arrow_back
காக்கை சிறகினிலே அத்தியாயம் பதினொன்று
காக்கை சிறகினிலே chevron_right பகுதி 11 / 20

அத்தியாயம் பதினொன்று

visibility 1
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்தாள் மேகா… லிலாவதி மருத்துவமனையில்… மருத்துவமனையில் அனுமதித்த இரண்டாம் நாள்!

“மேகா… மேகா…” நூறாவது முறையாக உலுக்கி பார்த்து விட்டு கண்களில் கலக்கத்துடன் அருகில் அமர்ந்து இருந்தாள் அஞ்சலி! சின்ன அசைவு கூட இல்லாமல் பார்வை ஒரே திக்கை பார்க்க அமர்ந்தது அமர்ந்தவாறே இருந்தாள் மேகா! கண்களில் ஒளி இறந்திருக்க முகம் உணர்வை தொலைத்து பார்வை நிலைகுத்தி கற்சிலையாக அமர்ந்து இருந்தவளை பார்க்கையில் அஞ்சலிக்கு உள்ளுக்குள் வேதனை பொங்கியது! ஒரு நாள் பழக்கம் தான்… ஆனாலும் ஆண்டாண்டு காலம் பழகிய உறவு தராத வலி!

சசியின் தற்கொலையை பார்த்ததில் அதீத அதிர்ச்சி அடைந்தாலும் உண்மை தெரியாத போலீசாரும் மற்றவர்களும் இதை வெறும் தற்கொலை வழக்காக பதிவு செய்து முடித்து விட்டிருந்தனர்! உண்மை தெரிந்த ஒரே ஆள் மேகா… ஆனால் அவளோ தன்னிலை மறந்து மருத்துமனையில்… கௌதமுக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை… தன்னிடம் சரண்டர் ஆவதாக தானே கூறினான்… பின்னர் ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்று குழம்பினான்… ஆனாலும் சசி அவனிடம் கடைசியாக கூறி விட்டு வைத்த வார்த்தைகள் நினைவுக்கு வந்து இம்சை படுத்தியது!

“உன்னை நம்பி போறேன் கௌதம்…” என்ன மாதிரியான வார்த்தைகள் இவை… அணைகிற விளக்கிற்கு தெரியுமா அது அணைய போவது? என்னை நம்பி போனாயா சசி? என் மேல் நீ வைத்த நம்பிக்கையை என்ன சொல்வது? உன்னுடைய நம்பிக்கையை காப்பாற்றுவேன் சசி… ஆனால் என்னால் முடியுமா? முடியவில்லை என்றாலும் இந்த பிறவியில் எனக்கு மேகா மட்டும் தான்! அர்ஜுனுடன் சேர்ந்து மேகாவுக்கு சிகிச்சை அளிக்கும் தலைமை மருத்துவரை பார்க்க போய் கொண்டிருந்தான் கௌதம்! இருவரையும் பார்த்ததும் அமர சொல்லி விட்டு கேஸ் பைலை எடுத்து பார்வை இட்டார்! தன் அருகில் இருந்த உதவியாளரிடம்

“ஷ்லீணீt ணீதீஷீut tலீமீ ஸ்வீtணீறீs?”

“ஸீஷீக்ஷீனீணீறீ பீஷீநீtஷீக்ஷீ… தீut ஸீஷீt க்ஷீமீsஜீஷீஸீபீவீஸீரீ…”

“ஷ்லீணீt ணீதீஷீut விஸிமி?”

“விஸிமி ஷ்வீtலீ 1. 5 tமீsறீணீ sலீஷீஷ்s ணீ sமீஸ்மீக்ஷீமீ stமீஸீஷீsவீs வீஸீ tலீமீ றீமீயீt விசிகி பீஷீநீtஷீக்ஷீ… னீணீஹ் தீமீ பீuமீ tஷீ sலீஷீநீளீ… நீமீக்ஷீமீதீக்ஷீணீறீ ணீஸீரீவீஷீரீக்ஷீணீனீ ஷ்ணீs பீஷீஸீமீ… ணீஸீபீ tலீவீs sலீஷீஷ்மீபீ tலீமீ ஸீணீக்ஷீக்ஷீஷீஷ்மீபீ றீமீயீt வி1 விசிகி… ஜிசிஞி பீஷீஸீமீ பீஷீநீtஷீக்ஷீ… tமீனீஜீஷீக்ஷீணீறீ ஷ்வீஸீபீஷீஷ்s ஷ்மீக்ஷீமீ ஜீஷீஷீக்ஷீ ணீஸீபீ லீமீஸீநீமீ tலீமீ விசிகி நீஷீuறீபீ ஸீஷீt தீமீ மீஸ்ணீறீuணீtமீபீ… ஜீஷீstமீக்ஷீவீஷீக்ஷீ நீவீக்ஷீநீuறீணீtவீஷீஸீ ஸ்மீssமீறீs ஷ்மீக்ஷீமீ ஸீஷீக்ஷீனீணீறீ… ணீஸீபீ ணீறீறீ ஷீtலீமீக்ஷீ stuபீவீமீs ஸீஷீக்ஷீனீணீறீ பீஷீநீtஷீக்ஷீ…”

“ஷீளீ… நீஷீஸீtவீஸீuமீ ஷ்வீtலீ tலீமீ sணீனீமீ னீமீபீவீநீவீஸீமீs கிtலீuறீ…”

தமிழரான அந்த மருத்துவர்

“கௌதம்… கொஞ்சம் சிரமமான நிலைமை தான்… stமீஸீஷீsவீsன்னு சொல்லுவாங்க… அதாவது மூளைல போற ரத்தக்குழாய் திடீர்ன்னு ஏற்பட்ட அதிர்ச்சிய தாங்காம நேரா ஆய்டறது… அதாவது ஸ்ட்ரோக்குக்கு முந்தின நிலைமை… கொஞ்ச நேரம் கடந்து இருந்தாலும் ஸ்ட்ரோக் வந்திருக்கும்…”

சொல்ல சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போய் கேட்டு கொண்டிருந்தனர் இருவரும்!

“அப்படீன்னா மே… மேகா டாக்டர்…?”

கௌதம் திக்கி திணறி கேட்க

“இப்போதைக்கு அப்சர்வேஷன்ல இருக்கட்டும் கௌதம்… ட்ரீட்மென்ட் போகட்டும்… ஆனா இப்போதைக்கு இன்னொரு அதிர்ச்சிய தாங்க முடியாது அவங்களுக்கு… சப்போஸ் அவங்களுக்கு பிடிக்காத ஏதாவது நடந்து அதனால அவங்க டென்ஷன் ஆனா ஒண்ணுமே சொல்ல முடியாது… ஸ்ட்ரோக் எப்போ வேணும்னாலும் வந்துரும்…”

“அப்படீன்னா ஸ்டென்டிங் பண்ண தேவை இருக்குமா டாக்டர்?” என்று அர்ஜுன் கேட்க

“இல்ல அர்ஜுன்… அந்த அளவு நிலைமை இல்ல… இப்போதைக்கு மெடிசின்ஸ்ல கொண்டு வர பார்க்கலாம்… அப்படி முடியலைன்னா… வி வில் கோ பார் ஸ்டென்டிங்… இப்போதைக்கு ணீஸீtவீநீறீஷீttவீஸீரீ மெடிசின்ஸ் தான் குடுக்கறோம்… இப்போ ஸ்ட்ரோக் வர்றத தடுத்தா போதும்… ஆனா காயம் மட்டும் பட கூடாது… ரத்தம் லாஸ் ஆச்சுன்னா ஆபத்துதான்”

மனம் சோர்ந்து போய் அறைக்கு திரும்பியவர்களுக்கு மேகாவை பார்க்க இன்னமும் துக்கமாக இருந்தத்து… ஒரு சிறு அசைவு… ப்ச்… எதுவுமே இல்லாமல் உறங்கி கொண்டிருந்தாள் இருந்தாள்… ஊசியின் விளைவால்.

“ஏதாவது டெவலப்மென்ட் தெரிஞ்சுதா அஞ்சு?” மனம் கனக்க கேட்டான் கௌதம்.

“இல்லண்ணா… ஒண்ணுமே தெரியல…”

“கௌதம்… மேகா அப்பாகிட்ட சொல்லிட்டியா?” அர்ஜுன் கேட்க

“ம்ம்ம்… நேத்து இன்கம் டாக்ஸ்ல மாட்டிட்டு இருந்தார் அர்ஜுன்… விஷயத்த சொல்லவும் போன்லையே கதறிட்டார்… இப்போ கிளம்பி வந்துட்டு இருக்கார் போல…”

“ப்ச்… அவர் பாவம் என்ன பண்ணுவார்… பிரச்சனை எல்லா பக்கமும் சூழ்ந்து இருந்தா… அவங்க அப்பா வந்தவுடனே அவர் கிட்ட ஒப்படைக்கிற வரை இத பத்தி மேகா முன்னாடி பேச வேணாம் கௌதம்… கொஞ்சம் ப்ரெஷா எதாச்சும் பேசி அவங்க மைன்ட்ல வேற தாட்ஸ பதிய வைக்கணும்ப்பா…” என்று கௌதமிடம் கிசுகிசுப்பாக சொன்னான்!

“ஆமாம் அர்ஜுன்… ரைட்தான்…”

பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு கௌதம் முதுகை தட்டி கொடுத்து விட்டு

“கௌதம்… உன் தங்கச்சி இங்க இருந்து பார்த்துகட்டும்… நீ இங்க இருக்கியா இல்ல என் கூட வரியா… மேகாவுக்கு தேவையான ஐடம்ஸ் வாங்கிட்டு வந்துடலாம்…”

அஞ்சலியின் நினைவில் கலங்கி அமர்ந்து இருந்தவள் அர்ஜுன் கூறியதை கேட்டு தலையை உயர்த்தி பார்த்தாள்…” உன் தங்கச்சியா?” … ஏன் அஞ்சு என்னாச்சு? அவளது பார்வையில் கேள்வி தொக்கி நிற்க

“இல்ல அர்ஜுன்… நான் மேகா கூட இருக்கேன்… நீ அஞ்சுவ கூட்டிட்டு போய் வாங்கிட்டு வா… எமர்ஜென்சின்னா நான் இருக்கணும்…”

“இல்ல… அவ வேணாம்… நானே முடிஞ்ச அளவு பார்த்து வாங்கிட்டு வரேன்…”

அஞ்சு எரிச்சலாக கௌதமை பார்த்து

“அண்ணா… ஹாஸ்பிடல் காம்ப்ளெக்ஸ்லையே டிரஸ் மத்த எல்லாம் கிடைக்கும்… நான் இங்கயே வாங்கிடறேன்… உன் பிரெண்டுக்கு வேலை இருக்கும்… அதை போய் பார்க்க சொல்லு…”

“செல்லம்… ரெண்டு பேரும் ஆரம்பிக்காதீங்க… அப்படி சண்டை போடறதுன்னா உங்க ஆபீஸ்ல போய் சண்டை போடுங்க…”

“ஆமா இவ கூட சண்டை போடத்தான் காத்துட்டு இருக்காங்க…” என்று முனகி கொண்டு அவன் திரும்ப… பார்த்து முறைத்தாள் அஞ்சலி.

மூவருமாக பேசி கொண்டு இருக்க அதே நேரத்தில் அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்தார் கணபதியும் அவரது மனைவியும்.

“ஐயோ மேகி…” பிருந்தா அழுது கொண்டே படுக்கைக்கு அருகில் போக

“ஆன்ட்டி அழாதீங்க… இங்க… நர்ஸ் பார்த்தா திட்டுவாங்க…” அஞ்சலி அவசரமாக கூறினாள்!

கௌதம் கையை பிடித்து கொண்ட கணபதிக்கு வார்த்தைகள் வராமல் இருந்தது… கண்களில் நீர் மட்டும்.

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல தம்பி… எங்க உயிரை மீட்டு குடுத்து இருக்கீங்க…” என்று கையை பிடித்து கொண்டு அழ.

“சார்… எமோஷன் ஆகாதீங்க… இப்போதைக்கு மேகா தான் முக்கியம்…”

“இல்லப்பா… என் பொண்ண இனிமே பார்போமான்னு நினைச்சேன்… ஆனா இப்போ பார்க்கறேன்னா நீங்க தான் தம்பி காரணம்…” கௌதமிடம் கண்களில் உயிரை தேக்கி கூற

“இல்ல சார்… என்னை விட அர்ஜுன் தான் காரணம்… அவன் ஹெல்ப் இல்லைன்னா சான்சே இல்ல சார்…” என்று கூறவும் அப்போதுதான் கவனித்தார் அர்ஜுனை.

“தம்பி… நீங்க… விக்டரி…” என்று தடுமாற

“ஆமா சார்… அர்ஜுன் விக்டரி க்ரூப்ஸ் வானமாமலை சாரோட பையன்…” என்று கௌதம் அறிமுக படுத்தி வைக்க வியந்து போய் அர்ஜுனிடம் கை கொடுத்தார்… அர்ஜுனும் புன்னகைத்து கொண்டே

“ப்ளீஸ் டு மீட் யு… எல்லாம் கௌதம்காக சார்…” என்று கூறவும் கணபதிக்கு ஒரு ஓரமாக எதுவோ புரிவது போல இருந்தது.

“பெரியவங்க நீங்க எல்லாம்… ரொம்ப சந்தோஷம் தம்பி…” என்று கூறுவதை பெருமையுடன் பார்த்து கொண்டிருந்தாள் அஞ்சலி!

சப்தம் கேட்டு விழித்தாள் மேகா.

முதலில் அவள் கண்களில் பட்டது கௌதமும் அர்ஜுனும்… வெறுமையாய் பார்வையை நகர்தியவள் கண்களில் பட்டவர் கணபதி… உடலில் ஒரு நடுக்கம்… கண்களில் கசப்பு வெறுப்பு என்று அனைத்தும் ஒன்று சேர பார்த்தாள்!

“மேகா…” வியப்பில் கூவினாள் அஞ்சலி!

அனைவரும் மகிழ்ச்சியாக அவள் அருகே செல்ல… மேகாவின் உடல் நடுக்கம் அதிகமாக… கணபதியை வெறுப்பாக பார்த்து நடுங்கி கொண்டே

“அந்த ஆள போக சொல்லுங்க…” திக்கி திணறி கூறினாள்.

“யாரம்மா…” கௌதம் பரிவாக கேட்க

“கௌதம்… அந்த ஆள்…” என்று கணபதியை சுட்டி காட்டி

“போக சொல்லுங்க…” நடுங்கி கொண்டே கூறினாள்

“மேகா… உன் அப்பாம்மா…” என்று நேயமாக கூற

“அந்த ஆள என் அப்பான்னு சொல்ல மாட்டேன்… இங்க இருந்து போக சொல்லுங்க…” அடி தொண்டையில் இருந்து கத்த

சப்தம் கேட்டு வந்த மருத்துவர்கள்

“சார்… அவங்களை டென்ஷன் பண்ணாதீங்க…” என்று கோபமாக கூறி விட்டு செல்லவும் கணபதி ஆற்ற முடியாத துயரத்தோடு வெளியே போனார்… கணபதி பலருக்கு கெட்டவர் தான்… தன் மகளின் மனதுயரத்தினை அறியாதவர் தான் ஆனாலும் அவரது பாசத்தை குறைத்து மதிப்பிட முடியாது… மிகுந்த பாசம் வைத்த தன் மகள் இப்படி சொன்னதை விட அவருக்கு வேறென்ன தண்டனை வேண்டும்?

மேகாவின் உடல் நடுங்கி கொண்டே இருந்தது… கண்களில் இருந்து வழிய ஆரம்பித்த நீர் நிற்காமல் வடிந்து கொண்டே இருக்க கௌதம் அவளை வருடி கொடுத்து

“மேகா… மறந்துடு மேகா… உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்… அந்த எபிசொட் முழுக்க மறந்துடு…”

“ஆமா மேகா… என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியலடா… ஆனா ஏதுவா இருந்தாலும் மனச மாத்து…” என்று அஞ்சலியும் கூற

கண்களில் வலியோடு வார்த்தைகளில் வெஞ்சினத்தோடு

“யார மறக்க சொல்ற அஞ்சலி? என் சசியையா? அதுக்கு நான் செத்தே போயிருவேன்டா…” என்று சொல்லி விட்டு கதற ஆரம்பிக்க அவளை வெறுமையாய் பார்த்தான் கௌதம்!

அவள் அழுது முடிக்கும் வரை யாரும் அவளை தடுக்கவில்லை… அசைவில்லாமல் இருந்தவள் இந்த மட்டிலும் அழுகிறாளே என்று ஒரு நிம்மதி… பல நேரங்களில் கண்ணீரும் நம்மை காக்கின்றன… அழாமல் இரும்பு நெஞ்சத்தோடு இருப்பவர் நிறைய பேர் மாரடைப்பால் தான் இறந்தும் இருக்கின்றனர்! அழுது தன் துயரை தீர்ப்பது என்பது உளவியல் ரீதியான ஒரு வடிகால் துயரத்தில் இருந்து தப்பிக்க… அது போல தான் சசி இறந்தவுடன் மேகா அழுது இருந்தால் அவளது துயர் ஆறி இருக்குமோ என்னவோ.

மேகா அவளது தாய் பிருந்தாவை பார்த்து

“தயவு செஞ்சு நீயும் போய்டு… எனக்கு தாங்க முடில…” என்று நடுக்கம் மாறாமல் கூற

“டேய்… நான் உன் அம்மா டா…” அதிர்த்து கூறினார்

“இது உனக்கு இப்போ தான் ஞாபகத்துக்கு வருதா? ஆனா உன்னை பார்க்கும் போது நீ கணபதியோட பொண்டாட்டி அப்படீங்கறதுதான் எனக்கு நினைவுக்கு வருது…”

“கண்ணா… தயவு செஞ்சு புரிஞ்சுக்கோம்மா… உன்னை பார்த்துக்க ஆள் வேணும்டா…”

“என்னை பார்த்துக்க யாரும் வேணாம்… அப்படி நீ இங்க இருந்தா… நான் இங்க இருக்க மாட்டேன்… இந்த ஜன்னல்ல இருந்து குதிச்சு கீழே விழுந்து செத்து போய்டுவேன்… போய்டு…” கத்தினாள் மேகா.

“மேகி… ப்ளீஸ் டா…”

“போய்டு…” அவளது அடிகுரல் சீற்றம் எதிரொலித்தது!

மேகாவின் தாய் என்ன செய்வது என்பது புரியாமல் அவர்களை பார்க்க

“மேகா… அம்மாப்பா… ப்ளீஸ்…” முடிந்த அளவு பாந்தமாக கூறினான் கௌதம்.

“இப்போ போறியா இல்லையா?” என்று கோபமாக கேட்டு விட்டு அருகில் இருந்த ஊசியை எடுத்து ஆழமாக தன் கையை கிழித்தாள் மேகா… ரத்தம் பீறிட்டு கொண்டு வந்தது.

“ஐயோ… மேகி… என்னடா பண்ணிட்ட…” என்று பதறி கையை பிடிக்க வந்த பிருந்தாவை

“இப்போ போறியா இல்லையா…” அடி குரலில் கர்ஜித்தாள்!

அவளது கையில் வழிந்த ரத்தத்தை பார்த்தவர்கள் பதற, கௌதம் கையை பற்றி கொண்டு அருகில் இருந்த பஞ்சை எடுத்து ரத்தத்தை அழுத்தி பிடித்தான்! அஞ்சலியும் அவனுக்கு உதவ, அர்ஜுன் அவரை வெளியே அழைத்து போய்

“அம்மா… கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்காங்க… கொஞ்சம் பொறுங்க… இப்போ அவங்களை டென்ஷன் பண்றது நல்லது இல்ல… மூளைக்கு போற ரத்த குழாய்ல கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு… டென்ஷன் ஆனா ஸ்ட்ரோக் வந்துரும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க…” என்று கூறவும்

“ஐயோ மேகி…” என்று கணபதியும் பிருந்தாவும் பதறினர்.

“நாங்க பார்த்துக்கறோம்… பயப்படாதீங்க… நீங்க போய் என் வீட்ல இருங்க… நாங்க பேசி என்னன்னு பார்த்து கண்டிப்பா சமாதானபடுத்தி வைக்கறோம் சார்… டோன்ட் ஒரி…” என்று பொறுப்பாக கூறினான் கௌதம்!

“எல்லாம் நான் செஞ்ச பாவம் தம்பி… என் பொண்ணை இப்படி ஆளாக்கி விட்டது…” என்று முகத்தை மூடி கொண்டு கதற

“சார் கண்ட்ரோல் பண்ணிகோங்க…” என்று கூறி விட்டு கௌஷிக்கை அழைத்தான் செல்பேசி மூலமாக

“கௌஷிக்… என்னோட கெஸ்ட் ரெண்டு பேர் வராங்க… கம்பெனி கெஸ்ட் ஹவுஸ கொஞ்சம் கிளீன் பண்ண சொல்லிடு…” பின்னர் உள்ளே சென்றவன்

“மேகா… நீ எதை பத்தியும் கவலை படாதம்மா… நாங்க இருக்கோம்… பாரு இந்த அறுந்த வால உன் கூடவே வெச்சுக்கோ… முதல்ல ட்ரீட்மென்ட் முடியட்டும்… அப்புறம் பேசிக்கலாம்மா… சரியா…” மேகாவிடம் கூறியவன் கௌதமிடம் திரும்பி.

“சரிடா… நான் கிளம்பறேன்… நீ பார்த்துக்கோ… உன் தங்கச்சிய வர சொல்லு… தேவையானத வாங்கி குடுத்து விடறேன்…”

அந்த நிலைமையிலும் அஞ்சலிக்கு கோபம் வந்தது… ஒன்றும் பேசாமல் கிளம்பினாள்.

எல்லோரும் சென்ற பிறகு… விட்டத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்த மேகாவை,

“மேகா… என்ன நினைக்கிற… எதுவா இருந்தாலும் சொல்லும்மா…”

கண்களில் நீர் பெருக்கெடுக்க ஒன்றும் பேசாமல் அமர்ந்து இருந்தாள்! பக்கத்தில் போன கௌதம் அவளது தலையை ஆதூரமாக தடவி கொடுக்க அதுவரை மௌனமாக அழுதவள் வெடித்து கதறினாள்!

“ஹேய்… மேகா… இங்க பாரு… மேகா…” அவளது தலையை தன் மார்போடு அணைத்து முதுகை தடவி குடுத்தான்! அதில் ஒரு சின்ன கல்மிஷமோ களங்கமோ இல்லாத தூய அன்பே தெரிந்தது.

“புரியுதும்மா… உன்னோட உணர்வு… உன்னை நான் கன்ட்ரோல் பண்ண விரும்பல… எவ்ளோ வேணுமோ அழுது தீர்த்துடு ஆனா போனவன் திரும்ப வர மாட்டான்ம்மா…”

கதறி கொண்டே கூறினாள்

“ஆமா கௌதம்… போனவர் திரும்ப வர மாட்டார்… ஆனா அவர் போக காரணமே நானா ஆகிட்டேனே…” என்று கூறி விடு மீண்டும் கதற

“எவ்வளவோ சொன்னாரே… சரண்டர் ஆகிடறேன்னு… அதுக்கு விட்டுருந்தா அவர் முகத்தையாச்சும் பார்த்துட்டு இருந்து இருப்பேன்… பாவி கௌதம் நான்… பாவி… நானாத்தான் வந்தேன்னு சொல்ல வந்தேன் போலீஸ் கிட்ட… அதனால் தான் அவர்… ஐயோ…” அவளது கதறலை பார்த்த கௌதமுக்கு மனம் வலித்தது… எந்த அளவு உன்னதமான காதல்… சசிக்கு குடுத்து வைக்கவில்லையே… ஆனால் ஏன் இந்த திடீர் முடிவு எடுத்தான் என்பது அவனுக்கு புரியவில்லை.

“ஓகேம்மா… புரியுது… புரியுது…” அவளை தன் மார்போடு அணைத்தவன் ஆறுதல் கூற முடியாமல் கண்கலங்கி நின்றான்… தொண்டை எல்லாம் வறண்டு இருக்குமே… சுற்றிலும் பார்த்தவன் அருகில் தண்ணீர் பாட்டில் இல்லாததை கவனித்து.

“இரும்மா… கொஞ்சம் தண்ணீர் வாங்கிட்டு வந்துடறேன்…” என்று கூறி விட்டு வெளியே போய் அவசரமாக தண்ணீர் எடுத்து கொண்டு விரைந்தான்… அங்கே அவன் கண்ட காட்சி.

மேகா தனது கை நரம்பை அருகில் இருந்த பழம் வெட்டும் கத்தியால் வெகு ஆழமாக கிழித்து விட்டு ரத்தம் கொட்ட கொட்ட வெறுமையாக வெறித்தபடி அமர்ந்து இருந்தாள்… முதலில் அறுத்த போதே நிற்காத ரத்தம் இப்போது படுக்கையை நனைத்து கொண்டிருந்தது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் பனிரெண்டு

அதிர்ந்து போய் இருந்தான் கௌதம்... தண்ணீரை எடுத்து கொண்டு தான் உள்ளே வந்து பார்த்த போது கண்ட காட்சி அதிர வைத்தது... அதற்க்கு முன்னர் தான் டாக்டர் சொல்லி இருந்தார்... ரத்த இழப்பு மட்டும் தான் இந்த நேரத்தில் ஆபத்தாக முடியும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்