷேர்கள்‌ விற்று விடும்‌. எனவே நாம்‌ ரூ 58.75 லிமிட்‌ விலை என்று ஆர்டர்‌ போடலாம்‌.

அந்த 140 ஷேர்கள்‌ விற்பதற்குள்‌ நம்முடையது விற்று விடும்‌. ஆனால்‌ அதற்குள்‌ யாராவது 57 ரூபாய்க்கு 10,000 ஷேர்களை விற்கும்‌ ஆர்டர்‌ போட்டால்‌ அவருடைய 10,000 ஷேர்களும்‌ விற்ற பிறகுதான்‌ நம்முடையது விற்கும்‌.

best 5 bids offer இல்‌ ரூ 58.60 க்கு யாரோ ஒருவர்‌ விற்கிறார்‌. நான்‌ எதற்கு அதை விடக்‌ குறைவாக விலை சொல்ல வேண்டும்‌. 60 ரூபாய்க்கு வந்தால்‌ விற்கலாம்‌. எப்படியும்‌ விலை ஏறி வரும்‌. 60 க்கு லிமிட்‌ விலையில்‌ ஆர்டர்‌ போட்டு வைக்கலாம்‌. விற்றால்‌ இலாபம்‌. ‘விற்காவிட்டால்‌ இன்னொரு நாள்‌ பார்த்துக்‌ கொள்ளலாம்‌.’ இப்படியும்‌ நீங்கள்‌ நினைக்கலாம்‌. நீங்கள்‌ 60 ரூபாய்க்கு போடும்‌ ஆர்டர்‌ சில மணி நேரத்திற்குள்‌ விற்கலாம்‌. அல்லது விலை 55 ரூபாய்க்கு கீழே இறங்கியும்‌ போகலாம்‌. பிறகு இன்னொரு நாளுக்காக காத்திருக்கலாம்‌.

விற்பதைப்‌ போலத்தான்‌ வாங்குவதும்‌. ரூ 58.05 க்கு வாங்க தயாராக ஆளிருக்கிறது. நாம்‌ ரூ 58.70 க்கு ஆர்டர்‌ போட்டால்‌ அவருக்கு முன்‌ நமக்கு ஷேர்‌ கிடைத்து விடும்‌. இல்லையென்றால்‌ ரூ 55 க்கு ஆர்டர்‌ போட்டு வைத்து விலை இறங்கும்‌ வரை காத்திருக்கலாம்‌.

லிமிட்‌ விலை இப்படியென்றால்‌ மார்கெட்‌ விலையில்‌ இந்த பிரச்சினையெல்லாம்‌ இல்லை. நாம்‌ விற்கிறோமென்றால்‌ அந்தக்‌ கணத்தில்‌ யார்‌ அதிக பட்ச விலைக்கு கேட்கிறார்களோ அந்த விலைக்கு விற்று விடும்‌. நாம்‌ வாங்கும்‌ போதும்‌ offer price யார்‌ குறைந்தபட்ச விலைக்கு தருகிறார்களோ அவர்களுடையதை கம்ப்யூட்டர்‌ வாங்கிவிடும்‌.

அதிக எண்ணிக்கையில்‌ வியாபாரம்‌ நடக்கும்‌ ஷேர்களில்‌ லிமிட்‌ விலைக்கும்‌, மார்க்கெட்‌ விலைக்கும்‌ பெரிய வித்தியாசமெல்லாம்‌ கிடையாது. சில மணி நேரங்களில்‌ நிலவரம்‌ மாறினால்‌ விலைகள்‌ கணிசமாக ஏறவோ, இறங்கவோ செய்யலாம்‌. அப்போது வேண்டுமானால்‌ லிமிட்‌ விலைக்கு அர்த்தமிருக்கும்‌.

பங்குச்‌ சந்தை எப்போதும்‌ ஒரே மாதிரியான நடத்தையை வெளிக்காட்டுவதில்லை. சாதுவாக இருக்கும்‌. திடீரென்று கோரத்‌ தாண்டவம்‌ ஆடி விடும்‌. உதாரணத்திற்கு ஒரு கம்பெனியின்‌ ஷேர்‌ ரூ 100 க்கு விற்பனையாக்கிறது. best 5 bids & offers எல்லாம்‌ பார்த்தால்‌ பெரிய எண்ணிக்கையில்‌ வர்த்தகம்‌ நடப்பது தெரிகிறது. அதனால்‌ உங்களிடமிருக்கும்‌ ஷேரை மார்க்கெட்‌ விலைக்கு விற்குமாறு ஆர்டர்‌ போடுகிறீர்கள்‌.

நீங்கள்‌ எண்டர்‌ ஆர்டர்‌ நடந்தேறுவதற்குள்‌ ஒரு செய்தி வருகிறது. அந்த நிறுவனத்தின்‌ ஆலையில்‌ பெரும்‌ விபத்து என்றும்‌, அதனால்‌ பல நூறு கோடிகள்‌ நஷ்டம்‌ என்றும்‌ அந்த செய்தி கூறுகிறது. அந்த செய்தின்‌ காரணமாக அதன்‌ ஷேர்களை வாங்குவதற்கு யாரும்‌ புதிய ஆர்டர்களை போடாமல்‌ போகலாம்‌. best 5 bids & offer இல்‌ விலைகள்‌ தாறுமாறாக குறையலாம்‌. சிலர்‌ வந்தால்‌ வரட்டும்‌ என ரூ 90, ரூ 865, ரூ 860 என்று கைக்கு வந்த விலைக்கு bid செய்யலாம்‌. அப்போது மார்க்கெட்‌ விலையில்‌ நீங்கள்‌ போடும்‌ ஆர்டர்‌ ரூ 65 க்கு விற்க நேரிடலாம்‌.

மார்க்கெட்‌ விலையில்‌ ஆர்டர்‌ போடுவதில்‌ உள்ள சிக்கல்‌ இதுதான்‌. என்றாலும்‌ அதிலிருந்து தற்காக்க ஒரு மார்க்கம்‌ உண்டு.
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top