அத்தியாயம் 1
அத்தியாயம் – 1
ஆத்தியூர் மதுரை மாவட்டத்தில் உள்ள அழகிய கிராமம். இங்கு விவசாயம் தான் மிகப் பெரிய அளவில் நடக்கிறது.
அந்த அழகிய கிராமத்தில் தான், நம் நாயகி அகனிதா வசித்து வருகிறாள்.
நடராஜன், செண்பகம் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று.
இங்கே இயற்கை விவசாயம் செய்து, அந்த ஊரில் பெரிய தனக்காரர் என்ற பெருமை இவர்கள் குடும்பத்தினருக்கு சேரும்.
நடராஜன் தம்பதியரின் மூத்த மகன் ராஜசேகர். இவரின் மூத்த மகள் தான் நம் நாயகி அகனிதா.
ராஜசேகர் மகள் பிறந்த சில நாட்களில் மனைவி கற்பகத்தை இழந்தார். அதன் பின் சில காரணங்களால், இந்துமதியை மணந்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள், மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் இளையவன் திலக்.
நடராஜனின் பெண் வாணி சென்னையில் தொழிலதிபர் கிருஷ்ணனுக்கு தான் மணம் முடித்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்.
மூத்தவன் நம் நாயகன் அதிகன், இளையவன் தீனா.
இவர்கள் அனைவரும் அங்கே அத்தியூர் வர இருக்கின்றனர், இரண்டு காரணங்களுக்காக.
ஒன்று அங்கே ஊர் திருவிழா, மற்றொன்று அதிகன் ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் நடத்த அங்கே இரண்டு நாளில் வர இருக்கின்றனர்.
“நிதா கண்ணு! என்னமா இது, உன் அப்பாவை பார்க்கவாவது நீ இப்போ இருக்கலாம் இல்லையா”.
“வீட்டுல வேற விசேஷம் இருக்கே கண்ணு, நீயும் இருந்தா நல்லா இருக்கும்” என்று பரிதவிப்புடன் கேட்டார் நடராஜன்.
அவருக்கு பேத்தி மகனுடன் இணக்கமாக இருந்தாலே, அவளை பாசத்துடன் அவன் பார்த்துக் கொள்ளுவான் என்ற நம்பிக்கை.
ஏனெனில், மகன் எந்த அளவிற்கு மூத்த மருமகள் கற்பகத்தை எவ்வளவு நேசத்துடன் மணந்து கொண்டார் என்று அவர் அறிவார்.
அவர் பெற்ற மகளை நிச்சயம் பார்த்துக் கொள்வார் என்பது அவரின் எண்ணம். இத்தனை ஆண்டுகளில், சில மனஸ்தாபம் கூட மறைந்து இருக்குமே என்று நினைத்து தான் மனிதர் அவ்வாறு கூறியது.
“எனக்கு என் பேத்தி சந்தோஷம் தான் முக்கியம். நீ போயிட்டு வா டா கண்ணு” என்று பேத்தி அகனிதாவை காரில் ஏற்றி, அவள் எப்பொழுதும் செல்லும் இயற்கை அன்னையின் சிறு குன்று மலையான பூங்கதிர் கிராமத்திற்கு வந்து சேர்ந்தாள்.
அங்கே மலைவாழ் மக்கள் சிலர் வாழ்ந்து வருகின்றனர். சிறு வயதில் இருந்தே, அவள் இங்கு வருகிறாள்.
அந்த மக்களின் வாழ்வு, அவர்களின் எளிமையான உணவு எல்லாம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
அவளுக்காகவே, அவள் பாட்டி செண்பகம் தன் கணவரிடம் சொல்லி, பேத்தி வந்தால் இங்கே தங்க சிறிய வீட்டை ஒன்று கட்டிக் கொடுத்து உள்ளார்.
அங்கே வீட்டை பராமரிக்க, ஒரு தம்பதிகளை நியமித்து இருந்தார். இவள் வரும்பொழுது, அவர்கள் தான் இவளை பார்த்துக் கொள்கின்றனர்.
அகனிதா என்ற பெயர் அவள் தாய் ஆசையாக அவளுக்கு சூட்ட வேண்டும் என்று நினைத்த பெயர்.
அகனிதா என்பது மென்மையானவள் என்று பொருள். தன் பெண்ணும் மென்மையுள்ளவாக இருக்க வேண்டும் என்று ஆசையாக தேர்ந்தெடுத்த பெயரை தான், அவள் பாட்டி செண்பகம் அவளுக்கு சூட்டி மகிழ்ந்தார்.
“பாப்பா! மதிய உணவு செஞ்சுட்டேனுங்க, பசியாற வாரீங்களா?” என்று அவள் இருந்த அறைக்கு வெளியே இருந்து அழைத்தார், அந்த வீட்டை பராமரிக்கும் பெண்மணி வள்ளி.
“நீங்க சாப்பிடுங்க அக்கா, நான் கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுறேன்” என்று கூறி அவரை அனுப்பி வைத்தாள்.
அகனிதா இருபத்தி ஐந்து வயது, சமூகவியல் மேற்படிப்பு முடித்து, அங்கே கிராமத்தில் பெண்களுக்கான சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறாள்.
சிறு வயதிலே, பல பிரச்சினைக்கு மத்தியில் பிறந்ததால், சரியான ஊட்டச்சத்தும், தடுப்பூசியும் போடாததால் இப்பொழுது வரை சக்கர நாற்காலி வசம் தான் அவள்.
பல கஷ்டங்கள் வந்தும், படிப்பை மட்டுமே கெட்டியாக பிடித்துக் கொண்டு, அவளுக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறாள்.
அவளுக்கு பக்கபலமாக இருந்தது முழுவதும், செண்பகம் பாட்டி தான்.
இங்கே இவள் இயற்கையோடு ஐக்கியமாக, அங்கே இரவில் அத்தியூர் வந்து சேர்ந்தனர் அனைவரும்.
“எப்படி இருக்கீங்க தாத்தா?” என்று முதல் ஆளாக கேட்டவர்கள் தீனா மற்றும் திலக்.
இருவருக்கும் ஓரிரு மாதங்கள் மட்டுமே வித்யாசம். தீனா சாப்ட்வேர் டெக்னாலஜி இன்றைய ஏஐ வரை கரைத்து கொண்டு இருக்கும் கல்லூரி மாணவன்.
திலக் ஆடை வடிவமைத்தில் ஆர்வம் அதிகம், அதில் பல வித்தைகளை கற்று கொண்டு இருக்கிறான்.
இருவருக்கும் ரசனைகள் வேறு தவிர, இருவரும் நண்பர்கள் போல் பழகி வந்தனர்.
தாத்தா என்றால் இருவருக்கும் மிகவும் பிடிக்கும். சென்னை விட இங்கே இயற்கை காற்று, சுவாசிக்க அவ்வளவு பிடிக்கும்.
அது மட்டுமின்றி, உணவு பாட்டி கைமணத்தில் எப்பொழுதும் இரண்டு கிலோ முதல் மூன்று கிலோ வரை கூட்டிக் கொண்டு தான் செல்வர்.
“நல்லா இருக்கேன் தங்கங்களா, வாங்க நேரமாகிடுச்சு பசியாறலாம்” என்று அனைவரிடம் நலம் விசாரித்து விட்டு, சாப்பிடும் இடத்திற்கு அழைத்து சென்றார்.
கீழே தரையில் முக்காலிகள் வரிசையாக போடப்பட்டு இருக்க, அதில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
“அம்மா!! என்னமா இது? இன்னும் ஒரு மேஜை வாங்கி போடாம, எப்போ பாரு கீழே உட்கார வைக்குறீங்க சாப்பிட” என்று வாணி தன் தாயை பார்த்து கேட்டார்.
“இங்க நீ பிறந்ததில் இருந்தே, நம்ம வீட்டில் இதான் வழக்கம் தெரியாது உனக்கு” என்று ஒரு அதட்டல் போட்டார் செண்பகம்.
அவ்வளவுதான், தன் தாய் அனைவர் முன்னும் இப்படி பேசியது பிடிக்காமல், அடுத்து வார்த்தையை விட்டார்.
“ஏன் அந்த ஊனத்துக்கு, மட்டும் மேஜை வாங்கி போட்டு இருப்பீங்கள” என்று முகத்தை சுழித்து கேட்டார்.
“இங்க என் பேத்தி பத்தி பேச யாருக்கும் உரிமை இல்லை. திரும்ப இப்படி பேசினா, அடுத்து நீங்க எல்லாம் இங்க வரவே வேண்டாம், அங்கினவே இருந்துக்குங்க” என்று கூறிய பாட்டியை இப்பொழுது மூத்த பேரன் அதிகன் வியப்புடன் பார்த்தான்.
அதிகன் மேலானவன் என்று பொருள், தன் மகன் எல்லோருக்கும் மேலானவனாக இருக்க வேண்டும் என்று அவனின் அன்னை வாணி சூட்டிய பெயர்.
அதனாலோ என்னவோ, அவனுக்கு கொஞ்சம் திமிர் அதிகம் இருக்கும்.
வியாபார உலகில், அவனே ராஜா, அவன் வைத்தது தான் சட்டம். சென்னையில், அதிகன் குரூப் ஆப் கம்பெனியின் உரிமையாளன்.
“ஏன் பாட்டி, இப்போ எங்க அம்மா என்ன தப்பா சொல்லிட்டாங்க?!!” என்று அழுத்தமாக கேட்டான் அதிகன்.
“என் பேத்திக்கு உண்டான மரியாதை கொடுக்கணும், அப்படி இல்லைனா நான் அடுத்து செய்ய வேண்டியதை செஞ்சிடுவேன்” என்று அவனின் பாட்டி அழுத்தமாக கூற, அதிர்ந்தது வாணி மட்டுமில்லை, இந்துமதியும் தான்.
“அண்ணி!! என்ன இருந்தாலும், என் வீட்டுக்காரர் மூத்த பெண்ணை இப்படி பேசி இருக்க கூடாது நீங்க” என்று கூறிய இந்துமதியை இப்பொழுது பார்வையாலே எரித்தார் செண்பகம்.
அவரின் அந்த பார்வையில், வேறு பேச முடியவில்லை ஒருவராலும். இதை எல்லாம் மௌனமாக பார்த்துக் கொண்டு இருந்த நடராஜன் தாத்தாவிற்கு, மனைவியின் செயல்கள் புரிந்தது.
இவ்வளவு பேச்சுவார்த்தை நடக்கும் பொழுது, எதிலும் தன் மகன் வாயை திறக்கவில்லை. அதிலே புரிந்து கொண்டார், மகன் இனி அவர் மூத்த மகளை நினைக்க போவதில்லை என்று.
அவருக்கு புரியவில்லை, அவர் மகன் அவரின் செல்ல மகள் அகனிதாவிற்காக தான் வாய் திறவாமல் இருக்கிறார் என்று.
சாப்பாடு வேலை முடிந்த பிறகு, எல்லோரும் அவரவர் அறைக்கு சென்று படுத்து விட்டனர்.
மாடியில் இருந்த அவன் அறைக்கு வந்த அதிகனின் மனம் கொதித்தது. பதினைந்து வயதில், அவளை விரட்டி அடித்து விட்டதாக இத்தனை நாள் எண்ணியது தவறு என்று இன்று தான் புரிந்தது.
அவனது பதினைந்து வயதில் தான், தன் பிரியமுள்ள அத்தை மாமனின் இரண்டாம் தாரம் என்று தெரிய வந்தது.
மூத்த தாரத்துக்கு ஒரு பெண் இருப்பதும், அதுவும் கால் ஊனம் உள்ள பெண் என்பதும் தெரிய வந்தது.
கற்பகம் இறந்து, அதன் பின் இந்துமதியை திருமணம் செய்த பிறகு, ஊர் பக்கம் அவர் வருவதே தன் மகளை காண தான்.
அதுவும் இந்துமதி, தங்கை வாணி அறியாமல் தான். அவர்கள் மேல் ஏனோ ஒருவித அதிருப்தி தான்.
அப்படி ஒருமுறை யாருக்கும் எதுவும் சொல்லாமல், அவர் ஊருக்கு செல்ல, அப்பொழுது வாணிக்கு ஊர் திருவிழா வருகிறதே, ஒரு தடவை அங்கு சென்று வந்தால் என்ன என்று தோன்றிவிட்டது.
அவர் தான் பார்க்கிறாரே, தன் அண்ணன் வாழும் வாழ்க்கையை. பிள்ளைகளையோ, மனைவியையோ அவர் கவனிப்பது இல்லை என்று.
தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கிறார், அதுவும் அவருடைய கடமை என்று எண்ணி.
குலதெய்வம் கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகும் என்று எண்ணி, இரண்டு நாட்கள் பிள்ளைகள் விடுமுறை இருப்பதால், இதுநாள் வரை அங்கே செல்லாமல் இருந்தவர்கள், இப்பொழுது இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய வண்டி எடுத்து புறப்பட தயாராக்கினார்.
“வாட்ச்மேன்! சேகர் ஐயா வந்தா அங்க அத்தியூர் போய் இருக்கோம் சொல்லி, அங்கே வர சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு பிள்ளைகளுடன் பல வருடங்கள் பிறகு, அங்கே சென்றார்.
காலை கிளம்பியவர்கள், மாலை போல் வீடு வந்து சேர்ந்தவர்களுக்கு, காத்து இருந்தது அதிர்ச்சி.
“ என்ன அண்ணி விசேஷம்?? வீட்டில் தோரணை எல்லாம் தொங்க விட்டு அலங்காரம் பண்ணி இருக்காங்க” என்று கேட்டார் இந்துமதி.
திருமணமான புதிதில் வந்தவர் தான், அதன் பின் இன்று தான் எல்லோருடன் வருகிறார்.
“திருவிழா இல்லையா, அதான் எப்பொழுதும் போல வீட்டில் அலங்காரம் பண்ணி இருக்காங்க” என்று கூறினாலும் வீட்டின் அமைப்பு, இப்பொழுது அம்சமாக மாறி இருப்பதை வானியும் கவனித்தார்.
வீடு பூட்டு போட்டு இருப்பதை, இப்பொழுது அதிசயமாக பார்த்துக் கொண்டு இருந்தார்.
எப்பொழுதும் இரவு வேளையில் மட்டுமே, வீட்டை மூடி வைப்பர். மற்ற வேளைகளில் எல்லாம் கதவு திறந்தே இருக்கும்.
அப்பொழுது அங்கே கோவில் திருவிழாவுக்கு சென்று கொண்டு இருந்த இருவர், இவர்கள் நடராஜன் ஐயா வீட்டின் வெளியே நின்று இருப்பதை பார்த்து, யார் என்று கேட்டார்.
வாணி அவர்கள் இந்த ஊருக்கு புதிது என்று புரிந்து, இது தன் தந்தை வீடு என்று கூறி, அவர்கள் எங்கே என்று கேட்டார்.
கோவிலில் தான் இருக்கின்றனர் என்று கூறிவிட்டு, அவர்களை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு சென்றனர் இருவரும்.
ஏனோ அதிகனுக்கு, அப்பார்வை தங்களை ஏதோ, இழிவாக பார்ப்பதாக ஒரு எண்ணம்.
ஆம்!! அவர்கள் அப்படித்தான் பார்த்து சென்றனர்.
வாணிக்கு ஏதோ சரியாக படவில்லை, உடனே அனைவரையும் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு விரைந்தார்.
அன்று காப்பு கட்டிய முதல் நாள் என்பதால், கோவிலில் விசேஷம் வேறு. சரியான கூட்டம், பிள்ளைகளை வண்டியில் இருக்க சொல்லிவிட்டு, அதிகனை அவர்கள் பாதுகாப்புக்கு விட்டுவிட்டு, பெரியவர்கள் மூவர் மட்டும் சென்றனர்.
இந்துமதி, வாணி மற்றும் அவரது கணவர் கிருஷ்ணன் மூவரும், சன்னதி அருகே செல்ல நினைக்க, அங்கே உள்ளே அவர்களால் செல்ல முடியவில்லை.
வெளியவே நின்று காத்துக் கொண்டு இருந்தனர், அவர்கள் வருகைக்காக.
சன்னதியை விட்டு வெளியே வந்தவர்களை பார்த்த காட்சியில், மூவரின் உள்ளமும் கொதித்தது.
“வாணி!! இது உனக்கு தெரிஞ்சு நடக்குதா??!!” என்று ஆத்திரமாக கேட்டார் கிருஷ்ணா.
“இல்லைங்க!! இது எனக்கு தெரியாது” என்று கூறியதோடு, நேராக அவர்களை நோக்கி விரைய, அதற்குள் அந்த கூட்டத்தில் இருந்த சிலர், அவர்களை பத்திரமாக காரில் ஏற்றினர்.
கோபத்துடன் இவர்கள் அங்கு இருந்து கிளம்பி, நேராக வீட்டிற்கு வந்தனர்.
வீட்டிற்குள் அவர்கள் நுழையவும், அங்கே கண்ட காட்சியில், அதுவரை அமைதியாக இருந்த வாணி பொங்கி விட்டார்.
“அண்ணா!! என்ன பண்ணுற நீ?!!” என்று ஆத்திரமாக கேட்டார்.
“பார்த்தா தெரியலையா?!!” என்று சாதாரணமாக கேட்கவும், வாணி மட்டுமில்லை இந்துவும் திகைத்தார் இந்த பதிலில்.
“அண்ணா!! இந்து அண்ணி, பிள்ளைங்க எல்லாம் உனக்காக இங்க வந்து பொங்கல் வச்சு வேண்டிக்க வந்தா, நீ பண்ணுற காரியம் சரியா?? ” என்று கொதித்து போய் கேட்டார் வாணி.
“என் பிள்ளைக்கு நான் சாப்பாடு ஊட்டி விடறேன், இதுல என்ன தப்பு??” என்று கேட்டார்.
“அப்போ இந்த ரெண்டு பேர் யார் அண்ணா?!!” என்று ஐஸ்வர்யா, திலக் இரண்டு பேரை முன்னே நிறுத்தி கேட்க, அவர் இந்துவின் பிள்ளைகள் என்று அவர் பட்டென்று சொல்லவும், இந்துமதி திகைத்தார்.
அவரின் அந்த பதில் இந்துமதியை தவிர, யாருக்கும் புரியவில்லை.
அவருக்கு புரிந்தாலும், அதை அவரால் வெளியே சொல்ல முடியாது.
“ஆமா என் பிள்ளைகள் தான், ஒரு நாளாவது என் பிள்ளைகளுக்கு, இப்படி அன்பா பார்த்து இருப்பீங்களா?” என்று ஆதங்கத்துடன் கேட்டார்.
“அதான் நீ இருக்கியே மா, அப்புறம் என்ன?!!” என்று கேட்டவரை பார்த்து, என்ன சொல்ல என்று தெரியாமல் முழித்தார்.
“அண்ணா!! என்ன பேசுற நீ?!!” என்று இப்பொழுது ஆத்திரமாக கேட்டார் வாணி.
“உன் அண்ணிக்கு புரிஞ்சா போதும், சாமி கும்பிட வந்தா அந்த வேலையை மட்டும் பார்” என்று கூறிவிட்டு, மகள் சாப்பிட்டு முடித்தவுடன் அவர் அவளுக்கு தேவையானதை எல்லாம் கவனித்துவிட்டு, அறைக்கு அழைத்து சென்றார்.
“அண்ணி!! என்ன நடக்குது இங்க?!! அண்ணா ஏன் அப்படி சொன்னார்?!!” என்று அண்ணனின் வார்த்தையில் உள்ள வித்தியாசத்தில், கேட்டுவிட்டார் வாணி.
“என்னை கல்யாணம் செய்த பொழுதே, உனக்கு செய்ய வேண்டிய கடமையை செய்வேன் சொன்னார் அண்ணி”.
“அதே போல் தான் இப்போ வரை இருக்கிறார். என் பிள்ளைங்க மேலாவது கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம்”.
“இதோ அந்த பொண்ணுக்கு கிடைச்ச பாசம் கூட, என் பசங்களுக்கு கிடைக்கல அண்ணி” என்று வருத்தமாக கூறினார்.
அதை கேட்ட கிருஷ்ணன், தங்கையின் இந்த நிலை அவளே தேடிக் கொண்டது என்று புரிந்தாலும், மனைவியிடம் சற்று முகம் திருப்பி சென்றார்.
இதை எல்லாம் பார்த்த அதிகனுக்கு, மாமன் மீது கோபம் வராமல், அவரின் மகள் அகனிதாவின் மேல் கோபம் வந்தது.
அதன் விளைவாக அவன் அடுத்து செய்தது தான், மிகப்பெரிய கொடுமை அகனிதாவிற்கு.
எந்த உண்மைகள் பிள்ளைகளுக்கு தெரியாமல், இதுநாள் வரை இருந்ததோ, அதை அகனிதா அறியும்படி செய்து இருந்தான்.
அவளின் மிகப்பெரிய பலமே, அவளின் தந்தை தான். அந்த பலத்தையே அவளிடம் இருந்து, பிடுங்கி எரிய செய்த சம்பவம் அரங்கேறியது.
தொடரும்..






இந்துவின் பிள்ளைகள் இந்துவின் பிள்ளைகள் மட்டும் தான் போல,
அது இந்துக்கும் தெரியும் தானே ,(யாரு பிள்ளைகளுக்கு யாரு அப்பா,இப்படி கூட இருக்கலாம்)
கணவருக்கு ஒரு மகள்தான் அது நம்ம ஹீரோயின் தான்.
அடப்பாவி ..!அத்தை மேல பாசம் இருக்கத்தான் வேணும் அதற்காக
சின்னப்பொண்ணின் மனதை நோகடிக்கணுமா..?
மிக்க நன்றி பா ..
நல்லா கேளுங்க பா ..
Nice start.