arrow_back
ஆதிக்க நேசம் அத்தியாயம் 2
ஆதிக்க நேசம் chevron_right பகுதி 2 / 6

அத்தியாயம் 2

visibility 118
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் – 2

தோட்டத்தில் தந்தையுடன் காலை வேளையில், அவருடன் பொழுதை கழித்துக் கொண்டு இருந்தாள் அகனிதா. அந்த காலை வேளை அப்படி ஒரு புத்துணர்ச்சியுடன், தந்தையுடன் பள்ளியில் நடக்கும் சுவாரசியங்கள் எல்லாம் பகிர்ந்து கொண்டு இருந்தாள்.

இதை ஒரு அறையில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த இந்துமதி, வாணியிடம் தன் வேதனையை பகிர்ந்து கொண்டு இருந்தார்.

“அண்ணி! நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் நினைக்கிறேன்” என்றவரை பார்த்து வாணி என்னவென்று கேட்டார்.

“எனக்கு பிடிச்சு இருக்குன்னு ஒரே காரணத்துக்காக, அவரை ரொம்ப படுத்திட்டேன் போல அண்ணி” .

“இல்லைனா இப்போ வரை நமக்கு தெரியாம அவர் மகளை பார்க்க, இங்க வந்து எவ்வளவு சந்தோஷமா அவளை பார்த்து இருக்கிறது நமக்கு தெரியாம போய் இருக்கும் அண்ணி”.

“நான் பேசாம அவருக்கு விடுதலை கொடுக்கலாம் நினைக்கிறேன் அண்ணி”  என்றவரை அதிர்ந்து பார்த்தார் வாணி.

“என்ன பேசுறீங்க அண்ணி?!! புரியாம பேசாதீங்க, நீங்க அப்படி செய்தா, இங்க உங்க அண்ணா என்னை என் பசங்களை எல்லாம் விட்டுடுவார்”.

“நம்ம குடும்பம் பிரிஞ்சிடும் அண்ணி, புரியாம நீங்க பேசாதீங்க” என்று அதட்டினார் வாணி.

“நீங்க தான் புரியாம பேசுறீங்க அண்ணி, என் பசங்க முகத்தை பாருங்க, அவங்க அப்பா பாசத்துக்கு எப்படி ஏங்கி போய் இருக்காங்கன்னு”.

“இது அப்படியே தொடர்ந்தால், அவங்களுக்கு நல்லது இல்லை அண்ணி, எனக்கு என் பிள்ளைங்க முக்கியம் அண்ணி” என்று கண்ணீர் மல்க பார்த்தவரை பார்த்து என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் தடுமாறினார் வாணி.

ஆனால் இது அத்தனையும் கேட்டுக் கொண்டு இருந்த, அதிகன் அப்பொழுதே ஒரு முடிவு எடுத்தான்.

அவனுக்கு அவன் அத்தை என்றால் மிகவும் பிடிக்கும், தாய்க்கு அடுத்தபடியாக அவன் நேசம் வைத்தது தன் அத்தை இந்துமதியிடம் தான்.

அவரின் கண்ணீரை துடைக்க, அவன் அடுத்து ஆடிய ஆட்டம் ஒரு உயிரை வேரோடு பிடுங்கி எறிந்தது தான்.

அகனிதா தனியாக சிக்கும் சந்தர்பத்தை எதிர்பார்த்து, அவளிடம் விரைந்தான் அதிகன்.

சாமிக்கு பூஜைக்காக பூ பறிப்பது அவள் வழக்கம். அப்படி பறித்துக் கொண்டு இருந்தவள் முன் சென்று நின்றான்.

“நீ இங்க இருக்க கூடாது, இது ஒன்னும் உன் வீடு இல்லை” என்று ஆரம்பமே, அவளிடம் தடாலடியாக கூறினான்.

“இது தான் என் வீடு, உங்க வீடு இல்லை இது. என்னை சொல்ல உங்களுக்கு எந்த ரைட்சும் கிடையாது” என்று பதில் வழங்கினாள் அவள்.

“இங்க உன்னை விட அதோ இருக்காங்க பாரு, அவங்களுக்கு தான் அதிக உரிமை இருக்கு”.

“ஏன்னா நீ ஒரு அனாதை, கால் விளங்காதவ, அவங்க தான் என் மாமா பசங்க, அதாவது என் மாமாவோட சட்டபூர்வமான பசங்க” என்று அவள் தலையில் இடியை இறக்கினான்.

“நான் நம்ப மாட்டேன், நீ பொய் பேசுற” என்று அவனை அலட்சியப்படுத்திவிட்டு அங்கு இருந்து செல்ல முயன்றாள்.

அவனோ அவளை செல்ல விடாமல், அந்த சக்கர நாற்காலியை பிடித்துக் கொண்டான்.

அங்கு இருந்தே அவன் ஐஸ்வர்யாவை அழைத்தான். அவளும் அவன் எதற்கு அழைக்கிறான் என்று தெரியாமல், அவன் அருகே வந்தாள்.

“உன் அப்பா பேர் என்ன?” என்று சொல்லுமாறு கூறினான்.

“ராஜசேகர், அவர் தான் என் அப்பா. என்னமோ தெரியாத மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க அத்தான்” என்று அவள் கூறிய பிறகு, அகனிதா கையில் இருந்த பூந்தட்டு கீழே விழுந்தது.

அப்பொழுது பிள்ளைகளை அழைக்க வந்த இந்துமதி, அங்கே கோபமாக நின்று கொண்டு இருந்த அதிகனை பார்த்தவருக்கு திக்கென்றது.

“அதிகா!! இங்க என்ன பண்ணுறீங்க?” என்று கேட்டார் இந்துமதி.

“ஒன்னும் இல்லை அத்தை, யார் இங்க இருக்கணும், கூடாதுன்னு விபரம் சொல்லிக்கிட்டு இருக்கேன் நம்ம வீட்டு விருந்தாளிக்கு” என்று ஒரே நிமிடத்தில் அவள் தான் இங்கே விருந்தாளி என்று நேரடியாக கூறினான்.

அதைக் கேட்ட இந்துமதிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், மறுபக்கம் பயம்.

அவரின் கணவர் பற்றி அறியாதவரா, இப்படி விஷயம் தெரிந்தால் இங்கே அவர் போட்டு வைத்த கணக்கு தவறினால் அடுத்து தனக்கும், பிள்ளைகளுக்கும் ஒன்றும் மிஞ்சாது.

ஆகையால், அப்போதைக்கு எந்த ஒரு பிரச்னையும் வேண்டாம் என்று கருதி, அகனிதா தவிர மற்ற அனைவரையும்  அழைத்து சென்றார்.

அகனிதா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை, தன் தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருப்பது அவளுக்கு அப்படி ஒரு அழுத்தம் தந்தது.

அந்த நேரத்தில், அருகில் யாரும் இல்லாமல் அவளுக்கு இருந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் வலிப்பு வந்து விட்டது.

அவளின் மனம் அப்பொழுது நினைத்தது ஒன்று தான், தன் தந்தை தனக்கு இல்லை இனி என்ற எண்ணம், அவளுக்கு இனி யாருமில்லை என்றே தோன்றிவிட்டது.

உயிர் வாழ்வதை விட சாவதே மேல் என்று கருதினாலோ, அந்த பத்து வயது சிறுமி மெதுவாக மூர்ச்சையாக தொடங்கினாள்.

பூக்களை பறிக்க சென்ற பேத்தி, இன்னும் வராததால், செண்பகம் அங்கே வந்து பார்த்தார்.

பேத்தியின் நிலையை பார்த்தவர், என்னங்க என்று தன் கணவரை கத்தி அழைத்தார்.

அவரின் அந்த சத்தத்தில், என்னமோ ஏதோவென்று வீட்டினுள் இருந்த அனைவரும் ஓடி வந்தனர்.

ராஜசேகர், மகளின் நிலையை பார்த்து உடனே மகளை கையில் ஏந்தி அவரின் காருக்கு ஓடினார். கூடவே செண்பகமும் சென்றார்.

“ஹ்ம்ம்!! இந்த கழுதை பிழைக்கவே கூடாது, எந்த நேரத்தில் பிறந்துச்சோ என் தங்கச்சி உசுரை வாங்க வந்துச்சு”.

“இங்க பாரு வாணி, என் தங்கச்சி அவ தலையில் அவளே தான் மண்ணை அள்ளி போட்டுகிட்டா. அதுக்காக அவளை நான் திட்டினாலும், எந்த பாவமும் பண்ணாத இந்த குழந்தைகளை தண்டிக்க என்னால முடியாது”.

“அதனால ஹாஸ்பிடலில் இருந்து, அவங்க வந்த உடனே கையோட உங்க அண்ணா இனி இங்க வர கூடாதுன்னு சொல்லிடு”.

“உன்னையை பார்க்க கூட, உங்க அப்பா, அம்மா அங்க நம்ம வீட்டுக்கு வரட்டும், இங்க நாமளும் வர போறதில்லை” என்றார் கிருஷ்ணன்.

அண்ணனின் இந்த பேச்சு, இந்துமதியை குளிர வைத்தது. அவருக்கு தெரியும், அண்ணனுக்கு தன் கணவரை பிடிக்காது என்று, ஆனாலும் பிள்ளைகளுக்காக மட்டுமின்றி தனக்காகவும் கண்டிப்பாக இங்கே தன் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார் என்று எண்ணினார்.

அதே போல் இப்பொழுது அவரின் இந்த பேச்சு, அவருக்கு அப்படி ஒரு ஆசுவாசத்தை தந்தது.

ஆனால் சூழ்நிலை காரணமாக, அவர் எதையும் முகத்தில் காட்டவில்லை.

இங்கு அதிகன் அவன் அறையில் நடை போட்டுக் கொண்டு இருந்தான். அவளை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று தான் நினைத்தானே தவிர, அவள் அழிய வேண்டும் என்று நினைக்கவில்லை.

இப்பொழுது அவன் மனது அடித்துக் கொண்டது, அவளுக்கு எதுவுமாக கூடாது என்று. இல்லையென்றால், இதை வைத்தே தன் அத்தையிடம் மாமா எதுவும் தப்பான முடிவு எடுத்தால், என்ற சுயநலம் வேறு அவனை அங்கே நிற்க விடவில்லை.

நேராக தன் அத்தையிடம் சென்றான், அவரின் மனநிலையை தெரிந்து கொள்ள.

“அண்ணி!! எதுக்கு பயம்? நாங்க எல்லாம் இருக்கோம், அப்படி எல்லாம் அண்ணா எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டாங்க” என்று இந்துமதியை தேற்றிக் கொண்டு இருந்தார் வாணி.

“அவளுக்கு எதாவது ஆச்சுன்னா, இதை காரணமா வச்சு பிரச்சினை பண்ண மாட்டார்ன்னு என்ன நிச்சயம் அண்ணி?” என்று பரிதவித்தார் இந்துமதி.

இந்த பேச்சுகளைக் கேட்ட அதிகன், அப்பொழுதே ஒரு முடிவுக்கு வந்து இருந்தான். அவன் நேராக அகனிதா அனுமதித்து இருக்கும் மருத்துவமனைக்கு சென்றான்.

அங்கே மருத்துவமனையில், ஒரு பக்கம் செண்பகம் பாட்டி கண்ணீருடன், கடவுளிடம் மானசீகமாக வேண்டிக் கொண்டு அமர்ந்து இருந்தார். மறுபக்கம் மகனுக்கு ஆதரவாக தாத்தா நடராஜன் அமர்ந்து இருந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்பட்டு இருந்தாள், அகனிதா. ஏற்கனவே அவளின் சிகிச்சைகள் இங்கே தான், தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன. ஆகையால், இங்கே கொண்டு வந்து அனுமதித்து உள்ளனர்.

மருத்துவர் என்ன சொல்லுவாரோ, என்ற சிறு பயத்தில் அமர்ந்து இருந்தனர் மூவரும் அங்கே. அப்பொழுது அந்த இடத்திற்கு புயலென, வந்தான் அதிகன்.

“மாமா! சீக்கிரம் வீட்டுக்கு வாங்க அங்கே ஐஸ்வர்யா உங்களை தேடி அழுதுகிட்டு இருக்கா” என்று அழைத்தான்.

“அவளை பார்த்துக்க அவ அம்மா இருக்கா, நீ முதல இங்க இருந்து கிளம்பு” என்று பேரனை விரட்ட பார்த்தார் செண்பகம்.

பேரனின் குணம் தெரிந்து தான், அவர் அவ்வாறு பேசியது கூட. சுயபுத்தி ஒன்று இல்லவே இல்லை அவரின் மகளுக்கு,  அதே போல் தான் அவரின் பேரன் அதிகனும்.

தான் என்ற அகம்பாவம் அப்படியே அவனின் தாயை போல், ஆகையால் தான் முதலிலே அவனை அடக்கி வைப்பார் எப்பொழுதும். இப்பொழுதும், அவர் அதையே செய்ய, ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் இன்னும் வார்த்தைகளை விட்டான் அந்த பதினைந்து வயது இளம் காளை.

“உள்ள இருக்கிறவ செத்தா தான், இவர் என் அத்தை கூட வந்து இருப்பாரோ” என்று கோபம் கொப்புளிக்க கேட்க, அந்த வார்த்தையின் தாக்கத்தில் அதிர்ந்து போனார் ராஜசேகர்.

“என்ன பேசுற நீ?” என்று கொதித்து போனார் செண்பகம். பேரனின் இந்த பேச்சில், மேற்கொண்டு பேச முடியாமல் நின்றார் தாத்தா நடராஜன்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் அங்க வரலைனா, அடுத்து அது தான் நடக்கும். அப்புறம் இனி அவ இங்க இருக்க கூடாது, அடுத்து நாங்க வரும்பொழுது இவ இங்க இருந்தா அடுத்து என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று கண்களில் கோபம் மின்ன கூறிவிட்டு சென்றான்.

இதைக் கேட்ட ராஜசேகருக்கு, இதயம் நின்று துடித்தது. பல சம்வங்கள் அவர் வாழ்வில் நடந்தது எல்லாம், ஒன்றன் பின் ஒன்றாக வந்து செல்ல, கண்களை மூடிக் கொண்டு கண்ணீருடன் ஒரு முடிவுக்கு வந்தார்.

“பார்த்தீங்களா!! எப்படி பேசிட்டு போறான்? எல்லாம் இவன் ஆத்தாவும், அத்தைகாரியும் பண்ணுற வேலை. அன்னைக்கே இந்த சம்பந்தம் வேண்டாம் சொன்னேன், கேட்டீங்களா?!!” என்று அப்பொழுதே சண்டை பிடிக்க தொடங்கினார்.

“எம்மா! இங்கின இப்படி எல்லாம் கத்த கூடாது, இது ஆஸ்பத்திரி” என்று ஒரு நர்ஸ் வந்து திட்டிவிட்டு செல்லவும் தான் அமைதியானார்.

ஆனால் அடுத்து மகன் பேசிய பேச்சில், அவருக்கு கண்ணீர் வந்துவிட்டது. திரும்பவும் கத்தி அழுக தொடங்க, அவரை சமாதனப்படுத்த முடியாமல் திணறினர்.

“அம்மா அழாதீங்க, நீங்க தான் இப்போ என் பலமே. இனி என் பொண்ணு உங்க பொறுப்பு” என்று கூறிவிட்டு சில விஷயங்களையும் மெல்ல பகிர்ந்துவிட்டு சென்றார்.

அவர் பகிர்ந்துவிட்டு சென்ற விஷயங்கள் எல்லாம் ஜீரணிக்கவே சில நிமிடங்கள் பிடித்தது பெரியவர்கள் இருவருக்கும். தாத்தா நடராஜன் இனி நடப்பது நடக்கட்டும், என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.

ஆனால் அதிகன்க்கு மட்டும் நான் பாட்டி இல்லை, பேத்தி அகனிதாவுக்கும் தான் தான் பாட்டி. இனி பேத்தியை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்தது மட்டும் இல்லாமல், அப்பொழுதே அவரின் கணவர் நடராஜன்க்கும் சில கட்டளைகளை பிறபித்து அதை உடனே செயல்படுத்த தொடங்கினார்.

பேத்தியின் நிலவரம் என்ன என்றும் தெரியவில்லை, இந்த சிறு வயதில் அவளுக்கு இத்தனை கஷ்டங்களா என்று மனவேதனை கொண்டார்.

அதற்குள் அந்த அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மருத்துவர் வந்தார் வெளியே, அங்கு இருந்த செண்பகம் அம்மாவை பார்த்து மெலிதாக புன்னகைத்தார்.

“செண்பகம் மா, உங்க பேத்தி இப்போ நல்லா இருக்கா. இனிமே தான் நீங்க கொஞ்சம் கவனமா பார்த்துக்கணும், ரொம்ப அழுத்தம் கொடுக்காதீங்க அவளுக்கு, அது பிண்ணாடி இப்படி பிட்ஸ் வர வாய்ப்பு இருக்கு”.

“கொஞ்சம் மெடிசின் எல்லாம் மாத்தி எழுதி தரேன், கவனமா பார்த்துகோங்க. சாப்பாடு ஆகாரம் எல்லாம், என்ன கொடுக்கணும் எல்லாம் நர்ஸ் தருவாங்க, பார்த்துகோங்க” என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் கூறி சென்ற விஷயம் உவப்பானதாக இல்லை, ஏனெனில் இனி தானே அவள் வாழ்க்கை போராட்ட சக்கரத்திற்குள் சுழல இருக்கிறது என்று எண்ணியவர், பேத்திக்கும், மகனுக்கும் தான் தான் பலம் என்று புரிந்தவர் பேத்தியை காண சென்றார்.

அங்கே உடல் இன்னும் மெலிந்து, மனதின் வேதனை முகத்தில் தெரிய அசதியாக படுத்து இருந்த பேத்தியை பார்த்தவரின் மனது கனத்ததோடு, கண்களும் கலங்கியது.

மருந்தின் உதவியால் உறங்கி கொண்டு இருந்தாலும், அவள் முகத்தில் படர்ந்து இருந்த வேதனை எதனால் என்று புரியாமல் தவித்தார். பூ பறிக்க சென்ற சமயம், யாரேனும் எதுவும் வருந்தும்படி பேசி இருப்பார்களோ, என்று நினைக்க தோன்றியது.

ஏனெனில் இப்பொழுது சற்றுமுன், அதிகன் பேசி சென்ற வார்த்தைகள் அவரை யோசிக்க வைத்தது. பேத்தி எழுந்த பின் கேட்டுக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தவர், அடுத்து செய்ய வேண்டியதை பற்றி நிதானமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

இங்கே நிலவரம் இப்படி இருக்க, அங்கே வீட்டுக்கு சென்ற ராஜசேகர் கிளம்பலாம் என்று மட்டும் சொல்ல, அவரின் முகத்தை பார்த்து புரிந்து கொண்டார் இந்துமதி.

“அண்ணி! இருங்க அண்ணா கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று ஒரு முடிவுடன் இருந்தார் வாணி.

அப்பொழுதும் ராஜசேகர் வாய் திறக்கவில்லை, என்ன கேட்கணும் என்பது போல் தான் பார்த்தார். அந்த பார்வையே, எடாகுடமாக கேள்விகள் வந்தால் அவர் பதிலும் அப்படித்தான் வரும் என்பது போல் தான் பார்த்தார்.

“அண்ணா! முதல நீ ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோ, இந்து அண்ணி தான் உன் பொண்டாட்டி. ஐஸ்வர்யா, திலக் தான் உன் பசங்க அதை மனசில் பதிய வை”.

“இனி அவ இங்க இருக்க கூடாது, அவளை அப்பா கிட்ட சொல்லி ஒரு ஆஸ்ரமத்தில் சேர்த்திடலாம். முதல இது தான் நம்ம குடும்பம், என்ன தான் அவ உனக்கு பிறந்து இருந்தாலும் இப்போ அவளால் தான் பிரச்சனையே”.

“இன்னையோட அவளை தலை முழிகிட்டு வா, அப்பா கிட்ட நான் பேசிக்கிறேன்” என்று அழுத்தமாக வாணி கூற ராஜசேகர் அவரை பார்த்து ஒன்றும் கூறமால், இந்துமதியை ஒரு பார்வை தான் பார்த்தார்.

“அண்ணி! ப்ளீஸ் முதல இங்க இருந்து கிளம்புவோம்” என்று அவர் ஒரு பக்கம் அழுத்தமாக கூற, தங்கையின் நிலையை பார்த்து கிருஷ்ணனும் உடனே ஊருக்கு புறப்பட ஆயத்தமாக கூறினார்.

அவரின் மௌனமே, அவருக்கு அதில் உடன்பாடு இல்லை என்று புரிந்தது அனைவருக்கும். அதிகன் அவரை நெருங்க நினைக்க, அவர் அவனிடம் இருந்து விலகி விட்டார்.

அதில் அவனுக்கு சுருக்கென்றது, தன் தாய் மாமன் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அந்த உரிமையில் தான் அவரிடம், அங்கே மருத்துவமனையில் தன் தாய்க்காகவும், அத்தைகாகவும் எகிறியது.

இப்பொழுது, அவர் அவனிடம் பேச கூட பிரியப்படவில்லை எனவும், இப்பொழுதும் கோபம் அவனுக்கு அகனிதா மேல் தான் திரும்பியது.

“உன்னை இங்க இருந்து மொத்தமா விரட்டிவிடுறேன், அப்போ தான் இங்க நாங்க எல்லாம் நிம்மதியா இருக்க முடியும்” என்று எண்ணியவன் அப்பொழுது கூட தன் தவறை உணரவில்லை, அதற்கு அவன் ஈகோ இடமளிக்கவில்லை என்பது தான் உண்மை.

வாணி பிறந்த வீட்டில் எப்படி செல்லமோ தந்தைக்கு, புகுந்த வீட்டில் கூட அவரின் ராஜ்ஜியம் தான். அவர் ஒன்று நினைத்தால், அதை நடத்திவிட்டு தான் ஓய்வார்.

இப்பொழுது கூட, தன் அண்ணி இந்துவுக்கு அவர் உதவி செய்கிறார் என்றால், அவரின் வாழ்க்கைக்கு பங்கம் வந்து விட கூடாது என்ற எண்ணம் மட்டும் தான் அதற்கு ஒரே காரணம்.

அண்ணி மீது அதற்கு பாசம் இல்லாமல் இல்லை, அதுவும் இருக்கிறது. ஆனால், எதிலும் தன் சுகத்தை தான் முதலில் பார்பார் அவர்.

“அண்ணி! வீட்டுக்கு போன உடனே அண்ணன் கிட்ட நீங்க கண்டிப்பா, இது பத்தி பேசுறீங்க. உங்களுக்கு நாங்க எல்லாம் துணையா இருக்கோம் தானே, அப்புறம் என்ன பயம் உங்களுக்கு” என்று வாணி, இந்துவிடம் கூறிக் கொண்டே வந்தார்.

இந்துமதிக்கு, ஹையோ என்று தான் இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே இவர் ஒரு கணக்கு போட்டு வைத்து இருந்தால், சூழ்நிலை ஒவ்வொரு முறையும் இவருக்கு எதிராக இருக்கிறதே என்று எரிச்சல் தான் வந்தது.

இதில் அண்ணன் மனைவி வேறு, இவர் போடும் கணக்குக்கு ஒரு பக்கம் துணை இருந்தாலும், மறு பக்கம் அது இவருக்கே திருப்பி அடிக்கிறது என்பதை புரிந்து அவரை சமாளிப்பது தான் இவருக்கு பெரும்பாடாக போகிறது.

ஆளுக்கு ஒரு முடிவுடன், அங்கு இருந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்தனர். இவர்களின் விஷயம் முழுவதும் அறிந்த செண்பகம், இப்பொழுது அகனிதா வைத்து ஆட்டத்தை அவர் தொடங்கி விட்டார்.

அதன் முதல்படியாக, ராஜசேகருக்கு ஊரில் இருந்து வந்த ஒரு வாரத்தில் கோர்ட் சம்மன் ஒன்று வந்தது. அதில் இருந்ததை பார்த்து, கொதித்து போனது என்னவோ வாணியும், இந்துமதியும் தான்.

இதில் இருந்து தான் அதிகன் – அகனிதா இருவரின் வாழ்க்கை மாற துவங்கியது.

தொடரும் ..

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 3

அத்தியாயம் – 3மருத்துவமனையில் இருந்து பேத்தியை, இன்று வீட்டிற்கு அழைத்து செல்ல எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டு இருந்தனர் நடராஜன் – செண்பகம் தம்பதியினர்.அதன்படி வீடு வந்து சேர்ந்தவர்கள், பேத்தியிடம் இனி தாங்கள் உனக்கு உறுதுணையாக இருப்போம் என்று வாக்குறுதி கொடுத்தனர்.ஒரு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 3 கருத்துகள் உள்ளன

  1. வாணி சுயநலம் உள்ளவர்,தனது வாழ்க்கைக்காக தனது அண்ணனின் வாழக்கையை கேள்வி குறி ஆக்கிட்டார்.
    உண்மைகளை பெற்றோரிடம் சொல்லி விட்டார் ராஐசேகர் .இதனால் இந்து போட்ட பணக்கணக்கு தப்பாயிற்று போல.

    1. மிக்க நன்றி பா ..
      ஆமாம் பா கொஞ்சம் அவங்க அப்படித்தான் …

உங்கள் கருத்தைப் பகிருங்கள்