பள்ளி பருவம்
அனைவருக்கும் வணக்கம்,
“மனசு தடுமாறும்…. அது நெனச்சா நிறம் மாறும் ” என்ற இளையராஜா வின் கானம் ஒலித்துக் கொண்டிருக்க கட்டிலில் படுத்துக் கொண்டு கனவில் மூழ்கி தனக்குள் புலம்பிக் கொண்டு இருந்தான்.
டேய் முகினு, சீக்கிரம் எந்திச்சு ஸ்கூல் க்கு கிளம்பு டா, என்று அவனுடைய அம்மா குரல் கேக்க, அலறி அடித்துக் கொண்டு குளிக்கச் சென்றான். வேகமாக குளித்து விட்டு பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான்.
டேய் முகினு, வேமா வாடா, ஸ்கூல் க்கு டைம் ஆச்சு என்று அவனுடைய நண்பன் குரல் ஒலிக்க, தன்னுடைய பேக் ஐ எடுத்துக் கொண்டு ஓடினான்.
முகின் ஒரு நடுத்தர குடும்பத்து பையன்… ஆனால் நன்றாக படிப்பவன். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறான். அவனுடைய அப்பா எலக்ட்ரிகல் வேலைக்கு பார்ப்பவர். அம்மா ஹவுஸ் வைப்… வீட்டுக்கு ஒரே பையன் என்பதால் மிகவும் செல்லமாக வளர்த்தனர்.
அவனுடைய பாட்டி தாத்தா அவன் மீது மிகவும் பாசமா இருப்பார்கள். இவனும் பாசமாக இருப்பான். சைக்கிள் லில் தான் பள்ளிக்கு செல்வான்.
சிறு வயதில் இருந்தே அவனுக்கு ஆசிரியர் ஆக வேண்டும் என்பதை தன் கனவு, லட்சியமாக கொண்டிருந்தான். பள்ளி அளவில் முதலிடம் எடுக்க வேண்டும் என்பதே அவனது குறிக்கோள். அதற்கு எற்றார் போல் இவனும் நன்றாக படித்துக்கொண்டு இருந்தான்.
ஆசிரியர்களும் இவன் மீது அக்கறை கொண்டு நன்கு படிக்க வைத்தனர்.
தொடரும்…….





