arrow_back
என்ன தவம் செய்தேன்! 63
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 63 / 85

63

visibility 3
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

“இந்த பாட்டு, அவங்களுக்காகத் தான்…”  என்றவன், தன் மியூசிக் ட்ரூப் உடன்,  ஹிந்தி  படமான,  ‘hai dil hai muskil’ என்ற படத்தில் வந்த பாடலைப்  பாட,  அவன்  குரல்  வளத்தில்,  அவன்  முக  பாவத்தில்,  அதில் தெரிந்த  காதலில்,  மதுரா  திறந்த வாய், திறந்தப் படி இருக்க, கண்கள் தெறித்து  வெளியே விழுந்து விடும் அளவு, அதிர்ந்து போய் அவன் பாடுவதைப்  பார்த்து இருந்தாள்.

இதயம்  வெகுவேகமாகத்  துடிக்க, ‘எங்கே  அது  வெளியேவே  வந்து விழுந்து  விடுமோ’  என்று  நெஞ்சில்  கை  வைத்து  அழுத்தினாள்.

ஒருவனால்  ஒரு  பாட்டில்,  தன்  குரலால்,  முக  பாவத்தால்  காதலை சொல்ல  முடியுமா  என்ன!

பாஷை  புரியாதவர்கள்  கூட,  அவன் காதலை, அந்தக் கணம் உணர்ந்தார்கள்.

அவன்  விழுந்து,  விழுந்து   அந்த   வரிகளை எழுதவில்லை.
இசை அமைக்கவில்லை  தான்.
ஆனால்,  அவனால் முடிந்தது பாடுவது.
பாடும் திறன் மூலம், தன் குரலால், தன் காதலை உலகம் அறிய பிரகடனப்படுத்திக்   கொண்டு  இருந்தான்  அந்தக்  காதலன் .

‘tu safar mera, hai tu hi meri manzil
tere bina guzara, ae dil hai mushkil
tu mera khuda, tu hi duaa mein shaamil
tere bina guzara, ae dil hai mushkil
என் பயணமும், நீ தான்.
என் பயணத்தின் இலக்கும், நீ தான் .
நீ இல்லாமல் வாழ்வது
ஓஹ் !…
இதயமே அது என்னால் முடியாது.
நீ என் கடவுள்!
என் எல்லா, பிராத்தனைகளிலும் இருப்பவளும் நீ தான்
நீ இல்லாமல் வாழ்வது,
ஓஹ்!….  இதயமே அது என்னால் முடியாது .

mujhe aazmaati hai teri kami
meri har kami ko hai tu laazmi
junoon hai mera, banoon main tere kaabil
tere bina guzaara, ae dil hai mushkil
நீ என்னுடன் இல்லாத நேரங்கள்
என்னை சோதிக்கின்றன (கொல்கின்றன )
என்னுடைய எல்லா குறைகளையும்
நிறைவாக்க, தேவைப் படுவது நீ தான் .
(நீ இருந்தால் தான் என் எல்லா
குறைகளும், இழப்புகளும் நிறைவாகும் )
என்னுடைய  பேரார்வம்,
உனக்கு  தகுந்தவனாக  நான்  இருப்பது  மட்டும் தான்

ye rooh bhi meri, ye jism bhi mera
utna mera nahi, jitna hua tera
tune diya hai jo, wo dard hi sahi
tujhse mila hai to, inaam hai mera
இந்த ஆத்மா என்னுடையது ,
இந்த உடல் என்னுடையது
ஆனால், உன்னை சந்தித்த பிறகு
இரண்டுமே என்னுடையது அல்ல ….
(அவை உன்னுடையதாக மாறி விட்ட பிறகு , அவை என்னுடையது அல்ல )
வலிகளை மட்டுமே நீ கொடுப்பதாய் இருந்தாலும் ,
கொடுப்பது  நீ  என்பதால், எனக்கு பிடித்தமே!

mera aasmaan DhoonDhe teri zameen
meri har kami ko hai tu laazmi
zameen pe na sahi, to aasmaan mein aa mil
tere bina guzara, ae dil hai mushkil
நான் வானம்! …..
நீ என் பூமி!
உன்னைத் தேடியே, என் பயணம்
இந்த பூமியில் சேர முடியாது என்றால்,
நாம் இணைவு ,சொர்க்கத்திலாவது நடக்கட்டும் .

maana ki teri maujoodgi se
ye zindagani mehroom hai
jeene ka koi dooja tareeka
na mere dil ko maaloom hai
என்னுடைய இந்த வாழ்வானது.
நீ இல்லாதது
நீ இல்லாமல்,
வாழ்க்கையை வாழவே எனக்கு தெரியாது .
(நான் உயிர் வாழ தேவைப் படுவது நீ தான் )

tujhko main kitni shiddat se chaahoon
chaahe to rehna tu bekhabar
mohtaaz manzil ka to nahi hai
ye ek tarfa mera safar..
நான் உன்னை தீவிரமாக காதலிக்கிறேன் .
உனக்கு, இது தெரியாமல்
போகலாம்
தெரியாமலே, நீ இருந்து விடலாம்.

safar khoobsurat hai manzil se bhi
meri har kami ko hai tu laazmi..
adhoora hoke bhi, hai ishq mera kaamil
tere bina guzaara, ae dil hai mushkil
ஆனால், உன்னை நோக்கிய
என் பயணம், ஒரு வழி பயணம்!
இலக்கான உன்னை அடையாமல் போனாலும்,
உன்னை நோக்கிப் பயணித்து கொண்டு இருப்பதே, எனக்கு போதும் .’

பாடல்  முடிந்த  பல  வினாடிகள்  கடந்தும்,  அதன்  தாக்கம்  அந்த அரங்கில் இருந்தது.

https://www.youtube.com/watch?v=5-vjiRA07nE&list=RD5-vjiRA07nE&start_radio=1

விஜய்யின்  குரல்  வளத்தில்,  பாடல்  வரிகளின்  ஆழத்தில்,  அதில் இருந்த, ‘முழுச்  சரணாகதி’  தத்துவத்தில் அங்கிருந்தவர்கள், தங்களை தொலைத்து  இருந்தார்கள்.

பாடல்  முடிந்த போது,  கரகோஷம்  அடங்க  வெகுநேரம் ஆனது .

கண்ணை  மூடி,  உணர்ச்சி பிரவாகத்தில், பாடிக் கொண்டு இருந்தவன் கண்ணைத் திறக்க,  அதில்  தெரிந்தக்  கண்ணீரின்  பளபளப்பினை, கேமரா வெகு  அழகாகப்  பதிவுச்  செய்து  இருந்தது .

அன்று   கலங்கி  இருந்த  விஜய்  கண்களுக்கு,  இன்று  மதுராவின்  கண்கள், கண்ணீரைச்  சொரிந்து  கொண்டு  இருந்தன.

மன பாரம் தாங்க முடியாமல், கட்டிலில்  அப்படியே  சாய்ந்து  விட்டாள்.

யாரோ எழுதிய கவிதை!
யாரோ இசை அமைத்து, யாரோ பாடியது தான்!

அது  விஜய்  சொந்த  படைப்பு  இல்லை  தான்  என்றாலும்,  மேடையில் அவன்  பாடிய  விதம்,  கேட்பவரின்  மனதை  போட்டுப்  பிசைந்து  எடுத்தது.

அந்தப் பாடலின் மொழி வேறு தான் என்றாலும், இசைக்கு, காதலுக்கு  மொழித் தேவை   இல்லை தானே!

அந்தப்  பாடலைக்  கேட்டவருக்கு,  ‘விஜய்யின்  காதல், அதன்  ஆழம்’ புரியாமல்  இருக்காது தான்.

மற்றவருக்கே,  அதன்  பாதிப்பு  இருக்கும் போது,  யாருக்காக அவன் பாடினானோ,  யாருக்காக  அவன்  உருகிக்  கொண்டு  இருக்கிறானோ, அவளுக்குப்  புரியாமல்  போகுமா  என்ன?

விஜய்யின்  காதல்  தோட்டத்தில்  அமர்ந்து  யோசித்த  போதே, விளங்கி விட்டது மதுராவிற்கு.

அவனும் அவன் சொல்லால், செயலால் காதலை உணர்த்தி விட்டான்.

ஒரு வீட்டின்  அறை  முழுக்க,  ‘நினைவுச் சின்னங்களை’ எழுப்பி அல்லவா வைத்து இருக்கிறான்!

ஆனால், எப்படி  அவன்  கைகள்  கட்டப்பட்டு  இருக்கிறதோ,  அதே போல் மதுராவின்  கரங்களும்,  கட்டப்பட்டு  இருந்தது.

அவள் முடிவுக்கு, யாரும் குறுக்கே வரப் போவதில்லை தான். அப்படியே குறுக்கே  வந்தாலும்,  அதைச்  சமாளிக்கும்  திடமும், அவளுக்கு உண்டு தான்.

ஆனால்,  விஜய்க்கும்  அவளுக்கும்  நடுவே  இருக்கும்  அகழி  மிகப்  பெரியது ஆயிற்றே!… 
practical ப்ரோப்லம் நிறைய உண்டு என்பதால் தான்   அவள்  மௌனம்  காப்பது .

கண்ணீர் வழியப் படுத்து இருந்தவள் கைகளில் பட்டது அந்த நோட்பேட்.  அதனை எடுத்துப் புரட்டியவள், விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.

பக்கம் பக்கமாக அவள் படங்கள், ‘பென்சில் ஸ்கெட்ச்’ மூலம் வரைய பட்டு இருந்தது.

சிலவற்றில்  விஜய்யும்  உடன்  இருந்தான். இருவரையும் வரைந்து இருந்தான்.
அத்தனை  தத்ரூபம்  அதில். சிலவற்றுக்கு வண்ணம் பூசப் பட்டு இருந்தது.

இதே போல்,  இருபதிற்கும்  குறையாத, பெரிய நோட்பேட்களை, அந்த அறையில்  பார்த்ததாக,  நினைவுக்கு  வரத் தலையைப் பிடித்துக் கொண்டாள் மதுரா.

முப்பது  பக்கம்  திருப்பிய பின், விஜய் கை எழுத்தில், அவர்களின் கடந்தக் காலத்தின், ஒரு பகுதி  முன்னே விரிந்தது.

“ஒரு   குடும்பத்திற்கு   மூத்த  மகன்  என்பது,  பெரும்  சுமை. 
அதுவும்  அப்பா  பாராலஸிஸ்   வந்து   படுத்தப்  படுக்கையாக  இருக்கும் போது,  இதை  எல்லாம்   எப்படி    சமாளித்தார்   என்று   சுத்தமாகப்  புரியவில்லை.

நேத்து வரை கஷ்டம் என்றால், என்ன என்றே தெரியாமல் வளர்ந்து விட்டேன்.  ‘ராஜா  வீட்டு கண்ணுகுட்டியாக’. அப்பாவும், அம்மாவும் என்னைத்  தாங்கி  விட்டனர்.

ஆனால்,  இன்றோ  இவர்களையும், தம்பி, தங்கையையும் தாங்கும் பொறுப்பு  என்னுடையது. 
யாரின்  வயிறும் வாடக் கூடாது, அப்பாவுக்கு மருத்துவம்   பார்க்க  வேண்டும்,  எங்கள்  மூவரின்  படிப்பும்  கெடக்  கூடாது.

தம்பி,  ‘நான்  வேலைக்குப்  போகிறேன்’  என்று  வந்து நிற்கிறான். அவனைச்  சமாளிப்பதற்குள்,  ‘எனக்குப் போதும், போதும்’ என்று ஆகி விட்டது.

வேலை சமயத்தில், இப்படி ஆனதால் இழப்பீடு, பெரும் தொகையாகவே  வந்து  இருக்கு.
அதைப்  பேங்க்கில்  போட்டு, மாத  வருமானம்  வரும்  படி  செய்து விட்டேன்.  சொந்தமாய்  குடி  இருந்த  வீட்டைக்  காலி  செய்து  விட்டு,  சிறிய   வீட்டுக்குக்   குடி   போய்   விட்டோம்.

சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டோம். அது மெயின் ஏரியா என்பதால், வாடகையும் கணிசமாக வருகிறது. ஊரில் இருந்த விவசாய நிலத்தையும்,  ஆண்டு  காண்ட்ராக்ட்டுக்கு  குத்தகை  விட்டு  இருக்கிறேன்.

அப்பாவின் மெடிக்கல் இன்சூரன்ஸ் கைக்கொடுக்கிறது.

இன்சூரன்ஸ், அப்பா  கட்டும் போதெல்லாம் அப்பொழுது கடுப்பாய் இருக்கும்.
‘எதுக்கு இந்த அப்பா, வேலையில்லா, மாத வருமானத்தின், ஒரு பகுதியை மெடிக்கல் இன்சூரன்ஸ் என்று கட்டுகிறார் என்று…’
இப்போத் தான் அவரின் தீர்க்கதரிசனம்  புரிகிறது.

சம்பாதிப்பது ஒற்றை ரூபாய் என்றாலும், அதில் ஒரு பகுதியை இப்படி ஏதாவது  ஒரு  இன்சூரன்ஸ்,  ஒவ்வொரு குடும்பமும் நிச்சயம் போட்டு வைக்க  வேண்டும்  என்று  அப்பொழுது புரிந்தது.     

அம்மாவும்  சிக்கனமாகத்  தான்  செலவு  செய்கிறார். தம்பி, தங்கை பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்கின்றனர்.

நாங்கள் மூவரும் மிக நன்றாகப்  படிக்கும்,  படிப்ஸ்  வகை  என்பதால்,  மூவருக்குமே  ஸ்காலர்ஷிப் வருவது   படிப்பிற்கு   முக்கால்வாசி  உதவுகிறது.

அப்பாவுக்கும் உயர்தர சிகிச்சை அளித்தால் மீண்டும் பேசவும், எழுந்து நடமாடவும் முடியுமாம். அதனால்  பார்ட் டைம்  வேலைக்குப்  போக  வேண்டும்  என்று  முடிவு  செய்து,  ஆல்வினின்  அப்பா  செய்யும்    ரியல் எஸ்டேட்   தொழிலில்,  அவருக்கு   உதவிக்  கொண்டு   இருந்தேன்.

விற்கும்  இடத்திற்கு  ஏற்பக்,  கமிஷன்  தாராளமாகவே  வருகிறது.  சில பள்ளிப்  பசங்களுக்கு  டியூஷன்  எடுக்கிறேன்.
ஆனாலும்,  சில  சமயம் மூச்சு முட்டிப் போகிறது.

எல்லோருக்கும் சுமைதாங்கிக் கல்லாக இருப்பதால், அவர்கள் பிரச்சனைகளைத், தேவைகளை என் மேல் இறக்கி வைக்கிறார்கள்.
ஆனால் நான் யாரிடம் இளைப்பாறுவேன்?’ என்று இருந்த வரிகள், மதுராவின் கண்களை கலங்க வைத்தது.

‘பாவம்  விஜய்  நீ!…  அந்தச் சமயத்துல நான் என்ன செய்தேன்!.
கார்திக்க்கை  உண்டு  இல்லை என்று செய்து கொண்டு இருந்தேன்.
‘ஸ்கூலில் வால்’ என்று பேர் எடுத்தேன். பவானியின் BP ஏத்திக் கொண்டு இருந்தேன்.’ என்று இளவரசியாக தான் வளர்ந்த நிலையை நினைத்துப் பார்த்தாள் மதுரா.

‘உறங்கக்  கிடைப்பதே  வெறும்  நான்கு  மணி  நேரம்  தான். பசி, தூக்கம் இது   எல்லாம்   பார்க்கவே   முடியாது.  ஆனாலும்,  ஏதோ  ஒரு சோர்வு.

இப்படி தந்தையை,  குடும்பத்தைக்  காப்பாற்ற  ஓடிக் கொண்டு இருந்தபோது தான்,  ‘மாசிலாமணி  சார்’  பழக்கம்  ஆனார்.

குன்னூர்  அருகே,  அவருக்கு  ஏதோ  ஒரு  பங்களா வாங்க வேண்டி இருந்தது.  ஆல்வின்  அப்பாவால்  அதைச்  செய்ய  முடியவில்லை, என்னைத்  தான்  அனுப்பினார்.

வேண்டா வெறுப்பாகத் தான் சென்றேன். ஆனால், அந்தப் பயணம் தான், என் வாழ்க்கைக்கு உயிர் அளித்தது.
அவர் எதிர்பார்த்ததை முடித்துக் கொடுத்தேன். அவருக்கு  என்னை  மிகவும்  பிடித்துப்  போனது.  என்னைப்  பற்றி  எல்லாம் கேட்டுத்  தெரிந்து  கொண்டார்.

மூன்றே நாளில், மற்றொருத் தந்தையாக, ஆசானாக, வழிகாட்டியாக  மாறிப்  போனார்  அந்தக்  கோடீஸ்வரர்.
என்  குடும்பத்தின்  பொறுப்பைத்  தனதாக  மாற்றிக்  கொண்டார்.
என் அப்பாவின்  மருத்துவ  செலவு,  எங்கள்  மூவரின்  படிப்பு  எல்லாவற்றையும் அவரே  பார்த்துக்  கொண்டார்.

‘வேண்டாம்’ என்றாலும் கேட்கவேயில்லை. இதுபோல் பல தர்ம காரியங்களை, வெளியவே தெரியாமல்,  செய்து  கொண்டு  இருக்கும்,  ‘நிஜ  மனிதர்’  அவர்.

‘கேட்காமலே அள்ளிக் கொடுக்கக் கூட மனம்’ என்று ஒன்று இருக்க வேண்டும். ரத்த உறவுகளே, பணத்தைப் பெரிதாய் நினைக்கும் இந்தக் காலத்தில்  இப்படியும்  ஒரு மனிதரா!…

இவரைப் போன்ற  உத்தமரை சந்திக்க வேண்டும் என்று தானோ, அந்தக் கடவுள், என் அப்பாவிற்கு இப்படியொரு  நோய்  கொடுத்தது?  

அத்தனை  அன்பு, கருணை.
‘மனிதருள்  காணக்கிடைக்காத  மாணிக்கம்’ அவர். 
கோடிக் கோடியாய் பணம் இருந்தும், ஒற்றைப் பிள்ளை பெற்று இருந்தும், அந்தக் குன்னூரில், ‘பணக்கார ஏழையாய்’ இருந்து கொண்டு இருக்கிறார்.

அன்புக்கு  மிகவும்  ஏங்கி  போய் இருந்தார். அவருக்கு உடம்பு சரி இல்லாமல் போகவே, கூடவே  இருந்து  நான்  தான்  பார்த்துக்  கொண்டேன். அவர் குணமானதும் கூட, என்னைப் போக விடவில்லை. அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு மேலும் இரண்டு நாட்கள் தங்கி இருந்தபோது  தான்  என்  வாழ்வு,  ஒரு  விபத்தால்  மாறியது .

யார்  அது  என்று  தெரியவில்லை…  குடித்து  விட்டு,  வண்டி ஒட்டி என்னைப்  பரலோகத்திற்கு அனுப்ப முடிவு  செய்தவன்.

ஆனால்,  எனக்குக்  கிடைத்தது  சுவர்க்கம். 
அடிபட்டு,  ரத்த வெள்ளத்தில், நடு ரோட்டில், துடித்துக் கொண்டு இருந்தேன். 
கூட்டம் கூடி  வேடிக்கைப் பார்த்தார்களே  ஒழிய, துணித்து யாரும் உதவ முன்வரவில்லை.

இவர்களுக்கு  எல்லாம்  மருத்துவ  துறையில், ‘கோல்டன் டைம்’ என்று ஒன்று உண்டு.
டாக்டர் கூடச் சொல்வாரே, ‘கொஞ்ச நேரத்திற்கு முன் கொண்டு  வந்து  இருந்தால்,  காப்பாற்றி  இருக்கலாம்’  என்று.

அந்த  முதல்  உதவி  நேரத்தை,  உயிரைக்  காப்பாற்றும்  அந்த  நொடியைத் தான்,  ‘கோல்டன்  டைம்.’  என்பார்கள். 
இதற்குள் நோயாளிகளை, விபத்தில் சிக்கியவர்களைக் கொண்டு சென்றால், காப்பாற்றி விடலாம்.

ஆனால், யாருமே முன்வரவில்லை. மரணபயத்தில் துடித்துக் கொண்டு இருந்தேன்.

வலி…. வலி… வலி  மட்டுமே  தெரிந்தது.

அப்பொழுது  தான்  அது  நடந்தது.  கூட்டத்தை  விளக்கிக் கொண்டு, வந்தாள்  அவள். 

அவளைக்  கண்ட  அந்த  நொடி,   ‘நான்  இறந்து  விட்டேனா!’  என்று  கூடக்  குழம்பி  விட்டேன். 
என்  உயிரைக்  கொண்டுச் செல்ல வந்த, ‘வானத்துத் தேவதை’  தான் அவளோ என்று!

அவ்வளவு அழகு அவள்!

அடிபட்டு,  நினைவுத்  தப்பிக்  கொண்டு  இருந்த  வேளையில், ‘சைட் அடித்தவன்  நான்  ஒருவனாகத்  தான்  இருப்பேன்’.

தவம் தொடரும்…

 

 

அடுத்த அத்தியாயம்

64

நள்ளிரவில், தன் அறையில் அமர்ந்து, விஜய் எழுதிய டைரிக் குறிப்புகளை படித்துக் கொண்டு இருந்தாள் மதுரா.குன்னூரில், சாலை விபத்தில் அடிப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான் விஜய்.'அழகி!பேரழகி!பிரபஞ்ச அழகி அவள்.  அந்தப்  பெண்  பார்ப்பதற்கு, ‘ ஸ்கூல்  கேர்ள்’  போல் இருந்தாள். ரொம்ப…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்