காதல்!...
இந்தச் சிறு வார்த்தைக்குத் தான் எத்தனை சக்தி!
காலங்கள் மாறினாலும் இன்றும் இளமையோடு, புது பொலிவோடு, ஒவ்வொரு வாழ்க்கையிலும், ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தானே இருக்கிறது!
இதில் எத்தனையோ ட்ரென்ட்ஸ் வந்து விட்டது.
'பார்க்காமலே காதல்,
பார்க்கப் பார்க்க காதல், சொல்லாமலே காதல்,
ஒரு தலை காதல்,
முக்கோண காதல்' என்று பல வகை காதல் கண்டு, கேட்டு, பார்த்து, வாழ்ந்து, ரசித்து இருப்போம்.ஒரு பெண்ணை பார்த்துக் காதலித்து, அவளுக்காக மட்டுமே வாழ்ந்து, மூச்சு விட ஒருவனால் முடியுமா?..
அவளின் நிழலைத் தவிர்த்து வேறொரு பெண்ணின் நிழலைக் கூட மிதிக்காமல் வாழ்ந்து விட முடியுமா?வாழ்க்கையில் ஆயிரம், லட்சம் பெண்களைக் கடந்து வருவோம். ஒரு கணமாவது ஏதாவது ஒரு பெண்ணின் அழகு கண்டு நின்று, ‘என்ன அழகு’ என்று ரசித்து, மனத்திற்குள்ளாவது பாராட்டி இருப்போம். அதை கூடச் செய்யாது, ‘மனதாலும் இன்னொரு மாதை தீண்டேன்’ என்று கலியுக ஸ்ரீ ராமனாக, ஒருவனால் வாழ முடியுமா?‘ஒரு இல், ஒரு சொல், ஒரு வில்’ என்று வாழந்த ராமனாக, இன்று இருக்க முடியுமா?...
அந்த பெண்ணைக் காக்க, உலகத்தையே கூட, எதிர்க்கும் துணிவு கொண்ட ஒருவன் இருந்தால்!
இந்தக் கேள்விகளுக்கு விடையாக , ‘என்ன தவம் செய்தேன்.’‘விஜய கருணாகரன் – மதுராக்ஷி’ இவர்களின் வாழ்க்கை, காதல், மோதல் தான், ‘என்ன தவம் செய்தேன்.’இதில், யார் யாருக்காகத் தவமிருப்பது!
இவர்களின் தவத்திற்கு பலன்!